Latest topics
» விரைவில் வெளியாகும் ராஜாகிளிby ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை
Page 2 of 14
Page 2 of 14 • 1, 2, 3 ... 8 ... 14
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை
First topic message reminder :
முன்னுரை
டி.வி. இராமசுப்பையர் அதிசய மனிதருள் ஒருவர்.
நண்பர் தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை எனும் டி.வி.ஆர்., வாழ்க்கை வரலாறு நூலுக்கு முன்னுரை ஒன்று எழுத வேண்டும் என்று கேட்டுக் கொண்ட போது, தயக்கமும், மகிழ்ச்சியும் ஊடாட ஒப்புக் கொண்டேன்.
நான் பிறந்து வளர்ந்து, இப்போது வாழ்ந்து வரும் வெள்ளாங்குடியின் அருகில் உள்ள தடிமார் கோவில் கிராமத்தில் டி.வி.ஆர்., பிறந்தார். இளமைப் பருவத்தின் பெரும் பங்கை அங்கே தான் செலவழித்தார். வடிவீசுவரத்திற்கு தனது இருக்கையை மாற்றிய போதும், வட சேரி கிராமத்திற்கு மாதத்தில் பலமுறை வந்து செல்வார். எனவே, ஊர்ப்பற்றுக் காரணமாக, சார்புடன் முன்னுரையை எழுதி விடுவேனோ என்ற பயத்தால் தயக்கம் எழுந்தது.
டி.வி.ஆரையும், அவர், தன்னுடன் அழைத்துச் செல்லும் மக்களையும் - ஒன்றிரண்டு நாள் அவர் மருமகனையும் - நான் அகல நின்று 1941ம் ஆண்டிற்கு முன் பார்த்து இருந்தாலும், நாகர்கோவில் கிளப்பில் உறுப்பினன் ஆன பின்தான் அந்த கிளப்பின் செயலாளர் என்ற நிலையில் டி.வி.ஆரை அறிந்திட முடிந்தது. சமுதாய நன்மைக்கு அவர் செய்த பணிகளைத் தெரிந்திடவும் வாய்ப்பு ஏற்பட்டது. 1963ம் ஆண்டு, காசி சர்வ கலாசாலை போல் கன்னியாகுமரியில் பல்கலைக்கழகம் அமைக்கும் ஆலோசனைக்கு டி.வி.ஆர்., மிகவும் துணை நின்றார். அவர்தான் அந்த ஆலோசனைக் குழுவின் தலைவர். எனவே, நட்புறவாலும், அன்பாலும் கட்டுப்பட்ட என்னிடம், டி.வி.ஆரைப் பற்றி எழுதுவதில் இனந்தெரியாத மகிழ்ச்சி எழுந்தது.
ஆய்வு நிறுவனம், அறநிலையங்கள் முதலியவற்றைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டவர்களுக்கு மார்ச் மாதம் கெடுபிடியானது. அம்மாத முதலில் தான் இந்த வரலாற்று நூல் கிடைத்தது. கிடைத்த நாள் மாலை, நூலின் ஒரு சில பகுதிகளைப் படித்தேன். மிக சுவையாக நூல் வளர்ந்து சென்றது. தெளிவுகளைத் திரட்டி, சம காலத்தவர்களின் எண்ணங்களை இடை இடையே கொடுத்து நூல் உருவாக்கியுள்ள திறமையைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
பிற பணிகளை ஒதுக்கி விட்டு, அன்றும், அடுத்த நாளும் நூல் முழுவதும் படித்து முடித்தேன். செம்மையாக முத்துகிருஷ்ணன் உருவாக்கியுள்ளார் என்ற எண்ணமே என் உள்ளத்தில் மேலோங்கி நின்றது.
நூலின் செம் பாதிக்கு மேல், தினமலர் பத்திரிகையை டி.வி.ஆர்., நிறுவி வெற்றி கண்டதைப் பற்றியதாகும். அந்த நிறுவனத்தை டி.வி.ஆரின் மக்களும், பேரப் பிள்ளைகளும் இன்று ஒற்றுமையுடன் வளர்த்து வருகின்றனர். தனது மக்களை இந்தப் பணியில் ஈடுபடுமாறு செய்தது டி.வி.ஆரின் குடும்பத் தலைமைக்குத்தக்க உதாரணமாகும்.
எஸ்.வையாபுரிப்பிள்ளை, "தினமலர்' இதழை செப்., 6,1951 வெளியிட்ட அன்று, அவருடன் நானும் சென்றிருந்தேன். சி.ஓ.மாதவன் தலைமை தாங்கினார். கவிமணி ஒரு வாழ்த்துப் பாவால் தினமலர் இதழை வரவேற்றார்.அன்று சாதாரண நிலையில் உருவான, "தினமலர்', திருவிதாங்கூர் தமிழர் எழுச்சியால் பிரபலம் அடைந்து, இன்று, ஆலமரம் போல் படர்ந்து அனேகமாக ஒவ்வொரு மாவட்டங்களிலிருந்தும் வெளியிடப்படுகிறது. அந்த வளர்ச்சி, பாராட்டத்தக்கது; பெருமைப்படத்தக்கது.
டி.வி.ஆர்., பத்திரிக்கை வளர்ப்பதில் காட்டிய ஆர்வம், வகுத்த நெறிமுறைகள், அரசியல், தனிமனித எதிர்ப்புகள், அஞ்சா நெஞ்சம், பிறரை அணைத்துச் செல்லும் ஆற்றல், மன்னித்து மறக்கும் பெருந்தன்மை முதலியவற்றை முத்துகிருஷ்ணன் திறம்படக் கூறி இருக்கிறார்.

Re: தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை
எங்கு நோக்கினும் பசுமைக் கோலத்துடன் வயல்கள். அவை எப்போதும் நீர் தேங்கிக் குளங்களாகக் காட்சி தரும். அதைத் தொட்டு வீசும் குளிர்ந்த காற்று. ஆண்டில் பன்னிரண்டு மாதங்களும் மழை கொட்டும் அதிசயம். எங்கும், யார் கையிலும், எந்த நேரத்திலும், தாழம் குடைகள். அபூர்வமாக துணிக்குடைகளையும் காணலாம். மழை தொடர்ந்து இருந்த போதிலும், அதிகாலையில் வீட்டு முற்றத்தில் கோலமிட்டு, அழகான மலையாளக் குத்து விளக்கு ஏற்றி, லட்சுமிகரமான காட்சியை உருவாக்கும் இல்லத்தரசிகள்.
Re: தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை
பத்மநாபபுரம்
இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்திற்கு, "நாஞ்சில் நாடு' என்று அன்றைக்குப் பெயர். இப்பகுதி திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்குள் இருந்தது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் முதல் தலைநகர் நாஞ்சில் நாட்டில் உள்ள பத்மநாபபுரம் தான். இன்றைய குழித்துறைக்கருகில் உள்ள இவ்வூர் கி.பி.,1550 லிருந்து, பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதி வரை, திருவிதாங்கூரின் (வேணாடு) தலைநகராக இருந்து வந்துள்ளது.
தர்மராஜா கார்த்திகைத் திருநாள் ராமவர்மாவின் (கி.பி.,1759-1798) ஆட்சி முடியும் வரை பத்மநாபபுரம்தான் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகர். இன்றைக்கும் பத்மநாபபுரத்தில் பழைய அரண்மனை, கோட்டை முதலானவை உள்ளன. இவை, இன்றும் கேரள அரசின் பராமரிப்பில்தான் உள்ளன. அரசர் இங்குக் கடவுளாக மதிக்கப்பட்டார். அரசர்களும் மக்களிடம், குறிப்பாக நாஞ்சில் நாட்டு மக்களிடம் மிகுந்த அபிமானம் கொண்டிருந்தனர் . இன்றைக்கும் இங்குள்ள மக்கள் அரசர்களைப் பற்றிப் பெருமையாகவே கூறுகின்றனர்.

திவான்
திவான் என்ற சொல்லோ, பதவியோ இன்று இந்தியாவில் கிடையாது. பிரிட்டிஷாரிடம் இருந்து இந்தியா விடுதலை பெறுவதற்கு முன், இந்தியாவில், திருவிதாங்கூர், ஐதராபாத் போன்ற ஏராளமான சுதேச சமஸ்தானங்கள் இருந்தன. அவை எல்லாம் தனித் தனியான மன்னர் ஆட்சிக்குப்பட்ட பகுதிகள்.
இவ்வாறான சமஸ்தானங்களில் புகழ் பெற்றது திருவிதாங்கூர் சமஸ்தானம். இது அரசருடைய ஆளுகைக்குட்பட்ட பகுதி. இங்கு முழு அதிகாரமும் அரசருக்குத்தான். ஆங்கிலேய அதிகாரி ஒருவர் இருப்பார்.
ஆங்கிலேயர், அதிகாரத்தை இந்தியருக்கு மாற்றவிருந்த நேரத்தில், நவாபுகளாலும், இராஜாக்களாலும், மகாராஜாக்களாலும் ஆளப்பட்ட 565 சமஸ்தானங்கள் இருந்தன. பெரிய பெரிய மாகாணங்கள் சென்னை, பம்பாய் போன்றவை இணைந்த இந்தியாவிற்குச் சுதந்திரம் என்று ஆங்கிலேயர்கள் அறிவித்த போதே, "சுதேச சமஸ்தானங்களும் சுதந்திரமாகத் தம் இஷ்டம் போல செயல்படலாம்' என்று கூறி, ஒரு விஷ விதையையும் தூவி விட்டே சென்றனர்.
சுதந்திரம் பெற்ற சிற்றரசுகள் ஏராளமாக இருப்பது, நாட்டின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் என்பதோடு மட்டுமின்றி, விடுதலை இயக்கத்தின் குறிக்கோளையே பயனற்றாதாக்கிவிடும் சூழ்நிலையும் உருவானது. ஆக., 15, 1947 நெருங்க 40 நாட்களே இருந்தன. சிற்றரசுகளுக்குப் பட்டேல் அறை கூவல் விடுத்தார். ஜூலை 25ம் தேதிக்குள் 562 நாடுகள் இந்தியாவுடன் சேரச் சம்மதித்தன. ஐதராபாத், போபால், திருவிதாங்கூர் அரசுகள் தயங்கின. இறுதியில் பரபரப்பான முயற்சிகளுக்குப் பின் இவை இந்தியாவுடன் இணைக்கப்பட்டன.
அரசர், பரம்பரையாக வருபவர். ஆனால், சமஸ்தானத்தின் முழு நிர்வாகம், சட்ட திட்டங்கள் எல்லாவற்றையும் நேரடியாகக் கவனிப்பவருக்குத் "திவான்' என்று பெயர். அரசருக்கு அடுத்து ஆட்சியில் மிகப்பெரும் சக்தி படைத்தவர் திவான்தான். இந்தத் திவான்களை அரசரே நியமிப்பார். இந்திய சுதேச சமஸ்தானங்களில் அன்றைக்கு மிகப் பிரபலமாகப் பேசப்பட்ட திவான்கள் ஒரு சிலரில், சர்.சி.பி.ராமசாமி ஐயர் குறிப்பிடத்தக்கவர். அன்று அரசருடைய விஜயம் சர்வ சாதாரணமாக இருக்கும். ஆனால், திவான்களின் விஜயம்தான் மிகப் பிரபலமாக இருக்கும். சர்.சி.பி., காலம் வரை, அவர் எப்போதாவது, எந்த ஊருக்காவது வருவதானால் குதிரைகள், காலாட்படைகள், வண்டிகள் இப்படி ஏகப்பட்ட ஆடம்பரத்துடன்தான் அவரது பவனி இருக்கும்.

நாகர்கோவில்
நாகர்கோவில், இப்பகுதியின் மிகப் பெரிய நகர். அன்று அதன் மக்கள் தொகை 30 ஆயிரம். 1894 முதல் நகரின் துப்புரவைக் கவனிக்க அரசாங்க அலுவலர்கள் கொண்ட ஒரு குழுவை சமஸ்தானம் வைத்திருந்தது. அதற்கு வரி விதிக்கும் அதிகாரம் கிடையாது. 1901ல் தான் வரி விதிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. 1920ல் தான் நகராட்சிச் சட்டம் கொண்டு வரப்பட்டு நாகர்கோவில் நகராட்சியாகி உள்ளது.
அன்று சாலையெல்லாம் சல்லிக்கல்தான். அதுவும் கூட, ஒரு சில சாலைகள் தாம் உண்டு. வயல் வரப்புக்கள் வழியாகத்தான் பெரும்பாலும் நடந்தனர். குடிதண்ணீருக்கு ஒரு சில கிணறுகளை மட்டுமே, மக்கள் நம்பி இருந்தனர். அதில் முக்கியமானது அச்சங்கிணறு.
குடிதண்ணீருக்கு மக்கள் பட்ட பாட்டை, நமது வரலாற்று நாயகர் அழகாக விமர்சிக்கிறார்: அழகிய பாண்டியபுரம், கன்னியாகுமரி ரோட்டுக்குக் கிழக்குப் பகுதி முழுதும் எங்குத் தோண்டினாலும் உப்புத்தண்ணீர்தான் வரும். அது சமையலுக்கு லாயக்கில்லாதது. அந்த ரோட்டிற்கு மேற்குப் பகுதிக் கிணறுகளில் நல்ல தண்ணீர் உண்டு. அதுவும் சிற்சில இடங்களில் மட்டுமே கிடைக்கும். கிணற்றின் ஆழம் 80 முதல் 100 அடி வரை இருக்கும். நகரசபை லாரிகளில் டாங்கு வைத்து, இந்த நல்ல தண்ணீரைக் கொண்டு வந்து, கீழ்ப் பகுதிக்குக் குறைந்த விலையில் கொடுத்து வந்தனர். சோறு சமைக்கலாம்; குடிக்கலாம். அதற்கு மட்டுமே இந்தத் தண்ணீரைப் பாதுகாக்க வேண்டும்.
வருடம் முழுவதும் மழை பெய்யும் வளமான நீர் ஆதாரம் கொண்ட நாகர்கோவில் மக்களும் கூட, அன்று குடிதண்ணீரை விலைக்கு வாங்கித்தான் காலத்தைக் கழித்துள்ளனர் என்பது அதிசயமான செய்திதானே.
பெரிய மருத்துவமனை எதுவும் கிடையாது. போலீஸ் ஸ்டேஷன் பக்கமுள்ள இன்றைய அரசு மருத்துவமனை உள்ள இடம், முன்பு ஒரு மைதானம். முன்பெல்லாம் பொதுக் கூட்டங்கள் இங்குதான் நடக்கும். மருத்துவமெல்லாம் நாட்டு வைத்தியம்தான். ஆசான்கள் பலர் சிறந்த வைத்தியர்களாக இருந்தனர். நாஞ்சில் நாட்டில் மருத்துவாள் மலை (மருந்து வாழ் மலை) என்ற நல்ல மூலிகைகள் கொண்ட மலை இருக்கிறது. வைத்தியர்கள் வீடுகளில் பெரிய பெரிய வெண்கல வார்ப்புகளில் மருந்துகள் கொதித்த வண்ணம் இருக்கும். எல்லாம் சூரணம், குளிகைகள்தான்.

நகரின் பெயரே நாகராசா கோயிலை அடிப்படையாகக் கொண்டது. வயலும், தோட்டங்களும், செடி கொடிகளும் நிரம்பிய ஒரே ஈரமான பகுதியில் பாம்புகள் தாராளமாக நடமாடும். பாம்புக் கடியில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் நாகராசாவிடம் இவ்வூர்மக்கள் மிகுந்த பயபக்தி கொண்டிருந்ததில் வியப்பேதும் இல்லை.
பெரும் குற்றவாளிகளுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்படும் வழக்கம் இருந்த காலம் அது. இப்படிப்பட்ட தண்டனையை நிறைவேற்றுகிறவர், தண்டனை வழங்கப் போவதே ஒரு தனிக்காட்சியாகும். கையில் வாள் ஏந்தி, கழுத்தில் மாலை அணிந்து, முரசறைந்து கொண்டு புறப்பட்டு விட்டால், அவர் எதிரே யாரும் வரமாட்டார்களாம். பயத்தால் அல்ல; அவரது புனிதப் பணிக்குச் சகுனத் தடையாகக் கூடாது என்பதற்காகத்தானாம்.
"கடுவன் திட்டை' என்று இதற்காகவே ஓர் இடம் இருந்தது. இப்பொழுது நாகர்கோவில் நகரின் முக்கியமான பகுதி அது. இப்பணியை மேற்கொண்டவர்கள், "ஆரச்சார்' என்றழைக்கப்பட்டனர்.
அன்று தெரு விளக்குகள் எல்லாம் தூணில் வைக்கப்பட்டிருக்கும்; மண்ணெண்ணெய் விளக்குகள்தான். நிலவு வரும் நேரத்தைக் கணக்கிட்டே, அதுவரை எரியும்அளவில்தான் மண்ணெண்ணெய் தினசரி விடப்படும். அமாவாசையில் விளக்குகள் முழுநேரமும் இரவில் எரியும். பவுர்ணமி அன்று இந்த விளக்குகளுக்கு விடுமுறை. இப்போது மின்சாரத் தெரு விளக்குகள் பாதி எரிந்து, மீதி அவிந்த நிலை அன்றைக்குக் கிடையாதாம்.
இந்தச் சூழ்நிலையில், உலக விஞ்ஞான மாறுதல்களுக்கு ஏற்ப மின்சாரம் பழக்கத்திற்கு வந்ததும், பயோனியர் குடும்பத்தினர் ஜெர்மன் கம்பெனி ஒன்றுடன் ஒப்பந்தம் செய்து , ஜெனரேட்டர்கள் மூலம் தெரு மின் விளக்குகளுக்கும், வீடுகளுக்கும் மின்சாரம் கொடுத்தனர். ஆனால்,ஓர் அதிசயம் : அப்போது நகராட்சியின் தலைவராக இருந்தவர் மின்சாரத் தெரு விளக்குகளுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தாராம். தெருக்களில் மின் விளக்குகளும், அடுத்து மண்ணெண்ணெய் விளக்குகளும் வெகு காலம் எரிந்து கொண்டிருந்ததாம். மின்சாரத்தின் மீது அந்த நகராட்சித் தலைவருக்குக் கோபம் ஏதுமில்லை. யாருக்கு உரிமை என்பதில் எழுந்த போராட்டம்தான் அது என்று கூறுகின்றனர். 1935 வரை இந்தக் கூத்துத்தானாம். '35க்கு பிறகு போனால் போகட்டும் என்று மின்சாரத் தெரு விளக்குகளை நகராட்சித் தலைவர் ஏற்றுக் கொண்டாராம்.

கலை ஆர்வம்
அன்று இங்குக் கலைகளுக்கும், கலைஞர்களுக்கும் குறைவில்லை. ஆனால், பெரிய இசைக் கலைஞர்களின் கச்சேரிகளைப் பொது மக்களுக்கு மேடை போட்டுக் கேட்க வாய்ப்பில்லாத காலம். பெரும்பாலும் தலைநகர் திருவனந்தபுரத்தில், பெரிய பணக்காரர் வீட்டுக் கல்யாணங்களில் அரியக்குடி, மதுரை மணி ஐயர், செம்மங்குடி போன்றவர்களின் கச்சேரி நடக்கும். கல்யாண வீட்டார் அழைத்தாலும், அழைக்கா விட்டாலும், இசைப் பிரியர்கள் காசைச் செலவிட்டுத் திருவனந்தபுரம் போய்க் கச்சேரியைக் கூட்டத்தோடு கூட்டமாகச் கேட்கும் பழக்கம்தான் இருந்திருக்கிறது. ரேடியோ பற்றி இவர்களுக்கு அப்போது எதுவும் தெரியாது.
நாஞ்சில் நாட்டிலும் பல புகழ்பெற்ற இசைக் கலைஞர்கள் உருவாகியே வந்தனர். பத்மாவதி கதாகாலட்சேபம், ஐயாவுப் பாகவதர் இசை, பிடில் நயினார் பிள்ளை, ஒழுகினசேரி அனந்த நாராயண ஐயர் புல்லாங்குழல் இப்படிப் பலர் இசைக் கலையில் பெருமையுடன் மக்களை மகிழ்வித்து வந்தனர். வடிவீஸ்வரம் கோவில் திருவிழாவிற்கு ராஜரத்தினம் பிள்ளை முதன் முதலில் வந்தார். அதுமுதல் நாதஸ்வரம் பிரபலமானது. பல ஊர்களில் மிகச் சிறப்பாக வில்லுப்பாட்டு குழுக்களின் வில்லடி நடக்கும். கிராமக் கோயில் திருவிழாக்கள் என்றால் வில்லுப்பாட்டு பிரதானமாயிருக்கும்.
நாடகங்களுக்குத்தான் அன்று பெரும் செல்வாக்கு. கோவிந்தசாமிப் பிள்ளை, கிட்டப்பா நாடகங்கள் அடிக்கடி நடக்கும். ஆர்மோனியம் காதர் பாட்சா அப்போது பிரபலமானவர். கார்மேகக் கோனார் பபூன், தாணுப்பிள்ளை பபூன், பொக்கு சாயபு காமிக் இவை மக்களை வெகுவாகக் கவர்ந்திருந்தது. இன்று கால்நடை மருத்துவமனை இருக்கும் இடம், அன்று வயலாக இருந்தது. கோடையில் விவசாயம் இல்லாதபோது, இதில் நாடகக் கொட்டகை போட்டு நாடகங்கள் நடத்தப்பட்டன. பெரும்பாலும் புராணக் கதைகள், அரிச்சந்திர மயான காண்டம் இவைதான். இதன் பின் ஒழுகினசேரியில் ஒரு நாடகக் கொட்டகையை நமது வரலாற்று நாயகரின் சொந்தக்காரர் ஒருவர் அமைத்தார். நாடகங்கள் இரவு 9 மணிக்குத் தொடங்கி 12 மணி வரை நடக்கும். அதில் மக்களுக்கு இருந்த ஆர்வமும் காரணமாக இப்பகுதியில் இருந்து, டி.கே.எஸ்., சகோதரர்கள், என்.எஸ்.கிருஷ்ணன் போன்ற புகழ்பெற்ற கலைஞர்கள் தமிழ்க் கலை உலகிற்குக் கிடைத்தனர்.

நாகர்கோவிலில் அன்று அதிகமாக டி.கே.எஸ்., சகோதரர்கள் நாடகங்களே நடந்தன. எல்லாம் சிறு பையன்களே நடித்தனர். ஒரு புதுப்பையன் வந்து சேர்ந்தான். அவன் பாடிய, "மூல மந்திரமான நற்பொருளே!' என்ற பாடலைக் கேட்டு வியந்த சண்முகம், " இந்தப் பாட்டு எப்போது உனக்குத் தெரியும்?' என்று கேட்டார். அதற்கு அந்தப் பையன், "நான் உங்கள் நாடகங்களை நாகர்கோவிலில் பல தடவை பார்த்து இதைப் படித்தேன்' என்றான்.
அந்தப் பையன்தான் என்.எஸ்.கிருஷ்ணன். 1925ல் மதுரையில் பால சண்முகானந்தா சபாவின் முதல் நாடகம், "கோவலன்' அரங்கேறியது. இது டி.கே.எஸ்., சகோதரர்கள் நடத்திய நாடகம். இந்நாடகத்தில்தான் முதன் முதலாக என்.எஸ்.கே., நடிக்கத் தொடங்கினார்.
நாகர்கோவில் ஒழுகினசேரியில் பின்னர் கோவலன் நாடகம் நடத்திய போது, பாண்டியன் வேஷத்தில் என்.எஸ்.கே., நடித்தார். அதைப் பாராட்டி, சதாவதானி செய்குத் தம்பிப் பாவலர் இவ்வாறு கூறினார்: நம் நாஞ்சில் நாட்டு இளம் சிறுவன், என்.எஸ்.கிருஷ்ணன், வருங்காலத்தில் மகா மேதையாக விளங்கப் போகிறான். இவனுடைய புகழால் நாஞ்சில் நாடு மட்டுமல்ல, தமிழ்நாடே பெருமைப்படப் போகிறது. இது வெல்லாம் 1925ம் ஆண்டு.
அந்தக் காலத்தில் ஊமைப் படங்கள்தான் காட்டப்பட்டன. அதில் வசனம், பாட்டுக்கள் எதுவும் இருக்காது. கதையும், பரபரப்பான சம்பவங்களுமே நிறைந்திருக்கும்.
ஊமைப்படங்கள் திரையிடப்படும்போது, அவ்வப்போது காட்சியை நிறுத்தி, கதை வசனத்தை ஒருவர் ஒப்புவிப்பார். இந்த ஊமைப்படங்கள் நாகர்கோவிலில் சக்கைப் போடு போட்டன. பின்னர் பயோனியர் குடும்பத்தினர் முதல் திரைப்படக் கொட்டகை ஒன்றை நிறுவினர். இதுதான் கலைத்துறையின் அந்தக் காலத்தில் நாகர்கோவில் இருந்த நிலை.

போக்குவரத்து
பஸ் என்பது அன்று அதிசயமானது. அதற்கு முன் பொதுவாகப் பயணத்திற்கு மாட்டு வண்டிகள்தான் அதிகம். பெரிய பண்ணையார்கள், இரட்டை மாட்டு வில் வண்டியைத்தான் பயன்படுத்தி உள்ளனர். பண்ணையார்கள் உட்பட, யாரும் வெளியே செல்லும் போது, சட்டை போடும் பழக்கமில்லாதவர்களாகத்தான் இருந்தார்களாம்.
"எயிட் சீட்டர்'
"எயிட் சீட்டர்' என்ற வகைப் பஸ்கள் பின்னர் விடப்பட்டன. பக்கத்துக்கு எட்டுப் பேர் உட்காரலாம். இதனால், "எயிட் சீட்டர்' எனப் பெயர் பெற்றது. ஆனால், இதில் மொத்தம் 16 பேர் பயணம் செய்யலாம். முன்புறம் டிரைவர்; அவருக்குப் பக்கத்தில் உள்ள முன் சீட் மிக மதிப்புள்ளது. அதிகாரிகள், பெரிய மனிதர்களுக்குத்தான் அது கிடைக்கும். கட்டியான ரப்பர் டயர்தான். அன்று டயர்களில் இன்றுள்ளது போல டியூப்பு, அதில் காற்று அடைப்பது கிடையாது. காற்றடைத்த டயர் வெகு காலத்திற்குப் பின்னரே பயன்படுத்தப்பட்டது. பஸ்சில் போய் வருவதற்குள் உடம்பு நொறுங்கி விடுமாம்! அவ்வளவு உலுக்கல் குலுக்கல் - ரோடுகள் மோசமாக இருந்ததும் இதற்கு ஒரு காரணம்.

லட்சுமி விலாசம் பஸ் தான் முதல் பஸ்; திருவனந்தபுரம் வரை சென்று வரும். கட்டணம் திருவிதாங்கூர் நாணயமான 14 சக்கரம். அதாவது இப்பொழுதுள்ள 50 காசு. பயணத்திற்கு நான்கு மணி நேரம் ஆகும். தக்கலை வந்தால் பஸ்சை அரை மணிநேரம் நிறுத்தி விட்டு டிரைவர் எங்கோ போய்விடுவார்.
பதினாறு பேர் அன்றைக்குப் பஸ்சுக்குக் கிடைப்பது மிகக் கஷ்டம். வீடு வீடாகப் சென்று பயணிகளைச் சேர்ப்பர். "எங்கள் வீட்டுக்கே வந்து பஸ் காத்திருக்கும். டிரைவர், கண்டக்டர், கிளீனர் முதலானோர்களே லக்கேஜை ஏற்றி விடுவர்.
எங்கே போக வேண்டுமோ அந்தத் தெருவில் உள்ள வீட்டில் கொண்டு போய் இறக்கி விடுவர். பயணிகளுக்கு ராஜ உபசாரம்தான். நேரம் எதுவும் கிடையாது; 16 பேர் சேர்ந்தால் தான் பஸ் புறப்படும். 1938க்கு பிறகுதான் கன்னியாகுமரிக்கே பஸ் போனது' என்றார் பெரியவர் ஒருவர். பஸ்சுக்கே இந்தக் கதை என்றால், ரயில் பற்றிக் கற்பனையே கிடையாது. பெரிய பணக்காரர்கள்தான் திருவனந்தபுரத்தில் ரயிலைப் பார்த்தது உண்டு. சமீப காலம் வரை ரயில் பற்றிக் குமரி மாவட்டத்துக் கிராமத்தாருக்கு எந்த அனுபவமும் கிடையாது.
கன்னியாகுமரி ஒன்று மட்டும்தான் யாரோ சிலர் வெளியில் இருந்து வந்து போகும் தலமாகும். பகவதி அம்மன் கோயில், கடற்கரையில் தனியாகப் பளிச் சென்று தெரியும். கோயில் தேவஸ்தான தங்குமிடங்கள் சில உண்டு. கடற்கரை அழகாக இருக்கும். கோயிலின் அழகு கம்பீரமானது.
கோயில்களில் எல்லாம் ஏராளமான குத்து விளக்குகள். தேங்காய் எண்ணெய்தான் உபயோகிப்பர். தெய்வீகச் சூழ்நிலையே கோயில்களில் நிலவும். கோயில்களுக்குள் யாரும் சட்டை போட்டு கோயிலுக்குள் இதுவரை போனதில்லை; போகவும் முடியாது.
கேரளபாணி பூஜை. பளிச்சென்று சந்தனக் கீற்றுப்பூச்சு. நெற்றியில் விபூதி, குங்குமங்களுடன் பக்தர்கள் காணப்படுவர். கன்னியாகுமரி அம்மனின் மூக்கில் வைரம் பளிச்சிடும். கப்பலே அந்த ஒளியில் திசை திரும்பி விடுவதாகக் கருதி, முன்கதவைப் பூட்டியே வைத்து விட்டனர்.
கி.பி.,1544ல் தூய பிரான்சிஸ் சவேரியார் என்ற கத்தோலிக்கத் தந்தையார், கோட்டார் என்ற ஊரைத் தனது தலைமை இடமாகக் கொண்டு சமயப் பிரசாரம் செய்து வந்தார். புனித சவேரியார் பெயரில் அமைந்த ஆலயம் மிகப் பிரபலமானது. நமது நாட்டில் மிகப் பெரிய கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றாக இந்நகரில், கி.பி.,1819ல் கிரேக்க கட்டடப் பாணியில் கட்டப்பட்ட கற்கோயில், கோட்டார் சவேரியார் ஆலயம். இந்நகர் முகமதியர்களுக்கும் ஒரு முக்கிய தலமாக உள்ளது. இங்கு "வேம்படிப் பள்ளி' எனப்படும் முகமதியர் தொழுகைத் தலமொன்று, "ஆலிப் புலவர்' என்ற தமிழ் அறிஞர் ஒருவரின் பெயரால் நிறுவப்பட்டுள்ளது. இதன் அருகில், "ஹஸ்ரத் ஞானியார் சாகிபு வலியுல்லாஹ்' என்ற மேதையின் தர்காவையும் காணலாம்.
எந்த மதத்தினரிடையேயும் வேற்றுமை ஏதும் இருந்ததில்லை. ஒரே குடும்பமாக, பாசத்துடன், இணக்கமாகவே வாழ்ந்து வந்தனர். இது இங்குள்ள தனிச்சிறப்பு.

மணிக்கூண்டு
நாகர்கோவிலின் அன்றைய மிகச் செல்வாக்குப் பெற்ற இடம் மணிக்கூண்டு. கிட்டத்தட்ட அதுவே அந்த நகரைப் பலருக்கு நினைவில் கொண்டு வரும். மணிக்கூண்டின் அன்றைய பிரபலம் ஏராளம்.
இந்த மணிக்கூண்டு, 1893ல் கட்டப்பட்டது. இதில் பொருத்தப்பட்ட கடிகாரம், 20 வருடங்கள் லண்டனில் ஓடிய பின், நாகர்கோவில் இங்கிலீஷ் மிஷனரிக்கு அன்பளிப்பாக வந்தது. அதை திருவிதாங்கூர் ராமவர்ம மகாராஜா வாங்கி, மணிக்கூண்டை நிர்மாணித்தார். மணிக்கூண்டுக்குப் பேசும் சக்தி இருந்தால், 1893ல் இருந்து நாகர்கோவில் வரலாற்றைக் கதை, கதையாகக் கூறக்கூடும்.
கோட்டார் மார்க்கெட்டும் - முன்பு அதற்கு கம்பள பஜார் என்று பெயர் - வடசேரிச் சந்தையும்தான் வியாபாரத் தலங்கள். அந்தப் பழைய மார்க்கெட் இன்று இல்லை. அவை கன்னியாகுமரி சாலையில் பல கடைகளாகப் பெருகிவிட்டன. திருவனந்தபுரத்தில் பயறுகள், வற்றல், மல்லி, போன்ற பலசரக்குகள் கிடையாது.

Similar topics
» அழகிய கடல் வாழ் உயிரினம் கடல் தாமரை
» தி.க.சிவசங்கரன் எழுதிய, ‘தாமரை’ இலக்கிய இதழிலிலிருந்து:
» கவிஞர் தாமரை எழுதிய திரைப்பட பாடல்கள்
» கவிஞர் தாமரை எழுதிய பாடல்களில் பிடித்தவை!
» குஐராத்தின் கடல் கோயில், கடலுக்கடியில் ஒரு சிவாலயம் : தினமும் கடல் வற்றும் அதிசயம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum