ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'கனிமொழி' பாடல்களை வெளியிட்டார் முதல்வர் கலைஞர் :-

Go down

'கனிமொழி' பாடல்களை வெளியிட்டார் முதல்வர் கலைஞர் :- Empty 'கனிமொழி' பாடல்களை வெளியிட்டார் முதல்வர் கலைஞர் :-

Post by SriThirunav Sat Jul 24, 2010 2:57 pm

'கனிமொழி' பாடல்களை வெளியிட்டார் முதல்வர் கலைஞர்:-




'கனிமொழி' பாடல்களை வெளியிட்டார் முதல்வர் கலைஞர் :- S43sxt


'கனிமொழி' பாடல்களை வெளியிட்டார் முதல்வர் கலைஞர் :- 3404200e-da38-4779-9b65-2b503efd999b1

நடிகை சோனாவும், அம்மா கிரியேஷன்ஸ் சிவாவும் இணைந்து தயாரித்திருக்கும்
படம் 'கனிமொழி'. இப்படத்தில் ஜெய் நாயகனாக நடிக்க, சஷான் பத்மாஷி நாயகியாக
அறிமுகமாகிறார். ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கி இருக்கும் இப்படத்திற்கு சதீஷ்
சக்ரவர்த்தி இசையமைக்க, நா.முத்துகுமார், பா.விஜய் ஆகியோர் பாடல்கள்
எழுதியிருக்கிறார்கள்.

இந்த படத்தின் தலைப்பிற்காகவே பாடல்
வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்டு முதல் ஆடியோ சிடியை முதல்வர்
மு.கருணாநிதி வெளியிட, விஜய் அதை பெற்றுக் கொண்டார்.

விழாவில்
முதல்வர் பேசியதாவது'-

"நாந் எல்லாம் விழாக்களுக்கும் குறித்த
நேரத்தில் சென்றுவிடுவேன். ஆனால் இந்த விழாவிற்கு வருவதற்கு சிறிது நேரம்
ஆகிவிட்டது. கனிமொழி பிறக்கும்போதும் அப்படிதான். நாங்கள் ஆவலோடு
எதிர்பார்த்துக்கொண்டிருந்த போது மருத்துவர்கள் குறிப்பிட்ட நேரத்தை விட
தாமதமாகவே பிறந்தார்.

உலகத் தமிழ் மாநாட்டின் ஊர்வலம் 1968ஆம் ஆண்டு
சென்னை மவுண்ட் ரோட்டில் (அப்போது அண்ணா சாலை என்று பெயர் மாற்ற வில்லை)
நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஜாகீர் உசேன், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர்
காமராஜர் போன்ற தலைவர்கள் எல்லாம் அமர்ந்து அந்தக் கண்கொள்ளாக் காட்சியைக்
காணும்போது, நானும், அவர்களோடு அமர்ந்திருந்த நேரத்தில், மருத்துவமனையிலே
இருந்து "உங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது" என்று எனக்குச் செய்தி
வந்தது.

கனிமொழி என்ற பெயரில் எப்போதும் எனக்கு ஒரு தனி பாசம்
உண்டு. நான் எழுதியுள்ள சிறுகதையானாலும், கட்டுரையானாலும் அவற்றில்
கதாநாயகியினுடைய பெயரோ அல்லது முக்கியமான பெண் கதாபாத்திரதினுடைய பெயரோ
"கனிமொழி" என்று இருக்கும். இப்படி பல பெண் பாத்திரங்களுக்கு "கனிமொழி"
என்று பெயர் வைத்து, அதன்மூலமாக மகிந்த நான், உள்ளபடியே ஒரு "கனிமொழி"
பிறந்திருக்கிறது
என்ற செய்தி வந்தவுடன், நான் மருத்தவனையிலே இருந்தவர்களுக்கு, என்
மனைவிக்கு சொன்னது. "குழந்தைக்கு நான் ஏற்கனவே சொன்னபடி :"கனிமொழி"
என்றுதான் பெயர் வைப்பேன்" என்றேன்.

ஒருவேளை உலகத் தமிழ்
மாநாட்டையொட்டி பிறந்த பெண் குழந்தை என்ற காரணத்தினாலோ, என்னவோ அந்த
கனிமொழி இன்றைக்கு உலகப் புகழ் பெறுகின்றவர்களிலே ஒருவராக விளங்கி
வருகிறார். பெற்றவர்களுக்கு அதனால் ஏற்பட்டிருக்கின்ற மகிழ்ச்சி கொஞ்ச
நஞ்சமல்ல, உங்களுக்குத் தெரியும்.

கனிமொழி இன்றைக்கு இந்த
விழாவிற்கு வந்திருக்க வேண்டும். ஆனால் அவர் வரவில்லை. கனிமொழி
பின்பற்றுகின்ற ஒரு இலக்கணம். தன்னைப் பாராடுகின்றவர்கள், தன்னைப்
புகழ்கின்றவர்கள் அல்லது தன்னைப் பாராட்டுவதற்காக நடைபெறுகின்ற விழாக்கள்
இவைகளில் கலந்து கொள்ளாமல் சமாளிப்பது,அவர்களுக்குப் போக்கு காட்டி வேறு
இடத்திற்குச் சென்று விடுவது கனிமொழியினுடைய வாடிக்கை.

ஆனால்,
எனக்குள்ள சங்கடம் என்னை உட்கார வைத்துகொண்டே, நம்முடைய கலையுலக நண்பர்கள்
பாராட்டுவதும், புகழ்வதும், போற்றுவதும். கூடுமானால் என்னைப்பற்றிய
வாழ்த்துகளை அச்சடித்துக்கொண்டே வந்து பாடுவதும் என்ற அளவிற்கு நிலைமை
வளர்ந்திருக்கிறது. இதை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. நான்
கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கிற அதே நேரத்தில், இந்தப் புகழையும்,
பெருமையும், பாராட்டுகளையும் தாங்கிக் கொள்ள முடியாமல், தங்களுடைய
கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் பல பேர் தினம் தினம் அறிக்கைகள்
விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் உங்களுக்குத் தெரியும்.

நான்
அவர்களைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. காரணம், அந்த ஏச்சுக்கும்,
பேச்சுக்கும் எனக்குக் கிடைக்கின்ற ஆறுதலான இடமாக கலையுலகம் இருக்கின்றது.
என்னுடைய கவலையை கலையுலகத்திலே இருக்கின்ற தம்பிமார்களையும்,
நண்பர்களையும், சகோதர சகோதரிகளைக் கண்டு நான் போக்கிக் கொள்கின்றேன்.

1938ஆம்
ஆண்டு வாக்கில் நான் எழுத ஆரம்பித்தேன். இதுவரையிலே எழுதிக்
கொண்டிருக்கின்றேன். இன்னும் என்னுடைய பேனாவிற்கு ஓய்வில்லை. எழுதிக்
கொண்டேயிருக்கின்றேன். "எழுதினேன், எழுதுகிறேன், எழுதிக்கொண்டேயிருப்பேன்".

இந்த
கலையுலகத்திற்கு என்னால் இயன்ற உதவிகளை ஆற்றியிருக்கிறேன் என்பதை முன்னால்
பேசியவர்கள் இங்கே குறிப்பிட்டார்கள். அதிலும் சிறப்பாக கலையுலகத்திலே
எந்த நடிகரை இன்றைக்கு உருவாக்கியிருகிறோமோ, எந்த நடிகர்களையெல்லாம்
இன்றைக்கு வாழ வைத்திருகிறோமோ, அதை விடப் பெரிய காரியமாக திரைபடத் துறையிலே
ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு ஏறத்தாழ நூறு ஏக்கர் நிலம் வழங்க
வேண்டுமென்று வைத்த கோரிக்கையையேற்று, அந்தக் கோரிக்கையின்படி, அந்த
நிலத்தை அவர்களுக்கு வழங்கி, அங்கே அவர்கள் வீடு கட்ட அஸ்திவாரம் போடுகின்ற
விழா வெகு விரைவிலே நடைபெறவிருக்கின்றது. அந்த விழாவிலே நான் கலந்து
கொள்வதுதான் இந்த விழாவை விட எனக்குச் சிறப்பான விழா என்பதை தொழிலாளத்
தோழர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தம்பி நடிகர் விஜய்
பேசும்போது குறிப்பிட்டார், அகில இந்திய அளவில் நேருவின் குடும்பம் எப்படி
பேசப்படுகிறதோ அதுபோல தமிழகத்தை எடுத்துக்கொண்டால் என்னுடைய குடும்பமும்,
நானும், அரசியலில் நாட்டு மக்களுக்கான தொண்டிலே ஈடுபட்டிருக்கிறோம் என்று
குறிப்பிட்டார். குடும்பமாக இருப்பதுதான் தொல்லை.

பல பேர் அந்த
வாய்ப்பு இல்லாத காரணத்தால், அந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளாத
காரணத்தால் எதற்கெடுத்தாலும், என்னைப் பற்றிப் பேச வேண்டுமென்றால், என்னைப்
பற்றிச் சாடுகின்ற பெரிய குற்றச்சாட்டே, நான் ஒரு குடும்பஸ்தன் என்பது
தான்.

அவர்களுக்கு அது வாய்க்கவில்லை என்பது என்னுடைய தவறல்ல.
ஆனால், இந்த நல்ல நேரத்தில் அதையெல்லாம் நினைவுபடுத்த வேண்டுமா என்று
நீங்கள் கேட்பது எனக்குப் புரியாமல் இல்லை, புரிகிறது. ஆகவே அதை நிறத்திக்
கொண்டு வாழ்க "கனிமொழி" "வெற்றி பெறுக கனிமொழி" என்று குறிப்பிட்டு இந்தப்
படத்தின் தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர், இயக்குநர் அத்தனை பேரும் இந்த
வெற்றியிலே பங்கு பெற்று வாழ்வார்கள் என்ற ஆழ்ந்த நம்பிக்கையைத்
தெரிவித்துக் கொள்கிறேன்." என்றார்.


தரவிறக்கம்:-


http://www.ziddu.com/download/10861940/02Muzhumadhi.mp3.html

http://www.ziddu.com/download/10861941/03YaaroIvalIval.mp3.html

http://www.ziddu.com/download/10861942/01PeneePogathey.mp3.html

http://www.ziddu.com/download/10861943/05MuzhumadhiInstrumental.mp3.html

http://www.ziddu.com/download/10861944/04ThadaThadaEndru.mp3.html
avatar
SriThirunav
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 27
இணைந்தது : 12/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum