ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பருவமானவர்கள்

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

பருவமானவர்கள் - Page 4 Empty பருவமானவர்கள்

Post by சிவா Sun Aug 08, 2010 11:27 pm

First topic message reminder :

----------------------------------------------------------------------

பருவமானவர்கள்

மூலம்: பெக்கி மோகன் Ph.D

தமிழில்: க. நடனசபாபதி

தேசிய கலை இலக்கியப் பேரவை

--------------------------------------------------------------------------





பருவமானவர்கள்: (ADOLESCENCE)


பருவமானவர்கள் பற்றிய புத்தகம் ஒன்று இரண்டாம் தசாப்த வயதை எட்டிய பிள்ளைகளுக்குத் தேவை தானா?

பருவமானவர்கள் பற்றிய அந்நிய தேசத்து புத்தகமொன்றை மேலெழுந்த வாரியாக வாசிக்கின்ற இரண்டாம் தசாப்த வயதை நோக்கி நடைபோடும் பிள்ளைகள் சுவாரசியமானதுதான் என்று கூறுவர். ஆனால் இவை எமக்குப் பழக்கப்படாதவை. இதைப்பற்றி நாம் ஏன் இங்கு கவலைப்பட வேண்டும்?

டில்லியில் வாழும் பெண்ணொருத்தி இதனை இப்படிக் கூறினாள். இரண்டாம் தசாப்த வயதை நோக்கி நடைபோடும் பிறநாட்டவருக்கு இவையெல்லாம் பிரச்சினைகளாக இருக்கலாம். ஏனென்றால் அவர்கள் தாம் விரும்பியபடி எதனையும் செய்யலாம். ஆனால் எங்களைப் பொறுத்தமட்டில் எங்கள் பெற்றோர் எம்மை எதனையும் செய்ய விடுவதில்லை. இது எங்கள் பிரச்சினை. பருவமான இலங்கையர்கள் தாங்கள் அடைந்து வரும் மாற்றங்களைப் பற்றிய சாதாரணமாக தகவல்களைக் கூட அறியாது பருவமாற்றம் பற்றி கற்பனா உலகில் உலாவருகின்றனர். இந்தக் கற்பனைகள் எல்லாம் இரண்டாம் தசாத்த வயதை நோக்கி நடைபோடுவோரை நம்பிக்கை இழந்த நிலைக்கும் அழகீனமான நிலைக்கும் கவலை தோய்ந்த நிலைக்கும் இட்டுச் செல்கிறது. பிற நாடுகளில் வாழும் பருவமானவர்களின் கற்பனைகளோ பெரிதும் மாறுபட்டவை.

பருவமானவர்கள் என்றால் என்ன?

சிறுபிள்ளைப் பிராயத்திலிருந்து பிள்ளையைப் பெற்றுத்தரக்கூடிய நிலையை வாழ்க்கையில் அடையும் பருவமாகும்.

இதன் படி பெருமளவு மாற்றங்கள் ஏற்படுகின்றன. உடல் ரீதியானதும் உளரீதியானதுமான மாற்றங்கள் எம்மை புதிய உறவுகளை ஏற்று பொறுப்புடையோராக ஆக்குகிறது.

இப்புத்தகம் எப்படி உதவ எண்ணியுள்ளது?


முதலாவதாக, பருவமாகின்ற போது உடல் தோற்ற ரீதியான மாற்றங்களைப் பற்றிய சாதாரண தகவல்களை தருகின்றோம். இதன் காரணமாக பாதுகாப்பு இழந்த நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டோமோ என்ற அச்சம் அகலுகிறது. எம்மைப் போலவே அநேகர் உள்ளார்கள் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

இரண்டாவதாக, உளரீதியான மாற்றத்தால் உலக வாழ்வில் நீங்கள் எதிர்கொள்ள வேண்டிய சவால்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் உள்ளது. அனுபவம் நல்லதோர் ஆசிரியன். ஏற்படும் தோல்விகள் பயனுள்ள பாடங்களைத் தருகின்றன. சில சம்பவங்கள் உங்களுக்கு கவலையைத் தரும். இப்புத்தகம் உங்களுக்கு நண்பனாகச் செயல்பட்டு உங்களை வழிநடத்திச் செல்லும்.


பருவமானவர்கள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


பருவமானவர்கள் - Page 4 Empty Re: பருவமானவர்கள்

Post by சிவா Mon Aug 09, 2010 12:08 am

அநோறெக்ஸியா நேவேசா (Anorexia nervosa) என்றால் என்ன?

அநோறெக்ஸியா நோவோசா என்பது உண்ணாமல் இருத்தல் ஆகும். இதனைச் சிலர் மரணம் ஏற்படும் வரை கையாளுகிறார்கள். அநேக பருவமானவர்கள் தமது உடல் வளர்ச்சி, மார்பகங்களின் வளர்ச்சி, மாதவிடாயில் நிலைகுலைவு ஆகியவற்றை அவதானிக்கிறார்கள். அநேகமாக எலலா அநோறெக்ஸியா பிணியாளர்கள் பெண்களே. அதோடு பருவமானவர்களும் வசதி படைத்த குடும்பத்தினருமே.

சமூக காரணங்களுக்காக அதிக அளவு உணவை உட்கொண்டு புலிமியா நோயாளரைப் போல வாய்வழியாக வெளியேற்றுகிறார்கள். மற்றப்படி அநொறெக்ஸியா வியாதிகள் தமக்குத் தீங்கு விளைவித்து விடுமோ என்று அஞ்சி உணவை உட்கொள்வதைத் தவிர்க்கிறார்கள். பட்டினி கிடக்கும் அளவிற்கு நன்கு மெலிந்து விட்டபோதிலும் தாங்கள் பெரிதும் கொழுத்திருப்பதாகவே நினைத்துக் கொண்டிருப்பார்கள். இவர்கள் மெலிந்திருக்கிறார்கள் என்று நண்பர்கள் கூறிய போதிலும் அவர்கள் கூற்றை நம்பாமல் ஏதோ பொறாமையுடன் கூறுகிறார்களோ என்று நினைத்துப் பயந்தே இருப்பார்கள்.

அநோறெக்ஸி பிரச்சினைகளுக்கு அடிப்படையாகவுள்ளதும் கடும் எதிர்பார்ப்புமாக உள்ளது பாராட்டு அல்ல. ஆனால் உயிரைக் கட்டுப்படுத்துவதே. அநேக அநோறெக்ஸ் நோயாளிகள் கூடுதலான பலாபலனைப் பெறத் துடிப்போர். அதேவேளை முழுமையான வெற்றியை அடையவில்லையே என்று ஏங்குபவர். எல்லாமே பிழையாகி தமது கட்டுப்பாட்டை மீறிவிட்டது என்று முடிவினை அடையும் போது அவர்கள் கட்டுப்படுத்தக் கூடியது அவர்களுடைய உடலையும் உண்ணும் உணவையுமே. ஒரு விதத்தில் பார்க்கும் போது மறுப்புத் தெரிவிப்பது போன்றும் தற்கொலை முயற்சியைப் போன்றும் உள்ளது. உண்மைப் பிரச்சினையை வெற்றி கொள்ள முடியாமல் தன்னையே பலியிடும் முயற்சி போன்றதே.

அநோறெஸியா நோயாளிகள் தாம் தமது தாயாரைப் போல கொழுத்தவர்களாக இராமல் மெலிந்தவர்களாக இருக்க விரும்பி பாரம்பரியத்தைத் தகர்த்தெறியத் தம்மையே வாட்டிக் கொள்கிறார்கள்.

இதற்குப் பரிகாரம் வலுக்கட்டாயமாக உணவ10ட்டுவதை விடுத்து அவர்களைத் தொடர்ந்து உயிருடன் வைத்திருப்பதே. இவர்களுக்கு நன்மை விளைவிக்கக் கூடிய ஒரே வழி இவர்கள் தங்கள் வாழ்வைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள வேண்டும். அதனை மதிக்கவும் வேண்டும். ஏனெனில் இவ்வியாதிக்காரர்கள் சாதாரணமாக ஆற்றலும் புத்திக் கூர்மையும் உடையவர்கள். சிறந்த வழி இவர்களுடன் அன்பான உறவினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இதனால் இவர்களுக்கு மீண்டும் நம்பிக்கை வளர்கிறது. ஆனால் தட்டுவதும் தவறுவதுமாயிருக்கும். சில அநோறெக்ஸியா நேவோசா வியாதிக்காரர்கள் உயிர்போகும் வரையும் கூடப் பட்டினி இருப்பவர்கள். இந்நிலையை முறியடிப்பது கடினமான காரியம்.

கவலைக்குரிய விஷயம் யாதெனில் தற்காலத்தில் இந்நோயாளரின் தொகை பெருகிக் கொண்டே வருகிறது. இது இப்போது ஆண்களையும் பற்றத் தொடங்கி விட்டது. இக்காலத்தில் தொடர்பு சாதன உருவங்களும் முழங்குவது, மெலிந்து காணப்படுபவர்களே சந்தோஷமானவர்கள் என்பதாகும். நடுவயதினரும் பருவமடையாத பிள்ளைகளும் கூட இந்நோய்க்கு இலக்காகிறார்கள். தங்களுடைய உருவத்தைக் கண்டு கவலைப் படுகிறார்கள்.

உண்மையில் நீங்கள் நிறை கூடியவர்களாய் இருந்தால்

வைத்தியக் கணிப்பின் படி நீங்கள் நிறை கூடியவர்களாயின் வைத்தியர் ஒருவரின் ஆலோசனையைப் பெறுங்கள். கண்டவற்றையும் உட்கொள்ளும் வயதில் இது சாத்தியமே.

இந்நாட்களில் வைத்தியர்களையும் மெல்லியவராக இருக்க வேண்டும் என்கின்ற வெறி பற்றிக் கொண்டது. அவர்கள் தங்கள் மருத்துவமனைகளில் தொங்கவிடும் உயரம் நிறைப்பட்டியல்கள் கூட இதனைத் தான் வலியுறுத்துவதாக இருக்கிறது. நீங்கள் நன்றாகவே தோற்றமளிப்பீர்கள். நிறையைப் பொறுத்துப் பெண்களைக் கவலை கொள்ள வைக்கச் சதி முயற்சி நடப்பதாகத் தெரிகிறது. பெண்களாய் இருப்பதற்கென சிறிது அளவு கொழுப்பு வெளிப்படுகிறது. மெலிந்து இருந்து கொண்டு ஆண்களைப் போல தசைப்பிடிப்பாக இருக்க முடியாது. ஆண்களுக்கு இதனைக் கொடுப்பது ஆண்களுக்கான ஓமோன்களே.

கொழுத்திருப்பது ஆரோக்கியத்திற்குக் குந்தகமானதா? இதற்கான விடை அவ்வளவு தெளிவானதாக இருப்பதில்லை. உடல்பெருத்த அநேக பெண்கள் வைத்தியப் பிரச்சினைகளை எதிர்நோக்குவது உணவுக் கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்வதாலேயே அநேக பெண்கள் தாமாகவே உணவுக் குறைப்பை மேற்கொண்டு தங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பாழாக்கி வருகிறார்கள். காட்சிப் பொருள்களாகத் தம்மைக் காட்டிக் கொள்வோரை போல உடல் மெலிந்து இருக்க வேண்டிய அவசியமில்லை. இல்லாது போனாலும் கூட இவர்கள் அழகுடனே தோற்றம் அளிக்கின்றார்கள்.

எப்படி நிறையைக் குறைப்பது? தேவையற்றதும் வெறுமனே கலோரி அளவை மட்டும் கூட்டக் கூடியதுமான உணவைக் குறைத்துக் கொள்ளுங்கள். சுறுசுறுப்பாயிருங்கள். இச்செயல் அநுசேதனத்தின் வேகத்தைக் கூட்டுகிறது. உங்கள் உடல் நிறையும் குறைகிறது. ஏனெனில் உங்கள் உடல் எந்திரம் மிகவேகமாகச் செயல்படுகிறது. இன்னமும் கூட உணவு உட்கொள்வதைக் குறைக்கத்தான் வேண்டும் என்று நினைத்துச் செயல்படுவீர்களாயின் தொடர்ந்தும் வளர்ந்து கொண்டுதான் இருப்பீர்கள். நீங்கள் இதனைக்; கெடுத்துக் கொள்ள விரும்ப மாட்டீர்கள்தானே!

ஓமோன் கொண்ட மருந்துகள் பெண்களின் நிறையைக் குறைக்க உதவுகிறதா?

ஆம். அநேக விளையாட்டு வீராங்கணைகள் ஓமோன் கொண்ட மருந்துகளை உட்கொள்வதனாலேயே போட்டிகளில் கலந்து கொள்ளும் தகுதியை இழப்பர்.

இவர்கள் தமது நிறையைக் குறைத்து விடுவது இப்படித் தான். பெண்களுக்கான ஓமோன்கள் பெண்களின் உடலில் காணப்படும் கொழுப்பை மார்பகங்கள், இடுப்புப் பகுதி, தொடை ஆகிய பகுதிகளுக்கு விநியோகம் செய்கிறது. அதேவேளை ஆண்களுக்கான ஓமோனான ரெஸ்ரோஸ்ரிறோன் தசையைக் கூட்டுமே தவிர கொழுப்பை அல்ல. இதனால் தான் ஆண்கள் பெண்களைப் போல நிறைய அதிகரிப்பைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. பெண்ணொருத்தி ரெஸ்ரோஸ்ரிறோன் ஓமோனைப் பயன்படுத்த ஆரம்பித்தால் முதலில் அவளிடம் காணப்படும் பெண்மைக்கான கொழும்புகள் அற்று போய், எலும்புக் கூட்டுத் தசைகள் கூடிவிடும். ஆகவே அவள் மெலிந்து போக மாட்டாள். அது மட்டுமல்ல ஆண்களுக்கே உரிய பாலியல் இயல்புகள் அவளிடம் பெருகும். உதாரணமாக ஆண்களுக்கான பாலியல் இயல்புகளான தாடிவளருதல், உடலெங்கும் கூடுதலான உரோம வளர்ச்சி, தடித்த குரல், ஆண்களின் பாலியல் புற உறுப்புத் தோற்றம் ஏற்பட ஏதுவாகும். அதோடு மலட்டுத் தன்மையும் தலைகாட்டும்.

உடலை மெலிய வைக்கும் மற்றொரு மருந்து அம்பிரமின்கள். இது உடலின் அனுசேதனத்தைக் கூட்டி உணவு உட்கொள்ளும் விருப்பத்தை இல்லாது ஆக்குகிறது. இதனால் உங்கள் இதயத்தில் தாக்கம் ஏற்படுகிறது. அம்பிரமின்கள் விளையாட்டுப் போட்டிகளில் தடைசெய்யப்பட்ட வேறொரு மருந்து.

பெண்மைக்குத் தேவைப்படுவது ஓரளவு கொழுப்பு ஆகும். பருவமாகும் போது ஏற்படுகின்ற இந்த மாற்றத்திற்கு எம்மைப் பழக்கிக் கொள்ள வேண்டும்.

ஓமோன் மருந்துகள் ஆண்களை உயரமானவர்களாகவும், தசைப்பிடிப்பானவர்களாகவும் மாற்றி விடுமா?

ஆம். எந்த ஓமோன் உயரமாக வளர்வதற்குக் காரணமாகவுள்ளதோ, அதே ஓமோன் உயர்ந்து வளர்வதற்கும் முடிவுகட்டுகிறது. எவ்வளவு விரைவாக வளரத் தொடங்குகிறீர்களோ அதே வேகத்தில் வளர்ச்சியும் முடிவுக்கு வந்து விடுகிறது.

என்புகளின் வளர்ச்சி முற்றுப் பெற்றவுடன் ஓமோன், வளர்ச்சிக்கு உதவி புரியாது. மேலும் வளர்ச்சியடைவதற்கு இடமிராது. பீங்கான் இறுகிக் கோப்பை ஆனபின் மேலும் வளர்ச்சியடையாது அல்லவா? காரியங்களை அவற்றின் போக்கிலேயே விட்டிருந்தால் வளர சற்று கூடுதலான காலம் எடுத்திருக்கும். அதேவேளை சற்று அதிகப்படியாகவும் வளர்ந்து இருக்கலாம்.

ஓமோன் மருந்துகள் தசை வளர்ச்சியைக் கூட்டுவதோடு மலட்டுத் தன்மையையும் ஏற்படுத்தி விடும். பாலியல் ஆண் உறுப்பு விதைகளைச் சுருக்கிச் சிறியதாக்கி விடும். அழகானவராகத் தோற்றமளிப்பதற்குத் தருகின்ற தலையான வெகுமதி இதுவாகும்.

பையன்கள் உயரமானவர்களாகவும் தசைப் பிடிப்பானவர்களாக இருக்க விரும்புவதேன்?

தொடர்பு சாதனங்களில் வரும் காட்சி தருவோரின் படங்களும் விளம்பரங்களில் காட்டப்படும் படங்களும் பார்க்கும் எல்லாமே பெரிதாக இருக்க வேண்டும் என்கின்ற எண்ணத்தையே ஊட்டுகிறது. காட்சி தருபவர்களில் அல்லது விளம்பரங்களில் உயரம் குறைவானவர்களையே காண முடியும்.

இதற்குக் காரணம் உலகில் உயரம் குறைவானர்கள் மிகச் சிலர் மட்டுமே இருப்பதனாலா? இல்லை. ஏனெனில் விளம்பர உலகில் அனைத்துமே ஒரே மாதிரியானவையாக இருக்க வேண்டுமென்றே கருதுகிறது. நவீன தொடர் மாடிகள், அலுவலகச் சீருடைகள், வளர்க்கப்படும் நாய்கள் அனைத்துமே ஒரே மாதிரியானவையாகவே இருக்க வேண்டும் என்கின்ற சிந்தனை வளர்ந்துள்ளது. கவலைக்கு இடமான சம்பவம் யாதெனில் பெண்களும் உயர்ந்த தசைப் பிடிப்பான ஆண்களையே நாடுகிறார்கள்.

விளம்பரங்களில் காட்சி தருவோரை தெரிபவர்கள் பெரிய வர்த்தக தாபனங்களைச் சார்ந்தவர்களே. இவர்கள் உயரமானவர்களும் அல்லர் - உயரம் குறைவானவர்களும் அல்லர். தொடர்பு சாதனங்களில் காட்சி தருவோரின் உயரங்களோடு எவ்வித தொடர்புமே அற்றவர்கள், புத்தகங்களிலோ திரைப்படங்களிலோ காட்சி தருபவர்கள் உயரமானவர்களும் தசைப்பிடிப்புள்ள ஆண் அழகர்களுமே.


பருவமானவர்கள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பருவமானவர்கள் - Page 4 Empty Re: பருவமானவர்கள்

Post by சிவா Mon Aug 09, 2010 12:10 am

இரட்டை நிலைப்பாடுகள் (DOUBLE STANDARDS)

ஆண் பெண் இருபாலருக்குமான போக்கில் உள்ள வித்தியாசத்திற்கும் காரணமாயுள்ளது ஓமோன்கள் தானா?

இல்லை. இருபாலரிடையேயும் காணப்படும் பாரிய வித்தியாசங்களுக்குக் காரணம் வளர்க்கப்பட்ட நிலையையும் பழக்கி வைக்கப்பட்ட வித்தியாசமான முறையுமே ஆகும். உதாரணமாகப் பெண்கள் உணர்ச்சிமயமானவர்களாகவும் அமைதி காப்போராகவும், ஆண்கள் தமது பலவீனங்களை வெளிக்காட்டக் கூடியவர்களாகவும் ஆவேசப் போக்குடையவராகவும் வளர்க்கப்படுகிறார்கள். இவை குழந்தைப் பருவத்திலேயே உருவாகி விடுகிறது. பெண் பிள்ளைகள் பிறருக்கு மகிழ்ச்சி ஊட்டக் கூடிய வித்திலும், இனிய மெல்லிய குரலிலும் பேச வேண்டுமெனவும், ஆனால் பையன்கள் சற்ற குறும்புக்காரராகவும் ஒருவரோடு ஒருவர் சண்டை போடுபவர்களாகவும் இருக்கும் படி உற்சாகப்படுத்தப்படுகிறார்கள். பெண்களும் ஆண்களும் விளையாட வழங்கப்படும் விளையாட்டுச் சாமான்கள் கூட அதற்கேற்பவே அமைகிறது. இவை பிற்காலங்களில் பல பிரச்சினைகளுக்குக் காரணமாகிறது. அநேக பையன்களுக்குத் தமது மனதில் எழுந்தவற்றை வெளியே காட்டிக் கொள்ள முடியாத நிலையும் துன்பம் நேர்கையில் மனம் விட்டு அழ முடியாத நிலைக்கும் தள்ளப்படுகிறார்கள். ஆகவே தமது விருப்பிற்கு மாறானவற்றை வெளிக்காட்ட உள்ள வழி வன்முறையும் மதுபானமுமே என முடிவு செய்வர். பெண்களே எதற்கும் ஆண்களின் உதவியை நாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகிறார்கள். மின் விளக்கை அணைப்பதற்குக் கூட ஆண்களே உதவிக்கு வரவேண்டிய நிலையிலிருக்கின்றனர். பெண்கள் சுதந்திரமாக வாழ அஞ்சியே திருமணம் செய்து கொள்கிறார்கள்.

இதுவே பருவமான பையன்களுக்கும் பருவமான பெண்களுக்கும் இடையே உள்ள பிரச்சினையாகும். தம்மை அணுக அனுமதிக்காத பலமான பெண்களால் ஆண்கள் கவரப்படுகிறார்கள். பழக்கப்பட்ட முறைப்படி பெண்கள் நல்லவர்களாயின் சாந்தமானவர்களாகவும் ஆண்களை உயர்வானவர்கள் என்று நினைப்பவர்களாகவும் உண்மையில் கவர்ந்திழுக்கக் கூடியவர்கள் மிகவும் 'மலிவான"வர்களாகவும் கருத இடம் உண்டு. அனேக பையன்கள் பலம் பொருந்திய பெண்களைக் கேலி செய்வார்கள். கேலி செய்து தம் வயம் இழுக்க முயலுவார்கள். சண்டையிடுவது பெண்கள் விரும்பாதவொன்று.

கவர்ச்சிகரமான பெண்கள் தமக்கு ஏன் ஆண் பிள்ளைகளின் நட்புக் கிட்டவில்லையே என்று சிந்திக்கிறார்கள். இப் பெண்கள் ஆண்களின் நட்பை நாடிக் கொண்டிருக்கிறார்கள்.

பெண்கள் ஆண்களை உணர்ச்சியே அற்றவர்கள் என்று நினைக்கத் தலைப்படுகிறார்கள்.

அநேக பெண்கள் உன்னத இலட்சிய ஆண்கள் பெரிய பலசாலிகள் என்று நினைக்கிறார்கள். அநேக நல்ல பையன்கள் தம்மை விரும்புகிறார்கள் இல்லையே என்று ஏங்குகிறார்கள். பெண்கள் மறுப்பது போலப் பாசாங்கு செய்கிறார்கள். அதன் பிறகு தம்மை ஏன் விளங்காமல் ஒதுங்கிக் கொள்கிறார்கள் என்று பெண்கள் நினைக்கிறார்கள். தங்களுடைய விசனத்தை வெளிக்காட்டாமல் உள்ளுக்குள் அடக்கி வைத்துக் கொண்டு இப்பெண்களுடைய தவறுகள் தான் என்ன என்பதை ஆண்கள் ஏன் சொல்லத் தயங்குகிறார்கள் என்று நினைக்கிறார்கள்.

பையன்கள் பெண்களை வெறுப்பது போல் ஏன் நடக்கின்றார்கள்?

இரு முக்கிய காரணங்கள். அவை பாதுகாப்பின்மையும் விரக்தியுமே ஆகும்.

பாதுகாப்பின்மை எப்படிப் பையன்கள் பெண்களை விரும்பாமலிருக்கச் செய்கிறது?

யாராவது செல்வாக்குள்ள ஆண்களின் கூட்டத்திலிருந்து மற்றைய பெண்கள் கூட்டத்தோடு போட்டியிட விரும்பாத நிலைமை. வெளியாரை விட நன்கு விளங்குவார்களோ என்று நம்பாத நிலையில் அவர்கள் தோல்வியில் தான் முடியும். இதனால் பெண்களைப் போட்டியிட விடாமல் வைத்திருப்பது சுலபமானதே. இந்த முறையில் எந்தவொரு பையனும் முயலாமலேயே பெண்களை விடச் சிறப்பாக விளங்குவார்கள்.

மிக இலேசான முறை யாதெனில் பெண்களை போட்டிகளில் பங்குகொள்ள விடுவதில்லை. 'இந்தப் பெண்களுக்கு என்ன தெரியும்?" என்று கூறி ஒதுக்கி விடுவது. வேலை வழங்குவதிலும் பெண்களை ஒதுக்குவார்கள். திறமையும் ஆற்றலும் படைத்த பெண்களை வேலைக்கு அமர்த்தாமல் ஆண்களையே தெரிவு செய்வர். மிகவும் கேவலமான நிலை என்னவென்றால் பெண்கள் மீது வன்முறையைப் பிரயோகிப்பது. இதுவே பாதுகாப்பின்மையின் உச்சக் கட்டம் ஆகும். பாதுகாப்பின்மையை ஏற்படுத்தும் ஆண்களோடு சண்டையிடுவதைக் காட்டிலும் பலம் குறைவான பெண்களோடு சண்டையிட ஆண்கள் விரும்புகிறார்கள்.

ஆண் பெண்களிடையே விரக்தி என்பது எப்படி பிரச்சினையை உருவாக்குகிறது?

பாலியல் உறவு கொள்வது மறுக்கப்படுவதைக் காட்டிலும் பெண்களின் நட்பு இன்மையே ஆண்களுக்கு விரக்தியை கூடுதலாக ஏற்படுத்துகிறது. ஆகவே அவர்களின் கவனத்தை ஈர்;க்க அவர்களைக் கோபமூட்டுகின்றார்கள். தங்களொடு பெண்கள் பேசுவார்களோ என்று இந்த ஆண்களால் கற்பனை செய்யவே முடியவில்லை.

நமது நாடுகளில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே பாரிய வகுப்பு வேறுபாடு இருக்கிறது. வசதி குறைந்த குடும்பத்தைச் சார்ந்த பையன்கள் வசதியான குடும்பத்தைச் சார்ந்த பெண்களைக் கோபமூட்டுவார்கள். பொதுவிடங்களில் காணும் போதெல்லாம் இந்தப் பெண்களை தாக்குவதாகவும் மிரட்டுவார்கள். இப்பெண்கள் ஓட்டிச் செல்லும் ஈருளிகளுக்கு அருகே நெருங்கி வருவார்கள். சில வேளைகளில் இப் பெண்களின் மார்பகங்களையோ அல்லது புட்டங்களையோ பற்றிக் கொள்வார்கள். கவலைக்குரிய விஷயம் என்னவென்றால் இப்பெண்களால் ஒன்றுமே செய்ய முடிவதில்லை. இப்பெண்களோ சம்மதம் தெரிவித்தாலோ விலை மலிந்தவர்களாகக் கணிக்கப்படுவார்கள். இந்தப் பையன்கள் அஞ்சுவதெல்லாம் இப்பெண்களின் கோபமடைந்த சகோதரர்களோ அல்லது தந்தைமாரோ இவர்களுடைய கோரிக்கைகளுக்கு மறுப்புத் தெரிவித்தால் இப்பெண்கள் இந்தப் பையன்களின் மதிப்புக்கு ஆளாகிறார்கள். ஏனெனில் இப்பெண்கள் உயர் வகுப்பைச் சார்ந்தவர்கள் என்று கருதப்படுகிறார்கள். இது வேறொரு விதமான கீழ்த்தரமான ஒதுக்குதலாக இப்பையன்களால் கருதப்படுகிறது. முற்காலத்தைப் போன்ற சமத்துவப் பார்வைக்கு இடமில்லை.

பெண்களின் தவறுகள் என்று எதுவுமே இல்லை. இவர்களும் மற்றெல்லோரையும் போலப் பொது இடங்களில் நடமாடும் உரிமை பெற்றவர்களே. இவர்கள் தவறொன்றும் புரியாதவர்கள். ஆதலால் குற்றவாளிகள் என்று தம்மை நினைக்கத் தேவையில்லை. காலங்களோ மாறியபடி இருக்கின்றன. ஆகவே நீங்கள் பையன்களின் பாதுகாப்பை நாட வேண்டுவதில்லை. உங்களை அவர்கள் சகோதரிகள் போல நடத்த வேண்டும் என்பதுமில்லை. நீங்களும் மனிதர்கள் என்று கருதி உங்களை இவர்கள் மதிக்கப் பழக வேண்டும்.

ஏன் பெற்றோர்கள் பெண்களைப் பேதமாக நடத்துகிறார்கள்?

நாம் சமூகத்தின் மத்தியில் வாழ்கிறோம். சுமார் ஒரு தலைமுறைக்கு முன்பு பெண்கள் குறைந்த அளவு உரிமைகளையே அனுபவித்து வந்தார்கள். பெற்றோரும் பெண்களின் கல்விக்குப் பணம் செலவிடத் தயாராயில்லை. அந்த நாட்களில் பெண்கள் பெற்றோராலும் சகோதரர்களாலுமே பராமரிக்கப்பட்டு வந்தார்கள். பணத்தை இப்பெண்களின் திருமணச் செலவுக்கென்றே சேமித்து வந்தார்கள்.

பெருமளவிலான பெண்கள் இதைப் பற்றிக் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. வாழ்க்கையிலோ காதல் முயற்சியிலோ தம்மால் போராடி வெல்ல முடியாது என்று இவர்கள் நம்பினார்கள். இவர்களுக்கு வேறொரு வழியும் இருக்கவில்லை.

தற்போதைய பெற்றோர்கள் ஆண்பிள்ளைகளையும் பெண்பிள்ளைகளையும் சமமாகவே நடத்துகிறார்கள். பெற்றோரும் தமது பெண்களும் தமது ஆண்பிள்ளைகளைப் போலவே முன்னேற்றம் காணவேண்டும் என்று விரும்புகிறார்கள். சில வேளைகளில் பெண்களுக்கே கூடிய உரிமையும் வழங்குகிறார்கள்.

ஆனாலும் சில பிற்போக்குவாதிகள் இன்னமும் கூடத் தமது பெண்பிள்ளைகள் நன்றாகவே முன்னேற வேண்டுமென்று கருதிய போதும் பாதுகாப்பு நிமித்தம் வீட்டிலேயே அடைபட்டு இருக்க வேண்டுமென்று கருதுகிறார்கள். ஆண்களின் வாசனை வீசிவிடக் கூடாதென்று மிகுந்த கவனம் செலுத்துகிறார்கள்.

கூடிய அளவில் இதனைப் பெரும் பிரச்சினையாகப் பெண்கள் எண்ணுவதில்லை. அநேக பெண்கள் தம்மையொத்த பெண் பிள்ளைகளுடனம் குடும்ப உறப்பினர்களுடனும் நேரத்தைச் செலவிடவே விரும்புகிறார்கள். வேறு சிலர் தாம் முன்பு விரும்பிப் பழகிய பெண்களையே வெறுத்தொதுக்க ஆரம்பிக்கிறார்கள். வெறுக்க முக்கிய காரணம் இவர்கள் கொண்டாட்டங்களுக்கு போவதற்கும் ஆடவ நண்பர்களைக் கொண்டிருப்பதற்கும் அனுமதி பெற்று இருப்பதே. இதனால் இப்பெண்கள் தாம் பிற பெண்களால் முட்டாள்களாக மதிக்கப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டு விடப்படுவோமோ என்று நினைப்பதால் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள்.

இந் நிலையைப் பெற்றோர்களுடன் கலந்துரையாடினால் அவர்கள் கூறுவது இது தான், 'இது இந்நாளில் பெண்பிள்ளைகளுக்குப் பாதுகாப்பானதாகவில்லை" என்பதே. ஓரளவுக்கு இது உண்மையும் கூட. அதே வேளை ஆண்களுக்கும் கூட இது பொருந்தும்.

பெண்களுக்கு எப்படிக் கூடுதலான சுதந்திரம் கிடைக்கிறது?

பொதுவாக பொறுத்திருத்தல் வேண்டும். மேற்படிப்பிற்குப் போகுமுன்போ அல்லது தகுதியான உத்தியோகம் கிட்டு முன்போ வீட்டை விட்டு வெளியேறக் கூடாது.

நல்லதொரு வழி தகுந்தவொரு உறவுக்காரப் பெண்மணியைத் தெரிந்தெடுப்பது. அப்பெண்மணி உங்கள் பெற்றோரைக் காட்டிலும் வயது குறைந்தவர்களாக இருக்க வேண்டும். அல்லது மகளொருத்தி இல்லாதவளாக இருத்தல் வேண்டும். உங்களுக்கும் உங்கள் பெற்றோருக்கும் இடையே சமநிலைப்படுத்தபவராக இவள் அமையலாம். தங்கள் மகளுக்கு ஏன் அதிக சுதந்திரம் வழங்கவில்லை என்பதை தமது மனதைத் திறந்து கூறக்கூடும். நீங்கள் வீட்டிற்கு வெளியே இருக்கையில் உங்களுக்கான பொறுப்பை ஏற்பவராக இருத்தல் கூடும்.

அல்லாது போனால் நீங்கள் வீட்டில் எப்பொழுதும் சண்டையிட்டுக் கொண்டிருந்து உங்களுக்கும் உங்கள் பெற்றோருக்கும் தீராத வேதனையாகவே இருப்பீர்கள். ஆகவே இத்தகைய ஏற்பாடு நல்லது தானே. உங்கள் பெற்றோரின் புகைப்படத்தில் கவலை தோய்ந்த முகத்தைக் காணும் போது தீராத வேதனையைச் சில ஆண்டுகளின் பிறகு நீங்கள் அடைவீர்கள்.

அபாயங்களும் போதை மருந்தகளும்

பருவமானவர்களுக்கு கூடிய சுதந்திரம் அளிப்பது தீங்கு விளைவிக்கும் என்று பெற்றோர் கருதுவதேன்?

ஏனெனில் பருவமானவர்கள் தான் ஆபத்துக்களைச் சந்திக்கக் கூடியவர்கள். உங்களுக்கு இது தெரியாதா? ஏன் பருவமானவர்கள் ஆபத்தைச் சந்திக்கத் துணிகிறார்கள்?

வழக்கம் போல ஓமோன்களே காரணம். வயது போய் விட்டதும் காரின் ஓட்டும் வேகம் குறைந்து போவதையும் அதிக வேகத்தில் ஓடும் வாகனத்தைச் சமாளிக்க முடியும் என்று உறுதியாகக் கூறமுடியாத நிலையையும் அடைந்து விடுவீர்கள். இருந்த போதிலும் நிங்கள் பழைய நீங்கள் தான்.

பருவமானவர்கள் கூடிய வேகத்தில் செயற்படும் அநுசேதனம் இருந்த போதிலும் ஆபத்துக்களைச் சந்திக்கத் துணிவதில்லை. எல்லாப் பருவமானவர்களும் எல்லாக் காலங்களிலும் அப்படி இருப்பதில்லை. இதற்குப் பின்னணியில் காரணம் ஒன்றுண்டு. ஆபத்துக்களைச் சந்திக்கத் துணிவதில்லை. எல்லாப் பருவமானவர்களும் எல்லாக் காலங்களிலும் அப்படி இருப்பதில்லை. இதற்குப் பின்னணியில் காரணம் ஒன்றுண்டு. ஆபத்துக்களைச் சந்திக்கும் போது எல்லைகளை விஸ்தரிக்க வேண்டியிருக்கும். புதிய விவகாரங்களைச் செய்ய வேண்டும். அதாவது துணையாக ஒருத்தியை வரிந்து கொள்ள வேண்டும். முதுமை அடைந்தவர்கள் துணையாக ஒருத்தியைக் கவர்வது எவ்வளவு கடினமானது என்பதை அறிந்து கொள்ளுங்கள். இவர்ளால் பெரிய ஆபத்துக்களைச் சந்திக்கும் ஆற்றல் அற்றுப் போகிறது. ஆபத்துக்களில் சிக்கி முட்டாள்களாக இவர்களால் இயலாது.

இத்தகைய துணிவுகள் எல்லாம் பெரும்பாலும் பருவமானவர்களாலும் வயது வந்தோரில் அசாதாரண நிலையை அடைந்தவர்களால் மட்டுமே இயலும்.

பருவமானவர்களுக்கு இது சாதாரண சம்பவமே. இவர்களுக்குத் தான் எவ்வித ஆபத்தையும் சந்திக்கும் விருப்பம் இருக்கிறது. ஏனெனில் உலகில் தமக்கென ஓரிடத்தைக் கைப் பிடித்துக் கொள்ள இயலும் சில ஆபத்துக்களைச் சந்திக்க உந்தப்படுகிறார்கள். ஏனெனில் பாதுகாப்பான இவ்வுலகில் இவையெல்லாம் சிரமமானவை அல்ல. ஆபத்தானவற்றில் ஈடுபட அவர்களுடைய உடல் இடமளிப்பதில்லை.

ஆபத்தானவற்றைச் சந்திப்பதனால் உள்ள தீங்கு தான் என்ன?

ஆபத்தைச் சந்திப்பதனால் உள்ள தீங்கு என்னவென்றால் சிலவேளை நிரந்தர பாதிப்புக்குள்ளாகி விடுவீர்கள். பருவமான இளைஞர்களே விபத்துக்களில் முக்கியமாகப் பங்குபற்றுபவர்கள். விபத்துக்கள் பெரும்பாலும் மரணத்தில் முடியும். விபத்து மரணங்கள் கூடுதலாக இளைஞர்களையே பாதிக்கிறது.

மற்றைய ஆபத்து என்னவென்றால் சில தீய பழக்கங்களில் மாட்டிக் கொள்கிறார்கள். இத்தகைய தீய பழக்கம் வாழ்நாள் முழுவதுமே கூடவே தொடர்ந்து இருந்து விடும். உதாணரமாகச் சிகறெட் பழக்கம்.

பருவமானவர்களுக்க சிகறெட் ஏன் ஆபத்தானது?

அநேகமான தீய பழக்கங்களில் ஈடுபடுபவர்கள் பருவமானபோதே ஆரம்பித்து விட்டவர்களே ஆவர். சற்று வயது வந்தபிறகு பழகத் தொடங்கியோர் மிகச் சிலரே.

இதனை நன்கறிந்த சிகறெட் உற்பத்pயாளர்கள் பருவமானவர்களையே இலக்காகக் கொண்டு செயற்படுகின்றனர். செல்வந்த நாடுகள் புகைப்பிடிப்பதற்கு எதிராக செயல்படுவதால் புகைபிடிப்போரின் தொகை குறைந்துள்ளது. இதனால் தான் இந்நிலையங்கள் தங்கள் கவனத்தை எல்லாம் கீழைத் தேயங்களுக்குத் திருப்பியுள்ளனர். ஏனெனில் தமது வியாபாரத்தை நிலை நிறுத்த பருவமானவர்களே ஆபத்துக்களைத் துணிவுடன் எதிர்நோக்கக் கூடியவர்கள். நீண்ட கால ஆரோக்கியத்திற்கான ஆபத்தை எதிர்கொள்ள நேரிடுகிறது.

காலப் போக்கில் புகை பிடிக்கும் பழக்கத்தைக் கைவிடவோ மாற்றவோ முற்பட்டால் பொல்லாத போதைப் பொருட்களுக்கு அடிமையாகி விடுவார்கள்.

சிகறெட்டிலுள்ள பெரும் ஆபத்து என்னவென்றால் அதிலுள்ள சிறுதுணிக்கைகள் தொண்டை மட்டத்தோடு நில்லாது மற்றைய மாசுகளைப் போல நகரக் கூடியவை. சிகறெட் துணிக்கைகள் இறுதியாக நுரையீரலை அடைகின்றன. இவையே நுரையீரல் புற்றுநோய் ஏற்படக் காதரணமாய் உள்ளன.

மிகுந்த இளம் வயதில் புகைப்பழக்கத்தை ஆரம்பித்தால் உங்கள் வளர்ச்சியும் குன்றி முழு வளர்ச்சியையும் அடையாமல் போய்விட நேரிடும். சிகறெட் புகையிலையோடு கஞ்சாவைக் கலந்து புகைத்தால் உத்வேகம் அதிகரிக்கும் என்று கருதுகிறார்கள்.

சிகறெட் போலவே மதுபானமும் பழக்கமாகக் கூடியதுதானா?

ஆம் என்றும் கூறலாம். இல்லை என்றும் கூறலாம்.

சிலர் மதுப்பழக்கத்திற்கு ஆளாகி மதுவுக்கே அடிமையாகி விடுகின்றனர். அன்றாடம் மதுபானம் இல்லாமல் அவர்களால் இருந்து கொள்ள இயலாது. மதுபானப் பழக்கம் ஒரு நோயே. மனக் கட்டுப்பாடற்ற நிலையல்ல.

சாதாரணமாக மதுபானம் உட்கொள்பவரெல்லாம் மதுவுக்கே அடிமை ஆவதில்லை. மதுவுக்கு அடிமையாவதற்கு பரம்பரையலகு காரணமாகிறது. இது குடும்பத்தினருக்கு பரவக் கூடியது. பரம்பரையலகு சம்பந்தப்படாதிருந்தால் எவ்வளவு தான் மதுபானம் அருந்தி வெறி கொண்டாலும் குடிப்பழக்கம் ஏற்பட்டு விடாது. மதுபானம் குடிப்பதில் பெரும் விருப்பு ஏற்படாது. அதே வேளை பரம்பரை அலகு இருப்பின் குடிக்க ஆரம்பிக்காவிட்டாலும் எந்நேரமும் மதுவுக்கு அடிமையாகக் கூடும்.

மதுவுக்கு அடிமையானோருக்கு நடப்பது இது தான். இவர்களுடைய ஈரல் பாதிப்புக்குள்ளாகிறது. உடலிலள்ள நச்சுப் பொருள்களை நீக்கும் பணியைச் செய்வது ஈரலே. இவர்களுடைய ஈரல் கடும் செங்கபில நிறத்திலிருந்து மென்சிவப்பு நிறத்தை அடைகிறது. இவர்களுடைய ஈரல் செயலிழந்து போகிறது. இந்நிலை அடைந்து விட்டால் குடிப்பதை முற்றாக நிறுத்தி விட வேண்டும். அப்பொழுது தான் ஈரலைப் பாதுகாக்க இயலும். ஒரு விதமாகக் குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டாலும் கூட மீண்டும் குடிக்கத் துடிப்பர். சிறிதளவு குடிப்பது என்று ஆரம்பித்து மயக்கம் அடையும் வரையும் தொடர்ந்து குடிப்பர்.

குடிக்கு அடிமையான ஆண்கள் எதிர் நோக்கும் மற்றொரு பிரச்சினை இவர்கள் பாலியல் உறவு கொள்ளவே தகுதியற்றவர்கள் ஆகிவிடுவார்கள். முதல் கட்டமாக இவர்கள் மதுவருந்தி வெறிகொள்வார்கள். மிகவும் முற்றிய நிலையில் நிரந்திர வெறியர்கள் ஆகிவிடுவார்கள்.


பருவமானவர்கள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பருவமானவர்கள் - Page 4 Empty Re: பருவமானவர்கள்

Post by சிவா Mon Aug 09, 2010 12:11 am

சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் போதைவஸ்துக்கள் என்ன?

கஞ்சாவும் அதிலிருந்து பெறப்படும் போதைவஸ்துவுமே.

கஞ்சா இலைகளிலிருந்து பெறப்படும் பசைப்பொருள். இது கஞ்சா இலைகளைக் காட்டிலும் செறிவு கூடியது. இதனை புகையிலையோடு கலந்து புகைப்பார்கள். வேறு விதமாகவம் பயன்படுத்துகிறார்கள். பசையைப் பாலோடு கலந்து கரைத்து உட்கொள்வார்கள். வெறியேற்பட சுமார் ஒரு மணி நேரம் எடுக்கும். அதுவரை தொடர்ந்தும் குடித்துக் கொண்டே இருப்பார்கள். இதன் காரணமாக பெரும் தொகையான அளவினை உட்கொண்டிருப்பார்கள்.

இதன் விளைவு என்னவென்றால்; ஒரு கனவு நிலை, சிதறுண்ட காலமும் இடமும் சுய நினைவுக்கும் தடுமாற்றத்திற்கும் இடையில் மிதக்கும் நிலை மாறி மாறி ஏற்படும். மதுபானம் அருந்திய நிலைக்கும் இதற்குமிடையே பாரிய மாற்றம் தென்படும். சிலருக்குத் தலை சுற்றுவதும் உண்டவை வாய்வழி வெளிப்படும் நிலையும் காணப்படும்.

போதை ஏறிய நிலையில் வாகனங்களைச் செலுத்தக் கூடாது. சில சாரதிகள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஒரே இடத்தைச் சுற்றிச் சுற்றியே வாகனத்தைச் செலுத்துவார்கள். பாதையில் போவோருக்கு என்ன தான் நடக்கும் என்பதைக் கூறத் தேவையில்லை.

மிகுந்த பாதகத்தை விளைவிக்கும் போதைப் பொருள்கள் தான் என்ன?

அபினிலிருந்து தயாரிக்கப்படும் போதைப் பொருள்கள் எனக் கூறுவர். இவற்றை ஹிறோயின் (ர்நசழin), மோர்பீன் (ஆழசிhiநெ)

இவற்றிலுள்ள குறைபாடு என்னவென்றால் எவரும் மிக விரைவிலேயே இவற்றிற்கு பழக்கப்பட்டு விடுவார்கள். அல்லது அடிமையாகி விடுவார்கள். இதற்கு அடிமையானோரை மாற்றி விடுவது மிக மிகக் கடினமான காரியம்.

முதலில் குறிப்பிட்ட அளவிற்குப் பழக்கப்பட்டு விட்டால் அளவை அதிகரிக்க வேண்டிய நிலைக்கு உந்தப்படுவார்கள். இது மேலதிகமாகப் பயன்படுத்தி விட்டோம் என்ற நிலை வரை போகும். சிலவேளைகளில் இந்த போதை வஸ்துகளுக்க அடிமையானோர் ஊசி மூலம் ஏற்றிக் கொள்ள வேண்டிய நிலைக்கு உந்தப்படுவார்கள். இதனால் HIV சுலபமாகப் பரவும்.

வேறெதும் வஸ்த்துக்களும் உண்டா?

இருவகை மருந்துகள் - உற்சாக மூட்டிகளும் சாந்தப்படுத்துபவைகளும், ஆகாயம் வழியாக சுமந்து செல்லவைப்பவையுமே.

இவற்றால் ஏற்படும் ஆபத்துக்கள் என்ன?
1. இவற்றிலொன்றை எப்பொழுதும் நம்பியிருப்பது.
2. உங்கள் உடலையும் மனதையும் பாதிக்கும்.
3. இவற்றிற்குத் தரக் கட்டுபாடு இல்லை. ஏனெனில் சட்ட விரோதமானவை.
4. இதன் பிரயோகத்தால் பொலிசாரிடம் சிக்க வேண்டியிருக்கும்.


பெற்றோருக்கு :

பருவமானவர்கள் பூர்வீகத்திலிருந்து உயிர்வாழ்வோரே

எதனை வைத்து வாழ்ந்து வருகிறோம்?

உங்களுக்கே உரித்தான பருவமாகும் நிலை.

அதோடு உங்களுடைய பருவமான பிள்ளைகளைக் கண்டு உயிர் வாழ்கிறீர்கள்.

உங்கள் அனுபவங்களை எப்படி வரைந்து காட்ட உள்ளீர்கள்?


உங்களுக்குக் குழந்தைகள் பிறக்குமுன் குழந்தைகளை எப்படிப் பராமரிப்பது என்பது பற்றிப்படித்த புத்தகங்கள் நினைவிருக்கிறதா? உங்கள் இயற்கையான இயல்புகள் எல்லாம் சரியானவையே. குழந்தைகளோடு ஊடாடுவது பருவமானவர்களோடு ஊடாடுவதைக் காட்டிலும் சுலபமானது. இதிலுள்ள முக்கிய விஷயம் - குழந்தைகள் உங்களை மதிப்பீடு செய்வதோ சண்டையிடுவதோ நீங்கள் செய்த தவறுகள் இவை என்று குற்றம் சாட்டுவதோ இல்லை. ஆகவெ எவ்வித பாசாங்குகளையும் காட்டாமலேயே குழந்தைகளுடன் உறவாட முடியும். என்ன செய்வது என்று தெரியாத போது கேலியும் புரியலாம்.

பருவமானோரின் பிரச்சினைகளை அணுகும் போது பெற்றோர் அதிகாரம் என்னும் போர்வைக்குள் ஒழிந்து கொண்டு வித்தியாசமான முறையில் செயற்பட வேண்டியிருக்கும். அப்படி நடக்க வேண்டிய அவசியமில்லை. நாம் இருப்பது போலவே தொடர்ந்து இருப்போமாயின் பெரிய நிம்மதி ஏற்படும்.

ஒரே விஷயத்தைத் தம்பிள்ளைகளுக்குத் தருவது பழைய சம்பிரதாயமாகும். மனிதரெல்லாம் ஒரே மாதிரியானவர் அல்ல. விதவையானவர், பிரிந்து வாழ்பவர், விவாகரத்து செய்து கொண்டவர் எல்லாம் தனியாகவே உழைத்து வாழ வேண்டியிருக்கிறது. சில சமயங்களில் பெற்றோர் மாற்றாந் தாயாகவோ தந்தையாகவோ உள்ளனர். வெறுப்பில் மிதக்கும் பருவமானவர்களை வழிப்படுத்த விதிமுறைகளை வகுக்க வேண்டியுள்ளது. சில சமயங்களில் பெற்றோர் தமது பிள்ளைகள் பாடசாலை விடுதிகளில் இருப்பதனால் விடுமுறை நாட்களில் மட்டுமே காணக் கூடியதாக உள்ளனர். இதனால் இவர்களிடையே முரண்பாடுகளும் மோதல்களும் பெருமளவில் ஏற்படுவதில்லை. உண்மையில் உலகம் புதுமைகள் நிறைந்திருப்பதால் சிறுவர்களுக்கு நன்மை பயக்கும் விதத்தில் அமைந்துள்ளது. பருவமானவர்களுடைய தேவைகளைப் பெற்றோர்கள் நன்குணர்ந்து செயற்பட்டால் எல்லாமே தீர்வினை எளிதில் எட்டி விடும். தனிமையில் வாழும் பெற்றோர்கள் பருவமானவர்களிடம் இறுகப் பற்றுக் கொண்டிருந்தாலும் எல்லாம் சரியாகவே நடைபெற்று விடும். உங்கள் பருவமான பிள்ளைகளுக்கு விஷயங்களை நன்கு விளங்கிக் கொள்ளப் போதிய வாய்ப்பைத் தந்தால் எல்லாவற்றையும் நன்றாகவே விளங்கிக் கொள்வார்கள்.

பெற்றோருக்கு எது செய்வது சிறந்த பலனை அளிக்கும் என்று தெரியாது. 'எனக்கு இது விளங்கவில்லை. நீ என்ன நினைக்கிறாய்?" என்று கூற முற்பட்டால் பருவமானவருக்கு அமைதியைத் தரக் கூடியதாக இருக்கும். காலணி தவறுதலாக மறுகாலில் புகுத்தப்பட்டிருந்தால் பருவமானவர் பொறுப்புடன் செயற்பட்டு சரி செய்து கொள்ள வேண்டும். உண்மையில் பெற்றோர் தமது விசேஷமான ஆற்றல்களை பருவமானவர்கள் மீது வெளிப்படுத்துவதில் பூ10ரிப்படைகிறார்கள். தமது தீர்க்கமான பார்வையைப் பயன்படுத்துகிறார்கள். இவர்களுக்குச் சகல ஆற்றல்களும் ஏற்பட்டு விடும் என்ற நம்பிக்கையில் வளர்த்து வருகிறார்கள்.

பருவமானவர்களோடு ஊடாடுவதற்கு வேறேதும் நல்ல முறைகள் உள்ளனவா?

எவருடனும் சிறந்த முறையில் உறவு கொள்ள வேண்டுமாயின் உறவு ஒரு தலைப்பட்சமாக இருக்கக் கூடாது. பருவமானவரும் ஆலோசனை வழங்க இயலும் என்று கருத வேண்டும். சிறப்பான பெற்றோர் பருவமானவர் உறவு எனின் பருவமானவர்கள் தாம் தமது பெற்றோரைப் பாதுகாக்கக் கடமைப்பட்டவர்கள் என்ற எண்ணம் கொள்ள வேண்டும். இப்படி நினைக்க பருவமானவர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும்.

இதன் கருத்து உங்களுடைய (பெற்றோர்) போக்கை முற்றாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதில்லை. பருவமானவர் கடைப்பிடிப்பவை தவறானவை என்று தெரிந்த பிறகு அவற்றை அங்கீகரிக்க வேண்டுமென்பதில்லை. பருவமானவர் நீங்களும் தங்களைப் போலவே இருக்க வேண்டுமென்று விரும்புவதில்லை. பருவமானவருக்கு அச்சமும் தர்மசங்கடமும் ஏற்படுத்தி விடும். பெற்றோரும் தம்மைப் போல ஆரம்பித்தால் அவர்கள் உங்களையும் தங்கள் குழாத்தில் இணைத்து கொண்டவொரு நல்ல நண்பர் என்றே கருதுகின்றனர். சுலபத்தில் திருத்திவிட முடியாததொரு மூத்த உறுப்பினர் என்று உங்களைக் கருதுகின்றனர். இப்பண்புகளொடு தாம் கடந்து வந்த பருவமான நிலையின் போது கடைப்பிடித்தவற்றையே நீங்களும் கடைப்பிடித்து நடந்து செல்ல வேண்டுமென்று விரும்புகின்றனர். பெற்றோரிடமிருந்து ஓரளவு அடக்கு முறையையும் ஆத்திரத்தையும் எதிர் பார்க்கிறார்கள். இது அவர்களின் இயற்கையான சுபாவம் என்றே நம்புகிறார்கள். பெற்றோர் தமது உணர்ச்சிகளை மூடிவைத்துக் கொண்டிருப்பதையெல்லாம் பருவமானவர்கள் விரும்புவதில்லை. எந்த நேரத்திலும் வெடித்துக் கொப்பளிக்க வேண்டுமென்றே எதிர்பார்க்கிறார்கள்.


பருவமானவர்கள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பருவமானவர்கள் - Page 4 Empty Re: பருவமானவர்கள்

Post by சிவா Mon Aug 09, 2010 12:13 am

பருவமானவர்கள் தமது பெற்றோரை வேண்டாம் என்று நினைக்கிறார்களா?

இல்லை. அவர்களுக்குப் பெற்றோர் தேவை. ஏனெனில் அவர்கள் சிறுபிள்ளை நிலைக்கும் வயது வந்தோர் நிலைக்கும் இடைப்பட்ட இடத்தை வகிக்கிறார்கள். போராட்டங்களுக்கெல்லாம் நடுவே வழிதவறியவர்களோ அதே வேளை தங்களைத் தனியாக விட்டு விட வேண்டும் என்றோ பருவமானவர்கள் நினைக்கிறார்கள். தமக்கு மனவைராக்கியம் இல்லாத படியால் தமக்கு சில போதனைகள் ஊட்ட வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

பருவமானவரோடு மோதல்களைத் தவிர்த்துக் கொள்ளலாமா?

சில வேளைகளில். ஆனால் எப்பொழுதும் இல்லை. பெற்றோர்களிலிருந்து சிறிதளவு மாறுபட்டு இருக்கின்றார்கள். உங்களுடைய தீர்மானங்கள் நியாயமானவையாகவும், பிள்ளைகளும் அவற்றை ஏற்பதாயிருந்தால் உங்களுடையவையும் பிள்ளைகளுடையவையும் ஒன்றாகவே அமைந்திருக்கும். ஆனால் வீட்டில் நகைச் சுவையான அணுகுமுறையாக இருக்கக் கூடும். நகைச் சுவையானவை நீண்ட காலம் தவறான எண்ணம் கொண்டு நிலைக்க விடாது.

ஏன் பருவமானவர்கள் காலந்தாழ்த்தி அதன் காரணமாகப் பிந்தி விடுகின்றார்கள்?

மெதுவாக அசைந்து செல்வதும் பிந்துவதும் உங்கள் நிலையை உறுதிப்படுத்தவே ஆகும். பெற்றோருக்கு மாறாக நடப்பதும் சில ஆபத்துக்களை எதிர்நோக்குவதும் பருவமானவர்களின் சுபாவம் ஆகும்.

பெற்றோரின் முடிவுகள் நியாயமானவையாக இருந்தும் பருவமானவர் அவற்றை எதிர்க்கப் போதிய வாய்ப்பு அளிக்காத போது பிரச்சினை பெரிதாகி விடுகிறது. இதனால் பருவமானவர்கள் வேண்டுமென்றே நேரத்தை கடத்துவதிலும், பாPட்சைகளுக்கோ, பாடசாலைத் தேர்வுகளுக்கோ சரியாக நடவடிக்கை எடுப்பதில்லை. இது பெற்றோரைப் புண்படுத்தும். பருவமானவர்கள் அநேக வாய்ப்புகளை நழுவ விடுவார்கள். பாPட்சை நாட்களில் பாடசாலை பஸ்ஸை வேண்டுமென்றே தவறவிடுவார்கள். குழம்பிய நிலையில் அறையை வைத்திருக்க வற்புறுத்துவார்கள்.

செய்வது என்ன? இவை எல்லாவற்றோடும் வாழப் பழக வேண்டும்.

நீங்கள் விரும்பினால் சத்தம் போட்டுக் குழப்புங்கள். இங்கு இது தான் தீங்கொன்றும் விளைவிக்காத புரட்சியாகும். இது செய்ய வேண்டிய உன்னத காரியமில்லை என்பது இவர்களுக்குத் தெரிந்ததே. பருவமானவர் வெறியோடு போய் தமது அறையைத் துப்பரவு செய்வார்கள். முக்கியமானதொன்றைச் செய்ய ஆரம்பிக்கும் போது தாங்கள் ஒரு தொடர் வண்டியை (வசயin) பிடிப்பதற்குச் செல்ல வேண்டுமாயின் விரைவாகவே புறப்படுவார்கள். கல்வித் திணைக்களம் நடத்தும் பாPட்சையில் மோசமாக செய்வதற்கு நடு நடுங்குவார்கள்.

எங்கள் பிள்ளைகள் வெளியே சென்றால் பெரிதும் கவலைப் படுகிறோம்

கவலைப்படுவது இயற்கையே. நாம் அவர்கள் மீது அக்கறை காட்டுகிறோம் என்பதன் அறிகுறி அதுவாகும்.

எக்காலமும் அவர்களைப் பெற்றோர் பாதுகாப்பது கடினம். அவர்கள் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு தம்மைத் தாமே பாதுகாத்துக் கொள்ள வழி தெரியாது திணறுவார்கள். ஆகவே தான் அவர்கள் வீட்டில் இருக்கும் போதே ஓரளவு சுதந்திரத்துடன் வாழ்ந்து தம்மைத் தாமே காப்பாற்றிக் கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும். இல்லை எனில் பின்பு பல சங்கடங்களுக்கு ஆளாக வேண்டியிருக்கும். இதற்கு ஒரே வழி இவர்கள் ஓரளவுக்காவது வெளியிலிருந்து தம்மைச் சமாளிக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

இது அவ்வளவு சுலபமானது அல்ல. நீங்கள் எல்லை இல்லாமல் கவலைப்பட்ட படியே இருக்க வேண்டும். ஆனாலும் கூட இது ஆபத்தானதொன்று தான்.

நாம் ஏன் ஆபத்துக்களைச் சந்திக்க வேண்டும்?

உலகெங்கும் வீட்டிற்கு வெளியே வாழ்பவர்கள் அந்நியர்களுடன் பழகும் போது அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது தெரிந்தது தானே? காலமெல்லாம் பெற்றோரின் பராமரிப்பிலும் கண்காணிப்பிலும் உள்ளவர்கள் இத்தகைய நிலைமைகளைச் சமாளிக்க இயலாது இருப்பார்கள். இவர்களுக்கு வீதியில் செல்வோரைத் தவிர்ப்பது எப்படி, யாரையுமே கவனிக்காமல் வீதி வழியே விரைவாக நடந்து செல்வது எப்படி, எந்நேரம் அழகாகக் காட்சி தருவது, எந்நேரம் அழகின்றித் தோற்றமளிப்பது போன்றவை எல்லாம் தெரியாமல் திணறுவார்கள்.

அனுபவத்திலிருந்து தம்மைப் பாதுகாக்கப் புறப்படுவோர் பாரிய பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி வரும். இவர்கள் பாடங்களைக் கற்று கொள்வதெல்லாம் பல கஷ்டங்களின் ஊடாகத் தான்.

ஆகவே பருவமானோருக்கு உரிமைகள் பலவற்றையும் வழங்கி இவர்களின் விருப்பப் படியே நடக்க விட்டால் இவர்கள் வலியவர்கள் கூறியபடியே நடக்க வேண்டியிருக்கும். வலிமை பொருந்திய மக்கள் பெற்றோராய் இருக்க வேண்டுமென்பதில்லை.

எங்கள் பெண்கள் ஆண்களுடன் பிரச்சினைகளுக்குள் மாட்டிக் கொண்டால்...

எமது பெண் பிள்ளைகளைப் பாதுகாக்க இரு வழிகள் உண்டு.

ஒன்று எமது பெண்களை ஆண்களிடமிருந்து பிரித்து வைத்தல். இது உடனடியான பிரச்சினைக்கு தீர்வாகும். ஆனால் இது நீண்ட காலப் பிரச்சினைக்குத் தீர்வாகாது. இவை அனைத்தும் ஏற்படுவது இப் பெண்கள் தாமாகவே தனியே வாழ முற்படும் போது தான். ஆண்களுடன் ஆன பிரச்சினைக்குத் தீர்வு கண்டு விட்டோம் என்று கூறிக் கொள்வதெல்லாம் தமது பெற்றோரைத் திருப்திப்படுத்தவே. ஆனால் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை முற்று முழுதாகச் சமாளிக்கவல்ல. காட்சியில் தோற்றமளித்த இளைஞன் தனது அதிகாரத்தைச் செலுத்துவான். இதுவும் பெற்றோரைப் போன்றதொன்றே.

இரண்டாவதாக உங்கள் விருப்பமின்மையை வெளிப்படுத்தும் ஓரளவு சுதந்திரத்தைப் பெண்களுக்கு வழங்குங்கள். ஆண்களால் வருவனவற்றைச் சமாளிக்கக் கூடிய உத்திகளை இவர்களுக்குக் கற்றக் கொடுக்க வேண்டும். இது தம்மைப் பெண்கள் தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகளை ஊட்டும். ஆண்களுக்கு கண்மூடித்தனமாகக் கீழ்ப்படியும் நிலையை மாற்றியமைக்கும். இவர்கள் கைக் கொள்ளும் உறவுமுறைகள் எல்லாமே சுய கௌரவத்தின் அடியாகவே இருக்கும். ஆம். சிறு சிறு பிரச்சினைகளும் மன வேதனைகளும் ஏற்படத்தான் செய்யும்.

மணப் பெண்கள் மீது பிரயோகிக்கின்ற வன் முறைகளை இக்காலத்தில் சில குடும்பங்களில் காண்கிறோம். இவர்களிடம் எதிர்பார்ப்பது கற்பும் பணிவுமே. இவளும் வலிமையுடையவளாயிருந்து இத்தகைய நிலைமைகளைச் சமாளிக்கத் தெரிந்திருக்க வேண்டுமல்லவா?

தாங்கள் மதிக்கப்பட வேண்டும் என்று கருதும் வலிமையுடைய பெண்கள் ஆண்களின் நட்பை எளிதில் அடைய முடிவதில்லை. பையன்களைப் பற்றிப் பெற்றோர் கொண்டிருக்கும் அச்சத்தை முடிவுக்குக் கொண்டு வரலாம். பையன்கள் இத்தகைய பெண்களோடு தமது திருவிளையாடல்களைப் புரிய இயலாது என்று நன்றாகத் தெரிந்துள்ளார்கள்.

எமது பருவமானவர்களைப் பொருள் ரீதியிலும் பொறுப்புள்ளவர்களாக்குவது எப்படி?

ஒரு நல்ல வழி. வாரந்தோறும் ஒரே அளவு பணத்தைச் கைச் செலவுக்காகக் கொடுத்து அவற்றைக் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் வற்புறுத்த வேண்டும். இவர்களோடு அன்புடன் இருக்கும் போதும் வெறுப்புடன் இருக்கும் போதும் இத் தொகையில் மாற்றம் செய்யாதிருக்க வேண்டும். இது ஒரு மாதச் சம்பளம் போன்றதே. இத்தொகையிலிருந்து தான் இவர்கள் தமக்குத் தேவையானவற்றை வாங்கிக் கொள்ள வேண்டும். அவர்களுடைய செலவினங்கள் சிலவற்றிற்கு உங்கள் சொந்தப் பணத்தைக் கொடுக்க முற்பட்டால் நிலைமையைச் சீர்குலைத்து விடும். அவர்கள் எப்படிச் செலவிடுவது எனவும் எதனை வாங்குவதெனவும் திட்டம் இடவே முடியாது.

குடும்பச் செலவினங்களை அவர்களோடு கலந்தாலோசிப்பதும் நல்லதே. உதாரணமாக மாதம் மாதம் செலுத்த வேண்டிய பெரிய செலவினங்களைக் கூற வேண்டும். இந்நிலையில் இவர்களின் சில கோரிக்கைகளை நிறைறே;ற இயலுமா என்று இவர்களையே கேட்க வேண்டும். பண நிலை பற்றிய இரகசியங்களைக் கூறாது மறைப்பதால் பெற்றோரிடம் நிரம்பப் பணம் தேங்கி இருக்கிறது என்று பிள்ளைகள் நினைக்கக் கூடும். தாம் விரும்பும் எதனையும் வாங்கித் தரக் கூடிய நிலையில் பெற்றோர் இருக்கிறார்கள் என்று பிள்ளைகள் நினைக்கக் கூடும்.

பருவமானவரிடம் உங்கள் பண நிலையை மறைத்து வைத்தீர்களாயின் இவர்கள் ஒரு போதும் பண விஷயத்தில் பொறுப்புள்ளவர்களாக நடந்து கொள்ள மாட்டார்கள்.

எமது பிள்ளைகள் எம்மிடம் முன்பு போலப் பற்று உடையவராக இல்லையே என்பது வருத்தத்தைத் தருகிறது அல்லவா?

அன்பான பெற்றோரை சிறு பிராயத்தில் கட்டித் தழுவ வேண்டுமென்று விரும்பிய தமது பிள்ளைகள் பருவமானது எட்டி நிற்க எத்தனிப்பது பெற்றோருக்கு வேதனையைத் தருவது உண்டு. இது எல்லாப் பெற்றோருக்கும் ஏற்படுவது தான். சிறு பிள்ளைகளாய் இருந்த போதும் பருவமான போதும் பிள்ளைகள் மீது பெற்றோருக்கிருந்த பாசம் ஒரே அளவானதாகவே இருந்த போதிலும் பிள்ளை காட்டும் வித்தியாசம் பெற்றோருக்கு பெரும் வேதனையே தரும்.

நாம் இதனை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். பருவமானவர்கள் தமக்கென வயது வந்தவர்களின் குழாத்தில் இடம்பெற இடம் ஒதுக்கத் தலைப்படுவார்கள். முன்பு இவர்கள் தம்மைக் குளியலறையில் குளிப்பாட்ட அனுமதித்தவர்கள் பருவமானதும் தனிமையை விரும்பி முன்பு போல அனுமதிக்க மறுக்கிறார்கள்.

இதனை முதலில் ஏற்றுக் கொள்ளப் பெற்றோருக்கு இயலாது. ஆனால் நிலைமை மாறி விட்டது. வலிமையும் சுதந்திரமும் கொண்ட இளைஞர்களைப் பெற்றோர்கள் நம்புகிறார்கள். இப்படித்தான் எல்லாமே நடைபெறுகிறது.

---------------------------------------------------


பருவமானவர்கள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பருவமானவர்கள் - Page 4 Empty Re: பருவமானவர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum