புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருத்தரிப்பு - வாய்ப்பு - உறுதி செய்தல் Poll_c10கருத்தரிப்பு - வாய்ப்பு - உறுதி செய்தல் Poll_m10கருத்தரிப்பு - வாய்ப்பு - உறுதி செய்தல் Poll_c10 
60 Posts - 48%
heezulia
கருத்தரிப்பு - வாய்ப்பு - உறுதி செய்தல் Poll_c10கருத்தரிப்பு - வாய்ப்பு - உறுதி செய்தல் Poll_m10கருத்தரிப்பு - வாய்ப்பு - உறுதி செய்தல் Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
கருத்தரிப்பு - வாய்ப்பு - உறுதி செய்தல் Poll_c10கருத்தரிப்பு - வாய்ப்பு - உறுதி செய்தல் Poll_m10கருத்தரிப்பு - வாய்ப்பு - உறுதி செய்தல் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கருத்தரிப்பு - வாய்ப்பு - உறுதி செய்தல் Poll_c10கருத்தரிப்பு - வாய்ப்பு - உறுதி செய்தல் Poll_m10கருத்தரிப்பு - வாய்ப்பு - உறுதி செய்தல் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கருத்தரிப்பு - வாய்ப்பு - உறுதி செய்தல் Poll_c10கருத்தரிப்பு - வாய்ப்பு - உறுதி செய்தல் Poll_m10கருத்தரிப்பு - வாய்ப்பு - உறுதி செய்தல் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கருத்தரிப்பு - வாய்ப்பு - உறுதி செய்தல் Poll_c10கருத்தரிப்பு - வாய்ப்பு - உறுதி செய்தல் Poll_m10கருத்தரிப்பு - வாய்ப்பு - உறுதி செய்தல் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கருத்தரிப்பு - வாய்ப்பு - உறுதி செய்தல் Poll_c10கருத்தரிப்பு - வாய்ப்பு - உறுதி செய்தல் Poll_m10கருத்தரிப்பு - வாய்ப்பு - உறுதி செய்தல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருத்தரிப்பு - வாய்ப்பு - உறுதி செய்தல்


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
Guest
Guest

PostGuest Wed Dec 17, 2008 3:29 am

திருமணமாகி பல மாதங்கள் ஆகிறது. ஆனால் இன்னும் உண்டாக வில்லை எனப் புலம்பும் பெண்கள் இருக்கிறார்கள். இவர்கள் எப்போது பாலுறவு வைத்துக்கொண்டால் குழந்தை பிறக்க அதிக வாய்ப்பு இருக்கும் என்பதையும், கருத்தரித்தால் என்ன மாற்றங்கள் முதலில் ஏற்படும் என்பதையும் தெரிந்துகொள்வது நல்லது.

ஒரு பெண்ணுக்கு முட்டை வெளியானபின் கருத்தரிக்க அதிக வாய்ப்புள்ளது. முட்டையின் ஆயுட்காலம் 24 மணி நேரம். உயிரணுவின் ஆயுட்காலம் 48 முதல் 72 மணி நேரம். இந்த நேரத்தில் ஒன்றோடு ஒன்று சேர்ந்தால் குழந்தைப் பிறக்க அதிக வாய்ப்பு உண்டு.

கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பை அறிந்துகொள்ள மருத்துவர்கள் சில அட்டவணைகளைப் பயன்படுத்துகிறார்கள். அதில் காலண்டர் முறை, சளிச் சுரப்புமுறை, வெப்ப முறை ஆகியவை முக்கியமானவை.

avatar
Guest
Guest

PostGuest Wed Dec 17, 2008 3:29 am

காலண்டர் முறை

மாதவிலக்காகும் முதல் மாதத்திலிருந்து அடுத்த மாதம் முதல் மாதவிலக்காகும் காலம் வரையில் ஒவ்வொரு நாளும் பதிவு செய்து வரவேண்டும்.

இவ்வாறு பல மாதங்கள் குறித்து வைத்து வரும்போது, மாதவிலக்கு எந்த நாளில் குறிப்பாக வருகிறது என்பதை கண்டுபிடித்துக்கொள்ள முடியும். தேதி மாறிவந்தால் மாதவிலக்கில் குறைபாடு இருப்பதையும் தெரிந்துகொள்ளலாம்.
மாதவிலக்கு சரியாக வந்தால் முதல் நாளிலிருந்து பதினான்காம் நாள் வரை எண்ணிக் கொள்ளுங்கள். சுமார் பதினான்காவது நாளின் போது முட்டை வெளியாகியிருக்கும். அந்த சமயத்தில் பாலுறவு கொண்டால் கருத்தரிக்க அதிக வாய்ப்பு இருக்கும்.

avatar
Guest
Guest

PostGuest Wed Dec 17, 2008 3:30 am


வெப்ப முறை


காலண்டர் முறை சரியில்லாத பட்சத்தில் வெப்ப முறை மிகவும் பயனுள்ள தாக இருக்கும். டாக்டர் உங்களிடம் ஒரு சார்ட் கொடுப்பார். இதில் மாதவிலக்கான அன்று காலையிலேயே உங்கள் உடல் வெப்ப நிலை எத்தனை டிகிரி இருக்கிறது என்பதை அந்தச் சார்ட்டில் குறித்துக் கொள்ளவேண்டும். இவ்வாறு தொடர்ந்து தினமும் குறித்துவந்தால், அடுத்த மாத விலக்கு காலம் வந்துவிடுமல்லவா?

அந்தக் காலத்திலும் தொடர்ச்சியாக குறித்துவாருங்கள். இப்போது இரண்டு சார்ட்டுகளையும் ஒப்பிட்டுப் பாருங்கள். எப்போது வெப்ப நிலை கூடியிருக் கிறதோ அப்போது உங்களுக்கு கரு முட்டை உருவாகியிருக்கிறது என்று பொருள். அதாவது பதினான்காம் நாள் வாக்கில் முட்டை உருவாகியிக்கும்.

avatar
Guest
Guest

PostGuest Wed Dec 17, 2008 3:31 am

சளிச்சுரப்பு முறை

முட்டை வெளிவருவதற்கு சற்று முன்பு கருப்பை வாயைச்சுற்றியுள்ள சளிச் சுரப்பானது மெலிவடைந்திருக்கும். ஆகவே இதன் வழியாக உயிரணு சுலபமாக நீந்திச் செல்லமுடியும். சிலருக்கு உள்ளாடை நனையும் அளவுக்கு இச்சுரப்பு அதிகமாக இருக்கும். மாத விலக்கின் மையக் காலத்தில் பிறப்புறுப்பைச் சுற்றி அதிக ஈரமாக இருப்பதை சில பெண்கள் கவனிப்பார்கள். வேறு சிலருக்கு பசை போன்ற திரவம் சுரக்கும். இவை இரண்டுமே முட்டை வெளியானதற்கான அடையாளங்கள்.

கழிப்பறைக்குச் செல்லும் ஒவ்வொரு முறையும் பிறப்புறுப்பின் வாய்ப்பகுதியை நேர்த்தியாகத் துடையுங்கள், முட்டை வெளிப்படும் நாளில் அதிகமாக ஈரமாவதை அறிவார்கள். இதை அறிந்து தாம்பத்திய உறவு கொண்டால் கருத்தரிப்பு வாய்ப்பு ஏற்படும்.

இப்படியெல்லாம் முயன்றும் குழந்தை பிறக்க வில்லைஎன்றால் அதற்கு உடலியல் காரணிகள்தான் காரணமாக இருக்கும். யாருக்குப் பிரச்சினை என்பதை மருத்துவரிடம் காட்டி பரிசோதித்து சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள்.

avatar
Guest
Guest

PostGuest Wed Dec 17, 2008 3:31 am

கர்ப்பத்திற்கான அறிகுறிகள்

முதல் அறிகுறிகள்

மாதவிலக்கு நிற்றல், மசக்கை, அடிக்கடி சிறுநீர் கழித்தல், மார்பகங்களில் வீக்கம். வயிறு பெருத்தல், கரு நெளிதல் போன்ற அறிகுறிகள் இருக்கும்.

மாதவிலக்கு நிற்றல்

மாதப்போக்கு விடுபடுதல்தான் கருத்தரித்திருக்கிறோம் என பெண்ணின் கவனத்தை ஈர்க்கும் முதல் அறிகுறி யாகும். வழக்கத்திற்கு மாறாக சில கர்ப்பிணிகளுக்கு முதல் இரண்ட மூன்று மாதங்களுக்குக் கூட மாதவிலக்காகும். சில சமயங்களில் கர்ப்பம் தரிக்காம லேயே மாதவிலக்கு நிற்கும் அறிகுறி ஏற்படலாம். டீன் ஏஜ காலத்தின் பிற்பகுதி வயதிலிருக்கும் பெண்கள் அல்லது இருபதுகளில் இருக்கும் பெண்களுக்கு இத்தகைய மாதவிலக்கு நிற்கும் பிரச்சினைகள், தொழில் மற்றும் சூழ்நிலைகள் மாறுவதைப் பொறுத்து ஏற்படுவதுண்டு.

கவலையும், மன இறுக்கமும் மாத விலக்குச் சுழற்சியைத் தாமதப்படுத்தும். கருத்தரித்து எவ்வளவு காலம் ஆகியிருக்கும் என்பதை உத்தேசமாக மதிப்பிட இது உதவும்.

கடைசியாக மாதவிலக்கு நின்ற முதல் நாளிலிருந்து கர்ப்பத்தின் துவக்கத்தைக் கண்டறிதல் வழக்கம். ஏற்கனவே குழந் தைக்குப் பாலு}ட்டும் தாய்க்கும் இந்த முறை சாத்தியப்படுவதில்லை என்பதால் உரிய மருத்துவப் பரிசோதனை அவசியமாகும்.

avatar
Guest
Guest

PostGuest Wed Dec 17, 2008 3:32 am

மசக்கை

கர்ப்பக் காலத்தில் இந்த அறிகுறி வௌவேறாக இருக்கும் எனக்கருத முடியாது. முதன் முறையாக கருத்தரிக்கும் பெண் மசக்கையால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் அடுத்தடுத்த கர்ப்பத்தின் போது இது மறைந்துவிடுகிறது. வழக்கமாக முதல்மாதத்தில் மாதவிலக்கு நின்றதும் அடுத்து வரும் இரண்டாவது மாதத்தின் துவக்கதிலேயே மசக்கை ஏற்படுகறிது. இவற்றின் தீவிரம்வித்தியாசப்படுகிறது.

சில கர்ப்பிணிகளுக்கு காலையில் படுக்கையை விட்டு எழுந்தவுடனேயோ அல்லது முதல் வேளை சாப்பிட்ட பிறகோ குமட்டல் இருக்கும். அது வாந்தியில் முடிவடையும். அதற்குப் பிறகு நாள் முழுவதும் எந்த அசவுகரி யங்களோ, பசியின்மையோ இருக்காது. மற்றவர்களுக்கு கவலை தருகிற விதமாக வாந்தியில்லாமல் வெறும் குமட்டல் பல மணி நேரங்களுக்கு நீடிக்கலாம். இது வழக்கமாக சில வாரங்கள் வரை நீடிக்கும். மிக அரிதாக மூன்று மாதங்களுக்கு நீடிப்பதும் உண்டு.

avatar
Guest
Guest

PostGuest Wed Dec 17, 2008 3:32 am


அடிக்கடி சிறுநீர் பிரிதல்


சொட்டு சொட்டாக இருந்தாலும் கூட, அடிக்கடி சிறுநீர் கழிக்கவேண்டும் என்ற உந்துதலை பெண் உணர்கிறாள். சிறுநீர்ப் பை மற்றும் சிறுநீர்த்தாரைத் தொற்றின் போது ஏற்படும் எரிச்சல் உணர்வுகளோ, காய்ச்சலோ பொதுவாக இருக்காது. இடுப்புக்கூட்டுப் பகுதியில் ஏற்படும் உடல் ரீதியான மாற்றங்கள் சிறுநீர்ப்பை அழற்சிக்குக் காரணமாகின்றன. கருத் தரித்த இரண்டாவது மூன்றாவது மாதங் களில் இவ்வாறு இருப்பது சாதாரணம். வளரு கருப்பை உண்டாக்கும் அழுத்தம் மற்றும் சிறுநீர்ப் பையின் உள்ளடுக்கில் ஏற்படும் நெருக்கத்தின் காரணமாக இவ்வாறு ஏற்படுகறிது. கருப்பை விரியும்போது சிறுநீர்ப்பையை அழுத்து வதால் சொட்டு சொட்டாக நீர் பிரியும். மூன்றாவது மாதத்திற்குப்பிறகு இது சரியாகும்.

avatar
Guest
Guest

PostGuest Wed Dec 17, 2008 3:33 am

மார்பகங்களில் மாற்றம்

முதல் கர்ப்பத்தின்போதுதான் மார்பகத்தில் பல மாற்றங்கள் உண்டாகின்றன.

முதல் சுரப்பியும் வளர்ச்சியடைந்து பரிணாமத்தில் மாற்றம் ஏற்படும். தொட்டால் கெட்டியாகவும். மேடான முனைப்புகளுடன் இருக்கும்.

சுரப்பியின் வெளிப்புறத்தை அழுத்தினால் லேசாக திரவக் கசிவு இருக்கும்.

காம்புகளில் செபேஷியஸ் என்ற பால் சுரப்பு மடிப்புகள் காணப்படும்.

மார்பகத்தில் ஏற்படும் இத்தகைய மாற்றங்கள் வாழ்நாள் வரையிலும் நீடிக்கும்.

வயிறு பெரிதாதல்

கருப்பை கூபகத்தைத் தாண்டி வெளியே வரும்போது வயிறு பெரிதாகும். இது கர்ப்பத்தின் முதல் பாதி காலத்திற்கு பிறருடைய கவனத்தை ஈர்க்காது.

கருநெளிவு

கருவானது அசைய ஆரம்பிப்பதை கரு நெளிவு என்பார்கள். 18-20 வாரங் களில் நெளிவதை வைத்து கருவைப் பற்றி அறியலாம்.

avatar
Guest
Guest

PostGuest Wed Dec 17, 2008 3:33 am

பரிசோதனைகள்

கர்ப்பத்தை பரிசோதனை செய்ய மாதவிலக்கு நின்ற முதல் நாள் முதல் இரண்டு வாரம் வரை காத்திருக்க வேண்டியிருக்கும். ஹார்மோன் பரிசோதனை மூலம் கர்ப்பத்தை உறுதி செய்துகொள்ளலாம். இதற்கான கிட்டுகள் தற்போது மருந்து கடைகளிலேயே கிடைக்கின்றன.

அல்ட்ரா சவுண்டு பரிசோதனை

இடுப்புப்பகுதி அல்ட்ரா சவுண்டு பரிசோதனை செய்து கர்ப்பம் தரித்து உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளலாம். கருவுற்ற ஐந்தாவது வாரத்திலேயே கருவை அறிதல் இயலும். இதைத் தவிர யோனி வழியாக பரிசோதிக்கும் ட்ரான்ஸ் வஜீனல் அல்ட்ராசவுண்டு முறையில் விரைவாக கர்ப்பத்தை அறியலாம்.

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Jul 27, 2010 12:13 pm

அத்தனையும் கட்டாயம் அனைவரும் அறிந்திருக்கவேண்டிய ஒரு அழகிய பதிவு





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக