புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கை வாழ் தமிழர் வரலாறு - Page 2 Poll_c10இலங்கை வாழ் தமிழர் வரலாறு - Page 2 Poll_m10இலங்கை வாழ் தமிழர் வரலாறு - Page 2 Poll_c10 
40 Posts - 63%
heezulia
இலங்கை வாழ் தமிழர் வரலாறு - Page 2 Poll_c10இலங்கை வாழ் தமிழர் வரலாறு - Page 2 Poll_m10இலங்கை வாழ் தமிழர் வரலாறு - Page 2 Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
இலங்கை வாழ் தமிழர் வரலாறு - Page 2 Poll_c10இலங்கை வாழ் தமிழர் வரலாறு - Page 2 Poll_m10இலங்கை வாழ் தமிழர் வரலாறு - Page 2 Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
இலங்கை வாழ் தமிழர் வரலாறு - Page 2 Poll_c10இலங்கை வாழ் தமிழர் வரலாறு - Page 2 Poll_m10இலங்கை வாழ் தமிழர் வரலாறு - Page 2 Poll_c10 
2 Posts - 3%
viyasan
இலங்கை வாழ் தமிழர் வரலாறு - Page 2 Poll_c10இலங்கை வாழ் தமிழர் வரலாறு - Page 2 Poll_m10இலங்கை வாழ் தமிழர் வரலாறு - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கை வாழ் தமிழர் வரலாறு - Page 2 Poll_c10இலங்கை வாழ் தமிழர் வரலாறு - Page 2 Poll_m10இலங்கை வாழ் தமிழர் வரலாறு - Page 2 Poll_c10 
232 Posts - 42%
heezulia
இலங்கை வாழ் தமிழர் வரலாறு - Page 2 Poll_c10இலங்கை வாழ் தமிழர் வரலாறு - Page 2 Poll_m10இலங்கை வாழ் தமிழர் வரலாறு - Page 2 Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
இலங்கை வாழ் தமிழர் வரலாறு - Page 2 Poll_c10இலங்கை வாழ் தமிழர் வரலாறு - Page 2 Poll_m10இலங்கை வாழ் தமிழர் வரலாறு - Page 2 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
இலங்கை வாழ் தமிழர் வரலாறு - Page 2 Poll_c10இலங்கை வாழ் தமிழர் வரலாறு - Page 2 Poll_m10இலங்கை வாழ் தமிழர் வரலாறு - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
இலங்கை வாழ் தமிழர் வரலாறு - Page 2 Poll_c10இலங்கை வாழ் தமிழர் வரலாறு - Page 2 Poll_m10இலங்கை வாழ் தமிழர் வரலாறு - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
இலங்கை வாழ் தமிழர் வரலாறு - Page 2 Poll_c10இலங்கை வாழ் தமிழர் வரலாறு - Page 2 Poll_m10இலங்கை வாழ் தமிழர் வரலாறு - Page 2 Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
இலங்கை வாழ் தமிழர் வரலாறு - Page 2 Poll_c10இலங்கை வாழ் தமிழர் வரலாறு - Page 2 Poll_m10இலங்கை வாழ் தமிழர் வரலாறு - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இலங்கை வாழ் தமிழர் வரலாறு - Page 2 Poll_c10இலங்கை வாழ் தமிழர் வரலாறு - Page 2 Poll_m10இலங்கை வாழ் தமிழர் வரலாறு - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இலங்கை வாழ் தமிழர் வரலாறு - Page 2 Poll_c10இலங்கை வாழ் தமிழர் வரலாறு - Page 2 Poll_m10இலங்கை வாழ் தமிழர் வரலாறு - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
இலங்கை வாழ் தமிழர் வரலாறு - Page 2 Poll_c10இலங்கை வாழ் தமிழர் வரலாறு - Page 2 Poll_m10இலங்கை வாழ் தமிழர் வரலாறு - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை வாழ் தமிழர் வரலாறு


   
   

Page 2 of 2 Previous  1, 2

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Tue Jul 21, 2009 10:40 pm

First topic message reminder :

ஒவ்வொரு தமிழனும் கட்டாயம் வாசிக்கவும், ஏன்னெனில் மற்றார் கேள்விகளுகு விடையளிக்க நாம் ஓரள்வாவது தெரிந்திருக்க வேண்டும்.

இலங்கை வாழ் தமிழர் வரலாறு : பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை


முன்னுரை

ஈழநாட்டின்
வடபாகத்திலிருந்து செங்கோலோச்சிய அரசரின் வரலாற்றைச் சுருக்கமாக எடுத்துக்
கூறுகின்றது இந்நூல். கி. பி. 1519 முதல் கி. பி. 1565 வரை யாழ்ப்பாணத்தை
அரசாண்ட சங்கிலி என்பவனைத் தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்ட சங்கிலி என்னும்
நாடக நூலின் ஒரு பகுதியாக அமைந்த இவ்வரலாறு பலர் வேண்டுகோளுக்கிணங்கத்
தனிநூலாக வெளியிடப்படுகின்றது. ஈழத்துத் தமிழ் மக்களின் வரலாற்றைப் பற்றிய
விரிவான நூல் ஒன்று மிகவும் விரைவில் வெளிவரும்.


இந்நூலை
ஆக்குங்கால் உடனிருந்துதவிய நண்பர்க்கும் ஆயோலை தூக்கி ஆராய்ந்த
அன்பர்க்கும் நாம் பெரிதும் கடமைப்பட்டுள்ளோம். நூலினை நல்ல முறையில்
அச்சிட்டுதவிய சுதந்திரன் அச்சகத்தார்க்கும் எம்நன்றி உரித்து. குற்றம்
களைந்து குணங்கொண்டு எம்மை ஊக்குவித்தல் பெரியோர் கடன்.

க. கணபதிப்பிள்ளை
பல்கலைக்கழகம்
பேராதனை
20-8-1956





சரித்திரகாலத்துக்கு முந்திய யாழ்ப்பாணம்

இராமாயணத்தினின்று
இலங்கை இராவணனால் ஆளப்பட்டுவந்தநாடு என அறிகின்றோம். இராவணன்
அசுரவமிசத்தைச் சேர்ந்தவன். ஆரியர் இந்தியாவுக்கு வந்த போது தாசர் என்னுஞ்
சாதியாரோடு போராடினர் என இருக்குவேதம் முதலியவற்றால் அறிகின்றோம்.
அக்காலத்தில் இந்தியாவில் வாழ்ந்த நாகசாதியினரையே ஆரியர், ‘அசுரர்’
என்றும் ‘தாசர்’ என்றும் அழைத்தனர் என்பது அறிஞர் கருத்து. நாகர் என்னும்
பெயர் வேதங்களில் வழங்கப்படவில்லை. எனினும், இருக்குவேதத்தில் அசுரர்
அல்லது தாசரைப்பற்றிப் பேசுமிடத்து, ‘அஹி’ (பாம்பு) என்ற சொல் வருகின்றது.


“விருத்திரனை இந்திரன் வச்சிராயுதத்தினால் அடித்தபோது, வெட்டி வீழ்த்தப்பட்ட மரம் போல் அஹி என்பான் வீழ்ந்து கிடந்தான்”

இதினின்றும். பிறசான்றுகளினின்றும், நாகரை அசுரரென அழைத்தல் வழக்கமாய் இருந்ததெனத் தெரிகின்றது.

அடுத்து,
புராண காலத்தில் நாக அரசர்கள் கடலுக்குக் கீழேயுள்ள பாதாளத்திலிருந்து
அரசாண்டனர் எனப் புராணங்கள் கூறும். இக்குவாகுவின் மகனான அரியாசவன்
என்பான் மகள் யாதுவை, தூயவர்மன் எனும் நாக அரசன் கடலுக்குக் கீழேயுள்ள
நாட்டிற்குக் கொண்டு சென்றான் எனவும், அந்நாட்டின் பெயர் ‘இரதினத்துவீபம்’
எனவும், அந்நாட்டிலுள்ளோர் நாவாய் பல வைத்திருந்தனர் எனவும், அவர் கடல்
வணிகஞ் செய்தனர் எனவும், முத்துக் குளித்தனர் எனவும் அரிவமிசம் என்னும்
புராண நூல் நவிலும்


அசுரர் என்பார் திராவிடரென ஆராய்ச்சியாளர் முடிபுக்கு வந்திருக்கின்றனர்.

கௌதம புத்தர் மூன்று முறை இலங்கைக்கு வந்ததாக மகாவமிசம் கூறும். முதன்முறை மகியங்கனை என்னும் இடத்திற்கும், இரண்டாம் முறை நாகதீபத்துக்கும், மூன்றாம் முறை கலியாணி என்ற பெயருடைய களனி என்னும் இடத்துக்கும் வந்தார் எனவும், நாகதீபத்திலும் கலியாணியிலும் நாகர்வசித்தனர் எனவும், நாகதீபத்திலுள்ள அரசகுடும்பத்தில் அரசுகட்டில் ஒன்றன் பொருட்டாக ஏற்பட்ட குழப்பத்தைத் தீர்ப்பதற்காக வந்தார் எனவும் அந்நூல் நவிலும். மேலும் நாகதீபத்தில் உள்ள அரச குடும்பத்தின் உறவினர் கலியாணியில் இருந்தனரெனவும் அப்பாளி நூல் கூறும்.



ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Tue Jul 21, 2009 11:37 pm

சங்கிலிக்குப் பின் புவிராசபண்டார மென்பான். பரராசசேகரன் என்னும் பட்டப்பெயரோடு அரசுகட்டிலேறினான். அவனைப் போர்த்துக்கேயர் போரிலே கொன்று பெரியபிள்ளை என்பானை அரசுகட்டிலேற்றினர். அவன் பரராசசேகரன் என்னும் பெயருடன் கி. பி;. 1570ம் ஆண்டிலே போர்த்துக்கேயர் உதவியுடன் அரசு கட்டிலேறினானாயினும் அவனுக்குப் அவர்மேல் அடங்கிக் கிடந்த வெறுப்புணர்;ச்சி சிலவாண்டில் கொழுந்து விட்டெரியத் தொடங்கியது. தஞ்சை மன்னனான அச்சுதப்பநாயக்கன் உதவியுடன் மன்னாரில் நிலைத்திருந்த போர்த்துக்கேயருக்கு எதிராகப் போர் தொடங்கினான். இப்போரில் இவன் வென்றதகாத் தெரியவில்லை.

இவனுக்குப்பின் புவிராசபண்டாரமென்பான் பரராசசேகரன் என்னும் பட்டப் பெயருடன் கி. பி. 1582ல் அரசனானான். இவனும் தன் முன்னோர் போலப் போர்த்துக்கேயரை எதிர்த்தான். மன்னாரை அவர் கையினின்றும் விடுவிக்க இருமுறை முயற்சித்துப் போர் நடத்தினான். இரண்டாம் முறையாக கி. பி. 1519ம் ஆண்டு மன்னாரைத் தாக்கியபோது போர்த்துக்கேயர் இவன் தாக்குதலைப் பொறுக்க முடியாது அந்திரே போர்த்தாடோ த மென்டோன்கா என்னும் தளபதியை யாழ்ப்பாணத்திற்குப் படையெடுத்துச் செல்லுமாறு கட்டளையிட்டனர். நடந்த போரில் பரராசசேகரன் இறந்துபட்டான். அப்பொழுது போர்த்துக்கேயர் பெரியபிள்ளை செகராசசேகரனின் மகனாம் எதிர்மன்னசிங்கனை அரசனாக்கினார். இவன் பரராசசேகரன் என்னும் பட்டப்பெயருடன் (கி. பி. 1519 - 1615) ஆட்சி செலுத்தினான்.

இவ்வரசன் போர்த்துக்கேயர் கைப்பொம்மையாக விளங்கினமை கண்டும். யாழ்ப்பாண அரசியல் அலுவல்களில் அவர் பெரும் பங்கெடுக்க விட்டமை கண்டும், மனம் பொறாத தமிழ்த்தலைவர்களான முதலிமாரும் தலைமைக் காரரும் மேற்படி நிலைமையை மாற்ற வழிவகை தேடினர். இந் நோக்கத்தைக் கொண்டு சோனகர், வடுகர், மறவர் ஆகியோர் உட்பட ஒரு சேனையைத் திரட்டிக்கெர்ணடு. தஞ்சைமன்னனாகிய அச்சுதப்பநாயக்கன் கண்டி மன்னனாகிய விமலதர்மசூரியன் ஆகியோரின் படையுதவியை நாடி நின்றனர். இத்திட்டங்களை ஏதோ ஒரு வகையாக அறிந்த எதிர்மன்னசிங்கன் மன்னாரிலுள்ள போர்த்துக்கேயத் தலைவனுக்கு அறிவித்தான். தஞ்சைநாயக்கன் கடற்படை மன்னாருக் கணித்தாய் வருகையில் போர்த்துக்கேயர் அதனை முறியடித்தனர். இதனோடு கலகம் அடங்கி எதிர்மன்னசிங்கன் கி. பி. 1615ல் இறக்கும்வரை அமைதி நிலவிற்று. அவன் இறக்குந் தறுவாயில் இருக்கும்போது மூன்று வயதுள்ள தன்மகனை அரசனாக்கி அவனுக்கு வயதுவரும்வரையும் தன் தம்பியாம் அரசகேசரி பண்டாரத்தை அரசபாதுகாவலனாய் நியமித்தான்.


ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Tue Jul 21, 2009 11:40 pm

எதிர்மன்ன சிங்கன் இறந்தபின்பு அரச குடும்பத்தினருள் ஒருவனான சங்கிலிகுமாரன் என்பான் அரசகேசரி பண்டாரத்தைக் கொன்று தானே அரசபாதுகாவலனானான். இச் செயலைக் குறித்துப் போர்த்துக்கேயர் எதிர்;ப்புக் கிளம்பிய பொழுது, அவருக்கு வேண்டிய திறையைக் கொடுத்து நாட்டை ஆள்வதாக வாக்குறுதி செய்தான். ஆனால் சிறிது காலத்தின் பின்னர் கண்டிக்குச் செல்லும் வடுகப்படையைத் தன் இராச்சியத்துக் கூடாகப் போக விடுத்ததாலும் தன் எண்ணப்படியே தன் மருமகனைத் தனக்குப்பின் அரசாள நியமித்ததாலும் போர்த்துக்கேயருக்கு முறைப்படி திறையைச் செலுத்தாததாலும், முன்கொடுத்த வாக்குறுதியைக் காற்றில் விட்டானெனத் தெரிகிறது. இதை யறிந்த போர்த்துக்கேயர் அவனை நெருக்கினர். அதனால், சிலகாலம் ஊராத்துறையில் ஒளித்திருந்தான். நெருக்கடியான இந்நிலையைக் கண்டு அவன் தேவியர் தஞ்சைப் பெருமன்னன் இரகுநாதநாயக்கனிடம் சென்று முறையிட்டனர். கேம்நாயக்கன் என்பான் தலைமையில் இரகுநாத நாயக்கன் அனுப்பிய தஞ்சைப் படையின் உதவிகொண்டு திரும்பவும் அரசைக் கைப்பற்றினான். இரகுநாதநாயக்கனே யாழ்ப்பாணம் வந்து போரிற் பங்கெடுத்துக் கொண்டதாகவும் கருதப்படுகின்றது. ஆனால் போர்த்துக்கேயர் வரலாற்று நூல்கள் இரகுநாதன் வருகை பற்றி எதுவுங் கூறிற்றில.

இன்னும் சங்கிலியின் அரச பரிபாலனத்தில் தமிழ் மக்கள் திருத்தியடைய வில்லை. அதனோடு தஞ்சை நாயக்கனின் உதவிப் பலத்தினால் போர்த்துக்கேயரை மதியாமலும் நடந்தான். போர்த்துக்கேயருக்கு மாறாகக் கண்டியரசனுக்கு உதவியளித்தான். அதனோடு போர்த்துக்கேயருக் கெதிராய் ஒல்லாந்தருடன் தொடர்பு கொள்ளத் தொடங்கினான். இதனால் சங்கிலி மீது சீற்றமும் ஆத்திரமும் கொண்ட போர்த்துக்கேயர் அவனை ஒழித்துக் கட்டப் பிலிப்பு த ஒலிவீரா என்னும் தலைவனின் கீழ் கி. பி. 1619ல் பெரும் படையொன்றை அனுப்பினர். சங்கிலியும் படை திரட்டினான். இரு படைகளும் பெரும்போர் நிகழ்;த்தின. எனினும் சங்கிலியின் படை தோற்கடிக்கப்பட்டது. சங்கிலி பிடிபட்டான். போர்த்துக்கேயர் சங்கிலியைக் கோவாவுக்கு அனுப்பினர். யாழ்ப்பாணத் தமிழரசு ஒலிவீராவின் கையிற் சிக்கியது. இதனோடு தமிழரசர் பரம்பரையும் முடிந்தது.

விடுதலைப் போராட்டம்

அரசபரம்பரை ஒழிந்தது. தன்மானம் என்னும் பெரிய தனத்தை இழந்து விட்டோமே யென்னும் மனப்பாரம் யாழ்ப்பாணத்து மகன் ஒவ்வொருவனது இதயத்தையும் அமுக்கியது. மதித்தற்கரிய மாணிக்கமாகிய சுதந்திரச் செல்வத்தை இழந்து விட்டோமே என்ற கவலை மக்களை வாட்டியது. விடுதலை வேட்கை பொங்கி யெழுந்தது. நாடு தொலைந்து பிறன் கைப்பட்ட ஈராண்டுக் கிடையில் ஆறுமுறை புரட்சி வெள்ளம் கான்யாறு போல் கரைபுரண்டோடியது. இதனைப் போர்த்துக்கேய வரலாற்றாசிரியரே கூறிப் போவார்.

முதல் முறை ‘கரையார்’ தலைவன் போர்த்துக்கேயருக் கெதிராய் படையோடெழும்பினான். நல்லூருக் கருகாமையில் நடந்த போர் ஒன்றில் ஒலிவீரா இவனை முறியடித்தான்.

அடுத்து, அரசகுமாரன் ஒருவனை யாழ்ப்பாணத்தரசனாக்க விரும்பி, சின்னமிக்கேல்பிள்ளை என்பவன் தஞ்சைக்குச் சென்ற ஆயிரம் போர்வீரரைப் பன்னிரண்டு தோணிகளில் ஏற்றி வந்து தலைமன்னாரை அடைந்து. அங்கிருந்து போர்த்துக்கேயரை எதிர்த்தான். ஒலிவீரா இம்முயற்சியையும் தோற்கடித்தான். பின்னர் முதலியார் ஒருவர் நடத்திய விடுதலைப் போரும் தோல்வியடைந்தது. சின்ன மிக்கேல்பிள்ளை தஞ்சை நாயக்கரிடம் திரும்பவுஞ் சென்று யாழ்ப்பாண அரசிற்குத் தன்னை அரசனாக்கும்படி வேண்டினான். தஞ்சைப் பேரரசின் கீழ் யாழ்ப்பாணத்தைக் கொண்டுவர ஆண்டு 1620 கார்த்திகைத் திங்கள் முயற்சிகள் தொடங்கின. யாழ்ப்பாணத்தையும் அடுத்துள்ள பகுதிகளையும் கைப்பற்றுவதற்குத் தஞ்;சைப்பெரும் படையொன்று வருவதாக ஒரு செய்தி நல்லூரிலிருந்த ஓலிவீராவின்
காதுக்கெட்டியது. அந்தோனியோ த மோத்தாகல்வா ஒ என்பவன் கீழ்
போர்த்துக்கேயப்படையொன்று பருத்தித்துறையில் தஞ்சை நாயக்கரின் படையைக் காத்;திருந்தது. நாயக்கரன் படை வந்ததும் பெரும் போர் நிகழ்ந்தது. மீண்டும் போர்த்துக்கேயர் கையால் தமிழர் சேனை முறியடிக்கப்பட்டது. இதுவே இலங்கைத் தமிழரின் கடைசி விடுதலைப் போராட்டம்;.

இதுகாறும் ஒருவாறு யாழ்ப்பாணத் தமிழரின் வரலாற்றைக் கூறினோம். இன்னும் திருக்கோணமலை மட்டக்களப்பு, வன்னி, மலைநாடு, முதலிய இடங்களில் வாழுந் தமிழர் வரலாற்றையும் இவ்வாறு ஆராய்ந்து வருகின்றோம். இவை யாவற்றையும் இறுதியில் ஒருங்குசேர்த்து இலங்கைத் தமிழர் வரலாறு என்னும் பெருநூலாக வெளியிடுதல் எனது நோக்கம். இந்நன்நோக்கத்துக்குச் சான்றுகள் தந்து உதவிபுரியும் அன்பர் தமக்கு ஆசிரியர் என்றும் கடப்பாடுள்ளவராய் இருப்பார்.

வாழ்க நற்றமிழ்....வாழ்க நற்றமிழ்....வாழ்க நற்றமிழ்....


ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Jul 22, 2009 2:26 am

எல்லோருக்கும் தேவையான கருத்து நண்பா நன்றி

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக