ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாடாளுமன்றத்தில் மத்திய அரசை முடக்க தேசிய ஜனநாயக கூட்டணி திட்டம்

3 posters

Go down

நாடாளுமன்றத்தில் மத்திய அரசை முடக்க தேசிய ஜனநாயக கூட்டணி திட்டம் Empty நாடாளுமன்றத்தில் மத்திய அரசை முடக்க தேசிய ஜனநாயக கூட்டணி திட்டம்

Post by ரபீக் Wed Jul 14, 2010 10:01 am

ஜூலை 5ம் தேதி நடத்திய நாடு தழுவிய பாரத் பந்த் போராட்டத்தைத் தொடர்ந்து, விலைவாசி பிரச்னையில் ஆளும் கூட்டணி அரசுக்கு நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் நிர்பந்தம் தருவது என தேசிய ஜனநாயகக் கூட்டணி திட்டமிட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியதை அடுத்து அதை வாபஸ் பெறக்கோரி எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன.
இடதுசாரிகளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் தனித்தனியாக ஜூலை 5ம் தேதி பாரத் பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தன.

இதில் சமாஜவாதி கட்சி, அதிமுக, மதிமுக போன்றவை பங்கேற்றன. நாடு தழுவிய அளவில் நடந்த இந்த போராட்டம் பல மாநிலங்களில் வெற்றிகரமாக அமைந்தது. இந்த போராட்டத்தின் மூலம் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை வெளிப்பட்டுள்ளது என எதிர்க்கட்சிகள் மகிழ்ச்சியில் உள்ளன. ஆளும் கூட்டணி அரசுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் இந்த ஒற்றுமை, மழைக்காலக் கூட்டத்தொடரிலும் வெளிப் படவேண்டும் என்பதில் முனைப்பாக உள்ளது தேசிய ஜனநாயக கூட்டணி. இந்நிலையில் சரத் யாதவ் நிருபர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கைவிடும்படி நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பும்போது பாரத் பந்த் போராட்டத்தில் பங்கேற்காத பகுஜன் சமாஜ் கட்சி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகியவையும் இணையும் என்று எதிர்பார்க்கிறோம்.

விலை உயர்வு என்பது ஒரு கட்சியை மட்டும் சார்ந்ததல்ல. மக்கள் சம்மந்தப்பட்ட பொதுப்பிரச்னையாகும். மக்களின் பிரச்னை மீது அக்கறை காட்டும் எல்லா கட்சிகளும் நாடாளுமன்றத்தில் ஆளும் கூட்டணிக்கு எதிராக நாங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு துணை நிற்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை வாபஸ் பெறும்படி ஆளும் கூட்டணி அரசை நாடாளுமன்றத்தில் நிர்பந்திக்க வேண்டும். இப்போதைய நிலையில் ஒரு கட்சியோ அல்லது தனி நபரோ தலைவரல்ல. நாம் எழுப்பும் பிரச்னைதான் பிரதானமானது. பிரச்னைகள் மீது எதிர்க்கட்சிகள் காட்டும் ஒற்றுமை எதிர்காலத்தில் மேலும் வலுப்பெறவேண்டும்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் பெட்ரோல்,டீசல் விலை உயர்வு பிரச்னையில் எதிர்க்கட்சிகள் ஆளும் கூட்டணி அரசை கலங்கடிக்கவேண்டும்.

ஜூலை 5ம் தேதி நடந்த பாரத் பந்த் சுதந்திர இந்தியா இதுவரை பார்த்திராத ஒன்று. ஐக்கிய முற்போக்குக்கூட்டணி அரசின் 6 ஆண்டு கால ஆட்சியில் அதற்கு எதிராக நடத்தப்பட்ட முதல் மிகப்பெரிய போராட்டம் பாரத் பந்த்.

தலைபோகும் பிரச்னைகளை ஒதுக்கிவிட்டு இடதுசாரிகளும் பாஜகவும் ஒன்றாக சேர்ந்துவிட்டதாக காங்கிரஸ் கூறும் விமர்சனம் ஏற்கத்தக்கதல்ல. மதச்சார்பின்மை என்று கூறி முக்கிய பிரச்னைகளை மூடி மறைக்க பார்க்கிறது ஆளும் கூட்டணி அரசு. பற்றிஎரியும் பிரச்னைகளை மூடி மறைக்க மதச்சார்பின்மை கோஷத்தை எழுப்புகிறது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு.

பாரத் பந்த் போராட்டத்தில் எதிர்க்கட்சிகள் இணைந்ததை கண்டு அதிர்ந்துபோயுள்ள காங்கிரஸ் கூட்டணி அரசு இந்த ஒற்றுமையை கலைக்க முயற்சிக்கக்கூடும் என்றார் சரத் யாதவ்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நாடாளுமன்றத்தில் மத்திய அரசை முடக்க தேசிய ஜனநாயக கூட்டணி திட்டம் Empty Re: நாடாளுமன்றத்தில் மத்திய அரசை முடக்க தேசிய ஜனநாயக கூட்டணி திட்டம்

Post by kalaimoon70 Wed Jul 14, 2010 10:15 am

நன்றி


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

நாடாளுமன்றத்தில் மத்திய அரசை முடக்க தேசிய ஜனநாயக கூட்டணி திட்டம் Empty Re: நாடாளுமன்றத்தில் மத்திய அரசை முடக்க தேசிய ஜனநாயக கூட்டணி திட்டம்

Post by பிளேடு பக்கிரி Wed Jul 14, 2010 11:42 am

நாடாளுமன்றத்தில் மத்திய அரசை முடக்க தேசிய ஜனநாயக கூட்டணி திட்டம் 678642 நாடாளுமன்றத்தில் மத்திய அரசை முடக்க தேசிய ஜனநாயக கூட்டணி திட்டம் 678642



நாடாளுமன்றத்தில் மத்திய அரசை முடக்க தேசிய ஜனநாயக கூட்டணி திட்டம் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

நாடாளுமன்றத்தில் மத்திய அரசை முடக்க தேசிய ஜனநாயக கூட்டணி திட்டம் Empty Re: நாடாளுமன்றத்தில் மத்திய அரசை முடக்க தேசிய ஜனநாயக கூட்டணி திட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இடஒதுக்கீடு அளிப்பதில் மத்திய அரசு உறுதி: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சா் விளக்கம்
» மத்திய அரசை திணற வைத்த சிறுமி
» திருநங்கைகள் பாதுகாப்பு மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்
» " மத்திய அரசை எதிர்க்கிறோம் "- தைரியமாக சொல்கிறார் தம்பித்துரை
» தேசிய அளவி்ல் காங். கூட்டணி முன்னிலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum