ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூவம் நதி சீரமைப்புப் பணி 6 ஆண்டுகளில் முடிவடையும்: ஸ்டாலின்

2 posters

Go down

கூவம் நதி சீரமைப்புப் பணி 6 ஆண்டுகளில் முடிவடையும்: ஸ்டாலின் Empty கூவம் நதி சீரமைப்புப் பணி 6 ஆண்டுகளில் முடிவடையும்: ஸ்டாலின்

Post by நவீன் Thu Aug 05, 2010 6:25 pm

கூவம் நதி சீரமைப்புப் பணி 6 ஆண்டுகளில் முடிவடையும்: ஸ்டாலின் Cooum

சென்னை கூவம் நதி சீரமைப்பு பணி 5 அல்லது 6 ஆண்டுகளில் முடிவடையும் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.சென்னை
மாநகராட்சி சார்பில் கூவம் நதி சீரமைப்பு திட்டத்தின் கீழ் புதுப்பேட்டை
லாங்ஸ் கார்டன் மற்றும் சிவானந்தா சாலையில் ரூ.2.21 கோடியில்
அமைக்கப்பட்டுள்ள இரண்டு புதிய பூங்காக்களை புதன்கிழமை திறந்துவைத்து துணை
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது:கூவம் நதியைச் சீரமைப்பது தொடர்பான
சிங்கப்பூர் கூட்டுறவு நிறுவனத்தினரின் அறிக்கை 5 அல்லது 6 மாதங்களில்
கிடைக்கும். கூவம் நதி சீரமைப்புப் பணியின் மொத்த மதிப்பீடு ரூ.1,200
கோடியாகும். சிங்கப்பூர் நதியை சீரமைக்க 10 ஆண்டுகள் ஆனது.சென்னை
கூவம் சீரமைக்கும் பணி 5, 6 ஆண்டுகளில் முடிக்கும் வகையில் பொதுப்
பணித்துறையும் சென்னை மாநகராட்சியும், குடிசை மாற்று வாரியமும் இணைந்து
முழுமையாக நிறைவேற்றும் புதுப்பேட்டை லாங்ஸ் கார்டன் பகுதியில்
ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 1,028 குடிசைகள் அப்புறப்படுத்தப்பட்டு ஒக்கியம்
துரைப்பாக்கத்தில் மாற்று இடம் வழங்கப்பட்டுள்ளன. மேலும்,
அண்ணாசாலை அருகில் டாம்ஸ் ரோடு பகுதியில் உள்ள கூவம் கரை பகுதிகள் சென்னை
மாநகராட்சிக்கு வழங்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பயன்பெறும்
வகையில் மாற்றியமைக்கப்பட உள்ளன.1,200 ஆட்டோ உதிரிபாக சிறு
தொழிற்சாலைகள் ஆப்பூருக்கு மறு குடியமர்வு:கூவம் ஆற்றை சீரமைக்கும்
பணிகளின் ஒரு முக்கிய அங்கமாக சிந்தாதிரிப்பேட்டை, புதுப்பேட்டை
பகுதிகளில் உள்ள கூவம் கரையை ஆக்கிரமித்து ஆட்டோ மற்றும் மோட்டார் உதிரி
பாகங்களின் சிறுதொழிற்சாலைகள் உள்ளன. சிறு தொழிற்சாலை
உரிமையாளர்களிடம் சுமூகமான பேச்சு வார்த்தை நடத்தி, 1,200 சிறு
தொழிற்சாலைகளுக்கு மாற்று இடம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம்
மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயில் அருகிலுள்ள ஆப்பூர் கிராமத்திற்கு மறு
குடியமர்வு செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான முதல் கட்ட
பணிகள் ஓரிரு ஆண்டுகளில் முடிக்கப்படும்.சென்னை நதிகள் சீரமைப்பு
அறக்கட்டளை: கூவம் ஆற்றை முதலிலும், அதைத்தொடர்ந்து சென்னை நகரின் பிற
முக்கிய நீர்வழித் தடங்களையும் சேர்த்து சீரமைக்கும் நோக்கத்துடன்
தற்போதுள்ள அடையாறு பூங்கா அறக்கட்டளை, சென்னை நதிகள் சீரமைப்பு
அறக்கட்டளை என 2010 ஜனவரி 22-ம் தேதி மாற்றியமைக்கப்பட்டது. இந்த
அறக்கட்டளையின் முதலாவது கூட்டம் 2010 பிப்ரவரி 8-ம் தேதி நடைபெற்றது.
இந்த அறக்கட்டளையின் மூலம் கூவம் நதியைச் சீரமைக்க, சிங்கப்பூரைச் சேர்ந்த
சிங்கப்பூர் கூட்டுறவு நிறுவனத்துடன் 2010 மார்ச் 18-ம் தேதி முதல்வர்
கருணாநிதி முன்னிலையில் சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளைக்கும்,
சிங்கப்பூர் கூட்டுறவு நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
கையெழுத்தானது என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.செய்தித் துறை
அமைச்சர் பரிதி இளம்வழுதி,மேயர் மா.சுப்பிரமணியன், நகராட்சி நிர்வாகம்
குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் க.அசோக்வர்தன் ஷெட்டி,பொதுப்
பணித்துறை முதன்மை செயலாளர் ராமசுந்தரம், துணை முதல்வரின் முதன்மைச்
செயலாளர் கே. தீனபந்து, சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை உறுப்பினர்
செயலாளர் க.பனீந்திர ரெட்டி,சென்னை மாநகராட்சி ஆணையாளர் ராஜேஷ் லக்கானி
உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

கூவம் நதி சீரமைப்புப் பணி 6 ஆண்டுகளில் முடிவடையும்: ஸ்டாலின் Empty Re: கூவம் நதி சீரமைப்புப் பணி 6 ஆண்டுகளில் முடிவடையும்: ஸ்டாலின்

Post by megastar Thu Aug 05, 2010 6:28 pm

சிங்காரச் சென்னை, கூவம் நாத்தாதை இழக்கப் போகிறது. நல்லது நடந்தால் சரி. மகிழ்ச்சி
megastar
megastar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010

http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum