ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அணுசக்தி மூலப்பொருள் மறு சுழற்சி: இந்திய-அமெரிக்க ஒப்பந்தம் கையெழுத்து

2 posters

Go down

அணுசக்தி மூலப்பொருள் மறு சுழற்சி: இந்திய-அமெரிக்க ஒப்பந்தம் கையெழுத்து Empty அணுசக்தி மூலப்பொருள் மறு சுழற்சி: இந்திய-அமெரிக்க ஒப்பந்தம் கையெழுத்து

Post by ரபீக் Mon Aug 02, 2010 10:27 am

அணு மின் உலைகளில் பயன்படுத்தப்படும் அணுசக்தி மூலப் பொருள்களை மறு சுழற்சி செய்வதற்கான ஒப்பந்தத்தில் இந்தியாவும், அமெரிக்காவும் கையெழுத்திட்டன.

÷வாஷிங்டனில் உள்ள வெளியுறவு அமைச்சக வளாகத்தில் வெள்ளிக்கிழமை ஒப்பந்த கையெழுத்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் மீரா சங்கர், அமெரிக்க அரசியல் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர் வில்லியம் பர்ன்ஸ் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

÷அணுசக்தியை ஆக்க பூர்வமான பணிகளுக்கு மட்டும் பயன்படுத்துவது தொடர்பாக இரு நாடுகளிடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் இறுதிகட்ட நடவடிக்கையாக இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

÷இரு நாடுகளிடையிலான அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் அமெரிக்க அதிபர் ஒபாமா காட்டிவரும் தீவிரத்தின் ஒரு பகுதியாக இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது என்று பில் பர்ன்ஸ் குறிப்பிட்டார்.

÷இந்த ஒப்பந்தத்தின்படி இந்தியாவில் உள்ள அணு உலைகளுக்கு வழங்கப்படும் மூலப் பொருளை இந்தியாவிலேயே சர்வதேச அணுசக்தி முகமை (ஐஏஇஏ) வகுத்துள்ள பாதுகாப்பு விதிகளின்படி மறு சுழற்சி செய்து கொள்ள முடியும்.

÷இந்தியா-அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒப்பந்தத்தின் அடுத்த கட்டத்துக்கு முன்னேறியுள்ளதாக மீரா சங்கர் குறிப்பிட்டார்.

÷இரு நாடுகளிடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தான ஓராண்டுக்குள் அடுத்தடுத்த கட்ட ஒப்பந்தங்கள் துரித கதியில் நிறைவேற்றப்பட்டு வருவதிலிருந்தே, இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்துவதில் இரு நாடுகளுக்கும் உள்ள ஈடுபாடு தெளிவாகப் புரியும் என்றார் அவர்.

பயங்கரவாதிகளுக்கு எதிராக கூட்டாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளுக்கான ஒப்பந்தம் இந்தியா, அமெரிக்கா இடையே கடந்த வாரத்தில் புது தில்லியில் கையெழுத்தானது என்று மீரா சங்கர் குறிப்பிட்டார்.

÷இந்தியா, அமெரிக்கா இடையே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த 123 அணுசக்தி ஒப்பந்தம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கையெழுத்தானது. இதன்படி அணுசக்திக்கான மூலப் பொருளை இந்தியாவிலேயே மறு சுழற்சி செய்வதற்கு அனுமதிப்பது என்ற விதியும் இதில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

÷இதற்கு முன்னர் இதுபோன்ற மறுசுழற்சி செய்வதற்கான அனுமதியை ஐரோப்பிய யூனியன் மற்றும் ஜப்பானுக்கு மட்டுமே அமெரிக்கா வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

÷இந்தியா, அமெரிக்கா இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானதன் மூலம் இந்தியாவில் பல கோடி முதலீட்டில் அணுமின் திட்டங்கள் உருவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

÷முதல் கட்டமாக அணு ஈனுலை பூங்காவை ஆந்திரம் மற்றும் குஜராத்தில் நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கும். இந்தியாவில் அதிகரித்து வரும் மின் தேவையை சுற்றுச்சூழல் பாதிப்பின்றி பூர்த்தி செய்ய முடியும்.÷2022-ம் ஆண்டு இந்தியாவில் 35 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை அணு மின்நிலையம் மூலம் எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2032-ம் ஆண்டில் இது 60 ஆயிரம் மெகாவாட்டாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

÷ஆந்திரம் மற்றும் குஜராத்தில் அமைய உள்ள மின் நிலையங்கள் குறித்து அமெரிக்க நிறுவனங்களுடன் இந்திய நிறுவனங்கள் பேச்சு வார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

ஒபாமா பயணம் வரலாறு படைக்கும்: அதிபர் ஒபாமா இந்தியாவில் நவம்பரில் மேற்கொள்ள உள்ள பயணம் வரலாறு படைக்கும் என ஒப்பந்தம் கையெழுத்தான பின் மீரா சங்கர் தெரிவித்தார்.

÷இரு நாட்டு உறவும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மேம்படுவதுடன், சர்வதேச பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதில் எவ்வாறு இரு நாடுகளும் இணைந்து பணியாற்றுகின்றன என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டுவதாகவும் அவரது பயணம் அமையும் என்றார்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அணுசக்தி மூலப்பொருள் மறு சுழற்சி: இந்திய-அமெரிக்க ஒப்பந்தம் கையெழுத்து Empty Re: அணுசக்தி மூலப்பொருள் மறு சுழற்சி: இந்திய-அமெரிக்க ஒப்பந்தம் கையெழுத்து

Post by நவீன் Mon Aug 02, 2010 10:38 am

அணுசக்தி மூலப்பொருள் மறு சுழற்சி: இந்திய-அமெரிக்க ஒப்பந்தம் கையெழுத்து 678642 அணுசக்தி மூலப்பொருள் மறு சுழற்சி: இந்திய-அமெரிக்க ஒப்பந்தம் கையெழுத்து 678642
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்காவில் இருந்து 50 லட்சம் டன் எரிவாயு இறக்குமதிக்கு ஒப்பந்தம் - பிரதமர் மோடி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து
»  இந்தியா - இலங்கை இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது
»  10 ஆண்டுகளுக்கு பின் புத்துயிர் பெறும் இந்தியா-பிரான்ஸ் அணுசக்தி ஒப்பந்தம்
» வல்லரசு நாடுகளுடனான அணுசக்தி ஒப்பந்தம் ரத்து - ஈரான் அதிரடி அறிவிப்பு
» இஸ்ரேல், யு.ஏ.இ., பக்ரைன் இடையே டிரம்ப் முன்னிலையில் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum