புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அடையாளங்களால் ஆவதுதான் என்ன?
Page 1 of 1 •
- ganie006பண்பாளர்
- பதிவுகள் : 105
இணைந்தது : 17/07/2010
"தமிழனுக்குத் தமிழின் அருமை பெருமைகளும் தெரியாது; சக தமிழனின் சாதனைகளைப் பாராட்டவும் மனம் வராது'' என்கிற கூற்றை மெய்ப்பிப்பதுபோல ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அமெரிக்க டாலருக்கு என்கிற அடையாளம் இருப்பதுபோல, ஜப்பானில் "யென்' நாணயத்துக்கு அடையாளம் இருப்பதுபோல, பிரிட்டனில் பவுண்ட் ஸ்டெர்லிங்கிற்கு இருப்பதுபோல, இப்போது இந்திய ரூபாய்க்கும் என்கிற அடையாளம் தரப்பட்டிருக்கிறது.
ரூபாய்க்கான இந்த அடையாளத்தை உருவாக்கி இருப்பது, விழுப்புரத்தைச் சேர்ந்த டி. உதயகுமார் என்கிற இளைஞர். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கட்டடக் கலை (பி. ஆர்க்.) படித்து, இப்போது மும்பை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி) முனைவர் பட்டம் பெற்றவர். ரிஷிவந்தியம் சட்டப்பேரவையின் முன்னாள் உறுப்பினர் தர்மலிங்கத்தின் மகன்.
இதுபோல, வேறு ஏதாவது மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் பெருமைக்குரிய சாதனை செய்திருந்தால், அது அந்த மொழிப் பத்திரிகைகளில் முதல்பக்கச் செய்தியாகி இருக்கும். அத்தனை தொலைக்காட்சிச் சேனல்களும் இதைப் பற்றியும், சாதனையாளர் பற்றியும் மணிக்கணக்காகப் பாராட்டுமழை பொழிந்திருக்கும். ஆனால் தமிழகத்தில், சினிமாக்காரர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும், எப்போதாவது விளையாட்டு வீரர்களுக்கும் மட்டுமே இந்த முக்கியத்துவம் தரப்படுகிறதே, ஏன் இந்த அவலம்?
உதயகுமாரின் சாதனைக்குப் பின்னே இருக்கும் அவரது மொழிப்பற்று மெய்சிலிர்க்க வைக்கிறது. இவரது முனைவர்பட்ட ஆய்வே, தமிழ் எழுத்துகளின் வளர்ச்சி ஓலைச்சுவடிகளிலிருந்து இப்போதைய நிலைமைவரை எப்படி மாற்றம் கண்டிருக்கிறது என்பதுதான். கையால் எழுதப்பட்ட ஓலைச்சுவடி முறைக்கும், அச்சுக் கோப்பு எழுத்தாகி இருக்கும் முறைக்கும் ஏற்பட்ட மாற்றங்களை ஆய்வு செய்திருக்கும் உதயகுமார், தமிழ் எழுத்து முறைகளில் சரியான வடிவக்கலை ஆய்வுகள் இல்லை என்கிற குறையைப் போக்கி இருக்கிறார்.
எழுத்து வடிவமைப்புக் கலையில் ஆர்வமுள்ள உதயகுமார், தான் உருவாக்கி அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் ரூபாய்க்கான அடையாளச் சின்னம், தேவநாகரியை அடிப்படையாகக் கொண்டது என்றும், இந்தியாவில் முக்கால்வாசிப் பேர் தேவநாகரி சார்ந்த மொழிகளைப் பேசுவதால் அதன் அடிப்படையில் இந்த அடையாளச் சின்னத்தை உருவாக்கியதாகவும் கூறியிருக்கிறார். தமிழன் சாதனை புரிந்திருக்கிறான், அதை முதல்பக்கச் செய்தியாக்காமல் விட்ட குறையைத் தலையங்கம் தீட்டியாவது பிராயச்சித்தம் தேடிக் கொள்ள வேண்டாமா? உதயகுமாரின் சாதனைக்கு வாழ்த்துகள்.
அதேசமயம், இந்திய அரசின் இந்த முயற்சியால் என்னதான் பயன் என்று யோசிக்கும்போது, எதுவும் சொல்லத் தோன்றவில்லை. உலகிலுள்ள பல நாணயங்கள், அடையாளம் இல்லாமல்தான் இருக்கின்றன. அமெரிக்காவையே விஞ்சும் அளவுக்கு வளர்ந்துவிட்டதாகக் கருதும் சீனப் பொருளாதாரம், தனது நாணயமான யுவானுக்கு இப்போதும் ஜப்பானிய "யென்'னுக்கான அடையாளமான தான் பயன்படுத்துகிறது. பல நாடுகளும் நமக்கு ஏன் வம்பு என்று தங்களது நாணயத்தையும் டாலர் என்று அழைத்துக் கொண்டு, அமெரிக்க டாலரின் அடையாளத்தையே ஏற்றுக் கொண்டிருக்கின்றன.
ரூபாய்க்கான குறியீடு உள்ளிட்ட எல்லா நாணயக் குறியீடுகளிலும் இரண்டு இணைகோடுகள் மேலிருந்து கீழாகவோ அல்லது இடம் வலமாகவோ இருப்பது ஏன் என்று புரியவில்லை. ஐரோப்பியக் கூட்டமைப்பின் "யூரோ' நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, அதன் குறியீடான அடையாளத்தில் உள்ள இணைகோடுகள் நிரந்தரத்தன்மையைக் குறிப்பதாகக் கூறினார்கள். அமெரிக்க டாலரில் இணைகோடுகள் ஸ்திரத்தன்மையைக் குறிக்கிறது என்கிறார்கள். இந்திய ரூபாயின் அடையாளத்திலும் இரண்டு கோடுகள் மேற்பகுதியில் காணப்படுகின்றன. அடையாளங்களுக்கு அர்த்தம் வேண்டும் என்கிற கட்டாயம் இல்லைதான். அர்த்தமற்ற அடையாளங்களுக்கு நிச்சயமாக அர்த்தம் தேவையில்லை.
திடீரென்று இப்போது ரூபாய்க்கு அடையாளம் உருவாக்க வேண்டிய அவசியம் என்ன? சில புதுப்பணக்காரர்கள் ஊரில் உள்ள அத்தனை மனமகிழ் மன்றங்களிலும், பணக்காரர்களின் சேவை சங்கங்களிலும் பெரும்தொகை கொடுத்து உறுப்பினர்களாகச் சேர்வது வழக்கம். தங்களுக்கு அதனால் அந்தஸ்து உயர்வதாக நினைத்துக் கொள்வார்கள். அதுபோல, டாலர், பவுண்ட் ஸ்டெர்லிங், யூரோ, யென் போன்ற நாணயங்களின் வரிசையில் ரூபாய்க்கும் ஓர் அடையாளம் ஏற்படுத்துவதன் மூலம் உலக அரங்கில் இந்திய ரூபாய்க்கு கௌரவம் அதிகரிக்கும் என்று நமது ஆட்சியாளர்கள் நினைப்பார்களேயானால் அதைவிட போலித்தனமான சிந்தனை வேறு எதுவும் இருக்க முடியாது.
1991-ம் ஆண்டு இந்தியாவின் அன்னியச் செலாவணிக் கையிருப்பு 11,416 கோடி. கடந்த 2009 மார்ச் மாதம் புள்ளிவிவரப்படி நமது அன்னியச் செலாவணிக் கையிருப்பு 12,83,865 கோடி. நாம் வளர்ந்திருக்கிறோம் தானே? அப்படியானால் நமது ரூபாயின் மதிப்பு உயர்ந்திருக்க வேண்டுமே! பிறகு ஏன் ரூபாய் மதிப்பை உயர்த்தாமல், பல ஆண்டுக்கு முந்தைய நிலையில் தொடர்கிறோம்? ரூபாய் மதிப்பை மறுபரிசீலனை செய்து உயர்த்திய கையோடு, ரூபாய்க்கு ஓர் அடையாளக் குறியும் ஏற்படுத்தி இருந்தால் அது மரியாதைக்குரிய ஒன்றாக இருந்திருக்கும்.
1991-ல் 44,041 கோடி ஏற்றுமதிக்கு, 47,851 கோடி இறக்குமதியுடன் 3,810 கோடி பற்றாக்குறை. 2009-ம் ஆண்டில் 7,66,935 கோடி ஏற்றுமதிக்கு, 13,05,503 கோடி இறக்குமதியுடன் 5,38,568 கோடி பற்றாக்குறையில் அல்லவா இருக்கிறது இந்தியப் பொருளாதாரம்? இந்த நிலையில் 12,83,865 கோடி அன்னியச் செலாவணிக் கையிருப்பு இருப்பதாக மார்தட்டிக் கொள்வதில் என்ன அர்த்தம் இருக்கப் போகிறது?
விலைவாசியைக் குறைக்க முடியவில்லை. உள்நாட்டுச் சட்டம் ஒழுங்கை முறையாகப் பாதுகாக்க முடியவில்லை. உணவுத் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள விவசாயம் பாதுகாக்கப்படவில்லை. கல்வி, சுகாதாரம், சாலைகள் மேம்பாடு என்று அரசின் அடிப்படைக் கடமைகள் தனியாரிடம் தாரை வார்க்கப்படுகின்றன. இந்த நிலையில், ரூபாய்க்கு ஓர் அடையாளச் சின்னம் ஏற்படுத்தி ஆனந்தப்படுகிறோம்.
அடையாளங்களால் ஆகப்போவதுதான் என்ன?

Similar topics
» முதல்வர் ஆவதுதான் என் லட்சியம்! சிரஞ்சீவி பேச்சு!!
» வேலை மோசடி: ஓமனில் விற்கப்படும் பெண்கள்; என்ன நடக்கிறது, பின்னணி என்ன?
» ஊரடங்கு காலகட்டத்தில் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது: மத்திய அரசு விளக்கம்
» புத்தன் என்ன சொன்னான், என்ன சொல்லவில்லை என்பதெல்லாம் கவைக்கு உதவாத பேச்சு.
» பீதியை கிளப்பும் 'எபோலா வைரஸ்' என்றால் என்ன?, அதன் அறிகுறிகள் என்ன?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1