ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:28 pm

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாவோயிஸ்ட்களுக்கு மம்தா ஆதரவா? பார்லிமென்டில் இரு சபைகளிலும் புயல்

Go down

மாவோயிஸ்ட்களுக்கு மம்தா ஆதரவா? பார்லிமென்டில் இரு சபைகளிலும் புயல் Empty மாவோயிஸ்ட்களுக்கு மம்தா ஆதரவா? பார்லிமென்டில் இரு சபைகளிலும் புயல்

Post by நவீன் Wed Aug 11, 2010 8:14 am

மேற்கு வங்கத்தில் உள்ள லால்காரில் நடந்த பேரணியில், மாவோயிஸ்டுகளை
மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா ஆதரித்த செயல் நேற்று பார்லிமென்டின் இரு
சபைகளிலும் புயலைக் கிளப்பியது. எதிர்க்கட்சிகளான பா.ஜ.,வும்,
இடதுசாரிகளும் மம்தா மேற்கொண்ட செயலை அரசு ஆதரிக்கிறதா என்று கேள்வி
எழுப்பினர். ராஜ்யசபாவில் அமளி அதிகரித்து பா.ஜ., வெளிநடப்பு செய்தது.
மாவோயிஸ்டுகளின் ஆதரவுடன் மேற்கு வங்க மாநிலம் லால்காரில் நேற்று
முன்தினம் நடந்த கூட்டத்தில் மம்தா பானர்ஜி கலந்து கொண்டதும் அதில் அவர்
பேசிய பேச்சும் நேற்று பெரும் திருப்பமாக அமைந்தது.
லோக்சபாவில் பா.ஜ., துணைத்தலைவர் கோபிநாத் முண்டே பேசும் போது,
"
மாவோயிஸ்ட் தலைவர் ஆசாத் என்கவுன்டரில் கொல்லப்பட்டது குறித்து
கேள்வி எழுப்பி, அது படுகொலை என்கிறார் மம்தா. உள்துறை அமைச்சர்
சிதம்பரம் கருத்தும், மம்தா கருத்தும் வேறாக இருக்கிறதே. அப்படி என்றால்
இந்த விஷயத்தில் சி.பி.ஐ., விசாரணை நடத்த அரசு உத்தரவிடுமா? அல்லது
மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசு நிறுத்திக் கொள்ளுமா? ஏன்
பிரதமர் இந்த விஷயத்தில் மவுனம் காக்கிறார்' என்று கேட்டார்.
"மாவோயிஸ்டுகளுடன் கைகோர்த்து மம்தா செயல்படுகிறார், லால்காரில் நடந்த
பேரணியில் மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் பங்கேற்றனரா என்பதை அரசு விளக்க
வேண்டும்' என்று மார்க்சிஸ்ட் எம்.பி., சவுத்திரி கேட்டார்.
திரிணமுல் எம்.பி., சுதீப் பந்தோபாத்யா பேசுகையில், "

பாமர
மக்களுக்கு ஆதரவாக செயல்படும் மம்தாவை அனைவரும் ஆதரிக்க வேண்டும்'
என்றார். லால்காரில் நடந்தது என்ன என்பதை அமைச்சர் மம்தாவுடன் பேசி
அறிந்த பின்பு தான் முழுவிஷயமும் தெளிவாகும் என்று நிதியமைச்சர் பிரணாப்
கூறி சற்று அமைதிப் படுத்தினார்.
ராஜ்யசபா: ராஜ்யசபா கூடியதும் எதிர்க்கட்சித் தலைவரான அருண்ஜெட்லி
எழுந்து இப்பிரச்னை குறித்து விவாதிக்க, கேள்வி நேரத்தை ரத்து செய்ய
வேண்டுமென கோரினார். ஆனால், காங்கிரஸ் மற்றும் திரிணமுல் கட்சிகளின்
எம்.பி.,க்கள், அருண்ஜெட்லியை பேச விடாமல் குறுக்கிட்டனர். இதனால்
எழுந்த கூச்சலில் அவை, ஒரு மணி நேரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் அவை கூடியபோது அருண் ஜெட்லி எழுந்து பேச ஆரம்பித்ததும், அவையில்
இருந்த திரிணமுல் காங்கிரசைச் சேர்ந்த அமைச்சர் திரிவேதி எழுந்து
குறுக்கிட்டார். எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது, அமைச்சரே குறுக்கிட்டு
விளக்கமளிக்க அவை விதிகளில் இடமில்லை என்பதால், மீண்டும் ரகளை
ஆரம்பமானது. இதையடுத்து துணைத் தலைவர் ரகுமான்கான், திரிவேதியை
இருக்கையில் அமரும்படி கூறவே, அருண்ஜெட்லி பேச ஆரம்பித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:

நான் பேசும்போது ஜூனியர் அமைச்சர்
குறுக்கிடுகிறார். எனது கேள்விக்கு அவரது கருத்தையே அரசின் நிலைப்பாடாக
நான் எடுத்துக் கொள்ளவா? அரசின் சார்பாக அவர் பேசுகிறாரா என்பது
புரியவில்லை. லால்காரிலே நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு மாவோயிஸ்ட் இயக்கம்
ஆதரவு தெரிவித்தது. மாவோயிஸ்டுகளை ஒடுக்குவதாக கூறும் மத்திய அரசு, தனது
அமைச்சர் ஒருவரே அதில் பங்கேற்று பேசியது குறித்து என்ன நினைக்கிறது.
ஜனநாயக வழிமுறைகளை தூக்கி எறிந்துவிட்டு இயங்கும் ஒரு அமைப்புக்கு மத்திய
அமைச்சரே ஆதரவு காட்டுவது ஏன்? உள்துறை அமைச்சகமும், ஆந்திர போலீசாரும்
என்கவுன்டர் என்றுதான் கூறுகின்றனர். ஆனால், ஆசாத் கொலை செய்யப்பட்டார்
என்று அமைச்சர் கூறுவது ஏன்? இந்த முரண்பாடு ஏன்? பிரதமரின் பதில் என்ன?
மாவோயிஸ்ட் குறித்து மத்திய அரசின் கொள்கை என்ன என்பதை பிரதமர் விளக்க
வேண்டும். அவர் மவுனம் சாதிப்பது ஏன்? காஷ்மீர் பிரச்னையாகட்டும்,
காமன்வெல்த் போட்டி ஊழல்களாகட்டும். எதற்குமே பதில் அளிக்க பிரதமர்
மறுக்கிறார். அவர் மவுனியாக மட்டுமே இருப்பது ஏன் என்று
தெரியவில்லை.இவ்வாறு அருண்ஜெட்லி பேசினார்.
அமைச்சர் பிரிதிவ்ராஜ் சவுகான் அளித்த பதிலில்,

"பத்திரிகைகளில் வந்த தகவல்களை வைத்து எதிர்க்கட்சித் தலைவர் இவ்வளவையும்
பேசுகிறார். முறைப்படி ஆய்வு செய்து உண்மையில் என்ன நடந்தது என்பது
குறித்து விசாரித்துவிட்டு மீண்டும் இந்த அவையில் அரசின் சார்பில்
விளக்கம் அளிக்கப்படும்,' என்றார்.
பா.ஜ., எம்.பி.,க்கள் இந்த பதிலில் சமாதானம் அடையவில்லை. பிரதமர் தான்
அவைக்கு வர வேண்டும். அவர் தான் பதில் அளிக்க வேண்டும் என்று வாதிட்டனர்.
இதனால் இருதரப்புக்கும் இடையில் அமளி நிலவியது. பின், அரசின் பதில்
திருப்தியளிக்கவில்லை என்று கூறி பா.ஜ., எம்.பி.,க்கள் அனைவரும்
அருண்ஜெட்லி தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.
இடதுசாரி எம்.பி.,க்களும் மம்தாவை கண்டித்து பேசியதுடன், பிரதமர்
விளக்கம் தர வேண்டும் என்று கூறி, முடிவில் சில நிமிட இடைவெளியில்
வெளிநடப்பு செய்தனர்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» ஒரே நாளில் இரு சபைகளிலும் மசோதா நிறைவேறிய அதிசயம்
» வங்க கடலில் புயல் சின்னம்: துறைமுகங்களில் 2-ம் நம்பர் புயல் எச்சரிக்கை கூண்டு
» பாம்பனில் 3ம் நம்பர் புயல் எச்சரிக்கை கூண்டு: வங்கக்கடலில் புயல் மையம்
» புயல் சின்னம் - 6 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
» லெஹர் புயல்: காரைக்கால் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum