ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாயமான சார்லி சாப்ளின் திரைப்படம் கண்டுபிடிப்பு!

2 posters

Go down

மாயமான சார்லி சாப்ளின் திரைப்படம் கண்டுபிடிப்பு! Empty மாயமான சார்லி சாப்ளின் திரைப்படம் கண்டுபிடிப்பு!

Post by ரபீக் Tue Jul 20, 2010 10:17 am

கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன் தயாரிக்கப்பட்டு மாயமாகிப் போன சார்லி சாப்ளின் நகைச்சுவை திரைப்படம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. சார்லின் சாப்ளின் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள அத்திரைப்படம் டிவிடியாக மாற்றப்பட்டு விற்பனைக்கு வருகிறது.
உலகப் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் சார்லின் சாப்ளின் ஊமைப்பட காலத்தில் ஏராளமான படங்களைத் தயாரித்து, நடித்தவர். கசப்பான எத்தனையோ கருத்துகளை தன்னுடைய நகைச்சுவையால் மென்மையாகச் சுட்டிக்காட்டியவர். அவருடைய நகைச்சுவை நடிப்பு, இன்றைய தலைமுறையையும் சிரிக்க வைப்பதுதான் அவருடைய சாதனை.

அவர் 1914 இல் கோமாளி போலீசாக நடித்தப் படம் A Thief Catcher. பரவலாக ரசிக்கப்பட்ட இந்த பத்து நிமிட படத்தின் திரைச்சுருள் காணாமல் போய்விட்டது. அது எங்கிருக்கிறது என்றே இத்தனை வருடங்கள் தெரியாமல் இருந்தது.

இந்நிலையில், இத்திரைப்படத்தின் திரைச்சுருள் தற்போது கிடைத்துவிட்டது. மிக்சிகன் நகரில் நடந்த பழங்காலப் பொருட்கள் கண்காட்சியில் படத்தின் திரைச்சுருள் கிடைத்தது.

பால் கியூரிக்கி என்பவர் வாங்கிய பெட்டியின் மேல் 'கீ ஸ்டோன்' என்று எழுதப்பட்டிருந்தது. 'கீஸ்டோன் 'காப்ஸ்' என்ற பெயரில் போலீஸ்காரர்களைக் கிண்டலடித்து நிறைய படங்கள் வந்திருப்பதால், அந்தப் பெட்டியில் இருப்பது அந்த வகை படம் என்று பார்க்காமலேயே விட்டுவிட்டார் பால் கியூரிக்கி.

பல மாதங்களுக்குப் பிறகு பெட்டியில் இருந்த திரைச்சுருளை எடுத்து திரையிட்டு பார்த்தவர் ஆனந்த அதிர்ச்சியில் உறைந்து போனார். அது சார்லி சாப்ளின் நடித்த A Thief Catcher என்ற விவரம் தெரிய வந்ததும் சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போனார்.

கீஸ்டோன் தொடர் திரைப்படங்களைத் தயாரித்த சென்னட் என்பவர், தன்னுடைய படங்களில் நடிக்க சார்லின் சாப்ளினை ஒப்பந்தம் செய்துள்ளார். அப்போது தயாரித்ததுதான் A Thief Catcher திரைப்படம்.

1914 ஆம் ஆண்டு முதல் 1976 ஆம் ஆண்டு வரை சார்லி சாப்ளின் ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்தார். அவருடைய சினிமா வரலாற்றிலும் சரி, அவரைப் பற்றிய பிரிட்டீஷ் திரைப்படக் கல்லூரியின் பட்டியலிலும் சரி, இப்போது கிடைத்துள்ள A Thief Catcher படம் இடம் பெறவில்லை. கடந்த 60 ஆண்டுகளாக திருத்தப்படாத சார்லி சாப்ளின் திரைப்பட வரலாறு A Thief Catcher படத்தால் திருத்தி அமைக்கப்படுகிறது. ஆமாம் தற்போது கிடைத்துள்ள படத்தால் சார்லி சாப்ளினின் திரைப்பட எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது.

காணாமல் போய் தற்போது கிடைத்துள்ள சார்லி சாப்ளினின் படத்தோடு ஹாலிவுட்டில் தயாரிக்கப்பட்டுள்ள 75 படங்களின் திரைச்சுருள்கள் எங்கே போனது என்றே இதுவரை தெரியவில்லை. ஆஸ்கார் விருது பெற்ற இயக்குநரான ஜான் போர்டு 1927 இல் இயக்கிய காதல் திரைப்படமான 'அப்ஸ்ட்ரீம்' என்ற திரைப்படத்தின் சுருள் சமீபத்தில் நியூசிலாந்து நாட்டில் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மாயமான சார்லி சாப்ளின் திரைப்படம் கண்டுபிடிப்பு! Empty Re: மாயமான சார்லி சாப்ளின் திரைப்படம் கண்டுபிடிப்பு!

Post by நவீன் Tue Jul 20, 2010 11:09 am

மாயமான சார்லி சாப்ளின் திரைப்படம் கண்டுபிடிப்பு! 678642 மாயமான சார்லி சாப்ளின் திரைப்படம் கண்டுபிடிப்பு! 678642 மாயமான சார்லி சாப்ளின் திரைப்படம் கண்டுபிடிப்பு! 678642
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum