புதிய பதிவுகள்
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 0:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 8:01

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீரமங்கை வேலுநாச்சியார் Poll_c10வீரமங்கை வேலுநாச்சியார் Poll_m10வீரமங்கை வேலுநாச்சியார் Poll_c10 
163 Posts - 79%
heezulia
வீரமங்கை வேலுநாச்சியார் Poll_c10வீரமங்கை வேலுநாச்சியார் Poll_m10வீரமங்கை வேலுநாச்சியார் Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
வீரமங்கை வேலுநாச்சியார் Poll_c10வீரமங்கை வேலுநாச்சியார் Poll_m10வீரமங்கை வேலுநாச்சியார் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
வீரமங்கை வேலுநாச்சியார் Poll_c10வீரமங்கை வேலுநாச்சியார் Poll_m10வீரமங்கை வேலுநாச்சியார் Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
வீரமங்கை வேலுநாச்சியார் Poll_c10வீரமங்கை வேலுநாச்சியார் Poll_m10வீரமங்கை வேலுநாச்சியார் Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
வீரமங்கை வேலுநாச்சியார் Poll_c10வீரமங்கை வேலுநாச்சியார் Poll_m10வீரமங்கை வேலுநாச்சியார் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வீரமங்கை வேலுநாச்சியார் Poll_c10வீரமங்கை வேலுநாச்சியார் Poll_m10வீரமங்கை வேலுநாச்சியார் Poll_c10 
1 Post - 0%
Guna.D
வீரமங்கை வேலுநாச்சியார் Poll_c10வீரமங்கை வேலுநாச்சியார் Poll_m10வீரமங்கை வேலுநாச்சியார் Poll_c10 
1 Post - 0%
prajai
வீரமங்கை வேலுநாச்சியார் Poll_c10வீரமங்கை வேலுநாச்சியார் Poll_m10வீரமங்கை வேலுநாச்சியார் Poll_c10 
1 Post - 0%
Pampu
வீரமங்கை வேலுநாச்சியார் Poll_c10வீரமங்கை வேலுநாச்சியார் Poll_m10வீரமங்கை வேலுநாச்சியார் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீரமங்கை வேலுநாச்சியார் Poll_c10வீரமங்கை வேலுநாச்சியார் Poll_m10வீரமங்கை வேலுநாச்சியார் Poll_c10 
328 Posts - 78%
heezulia
வீரமங்கை வேலுநாச்சியார் Poll_c10வீரமங்கை வேலுநாச்சியார் Poll_m10வீரமங்கை வேலுநாச்சியார் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
வீரமங்கை வேலுநாச்சியார் Poll_c10வீரமங்கை வேலுநாச்சியார் Poll_m10வீரமங்கை வேலுநாச்சியார் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
வீரமங்கை வேலுநாச்சியார் Poll_c10வீரமங்கை வேலுநாச்சியார் Poll_m10வீரமங்கை வேலுநாச்சியார் Poll_c10 
8 Posts - 2%
prajai
வீரமங்கை வேலுநாச்சியார் Poll_c10வீரமங்கை வேலுநாச்சியார் Poll_m10வீரமங்கை வேலுநாச்சியார் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
வீரமங்கை வேலுநாச்சியார் Poll_c10வீரமங்கை வேலுநாச்சியார் Poll_m10வீரமங்கை வேலுநாச்சியார் Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
வீரமங்கை வேலுநாச்சியார் Poll_c10வீரமங்கை வேலுநாச்சியார் Poll_m10வீரமங்கை வேலுநாச்சியார் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வீரமங்கை வேலுநாச்சியார் Poll_c10வீரமங்கை வேலுநாச்சியார் Poll_m10வீரமங்கை வேலுநாச்சியார் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
வீரமங்கை வேலுநாச்சியார் Poll_c10வீரமங்கை வேலுநாச்சியார் Poll_m10வீரமங்கை வேலுநாச்சியார் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வீரமங்கை வேலுநாச்சியார் Poll_c10வீரமங்கை வேலுநாச்சியார் Poll_m10வீரமங்கை வேலுநாச்சியார் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீரமங்கை வேலுநாச்சியார்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 29 Jul 2009 - 5:16

வீரமங்கை வேலுநாச்சியார் Velu_nachiyar


இராணி வேலு நாச்சியார்: படிமம், தோராயமாக கி.பி 1792
ஆட்சிக்காலம் கி.பி: 1780- கி.பி 1789
முடிசூட்டு விழா: கி.பி 1780
பிறப்பு: 1730
பிறப்பிடம்: இராமநாதபுரம்
இறப்பு: 25 டிசம்பர், 1796
முன்னிருந்தவர்: முத்து வடுகநாதர்
அரச வம்சம்: நாயக்க மன்னர்
தந்தை: செல்ல முத்து சேதுபதி



எத்தனையோ சாதனை மங்கைகளை தமிழ் வரலாறு பார்த்திருக்கிறது. ஆனால் வீர மங்கை என்றால் அவர் ஒருவர்தான். வேலு நாச்சியார். வீரம் என்றால் சாதாரண வீரம் அல்ல, மாபெரும் படைகளை எதிர்கொண்டு வீழ்த்திய வீரம்.

'சக்கந்தி'' இராமநாதபுரத்திற்கு அருகிலுள்ள ஊர். வேலுநாச்சியார் பிறந்தது இங்கேதான். தந்தை முத்து விஜயரகுநாதசெல்லத்துரை சேதுபதி. இராமநாதபுர மன்னர். தாய் முத்தாத்தாள் நாச்சியார். இவர்களின் ஒரே பெண் குழந்தை வேலுநாச்சியார். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பது இந்தக் காலத்தில் நாம் சொல்லும் பழமொழி. ஆனால் அந்தக் காலத்தில் அதற்கு உதாரணமாய் இருந்திருக்கிறார் வேலுநாச்சியார். சிறுவயதில் வேலுநாச்சியாருக்கு தெரிந்த ஒரே மூன்றெழுத்து வார்த்தை வீரம். தெரியாத மூன்றெழுத்து வார்த்தை பயம்.

வாள்வீச்சு, அம்பு விடுதல், ஈட்டி எறிதல், குதிரையேற்றம், யானையேற்றம் என்று எல்லா போர்க் கலைகளையும் கற்றார். இவையனைத்தும் அவருக்கு பிற்காலத்தில் உதவின. வீர விளையாட்டுக்கள் மட்டுமன்றி பாடங்களிலும் வேலு நாச்சியார் கெட்டிதான். பத்து மொழிகள் தெரியும். மகாபாரதம், இராமாயணம் போன்ற இதிகாசங்கள் தெரியும். இப்படி வீறுகொண்டும் வேலு கொண்டும் வளர்ந்த இளம் பெண் வேலுநாச்சியார் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனை. வேலு நாச்சியாரின் அழகிலும் வீரத்திலும் மனதைப் பறிகொடுத்த சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதர், வேலு நாச்சியாரை மணமுடித்தார். அது 1746ம் வருடம். வேலுநாச்சியார் சிவகங்கைக்கு குடிபுகுந்தார்.

சிவகங்கை சீமை சீரும் சிறப்புமான சீமை. அதை சீர்குலைக்க வந்தது ஒரு சிக்கல். ஆற்காடு நவாப்பின் பெரும்படை ஒன்று இராமநாதபுரத்தைத் தாக்கி கைப்பற்றியது. நவாபின் அடுத்த குறி சிவகங்கைதான். ஆசைப்பட்ட இடங்களை அடையாமல் விட்டதில்லை நவாப். நேரம் பார்த்து நெருங்குவான். நெருக்குவான். கழுத்தை நெரித்துவிடுவான். சிவகங்கை மன்னர் முத்துவடுமுகநாதரும் லேசுபட்டவர் அல்ல. போர்க்கலைகள் தெரிந்தவர். வீரம் செறிந்தவர். விவேகம் பொதிந்தவர். முத்துவடுக நாதரின் மனைவியான வேலு நாச்சியார் வீரனுக்கு ஏற்ற வீராங்கனையாகத் திகழ்ந்தார். இவர்களுக்கு உறுதுணையாக போர்ப்படை தளபதிகளாக சின்ன மருது, பெரிய மருது சகோதரர்கள். வீரத்துக்கு பெயர் பெற்றவர்கள்.

நேரம் பார்த்துக் கொண்டிருந்த நவாப்புக்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைத்தது. சிவகங்கையைத் தாக்க ஆங்கிலேயேப் படைகள் நவாப்புக்கு உதவ முன்வந்தன. அவர்களிடம் நவீனரக ஆயுதங்கள் இருந்தன. அவற்றைக் கொண்டு சிவகங்கையைத் தாக்கி தன் கட்டுக்குள் கொண்டுவரத் திட்டமிட்டான் நவாப். ஒரு முறை மன்னர் முத்து வடுகநாதர் காளையர் கோயிலில் வழிபாடு செய்து கொண்டிருந்தபோது நவாபின் படைகள் காளையர் கோயிலைச் சுற்றி வளைத்தனர். கொடூரமாய் தாக்கினர். ஆங்கிலேயர் கொடுத்த போர்ச் சாதனங்களைக் கொண்டு தாக்கினர். வடுகநாதரும் அவரது படைகளும் வீரப்போர் புரிந்தனர். இருந்தும் அவர்களால் அந்தத் தாக்குதலைச் சமாளிக்க இயலவில்லை. வடுகநாதர் வாளால் வெட்டப்பட்டு இறந்தார் இளவரசியும் கொல்லப்பட்டார். காளையர் கோயில் கோட்டை நவாப்படைகளின் வசமாகியது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 29 Jul 2009 - 5:16

திடீர் தாக்குதலில் கோட்டை வீழ்ந்து மன்னர் இறந்துவிட்டார் என்ற செய்தி வேலு நாச்சியாருக்கு எட்டியது. கதறி அழுதார். கணவரின் உடலைப் பார்க்க வேண்டும் என்று துடித்தார். தானிருந்த இடத்திலிருந்து காளையர் கோயிலுக்குச் செல்ல விரும்பினார். இந்தச் சமயத்தில் நாச்சியாரைக் கைது செய்ய படை ஒன்றை அனுப்பினான் நவாப். அந்தப் படை வேலு நாச்சியாரை வழியிலேயே மடக்கியது. ஆனால் நாச்சியார் மடங்கவில்லை. ஆவேசத்துடன் போரிட்டார். எதிரிப்படைகளை சிதறி ஓடச் செய்தார். இறந்த கணவரை சென்று பார்த்துவிட வேண்டுமென்பதுதான் அவரது ஒரே இலக்காயிருந்தது. ஆனால் தளபதிகளாயிருந்த மருது சகோதரர்கள் அவருக்கு வேறு ஆலோசனை வழங்கினார்கள். 'கோட்டை வீழ்ந்துவிட்டது. அரசர் இறந்துவிட்டார். நீங்களும் போய் சிக்கிவிட்டால் நம்மால் நவாபை பழிவாங்கமுடியாது. நாட்டைக் கைப்பற்றவும் நாட்டின் பெருமையைக் காப்பாற்றவும் நீங்கள் வாழ்ந்தாக வேண்டும். அதனால் அங்கே போகக் கூடாது' என்றார்கள். ஆனால் நாச்சியார் கேட்கவில்லை. கணவரின் உடலைக் காண காளையர் கோயில் சென்றார். இதற்குள் நவாப் கூட்டமும் ஆங்கிலேயப் படைகளும் சிவகங்கைக்குள் நுழைந்துவிட்டன.

வேலு நாச்சியார் காளையர் கோயிலில் கண்ட காட்சி கொடூரமானது. எங்கெங்கும் பிணக் குவியல். கோயில் திடலின் நடுவே அரசரும் இளையராணியும் ரத்தம் வடிந்து கிடந்தார்கள். காணக் கூடாத காட்சி அது. கதறி அழுதார் நாச்சியார். கணவருடன் உடன்கட்டை ஏறிவிடலாமா என்று கூட யோசித்தார். ஆனால் கணவனைக் கொன்ற கயவர்களைப் பழிவாங்காமல் சாவதா? அந்த வீரமங்கைக்கு அது இயலாத காரியம்.

பல்லக்கு ஒன்றில் ஏறி மருது சகோதரர்களின் பாதுகாப்போடு சிவகங்கையிலிருந்து தப்பிச் சென்றார். விடிய விடிய குதிரையில் பயணம் செய்து மேலூர் சென்றார்கள். வேலு நாச்சியார் வீரத்தில் மட்டுமல்ல, விவேகத்திலும் கெட்டி. நவாபையும் ஆங்கிலேயர் படையினரையும் வீழ்த்த மன்னர் ஹைதர் அலி உதவியை நாடுவது என்று தீர்மானித்தார். ஏனென்றால் ஆங்கிலேயருக்கும் நவாப்புக்கும் பரம எதிரி ஹைதர் அலி. தான் ஒளிந்திருந்த காடுகளிலிருந்து ஹைதர் அலிக்கு உதவி கேட்டு கடிதம் எழுதினார். அப்போது ஹைதர் அலி திண்டுக்கல்லிலிருந்தார். கடிதங்களை ஹைதர் அலியின் அரண்மனையின் முன்பு மூன்று குதிரை வீரர்கள் வந்து நின்றார்கள். வேலு நாச்சியாரிடமிருந்து வருவதாகச் சொன்னார்கள். ஹைதர் அலி அவர்களை உள்ளே வரவழைத்தான். 'வேலு நாச்சியார் வரவில்லையா?'' என்று ஹைதர் அலி கேட்க, தன் தலைப்பாகையை கழற்றினான், ஒரு வீரன். அது வேலு நாச்சியார். ஹைதர் அலியுடன் உருது மொழியை சரளமாகப் பேச அவருக்கு மேலும் ஆச்சர்யம். தன் வேதனைகளையும் இலட்சியத்தையும் ஹைதர் அலியிடம் விளக்கினார் வேலுநாச்சியார். அவரிடமிருந்த வீரத்தைக் கண்ட ஹைதர் அலி தன்னுடைய கோட்டையிலேயே தங்கிக் கொள்ள அனுமதி தந்தார்.

வேலு நாச்சியார் தனக்கு வேண்டிய பணிப் பெண்களுடனும், வீரர்களுடனும், விருப்பாட்சி கோட்டை, திண்டுக்கல் கோட்டைகளில் பாதுகாப்பாகத் தங்கினார். அங்கிருந்து தனது போர்ப் படைகளைப் பெருக்கத் துவங்கினர். வேலு நாச்சியாரின் லட்சியம் ஆங்கிலேயப் படையை அழிப்பது, நவாபை வீழ்த்துவது. சிவகெங்கை சீமையில் தனது பரம்பரை சின்னமான அனுமன் கொடியை பறக்க விடுவது. அதற்கான நாளும் வந்தது. ஹைதர் அலி தந்த நவீன ரக ஆயுதங்களுடன் நவாப்படைகளுடன் போர் செய்யக் கிளம்பினார். வேலு நாச்சியார். முதலில் காளையர் கோயிலைக் கைப்பற்றினார். சிவகங்கையிலும் திருப்பத்தூரிலும் நவாப்பின் படைகளும் ஆங்கிலப் படைகளும் பரவி நின்றன. அவற்றைத் தோற்கடித்தால்தான் சிவகங்கையை மீட்க முடியும். வேலு நாச்சியார் தனது படைகளை இரண்டாகப் பிரித்து ஒரு படைக்கு சின்ன மருதை தளபதியாகவும், இன்னொரு படைக்கு பெரிய மருதுவுடன் இணைந்து வேலு நாச்சியார் தலைமை வகித்தார்.

சின்னமருது தலைமையிலான படை திருப்பத்தூரில் இருந்த வெள்ளையர் படைகளை வீழ்த்தியது. விஜயதசமி அன்று சிவகெங்கை அரண்மனைக்குள்ளே இருக்கும் ராஜராஜேஸ்வரி தெய்வத்தை கூட்டம், கூட்டமாக பெண்கள் சென்று வழிபடுவது வழக்கம். வெளியே ஆங்கிலேயர் படை காவல் காத்துக் கொண்டிருக்கும். வேலுநாச்சியாரும், அவரோடு இருந்த பெண்கள் படையும், ஆயுதங்களை ஆடைக்குள் மறைத்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக அரண்மனைக்குள் உள்ளே இருந்த கோவிலுக்குள் சென்று திடீர் தாக்குதல் நடத்தியது. இதை ஆங்கிலேயப் படைகள் எதிர்பார்க்கவில்லை. வெட்டுண்டு விழுந்தார்கள். பிழைத்தவர்கள் நாட்டைவிட்டு ஓடினார்கள்.

சிவகங்கை கோட்டை மீது பறந்த ஆங்கிலேயரின் கொடி இறக்கப்பட்டது. வேலு நாச்சியாரின் அனுமன் கொடி ஏற்றப்பட்டது. அவரது சபதம் நிறைவேறியது. வேலு நாச்சியார் சிவகங்கையின் அரசியானார். அவருடைய காலம் வீரத்தின் காலமாக இருந்தது. தனது அறுபத்தாறாவது வயதில் இறந்தார், வேலு நாச்சியார். அவரது வாழ்க்கை தமிழ் மண்ணின் வீரத்துக்கு சாட்சியாக இன்றும் இருக்கிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 29 Jul 2009 - 5:19

இறுதி நாட்கள்

1790-ல் அவரது மகளின் மறைவினால் மனமுடைந்த வேலுநாச்சியார் இதய நோயாளியாகி சிகிச்சைக்காக பிரான்ஸ் நாட்டுக்குச் சென்றார். 1793-ல் வேலு நாச்சியாரின் பேத்தியின் மரணத்தால் நாச்சியாருக்கு துயரம் அதிகமானது. அதனால் விருப்பாட்சி அரண்மனையில் தங்கினார். பெரும் போராட்டங்களை நடத்தி நாட்டை மீட்ட வேலுநாச்சியார் 25 டிசம்பர் 1796 அன்று இறந்தார். இதன் தொடர்ச்சியாக இன்று வரை சிவகங்கைச் சீமையை ஆட்சி புரிந்த மன்னர்களின் வம்சாவழிப்பட்டியல் கீழே உள்ளது.


சிவகங்கைச் சீமை பதவி வகித்த மன்னர்கள்


1. 1728 - 1749 - முத்து வீஜயரகுநாத உ. சசிவர்ணத்தேவர்

2. 1749 - 1772 - சசிவர்ண விஜயரகுநாத முத்துவடுகநாதப்பெரிய உடையத்தேவர்

3. 1780 - 1789 - வீரமங்கை ராணி வேலு நாச்சியார் முத்துவடுகநாத பெரிய உடையாத்தேவர்

4. 1790 - 1793 - இளவரசி வெள்ளச்சி நாச்சியார் - ராணி வேலு நாச்சியாரின் ஒரே மகள்

5. 1793 - 1801 - வேங்கை பெரிய உடையணத்தேவர் இளவரசி வெள்ளச்சி நாச்சியாரின் கணவர்

6. 1801 - 1829 - கெளரிவல்லப உடையணத்தேவர் மன்னர் முத்துவடுகநாத பெரிய உடையணத்தேவரின் உடன் பங்காளி ராணி வேலு நாச்சியாரின் தத்து மைந்தன்

7. 1829 - 1831 - உ.முத்துவடுகநாதத்வேர்

8. 1831 - 1841 - மு. போதகுருசாமித்தேவர்

9. 1841 - 1848 - போ. உடையணத்தேவர்

10. 1048 - 1863 - மு.போதகுருசாமித்தேவர்

11. 1863 - 1877 - ராணி காதமநாச்சியார் போதகுருசாமி

12. 1877 - முத்துவடுகநாதத்தேவர்

13. 1878 - 1883 - துரைசிங்கராஜா

14. 1883 - 1898 - து. உடையணராஜா

15. 1898 - 1941 - தி. துரைசிங்கராஜா

16. 1941 - 1963 - து. சண்முகராஜா

17. 1963 - 1985 - து.ச.கார்த்தகேயவெங்கடாஜலபதி ராஜா

18. 1986 - முதல் ராணி டி.எஸ்.கே.மதுராந்தகி நாச்சியார்.

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed 29 Jul 2009 - 12:59

பேரன்பு மிக்கீர்
வணக்கம்
வீரமங்கை வேலுநாச்சியாரைக் காட்டிக் கொடுக்க மறுத்து வெட்டுப் பட்டு செத்துப் போ தெய்வமாய் நிற்கும் வெட்டுடையாளைப் பற்றியும் எழுதி இருக்கலாம். வெள்ளைக் காரர்கள் காலூன்ர வித்திட்ட ஆற்காட்டு நவாபுக்கு அமைச்சர் அந்தஸ்தில் எல்லா வசதிகளும் இருக்கின்றன. ஆனால் அடிமைத்தளையை அறுத்தெறியும் போரில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களத் தமிழர் மறந்து விட்டனர். காட்டிக் கொடுப்பவர்களுக்கு மரியாதையும் மறுத்தவர்களை மறப்பதும் தான் தமிழர்களின் பண்பா?
நொறுங்கிய உள்ளத்துடன்
நந்திதா

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed 29 Jul 2009 - 13:02

வீரமங்கை வேலுநாச்சியாரைக் காட்டிக் கொடுக்க மறுத்து வெட்டுப் பட்டு
செத்துப் போய் தெய்வமாய் நிற்கும் வெட்டுடையாளைப் பற்றியும் எழுதி
இருக்கலாம். வெள்ளைக் காரர்கள் காலூன்ற வித்திட்ட ஆற்காட்டு நவாபுக்கு
அமைச்சர் அந்தஸ்தில் எல்லா வசதிகளும் இருக்கின்றன. ஆனால் அடிமைத்தளையை
அறுத்தெறியும் போரில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களத் தமிழர் மறந்து
விட்டனர். காட்டிக் கொடுப்பவர்களுக்கு மரியாதையும் மறுத்தவர்களை மறப்பதும்
தான் தமிழர்களின் பண்பா? (முந்தைய பதிவில் சொற்பிழைகள் உள்ளன-மன்னிக்கவும்)
நொறுங்கிய உள்ளத்துடன்
நந்திதா

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed 29 Jul 2009 - 13:07

nandhtiha wrote:பேரன்பு மிக்கீர்
வணக்கம்
வீரமங்கை வேலுநாச்சியாரைக் காட்டிக் கொடுக்க மறுத்து வெட்டுப் பட்டு செத்துப் போ தெய்வமாய் நிற்கும் வெட்டுடையாளைப் பற்றியும் எழுதி இருக்கலாம். வெள்ளைக் காரர்கள் காலூன்ர வித்திட்ட ஆற்காட்டு நவாபுக்கு அமைச்சர் அந்தஸ்தில் எல்லா வசதிகளும் இருக்கின்றன. ஆனால் அடிமைத்தளையை அறுத்தெறியும் போரில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களத் தமிழர் மறந்து விட்டனர். காட்டிக் கொடுப்பவர்களுக்கு மரியாதையும் மறுத்தவர்களை மறப்பதும் தான் தமிழர்களின் பண்பா?
நொறுங்கிய உள்ளத்துடன்
நந்திதா

என்ன பண்ணுவது அம்மா , தமிழர்கள் தான் வெள்ளையர்களிடம் இருந்து விடுதலை பெற்று இப்போது பார்பனர்களிடமும் , சுயமரியாதை சிங்கங்களிடமும் அடிமை பட்டு கிடக்கிறார்களே,
புதிய சந்ததியினர்களுக்கு நம்முடைய வரலாறை சொல்லிகொடுக்காமல் ,
டாஸ்மாக் என்றும் ,
மலிவு விலையில் ரேஷன் பொருட்களை கொடுத்ததும் ,
கலர் டிவி கொடுத்ததும்
பணத்துக்கு ஓட்டு என்ற புதிய கலாசாரத்தையும்,

அல்லவா சொல்லிகொடுக்கிறார்கள்,

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Wed 29 Jul 2009 - 13:10

அக்கா

உங்களுக்கு நான் எவ்வாறு animated signature அனுப்புவது?



வீரமங்கை வேலுநாச்சியார் Skirupairajahblackjh18
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed 29 Jul 2009 - 15:15

பேரன்பு மிக்க கிருபை ராஜா அவர்கட்கு
வணக்கம் பல
animated signature எழுதுவதற்கு ஏதாவது software உள்ளதா அன்றி அல்லது அது ஒரு வகை எழுத்துருவா?
அன்பு நிறை நெஞ்சத்துடன்
நந்திதா

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Wed 29 Jul 2009 - 16:01

இதை Photoshop மூலம் செய்ய முடியும். இது ஒரு animation. எழுத்துரு இல்லை



வீரமங்கை வேலுநாச்சியார் Skirupairajahblackjh18
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed 29 Jul 2009 - 16:03

பேரன்பு மிக்கீர்
வணக்கம்
கணினியில் வல்லமை எனக்கில்லை
அன்புடன்
நந்திதா

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக