புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மின்னஞ்சல் முகவரி Poll_c10மின்னஞ்சல் முகவரி Poll_m10மின்னஞ்சல் முகவரி Poll_c10 
68 Posts - 41%
heezulia
மின்னஞ்சல் முகவரி Poll_c10மின்னஞ்சல் முகவரி Poll_m10மின்னஞ்சல் முகவரி Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
மின்னஞ்சல் முகவரி Poll_c10மின்னஞ்சல் முகவரி Poll_m10மின்னஞ்சல் முகவரி Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
மின்னஞ்சல் முகவரி Poll_c10மின்னஞ்சல் முகவரி Poll_m10மின்னஞ்சல் முகவரி Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
மின்னஞ்சல் முகவரி Poll_c10மின்னஞ்சல் முகவரி Poll_m10மின்னஞ்சல் முகவரி Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
மின்னஞ்சல் முகவரி Poll_c10மின்னஞ்சல் முகவரி Poll_m10மின்னஞ்சல் முகவரி Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
மின்னஞ்சல் முகவரி Poll_c10மின்னஞ்சல் முகவரி Poll_m10மின்னஞ்சல் முகவரி Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மின்னஞ்சல் முகவரி Poll_c10மின்னஞ்சல் முகவரி Poll_m10மின்னஞ்சல் முகவரி Poll_c10 
1 Post - 1%
manikavi
மின்னஞ்சல் முகவரி Poll_c10மின்னஞ்சல் முகவரி Poll_m10மின்னஞ்சல் முகவரி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மின்னஞ்சல் முகவரி Poll_c10மின்னஞ்சல் முகவரி Poll_m10மின்னஞ்சல் முகவரி Poll_c10 
319 Posts - 50%
heezulia
மின்னஞ்சல் முகவரி Poll_c10மின்னஞ்சல் முகவரி Poll_m10மின்னஞ்சல் முகவரி Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
மின்னஞ்சல் முகவரி Poll_c10மின்னஞ்சல் முகவரி Poll_m10மின்னஞ்சல் முகவரி Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
மின்னஞ்சல் முகவரி Poll_c10மின்னஞ்சல் முகவரி Poll_m10மின்னஞ்சல் முகவரி Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
மின்னஞ்சல் முகவரி Poll_c10மின்னஞ்சல் முகவரி Poll_m10மின்னஞ்சல் முகவரி Poll_c10 
21 Posts - 3%
prajai
மின்னஞ்சல் முகவரி Poll_c10மின்னஞ்சல் முகவரி Poll_m10மின்னஞ்சல் முகவரி Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
மின்னஞ்சல் முகவரி Poll_c10மின்னஞ்சல் முகவரி Poll_m10மின்னஞ்சல் முகவரி Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
மின்னஞ்சல் முகவரி Poll_c10மின்னஞ்சல் முகவரி Poll_m10மின்னஞ்சல் முகவரி Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
மின்னஞ்சல் முகவரி Poll_c10மின்னஞ்சல் முகவரி Poll_m10மின்னஞ்சல் முகவரி Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
மின்னஞ்சல் முகவரி Poll_c10மின்னஞ்சல் முகவரி Poll_m10மின்னஞ்சல் முகவரி Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின்னஞ்சல் முகவரி


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 12, 2008 12:29 am

புதிதாக மின்னஞ்சல் உலகில் சஞ்சாரம் செய்ய ஆசைப்படுகின்ற, ஆனால் தொழில்நுட்ப அச்சங்கள் காரணமாகப் பின்னடிக்கின்ற சிலருக்கான அடிப்படைத் தகவல்களையும், தமிழில் மின்னஞ்சல் அனுப்ப முயற்சித்து பல்வேறு சிரமங்களையும் அனுபவிக்கின்ற புதிய
பாவனையாளர்களுக்கான அவசியத் தகவல்களையும் தாங்கி வருகிறது இந்தக் கட்டுரை.

ஏற்கனவே மின்னஞ்சல் அனுப்புகின்ற அல்லது பாவிக்கின்ற பாவனையாளர்களுக்கு, இந்தக் கட்டுரையின் பல தகவல்கள் முன்னரே அறிந்தவையாக இருக்கும் என்பதை முன்னதாகவே சொல்லி வைத்துக்கொண்டு, கட்டுரைக்குள் நுழைகிறோம்.

கணினி ஒன்றை வைத்திருக்கிறீர்கள் அல்லது வீட்டிலிருக்கும் கணினியை நீங்களும் பாவித்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது என்ற சூழ்நிலை இருந்தால், அடுத்து அவசியம் தேவைப்படுவது ஒரு மின்னஞ்சல் முகவரி.

கணினி ஒன்று வீட்டில் இல்லாவிட்டாலும் கூட, மின்னஞ்சல் முகவரியை வைத்திருப்பதற்கு நிறைய வாய்ப்புக்கள் உள்ளன. இன்ரநெற் கஃபே என்று அழைக்கப்படும், இணையத்தளங்களை வாடிக்கையாளர்கள் மேய்வதற்காக சில அங்காடிகள் ஆங்காங்கே உருவாக்கப்பட்டுள்ளன. பொது
நூலகங்கள் உட்பட, சில பொது நிறுவனங்கள், சமூக சேவை நிலையங்கள், தன்னார்வத் தொண்டர்சேவை சங்கங்கள் அல்லது அமைப்புக்கள் போன்ற பலவும், இணையத்தைப் பார்வையிட, பொதுமக்களுக்கு வசதிகள் செய்து கொடுத்துள்ளன.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 12, 2008 12:29 am

இந்த வசதிகள் எதையும் பயன்படுத்தும் சூழ்நிலை உங்களுக்கு இல்லை என்று வைத்துக்கொண்டால்கூட, உங்களது நண்பர் அல்லது நண்பியின் வீட்டில் கணினியுடன் கூடிய இணையத்தொடர்பும் இருந்தால், அவர்களது உதவியுடன்கூட, ஒரு மின்னஞ்சல் முகவரியை உருவாக்கிக் கொள்ளலாம்.

பல்வேறு பிரபலமான நிறுவனங்களும், மின்னஞ்சல் சேவையை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகின்றன. இலவசம் என்றதும், என்ன சிக்கல்களில் பின்னர் மாட்டிக்கொள்ள நேருமோ என்ற அச்சம் தேவையில்லை. அவர்களது சேவையைப் பாவிக்கும் வாடிக்கையாளர்களில்
கணிசமான விழுக்காட்டினர், அந்த இணையத் தளங்களிலுள்ள விளம்பரங்களைப் பார்வையிடவும் பயன்படுத்தவும் வாய்ப்பு இருக்கிறது என்பதால், பல பிரபல நிறுவனங்கள் இந்த இணையத் தளங்களை தங்கள் விளம்பர ஊடகங்களாகப் பாவிக்கின்றன. அவ்வாறு விளம்பரதாரரிடம் கட்டணம் அறவிடப்படுவதால், மின்னஞ்சல் சேவை நமக்கு இலகுவாக வழங்கப்படுகிறது.

தற்போது கணினி உலகில் பரவலாக அதிகமான பாவனையாளர்களால் பயன்படுத்தப்படும் மின்னஞ்சல் முகவரிகளின் நிறுவனங்களைப் பார்ப்போம். அதிக காலமாக சேவையிலிருக்கும் இலவச மின்னஞ்சல் சேவைகளாக ஹொட்மெயில், யாகூ போன்றவை காணப்பட்டாலும், கூகிள்
நிறுவனத்தால் பின்னர் அறிமுகம் செய்யப்பட்ட ஜிமெயில் சேவை பாவனையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 12, 2008 12:31 am

அதிக பாவனையாளர்கள் பாவிக்கும் இலவச மின்னஞ்சல் சேவைக்கான முதல் ஐந்து தளங்களாக கருதப்படுபவை:

www.gmail.com
www.fastmail.ca
www.hotmail.com
www.yahoo.ca அல்லது www.yahoo.com
www.mail.com


பாவனையாளர்களுக்கு மிக இலகுரக சேவையை, அதிகூடிய வசதிகளுடன் வழங்குகிறது ஜிமெயில். ஃபாஸ்ட்மெயில் சேவையும் பரவலாக அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. ஹொட்மெயில் மற்றும் யாகூ போன்றவை தொடர்ந்தும் கணிசமான வரவேற்பைப் பெற்று வருகின்றன. இவை தவிர, ஒருவர் வாழுகின்ற சொந்த நாட்டின் அல்லது நகரின் தொழில்நுட்பம் சார்ந்த பல மின்னஞ்சல் சேவைகளும் வழங்கப்படுகின்றன. உதாரணமாக, கனடா.கொம், யுஎஸ்.கொம், கலிபோர்னியா.கொம், சிட்னி.கொம் என்று பல சேவைகள் உள்ளன. அத்துடன், மின்னஞ்சலின் இறுதிச் சொற்பதமான .கொம் என்பது, அந்தந்த நாட்டின் கணினித் தொடர்புலக சேவையைப் பொறுத்து (Country Domain) வேறுபடுகின்றன. அமெரிக்காவுக்கு .us என்றும், ஜேர்மனிக்கு .de என்றும், இந்தியாவுக்கு .in என்றும், இத்தாலிக்கு .it என்றும் சிறீலங்காவுக்கு .lk என்றும் பிரத்தியேக இலத்திரனியல் தொடர்புச்சேவை (domains) ஒவ்வொரு நாட்டுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

நிற்க, மெயில்.கொம் சேவையைப் பொறுத்தவரை, ஏனைய சேவைகளைப் போன்று இது பெருமளவு வரவேற்பைப் பெறாவிட்டாலும்கூட, மின்னஞ்சலைப் பெறும்போது, அந்த முகவரியின் பின்பகுதியையும் நாம் விரும்பியபடி பாரிய பட்டியலிலிருந்து தெரிவு செய்வதற்கு மெயில்.கொம்
சேவை வாய்ப்பு வழங்குகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 12, 2008 12:32 am

உதாரணமாக, பரமகுருநாதன் என்பவர் தனக்கென ஒரு புதிய முகவரி எடுத்துக் கொள்கிறார் என்று பார்த்தால், paramagurunathan@gmail.com என்று அவரது முகவரி அமையலாம். இதிலே, a என்ற ஆங்கிய எழுத்தைச் சுற்றி ஒரு வட்டமிட்ட புதிய எழுத்து காணப்படுகிறதே, அதை அற் (at)
என்று அழைக்கிறார்கள். இன்னுமொருவருக்கு இந்த முகவரியைக் கூறுவதாக இருந்தால், 'பரமகுருநாதன் அற் ஜிமெயில் டொட் கொம்' என்று இந்த முகவரியை நாம் கூற வேண்டும். மின்னஞ்சல் முகவரியில் பலருக்கும் எழுகின்ற பெரிய குழப்பங்கள் இரண்டு.

1) பெரிய எழுத்து – சிறிய எழுத்து குழப்பம் (Capital or Lower Case)
2) www என்ற எழுத்துக்களை எங்கே பாவிப்பது, எங்கே தவிர்ப்பது என்ற குழப்பம்

- பெரிய எழுத்து அல்லது சிறிய எழுத்து குழப்பம் (Capital or Lower Case):- முகவரியை உருவாக்கும்போது, பரமகுருநாதன் தனது பெயரை, ParamaGuruNathan@Gmail.com என்று உருவாக்கியிருந்தால், முகவரி அதேபோன்றுதான் தோற்றமளிக்கும். ஆனால், இந்த முகவரியில் வரும் பெரிய எழுத்துக்கள் (Capital or Upper Case Letters) எல்லாம் மின்னஞ்சல் முகவரிக்கு பொதுவானவைதான். பெரிய ஜி (G), சிறிய யு (u), பெரிய என் (N) என்றெல்லாம் சொல்லி, முகவரி பெறுநரைக் குழப்பவேண்டிய அவசியமில்லை. பெரிய சிறிய எழுத்துக்கள் என்பவை, முகவரி உருவாக்கியவர், தனது பெயரை மற்றவர் இலகுவாக வாசிக்கலாம் என்பதற்காக எடுத்துக்கொண்ட நடவடிக்கைகளே தவிர, அவை மின்னஞ்சல் நிறுவனத்தைப் பொறுத்தவரை ஒரே தரத்தைக் கொண்டவையே.

www என்ற எழுத்துக்களுக்கும், மின்னஞ்சல் முகவரிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அதாவது, www என்ற எழுத்துக்களை, மின்னஞ்சல் முகவரியுடன் பாவிக்கும் அவசியம் இல்லை. இன்னும் சொல்லப்போனால், மின்னஞ்சல் முகவரியைக் கொடுக்கும்போது, www என்ற
எழுத்துக்களையும் நீங்கள் சேர்த்துக் கொடுக்க முயற்சித்தால், கணினி உலகத்தில் நான் ஒரு கத்துக்குட்டி, அதிகம் தெரியாதவன் என்று என்னை நானே காட்டிக்கொடுத்து விடுவதாக அமைந்து விடும். www என்ற எழுத்துக்கள், இணையத்தள முகவரிகளுக்கு மட்டுமே பாவிக்கப்படுகின்றன. அவற்றைப் பாவிக்காத இணையத்தள முகவரிகளும் உண்டு. ஆனால் அதைப்பற்றி வேறு பகுதியிலே பார்க்கலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 12, 2008 12:33 am

இலவச மின்னஞ்சல் சேவை வழங்கும் இந்த நிறுவனங்களின் பெயர், மின்னஞ்சலின் பின் பகுதியில் காணப்படும். மெயில்.கொம் போன்ற சில சேவைகளில் மட்டும், இந்த பின் பகுதியை, எமது தேவை கருதி, அவர்களது நீண்ட பட்டியலிலிருந்து ஒன்றைத் தெரிவுசெய்ய வாய்ப்புக் கிட்டுகிறது.
உதாரணமாக, பல் வைத்திய நிலையமொன்றை எடுத்துக் கொள்வோம். பரமகுருநாதன் ஒரு பல் வைத்தியராக இருந்தால், அவரது மின்னஞ்சல் முகவரியின் பின்பகுதியை, டென்ரிஸ்ட்.கொம் (dentist.com) என்று எடுத்துக் கொள்வதற்கு மெயில்.கொம் வாய்ப்பு வழங்குகிறது.
paramagurunathan@dentist.com என்று அவரது முகவரி அமைவது, அவரது தொழிலை நேரடியாகப் பிரதிபலிப்பதால், அதை விரும்புபவர்கள், மெயில்.கொம் போன்றதொரு சேவையைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

சொந்தத் தொழில் செய்பவர்கள் உட்பட, தங்கள் தேவை கருதியதாக மின்னஞ்சல் முகவரியை உருவாக்க விரும்பும் அனைவருக்கும், மெயில்.கொம் (www.mail.com) ஒரு அரிய வாய்ப்பாக இருக்கிறது.

மேலே நாம் பார்த்த ஏதாவது ஒரு இணையத்தள முகவரிக்கு சென்று, அங்கே புதிய மின்னஞ்சல் பெறுவதற்கான இணைப்பை (link) அழுத்தினால், அடுத்த கட்டமாக உங்களது சில அடிப்படை விபரங்களை நிரப்பும்படி கோரப்படும். சொந்த விபரங்களை இங்கே கொடுப்பதால் பின்னர் சிக்கல்
ஏதும் வந்து, மூத்த மகன் சத்தம் போடுவானே என்றோ, மருமோள் போர் தொடுப்பாள் என்றோ கவலைப்படவேண்டிய அவசியம் இல்லை. இங்கே ஒரு குட்டி ரகசியம் சொல்லி வைக்கிறேன். வேறு யாருக்கும் சொல்லாதீர்கள்.

சொந்தமாக தங்களுக்கென இலவச மின்னஞ்சல்களை உருவாக்கும் மிக அதிகமானவர்கள், தங்களது உண்மையான விபரங்களைக் கொடுப்பதில்லை. பரமகுருநாதன் ஒரு விரிவுரையாளராக மாறலாம், பரமலிங்கம் ஒரு வாழைப்பழக்கடை உரிமையாளராக உருவெடுக்கலாம்.
இலவச மின்னஞ்சல் சேவையை வழங்கும் நிறுவனங்களும் இதைப் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. ஆக, நீங்கள் விரும்பிய ஆண்டில் பிறந்து விரும்பிய பெயரில் உலா வருவதற்கும் இந்த இணையத் தளத்தில் வசதி இருக்கிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 12, 2008 12:34 am

மின்னஞ்சல் உருவாக்குதவற்குத் தேவையான விபரங்களைக் கோருகின்ற அந்தப் பத்திரத்தில், சில விபரங்களை சுருக்கமாகக் கொடுத்துக்கொண்டு, அடுத்த கட்டத்திற்குச் செல்லலாம். பிறந்த திகதி உட்பட, உங்களது பெயர் முகவரி தொழில் பொழுதுபோக்குகள் என்று அத்தனைக்கும்
புதுமைப்பித்தனிடம் கற்பனையைத் தற்காலிகமாகக் கடன்வாங்கிக்கொண்டு, ஒரு புதிய மின்னஞ்சல் முகவரியைத் தயாரித்து விடுங்கள். உங்கள் பெயரில் ஏற்கனவே யாராவது ஒருவர், தன்சானியாவில் ஒரு முகவரியைப் பெற்றிருப்பார். கவலை வேண்டாம். முன்னே அல்லது பின்னே அல்லது இடையில் ஓரிரு இலக்கங்களைச் சேர்த்துக்கொள்ளுங்கள். paramagurunathan123 என்று பாவிக்கலாம். pguru1000 என்றும் பாவிக்கலாம். param1_dentist என்றும் பாவிக்கலாம். தேவை மற்றும் விருப்பம் தளுவியதாக உங்கள் முகவரியை அமைத்துக் கொள்ளுங்கள். கடவுச்சொல்
(password) ஒன்று தேவை. ஞாபகத்தில் வைத்துக்கொள்ளக் கூடியதாகவும், அவசியம் ஏற்படும்போது கடவுச்சொல் என்ன என்பதை கௌரவமாக வெளிப்படுத்தக் கூடியதாகவும் அந்தச் சொல்லை அல்லது இலக்கங்களைத் தெரிவு செய்யுங்கள். கௌரவமான சொல்லைத் தெரிவுசெய்யும்படி கூறுவதற்கு எனது சொந்த அனுபவம் தான் காரணம். ஒருமுறை எனது மைத்துனர் வீட்டிற்குப் போயிருந்தேன். அங்கே வந்திருந்த நண்பர் ஒருவர், தனது மின்னஞ்சல் சேவையைப் பாவிக்க முடியாதிருப்பதாகக் கூறினார். அதை இலகுவாகச் சரிசெய்து விடலாமே என்று துள்ளியெழுந்த நான், கணினியில் நுழைந்து, மின்னஞ்சல் சேவையின் தளத்திற்கு சென்று, அவரது முகவரியை வழங்கி, கடவுச்சொல்லைப் பெறுவதற்கு முயற்சித்தேன்.
நண்பரின் கடவுச்சொல் என்ன என்று அவரிடமே சாதாரணமாகக் கேட்டேன். அங்கே பலர் உட்கார்ந்திருந்தார்கள். நண்பர் நெளிந்தார். கடவுச்சொல்லை பின்னர் மாற்றி விடலாம், கூறுங்கள் என்ன கடவுச்சொல் பாவித்தீர்கள் என்று கேட்டேன். அவர் மீண்டும் நெளிந்தார்.
நிலைமையைப் புரிந்துகொண்டு மாற்று வழிகளை நாடினேன். பின்னர் அவரிடம் விசாரித்தபோது, தான் மறந்துவிடக்கூடாது என்பதற்காக, சற்று தரம்குறைந்த வார்த்தை ஒன்றை நண்பர் பாவித்ததை மிகுந்த சங்கடத்துடன் கூறினார். எனவே, உங்கள் மனைவி அல்லது கணவனின் பெயருடன் ஒரு சில இலக்கங்களை இணைத்து அல்லது பொதுவான சொற்பதங்களுடன் கடவுச்சொல்லைத் தெரிவு செய்யுங்கள்.

மின்னஞ்சல் முகவரி தயாராகி விட்டால், நீங்கள் இலத்திரனியல் தொடர்பு உலகிற்குள் கௌரவமாகக் காலடி எடுத்து வைத்து விட்டீர்கள் என்று அர்த்தம். வாழ்த்துக்கள்.

உங்கள் முகவரி சரியாக வேலை செய்கிறதா என்பதை ஒருமுறை பரீட்சித்துப் பார்ப்பது அவசியம். உதாரணமாக, நீங்கள் ஜிமெயில் முகவரியை உருவாக்கியிருந்தால், www.gmail.com என்ற இணையத் தளத்திற்கு சென்று, அங்கே உங்கள் முகவரியும் கடவுச்சொல்லும் உங்களை
அனுமதிக்கிறதா என்பதை ஒருமுறை பரீட்சித்துப் பாருங்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 12, 2008 12:34 am

இயங்குகிறது என்று உறுதியானதும், உங்களது நெருங்கிய நண்பர்கள் உறவினர்களுக்கு உங்களது மின்னஞ்சல் (ஈமெயில்) முகவரியை வழங்குங்கள். a என்ற எழுத்தைச் சுற்றி வட்டமிட்ட புதிய எழுத்து, அற் (at) என்று அழைக்கப்படுகிறது என்று முன்பே பார்த்தோம் (@). மறக்காமல்
அதை உபயோகியுங்கள். 'எனது அம்மம்மாவிடம் மூன்று ஈமெயில் அட்றஸ் இருக்கடா' என்று உங்கள் பேரப்பிள்ளை தனது நண்பர்களிடம் சொல்லி புழகாங்கிதமடையுமளவுக்கு, நீங்கள் ஒரு கலக்கு கலக்குங்கள். தொலைபேசியில் இளையவர்களுடன் கதைத்தால், ஏதும் விபரங்களைக்
கூறும்போது, அவற்றை எனது ஈமெயிலுக்கு அனுப்பி விட முடியுமா என்று கேட்டு, அவர்களைக் கதிகலங்க வையுங்கள். நவீன உலகம், பழையவர்களைப் பலவீனமாக்கி விடவில்லை என்பதை, ஆதாரபூர்வமாகப் புரியவைக்க இலகுவான ஒரு வழியாக, ஈமெயில் முகவரி
அமைந்துவிடுகிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 12, 2008 12:35 am

மின்னஞ்சலில் தகவல் அனுப்புதல்

மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்புவதற்கு விரும்பினால், எப்போதும் நீங்கள் உங்களது மின்னஞ்சல் இயக்கிக்கு சென்று அங்கே புதிய மின்னஞ்சல் அனுப்புவதற்கான கட்டத்தை அழுத்தி, உரிய தகவல்களைப் பதிவுசெய்த பின்னர், பெறுநரின் மின்னஞ்சல் முகவரியை இட்டு, 'போ' என்று
சொடுக்கி விட்டால், ஒரு சில நிமிடங்களில் பெறுநரிடம் சென்று, அவரது பார்வைக்காக அந்த மின்னஞ்சல் காத்திருக்கும். இங்கே, தகவல்களைப் பதிவு செய்வது என்ற விடயத்தில் இரண்டு வழிகள் உள்ளன.

i. நேரடியாக மின்னஞ்சலைத் திறந்து வைத்துக்கொண்டு, அங்கே உடனடியாக விபரங்களைத் தட்டச்சு செய்து தகவலை அனுப்பி விடுவது ஒரு வழி. இந்த முறையைப் பாவிப்பதில் சில தீமைகள் இருக்கின்றன.
a. எழுத்துப் பிழைகள், சொற் பிழைகள், கருத்துப் பிழைகள் போன்றவை திருத்தப்படாமல் சென்றுவிட வாய்ப்பிருக்கிறது.
b. ஒன்றிற்கு மேற்பட்ட எழுத்துருக்களை (fonts) பாவிப்பதற்கு வாய்ப்புக்கள் மிகவும் குறைவாகவே உள்ளன.
c. எழுத்துக்களின் அளவை மாற்றுதல், மெருகூட்டுதல், கட்டம் தீட்டுதல், நிறம் மாற்றுதல், மையப் படுத்துதல், படங்களை அல்லது படவுருக்களை (icons) இணைத்தல் என்று, இன்னோரன்ன பல்வேறு செயற்பாடுகளும் கடினமானவையாகக் காணப்படும்.
d. தமிழில் எழுதுவதாக இருந்தால், நேரடியாக மின்னஞ்சலில் தட்டச்சு செய்யும்போது தமிழ் எழுத்துரு பற்றிய பிரச்சனைகள் எழலாம்.
e. எழுதிக் கொண்டிருக்கும்போது தற்செயலாக அல்லது தவறுதலாக அனுப்ப நேர்ந்துவிட்டால், சொல்லவந்த விடயம் பாதியிலேயே பெறுநரின் கைக்குக் கிட்டி, தேவையற்ற கருத்து மோதல்களை உருவாக்கி விடலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 12, 2008 12:35 am

ii. இத்தகைய தவறுகளைத் தவிர்ப்பதற்காக, எப்போதும் மின்னஞ்சலில் அனுப்ப விரும்பும் விடயத்தை, வேர்ட் (word), பப்லிசர் (Publisher) அல்லது வேறு ஏதாவது உங்களுக்குப் பரிட்சயமான மென்பொருள் இயக்கியைப் பயன்படுத்தி, அவற்றில் தட்டச்சு செய்து, தவறுகளைத் திருத்தி, எழுத்துருக்களை சரியாக அமைத்த பின்னர், எழுதிய விடயத்தை அப்படியே பிரதி (copy) செய்து, மின்னஞ்சல் அனுப்பும் தளப் பகுதியில் ஒட்டி அல்லது பதிவிலிட்டால் (paste), அனுப்பப்படும் விடயம், மிகத் தரமானதாகத் தோற்றமளிக்கும்.
a. இப்படியான மின்னஞ்சல்களைத் தயாரிக்கும்போது, பாமினி (bamini) எழுத்துருவைப் பாவிப்பது பொதுவாக விரும்பப்படுகிறது. தற்போது யூனிக்கோட் எழுத்துரு பரவலாகப் பாவனைக்கு வந்துவிட்டதுடன், அனைவராலும் பரிந்துரைக்கப் படுகின்ற ஒன்றாகவும் இருக்கிறது. எனினும்,
மின்னஞ்சல் அல்லது கணினி உலகின் மிக ஆரம்பகட்டப் பாவனையாளர்கள், யூனிக்கோட் என்ற தகுதர எழுத்துருவின் தன்மையையும் அதை உருவாக்கிப் பாவிக்கின்ற யுக்திகளையும் பழக்கப் படுத்திக் கொள்ளும்வரை, பாமினி எழுத்துருவைப் பாவிப்பது, பெறுநர் யாராக இருந்தாலும்,
அதை அப்படியே தமிழில் படிப்பதற்கு ஏதுவாக அமையும்.
b. பாமினி எழுத்துரு உங்களது கணினியில் இல்லை என்றால், கூகிள் தேடுதளத்தில் பாமினி எழுத்துருவைத் (bamini font) தேடி, அதைத் தரவிறக்கம் செய்துகொள்வது நல்லது. தரவிறக்கம் செய்யும்போது, எழுத்துருவை எங்கே சேமிப்பது என்பது முக்கியமானது. பொதுவாக, உங்களது
கணினியின் பிரதான சேமிப்பு வங்கியாகச் செயற்படும் 'சி' (C) நினைவகத்தின் வின்டோஸ் (windows) பகுதியில் காணப்படும் கோப்பகங்களில் (folders), எழுத்துருக்களுக்கென 'fonts' என்ற ஒரு கோப்பகம் காணப்படும். அதைத் திறந்து, அதனுள்ளே பாமினி என்ற எழுத்துருவையும் சேமித்து விட்டால், பின்னர் தமிழில் தட்டச்சு செய்வதற்கு வழி கிடைத்துவிடும். எந்தவொரு எழுத்துருவை தரவிறக்கம் செய்யும்போதும், இந்த கோப்பகத்திற்குள் சேமிப்பதே சரியானது என்பதை இந்த இடத்தில் ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.
c. தட்டச்சுக் கருவி (typewriter) தமிழில் இல்லை என்ற ஒரு பரவலான குற்றச்சாட்டு (பொய்க் காரணம் அல்லது சாட்டுப்போக்கு) சிலரிடம் உண்டு. இதை ஏன் பொய்க்காரணம் என்று கூறவேண்டி உள்ளதென்றால், தமிழில் தட்டச்சு செய்வதற்கு தமிழ் தட்டச்சுக் கருவியே தேவையில்லை என்ற உண்மையான நிலைப்பாடு தான். கூகிள் தேடுதளத்தில் எழுத்துருவைத் தேடியதுபோன்று, தமிழில் தட்டச்சு செய்வதற்கு உரிய 'தமிழ் தட்டச்சு குறிமுறை' அமைப்பையும் தேடிக் கண்டுபிடித்து, அதை பதிப்பான் மூலம் தெளிவாக பதிப்பித்து உங்கள் முன்னே வைத்துக்கொண்டால், நேரம் கிடைக்கும்போது படிப்படியாக எழுத்துக்களைப் பழகிக்கொள்ளலாம். ஆங்கிலத்தில் jkpo என்று தட்டச்சு செய்துவிட்டு, அதை பாமினி
எழுத்துருவாக மாற்றிப் பாருங்கள். 'தமிழ்' என்று தோற்றமளிக்கும். ஆக, எந்த ஆங்கில எழுத்தில், என்ன தமிழ் எழுத்து இருக்கிறதென்ற குறிமுறை அலகை (tamil font chart) உங்கள் முன்னே வைத்து பழக்கிக்கொண்டால், நாளடைவில் தமிழில் தட்டச்சு செய்வது இலகுவான பணியாகிவிடும்.
d. தமிழ் மொழி பாவனையாளர்கள் பலரும் தொடர்ச்சியாகக் கேட்கும் ஒரு கேள்வியாக, தமிழ் குறிமுறை அலகை எங்கே பெறலாம் என்பது காணப்படுகிறது. அவர்களது நன்மை கருதி, இங்கே அந்த அலகைத் தருகிறோம். இதைக் கத்தரித்து பாதுகாப்பதன் மூலம், படிப்படியாக தமிழ்
தட்டச்சைப் பழகிக்கொள்ள அரிய வாய்ப்பு உருவாகும் என்பது திண்ணம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 12, 2008 12:36 am

மின்னஞ்சல் முகவரி Bamini_chart_1


e. ஆங்கிலத் தட்டச்சுக் கருவிகளில் இந்த எழுத்துருக்களை அழுத்துவதன் மூலம், தமிழில் தட்டச்சு செய்ய முடியும். தட்டச்சுக் கருவியை மொழிமாற்றம் எதுவும் செய்யும் அவசியம் ஏற்படாது என்பது முக்கியமானது. வேர்ட் (word) அல்லது வேர்ட்பேர்பெஃக்ட் (word perfect) அல்லது ஏதாவது தங்களுக்கு வசதியான ஒரு சொற்செயலியைத் திறந்து, அங்கே பாமினி எழுத்துருவை தேர்வு செய்த பின்னர், சாதாரணமாக ஆங்கிலத்தில் தட்டச்சு செய்வது போன்று எழுத்துக்களை அழுத்தினால், கணினித் திரையில் தமிழ் எழுத்துக்கள் தோன்றும். தரப்பட்டுள்ள எழுத்துரு குறியீட்டலகைப் பயன்படுத்தி, சரியான எழுத்துக்களை அழுத்தினால், உரிய சொற்கள் தமிழில் தோன்றும். நீங்களும் விரைவில் தமிழ் தட்டச்சுக் காரர்களாக, ஆனாயசமாக தமிழில் தொடர்புகளை மேற்கொள்ளலாம். குறிப்பாக, மின்னஞ்சல் மூலம் தமிழில் தகவல் அனுப்ப விரும்பினால்கூட,
இப்படி முதலில் ஏதாவது ஒரு சொற்செயலியில் தமிழில் தட்டச்சு செய்த பின்னர், அதை அப்படியே பிரதி (copy)செய்து, உரிய மின்னஞ்சல் பகுதியில் பதிவு (paste) செய்வதன் மூலம், தமிழில் மின்னஞ்சல் அனுப்பும் வாய்ப்பும் உருவாகிவிடும்.
f. தமிழ் எழுத்துருக்களை தட்டச்சுக் கருவியில் இலகுவாக அடையாளம் காண்பதற்கு ஏதுவாக, ஆங்கில எழுத்துக்கு இணையான தமிழ் எழுத்தை, மிகச் சாதாரண பாவனையாளர்கள் கண்டறியும் வகையில் மேலும் ஒரு அட்டவணையை கீழே தருகிறோம். இந்த எழுத்துரு அட்டவணை,
பாமினி அல்லது அதற்கு நிகரான எழுத்துருக் கோவைகளுக்கான அட்டவணை என்பதை பாவனையாளர்கள் நினைவிற் கொள்வது முக்கியமானது. வேறு வகை எழுத்துருக்களுக்கு இந்த அட்டவணை சிலவேளை பொருந்தாமல் போக வாய்ப்பிருக்கிறது.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக