ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூத்த காதாசிரியரின் மூளையைத் திருடும் இயக்குனர்!

Go down

மூத்த காதாசிரியரின் மூளையைத் திருடும் இயக்குனர்! Empty மூத்த காதாசிரியரின் மூளையைத் திருடும் இயக்குனர்!

Post by நவீன் Mon Jul 12, 2010 3:27 pm

மலையாள திரையுலகின் தவிர்க்கமுடியாத ஆளுமைகளில் ஒருவர் எம்.டி.வி என்று
தென்னிந்திய சினிமா உலகினரால் செல்லமாக அழைக்கப்படும் எம்.டி.வாசுதேவன்
நாயர். மலையாள இலக்கியத்தின் செழுமையான நாவலாசிரியராக முத்திரை பதித்த
இவர், 1968 ல் வெளிவந்த ‘முறைப்பெண்’ என்ற படம் மூலம் திரைக்காதாசிரியராக
தனது திரைப்பயணத்தை தொடங்கியவர்

இவர் திரைக்கதையை கையிலெடுத்த போது, தன்னுடைய உணர்ச்சிகரமான நாவல்கள்
மூலம் பெரும் புகழ் பெற்றிருந்தார். மாத்ருபூமி வார இதழில் துணை
ஆசிரியராகவும் இதழியல் முகம் காட்டிய இவர், மலையாளத் திரையுலகு கண்ட உச்ச
நட்சத்திர எழுத்தாளர் என்றால் அது மிகையில்லை.ஏறத்தாழ நாற்பது
வருடம் எம்.டி.வாசுதேவன் நாயர் மலையாளத் திரையுலகில் நட்சத்திர
நடிகர்களுக்கு இணையான முக்கியத்துவத்துடன் இருந்தார். ஆட்சி நடத்தினார். மலையாளத்
திரையுலகில் இரண்டு தலைமுறை நடிகர்கள் அவரது கதாபாத்திரங்களை
நடித்திருக்கிறார்கள். இரண்டு தலைமுறை இயக்குநர்கள் அவரது கதையை
காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். எம்.டி. மலையாளத் திரையுலகில்
ஒரு சமகால வரலாற்று நிகழ்வு என்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். மலையாளத்
திரையுலகை திரும்பிப் பார்க்கையில் முக்கியமான படங்களாக நூறு படங்களைப்
பட்டியலிட்டால் முப்பது படங்கள் எம்.டி. எழுதியவையாக இருக்கும். இன்றைய
மலையாளத் திரை ரசனை என்பதே எம்.டி.யால் படிப்படியாக வளர்த்து எடுக்கப்பட்ட
ஒன்றுதான் என்பது மூத்த மலையாள சினிமா விமர்சகர்களின் கருத்து.இவருக்குப்
பிறகு பத்மராஜன் போன்ற முத்திரை பதித்த திரைக்காதாசிரியர்கள் வந்தாலும்
இவரது இடத்தை இன்றுவரை நிரப்ப ஆள் இல்லை என்பதுதான் உண்மை. இந்தியத்
திரைகதைக்கு புதிய புதிய உத்திகளை பரிசளித்த இவர் , இத்தனை முதுமையிலும்
கடந்த ஆண்டு கமல் நடிக்க இருந்த நான்கு மொழிப் படத்துக்கு கதை திரைக்கதை
எழுதினார். ரகுமானின் வந்தே மாதரம், பிரே ஃபார் மை உட்பட பல
மியூசிக் வீடியோகளையும், ஒரு உலக சினிமாவையும் இயக்கிய பரத் பாலா
ஆங்கிலம், ஜப்பானிஷ், தமிழ், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் சுமார் 100
கோடி மதிப்பீட்டில் தயாராக இருந்த அந்தப் படம் 19th step! இந்தப்
படத்துக்கான கதை, திரைக்கதை எழுதியவர் எம்.டிவிதான். பௌத்தம்
வாழ்ந்துகொண்டிருந்த பதினான்காம் நூற்றாண்டில் நடக்கும் கதை. ஒரு ஜப்பானிய
இளைஞன் (ஹீரோ), தனது கிராமத்தையே உயிரோடு எரித்த எதிரிகளை அழிக்க, களறிக்
கலையின் 19-வது உத்தியை கற்றுக்கொள்ள கேரளத்தின் மலபாருக்கு வருகிறான்.
அங்கே புகழ்பெற்ற களறி குருவாக இருக்கிறார் கமல். அவரிடம் ஒரு
ராயல்(இளவரசி) ஸ்டூடெண்டாக களறி கற்கிறார் அசின். பெரிய போராட்டத்துக்குப்
பிறகு கமலிடம் சீடனாக சேரும் ஜப்பானிய மாணவனுக்கு களறிக் கலையின் 19-வது
ரகசியமான உருமியை (உருமி தமிழ்ச்சொல்தான். இப்போதும் தமிழ் சிலம்பக்கலை
மரபில் சுருள் வாளாக இருப்பதுதான் உருமி வாள். ஒரு கைப்பிடியில்
பல நீளமான நாக்குகள் உள்ள சுருள் வாள்) சுழற்றும் ரகசியத்தைச்
சொல்லிதருகிறார் கமல். 19-வது உத்தியை கற்றுக் கொண்ட ஹீரோ, சேரநாட்டுக்கு
வந்த ஆபத்தை முறியடித்து ஜப்பான் புறப்படுகிறான். அங்கே அவன் தனது
எதிரிகளை, உருமியை பயன்படுத்தி அழித்தானா என்பதுதான் கமலின்
பிடிவாதத்தால் டிராப் ஆன அந்தப் படத்தின் அவுட் லைன் என்கிறார்கள்
பரத்பாலவின் உதவியாளர்கள். இதில் என்ன கொடுமை என்றால் இந்தத்
திரைக்கதை மலையாளம் திரைக்கதை எழுத்தாளர்களுக்கு தெரிந்த ஒன்றுதானாம்!
எம்.டி.வி எப்போதும் தாம் எழுதும் திரைக்கதையின் ரகசியம் காப்பதில்லை.
திரைக்கதை பற்றி தன்னிடம் விவாதிக்க வரும் அனைவருக்கும் தனது லேட்டஸ்ட்
ஸ்கிரிப்டை வாசிக்க கொடுத்து உற்சாகப்படுத்துவாராம். மலையாள ஊடகமும் எம்.டிவியின் திரைக்கதைகள் பற்றி தகவல் கிடைத்தாலும் அவர் மீதிருக்கும் மரியாதையால் அதைப் பற்றி செய்தி போடுவதில்லை. ஆனால்
ஒரு சக மலையாள எழுத்தாளர், இயக்குனரே எம்.டி.வியின் மூளை உழைப்பை
அவமானப்படுத்தும் விதமாக, எம்.டி.வியின் திரைகதையை உள்வாங்கிகொண்டு, அதே
உருமியை மையப் படுத்தி, சந்தோஷ் சிவன் அடுத்து இயக்க இருக்கும் படத்துக்கு
திரைக்கதை எழுதிக்கொடுத்திருகிறார் என்கிறார்கள். சந்தோஷ் சிவன்
இயக்கபோகும் படமும் அதே காலகட்டத்தின் பிரியட் பிலிம் என்பதோடு, உறுமியே
முக்கிய பாத்திரமாக கதையில் உறுமுகிறதாம். மேலும் 19th step போலவே
பழிவாங்கும் கதையாம். இதனால் படத்துக்கு உறுமி என்றே தலைப்பு வைத்து
விட்டார்கள். ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் நல்ல தொழில் நுட்பக்
கலைஞராக இருந்தும், இதுபற்றி எந்த பிரஞையும் இல்லாமல் அந்த எழுத்தாளரோடு
கைகோர்த்திருகிறார் என்று பொறுமுகிறார்கள் எம்.டி.வியின் நட்பு
வட்டத்தில். இந்த தகவல் எம்.டி.வியின் காதுக்கும்
சென்றிருக்கிறது. அவரோ அமைதியா புன்னகை பூத்து விட்டு, உருமி எனக்கு
மட்டும் சொந்தமானதல்ல. கடவுள் அவரை ஆசீர்வதிக்கட்டும் என்றாராம். இதைக்
கேள்விப்பட்ட பரத்பாலா கண்கலங்கி விட்டதாக தகவல் கிடைகிறது.
பிரிதிவிராஜும் ஜெனலியாவும் நடிக்க இருக்கும் உருமியை தமிழ் , மலையாளம்
ஆகிய இரண்டு மொழிகளில் எடுக்க இருக்கிறாராம் சந்தோஷ் சிவன். இந்திய
திரைக்கதையின் குருவான எம்.டிவியின் திரைக்கதையின் மையப்புள்ளியை
நகலேடுத்து, கொள்ளைப்புரம் வழியாக கதை செய்து படமெடுத்து விருது
வாங்குவதுதான் சந்தோஷ் சிவனின் லேட்டஸ்ட் ஸ்டைலா என்கிறார்கள்
திருவனந்தபுரம் வட்டாரத்தில்.
நிற்க. அந்த அற்புதமான எழுத்தாளர், இயக்குனர்
பெயரைச் சொல்லாமல் விட்டால் எப்படி என்கிறீர்களா? கேரளா கபே என்ற
தலைப்பில் பத்து குறும்படங்கள் இணைந்த ஒரு மலையாளப் படம்
உருவாக்கப்பட்டது. விமர்சகர்களின் பாராட்டுகளை அள்ளிய அந்தப்படத்தில்
ஐலாண்ட் எக்ஸ்பிரஸ் என்ற குறும்படத்தை இயக்கிய ஷங்கர் ராமகிருஷ்ணன்தான்
அந்த நகலாளர் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் கதறலோடு தகவல் தருகின்றன.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum