ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா..

+5
ஹாசிம்
கலைவேந்தன்
balakarthik
திவா
Aathira
9 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. - Page 3 Empty முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா..

Post by Aathira Fri Jul 23, 2010 8:53 pm

First topic message reminder :





முத்துப்பற்களுக்குக்
கம்பி வேலி....

   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. - Page 3 Close%20Up%20Smile_edited-1

கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும்போது ஆசிரியர்களுக்கு ஒரே ஆச்சரியமாக இருக்கும். மாணவர்களிடம் காணப்படும் மாற்றங்கள். எப்போது விடுமுறை விடும் என்று காத்திருக்கும் பெற்றோர்கள் குழந்தைகல்ளை அழ்காக உருமாற்ற வேண்டி தம் குழந்தைகளுடன் மருத்துவ மனைகளுக்கு அலைய ஆரம்பித்து விடுவார்கள். விடுமுறை முடிந்து திரும்பும் மாணவர்கள்
எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்க்ஸுடன் பள்ளிக்கு வருவார்கள். அதில் இப்போது மிகப்பிரலமாகவும் அதிகமாகவும் மாணவர்களிடம் காணக்கிடைப்பது பற்களுக்கு வேலி போடுவது. நெல்லுக்கு வேலி போடலாம். அட சொல்லுக்கு வேலி போடலாம். அது எப்படி பல்லுக்கு வேலி என்று எண்ணுவது தெரிகிறது.
அது ஒன்றும் இல்லை.. தோட்டத்துக்கு முல் கம்பி வேலி போல் இது பல் கம்பி வேலி.. பற்களுக்குக் கம்பி போடுவதுதான்.

வகை வகையா பற்பசைகளை விளம்பரங்களைப் பாத்து பயன்படுத்தினாலும் ஒரு பல் வெள்ளையாகவும் ஒரு பல் பழுப்பாகவும் இருக்கும் சில குழந்தைகளுக்கு. சீராக இருக்க வேண்டிய வெண் சிறுத்தைக் குட்டிகள் வாய்க்குகையில் வேறு வேறாகத் திரிந்தலைந்தால்....இப்படித்தான். ஏக்கத்துடன்
ஏம்மா எனக்கு மட்டும் பல் இப்படி இருக்கு என்று கேட்கும் குழந்தைகள் இன்று பெருகி விட்டனர். அதே வேகத்தில் குழந்தைகளை மருத்துவரிடம் அழைத்துச் சென்று பற்களுக்குக் கம்பி போடும் தாய்மார்களும் பெருகிவிட்டனர்.

   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. - Page 3 YZ_bridge

மரபு காரணமாகவோ குழந்தைப் பருவத்தில் அவை பழகிய விரல் சூப்புதல், நாக்கைத் துறுத்துதல், உதட்டைக் கடித்தல் போன்ற சில பழக்கங்கள் காரணமாகவோ, சில குழந்தைகள் மூக்கால் சுவாக்காமல் வாயால் சுவாசிப்பார்கள். இதன் காரணமாகவோ, இன்னும் சிலர் அடிக்கடி பின்னால அல்லது கிடைத்த கம்பிகளால் பற்களைக் குத்திக்கொண்டிருப்பர். இவற்றின் காரண்மாகவோ பற்கள் சீர்கெட்டு விடுவது உண்டு.

இவ்வாறு சீர்கெட்டுப் போன பற்களைச் சீராக்கப்போடுவதே முன்னர் சொன்ன கம்பிவேலி. ஆர்த்தோ டாண்டிக் அப்ளையன்ஸ்’ (Orthodontic Appliances) என்று அழைக்கப்படும் இச்சிகிச்சை முறையைத் தமிழில் அழகாக பற்சீரமைப்புக்
கம்பிகள் என்பர். பற்களைச் சீரமைத்தாலும் அமைக்காவிட்டாலும் கம்பிகளின் பெயர் அழகாக இருக்க வேண்டுமல்லவா!

இவற்றில் இரண்டு வகை உண்டு. ஒன்று கழற்றி மாட்டும் பற்சீரமைப்புக் கம்பி. (Removable Appliance) இரண்டு நிரந்தர பற்சீரமைப்புக் கம்பி (Fixed Appliance).

   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. - Page 3 Ad-Photo-1817-1

இவற்றில் கழற்றி மாட்டும் பற்சீரமைப்புக் கம்பியை அணிந்தவர் தாமே கமிபியைக் கழற்றிச் சுத்தம் செய்து மாட்டிக் கொள்ளலாம். ஆனாலும் மாதத்திற்கு ஒரு முறை மருத்துவரிடம் சென்று கம்பியின் தளர்ச்சியைச் சமன் செய்து கொள்ளவேண்டும். இம்முறையில் செலவு குறைவு. ஆனால் இம்முறை
பற்கள் சிறிதளவு சீர்கெட்டு இருந்தால் மட்டுமே பயன்படும். அதிகமான கோணல் மாணல் என்றால் நிரந்தர பற்சீரமைப்பு முறையே பயனளிக்கும்.

   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. - Page 3 Me_In_Retainers

ஏனெனில், கழற்றி மாட்டும் முறையில் ஒற்றைக் கம்பி வேலி போல ஒரே கம்பி அத்தனைப் பற்களையும் சேர்த்துப் பிடித்துக் கொண்டிருக்கும். ஆகையால் அடங்காத பற்களை அடக்க இந்த ஒற்றைக் கம்பியால் முடிவதில்லை.

   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. - Page 3 Brackets

நிரந்தர பற்சீரமைப்புக் கம்பியின் சிறப்பு:


நிரந்தர பற்சீரமைப்புக் கம்பியில் ஒவ்வொரு பல்லுக்கும் ஒரு
சின்ன வெள்ளி நிறத் தகடு பொருத்தப்பட்டு, அத்தகடுகள் அனைத்தையும்
இணைத்தபடி ஒரு வெள்ளி நிறக்கம்பியும் பொருத்தப் பட்டிருக்கும். ஒவ்வொரு பல்லுக்கும் அதன உட்புறமாகவோ வெளிப்புறமாகவோ தள்ளிச் சீராக்க எவ்வளவு அழுத்தம் தேவையோ அவ்வளவு அழுத்தம் தனித்தனியாகக் கொடுக்கப்படுவது இம்முறையின் முக்கிய சிறப்பம்சம்.

இரண்டாவது சிறப்பம்சம் தாடையில் போதிய இடம் இல்லாத காரணத்தால், சீர்கெட்டுள்ள பற்களைச் சீராக்கத் தாடையில் இடம் ஏற்படுத்தும் வண்ணம், வரிசைக்கு இரு பற்களாக மேலும் கீழும் நான்கு கடைவாயப் பற்களை எடுத்து, பற்களின் அழகான வரிசைக்குப் போதிய இடத்தை ஏற்படுத்திக் கொடுத்தல். பற்கள் எடுத்த வெற்றிடம் தெரியாமல் பள்ளி மாணவர்களைப் போல பற்கள் வரிசையாக அமர்ந்து சீராகி
விடுகிறது.

இம்முறையில் பற்கள் வரிசையாக நகர்ந்து அழகாகிவிடும் என்பது உறுதி. ஆனால் வயது, பற்களின் சீரற்ற தன்மைக்கேற்ப ஓராண்டு அல்லது இரண்டு ஆண்டுகள் இக்கம்பிகளை அணிவது அவசியமாகிறது. மேலும் நிரந்தர கம்பிகளைப் போட வேண்டுமாயின் பால்பற்கள் அனைத்தும் விழுந்து நிரந்தர பற்கள் முளைத்த பின்பே போட முடியும். சுமார் பதிமூன்று அல்லது பதிநான்கு வயதுக்கு மேல்தான் இச்சிகிச்சை மேற்கொள்ள முடியும்.

இப்பருவம் இளைஞர்களின் மனதில் அழகுணர்ச்சி முளைவிடும் பருவம். அந்தக் கம்பி போட்ட பொண்ணு, கம்பி போட்ட பையன் என்று அடையாளம் சொல்வது அந்த இளம் மனதைச் சங்கடப் படுத்தும். இதெல்லாம் சகஜம்பா வாழ்க்கையிலே என்று இருக்க வேண்டுவதும்
அவசியமாகிறது. (வேறு வழியில்லையென்றால் என்ன செய்வது)

அதுமட்டுமல்ல மாதமொரு முறை மருத்துவரை அணுகி சோதனை செய்து கொள்ள வேண்டும். அப்பப்பா என்று பெருமூச்சி விடுவது கேட்கிறது. முத்துப்பல் வேண்டுமென்றால் சும்மாவா? இதையெல்லாம்
விடவும் பெரிய விஷயம் ஒன்றுள்ளதே. அதற்குள்ள பெருமூச்சு விட்டால் எப்படி? செலவுதான்!!! கையை மட்டுமல்ல, இது தலையையும் சேர்த்துக் கடிக்கிற செலவுதான்.

சரி மொத்தமாக இந்தக் கம்பி வேலிக்குத் தீர்வு என்னன்னு கேக்கிறீங்களா? குழந்தை விரல் சூப்பும் போதும் நாக்கைத் துறுத்தும் போதும் மென்மையாகப் பேசி அப்பழக்கங்களை மாற்ற வேண்டும்.

குழந்தைகள் மூக்கால் சுவாசிக்காமல் வாயால் சுவாசித்தால் அதற்குக் காரணமான டான்சில், அடினாய்ட் போன்ற கோளாறுகள் இருந்தால் காது மூக்கு தொண்டை மருத்துவரிடம் அழைத்துச் சென்று அதனை முதலில் சரியாக்க வேண்டும்.

நவகிரங்கள் வேண்டுமானால் ஆளுக்கொரு பக்கமாகத் திரும்பி இருக்கலாம். நாக்கைப் பாதுகாக்கும், நம் முக அழகைப் பாதுகாக்கும், ஏன் பல் போனால் சொல் போச்சு என்பார்கள், சொல் வாக்கையும பாதுகாக்கும் பற்கள் முப்பத்திரண்டும் எட்டு திசையில் திரும்பி இருந்தால்
பார்க்கவா முடியும். வருமுன்னர் வேலி போடாமல் பாது காப்பதோ, இல்லை வந்த பின்பு வேலி போடு சீராக்குவதோ எல்லாம் உங்க கையில்தான்....சீராக்குங்க சொத்தான...முத்துப்பற்களை...

ஆதிரா..


Last edited by Aathira on Fri Jul 23, 2010 9:09 pm; edited 3 times in total


   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. - Page 3 A   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. - Page 3 A   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. - Page 3 T   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. - Page 3 H   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. - Page 3 I   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. - Page 3 R   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. - Page 3 A   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. - Page 3 Empty Re: முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா..

Post by Aathira Mon Jul 26, 2010 5:38 pm

ஹாசிம் wrote:அருமையான விளக்கத்துடன் கூடிய பயனுள்ள கட்டுரை நன்றி அக்கா..
மிக்க நன்றி ஹாசிம்.    முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. - Page 3 154550


   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. - Page 3 A   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. - Page 3 A   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. - Page 3 T   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. - Page 3 H   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. - Page 3 I   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. - Page 3 R   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. - Page 3 A   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum