புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவனம், முள்மேல் சேலை... Poll_c10கவனம், முள்மேல் சேலை... Poll_m10கவனம், முள்மேல் சேலை... Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
கவனம், முள்மேல் சேலை... Poll_c10கவனம், முள்மேல் சேலை... Poll_m10கவனம், முள்மேல் சேலை... Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவனம், முள்மேல் சேலை... Poll_c10கவனம், முள்மேல் சேலை... Poll_m10கவனம், முள்மேல் சேலை... Poll_c10 
181 Posts - 77%
heezulia
கவனம், முள்மேல் சேலை... Poll_c10கவனம், முள்மேல் சேலை... Poll_m10கவனம், முள்மேல் சேலை... Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
கவனம், முள்மேல் சேலை... Poll_c10கவனம், முள்மேல் சேலை... Poll_m10கவனம், முள்மேல் சேலை... Poll_c10 
10 Posts - 4%
prajai
கவனம், முள்மேல் சேலை... Poll_c10கவனம், முள்மேல் சேலை... Poll_m10கவனம், முள்மேல் சேலை... Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கவனம், முள்மேல் சேலை... Poll_c10கவனம், முள்மேல் சேலை... Poll_m10கவனம், முள்மேல் சேலை... Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கவனம், முள்மேல் சேலை... Poll_c10கவனம், முள்மேல் சேலை... Poll_m10கவனம், முள்மேல் சேலை... Poll_c10 
3 Posts - 1%
Barushree
கவனம், முள்மேல் சேலை... Poll_c10கவனம், முள்மேல் சேலை... Poll_m10கவனம், முள்மேல் சேலை... Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கவனம், முள்மேல் சேலை... Poll_c10கவனம், முள்மேல் சேலை... Poll_m10கவனம், முள்மேல் சேலை... Poll_c10 
2 Posts - 1%
Shivanya
கவனம், முள்மேல் சேலை... Poll_c10கவனம், முள்மேல் சேலை... Poll_m10கவனம், முள்மேல் சேலை... Poll_c10 
1 Post - 0%
Guna.D
கவனம், முள்மேல் சேலை... Poll_c10கவனம், முள்மேல் சேலை... Poll_m10கவனம், முள்மேல் சேலை... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவனம், முள்மேல் சேலை...


   
   
ganie006
ganie006
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 17/07/2010

Postganie006 Mon Jul 19, 2010 8:39 am

முன்னாள் பிரதமர்
இந்தர் குமார் குஜ்ரால், ஒரு சிறந்த ராஜதந்திரி (டிப்ளோமேட்) யார்
என்பதற்குத் தந்திருக்கும் விளக்கம் இதுதான். ""இன்னொரு நாட்டுடன்
பேச்சுவார்த்தையில் ஈடுபடும்போது அந்த எதிராளியின் பார்வையில் பிரச்னையை
அணுகி, தனக்குச் சாதகமான முடிவை, எதிராளிக்கு தர்மசங்கடம் ஏற்படுத்தாத
வகையில் உருவாக்க முயற்சிப்பவர்!''பாகிஸ்தானுடன்
பேச்சுவார்த்தைக்காக இஸ்லாமாபாத் செல்லும் இந்தியக் குழுவினருக்கு மேலே
குறிப்பிட்டிருக்கும் விளக்கத்தைப் புரிய வைத்தால் நன்றாக இருக்கும்.
இந்திய அரசு, முள்ளில் விழுந்த சேலையை எடுப்பதுபோல கவனமாகக் கையாள வேண்டிய
பாகிஸ்தான் பிரச்னையில், சாதுர்யமே இல்லாமல் நடந்து கொள்வது ஏன் என்பது
புதிராகவும் வியப்பாகவும் இருக்கிறது.கடந்த வாரம் தோல்வியில்
முடிந்திருக்கும் இந்தியா-பாகிஸ்தான் வெளிவிவகாரத் துறை அமைச்சர்களின்
பேச்சுவார்த்தை, தேவையே இல்லாத விவாதங்களையும், மனக்கசப்பையும்,
கண்டனத்தையும் எழுப்பியிருப்பதற்கு அடிப்படைக் காரணம் நாம் பாகிஸ்தான்
தரப்பின் அடிப்படைப் பிரச்னைகளை இத்தனை காலத்துக்குப் பிறகும் புரிந்து
கொள்ளாமல் இருப்பதுதான்.வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ்.எம்.
கிருஷ்ணா பற்றியும், இந்திய உள்துறைச் செயலர் ஜி.கே. பிள்ளை பற்றியும்
பாகிஸ்தான் வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி
வெளியிட்டிருக்கும் கருத்துகள் மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் வரம்பு
மீறல்கள்தான் என்றாலும், அதன் பின்னணியையும் சேர்த்து யோசித்தால்
தவறாகப்படவில்லை.கடந்த மாதம்தான் இந்திய உள்துறை அமைச்சர் ப.
சிதம்பரம் இஸ்லாமாபாத் சென்று அமெரிக்காவில் பிடிபட்டிருக்கும் லஷ்கர்
தீவிரவாதி டேவிட் கோல்மேன் ஹெட்லியிடம் இந்தியத் தரப்பு விசாரணையின்
அடிப்படையில் தனது பாகிஸ்தானிய சகாவிடம் இந்தியக் கண்ணோட்டத்தையும்
எதிர்பார்ப்புகளையும் விளக்கிவிட்டிருக்கிறார். ப. சிதம்பரம் இஸ்லாமாபாதில்
ரெஹ்மான் மாலிக்கை வைத்துக் கொண்டு பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியும்
அளித்திருக்கிறார்.இந்த நிலையில், வெளியுறவுத் துறை அமைச்சர்
எஸ்.எம். கிருஷ்ணா, ஷா மெஹ்மூத் குரேஷியுடன் பேச்சுவார்த்தை நடத்த
இருக்கும் நேரத்தில், மும்பையில் நடந்த தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு
ஆரம்பம் முதல் கடைசிவரை பாகிஸ்தானிய ஐ.எஸ்.ஐ. உளவு நிறுவனத்தின் பின்துணை
இருந்து வந்திருக்கிறது என்று இந்திய உள்துறைச் செயலர் ஜி.கே. பிள்ளை
அறிக்கை கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?இந்தியாவின் நிலையில்
பாகிஸ்தானியத் தரப்பு இல்லை. பாகிஸ்தானிய ஆட்சியாளர்களை இந்தியாவுக்கு
அடிபணிந்து போகும் தேசத்துரோகிகள் என்பதுபோல சித்திரித்து, ஜனநாயக
அமைப்பைத் தகர்க்கத் துடிக்கும் தீவிரவாத அமைப்புகள் மக்கள் மத்தியில்
செல்வாக்குடன் இருக்கின்றன. ராணுவமும் இந்திய எதிர்ப்பை இதயத்தில்
கொழுந்துவிட்டு எரிய விட்டுக் கொண்டு, விபரீத விளையாட்டில் இறங்கக்
காத்திருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தங்களுக்குக் களங்கமும்
வந்துவிடாமல், தீவிரவாதிகளின் கை ஓங்கி விடாமல், இந்தியத் தரப்புடன்
பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, பாகிஸ்தானை மீண்டும் சகஜ நிலைக்குக் கொண்டு
வந்தால் மட்டுமே, இப்போதைய மக்களாட்சி முறை பலமாக வேரூன்ற வழிகோல
முடியும். இதுதான் பாகிஸ்தான் தரப்பின் தர்மசங்கட நிலைமை என்பதை இந்தியத்
தரப்பு புரிந்துகொள்வதுதானே முறை?உள்துறைச் செயலர் இந்த நேரத்தில்
இப்படி ஓர் அறிக்கை கொடுத்தது ஏன்? அமைச்சர் ஒருவர் இருக்கும்போது அதிகாரி
வரம்பு மீறுகிறார் என்றால், அவருக்கு அத்தகைய துணிவைத் தந்தது யார்? இப்படி
ஓர் அறிக்கை ஓர் அதிகாரியிடமிருந்து வரும்போது, லஷ்கர்-இ-தொய்பா
தீவிரவாதக் குழுத் தலைவர் ஹபீஸ் சையீது இந்தியாவுக்கு எதிராக அறிக்கைகள்
விடுத்துப் பேச்சுவார்த்தையைக் குலைப்பதுபோல இருக்கிறது ஜி.கே. பிள்ளையின்
செயல்பாடு என்று பாகிஸ்தான் வெளிவிவகாரத் துறை அமைச்சர் குரேஷி கூறியதில்
தவறில்லை. இந்திரா காந்தி பிரதமராக இருந்திருந்தால் ஜி.கே. பிள்ளை அறிக்கை
வெளிவந்த நிமிடமே பதவியிலிருந்து அகற்றப்பட்டிருப்பார்.எஸ்.எம்.
கிருஷ்ணாவின் தரப்பினர் அடிக்கடி தில்லியைத் தொடர்பு கொண்டு பேசினார்கள்
என்கிற குற்றச்சாட்டிலும் தவறு காண முடியவில்லை. பிரச்னையின் எல்லா
பரிமாணங்களையும் புரிந்துகொண்டு, இந்திய அரசின் சார்பில் முடிவெடுக்கும்
அதிகாரத்துடன் ஒரு வெளிவிவகாரத் துறை அமைச்சர் பேச்சுவார்த்தையில் கலந்து
கொள்வார் என்பதுதானே எதிர்பார்ப்பு? முக்கியமான முடிவை எடுக்கும்போது
பிரதமரைத் தொடர்பு கொண்டால் தவறில்லை. அடிக்கடி உதவியாளர் தில்லியின்
கருத்தைக் கைபேசியில் தொடர்புகொண்டு கேட்டு அவ்வப்போது அமைச்சரிடம்
தெரிவித்தால் பிறகென்ன நேரடிப் பேச்சுவார்த்தை? இதைத் தொலைபேசியிலேயே
நடத்தி இருக்கலாமே?பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக்
கூறுவதுபோல, நாளைய தலைமுறையை நாம் வெறுப்பு, தீவிரவாதம் போன்ற
பெருநோய்களிலிருந்து காப்பாற்ற வேண்டுமானால், இப்போது அன்பையும்
சமாதானத்தையும் விதைத்தே தீர வேண்டும்."சரித்திரத்தை வேண்டுமானால்
மாற்றலாம். பூகோள அமைப்பை மாற்ற முடியாது. இந்தியாவும் பாகிஸ்தானும்
அருகருகேதான் இருக்க முடியுமே தவிர, இடத்தை மாற்றிக்கொண்டு விலகிவிட
முடியாது. அதனால் நமக்குள் கருத்து வேறுபாடுகளைக் களைந்து கைகோத்துக் கொள்ள
வழிதேடுவதுதான் புத்திசாலித்தனம்' என்கிற முன்னாள் பிரதமர் அடல் பிகாரி
வாஜ்பாயின் பார்வை பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மட்டும் இருந்தால் போதாது.
அவரது அரசின் மூத்த அதிகாரிகளுக்கும் இருக்க வேண்டும்!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக