ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:55 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:48 pm

» ஆடி சொல்லும் சேதி
by ayyasamy ram Today at 11:59 am

» தும்பைக் கீரை
by ayyasamy ram Today at 11:56 am

» கருங்குருவை அரிசி- மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 11:54 am

» முடிவிலி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:53 am

» பரத நாட்டியம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:51 am

» இயற்கையும் ...செயற்கையும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:49 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:48 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:48 am

» புதிய தலைமுறை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:47 am

» மறக்கப் படுவதில்லை! …
by ayyasamy ram Today at 11:45 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:17 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:07 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:42 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Yesterday at 9:42 am

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Yesterday at 9:37 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jul 11, 2024 11:42 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:12 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Thu Jul 11, 2024 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:48 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Thu Jul 11, 2024 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Thu Jul 11, 2024 3:22 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Thu Jul 11, 2024 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் ஆயுதங்கள் இந்தியாவுக்கு எதிராக திருப்பிவிடப்படுகிறதா? கண்காணிக்கிறது அமெரிக்கா

Go down

பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் ஆயுதங்கள் இந்தியாவுக்கு எதிராக திருப்பிவிடப்படுகிறதா? கண்காணிக்கிறது அமெரிக்கா Empty பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் ஆயுதங்கள் இந்தியாவுக்கு எதிராக திருப்பிவிடப்படுகிறதா? கண்காணிக்கிறது அமெரிக்கா

Post by நவீன் Wed Aug 11, 2010 10:25 am


பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் ஆயுதங்கள் இந்தியாவுக்கு எதிராக திருப்பிவிடப்படுகிறதா? கண்காணிக்கிறது அமெரிக்கா 10ulakam





புதுதில்லி,

தீவிரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கைகளுக்காக பாகிஸ்தானுக்கு
வழங்கப்படும் ஆயுதங்கள் இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்த
திருப்பிவிடப்படுகிறதா என்பதை அமெரிக்கா கண்காணிக்கிறது என்று அந்த
நாட்டின் பாதுகாப்புத்துறை செயலர் மிஷேல் புளோர்னாய் தெரிவித்தார்.தில்லி வந்துள்ள அவர் நிருபர்களிடம் செவ்வாய்க்கிழமை பேசினார்.தீவிரவாதிகளுக்கு
எதிரான போரில் தமது கூட்டாளியாக பாகிஸ்தானை இணைத்துக்கொண்டுள்ள அமெரிக்கா
பாகிஸ்தான் கோரும் உதவிகளை செய்துவருகிறது. ஆயுதங்கள், நிதி உதவி என அது
வாரி வழங்கி வருகிறது. பாகிஸ்தானுக்கு அமெரிக்கா தரும் ஆயுதங்கள்
இந்தியாவுக்கு எதிராகவே பயன்படுத்தப்படுகிறது. கடந்த கால அனுபவம்
இப்படித்தான் இருந்துள்ளது என இந்தியா தனது தரப்பு கவலையை அமெரிக்காவிடம்
தெரிவித்தபடி உள்ளது.அமெரிக்க தேசிய பாதுகாப்புச்செயலர் ஜேம்ஸ்
ஜோன்ஸ், முப்படைத்தளபதி மைக் முல்லன் ஆகியோர் அண்மையில் இந்தியாவுக்கு
சுற்றுப்பயணமாக வந்தபோது, இதுதொடர்பான கவலையை பாதுகாப்பு அமைச்சர் அந்தோனி
சுட்டிக்காட்டிப் பேசி இது சம்பந்தமாக அமெரிக்கா ஏதாவது ஒன்றை செய்தாக
வேண்டும் என்று வலியுறுத்தினார். அமெரிக்காவிலிருந்து வரும்
ஆயுதங்களை பாகிஸ்தான் குவித்து வைத்துக்கொள்வதால் இந்த பிராந்தியத்தில்
இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளுக்கு அச்சுறுத்தலாகவே இருக்கும் என்றும்
இந்தியா சுட்டிக்காட்டி வருகிறது.அமெரிக்காவும் இந்தியாவின் கவலையை புரிந்துகொண்டுள்ளது. இதுபற்றி நிருபர்களிடம் மிஷேல் புளோர்னாய் தெரிவித்ததாவது:பயங்கரவாதத்துக்கு
எதிரான போருக்கு பயன்படுத்தவேண்டும் என்ற அடிப்படையில் பாகிஸ்தானுக்கு
அமெரிக்கா வழங்கும் ஆயுதங்கள் தமக்கு எதிராக பயன்படுத்தப்படக்க்கூடும்
என்கிற இந்தியாவின் கவலையை மறுக்கவில்லை. பாகிஸ்தானுக்கு போதிய
ஆயுதங்கள் தரும் அதே வேளையில் அந்த ஆயுதங்கள் வேறு நோக்கத்துக்கு
திருப்பிவிடப்படுகிறதா என்பதை அமெரிக்கா கண்காணிக்கிறது. இதுபற்றி
பாகிஸ்தானிடம் விரிவாக பேசியுள்ளோம். பாகிஸ்தானுக்கு எந்த வகை ஆயுதங்களை
கொடுக்கலாம், என்னென்ன கொடுக்கக்கூடாது என்பதில் அமெரிக்கா மிகத் தெளிவாக
உள்ளது. ஆப்கானிஸ்தான் -பாகிஸ்தான் எல்லையில் பதுங்கி பயங்கரவாத
தாக்குதல்களில் ஈடுபடும் தீவிரவாதிகளை ஒழிக்க பாகிஸ்தானுக்கு உதவவேண்டிய
கட்டாயம் அமெரிக்காவுக்கு உள்ளது என்றார் புளோர்னாய்.அல் காய்தா
போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் நாட்டின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ,
உதவுவதாக வெளியாகும் செய்தி பற்றி கேட்டதற்கு அதுபற்றி வெளிப்படையாக பேச
மறுத்த புளோர்னாய், தீவிரவாதம் எந்த வடிவில் வந்தாலும் அதை ஒடுக்குவது
என்பதில் அமெரிக்கா திண்ணமாக உள்ளது என்றார்.லஷ்கர்-இ-தொய்பா,
அல்காய்தா ஆகிய தீவிரவாத அமைப்புகளுக்கு இடையே பிணைப்பு இருப்பது
தெரிகிறது. இவ்வாறு கூட்டு சேர்ந்துகொண்டு பயங்கரவாத செயல்களில் ஈடுபடும்
தீவிரவாத அமைப்புகளுக்கு முடிவு காண்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது
என்றும் புளோர்னாய் தெரிவித்தார். தீவிரவாத அமைப்புகள் தொடர்பான உளவு
தகவல்களை சேகரிக்கவும், வேவு பார்க்கவும், கண்காணிக்கவும் உதவும்படி
பாகிஸ்தான் கோரியது. அதற்காக ஆளில்லாமல் இயங்கும் விமானங்களை அந்த
நாட்டுக்கு வழங்குவது பற்றி அமெரிக்கா பரிசீலிக்கிறது என்றும் அவர்
தெரிவித்தார்.புளோர்னாய், இந்த பயணத்தின்போது பாதுகாப்பு அமைச்சர்
அந்தோனி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், பாதுகாப்பு செயலர்
பிரதீப் குமார் ஆகியோரை சந்தித்துப்பேசினார். கடல்சார் பாதுகாப்பு,
மனிதாபிமான உதவிகள், பேரிடர் நிவாரணம், பாதுகாப்புத்துறை வர்த்தகம்,
பயிற்சி போன்ற துறைகளில் ஒத்துழைப்பு தொடர்பாக விரிவாக இந்த சந்திப்பில்
விவாதிக்கப்பட்டது என்று புளோர்னாய் தெரிவித்தார்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum