Latest topics
» நாவல்கள் வேண்டும்by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தற்கொலை விரும்பிகளும், தூண்டும் இணைய தளங்களும் !!!
Page 1 of 1
தற்கொலை விரும்பிகளும், தூண்டும் இணைய தளங்களும் !!!
“நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன். எப்படிச் சாவது நல்லது என்று சொல்லுங்கள்”
இப்படி ஒரு கேள்வியை உங்களிடம் யாராவது கேட்டால் என்ன செய்வீர்கள் ?
அந்த நபரை அழைத்து பேசி, தனியே அறிவுரை சொல்லி தற்கொலை எண்ணத்தை கைவிட
உதவி செய்வீர்கள். அப்படித் தானே ?
ஆனால் எல்லா இடங்களிலும் இதே அரவணைப்பும், ஆறுதலும், வழிகாட்டுதலும் கிடைப்பதில்லை !
இப்படி ஒரு கேள்வி இணையதளத்தில் எழும்ப, உடனடியாக களத்தில்
குதிக்கின்றன பல பதில்கள். எல்லோரும் பல்வேறு வழிமுறைகளை கைவசம்
வைத்திருக்கின்றனர்.
இப்படிச் சாவது வலியற்ற சாவு. இப்படிச் சாக செய்யவேண்டியவை இவை,
தற்கொலைக்குத் தேவையான இந்தப் பொருட்கள் இந்த இடங்களில் கிடைக்கின்றன.
இந்த முறையில் சாக நினைப்பது உசிதம் ஏனெனில் சில மணி நேரங்களில் இறந்து
விடலாம்.
இப்படி ஏராளமான அதிர்ச்சியூட்டும் வழிமுறைகள் தற்கொலையை
உற்சாகப்படுத்துகின்றன. இந்தக் கட்டுரையில் நான் விளக்க விரும்பாத அந்த
வழிமுறைகளில், திரைப்படங்களில் நாம் பார்த்துப் பழகிய தற்கொலை வழிகள்
முதல் அதிர்ச்சியில் உறைய வைக்கும் அதி நவீன முறைகள் வரை உள்ளன என்பது
பகீர் பயங்கரம்.
“நன்றி… இது தான் என் விலாசம். நான் தற்கொலை செய்யப் போகிறேன்.” சொல்லி
விட்டு விடைபெறுகிறான் ஒரு பதின் வயது இளைஞன். கடமையில் கருத்தாய்
இருப்பதாய் கருதிக் கொண்டு செத்துப் போகிறான்.
எல்லோரும் அவனை உற்சாகமாய் வழியனுப்பி வைக்கிறார்கள். ஒரு உயிர்
அநியாயமாய் செத்துப் போகிறது. அதன் பின்னணியில் எழும் ஒரு குடும்பத்தின்
அழுகுரலைப் பற்றிய எந்த விதமான உறுத்தலும் இன்றி விவாதம் தொடர்கிறது.
“நான் தனியா தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன். யாராவது சேர்ந்து
தற்கொலை செய்யலாம் வருகிறீர்களா?” அழைப்பு விடப்படுகிறது. உடனே உற்சாகமாக
கும்பல் சேர்ந்து விடுகிறது.
அந்த கும்பல் ஐந்து பேரோ, ஐம்பது பேரோ குவிகின்றனர். தங்களுக்குள்ளாகவே
எப்படிச் சாவது ? எங்கே சாவது ? எப்போது சாவது என பேசி முடிவெடுக்கின்றனர்.
அனைவரும் கை கோர்த்துக் கொள்கிறார்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
இதெல்லாம் பரபரப்பூட்டும் திரைக்கதையோ, நாவலோ அல்ல. அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சி என்று சொன்னால் உள்ளம் பதறுகிறது அல்லவா?
உலகெங்கும் இத்தகைய இணைய தளங்கள் தற்கொலை விரும்பிகளால் நடத்தப்பட்டுக்
கொண்டிருக்கின்றன. ரஷ்யாவில் மட்டும் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட இணைய
தளங்கள் மும்முரமாய் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இளம் வயதினர் உறுப்பினராக இருக்கும் பல
இணணய தளங்கள் உள்ளன. இத்தகைய தளங்கள் பலரை தற்கொலைக்கு வழியனுப்பி
வைத்துக் கொண்டே இருக்கின்றன.
இதில் அதிர்ச்சியூட்டும் செய்தி என்னவெனில், யாரேனும் தனக்கு ஒரு
பிரச்சனை இருப்பதாகச் சொன்னால் உடனே தற்கொலையே தீர்வு என பலர் அறிவுரை
செய்கின்றனர்.
யாரும், தற்கொலை செய்ய வேண்டாம் என்றோ, அது தவறு என்றோ சொல்வதே இல்லை.
எப்போதேனும் எழும் சிறு சிறு குரல்களும் வெளிவராமல் அடங்கிவிடுகிறது.
தற்கொலை செய்வதா ? வேண்டாமா எனும் மனநிலையில் சிக்கித் தவிக்கும்
இளைஞர்கள் இத்தகைய தளங்களில் வந்தால் செத்துப் போவது உறுதி என்கின்றனர்.
சுமார் பதினொன்று முதல் இருபத்து ஐந்து வரையிலான வயதினரே இத்தகைய
தளங்களில் இணைந்து விவாதிக்கின்றனர். இத்தகைய இணைய தளங்களின் கொடிய
விளைவாக ரஷ்யாவில் மாதம் ஒன்றுக்கு சுமார் இருபது பதின் வயதினர் தற்கொலை
செய்து கொள்கின்றனர், மிக மிக மகிழ்ச்சியுடன்.
இந்தத் தளங்களில் இணைபவர்களில் ஏற்கனவே தற்கொலைக்கு முயன்றவர்களும் உண்டு அவர்கள் தங்கள் அனுபவங்களை இதில் பதிவு செய்கின்றனர்.
இப்படிப்பட்ட தளங்கள் வேறு விதமான முகமூடி அணிந்து நல்ல பிள்ளையாய்
காட்சியளிப்பதால் இதை தடை செய்யும் வழியும் தெரியாமல் விழிக்கின்றனர்.
பதின் வயது துடிப்புடனும், உற்சாகத்துடனும் செலவிட வேண்டிய வயது. இந்த
வயதில் தற்கொலை செய்ய வேண்டும் எனும் எண்ணம் ஏன் இவர்களுக்கு வருகிறது
என்பதற்கு உளவியலார் பல்வேறு காரணங்களைச் சொல்கின்றனர்.
முதலாவதாக, எங்கும் நிறைந்திருக்கும் பதின் வயதுக் காதல். அவனோ, அவளோ
இல்லையேல் வாழ்க்கை இல்லை என நினைக்கும் முட்டாள்தனமான பாலியல் ஈர்ப்புகள்
தற்கொலைக்குத் தூண்டுகின்றன. பெரும்பாலும் பெண்கள் இத்தகைய வசீகர வலையில்
சிக்கி தற்கொலையே தீர்வு என முடிவெடுத்து விடுகின்றனர்.
இரண்டாவதாக பெற்றோருடன் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் பதின் வயதினரை
சட்டென உணர்ச்சி பூர்வமான முடிவுக்குள் தள்ளி விடுகின்றன. தனக்குத் தண்டனை
தந்த பெற்றோரைத் தண்டிக்க வேண்டும் எனும் உணர்வு நிலை உந்துதல்
தற்கொலைக்குத் தூண்டுகிறது.
மூன்றாவதாக சகவயதினரின் கேலி, கிண்டல், படிப்பில் ஏற்படும் தோல்வி, இயலாமை என சிறி சிறு பலவீனங்களின் தற்கொலைக்குத் தூண்டுகின்றன.
நான்காவதாக, மரணத்துக்குப் பின் வாழ்க்கையில் ஏதோ மிக மிக அதிக
சந்தோசமும், சுவர்க்கமும் இருக்கின்றன எனும் நம்பிக்கை. என்னதான்
இருக்கிறது என்பதை அறிய வேண்டுமே எனும் ஆவல். பதின் வயதினரின் ஆர்வக்
கோளாறு தற்கொலைக்குத் தூண்டுகிறது.
இந்த இணைய தளங்களில் சென்று தற்கொலை செய்வதாக சொன்னால் மனம் மாற
வாய்ப்பே தராமல் கூடவே நின்று சாவதை உறுதி செய்து விடுகின்றனர். குறிப்பாக
குழுவினராக தற்கொலை செய்ய நினைப்பவர்கள் இடையில் விட்டு விலக வாய்ப்பு மிக
மிகக் குறைவு. காரணம் மற்ற தற்கொலை விரும்பிகளின் கட்டாயம்!
கடந்த முப்பது வருடங்களில் இந்த தற்கொலை விகிதம் முப்பது மடங்கு அதிகரித்திருப்பதாக ரஷ்ய இணைய தளம் ஒன்று தெரிவிக்கிறது.
நவீனயுகம் பல்வேறு வசதிகளைச் செய்து தருகிறது, அவை நன்மையின்
பாதையிலும், தீமையும் பாதையிலும் தடங்களைப் பதித்துக் கொண்டே செல்கிறது.
தண்ணீர் விடுத்து பாலை எடுக்கும் சங்க கால அன்னப் பறவை போல தீமை விடுத்து
நல்லதை எடுக்க வேண்டியது அவசியம்.
பதின் வயதுப் பருவம் என்பது மதில் மேல் அமர்ந்திருக்கும் பூனையைப்
போன்றது. அது சரியான திசையில் குதிப்பதும், குதிக்காததும்
குடும்பத்தினரின் அரவணைப்பையும், வழிகாட்டுதலையும் பொறுத்தது.
Re: தற்கொலை விரும்பிகளும், தூண்டும் இணைய தளங்களும் !!!
தற்கொலை விரும்பிகளால் நிரம்பும் சீனா & சென்னை !
மன அழுத்தமோ, வேலைப்பளுவோ, நிராகரிப்போ நிகழ்ந்து விட்டால் எதைப்
பற்றியும் யோசிக்காமல் தற்கொலை செய்து கொள்வது என்பது பலவீனமான மனதின்
வெளிப்பாடு.
இது இன்றைக்கு சீனாவின் மிகப்பெரிய தேசப் பிரச்சனையாக உருவாகி இருக்கிறது.
சீனாவில் ஆண்டுதோறும் தற்கொலை செய்து கொள்ளும் மக்களின் எண்ணிக்கை
தெரியுமா ? 2,50,000 !!! இவர்கள் வயது 15 க்கும் 34 க்கும் இடையே !
வாழவேண்டிய வயதில், வாழ்க்கையின் முதல் பக்கத்திலேயே இவர்களுடைய
வாழ்க்கை இப்படி வீணாக விரையமாவது சீன அரசின் மிகப்பெரிய கவலையாக
மாறியிருக்கிறது.
ஒவ்வொரு இரண்டு நிமிடமும் ஒரு தற்கொலையும், எட்டு தற்கொலை முயற்சிகளும்
சீனாவின் மெயின்லாண்டில் பதிவாவதாக சீனாவின் மனநல அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தத் தற்கொலைகளின் காரணங்களை ஆராய்ந்தால் முதலிடத்தில் இருப்பது
திருமண வாழ்வின் தோல்வி. சுமார் 30 விழுக்காடு தற்கொலைகள் திருமண
வாழ்க்கையின் அமைதியின்மையினால் நிகழ்கின்றனவாம்.
இரண்டாவது இடத்தில் இருப்பது கடுமையான வேலையினால் உருவாகும் மன
அழுத்தம். இது இருபது விழுக்காடு. மிச்சமுள்ள ஐம்பது விழுக்காடுகளை வறுமை,
சரியான வேலைவாய்ப்பின்மை, சமூகத்தின் அங்கீகாரமின்மை உட்பட பல்வேறு
காரணங்கள் நிரப்புகின்றன.
சீனாவிலும் நகர்ப்புறங்களை விட வசதிகள் குறைவான ஊர்ப்பகுதிகளில் இந்த
தற்கொலைகள் அதிகம் நிகழ்வதாக அரசு தெரிவிக்கிறது. இந்தியாவைப் போலவே
சீனாவிலும் இளைஞர்கள் எல்லாம் நகர்ப்புறங்களுக்கு இடம் பெயர்ந்ததால்
கிராமங்கள் முதியோர் இல்லங்களாய் காட்சியளிக்கின்றனவாம்.
பள்ளிக்கூடத்தில் பயிலும் பல பதின் வயதினரும் தற்கொலை செய்து கொள்வது
உண்மையிலேயே கலவரமூட்டுகிறது. இந்த விழுக்காடு 17 என அதிர்ச்சித் தகவல்
தெரிவிக்கிறது. படிப்பின் பயமும், தனிமை உணர்வும் இவர்களை வாட்டுகிறதாம்.
தற்கொலை, வாழ்வின் மீதான நம்பிக்கையின்மையின்மையின் வெளிப்பாடு.
சென்னையிலும் கடந்த ஆண்டு மட்டுமே 2500 பேர் தற்கொலை செய்து
கொண்டிருப்பதாக தகவல்கள் திகிலூட்டுகின்றன.
பொறுமையும், சகிப்புத் தன்மையும், முக்கியமாக குடும்ப உறவுகளில்
பிடிப்பின்மையும் இத்தகைய காலமாற்றத்தின் காரணம் எனலாம். வாழ்க்கை
நாகரீகத்தின் அடித்தளத்தில் கட்டப்படாமல், உண்மை உறவுகளின் மேல்
கட்டியெழுப்பப்படவேண்டும் என்பதையே இவை சுட்டிக் காட்டுகின்றன.

Similar topics
» உங்களுக்கு தேவையான அனைத்து தளங்களும் ஒரே இடத்தில்...
» விஷம் குடித்து மருமகன் தற்கொலை கிணற்றில் குதித்து மாமியார் தற்கொலை முயற்சி
» பாடகி நித்திய ஸ்ரீ மஹா தேவன் விஷம் குடித்து தற்கொலை முயற்சி ,கணவர் தற்கொலை,
» எஸ்.எஸ்.எல்.சியில் குறைவான மார்க் வாங்கிய மாணவி தற்கொலை, ஃபெயிலான 5 மாணவிகள் தற்கொலை முயற்சி
» 'தற்கொலை நகரம்': பெங்களூரில் பிபிஓ, ஐடி துறையினர் தற்கொலை அதிகரிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum