புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இஸ்லாமியர்களுக்கு ஏற்ற முதலீடு… ஷரியா முதலீடுகள்! Poll_c10இஸ்லாமியர்களுக்கு ஏற்ற முதலீடு… ஷரியா முதலீடுகள்! Poll_m10இஸ்லாமியர்களுக்கு ஏற்ற முதலீடு… ஷரியா முதலீடுகள்! Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
இஸ்லாமியர்களுக்கு ஏற்ற முதலீடு… ஷரியா முதலீடுகள்! Poll_c10இஸ்லாமியர்களுக்கு ஏற்ற முதலீடு… ஷரியா முதலீடுகள்! Poll_m10இஸ்லாமியர்களுக்கு ஏற்ற முதலீடு… ஷரியா முதலீடுகள்! Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
இஸ்லாமியர்களுக்கு ஏற்ற முதலீடு… ஷரியா முதலீடுகள்! Poll_c10இஸ்லாமியர்களுக்கு ஏற்ற முதலீடு… ஷரியா முதலீடுகள்! Poll_m10இஸ்லாமியர்களுக்கு ஏற்ற முதலீடு… ஷரியா முதலீடுகள்! Poll_c10 
2 Posts - 5%
Balaurushya
இஸ்லாமியர்களுக்கு ஏற்ற முதலீடு… ஷரியா முதலீடுகள்! Poll_c10இஸ்லாமியர்களுக்கு ஏற்ற முதலீடு… ஷரியா முதலீடுகள்! Poll_m10இஸ்லாமியர்களுக்கு ஏற்ற முதலீடு… ஷரியா முதலீடுகள்! Poll_c10 
1 Post - 2%
prajai
இஸ்லாமியர்களுக்கு ஏற்ற முதலீடு… ஷரியா முதலீடுகள்! Poll_c10இஸ்லாமியர்களுக்கு ஏற்ற முதலீடு… ஷரியா முதலீடுகள்! Poll_m10இஸ்லாமியர்களுக்கு ஏற்ற முதலீடு… ஷரியா முதலீடுகள்! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
இஸ்லாமியர்களுக்கு ஏற்ற முதலீடு… ஷரியா முதலீடுகள்! Poll_c10இஸ்லாமியர்களுக்கு ஏற்ற முதலீடு… ஷரியா முதலீடுகள்! Poll_m10இஸ்லாமியர்களுக்கு ஏற்ற முதலீடு… ஷரியா முதலீடுகள்! Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
இஸ்லாமியர்களுக்கு ஏற்ற முதலீடு… ஷரியா முதலீடுகள்! Poll_c10இஸ்லாமியர்களுக்கு ஏற்ற முதலீடு… ஷரியா முதலீடுகள்! Poll_m10இஸ்லாமியர்களுக்கு ஏற்ற முதலீடு… ஷரியா முதலீடுகள்! Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
இஸ்லாமியர்களுக்கு ஏற்ற முதலீடு… ஷரியா முதலீடுகள்! Poll_c10இஸ்லாமியர்களுக்கு ஏற்ற முதலீடு… ஷரியா முதலீடுகள்! Poll_m10இஸ்லாமியர்களுக்கு ஏற்ற முதலீடு… ஷரியா முதலீடுகள்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இஸ்லாமியர்களுக்கு ஏற்ற முதலீடு… ஷரியா முதலீடுகள்! Poll_c10இஸ்லாமியர்களுக்கு ஏற்ற முதலீடு… ஷரியா முதலீடுகள்! Poll_m10இஸ்லாமியர்களுக்கு ஏற்ற முதலீடு… ஷரியா முதலீடுகள்! Poll_c10 
383 Posts - 49%
heezulia
இஸ்லாமியர்களுக்கு ஏற்ற முதலீடு… ஷரியா முதலீடுகள்! Poll_c10இஸ்லாமியர்களுக்கு ஏற்ற முதலீடு… ஷரியா முதலீடுகள்! Poll_m10இஸ்லாமியர்களுக்கு ஏற்ற முதலீடு… ஷரியா முதலீடுகள்! Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
இஸ்லாமியர்களுக்கு ஏற்ற முதலீடு… ஷரியா முதலீடுகள்! Poll_c10இஸ்லாமியர்களுக்கு ஏற்ற முதலீடு… ஷரியா முதலீடுகள்! Poll_m10இஸ்லாமியர்களுக்கு ஏற்ற முதலீடு… ஷரியா முதலீடுகள்! Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
இஸ்லாமியர்களுக்கு ஏற்ற முதலீடு… ஷரியா முதலீடுகள்! Poll_c10இஸ்லாமியர்களுக்கு ஏற்ற முதலீடு… ஷரியா முதலீடுகள்! Poll_m10இஸ்லாமியர்களுக்கு ஏற்ற முதலீடு… ஷரியா முதலீடுகள்! Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
இஸ்லாமியர்களுக்கு ஏற்ற முதலீடு… ஷரியா முதலீடுகள்! Poll_c10இஸ்லாமியர்களுக்கு ஏற்ற முதலீடு… ஷரியா முதலீடுகள்! Poll_m10இஸ்லாமியர்களுக்கு ஏற்ற முதலீடு… ஷரியா முதலீடுகள்! Poll_c10 
26 Posts - 3%
prajai
இஸ்லாமியர்களுக்கு ஏற்ற முதலீடு… ஷரியா முதலீடுகள்! Poll_c10இஸ்லாமியர்களுக்கு ஏற்ற முதலீடு… ஷரியா முதலீடுகள்! Poll_m10இஸ்லாமியர்களுக்கு ஏற்ற முதலீடு… ஷரியா முதலீடுகள்! Poll_c10 
7 Posts - 1%
sugumaran
இஸ்லாமியர்களுக்கு ஏற்ற முதலீடு… ஷரியா முதலீடுகள்! Poll_c10இஸ்லாமியர்களுக்கு ஏற்ற முதலீடு… ஷரியா முதலீடுகள்! Poll_m10இஸ்லாமியர்களுக்கு ஏற்ற முதலீடு… ஷரியா முதலீடுகள்! Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
இஸ்லாமியர்களுக்கு ஏற்ற முதலீடு… ஷரியா முதலீடுகள்! Poll_c10இஸ்லாமியர்களுக்கு ஏற்ற முதலீடு… ஷரியா முதலீடுகள்! Poll_m10இஸ்லாமியர்களுக்கு ஏற்ற முதலீடு… ஷரியா முதலீடுகள்! Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
இஸ்லாமியர்களுக்கு ஏற்ற முதலீடு… ஷரியா முதலீடுகள்! Poll_c10இஸ்லாமியர்களுக்கு ஏற்ற முதலீடு… ஷரியா முதலீடுகள்! Poll_m10இஸ்லாமியர்களுக்கு ஏற்ற முதலீடு… ஷரியா முதலீடுகள்! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
இஸ்லாமியர்களுக்கு ஏற்ற முதலீடு… ஷரியா முதலீடுகள்! Poll_c10இஸ்லாமியர்களுக்கு ஏற்ற முதலீடு… ஷரியா முதலீடுகள்! Poll_m10இஸ்லாமியர்களுக்கு ஏற்ற முதலீடு… ஷரியா முதலீடுகள்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இஸ்லாமியர்களுக்கு ஏற்ற முதலீடு… ஷரியா முதலீடுகள்!

avatar
azeezm
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 18/04/2010
http://azeezahmed.wordpress.com/

Postazeezm Tue Aug 03, 2010 8:36 pm

இஸ்லாமியர்களுக்கு ஏற்ற முதலீடு… ஷரியா முதலீடுகள்!

இஸ்லாம் மதச் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு செய்யப்படும் பங்கு
சார்ந்த முதலீடு
இஸ்லாமியர்களுக்கு ஏற்ற முதலீடு… ஷரியா முதலீடுகள்! P24ள் உலகெங்கிலும் அதிகமாகி வருகிறது. ஷரியாவுக்கு உட்பட்டு முதலீடு
செய்ய விரும்பும் இஸ்லாமிய முதலீட்டாளர்க
ள் தமிழ்நாட்டிலும் மற்ற பிற மாநிலங்களிலும் நாளுக்கு நாள்
அதிகரித்து வருகின்றனர்.

ஷரியாவுக்கு உட்பட்ட முதலீடு என்றால் என்ன, அவ்வகையான முதலீடுகள்
இந்தியாவில் என்னென்ன உள்ளன என்பதைப் பற்றி சற்று விரிவாக எடுத்துச் சொல்லவே இந்தக்
கட்டுரை. முதலில் ஷரியாவுக்கு உட்பட்ட முதலீடுகள் என்றால் என்ன என்பதை சுருக்கமாகப்
பார்த்துவிடுவோம்.

ஷரியா முதலீடு…?

ஷரியா என்பது இஸ்லாமியச் சட்டமாகும். இந்தச் சட்டதிட்டங்களுக்கு
உட்பட்டு செய்யப்படும் முதலீடு, ஷரியாவுக்கு உட்பட்ட முதலீடுகள் என்று
கூறப்படுகிறது.

வேகமாக வளர்ந்து வரும் துறை!

இஸ்லாமியர்களுக்கு ஏற்ற முதலீடு… ஷரியா முதலீடுகள்! P25இன்றைய தேதியில் உலக அளவில் அதிவேகமாக வளர்ந்து வரும்
துறைகளில் ஷரியா முதலீட்டுத் துறையும் ஒன்று. நமது கேரள அரசாங்கம் சென்ற ஆண்டு
ரூ.1,000 கோடி அளவில் இஸ்லாமிய வங்கி ஒன்றை ஆரம்பித்து, அடிப்படைக் கட்டுமானத்
துறைக்கு உபயோ கிக்கத் திட்டமிட்டது. தற்போது நீதிமன்றம் அதற்குத் தடை உத்தரவு
கொடுத்துள்ளது என்றாலும், இந்த வங்கி தொடங்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிமாக
உள்ளன.

லண்டனைச் சார்ந்த எஃப்.டி.எஸ்.இ. நிறுவனம் இஸ்லாமிய முதலீடுகள்
ஆண்டுக்கு 15 – 20% வளர்ந்து வருவதாகக் கூறுகிறது. பங்கு சார்ந்த முதலீடுகள்
2010-ல் 53 பில்லியன் டாலருக்கு மேலாக (கிட்டத்தட்ட ரூபாய் இரண்டரை லட்சம் கோடிக்கு
மேல்) சென்றுவிடும் என்று கூறுகிறது. மொத்தத்தில் இது ஒரு வளரும் துறை.

உலகத்தில் உள்ள அனைத்துப் பெரிய நிதி நிறுவனங்களும் இந்தத் துறையில்
இருக்கும் தொழில் வாய்ப்புக்களைக் கருதி இதில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளன. அதே
போல் சட்ட நிறுவனங்களுக்கும் இந்த முதலீடுகளினால் நல்ல வாய்ப்பு. உலகெங்கிலும் உள்ள
பங்குச் சந்தைகளில் ஷரியா குறியீடுகள் பெரும்பாலும் வந்துவிட்டன. அதேபோல் சில
இ.டி.எஃப். திட்டங்களும் செயல்பட ஆரம்பித்துவிட்டன.

ஷரியாவுக்கு உட்பட்ட முதலீடுகள்…!

ஷரியாவுக்கு உட்பட்ட முதலீடுகள் எவை என்று கேட்டால், ஷரியா
சட்டமானது, குறிப்பிட்ட வட்டிக்குக் கடன் கொடுப்பதையோ அல்லது வாங்குவதையோ ஹராம்
(தடை செய்யப்பட்டது) என்று கூறுகிறது. ஆகவே ஃபிக்ஸட் டெபாஸிட் போன்ற கடன்
திட்டங்கள் ஷரியாவுக்கு உட்பட்ட முதலீடுகள் ஆகாது. பன்றிக்கறி, மதுபானங்கள்,
சூதாட்டம், நிதித்துறை, புகையிலை போன்ற துறைகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில்
முதலீடு செய்வது ஹராம் ஆகும்.

இஸ்லாம் மதத்தைச் சார்ந்த முதலீட்டாளர்கள், தாங்கள் பங்குச்
சந்தையில் அல்லது மியூச்சுவல் ஃபண்டுகளில் செய்யும் முதலீடுகள் சரியானதுதானா என்று
தெரிந்து கொள்ள விரும்புகின்றனர். தங்களின் மதச்சட்டம் அறிவுறுத்துகிறபடிதான்
தாங்கள் நடந்து கொள்கி றோமா என்கிற கேள்வியும் அவர்களின் மனதில் எழுந்திருக்கிறது.
இதனால் சமீபகாலமாக ஷரியாவுக்கு உட்பட்ட முதலீடுகளில் முதலீடு செய்ய விருப்பமுள்
ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் இந்த முறை முதலீட்டைப்
பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமும் அதிகரித்துக் கொண்டு வருகிறது.

நிஃப்டி ஷரியா!

நமது தேசியப் பங்குச்சந்தை இரண்டு ஷரியா குறியீடுகளை
அறிமுகப்படுத்தியுள்ளது. நிஃப்டி ஷரியா மற்றும் சி.என்.எக்ஸ். 500 ஷரியா என்பதே
அந்த இரண்டு திட்டங்கள். இவைகள் முறையே நிஃப்டி 50 மற்றும் நிஃப்டி 500
குறியீடுகளில் இருந்து ஃபில்டர் செய்தவையாகும். இந்த ஃபில்டர் எவரால் எவ்வாறு
செய்யப்படுகிறது?

தேசியப் பங்குச்சந்தையில் உள்ள பல குறியீடுகளை, தேசியப்
பங்குச்சந்தை, எஸ் அண்டு பி (ஸ்டாண்டர்ட் அண்டு புவர்ஸ்) நிறுவனத்தின் கூட்டுடன்
நிர்வகித்து வருகிறது. அவ்வாறே ஷரியா குறியீடுகளையும் நிர்வகித்து வருகிறது. எஸ்
அண்டு பி நிறுவனம் ஷரியா குறியீடுகளுக்காக ‘ரேட்டிங்ஸ் இன்டெலிஜென்ஸ் பார்ட்னர்ஸ்’
(ஆர்.ஐ.) என்ற லண்டன்/குவைத் நாட்டைச் சேர்ந்த நிறுவனத்துடன் கைகோத்துள்ளது.
இந்நிறுவனத்துக்கு லண்டன், குவைத் மற்றும் பெங்களூருவில் அலுவலகங்கள் உள்ளன. இந்த
ஆர்.ஐ. நிறுவனம் நிறைய இஸ்லாமிய ஆராய்ச்சியாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளதுடன்,
ஷரியா மேற்பார்வை வாரியத்துடனும் கைகோத்து வேலை செய்கிறது. இந்த ஷரியா வாரியத்தில்
சவுதி அரேபியா, கனடா, சிரியா போன்ற நாடுகளில் இருந்து கல்விமான்கள் இடம்
பெற்றுள்ளனர்.

இஸ்லாமியர்களுக்கு ஏற்ற முதலீடு… ஷரியா முதலீடுகள்! P26
கடைப்பிடிக்கும் விதிமுறைகள்!

ஷரியா குறியீட்டின் கீழ்வரும் நிறுவனங்கள் தொடர்ந்து
கண்கானிக்கப்படுகின்றன. தேவையின் அடிப்படையில் இக்குறி யீட்டின் கீழ் உள்ள
நிறுவனங்கள் மாற்றி அமைக்கப்படுகின்றன. இக்குறியீட்டில் இடம் பெறும் நிறுவனங்கள்
கீழ்கண்ட ஃபில்டர்களைத் தாண்டி இடம் பெற்றுள்ளன.

1. துறை சார்ந்த ஃபில்டர்கள்: பன்றிக்கறி, மதுபானங்கள், சூதாட்டம்,
நிதித்துறை, புகையிலை போன்ற துறைகள் மற்றும் வேறு சில துறைகளில் ஈடுபட்டி
ருக்கக்கூடாது.

2. அதிகக் கடன் வாங்கியுள்ள நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு
செய்யக்கூடாது. ஒரு காலத்தில் கடன் வாங்கியுள்ள எந்த நிறுவனப் பங்குகளிலும் முதலீடு
செய்யக்கூடாது என்று கருதியவர்களும் உண்டு. ஆனால் இன்றைய நவீன பொருளாதாரத்தில்
அவ்வளவு கடினமான பாதையை எடுத்தால், முதலீடு செய்யக் கிடைக்கும் பங்குகளின்
எண்ணிக்கை மிகவும் குறைந்துவிடும். ஆகவே அது போன்ற கருத்துக்களில் இருந்து சிறிது
மாறி, இன்றைய தினத்தில், நிறுவனம் வாங்கியிருக்கும் கடன் அதன் பங்கின் மார்க்கெட்
மதிப்புடன் ஒப்பிடும்போது 33%-க்கு அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்ற ஃபில்டரை
கடைப் பிடிக்கின்றனர்.

3. தொழிலில் வர வேண்டிய பணம் (Accounts Receivable) மார்க்கெட்
மதிப்புடன் ஒப்பிடும்போது 49%-க்கு குறைவாக இருக்க வேண்டும்.

4. நிறுவனம் தனது கையில் வைத்திருக்கும் பணம் மற்றும் வட்டி தரும்
உபகரணங்கள், மார்க்கெட் மதிப்புடன் ஒப்பிடும்போது 33% குறைவாக இருக்க
வேண்டும்.

5. ஷரியாவுக்கு உட்படாத வட்டி அல்லாத பிற வழிகளில் இருந்து வரும்
வருமானம், மொத்த வருமானத்துடன் ஒப்பிடும்போது 5%-க்கும் குறைவாக இருக்க
வேண்டும்.

6. ஷரியாவுக்கு உட்படாத முதலீடுகளினால் வரும் வருமானத்தை
சுத்தப்படுத்துவதற்காக, முதலீட்டாளர் களுக்கு சுத்தப்படுத்த வேண்டிய விகிதத்தையும்
இந்தக் குறியீடு தெரிவிக்கும்.

ஷரியா இ.டி.எஃப்.!

avatar
azeezm
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 18/04/2010
http://azeezahmed.wordpress.com/

Postazeezm Tue Aug 03, 2010 8:38 pm

ஷரியா இ.டி.எஃப்.!

நம் இஸ்லாமிய முதலீட்டாளர்களுக்கு ஏற்ற இந்தியாவில் உள்ள ஷரியாவுக்கு
உட்பட்ட முதலீடுகள் எவை என்று இப்போது பார்ப்போம்.

பெஞ்ச்மார்க் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் ஷரியா பீஸ் (Shariah BeES)
என்ற இ.டி.எஃப்-ஐ நடத்தி வருகிறது. மார்ச் 2009-ல் துவங்கப்பட்ட இந்த இ.டி.எஃப்,
இந்தியாவின் முதல் ஷரியாவுக்கு உட்பட்ட இ.டி.எஃப். ஆகும். இது நிஃப்டி ஷரியா
குறியீட்டை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. இதன் விலை நிஃப்டி ஷரியா
குறியீட்டின் மதிப்பில் 1/10 ஆக இருக்கும். இந்த இ.டி.எஃப். நிஃப்டி ஷரியா
குறியீட்டில் இடம் பெற்றுள்ள பங்குகளில் அதே அளவில் முதலீடு செய்யும். தற்போது இதன்
விலை ரூ.127 ஆகும். இந்த ஃபண்ட் நிர்வகிக்கும் தொகை ரூ1.24 கோடியாகும். கடந்த
ஓராண்டில் இந்த இ.டி.எஃப். 14.6% வருவாயைத் தந்துள்ளது. இதை டீமேட் கணக்கு
மூலம்தான் வாங்க முடியும்.

ஷரியா மியூச்சுவல் ஃபண்ட்!

இஸ்லாமியர்களுக்கு ஏற்ற முதலீடு… ஷரியா முதலீடுகள்! P26aடாரஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் டாரஸ் எத்திக்கல் ஃபண்ட்
என்ற திட்டத்தை நடத்தி வருகிறது. இந்த ஃபண்ட் இந்தியாவின், ஷரியாவுக்கு உட்பட்ட
முதல் மியூச்சுவல் ஃபண்ட் திட்டமாகும். இது நிர்வகிக்கும் தொகை ரூ.24.58
கோடியாகும். இதன் என்.ஏ.வி. ரூ.23.21. இத்திட்டம் மார்ச் 2009-ல் துவங்கப்பட்டது.
இதன் கடந்த ஓராண்டு கால வருமானம் 42.8% ஆகும். இந்த ஃபண்டை வாங்குவதற்கு டீமேட்
கணக்கு தேவையில்லை. இந்த ஃபண்ட் வருடத்திற்கு ஒரு முறை எவ்வளவு பணத்தை
சுத்தப்படுத்த வேண்டும் என்பதற்கான ஸ்டேட்மென்ட்டை முதலீட்டாளர்களுக்கு அனுப்பி
வைக்கும்.

டாடா செலக்ட் ஈக்விட்டி என்ற திட்டத்தை டாடா மியூச்சுவல் ஃபண்ட்
நிர்வகித்து வருகிறது. இந்தத் திட்டம் ஷரியாவுக்கு உட்பட்டு நடக்கும் என்று கூறாத
போதிலும், மதுபானம், புகையிலை, நிதித்துறை மற்றும் வட்டி கொடுக்கும் உபகரணங்களில்
முதலீடு செய்வதில்லை என்று அறிவித்து, அவ்வாறே நிர்வகித்தும் வருகிறது. இந்த ஃபண்ட்
139 கோடி ரூபாயை நிர்வகித்து வருகிறது. இதன் தற்போதைய என்.ஏ.வி. ரூ 63.31.
இத்திட்டம் மே 1996 முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. ஆரம்பம் முதல் ஜூன் 30,
2010 வரையில் ஆண்டுக்கு 18.97% வருமானமாகக் கொடுத்துள்ளது. கடந்த ஓராண்டில் 37.5%
-யும் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆண்டிற்கு 19.5% -யும் வருமானமாகக்
கொடுத்துள்ளது.

மேற்கண்ட திட்டங்கள் தவிர, நேரடியாகப் பங்குகளில் முதலீடு
செய்பவர்களுக்கு நிறைய வாய்ப்புக்கள் உள்ளன. நாம் மேலே கண்ட 6 ஃபில்டர்களை
அடிப்படையாகக் கொண்டு நிறுவனப் பங்குகளை தேர்வு செய்து முதலீடு செய்யலாம். நிஃப்டி
ஷரியா குறியீட்டில் இடம் பெற்றுள்ள ஷரியாவுக்கு உட்பட்ட சில லார்ஜ் கேப் பங்குகள்
கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

ரிலையன்ஸ்
இண்டஸ்ட்ரீஸ்,
இன்ஃபோசிஸ்,
எல். அண்ட்
டி,
பார்தி ஏர்டெல்,
ஹிந்துஸ்தான்
யூனிலிவர்,
ஒ.என்.ஜி.சி.,
பி.ஹெச்.இ.எல்.,
ரிலையன்ஸ்
கம்யூனிகேஷன்ஸ்,
என்.டி.பி.சி.,
டாடா
பவர்.

மேற்கண்ட முதலீடுகளுடன், தங்கம்/வெள்ளி போன்றவற்றிலும், ரியல்
எஸ்டேட்டிலும் நேரடியாக முதலீட்டாளர்கள் முதலீடு செய்யலாம். டெலிவரி அடிப்படையில்
முதலீடு செய்யும்போது அவை ஷரியாவுக்கு உட்பட்ட முதலீடுகளே!

இஸ்லாமியர்களுக்கு ஏற்ற முதலீடு… ஷரியா முதலீடுகள்! End_bar

நன்றி:- நா.வி

இஸ்லாமியர்களுக்கு ஏற்ற முதலீடு… ஷரியா முதலீடுகள்! P8a

இஸ்லாமியர்களுக்கு ஏற்ற முதலீடு… ஷரியா முதலீடுகள்! End_bar

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Aug 03, 2010 9:15 pm

நன்றி தோழரே .

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
Hasan1
Hasan1
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 24/12/2009
http://islamintamil.forumakers.com/

PostHasan1 Wed Aug 04, 2010 2:27 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக