ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடையார்குடி

+3
சின்ராசு
muthu86
சிவா
7 posters

Go down

உடையார்குடி Empty உடையார்குடி

Post by சிவா Sun Jul 26, 2009 2:08 am

தமிழருக்கே மிக நீண்ட ஒரு சரித்திரம் உண்டு. கிரேக்க, ரோமானிய நாகரீகங்களை விட மிகப்பழமையானது தமிழ் நாகரீகம். ஐரோப்பியர்கள் காடுகளில் உடைகளின்றி அலைந்து கொண்டிருந்த போது தமிழ் நாகரீகம் ஒரு உச்சியைத் தொட்டுவிட்டது. என் மொழி தமிழ் என்பதற்காகவோ என் நாடு தமிழ்நாடு என்பதற்காகவோ இதை நான் சொல்லவில்லை. பரந்த மனித நாகரீகம் குறித்து அக்கறையோடே நான் தமிழ் நாகரீகத்தையும் பார்க்கிறேன். எந்தவித கர்வமுமில்லாது உற்று நோக்குகிறேன்.

தமிழர் நாகரீகத்தின் உச்சகட்டம் பிற்காலச்சோழர் காலம். குறிப்பாய், உடையார் ஸ்ரீ ராஜராஜத்தேவரின் காலம். உடையார் என்றதும் வேறு யாரோ என்று நினைக்க வேண்டாம். தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் என்கிற பெயரில் கோயிலை கட்டிய மாமன்னர் ராஜராஜரைத்தான் சொல்லுகிறேன். அரசன் என்கிற ஒரு தனிமனிதன் சொல்வதே சட்டமாக இருந்த அந்த காலகட்டத்தில் குடவோலை முறை என்று ஒன்று கொண்டு வந்து அதற்கு அற்புதமான விதிகள் அமைத்து மக்களால் மக்கள் தலைவர்களை தேர்ந்தெடுத்து. அந்த மக்கள் தலைவர்களுக்கு வேண்டுமென்ற அதிகாரம் கொடுத்து அவர்களாலேயே திறம்பட கிராம ஆட்சிமுறை நடந்து வந்தது.

ஜாதிப்பிரிவுகள் இருந்தன, ஆனால் அவர்கள் சண்டையிட்டுக் கொள்வதில்லை. ஒருவரை ஒருவர் இழிவுபடுத்துவதில்லை. இந்த உலகில் தோன்றிய ஒவ்வொரு உயிரும் அவசியமானவை என்று தமிழர்கள் அறிந்திருந்தார்கள். எவரும் எப்போதும் இழிவானவர் அல்ல என்பதை புரிந்து வைத்திருந்தார்கள். அந்நியரால் தாக்கப்பட்டபோது மிகக்கடுமையாக போர் செய்தார்கள். மிக வீரத்தோடு எதிர்த்தார்கள் போர் இல்லாத காலங்களில் மிக கண்ணியமாய் வாழ்ந்தார்கள்.

அப்படி போர்செய்கின்ற நேரத்தில் அந்தணர்கள் வாளேந்தினார்கள். நான்காவது வருணத்தினர் சேனாதிபதியாய் இருந்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு ராஜராஜர் காலத்தில் பிரம்மராயர் எனப்படுகின்ற சேனாதிபதியாக கிருஷ்ணராமன் என்கிற ஒரு அந்தனர் இருந்தார்.

அவர் பல போர்களை ராஜராஜ சோழனுக்காக நடத்தியிருக்கிறார். அவருக்கு மும்முடிச்சோழ பிரம்மராயர் என்ற பட்டம் உண்டு. அவர் மூன்று தலைமுறைக்கு சேனாதிபதியாக இருந்திருக்கிறார். அதேநேரம் பல்லவரையன் என்று கோலார் பகுதியிலிரந்து வந்த ஒரு மாவீரன் நான்காவது வருணத்தைச் சார்ந்தவர். மாமன்னர் ராஜராஜருக்கு வலதுகை போன்றவர்; இந்த பல்லவரையனும் மும்முடிச் சோழர் என்ற பட்டம் பெற்றவர் இவரும் சேனாதிபதி கிருஷ்ணன்ராமனான பிரம்மராயரும் ஒரே போரில் அருகருகே நின்று பலமுறை பங்கேற்றிருக்கிறார்கள்.

விளைச்சல் நிலங்களை ராஜராஜர் தன்னுடைய மந்திரிமார்களை விட்டு அளந்து விளைசலுக்கேற்ப தரம் பிரித்து அவைகளுக்கு வரிவிதிப்பு செய்திருக்கிறார.; இந்த வரிவிதிப்பு புத்தகமாக எழுதப்பட்டு அரசாங்கத்தால் பேணி பாதுகாக்கப்பட்டு வந்திருக்கிறது. மேலும் கோயில்களுக்கும் மற்ற விஷயங்களுக்கும் கொடுக்கப்பட்ட நிவந்தங்கள் கல்லில் பொறிக்கப்பட்டு பலகாலம் மதிக்கப்பட்டன.

அரசன் விஷ்னு அம்சம். அவன் கடவுள் ரூபம் என்கிற எண்ணம் இருப்பினும் மாமன்னன் ராஜராஜன் அதை பெரிதாக நினைக்காமல் தான் மட்டும் கோயில் கட்டினேன் என்று கம்பீரமாக தன்னைப்பற்றி சொல்லிக் கொள்ளாமல் ஞநான் கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும் நம் பெண்டுகள் கொடுத்தனவும் நம் கொடுப்பார் கொடுத்தனவும் ஞ என்று கல்லிலே வெட்டி பிரகதீஸ்வரர் கோயிலின் வெளிப்புற சுற்றுப் பிரகாரத்தில் யார் யார் எவ்வளவு நன்கொடைகள் கொடுத்திருக்கிறார்கள் என்று எழுதச் சொன்னார.; மிகச் சாதாரணமான அரசுக்கு இடைநிலைத் தாதியாக இருந்தவர்கள் கொடுத்த பொற்காசுகள் கூட கல்லிலே வெட்டப்பட்டன.

பெண்கள் அதிகாரம் படைத்தவர்களாக இருந்தார்கள். அவர்களுக்கு கோயிலைப் பாதுகாக்கின்ற அதிகாரம் அரசாங்க பண்டாரங்களை நிர்வகிக்கும் அதிகாரம் போன்றவை இருந்தன. அதிகாரிச்சி முத்தான பொன்னங்கை என்பவர் கோயில் நிர்வாகத் தலைமை ஏற்றிருக்கிறார்.

அது மட்டுமல்ல இன்றைக்கு நாம் தமிழில் சிறப்பான நூல் வடிவமாகக் கருதுகின்ற தேவாரமும், திருவாசகமும் ராஜராஜனால் மீட்டுக் கொண்டு வரப்பட்டன. சிதம்பரத்தில் ஒரு அறையில் தீட்சிதர்களால் பூட்டி வைக்கப்பட்ட அந்த ஓலைச்சுவடிகளைப்பற்றி கேள்விப்பட்டு அந்த அறையை பல போராட்டங்களுக்குப் பிறகு திறந்து பார்த்து செல்லரித்துப் போனவைகளைத் தவிர மற்றவைகளைக் கொண்டு வந்து படியெடுக்கச் செய்து ஊர் முழுவதும் பரப்பி அப்படிப் பரப்புவதே தங்களுடைய தலையாய கடமையாகக் கொண்டு அதில் மனம்கிறங்கி, தமிழின் பழமையை சைவத்தின் செழுமையை நன்கு உணர்ந்து அதை தமிழ்நாடு முழுவதும் எல்லோரும் படிக்கும் வண்ணம் செய்த அற்புதமான அரசன் ராஜராஜன். இப்படிப்பட்ட சோழ நாகரிகத்திற்கு இணையான இன்னொரு நாகரீகம் அந்தக் காலகட்டத்தில் உலகத்தில் வெகுசில இடங்களிலேயே இருந்தன.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உடையார்குடி Empty Re: உடையார்குடி

Post by சிவா Sun Jul 26, 2009 2:09 am



இப்படிப்பட்ட ராஜராஜனோடு பின்னிப்பிணைந்த ஒரு கோவில் உடையார்குடி கோயில் அது என்ன உடையார்குடி ? எங்கிருக்கிறது அந்த கோயில் ? என்று யோசிக்கிறீர்களா ?


உடையார்குடி என்ற பெயர் இப்போது இல்லை காட்டுமன்னார் கோயில் என்ற பெயரில் அந்த ஊர் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. வீரநாராயணபுரம் ஏரிக்கு அருகே இருந்து சற்று தொலைவில் உள்ள ஊர் காட்டுமன்னார் கோயில் வீரநாராயணபுரம் ஏரி எங்கிருக்கிறது என்று யோசிக்கிறீர்களா ? அது தற்போது பெயர் சுருங்கி வீராணம் ஏரி என்றழைக்கப்படுகிறது.

மாபெரும் எழுத்தாளர் கல்கி எழுதிய ஞபொன்னியின் செல்வன் ஞ என்கிற அற்புதமான சரித்திர நாவலைப் படித்திருக்கிறீர்களா. * ஆரம்பத்தில் முதல் அத்தியாயத்தில் அந்த வீரநாராயணபுரம் ஏரியைப்பற்றி எழுத்தாளர் கல்கி அவர்கள் மிகப்பெரிய பாசன ஏரியாக அது திகழ்கிறது என்பார். அந்த ஏரிக்கு அருகே இருக்கின்ற மிகப்பழமைவாய்ந்த ஊர்தான் காட்டுமன்னார்கோயில் என்று இப்போது அழைக்கப்படும் பழங்கால உடையார்குடி.

கோயில் மிகப்பெரியதும் அல்ல. மிகச்சிறியதுமல்ல. ஆனால் சரித்திர சம்பவம் ஒன்று நிகழ்ந்த கோயில். இந்தக் கோயிலைப் பற்றி சொல்லும்போது ஒரு சரித்திரக் கதையையும் உங்களுக்கு சொல்ல விரும்புகின்றேன்.

ராஜராஜசோழன் அரசாளுவதற்கு முன்பு அவருடைய சிற்றப்பனான உத்தமசோழன் என்று அழைக்கப்பட்ட மதுராந்தகன் ஆட்சி செய்தார.; மதுராந்தகன் ஆட்சி செய்வதற்கு முன்பு சுந்தரசோழர் சோழதேசத்தை ஆண்டார் சுந்தரசோழரின் மூத்தமகன் ஆதித்த கரிகாலர். சுந்தர சோழருக்குப் பிறகு ஆட்சிக்கு வர வேண்டியது ஆதித்த கரிகாலர் என்று பரவலாக பலமாகப் பேசப்பட்ட ஒரு காலகட்டத்தில் பாண்டியன் ஆபத்துதவிகள் என்று கருதப்பட்ட ரவிதாஸனாலும் அவன் தம்பியாலும் ஆதித்த கரிகாலர் சுற்றி வளைத்துக் கொலை செய்யப்பட்டார் என்ற ஒரு தகவல் உண்டு.

ஆனால் ரவிதாஸன் உத்தமசோழன் என்றழைக்கபட்ட மதுராந்தகரின் ஆட்சிக்காலத்தில் தண்டிக்கப்படவே இல்லை. மாறாய் அந்த ரவீதாஸன் உடையார்குடிக்கு அருகே சீரும் சிறப்புமாக நிலபுலன்களோடு, தன்னைச் சுற்றியுள்ள உறவினர் கூட்டத்தோடு, நண்பர்கள் கூட்டத்தோடு, குலத்தார் கூட்டத்தோடு, ஒரு சிற்றரசன் போல வாழந்து வந்திருக்கிறார். ஒன்றல்ல, இரண்டல்ல, பதினாறு வருடங்கள் மதுராந்தகனுடைய ஆட்சியிலே வாழ்ந்து வந்த ரவிதாஸனை யாரும் எதுவும் செய்ய முடியவில்லை.

உத்தமசோழனான மதுராந்தக கண்டராதித்தர் ஏதோ ஒரு காரணத்தால் பதவி விட்டிறங்கி, பிறகு சோழ சரித்திரத்திலேயே அடையாளம் தெரியாமல் போய,; ராஜராஜ சோழர் ஆட்சிக்கு வந்த இரண்டாம் ஆண்டு ரவிதாஸன் மீது மறுபடியும் விசாரணை செய்யப்பட்டது. அதாவது ஆதித்த கரிகாலன் கொலையினுடைய விசாரணை மதுராந்தகர் காலத்தில் செய்யப்படாது பதினாறு வருடங்கள் கழித்து, ராஜராஜர் காலத்தில் தூசுதட்டி எழுப்பப்பட்டு மறுபடியும் விசாரணை நடந்து ரவீதாஸனையும் அவன் தம்பியையும் அவன் கூட்டத்தாரையும் நாடு கடத்துகிறான் ராஜராஜசோழன்.

இப்படி நாடு கடத்தியதைப் பற்றிய மிகத்தெளிவான கல்வெட்டு ஒன்று உடையார்குடியில் இருக்கிறது. நாடு கடத்தல் என்ற விஷயத்தை ராஜ ராஜசோழன் நேராகக் கூட செய்து விடவில்லை தன்னை சக்கரவரத்தி என்று பிரகடனப்படுத்திய ஒரு ஸ்ரீமுகத்தை உடையார்குடி கிராம அதிகாரிகளுக்கு அனுப்பி ரவீதாஸனையும் அவன் கூட்டத்தாரையும் ஒட்டு மொத்தமாய் ஊரை விட்டு அனுப்பச்சொல்லி அந்த கிராம அதிகாரிகளுக்கு அதிகாரம் தந்திருக்கிறார். இந்த கட்டளையை உடனே நிறைவேற்றவேண்டும் என்றும் அந்த ஸ்ரீமுகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது அந்த ஸ்ரீமுகத்தைப் படித்து அந்தக் கட்டளையை நிறைவேற்றினோம் என்ற கல்வெட்டு அந்தக் கோயிலிலே இருக்கிறது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உடையார்குடி Empty Re: உடையார்குடி

Post by சிவா Sun Jul 26, 2009 2:10 am



உறவினர் கூட்டம் என்றால் என்ன ?


ரவீதாஸனுக்கும் அவன் தம்பிக்கும் அவர்கள் உறவினர்களுக்கும் பெண் கொடுத்தவர்களுக்கும், பிள்ளை கொடுத்தவர்களுக்கும் பேரன் பேத்திகளின் வேட்டகத்தார்களுக்கும் இந்த தண்டனை பொருந்தும் என்று சொல்லி அவர்களும் தங்கள் சொத்துபத்துக்கள் அனைத்தும் விட்டுவிட்டு கட்டிய துணியோடு போக வேண்டும் என்பது போல் அந்த கல்வெட்டு இருக்கிறது.

ஏன் மரணதண்டனை விதிக்கவில்லை ? எதனால் தன் அண்ணனான அதித்த கரிகாலனைக் கொன்ற இந்த ரவிதாஸன் கூட்டத்தை சிறைச்சேதம் செய்யவில்லை ?

ரவிதாஸனும், அவன் கூட்டமும் அந்தணர்கள். அந்தணர்களைக் கொல்வது பாவம் என்பது ஆயிரம் வருடங்களுக்கு முன்பு ராஜராஜன் காலத்தில் நிலவிய ஒரு கூற்று. அதனாலேயே அவன் அவர்களை கொல்லாமல் விட்டிருக்கலாம் அல்லது நேரடியான சாட்சி இல்லாது ஒரு ஊகத்தில் நீதான் கொலை செய்திருப்பாய் என்ற நிலையிலே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கலாம். ஆனால் அந்த கல்வெட்டு ரவிதாஸனையும் அவன் தம்பிiயும் துரோகிகளான என்ற வாரத்தையில் அழைக்கிறது.

துரோகி என்ற வார்த்தை எப்போது பயன்படுத்தப்படும் ?

நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருந்து நம்பிக்கைக்கு உரியவர் போல் நடித்து சோழதேசத்தின் ஆதரவாளர்போல் சுற்றிசுற்றி வந்து அதே நேரம் சோழதேசத்தின் குலக்கொடியை அறுத்தவர்களைத் தானே துரோகி என்று சொல்வார்கள். நேரே வந்து சண்டையிடுபவனை எதிரி என்று சொல்வார்கள். ஆனால் ரவிதாஸனை எதிரி என்று சொல்லவில்லை. எனவே, பாண்டியனின் ஆபத்துதவி படையைச் சார்ந்த இந்த ரவிதாஸன் தான் அந்தணன் என்ற சிறப்பை உபயோகப்படுத்தி சோழ தேசத்திற்குள் புகுந்து மெல்ல மெல்ல செல்வாக்கு பெற்று சோழ அரசியலிலும் சிறிதளவு பங்கேற்று சோழ அரசர்களுடைய நடவடிக்கைகளை தெரிந்து கொள்கின்ற ஒரு நிலைமைக்கு வந்து. சு{ழ்ச்சியால் ஆதித்த கரிகாலனை அவருடைய உதவியாளர்களிடமிருந்து பிரித்து தனியே மடக்கி வெட்டிக்கொன்று போட்டிருக்க வேண்டும். ஒருவேளை அதன் காரணமாய் உத்தமசோழன் என்றழைக்கப்படுகின்ற மதுராந்தக தேவன் பதவிக்கு வந்திருக்கலாம். இல்லையெனில் மதுராந்தகன் பதவியேற வாய்ப்பே இல்லை ஆதித்த கரிகாலன் இருக்கும் வரை தனக்கு அந்த வாய்ப்பு இல்லையென்பதால் இதை மதுராந்தகர் செய்திருக்கக் கூடும் என்ற ஒரு ஊகமும் சரித்திர ஆராய்ச்சியாளர்களிடையே இருக்கிறது.

ஏனெனில் இதை செய்ததாக ராஜராஜன் காலத்தில் கருதப்பட்ட ரவிதாஸன் மதுராந்தகர் காலத்தில் சீரும் சிறப்புமாய் நிலச்சுவான்தராய் வாழ்ந்திருக்கிறார். வீரநாராயணபுரம் ஏரிப்பாசனத்தில் நன்கு விளைந்த வயல்களில் மிகப்பெரும்பங்கு அவனுக்கு உடமையாக இருந்திருக்கிறது மிக அற்புதமான ஒரு இடத்தில் அவன் குடியிருந்திருக்கிறான் அது தஞ்சையில் இல்லை குடந்தையில் இல்லை வடக்கே தஞ்சையிலிருந்தோ, குடந்தையிலிருந்தோ ஆள் அனுப்பினால் தப்பித்துக்கொள்கிற தூரத்திலே அதேநேரம் மிகச்செழிப்பான ஒரு கிராமத்திலே தன்னுடைய சிற்றரசை ரவிதாஸன் நடத்திவந்திருக்கிறார். ஒன்றல்ல இரண்டல்ல பதினாறு ஆண்டுகள்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உடையார்குடி Empty Re: உடையார்குடி

Post by சிவா Sun Jul 26, 2009 2:11 am

அந்தக்கோயில் மற்றும் கல்வெட்டு இப்போதும் இருக்கிறது. கோவிலுக்குள் தலை மட்டும் உள்ள ஒரு நந்தி இருக்கிறது எதனால் அவை அப்படி நிறுத்தி இருக்கிறார்கள் என்ற அர்த்தம் தெரியவில்லை. கோவில் சுவருக்கும் அந்த நந்தியின் நிறத்திற்கும் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது வெறும் கழுத்து மட்டும் உள்ள அந்த நந்தியை அந்த கோவில் சுவருக்குள் புதைத்து வைத்திருக்கிறார்கள்.

இந்தக் கோயிலின் பின்பக்கம் தான் அந்தக் கல்வெட்டு இருக்கிறது. இந்தக் கோயிலில்தான் அந்த தண்டனை நிறைவேற்றப்பட்டது இந்த ஊரிலிருந்துதான் ரவிதாஸன் துரத்தப்பட்டான்.

அது என்ன உடையார் குடி ?

ராஜராஜன் உடையார் என்கிற குலத்தைச் சார்ந்தவன். உடையார்கள் அதிகம் குடியிருக்கின்ற இடமென்பதால் உடையார்குடி என்று அதற்கு பெயர் வந்தது. ஒரு வேளை மதுராந்தகர் ஆட்சிசெய்த காலத்தில் அந்த பதினாறு வருடத்தில் பழையாறையில் இருக்கப் பிடிக்காமல் அல்லது தங்கையில் இருக்கப் பிடிக்காமல் அல்லது குடந்தையில் இருக்கப் பிடிக்காமல் அங்கிருந்து நகர்ந்து வடக்கே வெகுதூரம் தஞ்சையினுடைய எல்லையான உடையார்குடியில் ராஜராஜன் வாழந்திருக்க வேண்டும் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன. எனெனில் உடையார்குடிக்கு அருகே ராஜேந்திர சோழன் அகம் என்ற ஒரு ஊர் இருக்கிறது.

ராஜேந்திரன் இங்கு பிறந்திருக்கக் கூடும் என்றும் அதனாலேயே இதன் பெயர் ராஜேந்திரசோழன் அகம் என்று வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

மனைவி மக்களோடு ராஜராஜன் இங்குவாழ்ந்து ஒரு அளவுவரை மதுராந்தகரை ஆட்சி செய்யவிட்டு தன்னுடைய செல்வாக்கை மக்களுக்கிடையே வளர்த்துக் கொண்டு மக்களால் தான் ஆதரிக்கப்பட்ட நேரத்தில், மக்களால் தான் உயர்த்திக் காட்டப்பட்ட நேரத்தில் மதுராந்தகனை விலகச்சொல்லி தான் ஆட்சிபிடித்து அரசுகட்டில் ஏறி அரசுகட்டிலேறிய மறுவருடமே இந்தக் கடுமையான தண்டனையை ராஜராஜர் விதித்திருக்கிறார்.

கொன்றால் ரவிதாஸனையும் அவன் தம்பியையும் மட்டும்தான் கொல்லமுடியும். ஆனால் ராஜராஜசோழனுடைய வன்மம் அப்படிப்பட்டதல்ல. என் குலக்கொடியை அறுத்தாயல்லவா உன் குலத்தையே நாடு கடத்துகிறேன் பார் என்று சொல்லி குஞ்சு குளுவானோடு உட்பட அத்தனை பேரையும் அந்த ஊரிலிருந்து அகற்றியிருக்கிறார். ஒரு மிகப்பெரிய வட்டமொன்று தங்களுடைய எல்லா சொத்துக்களையும் விட்டுவிட்டு மெல்லமெல்ல நடந்து பாண்டிய தேசத்தின் வழியாக சேரதேசம் நோக்கி நடந்து போவதை கற்பனை செய்துபாருங்கள். தண்டனையினுடைய கடுமை என்னவென்று உங்களுக்குப் புரியும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உடையார்குடி Empty Re: உடையார்குடி

Post by muthu86 Mon Dec 26, 2011 9:38 am

மொத்தம் ஆறு பாகம் ..அனைத்தும் மிக அருமை ...


வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Back to top Go down

உடையார்குடி Empty Re: உடையார்குடி

Post by சின்ராசு Fri Jan 13, 2012 8:32 pm

இந்த கட்டளையை உடனே நிறைவேற்றவேண்டும் என்றும் அந்த ஸ்ரீமுகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது அந்த ஸ்ரீமுகத்தைப் படித்து அந்தக் கட்டளையை நிறைவேற்றினோம் என்ற கல்வெட்டு அந்தக் கோயிலிலே இருக்கிறது.
அந்த கல்வெட்டை நானும் பார்த்திருக்கிறேன்,
அருமையான கட்டுரை...சிவாண்ணா.
avatar
சின்ராசு
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 40
இணைந்தது : 11/01/2012

Back to top Go down

உடையார்குடி Empty Re: உடையார்குடி

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri Jan 13, 2012 8:49 pm

மிகவும் நல்ல கட்டுரை...சிவா அவர்களே...விருப்ப பொத்தானைப் பாவித்தேன். மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

உடையார்குடி Empty Re: உடையார்குடி

Post by ayyasamy ram Sun Dec 06, 2015 4:40 pm


-
கட்டுரையில்:
உடையார்குடி என்ற பெயர் இப்போது இல்லை
காட்டுமன்னார் கோயில் என்ற பெயரில் அந்த ஊர்
தற்போது வழங்கப்பட்டு வருகிறது. ..[/color]
என்பது தவறான தகவலாகும்
-
உடையார்குடி என்ற கிராமம் இப்போதும் இருக்கிறது,
இந்த கிராமத்தில்தான் காட்டுமன்னார்கோயில் பேருந்து
நிலையம் அமைந்துள்ளது
-
காட்டுமன்னார்கோயில் என்ற பெயரில்தான் எந்த கிராமும் இல்லை
-
ஆனால் வட்டத்தின் பெயர் காட்டுமன்னார்கோயில் ஆகும்
-
காட்டுமன்னார்கோயில் டவுன் என்பது,
மன்னார்குடி மற்றும் உடையார்குடி
என்ற இரண்டு கிராமங்களை உள்ளடக்கியது ஆகும்
-
.
-[/color]
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உடையார்குடி Empty Re: உடையார்குடி

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 06, 2015 5:28 pm

இந்த தகவலுக்கு நன்றி ஐயா.
ayyasamy ram wrote:
காட்டுமன்னார்கோயில் டவுன் என்பது,
மன்னார்குடி மற்றும் உடையார்குடி
என்ற இரண்டு கிராமங்களை உள்ளடக்கியது ஆகும்
[You must be registered and logged in to see this link.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

உடையார்குடி Empty Re: உடையார்குடி

Post by Dr.S.Soundarapandian Mon Dec 07, 2015 3:04 pm

உடையார்குடி 103459460 உடையார்குடி 3838410834 உடையார்குடி 1571444738


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

உடையார்குடி Empty Re: உடையார்குடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum