புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனம் தருவதே சந்தோஷம்! I_vote_lcapமனம் தருவதே சந்தோஷம்! I_voting_barமனம் தருவதே சந்தோஷம்! I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen
மனம் தருவதே சந்தோஷம்! I_vote_lcapமனம் தருவதே சந்தோஷம்! I_voting_barமனம் தருவதே சந்தோஷம்! I_vote_rcap 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனம் தருவதே சந்தோஷம்! I_vote_lcapமனம் தருவதே சந்தோஷம்! I_voting_barமனம் தருவதே சந்தோஷம்! I_vote_rcap 
181 Posts - 77%
heezulia
மனம் தருவதே சந்தோஷம்! I_vote_lcapமனம் தருவதே சந்தோஷம்! I_voting_barமனம் தருவதே சந்தோஷம்! I_vote_rcap 
27 Posts - 11%
mohamed nizamudeen
மனம் தருவதே சந்தோஷம்! I_vote_lcapமனம் தருவதே சந்தோஷம்! I_voting_barமனம் தருவதே சந்தோஷம்! I_vote_rcap 
10 Posts - 4%
prajai
மனம் தருவதே சந்தோஷம்! I_vote_lcapமனம் தருவதே சந்தோஷம்! I_voting_barமனம் தருவதே சந்தோஷம்! I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மனம் தருவதே சந்தோஷம்! I_vote_lcapமனம் தருவதே சந்தோஷம்! I_voting_barமனம் தருவதே சந்தோஷம்! I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
மனம் தருவதே சந்தோஷம்! I_vote_lcapமனம் தருவதே சந்தோஷம்! I_voting_barமனம் தருவதே சந்தோஷம்! I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
மனம் தருவதே சந்தோஷம்! I_vote_lcapமனம் தருவதே சந்தோஷம்! I_voting_barமனம் தருவதே சந்தோஷம்! I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
மனம் தருவதே சந்தோஷம்! I_vote_lcapமனம் தருவதே சந்தோஷம்! I_voting_barமனம் தருவதே சந்தோஷம்! I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மனம் தருவதே சந்தோஷம்! I_vote_lcapமனம் தருவதே சந்தோஷம்! I_voting_barமனம் தருவதே சந்தோஷம்! I_vote_rcap 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
மனம் தருவதே சந்தோஷம்! I_vote_lcapமனம் தருவதே சந்தோஷம்! I_voting_barமனம் தருவதே சந்தோஷம்! I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனம் தருவதே சந்தோஷம்!


   
   
tdrajeswaran
tdrajeswaran
பண்பாளர்

பதிவுகள் : 114
இணைந்தது : 06/08/2010

Posttdrajeswaran Mon Aug 09, 2010 9:42 pm


மனம் தருவதே சந்தோஷம்!

நிழலை நாம் பிடிக்க விரும்பி துரத்தினோமானால் பிடிக்க முடியாது. ஆனால் நாம் பாட்டுக்கு நம்முடைய செயல்களை செய்துக் கொண்டே போனால் அது நம் கூடவே வரும்.

அதுபோலத்தான் சந்தோஷமும். நாம் தேடிக்கொண்டு போனால் போக்கு காட்டும். ஆனால் வாழ்க்கையை நெறிமுறையோடு மற்றவர்களுக்கு பயன்படும் வகையில் வாழ்ந்தோமானால் சந்தோஷம் நம்மை நாடி வரும்.

துர் அதிர்ஷ்டவசமாக சந்தோஷத்தை அளக்க ரத்த பரிசோதனையோ, தெர்மா மீட்டரோ அல்லது வேறு கருவியோ இல்லை. அப்படியானால் சந்தோஷம் என்பதுதான் என்ன? சந்தோஷம் என்பது நம் மனதின் உள்ளே ஏற்படும் ஒரு உணர்ச்சிதான். இந்த உணர்ச்சி நம்முடைய பஞ்ச இந்திரியங்களை கொண்டு நாம் வெளியே செய்யும் செயல்களால் தூண்டப்பட்டு உள்ளே ஏற்படும் ஒரு விஷயம்!

சந்தோஷமாக இருக்க நாம் செய்ய வேண்டியது எல்லாம் சில வேண்டாத செயல்களை, எண்ணங்களை ஒதுக்கி விட்டு, நமக்கும் மற்றவர்களுக்கும் பயன்படும் நல்ல செயல்களை செய்வதுதான். இவைகளில் சிலவற்றை மட்டும் இப்போது விபரமாக பார்ப்போமா?

மற்றவர்களின் பாராட்டுக்கு ஏங்குதல்.

நானும் என் மனைவியும் ஒரு திருமணத்திற்கு சென்று விட்டு வந்தோம். வீடு திரும்பும் போது மனைவியின் முகத்தில் களையே இல்லை.

"என்ன ராதா? ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறாய்? உடம்பு சரியில்லையா?" என்று கேட்டேன்.

"அட போங்க! வர வர ஜனங்களுக்கு ரசனையே குறைந்து போய்விட்டது. நான் புதிதாக வாங்கிய நெக்லஸையும், 10 பவுன் அட்டிகையையும் போட்டுக் கொண்டு போனேன். ஒருத்தியும் அதை பார்க்கவில்லை. எதிர்வீட்டு மங்கை ஒரே ஒரு வைரக்கல் பதித்த செயினை போட்டுக் கொண்டு வந்தாள். எல்லாரும் அதையே பார்த்தார்கள், பாராட்டினார்கள்" என்று புலம்பி தீர்த்தாள்.

இவள் குருவிக்காரியை போல கழுத்து நிறைய நகைகளை போட்டுக் கோண்டு போனால், அதை மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும். கழுத்து நிறைய நகைகளைப் பார்த்து பாராட்டும் காலம் போய்விட்டது. இப்போது அளவை விட தரத்தை மதிக்கும் ஜனங்கள் பெருகி விட்டார்கள். நாம்தான் காலத்திற்கு ஏற்ப மாற வேண்டும்.

நம் உடம்பு வாகுக்கு ஏற்ற எளிமையான ஆனால் அழகிய நகைகளை அணிந்து போகும் போது அது மற்றவர்களை கவர்கிறது.

நாம் மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்று செய்யும் பெரும்பாலான செயல்கள் நமக்கு துன்பத்தையும் ஏமாற்றத்தையும்தான் தரும். ஏனென்றால் ரசனையானது ஒருவருக்கொருவர் வித்தியாசப்படும், காலத்துக்காலம் வேறுபடும். நமக்கு எது வேண்டுமோ, எது பொருத்தமோ, அதை செய்யுங்கள். மற்றவர்கள் நம்மை, நம் செயலை பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். அப்போது உங்கள் மன திருப்தியே சந்தோஷம் ஆகும்

வீண்கதை பேச வேண்டாமே!

எங்கள் ஆபிஸில் நாங்கள் நண்பர்கள் ஐந்து பேர் பகல் உணவை ஒரே டேபிளில் உட்கார்ந்து சாப்பிடுவோம். அதில் ஒருவரான ஆறுமுகம் சாப்பாட்டு டப்பாவை திறக்கும் போதே மற்றவர்கள் கதையை பேச ஆரம்பித்து விடுவான்.

"நேற்று என்ன ஆயிற்று தெரியுமா? நான் சரியாக வேலை செய்யவில்லை என்று எனக்கு மெமோ கொடுத்தானே சோமு, அவன் தன்னை பெரிய புத்திசாலி என்று நினைத்துக் கொண்டு ஷேர் மார்க்கட்டில் ஒரே நாளில் 30 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தான். இன்று காலை மார்க்கட் சரிந்து போய் அதன் மதிப்பு ஒரே அடியாக 17 ஆயிரம் ரூபாய்க்கு வந்து விட்டது………..”

“நான் வேலைக்கு தினமும் லேட்டாக வருகிறேன் என்று ரிப்போர்ட் எழுதி வைத்தானே ராகவன், அவன் கதை தெரியுமா? அவனுடைய இரண்டாவது மகள், கூட வேலை செய்யும் பையனோடு ஓடிப்போய் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டாளாம்.........”

அவன் சொல்லுவது எல்லாம் இப்படிப்பட்ட ஊர் கதைகள்தான். அதிலும் முக்கியமாக அவனுக்கு ஆகாத மற்றவர்கள் படும் வேதனையான கதைகள்தான். ஏனென்று யோசித்தோமானால் இவனுடைய குறைபாடுகள், இவன் பட்ட அவமானங்களை மறைக்க மற்றவர்கள் குறைகளை பெரிது படுத்துகிறான் என்பது புரியும்.

ஆறுமுகம் மற்றவர்கள் குறைகள், கஷ்டங்களைப் பற்றி பேசுகிறானே தவிர, அவன் வாழ்க்கையில் சந்தோஷம் அடைந்த நிகழ்ச்சிகள் எதையும் சொன்னதில்லை. எப்படி சொல்லுவான்?

இப்படி பேசுவதும், இப்படிப்பட்ட பேச்சுக்களை கேட்பதும் நம் மனதை கெடுக்கும் வேண்டாத செயல்கள் ஆகும். மனம் எதைப் பற்றி நினைக்கிறதோ, அதுவே வாழ்க்கையாகும். இப்படிப்பட்ட சோக நிகழ்ச்சிக்களை, துன்பங்களை கேட்கும் போது நம் மனம் அவைகளை ஏற்றுக் கொள்கிறது. இப்படிப்பட்ட எண்ணங்களால் நிரம்பி இருக்கும் மனதில் எப்படி சந்தோஷம் குடிகொள்ளும்?

மற்றவர்களுக்கு உதவுதல்.

பிரபலமான பெண் எழுத்தாளர் ஒருவர் தான் எழுதிய கட்டுரையில் ஒரு நிகழ்ச்சியை குறிப்பிடுவார்கள்.

ஆஸ்பத்திரியில் மருந்து வாங்கும் வரிசையில் ஒரு பெண்மணி மருந்து வாங்க பாட்டில் இல்லாமல் கஷ்டப்பட, பின்னால் இருந்த ஒரு வயதான மாது தன்னிடம் இருந்த உபரி பாட்டிலை கொடுத்துவிட்டு "உனக்கும் கடவுளுக்கும் நன்றியம்மா!" என்றார்.

அவள் அல்லவா நன்றி சொல்ல வேண்டும். இந்த அம்மையார் ஏன் சொன்னார்கள்? கேட்ட போது சொன்னார்கள் "குழந்தாய், நன்றி என்ற வார்த்தை நம்மால் சொல்லப்படுவதற்கேயன்றி, நம்மால் கேட்கபடுவதற்காக அல்ல. பிறருடைய சிரமங்களை நாம் பகிர்ந்து கொள்ளும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாம் இறைவனை நெருங்குகிறோம்.

இந்தப்பெண் பாட்டில் கொண்டு வந்து இருந்தால் என் பாட்டிலை ஏற்றுக் கொண்டு இருக்க மாட்டாள் அல்லவா? அதை அவள் வாங்கிக் கொண்டு நான் இறைவனை நெருங்க சந்தர்ப்பம் அளித்தற்காக அவளுக்கு நன்றி சொன்னேன். அவளுக்கு தேவைப்பட்ட போது கொடுக்க என்னிடம் பாட்டில் அளித்தற்காக கடவுளுக்கு நன்றி சொன்னேன்."

யோசித்து பாருங்கள். அந்த பெண்மணிக்கு எவ்வளவு விசாலமான மனம். செய்த சின்ன சின்ன உதவிக்கெல்லாம் பிறரிடம் அற்பத்தனமாக நன்றியை தேடும் எதிர்பார்ப்புக்களும், அது கிடைக்காவிட்டால் கோபம் அடைவதும் வீண் அல்லவா?

நாம் தகுதியறிந்து, சமயமறிந்து செய்யும் உதவிகள் சிறியதாக இருந்தாலும் அவைகள் நம்முள் மிகப்பெரிய சந்தோஷத்தை ஏற்படுத்துகிறது என்பதே உண்மை. இதையேதான் திருவள்ளுவர் எக்காலத்திலும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளும்படி சொல்லி இருக்கிறார்!

காலத்தினால் செய்த நன்றி சிறிது எனினும்
ஞாலத்தின் மானப் பெரிது.

சாந்தம் சவுக்கியத்தை கொடுக்கும்.

எது வந்தாலும் நாம் நம்முடைய நிதானத்தை மட்டும் இழந்து விடக் கூடாது. சாந்தம் சவுக்கியத்தை கொடுக்கும். கோபம் குடியை கெடுக்கும்.

பிரபல பேச்சாளரும் ஆன்மீகவாதியுமான மதிப்பிற்குரிய திரு. சுகி. சிவம் ஒரு கதை சொல்லுவார்.

கவீர்தாஸ் ஒரு நாள் பகலில் எழுதிக் கொண்டு இருக்கும் போது அவருடைய நண்பர் வந்து அமர்ந்தார். "எனக்கும் என் மனைவிக்கும் எப்போதும் வாக்குவாதம், சண்டை என என் வாழ்க்கையே நரகமாகி விட்டது. நான் என்ன செய்வது?" என்று கேட்டார்.

எழுதிக் கொண்டிருந்த கபீர்தாஸ் "சற்று உட்காருங்கள். இதை எழுதி முடித்துவிட்டு சொல்கிறேன்" என்றார். சொல்லிவிட்டு கபீர்தாஸ் உள்பக்கம் திரும்பி மனைவியை அழைத்து "சற்று விளக்கேற்றிக் கொண்டு வருகிறாயா? என்னால் எழுத முடியவில்லை" என்று சொன்னார்.

நல்ல பகல் நேரம். வெளிச்சமாக இருக்கிறது. இவர் ஏன் விளக்கு கேட்கிறார் என்று ஒன்றும் புரியாமல் நண்பர் பார்த்துக் கொண்டு இருந்தார்.

மனைவி ஒரு சின்ன விளக்கு ஏற்றிக் கொண்டு வந்து கணவர் பக்கத்தில் வைத்து விட்டு போனார். கபீர்தாஸ் மறுபடியும் மனைவியை கூப்பிட்டு "எங்கள் இருவருக்கும் குடிக்க சற்று பால் கொண்டு வா" என்றார்.

கொஞ்சநேரத்தில் மனைவி இரண்டு டம்ளர்களில் பாலை கொண்டு வந்து கொடுத்து விட்டு உள்ளே போனார். கபீர் பாலை எடுத்து ஆனந்தமாக அருந்தினார். ஆனால் நண்பரால் குடிக்க முடியவில்லை. காரணம் பாலில் சர்க்கரை என்று நினைத்து அந்த அம்மையார் உப்பைப் போட்டு இருந்தார்.

உள்ளே இருந்து குரல் கேட்டது. "சர்க்கரை போதுமா? இல்லை, இன்னும் வேண்டுமா?"

"இல்லை, இல்லை, இதுவே அற்புதமாக இருக்கிறது" என்று சொன்ன கபீர் முழுவதுமாக குடித்து விட்டு காலி கோப்பையை கீழே வைத்தார்

பகலில் ஏன் விளக்கு என்று கணவர் மீது குற்றம் காணாத மனைவி, பாலில் ஏன் உப்பு போட்டாய் என்று மனைவி மீது குற்றம் காணாத கணவர். தம்பதிகள் ஒன்றை புரிந்துக் கொள்ள வேண்டும். குற்றம் அற்ற பார்ட்னர் கிடைப்பது அரிது.

நண்பருக்கு விடை கிடைத்து விட்டது. கபீரை நமஸ்கரித்து விட்டு புறப்பட்டுவிட்டார்!

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் இப்படிதான் ஏடாகூடமாக ஏதாவது நடந்து விடுகிறது. அத்தகைய நேரங்களில் நாம் நம்முடைய மனதின் நடு நிலையை இழந்து விடாமல், பொறுமையாக சகிப்புத் தன்மையுடன் செயல்பட்டோமானால் சந்தோஷம் நம்மை துரத்திக் கொண்டு வரும்!

சிறிய சந்தோஷம் பெரிய பலம்

போன மாதம் 5ம் தேதி திங்கட்கிழமை இன்ஷூரன்ஸ் பிரிமியம் கட்ட வேண்டியிருந்தது. ரூபாய் 5385 கட்ட வேண்டி இருந்தது. நான் ஆபிசுக்கு போகும் வழியில் கட்டிவிட்டு போய்விடுவேன். காலையில் முதல் ஆளாக சீக்கிரம் போய் நிற்பேன்.

அன்றும் அதுபோல கிளம்பி மனைவியிடம் பணம் கேட்டேன். அவள் ஆறு 1000 ரூபாய் நோட்டுக்களை கொண்டு வந்து கொடுத்தாள். நான் சொன்னேன் "இல்லை ராதா, சரியான சில்லரையாக கொடு. காலையில் அவர்களிடம் சில்லரை இருக்காது".

அவளும் சரியாக ரூபாய் 5385-யை கொண்டு வந்து கொடுத்தாள். நான் வழக்கம் போல 9.30க்கு எல்லாம் போய் வரிசையில் முதல் ஆளாக நின்றேன். 10 மணிக்கு கவுண்டர் திறந்து கிளார்க் என்னிடம் பணம் கேட்டார். நான் சரியாக கொடுத்ததும் வியப்புடன் என்னை நிமிர்ந்து பார்த்தார். "நன்றி, எல்லாரும் இது போல செய்தால் மிகவும் நன்றாக இருக்கும்" என்றார்.

இந்த எதிர்பாராத பாராட்டால் என் மனம் கோப்பை தண்ணீரில் நிறைய குளுகோஸ் போட்டு குடித்தது போல் தெம்புற்றது. கணிப்பு சரியானதால் ஏற்பட்ட ஒரு சிறிய மகிழ்ச்சி. அதே சந்தோஷத்துடன் அன்றைய பொழுது சென்றது.

இந்த மாதிரி சின்ன விஷயங்கள் கொடுக்கும் சந்தோஷத்திற்கு ஈடு இணையே கிடையாது. பாதையில் ஒரு கீரைக்காரி கூடையை தூக்க கஷ்டப்படுகிறாளா, தூக்கி விடுங்கள். பாதையில் முள் இருக்கிறதா, தூக்கி ஓரமாக போடுங்கள். வயதானவர்களுக்கு பஸ்ஸில் எழுந்து இடம் கொடுங்கள். சாலையில் பாதசாரிகள் கடக்கும் இடங்கள் வரும்போது, உங்கள் காரை நிறுத்தி பாதசாரிகள் பாதையை கடக்க உதவுங்கள். இந்த மாதிரி மனதிற்கு தெம்பூட்டும் உதவிகளுக்கு அளவே இல்லை. உண்மையில் சந்தோஷம் என்பது ஒரு விதமான திருப்தியும் மன நிம்மதியும்தான்.

காஞ்சி பெரியவர் சொல்லுகிறார் "சந்தோஷ அனுபவம் பெறுவது நமது மனஸ்தான். சந்தோஷமாக இருப்பதாக சொல்வது மனஸின் அனுபவங்களை வைத்துதான்!"

குழந்தைகளை போல வாழுவோம்.

குழந்தைகளை பாருங்கள். அவைகளின் தேவைகள் (மிகவும் குறைவு!) கிடைத்தவுடன், பாலை குடித்துவிட்டு மிருதுவான படுக்கையில் படுத்து எவ்வளவு சந்தோஷமாக இருக்கின்றன. ஏனென்றால் அவைகளுக்கு முரண்பாடான, வக்கிரமான எண்ணங்கள் கிடையாது. நல்லது, கெட்டது, வேண்டியது, வேண்டாதவை என்ற பாகுபாடுகள் கிடையாது.

திருடன் ஒருவன் வந்து "என் செல்லமே!" என்று கொஞ்சிக் கொண்டே குழந்தையின் கழுத்தில் இருக்கும் தங்க செயினை கழற்றினாலும் அது அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டுதான் இருக்கும்.

நாமும் குழந்தைகளைப் போல, வெள்ளை மனதுடன், தேவைகளை குறைத்துக் கொண்டு, வேண்டாத செயல்களை ஒதுக்கிவிட்டு மற்றவர்களுக்கும் நமக்கும் நன்மை தரக்கூடிய செயல்களை மட்டும் செய்து வாழப் பழகினோமானால், சந்தோஷம் எப்போதும் நம்முடன் இருக்கும்!



"மனோசக்தி" ஆகஸ்ட் 2010 மாத இதழில் வெளிவந்தது.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 09, 2010 11:05 pm

உண்மையான மகிழ்ச்சி எது என்பது பற்றி அழகான விளக்கங்களுடன் கூடிய கட்டுரை! பகிர்ந்தமைக்கு நன்றி!
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



மனம் தருவதே சந்தோஷம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 09, 2010 11:08 pm

///இவள் குருவிக்காரியை போல கழுத்து நிறைய நகைகளை போட்டுக் கோண்டு போனால், அதை
மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான்
மிஞ்சும். கழுத்து நிறைய நகைகளைப் பார்த்து பாராட்டும் காலம் போய்விட்டது.
இப்போது அளவை விட தரத்தை மதிக்கும் ஜனங்கள் பெருகி விட்டார்கள். நாம்தான்
காலத்திற்கு ஏற்ப மாற வேண்டும்.///

இனிமேல் அனைத்து பெண்களும் தங்க நகை கேட்கமாட்டார்கள்! எளிமையாக வைர நகை வாங்கித் தரச் சொல்வார்கள்! மனம் தருவதே சந்தோஷம்! Icon_smile



மனம் தருவதே சந்தோஷம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Aug 09, 2010 11:16 pm

நல்ல கருத்துமிக்க கட்டுரை ராஜேஸ்வரன். .

இனிமேல் அனைத்து பெண்களும் தங்க நகை கேட்கமாட்டார்கள்! எளிமையாக வைர நகை வாங்கித் தரச் சொல்வார்கள்!

சிவாவுக்கு திருமணமானால் அவர் பெண்சாதியும் எலிமையான வைர நகைதான் வாங்கித் தர சொல்வார்கள்...ஆமாதானே சிவா.... நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 09, 2010 11:18 pm

gunashan wrote:நல்ல கருத்துமிக்க கட்டுரை ராஜேஸ்வரன். .

இனிமேல் அனைத்து பெண்களும் தங்க நகை கேட்கமாட்டார்கள்! எளிமையாக வைர நகை வாங்கித் தரச் சொல்வார்கள்!

சிவாவுக்கு திருமணமானால் அவர் பெண்சாதியும் எலிமையான வைர நகைதான் வாங்கித் தர சொல்வார்கள்...ஆமாதானே சிவா.... நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி

முதலில் இப்பொழுது நீங்கள் வாங்கிக் கொடுங்கள்! இல்லையெனில் அக்காவிற்கு போன் செய்து நான் கூறுகிறேன்! தங்கமெல்லாம் பழைய காலத்து நகை, எனவே வைர நகைகளாக அணிந்து கொள்ளுங்கள் எனக் கூறுகிறேன்!



மனம் தருவதே சந்தோஷம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
tdrajeswaran
tdrajeswaran
பண்பாளர்

பதிவுகள் : 114
இணைந்தது : 06/08/2010

Posttdrajeswaran Wed Aug 11, 2010 11:14 am

அன்பு நண்பர்கள் இருவரின் பாராட்டுக்கும் நன்றி.

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Aug 11, 2010 11:18 am

அழகான விளக்கங்களுடன் கூடிய கட்டுரை! பகிர்ந்தமைக்கு நன்றி! மனம் தருவதே சந்தோஷம்! 677196 மனம் தருவதே சந்தோஷம்! 677196 மனம் தருவதே சந்தோஷம்! 677196 மனம் தருவதே சந்தோஷம்! 677196 மனம் தருவதே சந்தோஷம்! 677196 மனம் தருவதே சந்தோஷம்! 677196 மனம் தருவதே சந்தோஷம்! 677196 மனம் தருவதே சந்தோஷம்! 678642 மனம் தருவதே சந்தோஷம்! 678642 மனம் தருவதே சந்தோஷம்! 678642 மனம் தருவதே சந்தோஷம்! 678642 மனம் தருவதே சந்தோஷம்! 677196

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக