ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பழத்தின் விலை ரூ. 2000!

Go down

ஒரு பழத்தின் விலை ரூ. 2000! Empty ஒரு பழத்தின் விலை ரூ. 2000!

Post by அருண் Mon Aug 02, 2010 12:11 pm

ஒரு பழத்தின் விலை ரூ. 2000! 25konda3


உலகில் எண்ணற்ற வகையான பழங்கள் உள்ளன.​ ஆனால்,​​ நீலகிரி மாவட்டத்தில் ​ விளையும் ஒரு பழத்திற்காக முன்பதிவு செய்து மாதக்கணக்கில் காத்திருப்பது ​வினோதமானது.​ அந்தப் பழம் துரியன் பழம்தான்!
ஆங்கிலேயர் காலத்தில் நீலகிரியில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தப் பழ மரங்கள் "பர்லியார்' பகுதியில் காணப்படுகின்றன.​ "துரியோ ஜெபித்னஸ்' என்ற தாவரவியல் பெயரைக்கொண்ட துரியன் மரங்கள் உலகில் சுமத்ரா,​​ போர்னியோ,​​ தாய்லாந்து,​​ பர்மா,​​ வியட்நாம்,​​ மலேசியா,​​ சிங்கப்பூர் மற்றும் சிலி ஆகிய நாடுகளில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
சிறிய அளவிலான பலாப்பழத்தைப்போலத் தோற்றமளிக்கும் இப்பழங்களைப் பிரித்துப் பார்த்தால் உள்ளே அதிகபட்சமாக 7 சுளைகள் வரை காணப்படும்.​ இந்தப் பழம் மரத்திலேயே பழுத்து கீழே விழும்.​ பழம் பழுக்கும்போது அழுகிய முட்டையிலிருந்து வரும் துர்நாற்றத்தைப்போல அதன் மணம் இருக்கும்.​ இதன் காரணமாகவே பெரும்பாலானோர் இப்பழத்தை விரும்புவதில்லை.​ இப்பழத்தைக் குறித்து நீலகிரி மாவட்ட தோட்டக்கலை உதவி இயக்குநர் டாக்டர் வி.ராம்சுந்தர் நம்மிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து...
""இப்பழத்திற்குள் இருக்கும் இண்டோல் என்ற ரசாயனப் பொருள் கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.​ அதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டோர் இப்பழத்தை உண்டால் உடல் சுகவீனம் நீங்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது.​ அத்துடன் இப்பழத்திற்கு "அப்ரோடைசிக்' குணமுள்ளதால் வீரியத்தன்மையை உருவாக்குவதாக கருதப்படுகிறது.​ இப்பழம் பழுத்த பின்னர் அதிக நாட்களுக்கு வைக்க முடியாது.
"புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது' என்பது பழமொழி.​ ஆனால் மலேசிய நாட்டு வனத்துறையினர் வித்தியாசமான ஆராய்ச்சி ஒன்றை நிகழ்த்தியுள்ளனர்.​ துரியன் பழம் பழுக்கும் காலங்களில் இதன் மரத்திற்கடியில் புலிகளின் எண்ணிக்கை அதிகளவில் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.​ அதனால் இப்பழத்தை புலிகள் விரும்பி சாப்பிடுவதாக இருக்கலாம்.​ அல்லது இப்பழத்தை சாப்பிடுவதற்காக இம்மரத்திற்கு வரும் பிற விலங்கினங்களை தங்களுக்கு இரையாக்கிக் கொள்வதற்காகவும் இம்மரங்களுக்கடியில் புலிகள் கூட்டம் இருக்கலாம் எனவும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.​ இதுதொடர்பான ஆராய்ச்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
துரியன் பழங்களுக்குச் சீனாவில் அதிக கிராக்கி உள்ளது.​ அதேபோல,​​ தமிழகத்தில் சென்னை பகுதிகளில் இப்பழத்திற்கு அதிக வரவேற்பு உள்ளது.​ பெண்களின் "ஈஸ்ட்ரோஜென்' என்ற ஹார்மோன் சுரப்பியை இப்பழங்கள் ஊக்குவிப்பதால் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகமுள்ளதாக நம்பப்படுகிறது.
தாய்லாந்து நாட்டில் சந்தாபுரி என்ற இடத்தில் ஆண்டுதோறும் பழங்களுக்கான திருவிழா நடைபெறும்.​ இதில் முக்கிய பழமாக துரியன் இடம் பெறும்.​ சந்தாபுரியே துரியன் பழங்களின் தலைநகராக கருதப்படுகிறது.
மிதவெப்ப மண்டல பயிரான துரியன் பழங்கள் மட்டுமின்றி அந்த மரமும் மருத்துவக் குணம் வாய்ந்ததாகும்.​ இதன் இலைகளின் சாறு காய்ச்சலுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.​ அதேபோல,​​ மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இம்மரத்தின் இலைகளை வெந்நீரில் போட்டுக் குளிக்கலாம்.​
இதன் இலைச்சாறு தோல் நோய்க்கும் மருந்தாகப் பயன்படுகிறது.​ இம்மரத்தின் பசுமையான இளம் தளிர்கள் மற்றும் தண்டுகள் சாலட் செய்வதற்கும் உணவாகவும் பயன்படுத்தப்படுகின்றன.​ இப்பழத்திலுள்ள கொட்டைகளைப் பலாக்கொட்டைகளைப் போல வேக வைத்தும்,​​ வறுத்தும் சாப்பிடுகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் துரியன் பழ மரங்கள் பர்லியார் மற்றும் கல்லார் பழப்பண்ணைகளில் மட்டும் காணப்படுகிறது.​ இங்கு குறைந்த எண்ணிக்கையிலேயே துரியன் பழ மரங்கள் இருப்பதால் இப்பழங்களுக்காக முன்பதிவு செய்து கொள்கின்றனர்.​ இம்மரங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக தமிழக அரசின் தோட்டக்கலைத்துறையும் பதியன் மற்றும் ஒட்டு முறைகளின் மூலம் நாற்றுகளை உற்பத்தி செய்து வருகிறது.
இறக்குமதி செய்யப்படும் துரியன் பழங்களைவிட நீலகிரி மாவட்டத்தில் விளையும் துரியன் பழங்கள் வீரியம் கொண்டவையாக இருப்பதால் இதற்கான கிராக்கியும் அதிகரித்துள்ளது.​ வழக்கமாக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் துரியன் பழங்கள் ஒரு பழத்திற்கு ரூ.800 வரை விலை போகின்றன.​
ஆனால் பர்லியார் பகுதியில் கிடைக்கும் பழங்கள் ஒரு பழத்திற்கு ரூ.2,000 வரை விற்பனையாகின்றன.​ இதுவே இப்பழத்திற்கு மக்கள் மத்தியிலுள்ள வரவேற்பை உணர்த்துவதற்கு சாட்சி!​ பல்வேறு மருத்துவக் குணங்களையும்,​​ உள்ளூர் வெளியூர் வெளிநாட்டு மக்களிடம் அமோக வரவேற்பையும் பெற்றுள்ள துரியன் பழத்திற்கு,​​ சர்வதேச அளவில் எதிர்பார்ப்பு உள்ளது.​ ​ இந்தத் துரியன் பழம் மலைகளின் அரசியான நீலகிரியிலும் விளைவது இம்மாவட்டத்திற்கு மேலும் பெருமையளிப்பதாகும்.
கடைசியாக ஒரு தகவல்.​ இப்பழங்களிலிருந்து வெளியாகும் மணம் ஒவ்வாததால்,​​ சிங்கப்பூரில் இப்பழங்களை பொது இடங்களில் உண்பதற்குத் தடை விதித்துள்ளனர்.

ஏ.பேட்ரிக்​​​​​​​​​
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
»  ஒரு பழத்தின் விலை ரூ. 2000!
» வரலாறு காணாத விலை உயர்வு: தங்கம் விலை பவுன் ரூ.22 ஆயிரத்தை தாண்டியது
» சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.70 குறைப்பு; டீசல் விலை 50 பைசா உயர்வு
» சரக்கு விலை எகிறும்; கோதுமை விலை குறையும்: கூடுதல் வருவாய் எதிர்பார்ப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum