புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஒரு நாள் கழிந்தது - புதுமைப்பித்தன் I_vote_lcap ஒரு நாள் கழிந்தது - புதுமைப்பித்தன் I_voting_bar ஒரு நாள் கழிந்தது - புதுமைப்பித்தன் I_vote_rcap 
61 Posts - 80%
heezulia
 ஒரு நாள் கழிந்தது - புதுமைப்பித்தன் I_vote_lcap ஒரு நாள் கழிந்தது - புதுமைப்பித்தன் I_voting_bar ஒரு நாள் கழிந்தது - புதுமைப்பித்தன் I_vote_rcap 
10 Posts - 13%
E KUMARAN
 ஒரு நாள் கழிந்தது - புதுமைப்பித்தன் I_vote_lcap ஒரு நாள் கழிந்தது - புதுமைப்பித்தன் I_voting_bar ஒரு நாள் கழிந்தது - புதுமைப்பித்தன் I_vote_rcap 
4 Posts - 5%
mohamed nizamudeen
 ஒரு நாள் கழிந்தது - புதுமைப்பித்தன் I_vote_lcap ஒரு நாள் கழிந்தது - புதுமைப்பித்தன் I_voting_bar ஒரு நாள் கழிந்தது - புதுமைப்பித்தன் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஒரு நாள் கழிந்தது - புதுமைப்பித்தன் I_vote_lcap ஒரு நாள் கழிந்தது - புதுமைப்பித்தன் I_voting_bar ஒரு நாள் கழிந்தது - புதுமைப்பித்தன் I_vote_rcap 
397 Posts - 79%
heezulia
 ஒரு நாள் கழிந்தது - புதுமைப்பித்தன் I_vote_lcap ஒரு நாள் கழிந்தது - புதுமைப்பித்தன் I_voting_bar ஒரு நாள் கழிந்தது - புதுமைப்பித்தன் I_vote_rcap 
56 Posts - 11%
mohamed nizamudeen
 ஒரு நாள் கழிந்தது - புதுமைப்பித்தன் I_vote_lcap ஒரு நாள் கழிந்தது - புதுமைப்பித்தன் I_voting_bar ஒரு நாள் கழிந்தது - புதுமைப்பித்தன் I_vote_rcap 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
 ஒரு நாள் கழிந்தது - புதுமைப்பித்தன் I_vote_lcap ஒரு நாள் கழிந்தது - புதுமைப்பித்தன் I_voting_bar ஒரு நாள் கழிந்தது - புதுமைப்பித்தன் I_vote_rcap 
8 Posts - 2%
E KUMARAN
 ஒரு நாள் கழிந்தது - புதுமைப்பித்தன் I_vote_lcap ஒரு நாள் கழிந்தது - புதுமைப்பித்தன் I_voting_bar ஒரு நாள் கழிந்தது - புதுமைப்பித்தன் I_vote_rcap 
8 Posts - 2%
prajai
 ஒரு நாள் கழிந்தது - புதுமைப்பித்தன் I_vote_lcap ஒரு நாள் கழிந்தது - புதுமைப்பித்தன் I_voting_bar ஒரு நாள் கழிந்தது - புதுமைப்பித்தன் I_vote_rcap 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 ஒரு நாள் கழிந்தது - புதுமைப்பித்தன் I_vote_lcap ஒரு நாள் கழிந்தது - புதுமைப்பித்தன் I_voting_bar ஒரு நாள் கழிந்தது - புதுமைப்பித்தன் I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
 ஒரு நாள் கழிந்தது - புதுமைப்பித்தன் I_vote_lcap ஒரு நாள் கழிந்தது - புதுமைப்பித்தன் I_voting_bar ஒரு நாள் கழிந்தது - புதுமைப்பித்தன் I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
 ஒரு நாள் கழிந்தது - புதுமைப்பித்தன் I_vote_lcap ஒரு நாள் கழிந்தது - புதுமைப்பித்தன் I_voting_bar ஒரு நாள் கழிந்தது - புதுமைப்பித்தன் I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
 ஒரு நாள் கழிந்தது - புதுமைப்பித்தன் I_vote_lcap ஒரு நாள் கழிந்தது - புதுமைப்பித்தன் I_voting_bar ஒரு நாள் கழிந்தது - புதுமைப்பித்தன் I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு நாள் கழிந்தது - புதுமைப்பித்தன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 04, 2010 11:01 pm

'கமலம்! அந்தக் கூஜாவிலே தண்ணீர் எடுத்தா! வெற்றிலைச் செல்லம் எங்கே ? வச்சது வச்ச இடத்தில் இருந்தால்தானே ?” என்று முணமுணத்தார் முருகதாசர்.

கையில் இருக்கும் கோரைப் பாயை விரிப்பதே ஒரு ஜால வித்தை. நெடுநாள் உண்மையாக உழைத்தும் பென்ஷன் கொடுக்கப் படாததால் அது நடு மத்தியில் இரண்டாகக் கிழிந்து, ஒரு கோடியில் மட்டிலும் ஒட்டிக் கொண்டிருந்தது. அதை விரிப்பது என்றால் முதலில் உதறித் தரையில் போட்டுவிட்டு, கிழிந்து கிடக்கும் இரண்டு துண்டுகளையும் சேர்த்துப் பொருந்த வைக்க வேண்டும். அதுதான் பூர்வாங்க வேலை. பின்பு, விடுதலை பெற முயற்சிக்கும் அதன் கோரைக் கீற்றுகள் முதுகில் குத்தாமல் இருக்க ஒரு துண்டையோ அல்லது மனைவியின் புடவையையோ அல்லது குழந்தையின் பாவாடையையோ எதையாவது எடுத்து மேலே விரிக்க வேண்டும்.

முருகதாசரைப் பொறுத்தவரை - அது அவரது புனை பெயர் - அது இரண்டு பேர் செய்யவேண்டிய காரியம்.

மறுபடியும், “கமலா!” என்று கூப்பிட்டார்.

சமையல் + உக்ராண + ஸ்நான அறை மூன்று நான்கு கட்டுகள் தாண்டி, துண்டாக, அலாதியாக இருப்பதால் இவருடைய பாய் விரிப்புக் கஷ்டங்கள் அந்த அம்மையாருக்கு எட்டவில்லை.

சென்னையில் ‘ஒட்டுக் குடித்தனம்’ என்பது ஒரு ரசமான விஷயம். வீட்டுச் சொந்தக்காரன், குடியிருக்க வருகிறவர்கள் எல்லாரும் ‘திருக்கழுக்குன்றத்துக் கழுகு’ என்று நினைத்துக்கொள்ளுவானோ என்னமோ!

‘குடித்தனக்காரர் குடியிருக்க இரண்டு ரூம் காலி’ என்று வெளியில் போட்டிருந்த போர்டை நம்பித்தான் முருகதாசர் வீடு-வேட்டையின் போது அங்கே நுழைந்தார்.

உள்ளே வீட்டின் பாக வசதிதான் விசித்திரமாக இருந்தது. முன்பக்கம், ஒற்றைச் சன்னல் படைத்த ஒரு சிற்றறை. அதற்கப்புறம் எங்கோ பல கட்டுகள் தாண்டி மற்றொரு அறை. அதுதான் சமையல் வகையராவுக்கு. முதல் அறை படிக்க, படுக்க, நாலு பேர் வந்தால் பேச - இவை எல்லாவற்றிற்கும் பொது இடம். முதலில், முருகதாசர் பொருளாதாரச் சலுகையை உத்தேசித்தே அதில் குடியிருக்கலாம் என்று துணிந்தார். அதனால், தமக்கும் தம் சகதர்மிணிக்கும் இப்படி நிரந்தரமான ‘பிளவு’ இருக்கும் என்று சிறிதும் எட்டி யோசிக்கவில்லை; மேலும் அவர் யோசிக்கக் கூடியவரும் அல்லர்.

பக்கத்தில் இருந்த அரிக்கன் விளக்கை எடுத்துக்கொண்டு அவர் சமையல் பகுதியை நோக்கிப் பிரயாணமானார்.

இடைவழியில், குழாயடியில் உள்ள வழுக்குப் பிரதேசம், அடுத்த பகுதிக்காரர் விறகுக் கொட்டில் முதலிய விபத்துக்கள் உள்ள ‘பிராட்வே’யை எல்லாம் பொருட்படுத்தாது, ஒருவாறு வந்து சேர்ந் தார். சமையல் அறை வாசலில் ஒரே புகைமயம். “கமலம்!” என்று கம்மிய குரலில் கூப்பிட்டுக்கொண்டு உள்ளே நுழைந்தார்.

உள்ளே புகைத் திரைக்கு அப்பாலிருந்து, “வீடோ லட்சணமோ! விறகைத்தான் பாத்துப் பாத்து வாங்கிக்கொண்டு வந்தியளே! ஒங்களுக்கிண்ணு தண்ணீலே முக்கிக் குடுத்தானா ? எரியவே மாட்டு தில்லை ? இங்கே என்ன இப்பொ ? விறகு வாங்கின சீரைப் பாத்து மகிழ வந்திட்டியளாக்கும்!” என்று வரவேற்புப் பத்திரம் வாசிக்கப் பட்டது.

“தீப்பெட்டியை இப்படி எடு! அதுக்காகத்தான் வந்தேன்!” என்று நடைப் பக்கமாகப் பின்நோக்கி நடந்தார்.

“இங்கே குச்சியுமில்லை, கிச்சியுமில்லை! அலமுவெ தீப்பெட்டி வாங்க அனுப்பிச்சேன். மண்ணெண்ணெய் விளக்கே நீங்கதான் துடைச்சுக்கொள்ளணும்!” என்றாள் கமலம்.

“குழந்தையை அந்தியிலே வெளியிலே அனுப்பிச்சையே, நான் வந்த பிறகு வாங்கிக்கொள்ளப் படாதா ?” என்று அதட்டினார் முருகதாசர்.

“ஆமாம், சொல்ல மறந்தே போயிட்டுதே. . . செட்டியார் வந்து விட்டுப் போனார்; நாளை *விடியன்னை வருவாராம்!” என்றாள் கமலா.

முருகதாசர் இந்தப் பாசுபதாஸ்திரத்தை எதிர்பார்க்கவில்லை.

“வந்தா, வெறுங்கையை வீசிக்கிட்டுப் போகவேண்டியதுதான்! வர்ரதுக்கு நேரம் காலம் இல்லை ?” என்று முணுமுணுத்துக்கொண்டே வெளியேற முயற்சித்தார்.

“அங்கே, எங்கே போயிட்டி, ஒங்களைத்தானே! கொஞ்சம் நல்லெண்ணை வாங்கிகிட்டு வாருங்களேன்!”

“எங்கிட்ட இப்பொ துட்டுமில்லெ, காசுமில்லை!” என்று திரும்பி நின்று பதிலளித்தார் முருகதாசர்.

“அதுவும் அப்படியா! இன்னா இந்த *மிளவொட்டியிலே **மூணு துட்டு இருக்கு; அதெ எடுத்துகிட்டுப் போங்க!”

“வந்ததுக்கு ஒரு வேலையா ? அங்கே ஒரு பாடு எழுதித் தொலைக் கணும்; இங்கே உனக்கு இப்பத்தான் எண்ணெ புண்ணாக்கு - பகலெல்லாம் என்ன செய்துகிட்டு இருந்தே ? இருட்னம் பொறவா எண்ணை வாங்’றது! எல்லாம் நாளைக்குப் பாத்துக்கலாம்!”

“சோம்பல் வந்தா சாத்திரமும் வரும், எல்லாம் வரும். ஏன் அண்ணைக்குப் போய் வாங்கிட்டு வரலியா - எல்லாம் ஒங்களுக்குத் தான். இப்பத்தான் அப்பளக்காரன் வந்து கொடுத்துட்டுப் போனான்; பிரியமா சாப்பிடுவேளென்று சொன்னேன். பின்னெ அந்தச் சின்னக் கொரங்கே என்ன இன்னும் காணலெ! போனாப் போனதுதான்; நீங்கதான் சித்த பாருங்களேன்!”

இவ்வளவிற்கும் அவர் இருந்தால்தானே! விறகுப் பிரதேசத்தைத் தாண்டி வழுக்குப் பிரதேசத்தை எட்டிவிட்டார். புகையையும் பேச்சையும் தப்பி வந்தால் போதும் என்றாகிவிட்டது. முருகதாசரின் ஆஸ்தான அறையின் ஒரு விசித்திரம் என்னவென்றால் சென்னையில் ‘லைட்டிங் டைம்’ அட்டவணையைக்கூட மதிக்காமல் அது இருண்டு விடும்.

இம்மாதிரி மண்ணெண்ணெய் நெருக்கடி ஏற்படாத காலங்களில் அந்த அறைக்குத்தான் முதலில் இராத்திரி. ஆனால், எண்ணெய் நெருக்கடிக் காலங்களில் சிவபிரானின் ஒற்றைக் கண் போன்ற அந்த அறையின் சன்னல், எதிர்ப்பக்கம் நிற்கும் மின்சார விளக்குக் கம்பத்திலிருந்து கொஞ்சம் வெளிச்சத்தைப் பிச்சை வாங்கும். கார்ப்பொரேஷன் தயவு வரும்வரை, ஸ்ரீ முருகதாசர் வேறு வழியில்லா மல் தெரு நடையில் நின்று அலமுவின் வருகையை எதிர்நோக்கி யிருக்க வேண்டியதாயிற்று.

முருகதாசர் வானத்தை அளக்கும் கதைகளைக் கட்டுவதில் மிகவும் சமர்த்தர்; ‘சாகாவரம் பெற்ற’ கதைகளும் எழுதுவார். அந்தத் திறமையை உத்தேசித்து, ஒரு விளம்பரக் கம்பெனி மாதம் முப்பது ரூபாய்க்கு வானத்தையளக்கும் அவரது கற்பனைத் திற மையைக் குத்தகை எடுத்துக்கொண்டது. அதனால் அவர் வீர புருஷர்களையும், அழியாத சித்திரங்களையும் எழுத்தோவியமாகத் தீட்டுவதை விட்டு விட்டு, சோயாபீன் முதல் மெழுகுவர்த்தி வரையிலும் வெளிநாடுகளிலிருந்து வந்து குவியும் பண்டங்களின் காவியங்களை இயற்றிக் கொண்டிருக்கிறார். ‘டபாஸா’ வீரிய மாத்திரையின்மீது பாடிய பரணியும், தேயிலைப் பானத்தின் சுயசரி தையும், அந்தத் தமிழ் தெரியாத வெள்ளைக்காரனையும் இவர்மீது அனுதாபம் காட்டும்படி செய்துவிட்டன. அதற்காகத்தான் அந்த முப்பது ரூபாய்!

வீட்டு எதிரில் நிற்கும் மின்சார விளக்கின் உதவியைக்கொண்டும் பிள்ளையவர்களால் அலமுவைக் கண்டுபிடிக்க இயலவில்லை. வெற்றிலை, வேலை, குழந்தை வராத காரணம் - எல்லாம் அவரது மனத்தில் கவலையைக் கொண்டு கொட்டின. நடையிலிருந்து கீழே இறங்கிச் சந்தின் மூலை வரை சென்று பார்த்து வரலாமா என்று புறப்பட்டார்.

பக்தி மார்க்கத்தில் ஏகாக்கிரக சிந்தையைப் பற்றிப் பிரமாதமாக வர்ணிக்கிறார்கள். மனம் ஒரே விஷயத்தில் லயித்துவிட்டால் போது மாம். பிள்ளையவர்களைப் பொறுத்தவரை அவர் இந்தப் ‘பணம்’ என்ற மூன்றெழுத்து மந்திரத்தில் தீவிர சிந்தை செலுத்துபவர். பணத்தை வாரிச் சேர்த்துக் குபேரனாகிவிட வேண்டும் என்ற எண்ணம் ஒன்றுமில்லை. கவலையில்லாமல் ஏதோ சாப்பிட்டோம், வேலை பார்த்தோம், வந்தோம் என்று இருக்கவேண்டும் என்பதற்காக எத்தனையோ வித்தைகளையெல்லாம் செய்துவிட்டார். அவருடைய குடும்பத்தின் வரவு செலவு திட்டத்தை மட்டிலும் அவரால் எப் பொழுதும் சமன் செய்ய முடியவில்லை. நிதி மந்திரியாக இருந் தால் பட்ஜட்டில் துண்டுவிழுவதற்குப் பொருளாதாரக் காரணங்கள் காட்டிவிட்டு, உபமான்யங்களைத் தைரியமாகக் கேட்கலாம். கவலை யில்லாமல், கொஞ்சமும் உடம்பில் பிடிக்காமல் கடன் கேட்டுப் புறப்படுவதற்கு முடியுமா ? குடும்பச் செலவு என்றால், சர்க்கார் செலவாகுமா ?

கவலை இருக்கப்படாது என்ற உறுதியின் பேரில்தான் நம்பிக்கை என்ற இலட்சியத்தை மட்டும் திருப்தி செய்விக்க, ‘சாகாவரம் பெற்ற’ கதைகளை எழுதுவதைக் கொஞ்சம் கட்டிவைத்துவிட்டு, இந்த ‘லிப்டன் தேயிலை’, காப்பி, கொக்கோ ஆகியவற்றின் மான்மியங் களை அவர் எழுத ஆரம்பித்தார். ஒரு பெரிய நாவல் மட்டிலும் எழுதிவிட்டால் அது ஒரு பொன் காய்க்கும் மரமாகிவிடும் என்று அவர் நெஞ்சழுத்தத்துடன் நினைத்த காலங்களும் உண்டு. இப் பொழுது அது ஒரு நெடுந்தூர இலட்சியமாகவே மாறிவிட்டது.



 ஒரு நாள் கழிந்தது - புதுமைப்பித்தன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 04, 2010 11:01 pm

முன்பாவது, அதாவது நம்பிக்கைக் காலத்தில், ஏதோ நினைத் ததைக் கிறுக்கிவைக்கக் காகிதப் பஞ்சமாவது இல்லாமல் இருந்தது. அப்பொழுது ஒரு பத்திரிகை ஆபீஸில் வேலை. ஆனால், இப்பொழுது காசு கொடுத்து வாங்காவிட்டால் முதுகில்தான் எழுதிக்கொள்ள வேண்டும். முருகதாசர் நல்ல புத்திசாலி; அதனால்தான் முதுகில் எழுதிக்கொள்ளவில்லை. யாராவது ஒரு நண்பரைக் கண்டுவிட்டால் போதும், தமது தூர இலட்சியத்தைப் பற்றி அவரிடம் ஐந்து நிமிஷமாவது பேசாமல் அவரை விடமாட்டார். நண்பர்கள் எஸ். பி. ஸி. ஏ. (ஜீவஹிம்சை நிவாரணச் சங்கம்)யின் அங்கத்தினர் களோ என்னவோ, அத்தனையும் சகித்துக்கொண்டிருப்பார்கள். . . .

சந்தில் திரும்பிப் பார்த்தால் அலமுவின் ராஜ்யம் நடந்து கொண்டிருந்தது.

“ஏட்டி, என்ன! நீயோ, உன் லட்சணமோ ?” என்று ஆரம்பித்தார் முருகதாசர்.

ஒரு ரிக்ஷா வண்டி. ஏர்க்கால் பக்கத்தில் வண்டிக்காரன் உட் கார்ந்துகொண்டிருக்கிறான். அலமு, ஒரு சுண்டெலி மாதிரி ஜம் மென்று மெத்தையில் உட்கார்ந்திருக்கிறாள். ரிக்ஷாக்காரனுடன் ஏதோ நீண்ட சம்பாஷணை நடந்துகொண்டிருந்தது போலும்!

“ஏட்டி!” என்றார் முருகதாசர் மறுபடியும்.

“இல்லையப்பா ? நீ இனிமே என்னை அலமுன்னு கூப்’டுவேன் னியே!” என்று சொல்லிக்கொண்டே வண்டியிலிருந்து இறங்கப் பிரம்மப் பிரயத்தனம் செய்துகொண்டிருந்தாள்.

“தீப்பெட்டி எங்கடா ?” என்றார் முருகதாசர்.

“கடைக்காரன் குடுக்கமாட்டேங்கறான், அப்பா!”

“குடுக்காதெ போனா நேரே வீட்டுக்கு வாரது! இங்கெ என்ன இருப்பு ?”

“அப்படிக் கேளுங்க சாமி! நம்ம கொளந்தென்னு மெரட்டாமே சொல்லிப் பாத்தேனுங்க. வீட்டுக்கு வண்டியிலே கொண்டாந்து வுடணுமுண்ணு மொண்டி பண்ணுதுங்க. எனக்குக் காலுலே சுளுக்கு. அந்தச் சின்னாம்பயலே காணும். . .” என்று நீட்டிக்கொண்டே போனான் ரிக்ஷாக்காரன்.

“அப்பா, அவன் பங்கஜத்தெ மாத்ரம் கூட்டிக்கிட்டே போரானே!” என்றாள் அலமு. பங்கஜம் எதிர்வீட்டு சப்ரிஜிஸ்திரார் குழந்தை. அது ரிக்ஷாவிலும் போகும், மோட்டாரிலும் போகும்! அந்த விஷயம் ரிக்ஷாவுக்குத்தான் புரியுமா, குழந்தைக்குத்தான் புரியுமா ?

“அலமு! ராத்திரிலே கொழந்தைகள் ரிக்ஷாவிலே போகப் படாதுடா! எறங்கி வா!” என்று குழந்தையைத் தூக்கிக்கொண்டு வாடிக்கைக் கடைக்காரனிடம் சென்றார் முருகதாசர்.

பிள்ளையவர்கள் கடையை எட்டு முன்பே கடைக்காரன், “சாமி! இந்த மாதிரியிருந்தா கட்டுமா ? போன மாசத்திலே தீர்க்கலியே! நானும் சொல்லிச் சொல்லிப் பார்த்தாச்சு. பாக்கியை முடிச்சு, கணக்கெத் தீர்த்துடுங்க! எனக்குக் குடுத்துக் கட்டாது. நான் பொளைக்க வந்தவன்!” என்றான்.

“நானும் பிழைக்க வந்தவன்தான். எல்லாரும் சாகவா வரு கிறார்கள்! மின்னெ பின்னேதான் இருக்கும். நான் என்ன கொடுக்க மாட்டேன் என்று சொல்லுகிறேனா ?”

“போங்க சாமி! அது ஒண்ணுதான் பாக்கி! ரூ. 2-5-4 ஆச்சு: எப்ப வரும் ?”

“தீப்பெட்டியெக் குடு, சொல்றேன்!”

“பெட்டிக்கென்ன பிரமாதம்! இந்தாருங்க, எப்ப வரும் ?”

“எப்பவா ? சம்பளம் நாளைக்குப் போட்ருவாங்கன்னு நினைக்கி றேன்; நாளை இல்லாவிட்டால் திங்கள்கிழமை.”

“திங்கட்கிழமெ நிச்சயந்தானே ? நான் சீட்டுக் கட்டணும்!” என்றான்.

“சரி, பார்க்கிறேன்!” என்று திரும்பினார் தாசர்.

“பார்க்கிறேன்னு சொல்ல வேண்டாம், நிச்சயமாக வேண்டும்!”

ஒரு கவலை தீர்ந்தது . . . அதாவது திங்கட்கிழமை வரை.

பாதி வழியில் போகையில், “அப்பா!” என்றது குழந்தை.

அவர் எதையோ நினைத்துக்கொண்டிருந்ததால், தன்னையறியா மல் கொஞ்சம் கடினமாக, “என்னடி!” என்றார்.

“நீதான் கோவிச்சுக்கிறியே, அப்பா! நான் சொல்லமாட்டேன், போ!”

“கோவம் என்னடி, கோவம்! சும்மா சொல்லு!”

“அதோ பார், பல்லு மாமா ?”

முருகதாசரின் நண்பர் சுப்பிரமணிய பிள்ளைக்குக் கொஞ்சம் உயர்ந்த பற்கள். அவை வெளியே நீண்டுகொண்டு, தமது இருப்பை அனாவசியமாக உலகத்திற்கு அறிவித்துக்கொண்டிருந்தன. அதனால் அலமு அவருக்கு இட்ட காரண இடுகுறிப் பெயர் அது.

“எங்கடி!”

“அதோ பார், வீட்டு நடேலே! என்னை எறக்கிவிடப்பா!” என்று அவரது கையிலிருந்து வழுகி விடுவித்துக்கொண்டு, வீட்டிற்கு ஓட ஆரம்பித்தது.

“மெதுவா! மெதுவா!” என்றார் பிள்ளை; குழந்தையா கேட்கும் ?

“மாட்டேன்!” என்றது. அதற்கப்புறம் ஏக களேபரம். பாவாடை தடுக்கியதோ என்னமோ! அலமு வலுக்கட்டாயமாக அங்கப் பிரதக்ஷணம் செய்ய ஆரம்பித்தாள்.

பிள்ளையவர்கள் ஓடிப்போய்க் குழந்தையை வாரி எடுத்தார். ஆனால் இவர் பதட்டத்திற்கு ஏற்ப அங்கு குழந்தைக்கு ஒன்றும் ஏற்படவில்லை.

“தோளுக்கு மேலே தொண்ணூறு, தொடச்சுப் பாத்தா ஒண் ணுல்லே!” என்று பாடிக்கொண்டு குழந்தை எழுந்தது.

“என்ன ஸார், குழந்தையை நீங்க இப்படி விடலாமா ?” என்று சொல்லிக்கொண்டே சுப்பிரமணியம் அவர்கள் பக்கம் வந்தார்.

“என்ன ஸார் செய்யட்டும்! என்ன சொன்னாலும் கேட்கிறதில்லை என்ற உறுதி மனசிலே ஏறிப்போயிருக்கு. வெளிலே புறப்பட்டாச்சா, அப்புறம் தேடிக்கொண்டு பின்னோட பத்துப் பேர். இவளைக் கடைக்கனுப்பிச்சுட்டா தாயார். இவ்வளவு நேரம் அந்த ரிக்ஷாக் காரனோடே தர்க்கம் - என்ன செய்கிறது! வாருங்கள் ஸார், உள்ளே! ஒன் மினிட்! விளக்கை ஏத்துகிறேன்.”

குழந்தை அலமு அதற்குள் வீட்டிற்குள், “பல்லு மாமா வந்துட் டார்!” என்று பொதுவாக உச்ச ஸ்தாயியில் விளம்பரம் செய்து கொண்டு ஓடிவிட்டாள்.

“குழந்தை துருதுருவென்று வருகிறதே! பள்ளிக்கூடத்திற்காவது அனுப்பக் கூடாதா ?” என்றார் நண்பர்.

“ஆமாம் ஸார், தொந்திரவு சகிக்கலே. அங்கேதான் கொண்டு தள்ளணும். வயசு கொஞ்சம் ஆகட்டுமே என்று பார்க்கிறேன்” என்றார் முருகதாசர், விளக்குத் திரியை உயர்த்திக்கொண்டே.

“நேத்து பீச்சுக்குப் போயிருந்தேன்! சுந்தரத்தைப் பார்த்தேன். . .” என்று ஆரம்பித்தார் சுப்பிரமணிய பிள்ளை.



 ஒரு நாள் கழிந்தது - புதுமைப்பித்தன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 04, 2010 11:02 pm

“அந்த ராஸ்கல் வந்துட்டானா! என்றைக்கும் அவன் தொல்லை தான் பெரிய தொல்லையாக இருக்கிறது. இங்கே வந்தான்னா ஆபீஸுக்கு வந்து யாருக்காவது வத்தி வச்சுட்டுப் போயிடரது. . . மின்னே வந்தப்போ, என்ன எழவு சொன்னானோ, அந்த ஆர்ட்டிஸ்ட் ‘பதி’ இருந்தானே அவனுக்குச் சீட்டுக் கொடுக்க வழி பண்ணிட் டான். . .” என்று படபடவென்று பேசிக்கொண்டே போனார் முருகதாசர்.

“அப்படிப் பாத்தா உலகத்திலே யார்தான் ஸார் நல்லவன்! அவன் உங்களைப் பத்தி ரொம்பப் பிரமாதமாக அல்லவா கண்ட இடத்திலெல்லாம் புகழ்ந்துகொண்டிருக்கிறான் ?”

“சவத்தெ தள்ளுங்க, ஸார்! பேன் பார்த்தாலும் பார்க்கும், காதை அறுத்தாலும் அறுக்கும். அவன் சங்காத்தமே நமக்கு வேண் டாம். . . நீங்க என்ன சொல்ல வாயெடுத்தீர்கள் ?”

“அதுதான், உங்களெப் பத்தித்தான் ஒரு இங்கிலீஷ்காரனிடம் பிரமாதமாகப் பேசிக்கொண்டிருந்தான். . . .”

“இவ்வளவுதானா! கதையை எழுதரேன் அல்லது கத்தரிக்காயை அறுக்கிறேன், இவனுக்கென்ன ?. . .”

அதே சமயத்தில் வெளியிலிருந்து, “முருகதாஸ்! முருகதாஸ்!” என்று யாரோ கூப்பிட்டார்கள்.

“அதுதான்! அவன்தான் வந்திருக்கிறான் போலிருக்கிறது! பயலுக்கு நூறு வயசு. . . .”

“ ‘சைத்தான் நினைக்கு முன்னால் வந்து நிற்பான்’ என்பதுதான்!” என்று முணுமுணுத்தார் முருகதாசர்.

பிறகு அவர் எழுந்து நின்று வெளியில் தலையை நீட்டி, “யாரது ?” என்றார்.

“என்ன! நான்தான் சுந்தரம், இன்னும் என் குரல் தெரிய வில்லையா ?” என்று உரத்த குரலில் கடகடவென்று சிரித்துக் கொண்டு உள்ளே நுழைந்தார் வந்தவர். அவருடைய சிரிப்புக்கு இசைந்தபடி காலில் போட்டிருக்கும் ஜோடு தாளம் போட்டது.

“என்ன சுந்தரமா ? வா! வா! இப்பொத்தான் உன்னைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். நீயும் வந்தாய்! காப்பி போடச் சொல்லட் டுமா ? அலமு! அலமு!” என்று உரக்கக் கூவினார் முருகதாசர்.

எங்கிருந்தோ, “என்னப்பா!” என்று அலமுவின் குரல் வந்தது.

“அம்மாவை மூணு கப் காப்பி போடச் சொல்லு. சீக்கிரம் ஆகணும்!”

“நீ என்ன பத்திரிகையையே விட்டுவிட்டாயாமே! இப்பத்தான் கேள்விப்பட்டேன்.”

“வயிற்றுப் பிழைப்பிற்கு எதில் இருந்தால் என்ன ? சீலைப்பேன் குத்துகிறதும் ஒரு ‘பிஸினஸ்’ ஆக இருந்து, அதில் ஒரு ‘சான்ஸ்’ கிடைத்தால் அதையும் விட்டா வைக்கிறது ? நான் பத்திரிகையை விட்டுவிட்டா கதை எழுதாமல் இருந்துவிடுவேனோ ? ஒரு பெரிய நாவலுக்குப் ‘பிளான்’ போட்டிருக்கேன். தமிழன்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால், எனக்குக் காகிதம் வாங்கவாவது காசு கிடைக்கும். அதில் ‘சென்ட்ரல் ஐடியா’ என்ன தெரியுமா ?. . .”

“நீங்க நேற்று பொருட்காட்சிக்குப் போனீர்களாமே!” என்று பேச்சை மாற்ற முயன்றார் சுப்பிரமணிய பிள்ளை. இந்த விஷயத்தைத் தொட்டுவிட்டால், முருகதாசர் கீறல் விழுந்த கிராமபோன் பிளேட் மாதிரி விடாமல் திருப்பித் திருப்பி அதையே கதைத்துக்கொண்டி ருப்பார்!

“அப்பா! காப்பியாயிட்டுது. நீதான் வந்து எடுத்துக்கிட்டுப் போகணும். சுடுது!” என்று சொல்லிக்கொண்டு, நிலைப்படி இரண்டு பக்கத்தையும் தொட்டவண்ணமாய் ஒற்றைக் காலை ஆட்டிக் கொண்டு நின்றாள் அலமு.

“அம்மா எங்கே ?”

“அம்மா சாத்தெ வடிச்சுக்கிட்டிருக்கா, அப்பா!”

“சரி! இதோ வாரேன், போ!”

“வாயேன்!”

“வர்ரேன்னா, போடா உள்ளே!”

“காப்பி ஆறிப்போயிடும், அப்பா!”

“இதோ ஒரு நிமிஷம்!” என்று சொல்லிக்கொண்டு உள்ளே சென்றார்.

“மாமா! நீ என்ன கொண்டாந்தே!” என்று கேட்டுக்கொண்டு, சுப்பிரமணிய பிள்ளை மடியில் உட்கார்ந்து, கழுத்திலிருக்கும் நெக் டையைப் பிடித்து விளையாட ஆரம்பித்தாள் அலமு.

“அதெப் பிடித்து இழுக்காதே! மாமாவுக்கு கழுத்து வலிக்கும்!” என்றார் சுந்தரம் பிள்ளை.

“வலிக்காதே!” என்று மறுபடியும் ஆரம்பித்தாள்.

முருகதாசரும் மேல்துண்டின் உதவியால் ஒரு செம்பை ஏந்திய வண்ணம் உள்ளே நுழைந்தார்.

“என்னப்பா, மூணு டம்ளர் கொண்டாந்தே! எனக்கில்லையா ?”

“உனக்கென்னடி இங்கே! அம்மாகூடப் போய்ச் சாப்பிடு.”

“மாட்டேன்” என்று ஒரு டம்ளரை எடுத்து வைத்துக்கொண்டது குழந்தை.

முருகதாசர் காப்பியை ஆற்றி, சுந்தரம் கையில் ஒரு டம்ளரைக் கொடுத்தார்.

சுந்தரம் வாங்கி மடக்மடக்கென்று மருந்து குடிப்பதுபோல் குடித்துவிட்டு, “காப்பி வெகு ஜோர்!” என்று சர்டிபிகேட் கொடுத்தார்.

மற்றொரு டம்ளர் சுப்பிரமணிய பிள்ளையிடம் கொடுக்கப்பட்டது. “மாமா! எனக்கில்லையா ?” என்று அவரிடம் சென்று ஒண்டினாள் அலமு.

“வாடி, நாம ரெண்டு பேரும் சாப்பிடுவோம்!” என்றார் முருகதாசர்.

“மாமாகூடத்தான்!” என்றது குழந்தை. சுப்பிரமணிய பிள்ளை கையிலிருந்த டம்ளரில் அலமுவைக் குடிக்கச் செய்தார்.

பாதியானதும், “போதும்!” என்றது குழந்தை.

“இந்தாருங்க ஸார்!” என்று மற்ற டம்ளரையும் நீட்டினார் முருகதாசர்.

“வேண்டாம்! வேண்டாம்! இதுவே போதும்!” என்றார் சுப்பிரமணிய பிள்ளை.

“நான்சென்ஸ்!” என்று சொல்லிவிட்டு, குழந்தை எச்சிற்படுத்தி யதைத் தாம் வாங்கிக்கொண்டார் தாசர்.

“நேரமாகிறது, மவுண்டில் ஒரு நண்பரைப் பார்க்க வேண்டும்!” என்று எழுந்தார் சுந்தரம்.

“அதற்குள்ளாகவா ? வெற்றிலை போட்டுக் கொண்டு போகலாம்!” என்றார் முருகதாசர்.

“கையில் எடுத்துக்கொண்டேன். நேரமாகிறது! அப்புறம் பார்க் கிறேன்!” என்று சொல்லிக்கொண்டு வெளியேறினார் சுந்தரம்.

கையில் இருந்த புகையிலையை வாயில் ஒதுக்கிவிட்டு, சிறிது சிரமத்துடன் தமக்கு நேரமாவதைத் தெரிவித்துக்கொண்டார் சுப்பிர மணிய பிள்ளை.

தொண்டையைச் சிறிது கனைத்துக்கொண்டு, “சுப்ரமண்யம், உங்களிடம் ஏதாவது சேஞ்ஜ் இருக்கிறதா ? ஒரு மூன்று ரூபாய் வேண்டும்!” என்றார் முருகதாசர்.

“ஏது அவசரம்!”

“சம்பளம் போடலே; இங்கு கொஞ்சம் அவசியமாக வேண்டியிருக் கிறது . . . திங்கட்கிழமை கொடுத்துவிடுகிறேன்!”

“அதற்கென்ன ?” பர்ஸை எடுத்துப் பார்த்துவிட்டு, “இப்போ என் கையில் இதுதான் இருக்கிறது!” என்று ஓர் எட்டணாவைக் கொடுத்தார் சுப்பிரமணியம்.

“இது போதாதே!” என்று சொல்லி, அதையும் வாங்கி வைத்துக் கொண்டார் முருகதாசர்.

“அப்பொ . . .” என்று மீண்டும் ஏதோ ஆரம்பித்தார்.

“பார்ப்போம்! எனக்குக் கொஞ்சம் வேலையிருக்கிறது” என்று சுப்பிரமணியமும் விடைபெற்றுச் சென்றார்.

முருகதாசர் தமது ஆஸ்தான அறையின் சிம்மாசனமான பழைய கோரைப் பாயில் உட்கார்ந்துகொண்டு, அந்த எட்டணாவைத் திருப்பித் திருப்பிப் பார்த்துக்கொண்டு, நீண்ட யோசனையில் ஆழ்ந்திருந்தார்.

“அங்கெ என்ன செய்யறீங்க ?” என்ற மனைவியின் குரல்!

“நீதான் இங்கே வாயேன்!”

கமலம் உள்ளே வந்து, “அப்பாடா!” என்று உட்கார்ந்தாள். அவர் கையில் இருக்கும் சில்லறையைப் பார்த்துவிட்டு, “இதேது ?” என்றாள்.

“சுப்பிரமணியத்திடம் வாங்கினேன்!”

“உங்களுக்கும் . . . வேலையில்லையா ?” என்று முகத்தைச் சிணுக்கினாள் கமலம். பிறகு திடாரென்று எதையோ எண்ணிக் கொண்டு, “ஆமாம், இப்பத்தான் நினைப்பு வந்தது. நாளைக்குக் காப்பிப் பொடியில்லை, அதெ வச்சு வாங்கி வாருங்களேன்!” என்றாள்.

“அந்தக் கடைக்காரனுக்காக அல்லவா வாங்கினேன்! அதைக் கொடுத்துவிட்டால் ?”

“திங்கட்கிழமை கொடுப்பதாகத்தானே சொன்னீர்களாம்!”

“அதற்கென்ன இப்பொழுது!”

“போய்ச் சீக்கிரம் வாங்கி வாருங்கள்!”

“திங்கட்கிழமைக்கு ?”

“திங்கட்கிழமை பார்த்துக்கொள்ளுகிறது!”



 ஒரு நாள் கழிந்தது - புதுமைப்பித்தன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Aug 04, 2010 11:08 pm

இதுதான் சிவா..உங்கள் வெற்றிக்குக் காரணம்.. உடனடி எதுவும்... மிக்க நன்றி..இந்தக் கதையில் நடை நன்றாக இருக்கும்.. நகைச்சுவையும் கருத்துமாக.. மீண்டும் நன்றி பதிவுக்கு...  ஒரு நாள் கழிந்தது - புதுமைப்பித்தன் 678642  ஒரு நாள் கழிந்தது - புதுமைப்பித்தன் 154550



 ஒரு நாள் கழிந்தது - புதுமைப்பித்தன் A ஒரு நாள் கழிந்தது - புதுமைப்பித்தன் A ஒரு நாள் கழிந்தது - புதுமைப்பித்தன் T ஒரு நாள் கழிந்தது - புதுமைப்பித்தன் H ஒரு நாள் கழிந்தது - புதுமைப்பித்தன் I ஒரு நாள் கழிந்தது - புதுமைப்பித்தன் R ஒரு நாள் கழிந்தது - புதுமைப்பித்தன் A ஒரு நாள் கழிந்தது - புதுமைப்பித்தன் Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Aug 04, 2010 11:21 pm

பல...ஆண்டுகளுக்குப்பின்...மீண்டும்...படித்தேன்...நன்றி..தல...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 04, 2010 11:27 pm

கலை wrote:பல...ஆண்டுகளுக்குப்பின்...மீண்டும்...படித்தேன்...நன்றி..தல...!

தலயா.......!!!  ஒரு நாள் கழிந்தது - புதுமைப்பித்தன் 740322  ஒரு நாள் கழிந்தது - புதுமைப்பித்தன் 740322  ஒரு நாள் கழிந்தது - புதுமைப்பித்தன் 740322



 ஒரு நாள் கழிந்தது - புதுமைப்பித்தன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக