ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்?

2 posters

Go down

குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்? Empty குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்?

Post by thazeem Mon Aug 02, 2010 11:43 pm

குழந்தைகள் படுக்கையில் சிறுநீர்
கழிப்பது ஏன்
?


டாக்டர். B.செல்வராஜ் Ph.D.,


படுக்கையில்
சிறுநீர் கழிக்கும் நோயை ஆங்கிலத்தில் என்யூரிசிஸ் என்று மருத்துவர்கள்
அழைக்கிறார்கள். குழந்தைகள் படுக்கை
, உடைகள் அல்லது பொருத்தமற்ற இடங்களில்
தன்னிச்சையாகவோ அல்லது அனிச்சையாகவோ சிறுநீர் கழித்துவிடுவதே இந்நோயாகும்.
அல்சீமர் என்னும் நோயோ அல்லது பிற வகையான மறதி நோயால் பாதிக்கப்பட்ட பெரியவர்களும்
படுக்கை அல்லது உடைகளில் சிறுநீர் கழிக்கும் நோய் கொண்டுள்ளனர். பகலிலும்
படுக்கையில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகளும் இருந்தாலும். பெரும்பாலும் இறவிலேயே
படுக்கையில் சிறுநீர் கழிக்கும் இந்நோய் கிருஸ்து பிறப்பதற்கு
1500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே காணப்படுகிறது.
குழந்தை வளர வளர இந்நோய் தானாகவே சரியாகிவிடும். அல்லது சிகிச்சையின் மூலம்
சரியாக்கி விடலாம். ஒரு சில குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பதை ஐந்தாறு
மாதங்கள் நிறுத்தி பின் மீண்டும் தொடரும் வாய்ப்புகளும் உண்டு. பொதுவாக ஐந்து
வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழித்தால் தான் அது பிரச்சனை.
ஐந்து வயதுக்குற்பட்ட குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழித்தால் அது நோயல்ல. அது
பற்றி கவலைப்பட தேவையில்லை.



படுக்கையில்
சிறுநீர் கழிக்க குறிப்பிட்ட உடலியல் அல்லது உளவியல் காரணத்தை தனித்து கூற இயலாது.
பல காரணிகள் கூட்டாக இந்நோயை தோற்றுவிக்கின்றன. இந்நோய் உள்ள ஒரு சில குழந்தைகளினால்
சிறுநீரகமும்
, சிறுநீர்
பையும் சற்றே பிறழ்வான செயல்பாடுகளை கொண்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அதைப்
போன்றே சிறுநீர்பை நிறைந்து விட்டதை சற்றே தாமதமாக உணர்ந்து கொள்ளும் நரம்பு
மண்டலமும் இந்நோய்க்கு காரணமாக அமைகிறது. மேலும் பெற்றோர் சிறுவயதில் படுக்கையில்
சிறுநீர் கழிக்கும் நோயை கொண்டிருந்ததும் குடும்பத்தில் யாரேனும் பிற
உறுப்பினர்கள் இந்நோய் கொண்டிருந்ததும் தற்போது குழந்தைகள் படுக்கையில் சிறுநீர்
கழிக்க காரணமாக இருக்கலாம். குழந்தையின் மனதில் ஏதேனும் ஒரு மன அழுத்தத்தை
உண்டாக்கக்கூடிய நிகழ்வு பதிந்திருப்பது படுக்கையில் சிறுநீர் கழிக்க காரணமாக
அமைக்கிறது. பொதுவாக படுக்கையில் சிறுநீர் கழிப்பது வேறு ஏதோ ஒரு மனப்பிரச்சனையின்
அறிகுறியாகும்.



படுக்கையில்
சிறுநீர் கழிக்கும் குழந்தைகள் அவமானமும்
, பிறர் முன் தலைகுனிவும் கொள்வர், ஏணிப்படுக்கையில் படுப்பதையும் தவிர்ப்பர். தனித்திருத்தல், பிறருடனான பொருத்தப்பாட்டு பிரச்சனைகள், குறைவான தன்-மதிப்பு ஆகியவை படுக்கையில்
சிறுநீர் கழிக்கும் குழந்தைகளின் பிற உளவியல் பிரச்சனைகளாகும். எனவே
இந்நோய்களுக்கு சிகிச்சை அளிப்பது அவசியமாகும்.



வெளிநாட்டில்
இந்நோயை குணப்படுத்த அறிவியல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி நவீன சிகிச்சைகள்
அளிக்கின்றனர். குழந்தையின் உள்ளாடையில் ஓர் அல்ட்ரா சவுண்ட் கருவியை
பொருத்திவிடுவர். இக்கருவி குழந்தையின் சிறுநீர்ப்பையின் அளவை கண்காணிக்கும்.
சிறுநீர்ப்பை முழு அளவை எட்டியவுடன் எச்சரிக்கை மணியை இக்கருவி எழுப்பும் உடனடியாக
மணி சத்தம் கேட்ட குழந்தை எழுந்து சென்று சிறுநீர் கழித்து விட்டு வரலாம்.



இன்னொரு
முறையில் குழந்தையின் உள்ளாடையில் எச்சரிக்கை மணியுடன் கூடிய பஞ்சடை (
pad) வைக்கப்படும். எப்போதெல்லாம் இப்பஞ்சடை
ஈரமாகிறதோ அப்போதெல்லாம் எச்சரிக்கை மணி ஒலிக்கும். உடனே குழந்தை எழுந்து சென்று
சிறுநீர் கழித்து விட்டு வரும். நாளடைவில் மணி அடிக்காமலேயே எழுந்து சென்று
சிறுநீர் கழிக்க குழந்தை கற்றுக் கொள்ளும்.



படுக்கையில்
சிறுநீர் கழிப்பதை நிறுத்த பின்வரும் சில எளிமையான முறைகளை நாம் கையாளலாம்.



இரவில்
கடிகாரத்தில் குறிப்பிட்ட நேர இடைவெளிக்கு எச்சரிக்கை மணி ஓசை எழுப்பச் செய்து
, குழந்தையை விழிக்க வைத்து, கழிவறைக்குச் சென்று சிறுநீர் கழிக்க வைத்து
விட்டு வரலாம். சில நாட்கள் இவ்வாறு செய்தால் விரைவில் குழந்தை தானாக எழுந்து
சென்று சிறுநீர் கழிக்க பழகிக்கொள்ளும்.



குழந்தைகள்
தூங்கப் போக சில மணி நேரம் இருக்கும்போது நீரோ அல்லது பிற திரவ உணவுகளையோ
கொடுப்பதை தவிர்க்கவும்.



பெற்றோர்
குறிப்பிட்ட இடைவெளியில் சில மணி நேரத்திற்கு ஒருமுறை குழந்தையை எழுப்பி
சிறுநீர் கழிக்க வேண்டுமாஎன வினவலாம். ஆம் எனில் கழிவறைக்குச் சென்று
சிறுநீர் கழித்துவிட்டு வர உதவலாம்.



சிறுநீர்
எவ்வாறு கட்டுப்படுத்துவது என்ற முறைகளைப் பற்றிய விழிப்புணர்வை பெற்றோர்
குழந்தைகளிடத்தில் ஏற்படுத்தலாம்.



குழந்தைகள்
இரவில் படுக்கையிலும் உடைகளிலும் சிறுநீர் கழிக்காத சமயங்களில் அந்நடத்தையை
பாராட்டுவதும்
, சாக்லேட்
போன்றவைகளை பரிசளிப்பதும் இந்நோயை விரைவில் குணமாக்கும்.



படுக்கையில்
சிறுநீர் கழிக்கும் நோயை குணமாக்க மேற்சொன்ன எல்லா முறைகளை விட சிறந்த முறை
பெற்றோர்கள் குழந்தைகளுக்கு அன்பையும் மனரீதியான அரவனைப்பையும் அளிப்பதுதான்.



டாக்டர்.
B.செல்வராஜ்
Ph.D.,


முதுநிலை
உளவியல் விரிவுரையாளர்
,


அரசு
கலைக்கல்லூரி



கோவை
– 641 018





Copyright:thinnai.com


உன் மனம் வலிக்கும் போது சிரி
பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை!
thazeem
thazeem
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 286
இணைந்தது : 16/07/2009

http://www.vellaipooo.blogspot.com

Back to top Go down

குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்? Empty Re: குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்?

Post by சிவா Tue Aug 03, 2010 12:35 am

ம்ம்ம்ம்ம்....!!! இதற்காக அடிவாங்கியது ஒரு காலம்!


குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum