புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறிச்சி அம்மன் I_vote_lcapகுறிச்சி அம்மன் I_voting_barகுறிச்சி அம்மன் I_vote_rcap 
46 Posts - 70%
heezulia
குறிச்சி அம்மன் I_vote_lcapகுறிச்சி அம்மன் I_voting_barகுறிச்சி அம்மன் I_vote_rcap 
10 Posts - 15%
Dr.S.Soundarapandian
குறிச்சி அம்மன் I_vote_lcapகுறிச்சி அம்மன் I_voting_barகுறிச்சி அம்மன் I_vote_rcap 
8 Posts - 12%
mohamed nizamudeen
குறிச்சி அம்மன் I_vote_lcapகுறிச்சி அம்மன் I_voting_barகுறிச்சி அம்மன் I_vote_rcap 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறிச்சி அம்மன் I_vote_lcapகுறிச்சி அம்மன் I_voting_barகுறிச்சி அம்மன் I_vote_rcap 
211 Posts - 75%
heezulia
குறிச்சி அம்மன் I_vote_lcapகுறிச்சி அம்மன் I_voting_barகுறிச்சி அம்மன் I_vote_rcap 
37 Posts - 13%
mohamed nizamudeen
குறிச்சி அம்மன் I_vote_lcapகுறிச்சி அம்மன் I_voting_barகுறிச்சி அம்மன் I_vote_rcap 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
குறிச்சி அம்மன் I_vote_lcapகுறிச்சி அம்மன் I_voting_barகுறிச்சி அம்மன் I_vote_rcap 
8 Posts - 3%
prajai
குறிச்சி அம்மன் I_vote_lcapகுறிச்சி அம்மன் I_voting_barகுறிச்சி அம்மன் I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
குறிச்சி அம்மன் I_vote_lcapகுறிச்சி அம்மன் I_voting_barகுறிச்சி அம்மன் I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
குறிச்சி அம்மன் I_vote_lcapகுறிச்சி அம்மன் I_voting_barகுறிச்சி அம்மன் I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
குறிச்சி அம்மன் I_vote_lcapகுறிச்சி அம்மன் I_voting_barகுறிச்சி அம்மன் I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
குறிச்சி அம்மன் I_vote_lcapகுறிச்சி அம்மன் I_voting_barகுறிச்சி அம்மன் I_vote_rcap 
2 Posts - 1%
Shivanya
குறிச்சி அம்மன் I_vote_lcapகுறிச்சி அம்மன் I_voting_barகுறிச்சி அம்மன் I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறிச்சி அம்மன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 20, 2009 10:12 am

குறிச்சி அம்மன் Image%5C16 குறிச்சி அம்மன் 15


அம்பிகை, மாதா, தேவி, சக்தி, நாரி, சூலி, முக்கண்ணி, பைரவி, துர்க்கை, மாயை &இப்படி பல பெயர்களால் அழைக்கப்படும் அன்னை, ராஜ ராஜேஸ்வரியாக அமைதியே உருவாக கோவை பகுதியில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள்.

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு குறிச்சி வீட்டு வசதி வாரியத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் ஒரு புற்று தோன்றியது. அந்த தோட்டத்தை ஒட்டி ஒரு நெடுஞ்சாலை உள்ளது. அதை கடந்தால் மலையும், மலையை ஒட்டிய விவசாய நிலங்களும் உள்ளன. அந்த நிலத்திலிருந்து புறப்பட்ட ஒரு நாகம் தினசரி அந்த புற்றுக்கு வந்து சிலமணி நேரம் தங்கிச் சென்றது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள், அன்னை ராஜ ராஜேஸ்வரிதான் நாகப்புற்று உருவில் எழுந்தருளி உள்ளாள் என உணர்ந்தனர். எனவே, புற்றுக்கு மஞ்சள், குங்குமம் இட்டு, பூக்கள் சாற்றி, கற்பூரம், ஊதுபத்தி கொளுத்தி, பொங்கல் படையல் வைத்து, பாம்பிற்கும் பாலூற்றி வழிபடத் தொடங்கினர்.

தங்கள் குறைகளை அன்னையிடம் சொல்லி அவை நிவர்த்தியானதைத் தொடர்ந்து நேர்த்திக் கடன்களையும் செலுத்தத் தொடங்கினார்கள், பக்தர்கள். பின்னர் அன்னைக்கு அதே இடத்தில் ஆலயம் அமைத்து வழிபடத் தொடங்கினர்.

ஏகதள விமானத்துடன் கூடிய அன்னையின் ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ஆலய முகப்பைக் கடந்து மகாமண்டபத்தை அடையலாம். வெளிப்பிராகாரத்தின் தென் திசையில் துர்க்கையும், மேற்கு திசையில் பிள்ளையார், கருப்பராயர் மற்றும் சப்த கன்னியர் திருமேனிகள் ஆசி வழங்குகின்றன. வடக்குப் பிராகாரத்தில் ‘பஞ்ச நாகலிங்க கிருஷ்ண உரு’ நான்கடி உயர திருமேனியாக உள்ளது. வசுதேவர்&வாசுகிக்குப் பிறந்த கிருஷ்ணனை கம்சன் கையிலிருந்து தப்புவிப் பதற்காக, பெருமழை பிடித்த ஒரு நாளில் அவனை யசோதை யிடம் கொண்டு சேர்க்க வசுதேவர் சென்றபோது அவர்களை மழையிலிருந்து நாகம் குடைபிடித்துக் காத்ததே அந்த புராண சம்பவத்தை நினைவுறுத்துவதுபோல இச்சிலை அமைந்திருக்கிறது. சிவனே கிருஷ்ணன் என்ற ஒப்புமையையும் இச்சிலை விளக்குகிறது.

அர்த்தமண்டபத்தை அடுத்த கருவறையில் அன்னை ராஜ ராஜேஸ்வரி அருள் பொங்கும் புன்னகை யுடன் அமர்ந்திருக்கிறாள். தேவியின் தேவக்கோட்டத்தின் தென்புறம் கௌமாரியும், மேல்புறம் வைஷ்ணவியும், வடபுறம் பிராம்மியும் அருள்பாலிக்கின்றனர். மகா மண்டபத்தை ஒட்டி இடதுபுறம் தலவிருட்சமான அரசும், வேம்பும் விண்ணுயர செழித்து வளர்ந்துள்ளன. அவற்றின் கீழே மேடையில் பஞ்ச நாகர் சிலைகள் உள்ளன.


ராஜ ராஜேஸ்வரிக்கு சித்திரை மாத பௌர்ணமி அன்று சிறப்பு பூஜை நடைபெறுவதுடன் காலை திருக்கல்யாணமும், மதியம் சுமார் ஆயிரம் பேருக்கு அன்னதானமும் நடைபெறுகிறது. ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் குறிப்பிட்ட நாட்களில் அன்னைக்கு திருவிழாக் கோலம்தான். நவராத்திரி ஒன்பது நாட்களும் அன்னையை விதம் விதமாக அலங்கரித்து சிறப்பு பூஜைகள் செய்கிறார்கள். அன்னை அப்போது வீதியுலா வருவதும் உண்டு. செவ்வாய்க்கிழமை தோறும் சப்த கன்னியர்களுக்கு ராகு கால பூஜைகளும், சிறப்பு பூஜைகளும் நடைபெறுகின்றன. மாத பௌர்ணமி நாட்களில் திருவிளக்குப் பூஜை மிகவும் கோலாகலமாக நடத்தப்பெறுகிறது. ஏராளமான பெண்கள் இந்த பூஜையில் கலந்து கொள்கின்றனர்.

தன்னை நம்பியவர்களை தன் கண்போல் காக்கும் இந்த அன்னை கண் சம்பந்தமான நோய்களை தீர்க்க வல்லவள் என்றும் பார்வை கோளாறுகளை சரி செய்து அருள்புரிபவள் என்றும் பக்தர்கள் நம்புகின்றனர்.

கோவை&மதுக்கரை பேருந்து சாலையில் உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது குறிச்சி. உக்கடத்திலிருந்து நிறைய நகரப் பேருந்துகள் உள்ளன. குறிச்சி வீட்டு வசதி வாரியம் (பகுதி 2) என்று கேட்டு இறங்க வேண்டும். பஸ் நிறுத்தத்தில் இறங்கி நடந்தே ஆலயத்துக்குச் சென்று விடலாம்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 20, 2009 12:06 pm

நன்றி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக