புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 3 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 3 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 3 Poll_c10 
85 Posts - 45%
ayyasamy ram
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 3 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 3 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 3 Poll_c10 
76 Posts - 40%
T.N.Balasubramanian
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 3 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 3 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 3 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 3 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 3 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 3 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 3 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 3 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 3 Poll_c10 
5 Posts - 3%
prajai
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 3 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 3 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 3 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 3 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 3 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 3 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 3 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 3 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 3 Poll_c10 
2 Posts - 1%
சிவா
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 3 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 3 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 3 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 3 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 3 Poll_c10 
440 Posts - 47%
heezulia
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 3 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 3 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 3 Poll_c10 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 3 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 3 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 3 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 3 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 3 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 3 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 3 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 3 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 3 Poll_c10 
30 Posts - 3%
prajai
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 3 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 3 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 3 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 3 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 3 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 3 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 3 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 3 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 3 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 3 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 3 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 3 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை


   
   

Page 3 of 14 Previous  1, 2, 3, 4 ... 8 ... 14  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 12, 2008 3:37 pm

First topic message reminder :

தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 3 Kadal-thamarai


முன்னுரை



டி.வி. இராமசுப்பையர் அதிசய மனிதருள் ஒருவர்.


நண்பர் தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை எனும் டி.வி.ஆர்., வாழ்க்கை வரலாறு நூலுக்கு முன்னுரை ஒன்று எழுத வேண்டும் என்று கேட்டுக் கொண்ட போது, தயக்கமும், மகிழ்ச்சியும் ஊடாட ஒப்புக் கொண்டேன்.

நான் பிறந்து வளர்ந்து, இப்போது வாழ்ந்து வரும் வெள்ளாங்குடியின் அருகில் உள்ள தடிமார் கோவில் கிராமத்தில் டி.வி.ஆர்., பிறந்தார். இளமைப் பருவத்தின் பெரும் பங்கை அங்கே தான் செலவழித்தார். வடிவீசுவரத்திற்கு தனது இருக்கையை மாற்றிய போதும், வட சேரி கிராமத்திற்கு மாதத்தில் பலமுறை வந்து செல்வார். எனவே, ஊர்ப்பற்றுக் காரணமாக, சார்புடன் முன்னுரையை எழுதி விடுவேனோ என்ற பயத்தால் தயக்கம் எழுந்தது.

டி.வி.ஆரையும், அவர், தன்னுடன் அழைத்துச் செல்லும் மக்களையும் - ஒன்றிரண்டு நாள் அவர் மருமகனையும் - நான் அகல நின்று 1941ம் ஆண்டிற்கு முன் பார்த்து இருந்தாலும், நாகர்கோவில் கிளப்பில் உறுப்பினன் ஆன பின்தான் அந்த கிளப்பின் செயலாளர் என்ற நிலையில் டி.வி.ஆரை அறிந்திட முடிந்தது. சமுதாய நன்மைக்கு அவர் செய்த பணிகளைத் தெரிந்திடவும் வாய்ப்பு ஏற்பட்டது. 1963ம் ஆண்டு, காசி சர்வ கலாசாலை போல் கன்னியாகுமரியில் பல்கலைக்கழகம் அமைக்கும் ஆலோசனைக்கு டி.வி.ஆர்., மிகவும் துணை நின்றார். அவர்தான் அந்த ஆலோசனைக் குழுவின் தலைவர். எனவே, நட்புறவாலும், அன்பாலும் கட்டுப்பட்ட என்னிடம், டி.வி.ஆரைப் பற்றி எழுதுவதில் இனந்தெரியாத மகிழ்ச்சி எழுந்தது.

ஆய்வு நிறுவனம், அறநிலையங்கள் முதலியவற்றைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டவர்களுக்கு மார்ச் மாதம் கெடுபிடியானது. அம்மாத முதலில் தான் இந்த வரலாற்று நூல் கிடைத்தது. கிடைத்த நாள் மாலை, நூலின் ஒரு சில பகுதிகளைப் படித்தேன். மிக சுவையாக நூல் வளர்ந்து சென்றது. தெளிவுகளைத் திரட்டி, சம காலத்தவர்களின் எண்ணங்களை இடை இடையே கொடுத்து நூல் உருவாக்கியுள்ள திறமையைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

பிற பணிகளை ஒதுக்கி விட்டு, அன்றும், அடுத்த நாளும் நூல் முழுவதும் படித்து முடித்தேன். செம்மையாக முத்துகிருஷ்ணன் உருவாக்கியுள்ளார் என்ற எண்ணமே என் உள்ளத்தில் மேலோங்கி நின்றது.

நூலின் செம் பாதிக்கு மேல், தினமலர் பத்திரிகையை டி.வி.ஆர்., நிறுவி வெற்றி கண்டதைப் பற்றியதாகும். அந்த நிறுவனத்தை டி.வி.ஆரின் மக்களும், பேரப் பிள்ளைகளும் இன்று ஒற்றுமையுடன் வளர்த்து வருகின்றனர். தனது மக்களை இந்தப் பணியில் ஈடுபடுமாறு செய்தது டி.வி.ஆரின் குடும்பத் தலைமைக்குத்தக்க உதாரணமாகும்.

எஸ்.வையாபுரிப்பிள்ளை, "தினமலர்' இதழை செப்., 6,1951 வெளியிட்ட அன்று, அவருடன் நானும் சென்றிருந்தேன். சி.ஓ.மாதவன் தலைமை தாங்கினார். கவிமணி ஒரு வாழ்த்துப் பாவால் தினமலர் இதழை வரவேற்றார்.அன்று சாதாரண நிலையில் உருவான, "தினமலர்', திருவிதாங்கூர் தமிழர் எழுச்சியால் பிரபலம் அடைந்து, இன்று, ஆலமரம் போல் படர்ந்து அனேகமாக ஒவ்வொரு மாவட்டங்களிலிருந்தும் வெளியிடப்படுகிறது. அந்த வளர்ச்சி, பாராட்டத்தக்கது; பெருமைப்படத்தக்கது.

டி.வி.ஆர்., பத்திரிக்கை வளர்ப்பதில் காட்டிய ஆர்வம், வகுத்த நெறிமுறைகள், அரசியல், தனிமனித எதிர்ப்புகள், அஞ்சா நெஞ்சம், பிறரை அணைத்துச் செல்லும் ஆற்றல், மன்னித்து மறக்கும் பெருந்தன்மை முதலியவற்றை முத்துகிருஷ்ணன் திறம்படக் கூறி இருக்கிறார்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 12, 2008 4:15 pm

தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 3 PHOTO_01b

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 12, 2008 4:17 pm

கோட்டார் மார்க்கெட்டும் - முன்பு அதற்கு கம்பள பஜார் என்று பெயர் - வடசேரிச் சந்தையும்தான் வியாபாரத் தலங்கள். அந்தப் பழைய மார்க்கெட் இன்று இல்லை. அவை கன்னியாகுமரி சாலையில் பல கடைகளாகப் பெருகிவிட்டன. திருவனந்தபுரத்தில் பயறுகள், வற்றல், மல்லி, போன்ற பலசரக்குகள் கிடையாது



நல்ல மிளகு, ஏலம், சுக்கு, இவை தான் உண்டு. ஆகவே, அங்கிருந்தும் உணவுக்கான பலசரக்குகள் வாங்க இங்குதான் வருவர். உணவுப் பழக்கம், தமிழ்நாட்டைப் போலல்லாமல், மிகவும் மாறுபட்டே இருந்தது. அரிசி அதுவும் ஒரு வகை மோட்டா சம்பா அரிசி, சிவப்பு வண்ணத்தில் இங்கு உண்டு. அதைத்தான் சகல பகுதி மக்களும் உணவாகக் கொள்வர். மரச்சீனிக் கிழங்கு அதிகமாக விளைந்தாலும், அதை உண்பது கேவலமாக கருதப்பட்ட காலம் அது. ஏந்தம்பழ அப்பம், ஏந்தம்பழ வறட்டு மிகப் பிரபலமானது. சர்க்கரை, நெய் சேர்த்துத் தயாரிக்கப்படும் வறட்டு, மூன்று மாதம் வரை கெடாமல் இருக்கும். சென்னை போன்ற பல வெளியூர்களுக்கு இது அனுப்பப்பட்டது. சர்க்கரை உப்பேரி கல்யாண வீடுகளில் சிறப்பாகப் பயன்படுத்தப்படும்.

அந்த உணவு வகைகளைக் கவிமணி அழகாகக் கூறுகிறார்:

அவியல், பொரியல், துவையல், தீயல், பச்சடி
தொவரன், கிச்சடி, சட்டினி, சாம்பார், கூட்டு
தயிர், புளிசேரி, பருப்பு, பப்படம், பாயசம்
பிரதமன், பழமிவையோடு படைத்துப் போட
எத்தனை நாளைக்கெங்களால் இயலும்?

பழங்கள் அன்றாட உணவில் இங்கு அதிமுக்கியத்துவம் பெற்றிருந்தன. அங்குக் கிடைத்த பழங்களின் வகைகளே கேட்க மிகச் சுவையாக இருக்கும். வாழைப் பழங்களில்தான் எத்தனை வகைகள்! ஏந்தன், செந்துளுவன், வெள்ளைத் துளுவன், சிறு துளுவன், மட்டி, கருமட்டி, சிங்கன், கூம்பில்லா சிங்கன், கதலி, பாளையங்கோட்டை, ரஸ்தாளி, ரசகதலி, மொந்தன், பேயன், நற்கதலி, பூங்கதலி, இப்படியாக அடுக்கிக் கொண்டே போகலாம்.

நாஞ்சில் நாட்டின் நாணயச் செலாவணியிலும் மிகுந்த வித்தியாசம் உண்டு. ஒரு ரூபாய் நாணயம் அச்சடிக்க, திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு பிரிட்டிஷ் அரசு அனுமதிக்கவில்லை. அதற்குக் கீழ் உள்ள நாணயங்களை அவர்கள் அச்சடித்தனர். அந்த நாணயங்கள் மூன்று வகைப்படும். பணம், சக்கரம், காசு என்று பெயர். பணம் என்பது திருவிதாங்கூர் நாணயத்தில் 4 சக்கரம் மதிப்புடைய வெள்ளி நாணயம். காசு என்பது செப்புக் காசு. குறைந்த மதிப்புடையது. திருவிதாங்கூர் நாணயத்தில் ஒரு சக்கரத்திற்கு 16 காசு வழக்கத்தில் இருந்தது. இந்தக் காசு முன்பு புழக்கத்தில் இருந்த நயா பைசா போல அமைப்பில் இருந்தது. அரை ரூபாய், கால் ரூபாய் நாணயங்களும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்திருக்கின்றன.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 12, 2008 4:17 pm

நாகர்கோவில் நகரில் ஏராளமான பெரிய பெரிய குளங்கள் இருந்துள்ளன. கள்ளர்குளம் இன்று ஸ்டேடியமாகி விட்டது. இன்றைய முனிசிபல் கட்டடம் சிறைச் சாலையாக இருந்திருக்கிறது. கைதிகளை இக்குளத்திற்கு குளிப்பதற்காக சிறைச் சாலையிலிருந்து கூட்டி வருவார்களாம். அதனால், இதற்குக் கள்ளர்குளம் என்று பெயர். செம்மான் குளம் என்பதுதான் இன்றைய பஸ் ஸ்டாண்டு. பல குளங்கள் இப்போதும் உள்ளன. இவைதான் குளிப்பதற்கு, கால் நடைகளுக்கு, என எல்லா உபயோகத்திற்குமாக இருந்துள்ளன.

கிராமியக் கலைத் தொழிலாளர் ஏராளம். பொதுவாக மர வேலையில் இங்குள்ளவர் கைதேர்ந்தவர். வீடுகளில் மரவேலைப்பாடு பிரதானமாகக் காணப்படும். மரங்களில் கடைசல் பிடிப்பது ஒரு கலை. அதற்கு மரங்களை குளத்தில் பல நாள் ஊறவைத்து இருக்க வேண்டும். அதற்கென ஒரு குளம். அதுதான் கடைசல்காரன்குளம். வீடுகளில் தென்னங்கீற்று சாதாரணமாகப் பயன்படுத்தப்படும். அழகும், பல ஆண்டுகள் கெடாமல் இருக்கும் வகையில் இவற்றை உருவாக்கி இருப்பர். இது, இங்குள்ள பிரபலமான கலைப் படைப்பாகும்.

பஸ் ஸ்டாண்டு அருகில் உள்ள பெரிய இடம், வெள்ளைக்கார இன்ஜினியர் தங்கியிருந்த வீடு. அதைப் பூங்காவாக மாற்ற நினைத்த போது, அந்த வெள்ளைக்காரர், அந்த இடத்தை விட்டுக் கொடுக்க மறுத்தாராம்.ஒரே நாளில் சமஸ்தான செல்வாக்கில் அவர் காலி செய்யப்பட்டாராம்.

இதுவரை, 85 ஆண்டுகளுக்கு முன்புள்ள நாகர்கோவில் நகரை முடிந்த அளவு வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளோம். இதிலும், முழுமையான சித்திரம் சொல்லப்பட்டு விட்டதாகக் கூற முடியாது.

நாகர்கோவில் நகரம் செல்வாக்காக இருந்தாலும், அதன் தேவைகள் மிக அதிகமானதாகவே இருந்திருக்கின்றன. பழக்க வழக்கங்கள், கலை, கலாச்சாரம், மொழி, உடை, பாவனைகள். பழமையில் ஊறிப் போன கட்டுப்பெட்டித்தனம், தாய்மொழியே காதில் கேட்க முடியாத கல்வி. நாணய வேறுபாடு, உணவு வகைகளில் தனக்கு என ஒரு நடைமுறை. ஆட்சி, சட்ட திட்டங்களில் தனி மாறுதல் - இப்படியாக அந்த நகரம் இருந்தது என்பது உண்மை.

தொழில் அதிபர்கள், சமூக சேவையில் முன்னணியில் இருந்தவர்கள் மற்றும் தமிழ் எழுத்தாளர்களை வியப்பில் ஆழ்த்திய நமது வரலாற்று நாயகரான, டி.வி.ஆர்., 85 ஆண்டுகளுக்கு முன், நாகர்கோவிலின் ஒரு பகுதியான தழுவிய மகாதேவர் கோவில் என்ற கிராமத்தில் பிறந்தார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 12, 2008 4:18 pm

தழுவிய மகாதேவர் கோவில்

நாகர்கோவில் ஒட்டி உள்ள பகுதி வடசேரி. அங்கு, "தழுவிய மகாதேவர் கோயில்' பெயர் பெற்ற கோயிலாகும். இது, நாகர்கோவில் வடசேரியில் அன்றைக்குப் பிரபலமாக இருந்த கிராமமாகும். ஆரம்பத்தில், தழுவிய மகாதேவர் கோயிலாக இருந்து, பின்னர் தழியல் மகாதேவர் கோயில் என்றாகி, பின்னர் தடிமார் கோயில் என்று ஆகிவிட்டது. கோயிலுக்கான பழம் புராண வரலாறு எதுவும் இல்லை. ஆனாலும், 500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கூறப்படுகிறது. கோயிலின் மூலவர் சிவபெருமான். அழகான அமைதியான கோயில். கோயிலுக்கு ஏறும் நடையில் கிழக்காகப் பார்த்து அம்மன் அருள் காட்சி தருகிறாள்.

குமரி மாவட்டத்திலுள்ள வடசேரி தழியலிங்கம், சுசீந்திரம் தாணுலிங்கம், பூதப்பாண்டி பூதலிங்கம் இம்மூவரில், தழியல் லிங்கமே மூத்தவராகக் காணப்படுகிறார். ஒவ்வொரு வருடமும் தழியல் கோயில் திருவிழா ஆரம்பமான பின், மறுநாள் சுசீந்திரம் தாணுலிங்கம் கோயில் திருவிழா தொடங்குவதில் இருந்து இது உறுதியாகிறது. கோயில் கிழக்கு நோக்கி உள்ளது. இரட்டை வரிசையாக சுமார் 30, 35 வீடுகள். பிராமணக் குடும்பங்களே இங்கு வசிக்கின்றனர். பெரும்பாலும் ஓட்டு வீடுகளே. தரை செங்கல் பாவி இருக்கும். சுவர்கள் சுண்ணாம்பால் பளபளப்பாகத் தேய்க்கப்பட்டிருக்கும். பல ஆண்டுகளாகியும் அவற்றுள் சில இன்றும் கூட அழகு மாறாமலே இருக்கின்றன.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 12, 2008 4:19 pm

பழையாறு

ஊருக்குப் பக்கம், "பழையாறு' உள்ளது. அதிலிருந்து குடிதண்ணீர் கொண்டு வர சிறிய பாதை வழியே செல்ல வேண்டும். பெண்களுக்கு அது பழகிப் போன பெரிய வேலை.

அன்றைய ஆற்று நீர் மிகச் சுத்தமாக இருக்குமாம். காசு விழுந்தால் பளிச் சென்று தெரியும் அளவு சுத்தமான பளிங்குத் தண்ணீர். சுற்றுப்புறச் சூழல், சுத்தம் பற்றிப் பிரசாரம் இல்லாத காலம் அது. கோயிலுக்குப் பின்புறம் ஒரு பிரமாதமான பெரிய நல்ல குளம். வெளி உபயோகத்திற்காக உள்ளது.

நாகர்கோவிலின் ஒரு பகுதியான வடசேரியில் நாலாம் வகுப்பு வரை ஒரு பள்ளிக்கூடம். அது மலையாளப் பள்ளி என்று அன்றைக்கு அழைக்கப்பட்டிருக்கிறது. இன்று அது, அரசு உயர்நிலைப்பள்ளியாகி விட்டது. பள்ளிக்குப் பக்கத்தில் ஒரு சாஸ்தா கோயில் இருக்கிறது.

நான்காம் வகுப்பு முடித்ததும், மேற்கொண்டு படிக்க, குழந்தைகள் நாகர்கோவில் நகருக்குத்தான் போக வேண்டும். ஒத்தக்காளை, ரெட்டைக்காளை வண்டியில், மதிய உணவையும் எடுத்துக் கொண்டு குழந்தைகள் செல்வர். அப்படிப் படிக்கப் போகும் குழந்தைகள், ஊருக்கு ஒன்று இரண்டு இருந்ததே அந்தக் காலத்தில் அதிசயம். இவ்வாறு மாட்டு வண்டியில் நாகர்கோவிலுக்குச் சென்று படித்து வந்த குழந்தை, படித்து வளரும்போதே, தான் பிறந்த பூமியின் விசித்திரங்களை ஒரு பார்வையாளனாக மட்டும் இருந்து பார்க்க மட்டுமே செய்யாமல், பல மாறுதல்கள் இங்கு உருவாக்கப்பட வேண்டும் என்ற தீவிரம் கொண்டவனாக இருந்தான்.

தகவல்கள் உதவி: படேல் சுந்தரம் பிள்ளை, பேராசிரியர் வி.ஐ.சுப்பிரமணியம், சுந்தர ராமசாமி, உமைதாணு, கவிமணியின் நூல்கள் மற்றும் பல ஆவணக் குறிப்புகள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 12, 2008 4:20 pm

துள்ளித் திரிந்த பருவத்திலே,



துடுக்கு அடக்கிப்பள்ளி சேர்த்து...



தடி.வி.ஆரின் பள்ளிக்கூட வாழ்க்கை பற்றி நமக்கு இன்று கூறக்கூடியவர் அதிகம் இல்லை. (டி.வி.ஆரும் எதையும் எழுதி வைக்கவில்லை) தன் சொந்தக்காலில் நின்று, தானே திட்டமிட்டு,தமிழக மக்களின் நாடித் துடிப்புகளைச் சரியாக கணக்கிட்டு, அவர்களது அடிப்படைத் தேவைகள் கிடைக்கப் பாடுபட்டு, தனக்கென்று தமிழகத்தில் ஒரு தனி இடத்தைப் பெற்றவர், டி.வி.ஆர்., என்பதில் இரு வேறு கருத்துக்களுக்கு இடமில்லை. ஒரு தனி மனிதர் இந்த நிலைக்கு வரவேண்டுமானால், அதற்கான அடிச்சுவடுகள் அவரது இளமைக் காலத்திலேயே உருவாகி இருக்க வேண்டும்.

அந்தக் காலம் இந்திய நாடு முழுவதும் ஆங்கிலேய ஆட்சியாளர்களிடம் அடிமைப்பட்டிருந்த காலம். அதே சமயம் நாஞ்சில் நாடோ, ஒரு மன்னரின் ஆளுகையில் இருந்தது. ஆங்கிலேயருக்குத் தாங்கள் அடிமைகள் என்ற உணர்வு அவர்களுக்கு இல்லாமல் இருந்திருக்கலாம்;

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 12, 2008 4:21 pm

தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 3 PHOTO_02


ஆனால், மன்னர் ஆட்சியின் பழமைப் பிடிப்பு, அதில் பற்றுதல், அதைக் காப்பாற்றுதல் ஆகிய பிடிவாத குணங்கள் இருந்தன. அந்தக் காலத்தில் ஜாதி வெறி மேலோங்கி இருந்தது. தொழிலிலும், கல்வியிலும் நாட்டம் இல்லாத காலம். பெரும்பாலானவர் விவசாயத்தை நம்பியிருந்தனர்.

நிலத்தை நம்பி, கிராமியச் சூழ்நிலையில் வளர்கிறவர்களுக்குத் தங்களுடைய பழமைப் போக்குகளை விட்டு மாறுவது இயலாத காரியம்; உலக வரலாறுகள் இதை நமக்குக் காட்டுகின்றன.



அதிலும், பிராமணக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஒருவர், கட்டுத்திட்டங்களை உதறி, விரிந்த சமுதாயப் பார்வைக்கு வருவதெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத காலம் அது. நிலங்களை நம்பி இருப்பவர்கள், அதை உதறி விட்டுத் தொழில் துறையில் அடியெடுத்து வைப்பது அந்த காலத்தில் நினைத்துப் பார்க்க முடியாததுதான். இருந்தாலும், தனது பாரம்பரியக் குணங்கள், வழிவழியாக நம்பி இருந்த நிலம், உப்பளம் இவை அனைத்தையும் உதறிவிட்டு, வெளியே ஒருவர் வருவது மிகக் கடினமானது. ஆனால், டி.வி.ஆரின் வாழ்க்கையை ஆராயும் போது, அது ஜீவானந்தம் கூறியது போல், வித்தியாசமானதாகவே தோன்றுகிறது.

பள்ளிப் பருவம் பற்றிக் கூறியவர்கள் மிகக் குறைவானவர்களாக இருந்த போதிலும், கூடுமான வரை அவரது அந்தக்கால விசேட குணங்களைச் சரியாகவே சுட்டிக் காட்டி இருக்கின்றனர் என்று சொல்லலாம். அவருடன் அன்று பள்ளியில் படித்த இளம் மாணவர்கள் பலர், இன்று பல்வேறு துறைகளில் நாட்டில் தனித்தன்மையுடன் விளங்குகின்றனர். டி.வி.ஆருடன் படித்த சக மாணவர்கள், பிற்காலத்தில் அவருடன் இணைந்து பல்வேறு பணிகளில் பாடுபட்டுள்ளனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 12, 2008 4:22 pm

ப.ஜீவானந்தம்

தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 3 PHOTO_02a


குமரி மாவட்டம், பூதப்பாண்டியில் 1906ல் ப.ஜீவானந்தம் பிறந்தார். பெற்றோர் இட்ட பெயர் சொரிமுத்துப் பிள்ளை. நாகர்கோவில் உயர் நிலைப்பள்ளி ஆறாம் படிவத்தில் படிக்கும் போது, விடுதலை ஆர்வமிகுந்திருந்ததால் பள்ளியை விட்டு வெளியேற்றப்பட்டார். பூதப்பாண்டியில் காந்திஜியின் இயக்கத்தை ஒட்டி, அன்னியத் துணி விலக்கு இயக்கத்தைத் தொடங்கினார். பூதப்பாண்டியில் திருவிழாக் காலங்களில் தேரோடும் வீதிகளில் அரிஜனங்கள் வரக்கூடாது என்ற கட்டுப்பாட்டை எதிர்த்த காரணத்தால், 1920ல் வீட்டை வீட்டு வெளியேறினார்.


பின்னர் செட்டி நாட்டில் காந்தி ஆசிரமம் நிறுவி, காந்தியப் பணிகளை மேற்கொண்டார். அங்கு இவரது பெயர் ஜீவானந்தமாகி, பின்னர் ஜீவா என்ற பெயராலேயே தமிழ் மக்கள் பெரிதும் நேசிக்கும் தலைவரானார். வ.உ.சி., காந்திஜி முதலானோர் செட்டி நாட்டில் இவரது ஆசிரமத்திற்கு விஜயம் செய்து பாராட்டி உள்ளனர். 1932ல் காரைக்குடி காங்கிரஸ் போராட்டத்தில் ஓராண்டுச் சிறைத்தண்டனை அனுபவித்தார். 1935ல் இவர் கம்யூனிஸ்ட் ஆனார்.

தமிழகத்தின் பல தொழிற்சங்கங்களின் தலைவராகப் பணியாற்றினர். 1939ல் மீண்டும் சிறை வாழ்க்கை. 1942ல் சிறை மீண்ட ஜீவாவிற்கு, பூதப்பாண்டியை விட்டு வெளியேறக் கூடாதென்று தடை விதிக்கப்பட்டது. 1952ல் சென்னையில் சட்டமன்றத் தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். சிறந்த இலக்கிய மேதை, கம்பன், பாரதி இரு மகாகவிகளும் ஜீவாவின் முழக்கங்களால், தமிழ்நாட்டின் பட்டி தொட்டிகளில் எல்லாம் பிரபலமாயினர். உடல் நலக் குறைவினால் சோவியத் ருஷ்யாவில் சிகிச்சை பெற்றுத் திரும்பிய ஜீவா, 1963 ஜனவரி 18ல் மரணமடைந்தார்.


அரசியல், கலை, இலக்கியம் ஆகிய துறைகளில் தமிழகத்தில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்ற ஜீவானந்தம் கூறுகிறார்: நாங்கள் இருவரும் பள்ளித் தோழர்கள். அந்தக் காலத்திலேயே அவர் வித்தியாசமானவர். பல முற்போக்கு எண்ணங்கள் உண்டு. இது மேல்தட்டு மாணவர்களுக்குப் பிடிக்காது. பார்ப்பதற்கு ராமசுப்பு சாதுவாக இருந்ததால் (பார்ப்பதற்குச் சாதுபோல் என்று தான் ஜீவானந்தம் கூறினாரே தவிர, அவர் ஒரு சாது என்று கூறவில்லை.) மேல் தட்டு மாணவர்கள் சிலர், அவரது போக்கை மறைமுகமாகக் கேலி செய்வர். அது எனக்குத் தெரிந்தால் போதும், நான் அந்தப் பையன்களை நையப் புடைத்து விடுவேன். அப்போதெல்லாம் ராமசுப்பு, "ஏன் எனக்காக வீணாய்ச் சண்டைக்குப் போகிறாய்? சொன்னால் சொல்லி விட்டுப் போறான்' என்று என்னிடம் கூறுவார்.

ஜீவானந்தம் குறிப்பிடும் மேல்தட்டு மாணவர்கள் யார் என்ற ஆராய்ச்சி நமக்கு இப்போது தேவையில்லை. டி.வி.ஆரின் பெரும்பாலான நண்பர்கள் பிராமணர்கள் இல்லை. அந்தக் காலத்தில் இப்படிப்பட்ட கூட்டுக் காண முடியாதது. இதுவே அவரை வித்தியாசமானவராக காட்டினாலும், "இதையும் விட ஏதாவது ஒன்று மாதிரிக்குச் சொல்லுங்களேன்' என்று வெ.நாராயணன் அவர்களிடம் கேட்ட போது, அவர் கூறினார்:[center]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 12, 2008 4:24 pm

வெ.நாராயணன்

தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 3 PHOTO_02b

நாகர்கோவில் தழியல் மகாதேவர் கோவில் கிராமத்தில் ஏப்., 14, 1913ல் பிறந்த வெ.நாராயணன் முதுபெரும் எழுத்தாளர். இளமை முதலே அரசியல், இலக்கியம், கலைத் துறைகளில் அதிக ஈடுபாடு கொண்டதால், அவையே பின்னர் அவரை எழுத்தாளராக்கியது. கலை இலக்கியத்துறை பேரறிஞர்கள் பலரைக் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அழைத்து, இலக்கிய மாநாடுகள் நடத்தியவர்.


தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நாரணதுரைக் கண்ணன் தலைமையில் கூட்டியதும்; திருவிதாங்கூர் உயர்நீதி மன்ற நீதிபதி டி.என்.கிருஷ்ணசாமி ஐயர், திவான் சர்.சி.பி.ராமசாமி ஐயர், ஜீவா மற்றும் பல அறிஞர்களை மாநாடு ஒன்றில் கூட்டி வைத்துமாகிய இதுவே, திருவிதாங்கூர்த் தமிழர் இயக்கம் தோன்ற அடிப்படையாக அமைந்தது. திரைப்படத் துறையில் 25 வருடங்களுக்கு மேல் கலைவாணர் என்.எஸ்.கே., மற்றும் எம்.ஜி.ஆர்., ஆதரவில் பணியாற்றினார். கலைவாணருக்கு 30 வருடங்களாகத் தொடர்ந்து விழா எடுத்து நடத்தி வருபவர். காஞ்சிப் பெரியவர், ராஜாஜி, கலைவாணர் பற்றி வரலாற்று நூல்களை எழுதியவர். புதுமையும், துணிவும், ஆழமும் கொண்ட நீண்டகாலப் பத்திரிகையாளர் வெ.நா.,

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 12, 2008 4:35 pm

ஏராளமாகக் கூறலாம். ஒரு சுவையான சம்பவத்தை மட்டும் உதாரணத்திற்குக் கூறுகிறேன். ஒரு பிரச்னை என்று வந்தால், அந்தச் சிறு வயதிலேயே அதை வெற்றிகரமாக முடிக்கத் தக்க அளவு அவருக்கு ஆற்றல் இருந்தது. உடன் பழகும் சிறுவர்களுக்கும் அன்றைக்கு அவர் தான் தலைவர்.

டி.வி.ஆர்., இயல்பாகவே புரட்சி மனப்பான்மை உடையவர். அந்நாளில் எல்லாரும் குடுமி வைத்திருப்பர். நாகரிகம் வளர வளரக் குடுமி கிராப்பாக மாறிக் கொண்டே வந்தது. குடுமிக்காரர்கள் கேலிக்குள்ளாக வேண்டிய நிலை வந்தது. சிறுவர்களுக்கெல்லாம் "கிராப்பு வைத்துக் கொண்டால் என்ன?' என்று ஆசை; பெரியவர்கள் எதிர்ப்போ, மிகப் பயங்கரமானது. தீண்டாமையும், ஜாதிக்கட்டுப்பாடும், ஆசாரங்களும் தலைவிரித்தாடிய காலமது. கிராப்பு வைத்துக் கொள்ள வேண்டுமென்று வெளிப்படையாகச் சொல்லும் துணிச்சல் யாருக்கும் வந்ததில்லை. அந்நாளில் ஊருக்கு, தெருவுக்கு, ஜாதிக்கு என்று தனித்தனி முடி திருத்தும் கலைஞர்கள் உண்டு. அவர்கள் பெரியவர்களின் கட்டுப்பாட்டுக்குட்பட்டவர்கள். இவர்களில் மேல்ஜாதிக்கு வேலை செய்யக் கூடியவர்கள், கீழ்ஜாதிக்கு வேலை செய்யக் கூடியவர்கள் என்ற ஏற்றத்தாழ்வும் உண்டு.

கிராமத்துச் சிறுவர்களுக்குக் கிராப்பு வைத்துக் கொள்ள ஆசை. இது பற்றித் தலைவர் டி.வி.ஆரைக் கலந்தாலோசித்தோம். ஒரு முடிவு எடுக்கப்பட்டது. இதை ஏற்று நடத்தி வைத்தவரே டி.வி.ஆர்., தான்.

எல்லாச் சிறுவர்களும் ஒன்றாகக் கிராப்பு அடித்துக் கொண்டு விட்டால், பெரியவர்களின் எதிர்ப்பு, கோபம் எல்லாம் கொஞ்சம் நேரத்திற்கு இருக்கும். அப்புறம் சமாளித்து விடலாம் என்பதுதான் டி.வி.ஆர்., எடுத்த முடிவு. இதுபற்றி உள்ளூர் முடி அலங்காரக் கலைஞரை அணுகிய போது அவர்கள், "எங்களுக்கு வேண்டாம் இந்தப் பொல்லாப்பு' என்று மறுத்து விட்டனர். பின் வேறு ஒரு முடி அலங்கார கலைஞர் ஏற்பாடு செய்யப் பட்டார். அவர் சிலோன் போய் வந்தவர். அதனால், தைரியமாக ஒப்புக் கொண்டார்.

ஒரு நாள் காலை, சொல்லி வைத்தபடி எல்லாரும் தெருவுக்குப் பின்பக்கமாக உள்ள ஒரு குளத்தில் கூடினோம். முடி அலங்கரிப்பவரும் சதிபண்ணாமல் வந்து சேர்ந்தார். சாதாரணமாக அப்போது ஆளுக்கு ஒரு அணா, இரண்டு அணாதான் கூலி தருவது வழக்கம். ஆளுக்கு நாலு அணா வைத்துக் கொடுத்தோம். எல்லாக் கிராப்பும் பத்து மணியோடு நிறைவேறியது. சுற்று முற்றும் பார்த்து விட்டு ஒளிந்து ஒவ்வொருவராக ஆற்றங்கரைக்குப் போய்க் குளித்து விட்டு வந்தோம். எப்படியோ சமாளித்து நடுங்கியபடி வீடு போய்ச் சேர்ந்தோம். எதிர்பார்த்த திட்டிற்கும், கூப்பாட்டிற்கும் குறைவில்லை.

டி.வி.ஆருடைய தாத்தா வெங்கடபதி யுடைய வசவுதான் மிகவும் கோரமாக உச்சத்தில் இருந்தது. அவர் மகா கோபக்காரர். கண்டிப்பானவர். தெருவில் அவரைக் கண்டால் எல்லாரும் பயப்படுவர். அவர் எதிர்ப்புத்தான் அதிகமாக இருந்தது. காலப்போக்கில் எல்லாம் சரியாகப் போய்விட்டது. "எல்லாரும் ஒன்றாகச் செய்து கொண்டு விட வேண்டும்' என்ற டி.வி.ஆரின் யோசனைதான் அந்த வெற்றிக்குக் காரணம் என்றார்.

வெ.நா., கூறுவதில் இருந்து நமக்கு டி.வி.ஆரின் இளமைக்கால குணங்கள் வெளிச்சத்துக்கு வருகின்றன.

முதலாவது, தனது வயது ஒத்த மாணவர்களிடையே அவர் தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறார். ஒரு தலைவன் தனது அணியினருக்கு ஏற்படும் சிக்கல்கள் தீரச் சரியான வழியைக் காட்ட வேண்டும். வழிகாட்டுவதோடு, அந்த வழி வெற்றி தேடித் தரத்தக்கதாகவும் இருக்க வேண்டும். இரண்டு குணங்களும் இல்லாத ஒருவனால் தலைமைப் பீடத்தில் இருந்திருக்க முடியாது.

Sponsored content

PostSponsored content



Page 3 of 14 Previous  1, 2, 3, 4 ... 8 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக