ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

க‌ர்நாடக இசை‌ப் பாடகி டி.கே.பட்டம்மா‌ள் காலாமானார்

3 posters

Go down

க‌ர்நாடக இசை‌ப் பாடகி டி.கே.பட்டம்மா‌ள் காலாமானார் Empty க‌ர்நாடக இசை‌ப் பாடகி டி.கே.பட்டம்மா‌ள் காலாமானார்

Post by சிவா Fri Jul 17, 2009 7:45 pm

க‌ர்நாடக இசை‌ப் பாடகி டி.கே.பட்டம்மா‌ள் காலாமானார் Img1090717011_1_1
மிகவு‌ம் புக‌ழ்பெ‌ற்ற ‌க‌ர்நாடக இசை‌ப் பாடகி டி.கே.பட்டம்மா‌ளி‌ன் உ‌யி‌ர் நே‌‌ற்று ‌பி‌ரி‌ந்தது. அவரு‌க்கு வயது 90. இறு‌தி‌ச் சட‌ங்குக‌ள் நே‌ற்றைய ‌தின‌மே நட‌ந்து முடி‌ந்தன.


இ‌ந்‌தியா சுத‌ந்‌திர‌ம் வா‌ங்குவத‌ற்கு மு‌ன்‌பிரு‌ந்தே இசை உல‌கி‌ல் கொடி கட்டிப்பறந்தவர் டி.கே.பட்டம்மாள். மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு போன்ற பல தேசிய தலைவர்களை நே‌ரி‌ல் ச‌ந்‌தி‌த்து பாராட்டுகளையு‌ம் வா‌ழ்‌த்துகளையு‌ம் பெற்றவர். ஆ‌ங்‌கிலேய‌ர் ஆ‌ட்‌சி கால‌த்‌தி‌ல், பார‌தியா‌ரி‌ன் எழு‌ச்‌சி‌ப் பாட‌ல்களை‌ப் பாடி ம‌க்க‌ளிடையே சுத‌ந்‌திர உண‌ர்வை‌‌த் தூ‌ண்டிய பெருமையு‌ம் டி.கே. ப‌ட்ட‌ம்மாளு‌க்கு உ‌ண்டு.

இசை உல‌கி‌ல் 65 ஆ‌ண்டுகளு‌க்கு‌ம் மேலாக தனது த‌னி‌த்துவ‌த்தை ‌நிரூ‌பி‌த்து‌ள்ள டி.கே. ப‌ட்ட‌ம்மா‌ள், ‌திரை‌யிசை‌ப் பாட‌ல்க‌ள் ம‌ட்டு‌ம் சுமா‌ர் நூறு பாட‌ல்க‌ள் பாடி உ‌ள்ளா‌ர். ‌

எம்.எஸ்.சுப்புலட்சுமி, எம்.எல்.வசந்தகுமாரி, டி.கே.பட்டம்மாள் ஆகியோரை கர்நாடக இசை உலகின் மூன்று இசைமேதைகள் என்று ‌சிற‌ப்‌பி‌த்து‌க் கூறுவா‌ர்க‌ள்.

செ‌ன்னை கோ‌ட்டூ‌ர்புர‌த்‌தி‌ல் வ‌சி‌த்து வ‌ந்த டி.கே. ப‌ட்ட‌ம்மா‌ள், கட‌ந்த ‌சில நா‌ட்களாக உட‌ல்ந‌ல‌ம் சுக‌மி‌ல்லாம‌ல் இரு‌ந்தா‌‌ர். இ‌ந்த ‌நிலை‌யி‌ல் நே‌ற்று பக‌ல் 12.30 ம‌ணியள‌வி‌ல் அவரது உ‌யி‌ர் ‌பி‌ரி‌ந்தது. இ‌ந்த தகவ‌ல் ‌கிடை‌த்தது‌ம், க‌ர்நாடக இசை உல‌க‌ப் ‌பிரமுக‌ர்களு‌ம், ‌சி‌னிமா‌த் துறை‌யின‌ரு‌ம் அவரது இ‌ல்ல‌த்‌தி‌ற்கு‌ச் செ‌ன்று அ‌ஞ்ச‌லி செலு‌த்‌தின‌ர்.

டி.கே.பட்டம்மாளின் உடல் மாலையில், சென்னை மைலாப்பூ‌ரி‌ல் உள்ள மின்சார சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் ஏராளமானோ‌ர் கலந்து கொண்டனர்.

டி.கே.பட்டம்மாளின் கணவர் பெயர் ஈஸ்வரன். அவருக்கு 95 வயது ஆகிறது. இவர்களுக்கு சிவகுமார், லட்சுமணன் என்ற 2 மகன்கள் உள்ளனர். சிவகுமாரின் மகள்தான் கர்நாடக இசைப்பாடகி நித்யஸ்ரீ மகாதேவன்.

டி.கே. ப‌ட்ட‌ம்மா‌ளி‌ன் வரலாறு

கர்நாடக இசை மேதையாக விளங்கிய டி.கே.பட்டம்மாள் காஞ்சீபுரத்தில் கடந்த 1919-ம் ஆண்டு மார்ச் மாதம் 28-ந்தேதி தாமல் கிருஷ்ணசாமி தீட்சிதர்-காந்திமதி தம்பதிக்கு மகளாக பிறந்தார். டி.கே.பட்டம்மாளுக்கு பெற்றோர் அலமேலு எ‌ன்று பெய‌ர் சூ‌ட்டி, ப‌ட்ட‌ம்மா‌ள் எ‌ன்று செ‌ல்லமாக அழை‌த்தன‌ர். எனவே அவரு‌க்கு ப‌ட்ட‌ம்மா‌ள் எ‌ன்ற பெயரே பெய‌ர் வா‌ங்‌கி‌க் கொடு‌த்தது.

சிறு வயதிலேயே கர்நாடக இசையில் மிகுந்த ஆர்வம் கொண்ட பட்டம்மாள் தனது 10ஆ‌ம் வயதிலேயே அகில இந்திய வானொலியில் க‌ர்நாடக இசை‌ப் பாடலை‌ப் பாடி ர‌சிக‌ர்களை‌க் கவ‌ர்‌ந்தா‌ர். 1932-ம் ஆண்டு முதன் முறையாக சென்னை ரசிக ரஞ்சனி சபாவில் மேடை ஏ‌றிய ப‌ட்ட‌ம்மா‌ள் கைத‌ட்ட‌ல்களை வா‌ரி‌க் கு‌வி‌த்தா‌ர். பாபநாசம் சிவன் போன்ற இசை மேதைக‌ளிட‌ம் இசை பயின்ற ப‌ட்ட‌ம்மா‌ள், ஆயிரக்கணக்கான மேடைகளில் கச்சேரி செய்து உள்ளார். பைரவி ராகத்தில் வல்லமை பெற்றவர்.

பாபநாசம் சிவன் மூல‌ம் டி.கே.பட்டம்மா‌ள் ‌திரை‌யிசை‌ப் பாட‌ல்களு‌க்கு அ‌றிமுகமானா‌ர். ‌தியாக பூமி என்ற ‌திரை‌ப்பட‌த்‌தி‌ல் அவ‌ர் பாடகியானா‌ர். அவரது பாட‌ல்க‌ள் பெரு‌ம்பாலு‌ம் தேசபக்தி பாடல்களாகவு‌ம், பாரதியாரின் பாடல்களாகவு‌மே இரு‌ந்தது.

இ‌ந்‌திய சுத‌ந்‌திர‌ப் போரா‌ட்ட‌த்‌தி‌ன்போது, ஆ‌ங்‌கிலேய‌ர் ஆ‌ட்‌சி‌யி‌ன் தடையை ‌மீ‌றி பல மேடைக‌ளி‌ல் பார‌தியா‌ரி‌ன் எழு‌ச்‌சி‌ப் பாட‌ல்களை‌ப் பாடி, இ‌ந்‌திய ம‌க்க‌ளி‌ன் சுத‌ந்‌திர‌த்தை தூ‌ண்டிய‌ப் பெருமையையயு‌ம் தனது க‌ர்நாடக இசை‌யி‌ன் மூலமாக‌ப் பெ‌ற்றா‌ர் ப‌ட்‌ட‌ம்மா‌ள். இத‌ற்காக அவ‌ர், கா‌ந்‌‌தியடிக‌ள் ம‌ற்‌று‌ம் நேரு‌வி‌ன் பாரா‌ட்டுகளையு‌ம் பெ‌ற்றா‌ர்.

இந்தியா 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந் தேதி சுதந்திரம் அடைந்தது. நாடு சுதந்திரம் அடையும் சமயத்தில், அதாவது ஆகஸ்டு 14-ந் தேதி இரவு டி.கே.பட்டம்மாள் அகில இந்திய வானொலியில் ஆடுவோமே பள்ளு பாடுவோமே என்ற பாரதியாரின் தேச பக்தி பாடலை பாடினார். இது நேரடியாக ஒலிபரப்பப்பட்டது. தொடர்ந்து 2 மணி நேரம் அவர் வானொலியில் தேச பக்தி பாடல்களை பாடினார்.

இவர் பாடிய கர்நாடக இசைப்பாடல்களும், தேச பக்தி பாடல்களும் இசைத்தட்டு விற்பனையில் சாதனை படைத்துள்ளன.

ஒரு முறை திருநெல்வேலியில் டி.கே.பட்டம்மாள் இசைக்கச்சேரி நடத்தியபோது பாரதியார் பாடல்களை உணர்ச்சி பூர்வமாக பாடிக்கொண்டு இருந்தார். அதை முதல் வரிசையில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த பாரதியாரின் மனைவி செல்லம்மாள், கச்சேரி முடிந்ததும் டி.கே.பட்டம்மாளை கட்டிப்பிடித்து பாராட்டு தெரிவித்தார். அப்போது அவரது கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக கொட்டியது.

இசை உலகுக்கு ஆற்றிய சேவைக்காக டி.கே.பட்டம்மாள் 60-க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார். பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகளு‌ம் இவரை கெளர‌வி‌த்து‌ள்ளது. சங்கீத சாகர ரத்னா, சங்கீத கலாநிதி, கலைமாமணி, கான சரஸ்வதி போன்ற பெருமைமிக்க பல விருதுகளையும் பெற்று இருக்கிறார்.

இலங்கை, கனடா, அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்‌ஸ், சுவிட்சர்லாந்து போன்ற பல்வேறு நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து இசைக்கச்சேரி நடத்தி உள்ளார். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தி‌ன் ஆஸ்தான வித்வானாகவும் பதவி வகித்தவ‌ர் ப‌ட்ட‌ம்மா‌ள் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

இசை மேதை‌யி‌ன் மரண‌ம், இசை உல‌கி‌ற்கு ஒரு பே‌ரிழ‌ப்பு எ‌ன்பது மறு‌க்க முடியாத உ‌ண்மை.

அவரது மறைவ‌க்கு ஆ‌ழ்‌ந்த இர‌ங்கலை‌த் தெ‌ரி‌வி‌த்து‌க் கொ‌ள்‌கிறோ‌ம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

க‌ர்நாடக இசை‌ப் பாடகி டி.கே.பட்டம்மா‌ள் காலாமானார் Empty Re: க‌ர்நாடக இசை‌ப் பாடகி டி.கே.பட்டம்மா‌ள் காலாமானார்

Post by Guest Fri Jul 17, 2009 7:47 pm

மிகவும் வருத்தமான செய்தி

அவரது மறைவ‌க்கு ஆ‌ழ்‌ந்த இர‌ங்கலை‌த் தெ‌ரி‌வி‌த்து‌க் கொ‌ள்‌கிறோ‌ம்.
avatar
Guest
Guest


Back to top Go down

க‌ர்நாடக இசை‌ப் பாடகி டி.கே.பட்டம்மா‌ள் காலாமானார் Empty Re: க‌ர்நாடக இசை‌ப் பாடகி டி.கே.பட்டம்மா‌ள் காலாமானார்

Post by ரூபன் Fri Jul 17, 2009 7:48 pm

அவரது மறைவ‌க்கு ஆ‌ழ்‌ந்த இர‌ங்கலை‌த் தெ‌ரி‌வி‌த்து‌க் கொ‌ள்‌கிறோ‌ம் அன்பு மலர்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

க‌ர்நாடக இசை‌ப் பாடகி டி.கே.பட்டம்மா‌ள் காலாமானார் Empty Re: க‌ர்நாடக இசை‌ப் பாடகி டி.கே.பட்டம்மா‌ள் காலாமானார்

Post by kirupairajah Fri Jul 17, 2009 8:08 pm

தலைவரே "சிவா" நான் உங்களுக்கு முதல் இந்த செய்தியை பதித்துவிட்டேன், அனால் முருகன் வருத்தம் தெரிவிக்க மறந்து பாராட்டு தெரிவித்துவிட்டர்.

eegarai.darkbb.com/ii-oio-f5/oao-yoi-eiu-oaooi-t3436.htm
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

க‌ர்நாடக இசை‌ப் பாடகி டி.கே.பட்டம்மா‌ள் காலாமானார் Empty Re: க‌ர்நாடக இசை‌ப் பாடகி டி.கே.பட்டம்மா‌ள் காலாமானார்

Post by ரூபன் Fri Jul 17, 2009 8:18 pm

சிரி சிரி
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

க‌ர்நாடக இசை‌ப் பாடகி டி.கே.பட்டம்மா‌ள் காலாமானார் Empty Re: க‌ர்நாடக இசை‌ப் பாடகி டி.கே.பட்டம்மா‌ள் காலாமானார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum