புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சித்தரால் வந்த அழகு Poll_c10சித்தரால் வந்த அழகு Poll_m10சித்தரால் வந்த அழகு Poll_c10 
53 Posts - 42%
heezulia
சித்தரால் வந்த அழகு Poll_c10சித்தரால் வந்த அழகு Poll_m10சித்தரால் வந்த அழகு Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
சித்தரால் வந்த அழகு Poll_c10சித்தரால் வந்த அழகு Poll_m10சித்தரால் வந்த அழகு Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
சித்தரால் வந்த அழகு Poll_c10சித்தரால் வந்த அழகு Poll_m10சித்தரால் வந்த அழகு Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
சித்தரால் வந்த அழகு Poll_c10சித்தரால் வந்த அழகு Poll_m10சித்தரால் வந்த அழகு Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
சித்தரால் வந்த அழகு Poll_c10சித்தரால் வந்த அழகு Poll_m10சித்தரால் வந்த அழகு Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
சித்தரால் வந்த அழகு Poll_c10சித்தரால் வந்த அழகு Poll_m10சித்தரால் வந்த அழகு Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சித்தரால் வந்த அழகு Poll_c10சித்தரால் வந்த அழகு Poll_m10சித்தரால் வந்த அழகு Poll_c10 
304 Posts - 50%
heezulia
சித்தரால் வந்த அழகு Poll_c10சித்தரால் வந்த அழகு Poll_m10சித்தரால் வந்த அழகு Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
சித்தரால் வந்த அழகு Poll_c10சித்தரால் வந்த அழகு Poll_m10சித்தரால் வந்த அழகு Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
சித்தரால் வந்த அழகு Poll_c10சித்தரால் வந்த அழகு Poll_m10சித்தரால் வந்த அழகு Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
சித்தரால் வந்த அழகு Poll_c10சித்தரால் வந்த அழகு Poll_m10சித்தரால் வந்த அழகு Poll_c10 
21 Posts - 3%
prajai
சித்தரால் வந்த அழகு Poll_c10சித்தரால் வந்த அழகு Poll_m10சித்தரால் வந்த அழகு Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
சித்தரால் வந்த அழகு Poll_c10சித்தரால் வந்த அழகு Poll_m10சித்தரால் வந்த அழகு Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
சித்தரால் வந்த அழகு Poll_c10சித்தரால் வந்த அழகு Poll_m10சித்தரால் வந்த அழகு Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
சித்தரால் வந்த அழகு Poll_c10சித்தரால் வந்த அழகு Poll_m10சித்தரால் வந்த அழகு Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
சித்தரால் வந்த அழகு Poll_c10சித்தரால் வந்த அழகு Poll_m10சித்தரால் வந்த அழகு Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சித்தரால் வந்த அழகு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 26, 2009 8:26 am

போகர் அளித்த பெருஞ்செல்வம்

தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கோயில்களின் வரலாறுகளைப் பார்க்கும்போது அவை சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் அல்லது விஜயநகரப் பேரரசு, நாயக்க மன்னர்களால் உருவாக்கப்பட்டதாக வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றன.

ஆனால் திண்டுக்கல் மாவட்டம் பழநியில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் மட்டும் இதற்கு விதிவிலக்கு. இங்கு உள்ள முருகனின் திருவுருவம் போகர் எனும் சித்தரால் உருவானதாகும். தமிழிலக்கியங்களில் பழநி தலம் 'சித்தன் வாழ்வு' எனவும் கூறப்பட்டுள்ளது.

சித்தரான போகர் தன்னைக் காண வரும் பக்தர்களுக்கு மருத்துவ உதவி செய்ததுடன், ஆன்மிக உணர்வையும் வளர்த்து வந்தார். திருமலையின் மீது போகரின் கருணைப் பார்வை விழுந்ததால் முருகன் எனும் ஞான தண்டாயுதபாணியின் திருமேனி உருவானது என்கின்றனர். மருத்துவ உதவி செய்த போகரால் உருவான தண்டாயுதபாணியைத் தரிசிப்பவர்களுக்கு நோய் நொடிகள் தீரும் என்பது நம்பிக்கை.

அகத்தியருக்கு அளிக்கப்பட்ட மலைகள்

பழநி 12, 13, 14-ஆம் நூற்றாண்டுகளில் மதுரை நாயக்க மன்னர்கள், சோழர்கள் ஆகியோரின் ஆட்சியின் கீழிருந்தது. 18-ஆம் நூற்றாண்டில் மைசூர் அரசின் கீழிருந்தது. நான்காவது மைசூர் போருக்குப் பிறகு ஆங்கில அரசின் கீழ் பழநி வந்தது.

சிவனும், பார்வதியும் முருகனை 'ஞானப்பழம் நீ' என அன்புடன் அழைத்ததால் 'பழம் நீ' என அழைக்கப்பட்டுப் பிறகு அச்சொல் மருவி பழநி என வழங்கப்பட்டது. பழநி மலையும், இடும்பன் மலையும் முன்பு சிவகிரி, சத்திகிரி என்ற பெயரில் கயிலாயத்தில் இருந்துள்ளது. சிவன் இந்த மலைகளை அகத்திய முனிவருக்குக் கொடுத்தார் என்பது ஐதீகம்.

அகத்திய முனிவர் இந்த மலைகளைக் கொண்டு வரும்படி இடும்பாசுரனுக்கு ஆணையிட்டார். மலைகளைக் கொண்டு வரும் வழியில் ஓய்வெடுப்பதற்காக இடும்பன் மலைகளை இறக்கி வைத்தார். சிவகிரி மலையின் மீது முருகன் தோன்றியதால் பழநி மலையானது. இன்னொரு மலையான சத்திகிரி இடும்பன் பெயரில் இடும்பன் மலை என வழங்கப்பட்டது என தல வரலாற்றில் கூறப்பட்டுள்ளது.

பழநியின் கிரி வீதி


பழநி மலை நில மட்டத்திலிருந்து 450 அடி உயரமுடையதாகும். மலை மீது ஏறிச் செல்ல 697 படிகள் உள்ளன. பக்தர்கள் மலையின் மேல் உள்ள முருகனைத் தரிசிக்கும் முன் அடிவாரத்தில் உள்ள பாத விநாயகர் கோயிலை வலம் வந்து தரிசிக்கின்றனர்.

அதன் பின்னரே பக்தர்கள் கிரி வீதி சுற்றுகின்றனர். பழநி மலையைச் சுற்றி அழகிய கிரிப் பிரகாரம் உள்ளது. இந்தக் கிரிப் பிரகாரம் ஒன்றேகால் மைல் சுற்றளவுடன் உள்ளது. கிரி வீதி முழுவதும் அழகிய மரங்கள் உள்ளன.

கிரி வீதியின் சுற்றுப் பிரகாரத்தில் ஐந்து மயில் மண்டபங்கள், பல மடாலயங்கள், மதுரை வீரசாமி, ஐந்து முக விநாயகர் உட்பட பல சிறிய கோயில்கள் உள்ளன. திருக்கோயிலுக்குச் சொந்தமான நாதசுரத் தவில் பள்ளிகள், கருணை இல்லம் எனும் சிறுவர்கள் பராமரிப்பு இல்லம் ஆகியவையும் உள்ளன.

நவ பாஷாண மூர்த்தி


பழநி மலைக்கோயில் மேற்குத் திசையை நோக்கி உள்ளது. திருவாயில் முன்பு கட்டைக் கோபுர வாயிலும், அதன் அருகில் சுப்பிரமணியர் கோயிலும் உள்ளது. இதன் இரு புறமும் நாயக்கர் மண்டபம் உள்ளது.

அடுத்ததாக வைசியர் மண்டபம் தாண்டியவுடன் ஐந்து நிலை மாடங்களுடன் ராஜகோபுரம். ராஜகோபுரத்தைக் கடந்தால் இரண்டாம் பிரகாரம் வருகிறது. இரண்டாம் பிரகாரத்தில் 12 கல்தூண்களுடன் கூடிய பாரவேல் மண்டபம் பளிச்சிடுகிறது. இந்தக் கல் தூண்கள் அழகிய வேலைப்பாடுகள் உடையவையாகும். இவற்றில் பீமசேனன் புருடா எனும் மிருகத்துடன் போராடும் காட்சி, நாயக்கர், பாளையக்காரர் ஆகியோரது உருவச் சிலைகள் உள்ளன.

பாரவேல் மண்டபத்தை ஒட்டி வாத்திய மண்டபம் காணப்படுகிறது. வாத்திய மண்டபத்திற்கு எதிரே தட்சிணாமூர்த்தி, சிவன், அம்மன் ஆகியோருடைய திருத்தலங்கள் உள்ளன. இதற்கடுத்த திருவாயில் துவாரபாலகர்கள் காப்புடையது. இங்கு நுழைந்ததும் மகாமண்டபம் காணப்படுகிறது. பக்தர்கள் இருபுறமும் நின்று இறைவனைத் தரிசிப்பதற்காக இந்த மகாமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

மகாமண்டபத்தின் உள் நுழைந்ததும் இடப்பக்கத்தில் கல் மேடை மீது நடராஜர், சிவகாமியம்மை திருவுருவங்கள் உள்ளன. அதற்கடுத்து ஆண்டவன் பள்ளியறையும், சண்முகநாதர் திருக் கோயிலும் காணப்படுகிறது. இவற்றைக் கடந்து சென்றால் முருகப் பெருமான் கோயிலை அடையலாம்.

மேற்கு நோக்கிய நிலையில் இறைவன் காட்சியளிக்கிறார். இணையற்ற திருமுகம், அருள் கனிந்த திருநோக்கமும், புன்னகை தவழும் திருவாயும், மருதாணி துலங்கும் திருமார்பும், ஞானதண்ட ஏந்திய வலத்திருக்கரத்து எழிலும், திருத்தாள்களின் பொலிவும், திருத்தண்டைகளின் அழகும் காண்போரைப் பரவசமடையச் செய்கிறது.

முருகனின் திருமேனி போக முனிவரால் செய்யப்பட்ட நவபாஷாணம் எனப்படும் ரச(லிங்க) மூர்த்தியாகும். ஆண்டவன் மேற்கு நோக்கி இருக்கும் காரணத்தால் கேரள மாநிலம் அளவற்ற செழிப்பும், எழிலும் கொண்டுள்ளது என்கின்றனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 26, 2009 8:30 am

தங்க ரதமும் தைப்பூசமும்

சித்திரை மாதத்தில் பெளர்ணமிக்கு மறு நாள் மலை மேல் தங்க ரதத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். அக்கினி நட்சத்திர விழா சித்திரை மாதத்தின் பிற்பகுதியிலும், வைகாசி மாதத்தின் முற்பகுதியிலும் நடைபெறும். அக்கினி நட்சத்திரத்தின் 14 நாள்களிலும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழநி மலையைக் கிரி வலம் சுற்றி வருகின்றனர். வைகாசி விசாகம் தைப்பூச விழா ஆகியவற்றின்போது பத்து நாள்களுக்குச் சுவாமி புறப்பாடுடன் சிறப்பான உற்சவம் நடைபெறுகிறது.

தைப்பூசத்தை முன்னிட்டு தமிழ்நாட்டிலிருந்து மட்டுமின்றி வெளி மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பழநிக்கு வருகின்றனர். இப்படி வரும் பக்தர்களில் பெரும்பாலானோர் விரதமிருந்து பாத யாத்திரையாக நடந்தே பழநியை அடைகின்றனர். பாத யாத்திரை வரும் பக்தர்களில் பலர் காவடி எடுத்தல், முதுகில் கம்பியைக் கோர்த்து அதனுடன் சிறிய தேர் இழுத்து வருதல், பால் குடம் எடுத்து வருதல் போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்.

தைப்பூசத் திருவிழாவைப் போல பங்குனி உத்திர விழாவும் பழநியில் சிறப்பாக நடைபெறுகிறது. ஏழு நாள்களும் சுவாமி உலா நடைபெறுகிறது. பங்குனி உத்திர விழாவின்போது பத்து நாள்கள் சொற்பொழிவுகள், இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

தமிழர்களில் பெரும்பாலானோர் முருகனைத் தங்களின் குல தெய்வமாகக் கொண்டுள்ளதால் பழநிக்கு வரும் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துகின்றனர்.

வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் உள்ள பக்தர்கள் தபால் மூலம் அபிஷேகம், அர்ச்சனை செய்வதற்கான ஏற்பாடுகளையும், கோயில் நிர்வாகம் செய்துள்ளது. அர்ச்சனை, அபிஷேகம் செய்வதற்கான கட்டணங்கள் மணியார்டர்கள், செக்குகள், டிராப்ட்கள் மூலம் பெறப்பட்டு அர்ச்சனைப் பிரசாதங்கள் தபால் மூலம் உரியவர்களுக்கு அனுப்பப்படுகின்றன.

பழநி மலையின் இழுவை ரயில்

பக்தர்கள் பழநி மலை மீது ஏற இழுவை ரயில் விடப்பட்டுள்ளது. மலை மீது ஏற இழுவை ரயில் முதன்முதலில் பழநியில் மட்டுமே விடப்பட்டுள்ளது. வேறு எந்த மலைக் கோயிலிலும் இந்த வசதியில்லை. மின்சாரத்தின் உதவியால் இந்த இழுவை ரயில் இயங்குகிறது.

முதியவர்களுக்கும், நடக்க முடியாதவர்களுக்கும், குழந்தைகளுக்கும் இந்த இழுவை ரயில் மிக உதவியாக உள்ளது. அடிவாரத்திலிருந்து புறப்பட்டு எட்டு நிமிடங்களில் ரயில் மலை உச்சியை அடைகிறது. மீண்டும் எட்டு நிமிடங்களில் மலை அடிவாரத்தை அடையும். மூன்று இழுவை ரயில்கள் காலை 5 மணி முதல் இரவு 9 வரை இயங்குகின்றன. இதில் பயணம் செய்ய சிறுவர், பெரியவர் எனத் தனித்தனிக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வெளியூர்களிலிருந்து வரும் பயணிகள் வசதிக்காகக் கோயில் நிர்வாகம், தகவல் நிலையங்களை அமைத்துள்ளது. இந்தத் தகவல் நிலையங்கள் மலைக் கோயில், இழுவை ரயில் நிலையம், கிரி வீதி, மத்திய பேருந்து நிலையம், ரயில் நிலையம் ஆகிய இடங்களில் செயல்படுகிறது. இந்தத் தகவல் நிலையங்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படுகின்றது.

பஞ்சாமிர்தத்தின் சிறப்பு

திருப்பதிக்கு லட்டு என்பது போலப் பழநி என்றவுடன் பஞ்சாமிர்தம் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்தப் பஞ்சாமிர்தம் மா, பலா, வாழை என்ற முக்கனிகள் தேன், கற்கண்டு, பேரீச்சம்பழம் ஆகியவை சேர்ந்து தயாரிக்கப்படுகிறது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக