புதிய பதிவுகள்
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 6 I_vote_lcapதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 6 I_voting_barதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 6 I_vote_rcap 
39 Posts - 48%
ayyasamy ram
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 6 I_vote_lcapதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 6 I_voting_barதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 6 I_vote_rcap 
35 Posts - 43%
mohamed nizamudeen
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 6 I_vote_lcapதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 6 I_voting_barதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 6 I_vote_rcap 
4 Posts - 5%
T.N.Balasubramanian
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 6 I_vote_lcapதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 6 I_voting_barதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 6 I_vote_rcap 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 6 I_vote_lcapதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 6 I_voting_barதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 6 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 6 I_vote_lcapதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 6 I_voting_barதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 6 I_vote_rcap 
39 Posts - 48%
ayyasamy ram
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 6 I_vote_lcapதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 6 I_voting_barதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 6 I_vote_rcap 
35 Posts - 43%
mohamed nizamudeen
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 6 I_vote_lcapதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 6 I_voting_barதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 6 I_vote_rcap 
4 Posts - 5%
T.N.Balasubramanian
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 6 I_vote_lcapதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 6 I_voting_barதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 6 I_vote_rcap 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 6 I_vote_lcapதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 6 I_voting_barதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 6 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை


   
   

Page 6 of 14 Previous  1 ... 5, 6, 7 ... 10 ... 14  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 12 Oct 2008 - 17:07

First topic message reminder :

தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 6 Kadal-thamarai


முன்னுரை



டி.வி. இராமசுப்பையர் அதிசய மனிதருள் ஒருவர்.


நண்பர் தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை எனும் டி.வி.ஆர்., வாழ்க்கை வரலாறு நூலுக்கு முன்னுரை ஒன்று எழுத வேண்டும் என்று கேட்டுக் கொண்ட போது, தயக்கமும், மகிழ்ச்சியும் ஊடாட ஒப்புக் கொண்டேன்.

நான் பிறந்து வளர்ந்து, இப்போது வாழ்ந்து வரும் வெள்ளாங்குடியின் அருகில் உள்ள தடிமார் கோவில் கிராமத்தில் டி.வி.ஆர்., பிறந்தார். இளமைப் பருவத்தின் பெரும் பங்கை அங்கே தான் செலவழித்தார். வடிவீசுவரத்திற்கு தனது இருக்கையை மாற்றிய போதும், வட சேரி கிராமத்திற்கு மாதத்தில் பலமுறை வந்து செல்வார். எனவே, ஊர்ப்பற்றுக் காரணமாக, சார்புடன் முன்னுரையை எழுதி விடுவேனோ என்ற பயத்தால் தயக்கம் எழுந்தது.

டி.வி.ஆரையும், அவர், தன்னுடன் அழைத்துச் செல்லும் மக்களையும் - ஒன்றிரண்டு நாள் அவர் மருமகனையும் - நான் அகல நின்று 1941ம் ஆண்டிற்கு முன் பார்த்து இருந்தாலும், நாகர்கோவில் கிளப்பில் உறுப்பினன் ஆன பின்தான் அந்த கிளப்பின் செயலாளர் என்ற நிலையில் டி.வி.ஆரை அறிந்திட முடிந்தது. சமுதாய நன்மைக்கு அவர் செய்த பணிகளைத் தெரிந்திடவும் வாய்ப்பு ஏற்பட்டது. 1963ம் ஆண்டு, காசி சர்வ கலாசாலை போல் கன்னியாகுமரியில் பல்கலைக்கழகம் அமைக்கும் ஆலோசனைக்கு டி.வி.ஆர்., மிகவும் துணை நின்றார். அவர்தான் அந்த ஆலோசனைக் குழுவின் தலைவர். எனவே, நட்புறவாலும், அன்பாலும் கட்டுப்பட்ட என்னிடம், டி.வி.ஆரைப் பற்றி எழுதுவதில் இனந்தெரியாத மகிழ்ச்சி எழுந்தது.

ஆய்வு நிறுவனம், அறநிலையங்கள் முதலியவற்றைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டவர்களுக்கு மார்ச் மாதம் கெடுபிடியானது. அம்மாத முதலில் தான் இந்த வரலாற்று நூல் கிடைத்தது. கிடைத்த நாள் மாலை, நூலின் ஒரு சில பகுதிகளைப் படித்தேன். மிக சுவையாக நூல் வளர்ந்து சென்றது. தெளிவுகளைத் திரட்டி, சம காலத்தவர்களின் எண்ணங்களை இடை இடையே கொடுத்து நூல் உருவாக்கியுள்ள திறமையைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

பிற பணிகளை ஒதுக்கி விட்டு, அன்றும், அடுத்த நாளும் நூல் முழுவதும் படித்து முடித்தேன். செம்மையாக முத்துகிருஷ்ணன் உருவாக்கியுள்ளார் என்ற எண்ணமே என் உள்ளத்தில் மேலோங்கி நின்றது.

நூலின் செம் பாதிக்கு மேல், தினமலர் பத்திரிகையை டி.வி.ஆர்., நிறுவி வெற்றி கண்டதைப் பற்றியதாகும். அந்த நிறுவனத்தை டி.வி.ஆரின் மக்களும், பேரப் பிள்ளைகளும் இன்று ஒற்றுமையுடன் வளர்த்து வருகின்றனர். தனது மக்களை இந்தப் பணியில் ஈடுபடுமாறு செய்தது டி.வி.ஆரின் குடும்பத் தலைமைக்குத்தக்க உதாரணமாகும்.

எஸ்.வையாபுரிப்பிள்ளை, "தினமலர்' இதழை செப்., 6,1951 வெளியிட்ட அன்று, அவருடன் நானும் சென்றிருந்தேன். சி.ஓ.மாதவன் தலைமை தாங்கினார். கவிமணி ஒரு வாழ்த்துப் பாவால் தினமலர் இதழை வரவேற்றார்.அன்று சாதாரண நிலையில் உருவான, "தினமலர்', திருவிதாங்கூர் தமிழர் எழுச்சியால் பிரபலம் அடைந்து, இன்று, ஆலமரம் போல் படர்ந்து அனேகமாக ஒவ்வொரு மாவட்டங்களிலிருந்தும் வெளியிடப்படுகிறது. அந்த வளர்ச்சி, பாராட்டத்தக்கது; பெருமைப்படத்தக்கது.

டி.வி.ஆர்., பத்திரிக்கை வளர்ப்பதில் காட்டிய ஆர்வம், வகுத்த நெறிமுறைகள், அரசியல், தனிமனித எதிர்ப்புகள், அஞ்சா நெஞ்சம், பிறரை அணைத்துச் செல்லும் ஆற்றல், மன்னித்து மறக்கும் பெருந்தன்மை முதலியவற்றை முத்துகிருஷ்ணன் திறம்படக் கூறி இருக்கிறார்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 24 Oct 2008 - 3:42

மகாலிங்கம் முதலியார்

குமரி மாவட்ட முதுபெரும் எழுத்தாளர் மகாலிங்கம் முதலியார். கவிமணி தேசிய வினாயகம் பிள்ளையின் மேல் கொண்ட மதிப்பின் காரணமாக,"தேவி' என்ற பத்திரிகையைத் தொடங்கிச் சிறப்பாக நடத்தி வந்தார். தேசிய வினாயகம் பிள்ளை பெயரில் உள்ள தே.வி. எழுத்துக்களைக் கொண்டு தேவி என்று தனது பத்திரிக்கைக்குப் பெயர் சூட்டினார். குமரி மாவட்டத்தில் இன்றைய எழுத்தாளர்கள் பலருக்கு மகாலிங்கம் முதலியார் ஒரு வழிகாட்டி.

தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 6 PHOTO_4


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 24 Oct 2008 - 3:42

நான் தினமும் டி.வி.ஆரை அவரது வீட்டில் சந்திப்பேன். அதை ஒரு கடமையாகக் கொண்டிருந்தேன். வீட்டில் காலை 10 மணி முதல் 2 மணி வரை ஒரு கூட்டம் டி.வி.ஆரைச் சந்திக்கக் காத்திருக்கும். இவர்களெல்லாம் அவரிடம் ஏதாவது உதவி பெற வந்தவர்கள்தான்; அவரவர் தேவைக்கேற்றபடி பொருளாதார உதவி நடைபெற்றுக் கொண்டிருக்கும்.

இதில், பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளே அதிகமாக இருப்பர். பணம் கொடுத்து விட்டு அவர்கள் ஒவ்வொருவரிடமும் டி.வி.ஆர்., மறக்காமல் கூறுவது, "நான் உதவி செய்தேன் என்று யாரிடமும் சொல்ல வேண்டாம்' என்ற மந்திரம் தான், என்கிறார்.

பள்ளியில் படிக்கும் குழந்தைகள் உரிமையுடன் நாள் தவறாமல் டி.வி.ஆர்., வீட்டுக்குப் போய்ப் படிப்புச் செலவிற்கு பணம் பெறும் நிகழ்ச்சி சர்வ சாதாரணம்.

இதில் மற்றொரு விசேடம் இருக்கிறது... தங்கள் குழந்தைகளை டி.வி.ஆர்., வீட்டிற்கு பெற்றோர் அழைத்துச் சென்று உதவி பெறுவதில்லை. பள்ளிக் குழந்தைகளிடத்தில், தங்கள் சொந்த வீட்டில் பணம் கேட்டு வாங்கிக் கொள்வது போல, அங்கே போனால் வாங்கிக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையை அவர் வளர்த்திருக்கிறார்.

தானே மிகவும் கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணத்தைப் பிறருக்குக் கொடுத்து உதவுவது கொஞ்சம் கஷ்டமானது. தாம் உதவுவது அனைவருக்கும் தெரிய வேண்டும் என்ற ஆசை கொண்டவர்களாகவே பிற்காலத்து வள்ளல்களும் இருந்துள்ளனர். ஆனால், தான் உதவி செய்ததை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்ற மந்திரத்தை ஒவ்வொரு சமயமும் டி.வி.ஆர்., தவறாது பயன்படுத்தி உள்ளார். மீண்டும் நாம் கல்விச் சிந்தனைக்கு வருவோம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 24 Oct 2008 - 3:42

குமரி மாவட்ட கல்வி வளர்ச்சி குறித்து படேல் சுந்தரம் பிள்ளை கூறுவதை கவனிப்போம்:

கல்வியில் மிகவும் முன்னணியில் இன்று கன்னியாகுமரி மாவட்டம் திகழ்கிறது. இதற்கு முக்கியக் காரணம் கட்டாயக் கல்வித் திட்டத்தை 1946ல் திவான் சர்.சி.பி.ராமசாமி ஐயர் கொண்டு வந்ததுதான். இந்தக் கட்டாயக் கல்வியினால் ஏற்படப் போகும் நன்மைகளை டி.வி.ஆர்., நன்கு உணர்ந்திருந்தார். அந்தத் திட்டத்தின் கீழ் நாஞ்சில் நாட்டில் வெள்ள மடத்தில் பள்ளிக்கூடம் ஒன்று செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தக் கட்டாயக் கல்வித் திட்டத்தை ஆரம்பித்து வைக்க சர்.சி.பி.,யை அழைக்க ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. அதில் முக்கியமான பங்கு டி.வி.ஆருக்குத்தான். வெள்ளமடம் விழாவில் சர்.சி.பி., கலந்து கொண்டு தனக்கே உரிய சிறப்பான ஆங்கிலத்தில் பிரமாதமாகப் பேசினார்.

இந்துக்களும், கிறிஸ்தவர்களும இணைந்து கட்டாயக் கல்வித் திட்டத்தை ஏற்கும்ஒரு பகுதியிலேயே இதை முதலில் அறிமுகமாக்க வேண்டும் என்று சர்.சி.பி., காத்திருந்தார். அந்த பொறுப்பை டி.வி.ஆர்., ஏற்று, மிஷனரியைச் சேர்ந்த பாதிரியார்களைத் தொடர்ந்து சந்தித்து பேசி, அவர்களுடைய சம்மதமும் பெற்று, குமரி மாவட்டத்தில் இதைத் தொடங்க வைத்தார் என்றால், எவ்வளவு தன்னம்பிக்கை, விடாமுயற்சி என்பதைக் கவனிக்க வேண்டும், என்றார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 24 Oct 2008 - 3:43

* இந்தக் கட்டாயக் கல்வி திட்டம் பற்றி டி.வி.ஆர்., கூறி உள்ள தகவல்களை அப்படியே தருகிறோம்...

உமைதாணு

கவிமணியின் தேரூரில் பிறந்தவர் உமைதாணு. சென்னை சென்று வயர்லஸ் பிரிவில் படித்துக் கொண்டிருக்கும்போதே (1939-40) பத்திரிக்கைகளில் எழுதி வந்தார். பின்னர் முழுநேரப் பத்திரிக்கையாளரானார். "தினமலர்' 1952ல் திருவனந்தபுரத்தில் தொடங்கிய கால முதல் செய்திப் பிரிவில் உதவி ஆசிரியராக இருந்து, இப்போது ஓய்வு பெற்றுள்ளார். இவரது பல நாடகங்கள், வானொலியில் ஒலிபரப்பாகி உள்ளன. பல புத்தகங்கள் எழுதிய இவர் நல்ல ஹாஸ்யப் பேச்சாளர். நாஞ்சில் நாடு தமிழகத்துடன் இணைய நடந்த போராட்டத்தில், தீவீர பங்கு பெற்றவர்.

===========================

* வாசகர்கள் இனி சில இடங்களில் டி.வி.ஆர்., கூறியதையும் படிக்க இருக்கிறீர்கள். டி.வி.ஆருக்கு டைரி எழுதும் பழக்கம் கிடையாது. வாழ்க்கைச் சம்பவங்கள் பற்றி அவர் எதுவும் குறிப்பும் எழுதி வைக்கவில்லை. டி.வி.ஆரிடம் அவரது வாழ்க்கைச் சம்பவங்களைக் கேட்டு வைத்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் உதவி ஆசிரியர் உமைதாணுவுக்கு இருந்தது. அவர் "தினமலர்' இதழில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் இதற்காகப் பலதடவை நெல்லை வந்து பல தகவல்களை வற்புறுத்தி டி.வி.ஆரிடம் கேட்டு, அவற்றை நிருபர் தர்மலிங்கத்தின் மூலமாக அவ்வப்போது எழுதியும் வைத்திருந்தார். ஒரு சில பிரச்னைகளுக்கு டி.வி.ஆர்., தனது அனுபவங்களைக் கூறி உள்ளார். அவற்றை "டி.வி.ஆர்., கூறுகிறார்' என்று இனி சில இடங்களில் எடுத்தாள்கிறோம். இப்பேட்டிகள் பிப்.,12,'76 முதல் மார்ச் 24, '76 வரை வழங்கப்பட்டவையாகும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 24 Oct 2008 - 3:43

திவான் சர்.சி.பி.ராமசாமி ஐயர் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் கட்டாய இலவச ஆரம்பக் கல்வியைக் கொண்டு வரவேண்டுமென்று விரும்பினார். சமஸ்தானம் முழுவதும் ஐந்தாவது வகுப்பு வரை சிறுவர்களுக்கு இலவசமாக அரசாங்கத்தால் கல்வி போதிக்கப்பட வேண்டும் என்று அதற்குரிய ஆரம்பப் பணிகளைச் செய்யத்தொடங்கினார். இந்த திட்டத்திற்கு, கிறிஸ்தவர்களிடமிருந்து, முக்கியமாக வட திருவிதாங்கூரில் உள்ள கிறிஸ்தவர்களிடமிருந்து பெரிய எதிர்ப்புக் கிளம்பியது. "ஆரம்பக் கல்வியை அரசாங்கம் கட்டாயப் படுத்தக்கூடாது, மத போதனையுடன் கூடிய கல்வியே கிறிஸ்தவக் குழந்தைகளுக்கு நாங்கள் பள்ளிக்கூடத்தில் சொல்லிக் கொடுப்போம். அதற்குரிய ஆசிரியர்களுக்கு அரசு மானியமும் கொடுக்க வேண்டும்' என்று அவர்கள் கேட்டனர்.

அதற்காகப் பெரிய கிளர்ச்சியும் செய்தனர். சர்.சி.பி.,க்கு இக்கட்டான நிலை ஏற்பட்டது. ஏன் என்றால் கிறிஸ்தவர்கள் சிறுபான்மையினராக இருந்தாலும், ஒற்றுமையும், மனோபலமும் கொண்டவர்கள். டில்லியில் வைசிராய் வரை செல்வாக்குடையவர்கள். ஆகவே, ஒரேயடியாக சமஸ்தானம் முழுவதும் கட்டாயக் கல்வித் திட்டத்தை ஆரம்பிப்பது என்ற நிலையை மாற்றி, எந்தெந்தப் பகுதியில் உள்ளவர்கள் ஏற்றுக் கொள்கின்றனரோ அங்கிருந்து தொடங்குவது என்று ஒரு சாதுர்யமான வழியை, அவர் மேற்கொண்டார். எந்த இடத்தில் எதிர்ப்பில்லாமல் மக்களின் ஒத்துழைப்பு இருக்கும் என்று அறிய, அப்பொழுது பள்ளிக்கூட டைரக்டராக இருந்த ஏ.என்.தம்பியை பணித்தார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 24 Oct 2008 - 3:44

ஏ.என்.தம்பி

மிகச் சிறந்த கல்வியாளர்கள் சிலரில் ஏ.என்.தம்பியும் ஒருவர். திருவனந்தபுரம் விசாகம் திருநாள்மகாராஜாவின் மகளின் குமாரரான இவர், பி.ஏ., இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்திலும், அதைத் தொடர்ந்து அங்கேயே பார்-அட்-லாவும் படித்துப் பட்டங்கள் பெற்றவர்.


திருவனந்தபுரம் சமஸ்தானத்தில் கல்வி இலாக்கா டைரக்டராகப் பணியாற்றிய போது, குமரி மாவட்டத்தில் ஆரம்பப் பள்ளிகள் பல தொடங்கியதோடு, கட்டாயக் கல்வி, மதிய உணவு போன்றவற்றை முதன்முதலில் நடைமுறைக்கு கொண்டு வந்த பெருமை இவரையே சாரும்.

வள்ளல் அழகப்பச் செட்டியார் காரைக்குடியில் முதல்முதலில் ஒருகல்லூரியை நிறுவியபோது, பேராசிரியர் டி.சூர்ய நாராயணா என்பவர், அக் கல்லூரியின் முதல்வராக இருந்தார். அழகப்பா கல்லூரி 1947ல் ஆரம்பிக்கப்பட்டது. சூர்ய நாராயணா ஓய்வுபெற்ற பின் , அழகப்பா கல்லூரிக்கு சிறப்பான ஒரு முதல்வரைத் தேடினார்.

அன்றைய சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த டாக்டர் ஏ.எல்.முதலியார் அந்தப் பொறுப்புக்கு, ஏ.என்.தம்பி பெயரை சிபாரிசு செய்த தோடு, அப்பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு ஏ.என்.தம்பிக்குத் தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதினார். ஏ.எல்.முதலியாரின் கடிதத்தைக் கட்டளையாகக் கொண்டு, ஏ.என்.தம்பி 1950ல் அழகப்பா கல்லூரி முதல்வராக பொறுப்பேற்றார். 1957 வரை முதல்வராக இருந்தார். வள்ளல் அழகப்பாவின் கனவு காரைக்குடியில் ஒரு பல்கலைக்கழகம் உருவாக வேண்டும் என்பதுதான். அதற்கான அடிப்படைகளை செய்து முடித்த பெருமை ஏ.என்.தம்பிக்கு உண்டு.

தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 6 PHOTO_4a


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 24 Oct 2008 - 3:44

ஏ.என். தம்பி, அப்போது ஆரம்பப் பள்ளிக்கூட இன்ஸ்பெக்டராக இருந்த ஏ.லட்சுமி நாராயண ஐயரிடம் ஆலோசனை நடத்தினார். அவர் எனது நண்பர். அவர் என்னை, ஏ.என்.தம்பியிடம் அழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைத்தார். அன்றிலிருந்து 38 ஆண்டுக் காலம் தம்பியும், நானும் குடும்ப நண்பர்களாகவே இருந்து வருகிறோம்.

நாங்கள் இன்னும் சில பிரமுகர்களுடன் ஆலோசித்து, திட்டத்தை நாஞ்சில் நாட்டில் வெற்றிகரமாக நடத்த முடியும் என்ற தீர்மானத்திற்கு வந்தோம். மக்களின் ஒத்துழைப்பு பூர்ணமாக இருந்தது. அரசாங்கத்தாரால், "கட்டாய இலவசக் கல்வி உபதேசக் கமிட்டி' என்று ஒரு கமிட்டி ஏற்படுத்தப்பட்டது. அந்தக் கமிட்டியில் டி.எம்.சிதம்பரதாணுப் பிள்ளை எம்.எல்.சி., முன்னாள் மந்திரி பி.எஸ்.நடராஜபிள்ளை, முன்னாள் எம்.எல்.,ஏ., ஆர்.எஸ்.நாடார், எஸ்.திரவிய நாடார், நான் (டி.வி.ராமசுப்பையர்) ஆகிய 5 பேரை நியமித்து, அரசாங்கக் கெஜட்டிலும் வெளியிட்டனர்.

நாங்கள் ஊர் ஊராக ஏ.என்.தம்பியுடன் சென்று, கட்டாயக் கல்வியின் நன்மையையும், அவசியத்தையும் எடுத்துக் கூறி, மூன்று மாதத்திற்குள் 50 கட்டடங்கள் வரை கட்டி விட்டோம். அவ்வளவிற்கும் இடத்தை மக்கள் இலவசமாகக் கொடுத்தனர். கட்டடம் கட்டத் தேவையான பணத்தை மட்டும் ஊர்ப் பிரமுகர்களிடம் அரசு கொடுத்தது. அவர்களும் அரசாங்கம் கொடுத்த பணத்திற்கு மேலாக, ஒவ்வொரு ஊரிலும் அவரவர் சமுதாய டிரஸ்டில் இருந்தும் அல்லது மக்களிடமிருந்தும் நிதி திரட்டி, கொடுத்த பணத்தை விட கூடுதல் செலவு செய்து, தங்கள் ஊர்ப் பள்ளிக்கூடம் என்ற அபிமானத்தில் அழகு அழகாய்க் கட்டிவிட்டனர்.

தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 6 PHOTO_4b


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 24 Oct 2008 - 3:44

"நெல்லை, நாகர்கோவில் சாலையில் உள்ள வெள்ளமடம் என்ற ஊரில் முதல் கட்டடத்திற்கு ஆடம்பரத்தோடு சி.பி.ராமசாமி ஐயர் அடிக்கல் நாட்டு நடத்திய மூன்று மாதத்திற்குள் அப்பள்ளி செயல்படத் தொடங்கியது. இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்திற்கு, "நாஞ்சில் நாடு' என்று அன்றைக்குப் பெயர்.



இப்பகுதி திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்குள் இருந்தது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் முதல் தலைநகர் நாஞ்சில் நாட்டில் உள்ள பத்மநாபபுரம் தான். "இந்தப் பிரதேசத்தில் கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு இல்லாததோடு, அவர்களே ஒத்துழைப்பும் தந்த காட்சியைக் கண்டவர் வியந்தனர். அதற்கும் ஒரு காரணம் இருந்தது; கிறிஸ்தவப் பள்ளிக்கூடத்தில் குறைந்த சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த ஆசிரியர்கள், அரசாங்க ஆசிரியர்களாக நியமிக்கப்படுவர் என்று சமஸ்தானம் அறிவித்தது. உடனே, ஆசிரியர்களாகவும், உபதேசிகளாகவும், குறைந்த ஊதியத்திற்கு இருந்தவர்கள், மிஷனரிகளின் கீழ் இருக்க முடியாது என்று சத்தியாகிரகம் செய்யத் தொடங்கினர். கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு இது ஒரு இக்கட்டான நிலையை உண்டாக்கியது. சர்.சி.பி.,யின் திட்டத்திற்கு ஆதரவு கொடுத்துத்தான் தீர வேண்டுமென்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

"முதல் வருடத்தில் தோவாளை, அகஸ்தீஸ்வரம் ஆகிய இரண்டு தாலுக்காக்களில் அமல் செய்யப்பட்ட இத்திட்டம், கல்குளம், விளவங்கோடு தாலுகாக்களுக்கு அடுத்தாண்டு விஸ்தரிக்கப்பட்டது. ஆக, குமரி மாவட்டம் என்று இப்போது அழைக்கப்படும் பகுதி பூராவும், இக்கல்வித் திட்டம் நன்கு செயல்படத் தொடங்கியது.

"மிகவும் ஏழைக் குழந்தைகள் உணவுக்கு வழியின்றி பள்ளி வராமல் இருந்தனர். உடனே எல்லா ஏழைக் குழந்தைகளுக்கும் இலவச மதிய உணவுத் திட்டத்தை அரசாங்கம் புகுத்தியது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 24 Oct 2008 - 3:45

"அன்று செய்த இத்திட்டத்தை நண்பர்கள் ஊன்றிக் கவனிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். ஏறத்தாழ 670 சதுரமைல் உள்ள ஒரு பிரதேசம், கோவில்பட்டி அல்லது நாங்குநேரி தாலுகா போன்ற பரப்பிலுள்ள ஒரு பகுதி இன்று மாவட்டமாகத் திகழ்கிறது. அங்குத் தொடக்கப் பள்ளிகள் ஏறத்தாழ ஆயிரம் வரை இருக்கலாம். உயர்நிலைப் பள்ளிகள் நூற்றுக்குக் குறைவில்லை. கல்லூரிகளும் இருக்கின்றன. படித்தவர்கள் நூற்றுக்கு நூறு என்று கூடச் சொல்லிவிடலாம். குமரி மாவட்ட மக்களை இன்று, இமாச்சலப் பிரதேசம் முதல் குமரி வரை, உத்தியோகத்திலும் வேறுபல அலுவல்களிலும் காணலாம். டாக்டர்களோ மிக அதிகம். இந்த நன்மைக்கு மூலகர்த்தா சர்.சி.பி. ராமசாமி ஐயர் தொடங்கிய கட்டாய இலவசக் கல்வித் திட்டம், முதல் முதலாக கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கப்பட்டது தான். இதை வெற்றிகரமாக அமலாக்க ஏ.என். தம்பியுடைய உழைப்பு அதிகம். இந்தப் பெரிய தேரை வடம் பிடித்து இழுத்தவர்களில் நானும் ஒருவன் என்று கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 6 PHOTO_4c


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 24 Oct 2008 - 3:45

"இந்த மாவட்டத்து மக்களின் நன்றி உணர்வைக் காட்ட, ஏ.என்.தம்பிக்கு பெரிய பாராட்டுக் கூட்டம் நடத்தி, அதில் தங்க முலாம் பூசிய ஒரு பேழையை அவரது தொண்டிற்குப் பாராட்டாகத் தருவதாக தீர்மானித்தோம். இதற்கு முழுப் பொறுப்பையும் நானே ஏற்றுக் கொண்டேன். இதைக் கண்டு சகிக்காத சிலர், குலைக்க முன்வந்தது உண்டு; அது இப்போது தேவையில்லாத கதை.



இதில் பெரிய ஆச்சர்யம், ஆசிரியர்கள் மொத்தமாக இதற்கு மனமுவந்து சிறுசிறு தொகையைத் தாங்களாகவே கொடுக்க முன்வந்ததுதான். நானூறு ஆசிரியர்களிடமிருந்து இதற்காக வந்த பணம் இரண்டாயிரம் ரூபாய் என்பது என் ஞாபகம். பல பிரமுகர்கள் இதே அளவு தொகையைக் கொடுத்தும் உதவினர். (இந்த 4000 ரூõயின் மதிப்பு இன்று எவ்வளவு என்று கணக்குப் பார்த்துக் கொள்ளவும்.) பேழை மட்டும் ஆயிரம் ரூபாய்க்குச் செய்யப்பட்டது.

"விழா அழகாகச் சிறப்பாக நடந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்குத் தேநீர் விருந்தும் அளிக்கப்பட்டது. கல்வி அமைச்சர் டி.எம்.வர்கீஸ் விழாவிற்குத் தலைமை வகித்தார். பாராட்டுப் பத்திரத்தைக் கவிமணி தேசிய வினாயகம் பிள்ளை வாசித்தளித்தார். நன்றி கூறியவன் நான். பதவியில் இருப்பவரை மகிழ்வித்து பின்னர் அவரிடம் ஏதாவது சலுகை பெறலாம் என இதைச் செய்யவில்லை. அவரும் அதை அடியோடு வெறுப்பவர். இந்த விழா நடக்கும்போது ஏ.என்.தம்பி ஓய்வு பெற்று ஒரு மாதம் இருக்கும் என்பது என் ஞாபகம்.

"ஏ.என்.தம்பி உயர்ந்த பண்புடையவர். விசாகம் திருநாள் மகாராஜா மகளின் மகன். திருவனந்தபுரத்தில் அவர் வீட்டுக்கு யார் போனாலும் அந்தப் பாராட்டுப் பேழையை காட்டி, "எனக்கு நாஞ்சில் மக்கள் அன்பால் அளித்த பெருமையைப் பாருங்கள்' என்று சொல்லி மிகவும் சந்தோஷப் படுவார். அவருக்கு இப்போது கிட்டத்தட்ட 85 வயதாகிறது.

"ஏழெட்டு வருடத்திற்கு முன் ஒரு முறை அவரைப் பார்க்கச் சென்றிருக்கும் போது, " ராமசுப்பையர், எனக்கு ஒரு பெரிய ஆசை உள்ளது. நாம் இருவரும் நாஞ்சில் நாட்டுக்குப் போய், மூலை முடுக்குகளிலும் சுற்றிப் பார்த்து, நாம் அந்தக் காலத்தில் கட்டிய பள்ளிக்கூடங்களையும் அதற்கு ஒத்துழைப்பு தந்தவர்களையும் சந்தித்து அளவளாவ வேண்டும்' என்று சொன்னார்.

Sponsored content

PostSponsored content



Page 6 of 14 Previous  1 ... 5, 6, 7 ... 10 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக