புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்த்தும் பயனும் - Page 5 Poll_c10வாழ்த்தும் பயனும் - Page 5 Poll_m10வாழ்த்தும் பயனும் - Page 5 Poll_c10 
284 Posts - 45%
heezulia
வாழ்த்தும் பயனும் - Page 5 Poll_c10வாழ்த்தும் பயனும் - Page 5 Poll_m10வாழ்த்தும் பயனும் - Page 5 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
வாழ்த்தும் பயனும் - Page 5 Poll_c10வாழ்த்தும் பயனும் - Page 5 Poll_m10வாழ்த்தும் பயனும் - Page 5 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
வாழ்த்தும் பயனும் - Page 5 Poll_c10வாழ்த்தும் பயனும் - Page 5 Poll_m10வாழ்த்தும் பயனும் - Page 5 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வாழ்த்தும் பயனும் - Page 5 Poll_c10வாழ்த்தும் பயனும் - Page 5 Poll_m10வாழ்த்தும் பயனும் - Page 5 Poll_c10 
19 Posts - 3%
prajai
வாழ்த்தும் பயனும் - Page 5 Poll_c10வாழ்த்தும் பயனும் - Page 5 Poll_m10வாழ்த்தும் பயனும் - Page 5 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வாழ்த்தும் பயனும் - Page 5 Poll_c10வாழ்த்தும் பயனும் - Page 5 Poll_m10வாழ்த்தும் பயனும் - Page 5 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
வாழ்த்தும் பயனும் - Page 5 Poll_c10வாழ்த்தும் பயனும் - Page 5 Poll_m10வாழ்த்தும் பயனும் - Page 5 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வாழ்த்தும் பயனும் - Page 5 Poll_c10வாழ்த்தும் பயனும் - Page 5 Poll_m10வாழ்த்தும் பயனும் - Page 5 Poll_c10 
7 Posts - 1%
mruthun
வாழ்த்தும் பயனும் - Page 5 Poll_c10வாழ்த்தும் பயனும் - Page 5 Poll_m10வாழ்த்தும் பயனும் - Page 5 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்த்தும் பயனும்


   
   

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Aug 05, 2010 4:55 pm

First topic message reminder :

பிறர் நலமாக வாழ வேண்டும் என்ற நினைவோடு எழும் ஓர் ஒலியே வாழ்த்து என்ற வார்த்தையாகும். வாழ்த்து என்றாலே அதை நினைக்கும்போதும், அதை சொல்லும்போதும் மனத்திலே ஓர் அமைதியான இயக்கம் ஏற்படும்.

"வாழ்க வளமுடன்" என்று மற்றவரைப் பார்த்து சொல்லும்போது எல்லாப் செல்வங்களையும் உங்களுடைய வாழ்க்கையில் பெற்று சிறப்பாக வாழ வேண்டும் என்று கருத்தை உள்ளடக்கியதாக அமைகிறது என்று வேதாத்திரியம் கூறுகிறது.
வாழ்க என்ற வார்த்தையில் உள்ள 'ழ்' என்ற சிறப்பான எழுத்தை உச்சரிக்கும்போது நமது நாக்கு மடிந்து மேலண்ணத்தில் நன்கு தொட்டு அழுத்துகிறது. இந்த அழுத்தம் உள்ளே இருக்கும் பிட்யூட்டரி சுரப்பியையும், பீனியல் சுரப்பியையும் நன்கு இயக்குவதற்குத் தூண்டுகிறது. உடலியக்கத்திற்குத் தலைமைச் சுரப்பி பிட்யூட்டரி சுரப்பி. மன இயக்கத்திற்கு தலைமைச் சுரப்பி (Master Gland) பீனியல் சுரப்பி. இவ்விரு சுரப்பிகளுகம் இயக்கம் பெறுவதால் நமது உடல்நலமும், மன நலமும் சிறப்படைகின்றன.
பீனியல் சுரப்பியை 'மனோன்மனி' என்றும் அழைக்கின்றனர். மனத்திற்குரிய ஒரு நல்ல ஆற்றல் உள்ள கருவி என்பதற்காக மன+உள்+மணி என்ற 3 வார்த்தைகளைச் சேர்த்து மனோன்மனி என்று சொல்லப்படுகிறது. மனத்திற்கு உட்பொருளாக உள்ள இரத்தினம் என்பது பொருள். அதனால் நாம் வாழ்த்தும்போது மனோன்மனியோடு தொடர்பு கொண்டு எண்ணற்ற பலன்களை பெறுகிறோம்.

வாழ்க வளமுடன் என்ற மந்திரத்திற்கு வலு அதிகம். தவம் செய்த முடிக்கின்ற போது சொல்லும்போது வாழ்த்துக்கு இன்னும் வலிமை கூடுகிறது. உதாரணமாக ஒரு வில்லில் அம்பு எய்வதற்கு எவ்வளவு தூரம் நாணை இழுக்கிறோமோ, அந்த அளவுக்கு அம்புக்கு வேகம் கூடும். அதுபோன்று மனம் எவ்வளவு அமைதி நிலையிலிருந்து வாழ்த்துகிறதோ அந்த வேகத்தில் அந்த வாழ்த்து செயலுக்கு வரும்.

வாழ்த்து அலை

வாழ்த்து என்பது அலை. இந்தச் சீவகாந்த அலைக்கு 5 வகையான இயக்கங்கள் உள்ளன.
1 மோதுதல் (Clash)
2 பிரதிபலித்தல் (Reflection)
3 சிதறுதல் (Refraction)
4 ஊடுருவதல் (Penetration)
5 இரண்டிற்கும் இடையே ஓடிக் கொண்டிருத்தல் (Interaction)

ஒருவர் மற்றவரை வாழ்த்தும்போது அந்த வாழ்த்து இருவருக்கிடையே ஓடிக் கொண்டே இருக்கும். இவ்விருவருக்கும் இடையே ஓர் உயிரோட்டம் உண்டாகி விடுகிறது. அது ஆயுள் முழுவதும் இருக்கும். நீங்கள் அன்போடு நல்ல எண்ணத்தோடு பாய்ச்சி விட்டால் போதும். அவர் உங்களை பார்த்தாலும், பார்க்காவிட்டாலும் அவரது உயிரிலிருந்து நன்மையான அலை வீசிக் கொண்டே இருக்கும்.

வாழ்த்தின் நன்மை

1 "வாழ்க வளமுடன்" என்று சொல்லும்போது பிறர் உள்ளத்திலே நமது கருத்தும் உயிராற்றலும் ஊடுருவி இரண்டு பேருக்குமிடையே ஓர் இனிய நட்பை வளர்க்கிறது.

2 இந்த வாழ்த்துப் பயிற்சியினால் சினம் அடிக்கடி வருவதைத் தவிர்க்கலாம்.

3 அப்படி வாழ்த்தி, வாழ்த்தி எப்பேர்பட்டவர்களையும் நண்பர்களாக மாற்றி பகைமையைத் தவிர்க்கலாம். அவர்களுடைய செயல்களைத் திருத்திவிட முடியும்.

4 ஒரு செடியைப் பார்த்துக் கூட "வாழ்க வளமுடன்" என்று சொன்னால், அந்தச் செடியில் இருக்கக் கூடிய பலவீனம் நீங்கி அது நல்லதாக மாறும்.

நன்றி :- இந்திய கலாசார புரட்சி அமைப்பு



ஈகரை தமிழ் களஞ்சியம் வாழ்த்தும் பயனும் - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 09, 2011 5:59 pm

மூன்று சொற்களை சரியான இடங்களில், போலியில்லாமல் உளப்பூர்வமாகப் பயன் படுத்துபவர்கள், எல்லோராலும் நேசிக்கப் படுகிறார்கள். ‘நன்றி’, ‘மன்னிக்கவும்’, ‘தயவுடன்’ என்பனவே அந்தச் சொற்கள். ஆனால், இவற்றைப் பயன்படுத்தினாலே, நமது சுயமரியாதைக்கு இழுக்கு வருவதாக நாம் எண்ணிக் கொள்கிறோம்.

மனிதர்கள், தனித்தனியே பிரிந்து கிடக்கும் தீவுக்கூட்டம் அல்ல. அடுத்த மனிதர்களைச் சார்ந்தே நாம் வாழ்கிறோம். நேரிடையாக இல்லாவிட்டாலும் மறைமுகமாகப் பலர் நமது செயல்களுக்குத் துணை நிற்கிறார்கள்.

உணவகத்தில் நமது அவசரத்தைப் புரிந்து கொண்டு, நாம் கேட்கும் உணவுகளை உடனுக்குடன் கொண்டுவந்து தந்து, சாப்பிட்ட உணவுக்காகக் கொடுத்த பணத்தின் மீதத்தையும் உடனே கொண்டு வந்து தரும் பணியாளிடம், ‘அதை நீயே வைத்துக்கொள்’ என்று வெறுமனே சொல்லிவிட்டுக் கிளம்பாமல், அத்துடன் ‘நன்றி’ என்று சிரித்த முகத்துடன் சொல்லும்போது, அவர் அடையும் மகிழ்ச்சி அதிகம்.

நமக்காக ஒரு வேலை செய்யும் எவருக்கும் நன்றி சொல்லலாம். ‘அவர் பணம் வாங்கிக் கொண்டுதானே செய்கிறார்… நன்றி எதற்கு சொல்ல வேண்டும்’ என்று தோன்றினால், நமது மனம் இன்னும் மலரவில்லை, கூம்பித்தான் கிடக்கிறது என்று பொருள்.

எந்த மனித உறவையும் அல்லது வேலையையும் பணத்தினால் மட்டுமே அளந்து விட முடியாது. ‘சந்திக்கும் எவரிடமும் அன்பாக இருங்கள்… கொஞ்சம் புன்னகை செய்யுங்கள்… ஏனெனில், எவருமே ஏதோ ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொண்டு போராடுபவர்களாகவே இருக்கிறார்கள்…’ என்கிறார் கிரேக்க நாட்டு அறிஞர் பிளாட்டோ. அவரது காலத்திலேயே அப்படி என்றால், ‘ஓடிக்கொண்டே இருந்தால் தான் நின்ற இடத்திலேயே இருக்க முடிகிறது…’ என்னும் சூழலில் வாழும் நமது மனிதர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.

ஆனால் புன்னகைக்கக்கூட நேரம் இல்லாதது போலவே நாம் காட்டிக்கொள்ள விரும்புகிறோம். பெற்றோரும் நண்பர்களும்கூட நமக்கு உதவி செய்வதற்கென்றே பிறந்தவர்கள் போலவும், ஆனால் நமக்கு அடுத்த வேலைகள் ஆயிரம் இருப்பது போலவும் நடந்து கொள்கிறோம்.

நன்றாகச் சமைத்து வைத்திருக்கும் மனைவிக்கோ அல்லது அம்மாவிற்கோகூட நன்றி சொல்ல நமக்குத் தெரிவதில்லை. சிரமப் பட்டாவது நம்மைப் படிக்க வைக்கும் அப்பாவுக்கோ அல்லது நமக்குப் பிடித்த வண்ணத்தைத் தேடிப்பிடித்து தீபாவளிக்குப் புடவை வாங்கித்தரும் கணவனுக்கோ நன்றி சொல்லத் தோன்றுவதில்லை. ‘அவர் அதையெல்லாம் எதிர்பார்க்கமாட்டார்’ என்று பதில் சொல்லத் தெரியுமே தவிர, சொன்னால் எவ்வளவு மகிழ்வார்கள் என்று எண்ணிப் பார்ப்பதில்லை.

வேலை செய்யுமிடத்தில், நம்மைவிடக் கீழ்நிலையில் இருப்பவர்களிடம் நாம் சொல்லும் நன்றி, அவர்களை ஈடுபாட்டுடன் வேலை செய்ய வைக்கிறது. அவர்களிடம் இருக்கும் திறமையை மேலும் வெளிக்கொணர்கிறது.

அதேபோன்று மற்றொரு முக்கியமான சொல், ‘மன்னிக்கவும்’ என்பது. தவறு செய்வது மனித இயல்பு. எந்தச் செயலிலும் தவறு நிகழலாம். ‘மனிதத் தவறு’ என்றே அது குறிக்கப்படுகிறது. எனவே, தவறி தவறு செய்வது மிகப்பெரிய பிழையன்று. ஆனால், நிகழ்ந்துவிட்ட தவற்றுக்கு, வருத்தம் தெரிவிக்கி றோமா என்பதில்தான் சிக்கல் எழுகிறது.

‘நான் செய்வதில் தவறே நிகழாது’ என்கிற எண்ணமோ; அல்லது, இதில் மன்னிப்புக் கேட்க என்ன இருக்கிறது…’ என்கிற எண்ணமோ; ஏதோ ஒன்று நம்மைத் தடுத்துவிடுகிறது. மன்னிப்புக் கேட்பது மனிதப்பண்பு என்பது இருக்கட்டும்; தன்னம்பிக்கையும் தைரியமும் உள்ளவர்களே, தாங்கள் செய்துவிட்ட தவற்றிற்கு மன்னிப்புக் கேட்கிறார்கள் என்னும் உண்மையையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். அதேபோன்று, தன்னம்பிக்கையும் தைரியமும் உள்ளவர்களே, அறியாமல் பிறர் செய்துவிட்ட தவற்றினையும் மன்னிக்கிறார்கள்.

‘பலவீனங்கள் பிறரை மன்னிப்பதேயில்லை. ஏனெனில், அது வீரர்களின் குணம்’ என்கிறார் காந்தியடிகள்.
மற்றொரு முக்கியமான சொல், ‘தயவுடன்’. அடுத்தவர் செய்யும் தவற்றினைச் சுட்டிக் காட்டும் போதோ அல்லது நமது சொற்களைத் தலை மேலேற்றிச் செயலாற்ற வேண்டிய நிலையில் இருப்பவர்களிடம் ஒரு வேலையைச் செய்யச் சொல்லும்போதோ, ‘தயவுடன்’ என்னும் சொல்லைச் சேர்த்து சொல்வது, ஓர் உயரிய குணம்.

நாம் போக முடியாதவாறு வழியை அடைத்துக் கொண்டிருப்பவரிடமோ அல்லது வண்டியை நிறுத்தி வைத்திருப்பவரிடமோ, இந்தச் சொல்லையும் சேர்த்து கோரிக்கை வைத்துப் பாருங்கள்; உரிய பலன் உடனே கிடைக்கும்.

அப்படி இல்லாமல், சற்றுக் கோபத்தையும் சேர்த்து சொல்லப்பட்ட சொற்கள், கிரிமினல் வழக்கு வரை கொண்டுவந்துவிட்ட நிகழ்வுகள் இங்கு நிறையவே உண்டு.

நாம் ஆணையிட்டால் செயலைச் செய்து முடிக்க வேண்டியவரிடம், ‘தயவுடன் இதைச் செய்ய முடியுமா?’ என்று கேட்டால், அவர்களின் உள்ளம் மட்டுமல்ல, உச்சியும் குளிரும். அந்தக் குளிர்ச்சி அவர்களின் செயல்களில் வெளிப்படும்.

எவ்வளவு கடினமான சூழலையும், இந்த மூன்று சொற்கள், இளக்கமடையச் செய்கின்றன. எவ்விதக் கசப்பான மனநிலையையும் மாற்ற வல்லவையாக இவை இருப்பதன் காரணம், இந்தச் சொற்கள் தேனில் மிதந்து கொண்டிருப்பவை. எடுத்துப் பரிமாறினால், இனிக்காமல் என்ன செய்யும்?

நன்றி :- அவினாசி



ஈகரை தமிழ் களஞ்சியம் வாழ்த்தும் பயனும் - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Aug 09, 2011 7:33 pm

‘நன்றி’, ‘மன்னிக்கவும்’, ‘தயவுடன் இந்த மூன்றாயும் இனி தவறாமல் சொல்கிறோம்..!
வாழ்த்தும் பயனும்..! சூப்பருங்க

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Aug 10, 2011 11:12 am

அருண் wrote: ‘நன்றி’, ‘மன்னிக்கவும்’, ‘தயவுடன் இந்த மூன்றாயும் இனி தவறாமல் சொல்கிறோம்..!
வாழ்த்தும் பயனும்..! சூப்பருங்க

மிக்க நன்றி அருண் ஐ நான் இப்போவே தொடங்கிட்டேன் ஜாலி ஜாலி நன்றி நன்றி நன்றி நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் வாழ்த்தும் பயனும் - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 22, 2012 1:56 pm

நன்றி...

மூன்றெழுத்துக்கள் சேர்ந்த வார்த்தை மட்டுமல்ல. இது மனித நேயத்தின் அளவுகோல். வாழ்க்கை என்பது தனித்திருப்பதல்ல. சார்ந்திருப்பது. ஒருவரை மட்டுமே சார்ந்திருப்பது அல்ல. ஒருவருக்கு ஒருவர் சார்ந்திருப்பது.

சார்ந்திருத்தலின்போதுதான் உதவிக்கரங்கள் தேவைப்படுகின்றன. செய்த உதவிக்குத் தரும் பரிசுதான் நன்றி என்ற இந்த ஒற்றைச்சொல். மனதை திறந்து காட்டும் உயர்ந்த சொல்.

நன்றியை சொற்களால் தான் சொல்ல வேண்டும் என்பது அல்ல. மனது நெகிழ்ந்த புன்னகைப் பூக்களால், கனிவு மிகுந்த கண்களால், ஈரம் நிறைந்த இதயத்தால், உள்ளத்தை உணர்த்தும் கைகளின் அரவணைப்பால், தழுவல்களால் இப்படி ஆயிரம் நன்றிகளைப் பேசாமலேயே சொல்ல முடியும்.

நன்றியைச் சொல்ல எல்லோருக்கும் வாய்ப்பு வருவதில்லை. வாய்ப்பு என்பதும் எப்போதும் வருதல்ல. எப்போதாவது வருவதுதானே வாய்ப்பு! அதனால் அதனை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் காலமெல்லாம் வருந்த வேண்டியிருக்கும்.

வசந்த கால வாழ்க்கையில் வசந்தம் தந்த இனிய தருணங்களைச் சுகமாக நினைத்துப் பார்த்து நன்றி சொல்லுவதே நல்ல வழிமுறைதான்.

உங்களைச் சுற்றிப் பாருங்கள். இயற்கையின் ஒவ்வொரு செயலும் நன்றியறிதலின் நல்ல வெளிப்பாடு என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.
வேர்களுக்கு நன்றி செலுத்தத்தானே பூக்களை பூமியின் பாதங்களின் மீது உதிர்த்து அர்ச்சனை செய்கின்றன.
தேனை உணவாகத் தந்த நன்றிக்குத் தானே பட்டாம்பூச்சிகள் பூக்களில் மகரந்தச் சேர்க்கையை நடத்துகின்றன.
வேர்களுக்குத் தண்ணீரைத் தந்ததற்குத்தானே தென்னை மரம் தன் தலையில் சுமந்து இளநீரைத் தருகின்றது.
பனை மரங்கள் தம் பங்குக்கு நுங்குகளைத் தருகின்றன.
உழவன் சிந்திய வியர்வைக்கு வெகுமதியாகத் தானே செடிகளும் கொடிகளும் காய்களையும் கனிகளையும் பரிசாகத் தருகின்றன.


இப்படி இயற்கையின் ஒவ்வொரு செயலிலும் நன்றியறிதலின் வாசம் நிறைந்திருக்கின்றதைப் பார்க்கையில் மனது நெகிழ்கின்றது.

மனிதம் நிறைந்தவர்கள் மனிதர்கள். மனிதர்கள் யாருக்கு நன்றி சொல்ல வேண்டும் என்பதற்கான ஒரு நிகழ்ச்சிக் கதை... நெகிழ்ச்சியான கதை -

ஒரு ஊருக்கு ஒரு ஞானி வந்திருந்தார். அந்த ஊரின் தொழிலதிபர் ஒருவர் அவரைச் சந்திப்பதற்காக வந்திருந்தார்.

அவரிடம் ஞானி, "சொல்லுங்கள். நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்? ஏதாவது பிரச்சினையா?'' என்று கேட்டார்.

"பிரச்சினையெல்லாம் ஒன்றுமில்லை. முன்பு நான் கஷ்டப்பட்டேன். இப்போது வாழ்வில் முன்னேறி மகிழ்ச்சியாக இருக்கிறேன். அதற்காக கடவுளுக்கு நன்றி சொல்ல ஆசைப்படுகிறேன். அதற்கு என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டார்.

அப்போது ஞானி சொன்னார். "நீங்கள் நன்றி சொல்ல வேண்டியது கடவுளுக்கு அல்ல. நீங்கள் இந்த அளவிற்கு உயர்ந்து மகிழ்ச்சியாக இருக்க உழைத்த அந்த உயர்ந்த உள்ளங்களுக்குத்தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும்'' என்றார்.

கேட்டவர் புரிந்து கொண்டார். நன்றி சொல்லிவிட்டு நகர்ந்து கொண்டார்.


நன்றியை எதற்காகச் சொல்லுகிறோம். உதவி செய்தவர்களை திருப்திப்படுத்துவதற்காக மட்டுமல்ல. தொடர்ந்து அவர்கள் உற்சாகமாய்ப் பணியாற்றக் கொடுக்கும் ஊக்க மருந்தாக இருக்கும் என்பதற்காகத்தான். அது மட்டுமல்ல.

நமக்கு உதவி செய்தவர்களின் பெயர்களை உள்ளத்தில் ஓயாமல் உச்சரித்துக் கொண்டு நாமும் நம்மை நாடி வருபவர்களுக்கு இன்முகத்துடனும், இனிமையுடனும் உதவி செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தைத் தூண்டுவதற்காகத்தான்.

நன்றியில் உள்ள 'ந' வெறும் எழுத்தல்ல. வெற்றியின் எழுத்து. வெற்றிக்கு மூன்று 'ந' வேண்டும் என்பார் தன்னம்பிக்கை எழுத்தாளர் காப்மேயர். அந்த மூன்று இவைதான். 1. நல்லெண்ணம், 2. நல்வாழ்த்துகள், 3. நன்றி. மகிழ்ச்சியான வாழ்க்கையை விரும்பும் யாவரும் உங்களுடைய பேச்சில் இந்த மூன்றும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

பேச்சு ஓர் அற்புதமானகலை. பிறரிடம் பேசும் போது அவர்கள் உற்சாகம் அடையும் படி பேசுங்கள். வாழ்த்தும்போது வெறும் வாழ்த்துகள் என்று சொல்வதைக் காட்டிலும் 'நல்வாழ்த்துக்கள்' என்று சொல்லிப் பாருங்கள். இன்னும் அதிகமான சந்தோஷச் சிறகுகள் முளைக்கும். உங்களின் இந்த இனிய நல்வாழ்த்தில் பிறர் நல்ல படியாக வாழ நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதை அவர்கள் உணர்வார்கள்.

'நல்லெண்ணத்தை' வெளிப்படுத்துங்கள். அது உங்கள் வாழ்க்கையில் வசந்தத்தை வரவழைக்கும். நன்றி சொல்லுங்கள். ஒவ்வொருவரும் பிறரால் பாராட்டப்படுவதை விரும்புகிறார்கள். நீங்கள் நன்றி சொல்லும்போது அவர்களின் உள்மனத் தேவையைப் பூர்த்தி செய்கிறீர்கள். உங்களுக்கும் அது நிரந்தரமான பலனைத் தரும்.

நன்றியுள்ள இருதயம், சிந்திக்கும் மனம், அன்பான புன்னகை, இனிமையான வார்த்தை, உதவும் உள்ளம் இவைஅனைத்தும் பெற்றவரே முழுமையான மனிதர்.

முழுமை பெற்ற இத்தகைய மனிதரைச் சந்திக்க உங்களுக்கும் ஆசையா? படித்த கதையொன்றில் நான் சந்தித்த அந்த நன்றியுள்ள மனிதரை, கல்வெட்டாய்ப் பதிந்தவரை உங்களுக்கும் காட்டுகிறேன் -

இரண்டு நண்பர்கள். பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். வெயிலும் எல்லையற்றுப் பரந்த மணலும் அவர்களின் பயணத்தைக் கடுமையாக்கின. கையில் வைத்திருந்த தண்ணீரையும், உணவையும் பகிர்ந்து சாப்பிட்டார்கள்.

இருவருள் ஒருவன் பணக்காரன். அவனுக்குத் தனது உணவை ஏன் மற்றவனோடு பகிர்ந்து சாப்பிட வேண்டும் என்று திடீரென்று தோன்றியது. அதனால் நண்பனுக்குத் தராமல் அதிக உணவை அவனே சாப்பிடத் தொடங்கினான். அதுபோல தண்ணீரையும் அவன் ஒருவனே குடித்து வந்தான். தன்னை ஏமாற்றுகிறான் என்று தெரிந்தபோதும் ஏழை நண்பன் கோபப்படவே இல்லை.

பாலைவனத்தில் ஓரிடத்தில் ஈச்சை மரம் இருந்தது. அதில் உதிர்ந்த பழங்களையெல்லாம் ஏழை ஓடிப்போய் சேகரித்தான். பணக்காரன் அவை யாவும் தனக்கே சொந்தமானவை என்று சொல்லிப் பறித்தான். "உன்னிடம்தான் தேவையான உணவு இருக்கிறதே. பிறகு ஏன் இதைப் பறிக்கிறாய்'' என்று கேட்டான் ஏழை.

"அப்படியானால் நான் உணவை வைத்துக் கொண்டு உன்னை ஏமாற்றுகிறேன் என்று குற்றம் சொல்கிறாயா?'' என்று சண்டையிட்டு அவனது முகத்தில் ஓங்கி ஒரு அடி அடித்தான் பணக்காரன். அந்த நிமிடமே இருவரும் பிரிந்து தனித்தனியே நடக்கத் தொடங்கினார்கள்.

அப்போது அந்த ஏழை நண்பன் வலியும் அவமானமும் கொண்டவனாக பாலைவனத்தில் மணலில் "இன்று என் நண்பன் என்னை அடித்துவிட்டான்'' என்று பெரிதாக எழுதி வைத்துவிட்டு நடக்கத் துவங்கினான்.

சில நாட்கள் இருவரும் தனித்தனியாக நடந்து தண்ணீர் கிடைக்காமல் அலைந்து திரிந்தார்கள். அப்போது ஓரிடத்தில் கொஞ்சம் தண்ணீர் கசிவதைக் கண்டு பணக்காரன் ஓடிச் சென்று தண்ணீர் குடிக்க முயன்றான். திடீரென நண்பனின் நினைவு வந்தது. இவ்வளவு காலம் பழகிய நண்பனை ஒரு கஷ்டம் என்று வந்ததும் ஏமாற்றி விட்டோமே என்று தோன்றியதும் நண்பனின் பெயரைச் சொல்லி சத்தமிட்டு அழைத்தான்.

அந்தக் குரல் கேட்டு ஓடோடி வந்தான் ஏழை நண்பன். அங்கே தண்ணீர் இருந்ததைக் கண்டு ஆச்சரியம் அடைந்தான். பணக்காரன், "இதில் உள்ள தண்ணீரை ஒருவர் மட்டுமே குடிக்க முடியும். நீயே குடித்துக் கொள்'' என்றான்.

உடனே ஏழை தாகம் மிகுதியால் அந்தத் தண்ணீரை முழுவதும் குடித்து விட்டு நண்பனை அணைத்துக் கொண்டு நன்றி தெரிவித்தான். பின் இருவரும் ஒன்றாக நடக்கத் தொடங்கினார்கள். ஏழை, அங்கிருந்த ஒரு கல்லில் நண்பன் "இன்று நண்பன் மறக்க முடியாத ஓர் உதவி செய்தான்'' என்று எழுதி வைத்தான்.

இந்த இரண்டையும் வானிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த தேவதை அவர்கள் முன் தோன்றினாள். ஏழையிடம் "அவன் உன்னை அடித்தபோது அதை மணலில் எழுதி வைத்தாய். உதவி செய்த போதோ அதைக் கல்லில் எழுதி வைக்கிறாய். அது ஏன்?'' என்று கேட்டது.

"நடந்த தவறுகள் காற்றோடு போகக் கூடியவை. அதனால் அதை மணலில் எழுதி வைத்தேன். ஆனால் செய்த நன்றியை என்றும் மறக்கக்கூடாது. ஆகவே அதைக் கல்லில் எழுதி வைத்தேன்'' என்றான் ஏழை.


வாழ்வில் தேடித்தேடி நாம் சேகரித்து வைக்க வேண்டியது பணத்தையல்ல. நன்றி மறவாத அதுவும் செய்ந்நன்றி மறவாத நல்ல மனதை உடைய மனிதர்களைத்தான். அத்தகையவர்களுக்கு கல்வெட்டாய் உங்கள் இதயத்தில் நன்றியினை பதிவு செய்யுங்கள். நன்றி என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல, நமக்காக குடைபிடித்து நிழல் தரும் மரங்களுக்கும், நீர் தரும் ஓடைகளுக்கும், சுவாசம் தரும் தென்றலுக்கும் கூட நன்றி சொல்லிப்பாருங்கள். அதிகமாகப் பூக்கும். நீர் சுரக்கும். இன்னும் சுகமாக தென்றல் வீசும்.

நன்றி வலிமை மிக்கது. வார்த்தைகளால் சொல்லப்படும் நன்றியைக் காட்டிலும் மேன்மையானது செய்கையால் உணர்த்தப்படும் நன்றிதான். நன்றி உதடுகளில் இருந்து உதிர்க்கின்ற சொற்களில் இல்லை. உள்ளத்திலிருந்து ஊற்றெடுக்கின்ற உணர்வாக இருக்கட்டும்.

நல்ல சிந்தனைகளால் வாழ்க்கைப் பயணம் சிறக்க வேண்டும் என்பதற்காகப் பொறுமையுடன் இந்தத் தொடரைப் படித்துக் கொண்டிருக்கின்ற, படிக்கப் போகின்ற உங்களுக்கு எனது நன்றி! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

பேராசிரியர்.க.ராமச்சந்திரன்

நன்றி:- உளறுவாயன் ப்ளாக்ஸ்பாட்



ஈகரை தமிழ் களஞ்சியம் வாழ்த்தும் பயனும் - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக