ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அசின் படங்களை மலேசியாவில் திரையிடக் கூடாது - பினாங்கு தமிழ் இளைஞர் அமைப்பு

4 posters

Go down

அசின் படங்களை மலேசியாவில் திரையிடக் கூடாது - பினாங்கு தமிழ் இளைஞர் அமைப்பு Empty அசின் படங்களை மலேசியாவில் திரையிடக் கூடாது - பினாங்கு தமிழ் இளைஞர் அமைப்பு

Post by நிசாந்தன் Sun Aug 01, 2010 5:30 pm

அசின் படங்களை மலேசியாவில் திரையிடக் கூடாது என்று பினாங்கு தமிழ் இளைஞர் நடவடிக்கை இயக்கம் திரைப்பட விநியோகஸ்தர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் சத்தீஸ் முனியாண்டி, தமிழ்த் திரைப்படங்களை மலேசியாவில் விநியோகிக்கும் பிரமீட் சாய்மீரா குழுமம், லோட்டஸ் குழுமம் ஆகியவற்றுக்கு விடுத்துள்ள கோரிக்கை...
இலங்கையின் வட கிழக்கில் ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்து, தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை, உலக வல்லரசுகளின் உதவியோடு, ஆயுதம் பலம் கொண்டு நசுக்கிய கொடுங்கோலன் ராஜபக்சேவின் குடும்பத்தினரோடு கூடி, களித்து, கும்மாளமடித்து திரியும் அசின் என்ற திமிர் பிடித்த நடிகையின் படத்தை மலேசியாவில் திரையிடக் கூடாது என்று மலேசிய தமிழ்த் திரைப்பட விநியோகஸ்தர்களிடமும், திரையரங்க உரிமையாளர்களிடமும் பினாங்கு தமிழ் இளைஞர் நடவடிக்கை இயக்கம் தாழ்மையுடன் வேண்டுகோள் விடுக்கிறது.
இலங்கை என்றாலே சிங்கள பேரினவாதமும், சிங்கள இனவெறித்தனமும்தான் நமது நினைவுக்கு வரும். கடந்த பல்வேறுகாலங்களிலும், இலங்கையில் வாழ்ந்த தமிழர்களை, தங்களின் இனவெறி தாக்குதல்களுக்கு உட்படுத்தி, இன அழிப்பு நாடகத்தை நடத்தி வந்தது. இலங்கைப் பேரினவாதத்தைத் தட்டிக் கேட்க ஈழத்தில் பல அமைப்புகள் பிறந்த பொழுதிலும், மாவீரன் பிரபாகரனின் விடுதலைப் புலிகள் இயக்கம் பதிலடி கொடுக்கத் தொடங்கிய பிறகே அந்த இனவெறி ஆட்டங்கள் சற்று தணிந்தன.
இவ்வேளையில், ஈழத் தமிழர்களுக்குத் தனித் தமிழீழம் ஒன்றே தீர்வு என்று போராடிய அந்த விடுதலை அமைப்பை அழித்து விட வேண்டும் என்று, இந்தியா உள்ளிட்ட பல பிராந்திய உலக வல்லரசுகளின் ஒத்துழைப்போடு, கடந்த 2009ம் ஆண்டு, இலங்கையின் கிழக்கில் முள்ளிவாய்க்கால், என்ற பகுதியில், ஒரு இன அழிப்பு நாடகத்தை நடத்தி முடித்தது இலங்கையின் இனவெறி அரசு.
விடுதலைப் புலிகளுக்கெதிரான போர் என்ற போர்வையில், ஒட்டுமொத்த ஈழத் தமிழினத்தையே அழிக்கப் பார்த்தான் ராஜபக்சே என்ற கொடுங்கோலன்.முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிப் போரின்போது ஆயிரக்கணக்கான தமிழர்களைப் படுகொலை செய்தது இலங்கை இனவெறி அரசு. அத்தோடு தனது இன அழிப்புப் படலத்தை நிறுத்தி விடாமல் ஈழத் தமிழர்களை, தமது சொந்த மண்ணிலேயே அகதிகளாக ஆக்கி விட்டுள்ளது.
முள்வேளி முகாம்களுக்குள் ஈழத் தமிழர்கள் படும் கொடுமையை வார்த்தையால் விவரிக்க முடியாது என்று அண்மையில் கூட இலங்கைக்குச் சென்று வந்த சிலாங்கூரைச் சேர்ந்த தமிழின உதவும் கரங்கள் அமைப்பின் தோழர்கள் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதோடு மட்டுமல்லாமல் இலங்கை ராணுவம் கடும் போர்க் குற்றங்களை புரிந்திருப்பதாக கூறி உலக நாடுகளின் அழுத்தத்திற்குப் பிறகு ஐ.நா. சபையே இலங்கையின் போர்க்குற்றங்களை விசாரிக்க சிறப்பு நிபுணர் குழுவை அமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நிலைமை இவ்வாறு இருக்க தனது போர்க்குற்றங்களையும், இன அழிப்பு படலத்தையும் மூடி மறைக்க இலங்கை அரசு கடுமையாக முயன்றுவருகிறது. அதன் காரணமாகவே, இலங்கையில் அனைத்து உலக திரைப்பட விருந்தளிப்பு விழாவை நடத்தியது. இந்த விழாவில் பெரும் நடிகர் பட்டாளமே திரளும் என காத்திருந்த இலங்கை அரசுக்கு கிடைத்தது பெரிய ஏமாற்றம்தான். இந்தி திரையுலகின் மூத்த நடிகரான அமிதாப்பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய், என புகழ் பெற்ற இந்தி திரைப்பட நடிகர்கள், அண்ணன் சீமானின் நாம் தமிழர் அமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க அந்த விழாவைப் புறக்கணித்தனர்.
தென்னகத்து நடிகர்களான ரஜினிகாந்த் , கமல்ஹாசன், சிரஞ்சீவி , மம்முட்டி என அனைவரும் இலங்கை இனவெறி அரசின் அழைப்பைப் புறக்கணித்தனர். ஈழத் தமிழர்கள் படும் இன்னல்களைக் கண்டு அவர்கள் அவ்வாறு முடிவெடுத்தனர் என்று கூறலாம். நிலைமை இவ்வாறிரருக்க இலங்கைக்குப் படப்பிடிப்புக்குச் செல்கிறேன் என்று கூறிக் கொண்டு இலங்கையின் கொடுங்கோலன் ராஜபக்சே குடும்பத்தினரோடு சேர்ந்து தமிழர்கள் இருக்கும் மருத்துவமனைகளுக்கு சென்று புகைப்படத்துக்கு போஸ் கொடுக்கும் அசின், இலங்கை அரசின் பிரசார கருவியாக செயல்படுகிறார்.
இலங்கையில் இன அழிப்பு நடக்கவே இல்லை என்று பிரசாரம் செய்யும் நோக்கத்திலேயே இலங்கை இனவெறி அரசு தற்போது நடிகர், நடிகையரை தம் வசம் இழுக்கும் செயலில் இறங்கியுள்ளது. இலங்கை இனவெறி அரசின் வஞ்சகத்தை உணர்ந்துதான் இந்தியாவின் தலை சிறந்த நடிகர்கள், தமிழகத்துக்குக்க் கொஞ்சமும் தொடர்பில்லாத அமிதாப் பச்சன் உள்பட அனைவரும் இலங்கை அரசின் அழைப்பைப் புறக்கணித்திருக்கிறார்கள்.
இவ்வேளையில், இலங்கை அரசின் பிரசார பொம்மையாக செயல்பட்டது மட்டுமின்றி, அவரின் முட்டாள்தனமான செயலுக்கு மன்னிப்பும் கேட்க மாட்டேன் என்றும், ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் திமிராகப் பேசும் அசின் என்ற ஆணவக்காரியின் திரைப்படங்களை மலேசியாவில் திரையிட வேண்டாம் என்று மலேசியில் உள்ள தமிழ்த் திரைப்பட விநியோகஸ்தர்களிடமும், திரையரங்க உரிமையாளர்களிடமும், தாழ்மையான வேண்டுகோள் விடுக்கின்றோம்.
தமிழ்நாட்டில் வந்திருந்து தமிழர்களின் இயக்கத்தில் நடித்து, தமிழர்களின் பணத்தை சம்பாதித்துச் சென்ற பிறகு, இன்று தமிழர்களின் முகத்தில் காரி உமிழும் செயலைப் போன்றது ஆசினின் செயல்.உலகத் தமிழினேம, எமது ஈழத்து சகோதரர்களுக்காக அழுகையிலே, தமிழர்களின பணததில் ஒயயாரமாக வாழும் அசின், எமது ஈழதது சகோதரர்களின் கண்ணீரை மறைக்கும் வண்ணம், இனெவறி ராஜபக்சேவின் குடும்பத்திடம் உறவு கொண்டு, அவர்கள் தரும் பணத்திற்காக, பிரசசார பொம்மையாக வநது, புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தது ஈழத் தமிழர்களுக்கு செய்யும் துரோகம், மன்னிக்க முடியாத குற்றமாகும்.
இந்தத் துரோகியின் படங்களை திரையிட்டால் இவருக்கு விளம்பரம் தந்ததாகி விடும். அதை வைத்துக் கொண்டு இன்னும் ஒரு முறை நாடகமாடி பணம் சமபாதிப்பார். ஆகவே, இவர் செய்யும் துரோகத்திற்கு நாம் உடந்தையாகி விடக் கூடாது என்று தாங்கள் சற்றேனும் எண்ணிப் பார்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்.
வியாபாரம் செய்வது உங்கள் உரிமை. அதே வேளையில், உணர்வுகளும் முக்கியம். உலகத் தமிழினேம இன்று ஈழத் தமிழர்களுக்காக தவிக்கின்றது. அந்த தவிப்பு உங்களுக்கும் புரியும் என்று நம்புகின்றோம். ஆசின் நடிக்கும் திரைப்படத்தை மலேசியாவில் திரையிடுவதில்லை என்று நீங்கள் அறிவிக்கும் பட்சத்தில், உலகத் தமிழர்களுக்கு உங்கள் மீதுள்ள மதிப்பும் உயரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
தமிழர்கள் முறையாக கேட்டும் தமிழர்களின் உணர்வுகளை மதிக்காமல், இலங்கை சென்ற ஆசின் என்ற நடிக்யைின் படத்தைத் திரையிட மாட்டோம் என்று நீங்கள் அறிவித்தால், தமிழர்களை கேட்காமலேயே அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் உங்களை தமிழ் உலகம் என்றுமே மறவாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
லோட்டஸ் பைவ் ஸ்டார் மலேசியாவி்ன் தலை சிறந்த திரைப்பட விநியோகஸ்தர்கள். வள்ளல் ரெனாவின் புதல்வர்கள் இதை நிர்வகிக்கின்றனர் என்து குறிப்பிடத்தக்கது.வள்ளல் ரெனாவின் வழிவந்த அவர்தம் புதல்வர்கள், தமது தந்தையைப் போலவே, மலேசியத் தமிழர்களின் உணர்வுகளுக்கும், உலகத்தமிழர்களின் மனவோட்டத்துக்கும் கண்டிப்பாக மதிப்பளிபபார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.
அதைப் போலவே பிரமிட் சாய்மீரா நிறுவனத்திற்கு பொறுப்பேற்றிருக்கும் வேள்பாரி சாமிவேல் அவர்களும், இந்த விவகாரத்தில் அரசியல எல்லைகளைத் தாண்டி, தமிழர்களின் மனவோட்டத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

அசின் படங்களை மலேசியாவில் திரையிடக் கூடாது - பினாங்கு தமிழ் இளைஞர் அமைப்பு Empty Re: அசின் படங்களை மலேசியாவில் திரையிடக் கூடாது - பினாங்கு தமிழ் இளைஞர் அமைப்பு

Post by அருண் Sun Aug 01, 2010 6:33 pm

நல்ல முடிவு அம்மணிக்கு கஷ்ட காலம் ஆரம்பித்து விட்டன.........
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

அசின் படங்களை மலேசியாவில் திரையிடக் கூடாது - பினாங்கு தமிழ் இளைஞர் அமைப்பு Empty Re: அசின் படங்களை மலேசியாவில் திரையிடக் கூடாது - பினாங்கு தமிழ் இளைஞர் அமைப்பு

Post by tknithi Sun Aug 01, 2010 8:42 pm

இது ஒரு நல்ல முடிவு.ஆனால் வேண்டுகோள் மறுக்கப்பட்டால், ஏன் தமிழர்கள் அசின் திரைப் படத்தைப் காணாது, புறக்கணிக்கலாமே. பிறரை வேண்டுகோள் விடுத்துவிட்டு, நாம் வளாவிருப்பது எந்தவகை நீதி? இது இந்தியாவிலிருக்கும் தமிழர்களுக்கும் பொருந்தும்.
tknithi
tknithi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 29
இணைந்தது : 20/05/2010

Back to top Go down

அசின் படங்களை மலேசியாவில் திரையிடக் கூடாது - பினாங்கு தமிழ் இளைஞர் அமைப்பு Empty Re: அசின் படங்களை மலேசியாவில் திரையிடக் கூடாது - பினாங்கு தமிழ் இளைஞர் அமைப்பு

Post by நவீன் Mon Aug 02, 2010 10:32 am

அசின் படங்களை மலேசியாவில் திரையிடக் கூடாது - பினாங்கு தமிழ் இளைஞர் அமைப்பு 678642
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

அசின் படங்களை மலேசியாவில் திரையிடக் கூடாது - பினாங்கு தமிழ் இளைஞர் அமைப்பு Empty Re: அசின் படங்களை மலேசியாவில் திரையிடக் கூடாது - பினாங்கு தமிழ் இளைஞர் அமைப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை செல்லும் நடிகர்-நடிகைகள் படங்களை புறக்கணிக்க உலகத் தமிழ் அமைப்பு முடிவு
» கணினி வேலைக்கு பதில் பந்து பொறுக்கி போடும் பணி! மலேசியாவில் தவிக்கும் சிவகாசி இளைஞர்!
» பனிப்போர் பொறிகளுக்கு பலிக் கடாவாக நம் இளைஞர் சிக்கிவிடக் கூடாது....
» மலேசியாவில் உலக தமிழ் இணைய மாநாடு
» அசின் மீது அடுத்த புகார் : அதிர்ச்சியில் தமிழ் சினிமா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum