புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 5 I_vote_lcapதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 5 I_voting_barதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 5 I_vote_rcap 
62 Posts - 41%
heezulia
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 5 I_vote_lcapதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 5 I_voting_barதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 5 I_vote_rcap 
50 Posts - 33%
mohamed nizamudeen
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 5 I_vote_lcapதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 5 I_voting_barதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 5 I_vote_rcap 
9 Posts - 6%
prajai
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 5 I_vote_lcapதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 5 I_voting_barதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 5 I_vote_rcap 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 5 I_vote_lcapதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 5 I_voting_barதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 5 I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 5 I_vote_lcapதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 5 I_voting_barதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 5 I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 5 I_vote_lcapதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 5 I_voting_barதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 5 I_vote_rcap 
4 Posts - 3%
Guna.D
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 5 I_vote_lcapதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 5 I_voting_barதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 5 I_vote_rcap 
3 Posts - 2%
mruthun
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 5 I_vote_lcapதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 5 I_voting_barதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 5 I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 5 I_vote_lcapதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 5 I_voting_barதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 5 I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 5 I_vote_lcapதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 5 I_voting_barதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 5 I_vote_rcap 
186 Posts - 41%
ayyasamy ram
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 5 I_vote_lcapதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 5 I_voting_barதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 5 I_vote_rcap 
177 Posts - 39%
mohamed nizamudeen
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 5 I_vote_lcapதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 5 I_voting_barதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 5 I_vote_rcap 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 5 I_vote_lcapதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 5 I_voting_barதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 5 I_vote_rcap 
21 Posts - 5%
prajai
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 5 I_vote_lcapதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 5 I_voting_barதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 5 I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 5 I_vote_lcapதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 5 I_voting_barதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 5 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 5 I_vote_lcapதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 5 I_voting_barதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 5 I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 5 I_vote_lcapதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 5 I_voting_barதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 5 I_vote_rcap 
7 Posts - 2%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை

Page 5 of 14 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9 ... 14  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 12, 2008 3:37 pm

First topic message reminder :

தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 5 Kadal-thamarai

முன்னுரை

டி.வி. இராமசுப்பையர் அதிசய மனிதருள் ஒருவர்.

நண்பர் தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை எனும் டி.வி.ஆர்., வாழ்க்கை வரலாறு நூலுக்கு முன்னுரை ஒன்று எழுத வேண்டும் என்று கேட்டுக் கொண்ட போது, தயக்கமும், மகிழ்ச்சியும் ஊடாட ஒப்புக் கொண்டேன்.

நான் பிறந்து வளர்ந்து, இப்போது வாழ்ந்து வரும் வெள்ளாங்குடியின் அருகில் உள்ள தடிமார் கோவில் கிராமத்தில் டி.வி.ஆர்., பிறந்தார். இளமைப் பருவத்தின் பெரும் பங்கை அங்கே தான் செலவழித்தார். வடிவீசுவரத்திற்கு தனது இருக்கையை மாற்றிய போதும், வட சேரி கிராமத்திற்கு மாதத்தில் பலமுறை வந்து செல்வார். எனவே, ஊர்ப்பற்றுக் காரணமாக, சார்புடன் முன்னுரையை எழுதி விடுவேனோ என்ற பயத்தால் தயக்கம் எழுந்தது.

டி.வி.ஆரையும், அவர், தன்னுடன் அழைத்துச் செல்லும் மக்களையும் - ஒன்றிரண்டு நாள் அவர் மருமகனையும் - நான் அகல நின்று 1941ம் ஆண்டிற்கு முன் பார்த்து இருந்தாலும், நாகர்கோவில் கிளப்பில் உறுப்பினன் ஆன பின்தான் அந்த கிளப்பின் செயலாளர் என்ற நிலையில் டி.வி.ஆரை அறிந்திட முடிந்தது. சமுதாய நன்மைக்கு அவர் செய்த பணிகளைத் தெரிந்திடவும் வாய்ப்பு ஏற்பட்டது. 1963ம் ஆண்டு, காசி சர்வ கலாசாலை போல் கன்னியாகுமரியில் பல்கலைக்கழகம் அமைக்கும் ஆலோசனைக்கு டி.வி.ஆர்., மிகவும் துணை நின்றார். அவர்தான் அந்த ஆலோசனைக் குழுவின் தலைவர். எனவே, நட்புறவாலும், அன்பாலும் கட்டுப்பட்ட என்னிடம், டி.வி.ஆரைப் பற்றி எழுதுவதில் இனந்தெரியாத மகிழ்ச்சி எழுந்தது.

ஆய்வு நிறுவனம், அறநிலையங்கள் முதலியவற்றைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டவர்களுக்கு மார்ச் மாதம் கெடுபிடியானது. அம்மாத முதலில் தான் இந்த வரலாற்று நூல் கிடைத்தது. கிடைத்த நாள் மாலை, நூலின் ஒரு சில பகுதிகளைப் படித்தேன். மிக சுவையாக நூல் வளர்ந்து சென்றது. தெளிவுகளைத் திரட்டி, சம காலத்தவர்களின் எண்ணங்களை இடை இடையே கொடுத்து நூல் உருவாக்கியுள்ள திறமையைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

பிற பணிகளை ஒதுக்கி விட்டு, அன்றும், அடுத்த நாளும் நூல் முழுவதும் படித்து முடித்தேன். செம்மையாக முத்துகிருஷ்ணன் உருவாக்கியுள்ளார் என்ற எண்ணமே என் உள்ளத்தில் மேலோங்கி நின்றது.

நூலின் செம் பாதிக்கு மேல், தினமலர் பத்திரிகையை டி.வி.ஆர்., நிறுவி வெற்றி கண்டதைப் பற்றியதாகும். அந்த நிறுவனத்தை டி.வி.ஆரின் மக்களும், பேரப் பிள்ளைகளும் இன்று ஒற்றுமையுடன் வளர்த்து வருகின்றனர். தனது மக்களை இந்தப் பணியில் ஈடுபடுமாறு செய்தது டி.வி.ஆரின் குடும்பத் தலைமைக்குத்தக்க உதாரணமாகும்.

எஸ்.வையாபுரிப்பிள்ளை, "தினமலர்' இதழை செப்., 6,1951 வெளியிட்ட அன்று, அவருடன் நானும் சென்றிருந்தேன். சி.ஓ.மாதவன் தலைமை தாங்கினார். கவிமணி ஒரு வாழ்த்துப் பாவால் தினமலர் இதழை வரவேற்றார்.அன்று சாதாரண நிலையில் உருவான, "தினமலர்', திருவிதாங்கூர் தமிழர் எழுச்சியால் பிரபலம் அடைந்து, இன்று, ஆலமரம் போல் படர்ந்து அனேகமாக ஒவ்வொரு மாவட்டங்களிலிருந்தும் வெளியிடப்படுகிறது. அந்த வளர்ச்சி, பாராட்டத்தக்கது; பெருமைப்படத்தக்கது.

டி.வி.ஆர்., பத்திரிக்கை வளர்ப்பதில் காட்டிய ஆர்வம், வகுத்த நெறிமுறைகள், அரசியல், தனிமனித எதிர்ப்புகள், அஞ்சா நெஞ்சம், பிறரை அணைத்துச் செல்லும் ஆற்றல், மன்னித்து மறக்கும் பெருந்தன்மை முதலியவற்றை முத்துகிருஷ்ணன் திறம்படக் கூறி இருக்கிறார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 2:08 am

சுவாமி செல்லையா

நான் இப்போது சொல்லப் போவது 45 ஆண்டுகளுக்கு முன் உள்ள செய்திகளாகும். அன்றைய நாட்டு நிலை, சமூகப் பிரச்னை போன்றவற்றை நினைவில் கொண்டு இதைப் பார்க்க வேண்டும்.

அந்தக் காலங்களில் சமூக நீதிக்காக அரிஜனங்களிடையே பல கூட்டங்கள் நடைபெறும். இம்மாதிரி நடைபெற்ற கூட்டங்களுக்கு டி.வி.ஆர்., பலமுறை தலைமை தாங்கியுள்ளார்.

டாக்டர் நாயுடு அன்றைக்கு அரிஜனங்களின் இயக்கத் தலைவர். அவருடனும் ஜீவானந்தம் போன்றவர்களுடனும் பல ஊர்களுக்கு அரிஜன முன்னேற்றக் கூட்டங்களுக்கு டி.வி.ஆர்., போவதுண்டு. எங்களுக்குப் பக்கத்துணை அவர்தான். 1960ல் அரிஜனத் தொண்டிற்காக டாக்டர் நாயுடுவுக்கு அரசு பதக்கம் தந்த போது, டி.வி.ஆர்.,க்கும் தந்ததாக என் நினைவு. பொருளாதாரத்திலும், கல்வியிலும் அரிஜனங்கள் முன்னேற வேண்டுமென்று அடிக்கடி சொல்வார்.அரிஜனங்களிடையே அடிக்கடி தோன்றும் பூசல், சிறு பொருளாதாரப் பிரச்னைகளினால் தான் வரும். டி.வி.ஆர்., தானே அந்தச் சிக்கல்களைத் தீர்க்கப் பணம் தந்து, பிரச்னைகள் கிராமங்களில் எழாமல் பார்த்துக் கொள்வார். போலீஸ், கோர்ட் இவற்றுக்கு அரிஜனங்கள் செல்வதை அவர் சுத்தமாக வெறுத்தார், தடுத்தார் என்று கூடச் சொல்லலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 2:08 am

* தேரூர் சிவன்பிள்ள

எஸ்.சிவன் பிள்ளை கவிமணி பிறந்த தேரூரில் டிச., 21, 1910ல் பிறந்தவர்

காந்திஜியின் தண்டியாத்திரையால், கல்லூரியில் படிக்கும் போதே உத்வேக முற்று, கல்லூரியில் கொடி ஏற்றியவர். 1933ல் சட்டப் படிப்பு முடித்து நாகர்கோவிலில் வழக்கறிஞரானார். பின்னர் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார்.

டாக்டர் எம்.இ.நாயுடு உடன் 1930-40 வரை சேர்ந்து நாஞ்சில் நாட்டில் அரிஜன சேவைகளில் தீவிரமாக உழைத்தார். 1938, 1939 ஆண்டுகளில் கைதியாக 14 மாதங்களுக்கு மேல் சிறை வாழ்க்கை. 1942 போராட்டத்தில் ஏழு மாத சிறை அனுபவித்தார். இவர் மீது ஜன., 6, 1947ல் சுசீந்தரம் தேரில் கொடி ஏற்றியதற்காக கிரிமினல் வழக்கு போடப்பட்டது.

குடும்பத்துடன் 1946ல் சென்னையில் காந்திஜியைச் சந்தித்தார் சிவன் பிள்ளை. இதன் எதிரொலியாக வக்கீல் தொழிலை விட்டு விட்டுத் தேரூரில் கஸ்தூரிபாய் ஆதாரப்பள்ளியைத் தொடங்கினார்; இன்று அது நடுநிலைப்பள்ளி. 1950 முதல் 1952 வரை இரண்டாண்டுகள் பாராளுமன்ற உறுப்பினராயிருந்தார்.

தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 5 PHOTO_03c

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 2:08 am

தேரூர் சிவன்பிள்ளை

இந்தப் பகுதியில் 35 ஆண்டுகளுக்கு முன் தீண்டாமை ஒழிப்புப் போர் தீவிரமாக நடைபெற்றது. அதற்குத் தலைவர் டாக்டர் எம்.இ.நாயுடு. அந்த இயக்கத்தில் காசிப் பண்டாரமும், பிரபல காந்தியவாதியும், எழுத்தாளராகவும் இருந்த பொ.திரிகூட சுந்தரம் பிள்ளை, படேல் சுந்தரம்பிள்ளை, டி.வி.ஆர்., நான் ஆகியோர் இருந்தோம். இதில் முழுமூச்சாகச் செயல்பட்டவர் டி.வி.ஆர்., தான்.

அப்போது இந்தப் பணிக்காகத் "தீண்டாமை விலக்குச் சங்கம்' என்ற ஒரு ஸ்தாபனத்தையும் வைத்திருந்தோம். மேல்ஜாதிக்காரர்கள், என அழைக்கப்பட்ட நாங்கள், கிராமங்களுக்குப் போய் காந்தி பஜனை செய்வோம்.

அப்போது கையாண்டது "தாம்பூல விழா' என்ற முறையாகும். சேரிகளுக்குப் போனதும் அரிஜனங்களின் வீடு வீடாகப் போய் தாம்பூலம் கொடுத்து, அவர்களை ஊரம்மன் கோயிலில், (சேரிக்குச் சேரி ஒரு கோயில் இருக்கும்) கூட்டுவோம். பின் அவர்கள் முன்னேற்றத்திற்காக பிரசாரம் செய்வோம். அப்போது சிறுசிறு வினியோகங்களும் அனைவருக்கும் தருவோம். சுண்டல், பொங்கல் இவற்றைத் தயாரித்துக் கொண்டு போய் நாங்களே பரிமாறுவோம்.

இதில் எல்லாம் முன்னிலையில் நின்றவர் டி.வி.ஆர்.,

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 2:09 am

அரிஜனங்களின் பெருமையை விளக்க நாகர்கோவிலில் "நந்தனார்' நாடகம் போட்டோம். இறைச்சகுளம் ஐயர் ஒருவர், பெயர் ஞாபகமில்லை, அதில் வேதியராக அருமையாக நடிப்பார்.

அப்போது பாபு ராமனுஜ தாஸ் என்று ஒருவர் உண்டு. நல்ல தொண்டர். கழுத்தில் தப்பட்டையை மாட்டி தானே அதை அடித்துச் சேரி மக்களை ஒன்று கூட்டுவார். அந்த இயக்கத்திற்கு எல்லாம் மிகவும் உதவியவர், எங்களுடன் சேரிகளுக்கு அலைந்தவர் டி.வி.ஆர்.,

இதற்கெல்லாம் பணம் வேண்டுமே? நாயுடு அரிஜன இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர்தான். ஆனால், பணம் கொடுப்பதில் கொஞ்சம் கசறுவார். ஆனால், எந்தச் சமயம் போய் கேட்டாலும் 100 ரூபாய் குறையாமல் டி.வி.ஆர்., தருவார். அந்தக் காலத்தில் 100 ரூபாய் சாதாரணமல்ல, என்கிறார்.

"நந்தனார் நாடகம்' பற்றி அவர் விளக்குகையில், "நாடகத்தை நடத்த சாமானியமாக யாரும் அனுமதிப்பதில்லை. கடுமையான எதிர்ப்பு. நாடகத்திற்கு யாரும் போகக்கூடாது என்று அந்தந்த ஊர் மேல் ஜாதிக்காரர்கள் நாடகம் நடக்கப் போகும் இடத்தின் பக்கமே அன்றைக்குச் செல்லமாட்டார்கள். டி.வி.ஆர்க்கு ஒரு தனிக்குணம் உண்டு. நியாயமான ஒன்றைச் செயல்படுத்த முனையும்போது, அதற்கு எதிர்ப்பு வந்தால், மிக்க மகிழ்ச்சியுடன் அதை வரவேற்று முறியடிப்பதில் அவருக்கு அதிக ஆசை உண்டு. கடுமையான எதிர்ப்புக்கு இடையே நாடகக் கொட்டகையில், முன்வரிசையில் சேர் போட்டு மிக உற்சாகமாக, வழக்கமான அவரது பாணியில் கால்மேல் கால்போட்டு உட்கார்ந்திருந்ததை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை, என்கிறார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 2:09 am

வழிகாட்டியது

திருவிதாங்கூர் சமஸ்தானம் தனது ஆளுகைக்குட்பட்ட திருக்கோயில்களை அரிஜனங்களுக்காக, இந்தியாவிலேயே முதன் முறையாகத் திறந்து விட உத்தரவிட்டது. நவ., 12, 1936ல் இதற்கான உத்தரவை மகாராஜா பிறப்பித்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:

நமது இந்து மதத்தின் மேல் பெரும் நம்பிக்கை உள்ளவன் என்ற முறையிலும், நமது தெய்வீகப் போதனைகள், நமது சகிப்புத் தன்மை இவைகளின் அடிப்படையில் பிறப்பு அல்லது ஜாதி அல்லது சமுதாயக் காரணங்களுக்காக நமது இந்து சமுதாயத்தினருக்கு, இந்து மதத்தின் சலுகைகள் எதுவும் மறுக்கப்படக்கூடாது என்று கருதுகிறோம்.

நமது இந்து மதம் மாறி வரும் காலத் தேவைகளுக்கு ஏற்பத் தன்னை மாற்றிக் கொண்டே வந்திருக்கிறது. பல நூற்றாண்டு வரலாறுகள் இவற்றை நமக்கு எடுத்துக்காட்டவே செய்கின்றன.

இவற்றைக் கவனத்தில் கொண்டு நல்ல சூழ்நிலையைப் பாதுகாக்கவும், மதச்சடங்குகளைப் பேணவும், நமக்குள்ள விதிகளுக்கு உட்பட்டு இந்த உத்தரவைப் பிறப்பிக்கிறோம்.

இனிமேல் பிறப்பு அல்லது ஜாதி அடிப்படையிலான எந்த ஓர் இந்துவும், நமது கட்டுப்பாடுகளுக்குட்பட்டுள்ள திருக்கோயில்களில் நுழைய எந்த ஒரு கட்டுப்பாடும் இனி இருக்ககூடாது என்று உத்தரவிடுகிறோம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 2:09 am

காந்தி அடிகள்

காந்தியடிகள் 1927, 1934, 1936 ஆகிய ஆண்டுகளில், நாகர்கோவிலுக்கு வந்திருக்கிறார். சர்.பி.சி.ராமசாமி ஐயர் தீண்டாமை ஒழிப்பில் தீவிரம் காட்டி, கோயில்களுக்குள் அரிஜனங்கள் செல்ல வகை செய்ததைப் பாராட்டுவதற்காகவே, 1936ல் காந்தியடிகள் நாகர்கோவிலுக்கு வந்திருக்கிறார். திருவிதாங்கூர் சமஸ்தானம் அரிஜனங்களுக்குக் காட்டிய சலுகையை எஸ்.எல்.பி., பள்ளி மைதானத்தில் காந்தியடிகள் பாராட்டிப் பேசினார்.
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 5 PHOTO_03d

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 2:10 am

தீண்டாமை வெறி இப்பகுதியில் மிகக் கொடுமையாக இருந்திருக்கிறது. கொடுமை பலமாக இருந்ததால், உலக மாற்றங்களை, சமூக அமைப்புகளின் மாறுதல்களை விரும்புவோர், இந்தப் பழமைப் போக்கை எதிர்த்து துணிச்சலாகப் போராடவும் முன் வருவது இயற்கை தானே! அரிஜனங்களை மிகவும் அன்புடன் அரவணைக்கும் போக்கு, இங்கு முதல் முதல் தீவிரமாக உருவானதற்கும் சரித்திரப் பூர்வமான காரணங்கள் பல இருந்தன.

அரிஜனக் கொடுமைகளை நீக்குவதற்குப் பலர் முன்வந்து செயல்பட்டதற்கான சான்றுகளும் உள்ளன. தீண்டாமைக் கொடுமை உச்சத்தில் இருந்த சமஸ்தானம் அது. அதை வலுக்கட்டாயமாகக் கடைப்பிடிக்கும் மக்களுக்குள்ளே நியாய உணர்வோடு அதை எதிர்த்து முறியடிக்கும் போர்க்குணமும் எழுந்துள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ளக் கடமைப்பட்டுள்ளோம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 2:10 am

ஆர்.எஸ்.ஆறுமுகம்

எம்.பி., - எம்.எல்.ஏ., போன்ற பதவிகளில் இருந்த ஆர்.எஸ்.ஆறுமுகம் தனக்கும், டி.வி.ஆர்க்குமிருந்த 30 ஆண்டுக்கால தொடர்புகள் பற்றிக் கூறுகிறார்:

பொது வாழ்க்கையில் பல சமயம் நான் சோர்வடைந்து அவரிடம் செல்வேன். அப்போதெல்லாம் என்னை உற்சாகப்படுத்தி அனுப்புவார். நான் ஒரு தாழ்த்தப்பட்டவன் என்ற காரணத்திற்காகவே என் மீது அதிக அன்பும், பாசமும், பரிவும் அவர் காட்டி வந்தார். உண்மையான காந்திஜியின் சீடராகவே அவர் எனக்குக் காட்சி தந்தார். நான் பார்லிமெண்ட் உறுப்பினராக இருந்தபோது "அரிஜனங்கள் முன்னேற வேண்டும். அது ஒன்றுதான் நாடு முன்னேற வழி. அதற்கான திட்டங்களைப் பார்லிமெண்ட்டில் கொண்டு வாருங்கள்' என அடிக்கடி என்னிடம் கூறுவார், என்று கூறினார். இனி, தங்கையா கூறுவதை கேட்கலாம்:

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 2:11 am

தங்கையா

தங்கையா அன்றைய திருவிதாங்கூருடன் இணைந்திருந்த தேவிகுளம், பீர்மேடு பகுதியில் காங்கிரசைத் தோற்கடித்து வெற்றி பெற்ற (தி.தா.கா., அரிஜன) சட்டமன்ற உறுப்பினர். இது ஒரு இரட்டை மெம்பர் தொகுதி.

"எங்களுக்கு ஒரே தலைவர் குஞ்சன் நாடார்தான். அவருடன் நான் பலமுறை திருவனந்தபுரம், "தினமலர்' ஆபீசுக்குப் போயிருக்கிறேன். குஞ்சன் நாடார் பெரிய படிப்பாளி. மலையாளம் சரளமாகப் பேசுவார். நான் சட்டமன்ற உறுப்பினர் என்ற போதிலும், இவ்விருவருக்கும் இடையில் நான் மிகச் சாதாரணமானவன்தான். இருவரும் பேசுவதைப் பக்கத்தில் உட்கார்ந்து கேட்பேனே தவிர, அதில் கலந்து கொள்ள மாட்டேன். குஞ்சன் நாடார் போன்றோரே டி.வி.ஆரிடம் ஆலோசனை கேட்கும் அளவில் அவர் இருந்தார். அவர் ஒரு ராஜதந்திரி. இது எப்படி இருந்தாலும் டி.வி.ஆர்., எங்கள் இருவரையும் ஒரே பாணியில்தான் வரவேற்று மரியாதை கொடுப்பார்' என்றார்.

பள்ளிக்கூடப் பருவம் முதல் தனது கடைசிக்காலம் வரை அரிஜனங்கள் மீது தனிப்பாசம் டி.வி.ஆர்க்கும் இருந்தது. அரசியல்வாதிகளோ, மற்றவர்களோ பாசம் வைத்திருந்தால் அதற்குக் காரணங்கள் இருக்கலாம். ஆனால், டி.வி.ஆர்., உளப்பூர்வமாக அரிஜனங்கள் முன்னேற்றம் காணாத ஒரு தேசத்தில், மற்ற முன்னேற்றங்கள் சாத்தியப்படாது என்று திடமாக நம்பினார். இதுவும் அவரை நமக்கு வித்தியாசமானவராகக் காட்டுகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 2:11 am

எல்லாருக்கும் கல்வி: கன்னியாகுமரியில் ஒரு புரட்சி!.

டி.வி.ஆரின் வாழ்க்கையை உற்று நோக்கும்போது, அவருக்கு எப்போதுமே தான் பிறந்து வளர்ந்த நாட்டு மக்களின், நல்வாழ்விற்குப் பாடுபட வேண்டும் என்ற ஒரு சமுதாயப் பார்வை இருந்து வந்திருப்பது தெளிவாகவே புலனாகிறது.

சமுதாய முன்னேற்றம் என்ற கண்ணோட்டத்தில் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட நம் நாட்டின் தலைவர்கள், கல்வியின் அவசியத்தை மிக அதிகமாக உணர்ந்து, அதற்காகப் பாடுபட்டு வந்தனர். அதற்காகப் பெரும் தியாக வாழ்க்கையை வாழ்ந்திருக்கின்றனர்.

அடிமைப்பட்ட மக்கள், தாங்கள் அடிமைப்பட்டிருக்கிறோம், சுதந்திரம் பெற்ற மக்களாக வாழ வேண்டும், உலகத்தின் முன்னேற்றங்களை எல்லாம் நாம் எய்த வேண்டும் என்ற நினைப்பிற்கு வருவதற்கும், நல்ல தரமான கல்வி தேவைப்பட்டது. ஜாதி, மதம் போன்ற குறுகிய நோக்கில் இருந்து சமுதாயம் விடுபட வேண்டும் என்றாலும், அதற்குக் கூட கல்விதான் துணை செய்ய முடியும். வசதியானவர்களுக்கு மட்டுமே கல்வி கிட்டும் என்ற நிலையை முதலில் தகர்த்து, எல்லாருக்கும் கல்வி, அதுவும் எளிமையாகக் கிட்டுமாறு மாற்றப்பட வேண்டும். இந்தக் கண்ணோட்டத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பே கல்வித் தொண்டில் தன்னை முழுக்க முழுக்க டி.வி.ஆர்., ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.

"தேவி' ஆசிரியர் மகாலிங்கம் முதலியார், தான் கண்ட காட்சி ஒன்றை சிறப்பாக கூறுகிறார்:

Sponsored content

PostSponsored content

Page 5 of 14 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக