ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா..

+5
ஹாசிம்
கலைவேந்தன்
balakarthik
திவா
Aathira
9 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. - Page 2 Empty முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா..

Post by Aathira Fri Jul 23, 2010 8:53 pm

First topic message reminder :





முத்துப்பற்களுக்குக்
கம்பி வேலி....

   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. - Page 2 Close%20Up%20Smile_edited-1

கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும்போது ஆசிரியர்களுக்கு ஒரே ஆச்சரியமாக இருக்கும். மாணவர்களிடம் காணப்படும் மாற்றங்கள். எப்போது விடுமுறை விடும் என்று காத்திருக்கும் பெற்றோர்கள் குழந்தைகல்ளை அழ்காக உருமாற்ற வேண்டி தம் குழந்தைகளுடன் மருத்துவ மனைகளுக்கு அலைய ஆரம்பித்து விடுவார்கள். விடுமுறை முடிந்து திரும்பும் மாணவர்கள்
எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்க்ஸுடன் பள்ளிக்கு வருவார்கள். அதில் இப்போது மிகப்பிரலமாகவும் அதிகமாகவும் மாணவர்களிடம் காணக்கிடைப்பது பற்களுக்கு வேலி போடுவது. நெல்லுக்கு வேலி போடலாம். அட சொல்லுக்கு வேலி போடலாம். அது எப்படி பல்லுக்கு வேலி என்று எண்ணுவது தெரிகிறது.
அது ஒன்றும் இல்லை.. தோட்டத்துக்கு முல் கம்பி வேலி போல் இது பல் கம்பி வேலி.. பற்களுக்குக் கம்பி போடுவதுதான்.

வகை வகையா பற்பசைகளை விளம்பரங்களைப் பாத்து பயன்படுத்தினாலும் ஒரு பல் வெள்ளையாகவும் ஒரு பல் பழுப்பாகவும் இருக்கும் சில குழந்தைகளுக்கு. சீராக இருக்க வேண்டிய வெண் சிறுத்தைக் குட்டிகள் வாய்க்குகையில் வேறு வேறாகத் திரிந்தலைந்தால்....இப்படித்தான். ஏக்கத்துடன்
ஏம்மா எனக்கு மட்டும் பல் இப்படி இருக்கு என்று கேட்கும் குழந்தைகள் இன்று பெருகி விட்டனர். அதே வேகத்தில் குழந்தைகளை மருத்துவரிடம் அழைத்துச் சென்று பற்களுக்குக் கம்பி போடும் தாய்மார்களும் பெருகிவிட்டனர்.

   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. - Page 2 YZ_bridge

மரபு காரணமாகவோ குழந்தைப் பருவத்தில் அவை பழகிய விரல் சூப்புதல், நாக்கைத் துறுத்துதல், உதட்டைக் கடித்தல் போன்ற சில பழக்கங்கள் காரணமாகவோ, சில குழந்தைகள் மூக்கால் சுவாக்காமல் வாயால் சுவாசிப்பார்கள். இதன் காரணமாகவோ, இன்னும் சிலர் அடிக்கடி பின்னால அல்லது கிடைத்த கம்பிகளால் பற்களைக் குத்திக்கொண்டிருப்பர். இவற்றின் காரண்மாகவோ பற்கள் சீர்கெட்டு விடுவது உண்டு.

இவ்வாறு சீர்கெட்டுப் போன பற்களைச் சீராக்கப்போடுவதே முன்னர் சொன்ன கம்பிவேலி. ஆர்த்தோ டாண்டிக் அப்ளையன்ஸ்’ (Orthodontic Appliances) என்று அழைக்கப்படும் இச்சிகிச்சை முறையைத் தமிழில் அழகாக பற்சீரமைப்புக்
கம்பிகள் என்பர். பற்களைச் சீரமைத்தாலும் அமைக்காவிட்டாலும் கம்பிகளின் பெயர் அழகாக இருக்க வேண்டுமல்லவா!

இவற்றில் இரண்டு வகை உண்டு. ஒன்று கழற்றி மாட்டும் பற்சீரமைப்புக் கம்பி. (Removable Appliance) இரண்டு நிரந்தர பற்சீரமைப்புக் கம்பி (Fixed Appliance).

   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. - Page 2 Ad-Photo-1817-1

இவற்றில் கழற்றி மாட்டும் பற்சீரமைப்புக் கம்பியை அணிந்தவர் தாமே கமிபியைக் கழற்றிச் சுத்தம் செய்து மாட்டிக் கொள்ளலாம். ஆனாலும் மாதத்திற்கு ஒரு முறை மருத்துவரிடம் சென்று கம்பியின் தளர்ச்சியைச் சமன் செய்து கொள்ளவேண்டும். இம்முறையில் செலவு குறைவு. ஆனால் இம்முறை
பற்கள் சிறிதளவு சீர்கெட்டு இருந்தால் மட்டுமே பயன்படும். அதிகமான கோணல் மாணல் என்றால் நிரந்தர பற்சீரமைப்பு முறையே பயனளிக்கும்.

   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. - Page 2 Me_In_Retainers

ஏனெனில், கழற்றி மாட்டும் முறையில் ஒற்றைக் கம்பி வேலி போல ஒரே கம்பி அத்தனைப் பற்களையும் சேர்த்துப் பிடித்துக் கொண்டிருக்கும். ஆகையால் அடங்காத பற்களை அடக்க இந்த ஒற்றைக் கம்பியால் முடிவதில்லை.

   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. - Page 2 Brackets

நிரந்தர பற்சீரமைப்புக் கம்பியின் சிறப்பு:


நிரந்தர பற்சீரமைப்புக் கம்பியில் ஒவ்வொரு பல்லுக்கும் ஒரு
சின்ன வெள்ளி நிறத் தகடு பொருத்தப்பட்டு, அத்தகடுகள் அனைத்தையும்
இணைத்தபடி ஒரு வெள்ளி நிறக்கம்பியும் பொருத்தப் பட்டிருக்கும். ஒவ்வொரு பல்லுக்கும் அதன உட்புறமாகவோ வெளிப்புறமாகவோ தள்ளிச் சீராக்க எவ்வளவு அழுத்தம் தேவையோ அவ்வளவு அழுத்தம் தனித்தனியாகக் கொடுக்கப்படுவது இம்முறையின் முக்கிய சிறப்பம்சம்.

இரண்டாவது சிறப்பம்சம் தாடையில் போதிய இடம் இல்லாத காரணத்தால், சீர்கெட்டுள்ள பற்களைச் சீராக்கத் தாடையில் இடம் ஏற்படுத்தும் வண்ணம், வரிசைக்கு இரு பற்களாக மேலும் கீழும் நான்கு கடைவாயப் பற்களை எடுத்து, பற்களின் அழகான வரிசைக்குப் போதிய இடத்தை ஏற்படுத்திக் கொடுத்தல். பற்கள் எடுத்த வெற்றிடம் தெரியாமல் பள்ளி மாணவர்களைப் போல பற்கள் வரிசையாக அமர்ந்து சீராகி
விடுகிறது.

இம்முறையில் பற்கள் வரிசையாக நகர்ந்து அழகாகிவிடும் என்பது உறுதி. ஆனால் வயது, பற்களின் சீரற்ற தன்மைக்கேற்ப ஓராண்டு அல்லது இரண்டு ஆண்டுகள் இக்கம்பிகளை அணிவது அவசியமாகிறது. மேலும் நிரந்தர கம்பிகளைப் போட வேண்டுமாயின் பால்பற்கள் அனைத்தும் விழுந்து நிரந்தர பற்கள் முளைத்த பின்பே போட முடியும். சுமார் பதிமூன்று அல்லது பதிநான்கு வயதுக்கு மேல்தான் இச்சிகிச்சை மேற்கொள்ள முடியும்.

இப்பருவம் இளைஞர்களின் மனதில் அழகுணர்ச்சி முளைவிடும் பருவம். அந்தக் கம்பி போட்ட பொண்ணு, கம்பி போட்ட பையன் என்று அடையாளம் சொல்வது அந்த இளம் மனதைச் சங்கடப் படுத்தும். இதெல்லாம் சகஜம்பா வாழ்க்கையிலே என்று இருக்க வேண்டுவதும்
அவசியமாகிறது. (வேறு வழியில்லையென்றால் என்ன செய்வது)

அதுமட்டுமல்ல மாதமொரு முறை மருத்துவரை அணுகி சோதனை செய்து கொள்ள வேண்டும். அப்பப்பா என்று பெருமூச்சி விடுவது கேட்கிறது. முத்துப்பல் வேண்டுமென்றால் சும்மாவா? இதையெல்லாம்
விடவும் பெரிய விஷயம் ஒன்றுள்ளதே. அதற்குள்ள பெருமூச்சு விட்டால் எப்படி? செலவுதான்!!! கையை மட்டுமல்ல, இது தலையையும் சேர்த்துக் கடிக்கிற செலவுதான்.

சரி மொத்தமாக இந்தக் கம்பி வேலிக்குத் தீர்வு என்னன்னு கேக்கிறீங்களா? குழந்தை விரல் சூப்பும் போதும் நாக்கைத் துறுத்தும் போதும் மென்மையாகப் பேசி அப்பழக்கங்களை மாற்ற வேண்டும்.

குழந்தைகள் மூக்கால் சுவாசிக்காமல் வாயால் சுவாசித்தால் அதற்குக் காரணமான டான்சில், அடினாய்ட் போன்ற கோளாறுகள் இருந்தால் காது மூக்கு தொண்டை மருத்துவரிடம் அழைத்துச் சென்று அதனை முதலில் சரியாக்க வேண்டும்.

நவகிரங்கள் வேண்டுமானால் ஆளுக்கொரு பக்கமாகத் திரும்பி இருக்கலாம். நாக்கைப் பாதுகாக்கும், நம் முக அழகைப் பாதுகாக்கும், ஏன் பல் போனால் சொல் போச்சு என்பார்கள், சொல் வாக்கையும பாதுகாக்கும் பற்கள் முப்பத்திரண்டும் எட்டு திசையில் திரும்பி இருந்தால்
பார்க்கவா முடியும். வருமுன்னர் வேலி போடாமல் பாது காப்பதோ, இல்லை வந்த பின்பு வேலி போடு சீராக்குவதோ எல்லாம் உங்க கையில்தான்....சீராக்குங்க சொத்தான...முத்துப்பற்களை...

ஆதிரா..


Last edited by Aathira on Fri Jul 23, 2010 9:09 pm; edited 3 times in total


   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. - Page 2 A   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. - Page 2 A   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. - Page 2 T   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. - Page 2 H   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. - Page 2 I   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. - Page 2 R   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. - Page 2 A   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. - Page 2 Empty Re: முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா..

Post by Aathira Sat Jul 24, 2010 6:15 pm

இப்படியெல்லாம் சிரிச்சா... ஃபோட்டாவை பதியல்லன்ன உங்க பதிவுகள் காணாப் போயிடும்...ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ் ஆமா..


   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. - Page 2 A   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. - Page 2 A   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. - Page 2 T   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. - Page 2 H   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. - Page 2 I   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. - Page 2 R   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. - Page 2 A   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. - Page 2 Empty Re: முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா..

Post by balakarthik Sat Jul 24, 2010 6:23 pm

Aathira wrote:இப்படியெல்லாம் சிரிச்சா... ஃபோட்டாவை பதியல்லன்ன உங்க பதிவுகள் காணாப் போயிடும்...ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ் ஆமா..

அட அரசியலுல இதெல்லாம் சகஜமப்பா சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


ஈகரை தமிழ் களஞ்சியம்    முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. - Page 2 Empty Re: முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா..

Post by கலைவேந்தன் Sat Jul 24, 2010 11:48 pm

மிகமிக...பயனுள்ள..கட்டுரை...நன்றி...ஆதிராமேடம்...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. - Page 2 Empty Re: முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா..

Post by ஹாசிம் Sun Jul 25, 2010 9:37 am

அருமையான விளக்கத்துடன் கூடிய பயனுள்ள கட்டுரை நன்றி அக்கா..


நேசமுடன் ஹாசிம்
   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. - Page 2 Empty Re: முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா..

Post by சபீர் Sun Jul 25, 2010 9:43 am

எனது நண்பர் ஒருத்தர் இப்படியான ஒரு முறையை கையாண்டு தற்போது 80வீதம் சரியாகிவிட்டது.ஆனால் நான்தான் எந்தக்கவலையும் படுவதில்லை (பல் இருந்தால் தானே)நம்பிக்கை ஊட்டக்கூடிய இப்பதிவுக்கு எனது நன்றிக்கா




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. - Page 2 Empty Re: முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா..

Post by Aathira Sun Jul 25, 2010 10:02 pm

கலை wrote:மிகமிக...பயனுள்ள..கட்டுரை...நன்றி...ஆதிராமேடம்...!
   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. - Page 2 678642    முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. - Page 2 154550


   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. - Page 2 A   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. - Page 2 A   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. - Page 2 T   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. - Page 2 H   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. - Page 2 I   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. - Page 2 R   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. - Page 2 A   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. - Page 2 Empty Re: முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா..

Post by kalaimoon70 Mon Jul 26, 2010 2:51 am

உங்களுடைய மருத்துவக் கட்டுரை,பயன் தரும் என்பதில் சந்தேகமில்லை .அந்த வகையில் இதுவும் ஒன்று.
சொல்லொன்று சொன்னால் பல்லும் தெரியும் .தெரியும் பல்லும்
அழகாய் இருக்க,அதை பாதுக்காக்க,சொல்லும் உங்கள் வழிமுறை,
எங்களுக்கு பலன் தரும் என்பதில் ஐயமில்லை!

நன்றி நன்றி தோழியே .தொடருங்கள் உங்கள் சேவையை.
தாருங்கள் உங்கள் புதிய கட்டுரையை .




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. - Page 2 Empty Re: முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா..

Post by V.Annasamy Mon Jul 26, 2010 10:29 am

Aathira wrote:இப்படியெல்லாம் சிரிச்சா... ஃபோட்டாவை பதியல்லன்ன உங்க பதிவுகள் காணாப் போயிடும்...ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ் ஆமா..

ரசிகர்கள் 'பல்ஸ்' பிடிச்சுத்தான் சொல்கிறிர்கள்.

பற்களைப் பாதுகாக்க
சொற்களைச் சீருடன்,
அற்புதமாய், அசைபோட்டு,
கற்றோமே.


நன்றிகள் ஆதிரா.    முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. - Page 2 678642    முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. - Page 2 678642
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. - Page 2 Empty Re: முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா..

Post by சிவா Mon Jul 26, 2010 10:34 am

Aathira wrote:
ப்ளீஸ் உங்க ஃபோட்டோவை ஈகரையில் போடுங்கப்பா.. நாங்க எல்லாம் பாக்கனும்ல...

அய்யோ வேண்டாம் அக்கா! நங்களெல்லாம் இங்கு தினமும் வருவது உங்களுக்குப் பிடிக்கவில்லையா? இவரின் போட்டோவைப் பார்த்துவிட்டு அனைவரும் ஓடினால் நீங்களே பொறுப்பு!


   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. - Page 2 Empty Re: முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா..

Post by சிவா Mon Jul 26, 2010 10:36 am

”முத்துப் பற்களுக்கு கம்பி வேலி” - தலைப்பே அனைவரையும் கட்டுரையைப் படிக்கத் தூண்டுகிறது! மிகவும் அழகான மருத்துவக் கட்டுரையை வழங்கிய ஆதிராவுக்கு    முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. - Page 2 154550 நன்றி!


   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

   முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா.. - Page 2 Empty Re: முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி.... ஆதிரா..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum