புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முல்லை கீர்த்திக் குட்டி மாதிரி இருந்திருக்கக் கூடும் அல்லது கீர்த்திக் குட்டி முல்லை மாதிரி வரக் கூடும்
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
முல்லை கீர்த்திக் குட்டி மாதிரி இருந்திருக்கக் கூடும் அல்லது கீர்த்திக் குட்டி முல்லை மாதிரி வரக் கூடும்
#339199- இரா.எட்வின்கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
முல்லை கீர்த்திக் குட்டி மாதிரி இருந்திருக்கக் கூடும்
அல்லது கீர்த்திக் குட்டி முல்லை மாதிரி வரக் கூடும்
இறங்கினேன் என்று சொன்னால் அது பொய். விழாத லாட்டரி சீட்டினை கசக்கி எறிவது மாதிரி சக பயணிகள் என்னை கீழே எறிந்தார்கள் என்றுதான் கொள்ள வேண்டும். சட்டையை கழற்றிப் பிழிந்தால் இரண்டு குவளை தேறும். அது தந்த எரிச்சலோடுதான் இரண்டு சக்கர வாகனத்தை எடுக்க கிளம்பினேன்.
தலைக் கவசத்தை அணியப் போன நேரம் அலை பேசி யுகமாயினி சித்தன் என்று எழுதிக் காட்டி செல்லமாய் சிணுங்கியது. "அது வந்து ரெண்டு விஷயம் எட்வின், ஒன்னு, நீங்க கல்கிக்கு அனுப்பியுள்ள காற்று வரும் பருவம் நாவல் விமர்சனத்த விரிவாக்கி எனக்கு அனுப்பிடுங்க. அத இந்த மாசம் வச்சுடுவோம். ரெண்டு, செந்தமிழனோட வலை தளத்த மெயில்ல இணைச்சிருக்கேன் . ரொம்ப நல்லா செய்றார். அவர் யாரு தெரியுமா? தோழர் மணியரசனோட பையன். அதுல ஒன்ன இந்த மாசம் வச்சுடலாம். அதுல இன்னொரு விஷயம் இருக்கு. அதப் பாத்துட்டு அதப் பத்தி கொஞ்சம் காலைல அவசியம் பேசுங்க."
கனிவென்றும் கொள்ளலாம், கட்டளையென்றும் கொள்ளலாம், இரண்டின் கலவையாகவும் கொள்ளலாம். இதுதான் சித்தன்.
தேவையான விஷயங்களை ஒன்று ஒன்றாய் கடகட வென்று சொல்லி முடித்து விட்டு சட்டென துண்டித்து விடும் வித்தையை அவரிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும். "ஏதோ சொல்ல வந்தேன். சட்டென வர மாட்டேங்குது. மறந்து போச்சு," என்பதெல்லாம் அவரிடம் கிடையவே கிடையாது. தேவைக்கு மேல் ஒரு வார்த்தை இருக்காது. பேசுவதற்கு முன் மனுஷன் ஒத்திகை பார்த்துவிட்டு வருவாரோ என்றுகூட எண்ணுவதுண்டு.
செம்மொழி மாநாட்டிற்குள் இதழைக் கொண்டு வந்துவிட வேண்டும் என்பதால் அவர் சுமக்கும் பளுவின் சுமை அறிந்தவன் என்பதால் இரண்டு வேலைகளையும் அன்றிரவே முடித்துவிடுவது என்று தீர்மானித்தேன். இணையத்திற்குள் நுழைந்து அவர் அனுப்பியிருந்த வலையைத் திறந்தேன். "காட்சி" என்ற தனது வலையை மிகுந்த கவனத்தோடும் அழகுணர்வோடும் வடிவைமைத்திருந்தார். நாமும்தான் வைத்திருக்கிறோம் வலையை. எப்படி மற்றவர்கள் பார்க்க வருவார்கள் என்று என்னை நானே நொந்து கொண்டே உள்ளே போனேன். "அது ஒரு பெரிய விஷயமே இல்ல எட்வின், அரை மணி நேரத்துல முடிச்சுடலாம்" என்று சொன்ன சித்தனுக்கும் இன்னும் நேரம் வாய்க்க வில்லை. நானும் அதற்கப்பறம் அது பற்றி பேசவே இல்லை என்பதையும் சொல்லத்தான் வேண்டும். சரி விடுங்கள். அதற்கெல்லாம் ஒரு அக்கறை வேண்டும்.
" கடவுள் உங்கள் வீட்டிற்கு வந்திருந்தாரா?" என்ற செந்தமிழனது பதிவைப் பார்த்ததும் அப்படியே மிரண்டு போனேன். தாத்தா பாட்டிகளின் வடிவில் கடவுள்களை கண்டுணர இயலாத நமது அறியாமையை, கீழ்மையை குழந்தைகளின் தளம் நின்று குழந்தைகளின் மொழி கொண்டு நச்சென்று நெய்திருந்தார்.
"திண்ணையிலிருந்த தாத்தா
வீட்டிற்குள் வந்தார்
படமாக" என்ற சேது மாதவனின் கவிதையையும் இந்தப் பதிவு என் அசைக்கு கொண்டு வந்தது.
எனது மிரட்சிக்கு இன்னொரு காரணமும் இருந்தது. அவரது "கடவுள் உங்கள் வீட்டிற்கு வந்திருந்தாரா?" என்ற இந்தக் கட்டுரையையும் எனது "சாமிக்கு சயின்ஸ் தெரியாது" என்ற கட்டுரையையும் இருவரது பெயரையும் போடாமல் சுற்றுக்கு விட்டால் இரண்டையுமே அவர் எழுதியதாக அவரது நண்பர்களும் நான் எழுதியதாக எனது நண்பர்களும் சத்தியமே செய்யக் கூடும்.
குழந்தைகளுக்கான வெளியும் மொழியும் எங்கள் இருவருக்கும் மிக நெருக்கமாய் வருகிறது.
" உளுந்து சாகுபடிக் காரனின் சாபம்" கட்டுரையை வாசித்தால் நேர்மையுள்ள யாராலும் வேறு எதற்கும் சட்டென கடந்துவிட முடியாது. உளுந்துப் பண்டங்கள் எதைத் தின்னும் போதும் உளுந்து சாகுபடியாளர்களின் வியர்வையும் செந்தமிழன் முகமும் நம்மை சபித்துக் கொண்டே இருக்கும். " உளுந்தின் நிறம் கருப்பு. உங்கள் வீட்டிற்கு வரும் போது தோல் உரிக்கப் பட்டிருக்கும்" என்று முடித்திருப்பார். அது குறித்து நிறையப் பேச வேண்டும்தான். அந்தக் கட்டுரையே "யுகமாயினி" ஜூலை இதழில் வருகிறது. அவசியம் வாசியுங்கள். செந்தமிழனைக் கடந்து போகும் தெம்பற்றவனானேன். சரி, விஷ்ணுபுரம் சரவணனோடு பேசலாம் என்று பார்த்தால் அவர் ஒரு இழவு வீட்டில் இருந்தார்.
மனம் போன போக்கில் எலி கொண்டு வலையோடு விளையாடிக் கொண்டிருந்தேன். எலி என்னை இழுத்துக் கொண்டுபோய் மாதவராஜின் "தீராத பக்கங்கள்" வலையில் தள்ளியது. வலையுலகை ரொம்பவும் வெப்பப் படுத்திக் கொண்டிருந்த ஒரு பிரச்சினை கண்ணில் பட்டது. பதிவுலகை கொந்தளிக்கச் செய்த அந்த பிரச்சினை குறித்த அரிச்சுவடிகூட தெரியாமல் இருந்திருக்கிறேன் பாருங்கள். இன்னும் கொஞ்சம் உன்னிப்பாய் கவனிக்க வேண்டுமென்று உறுதியேற்றேன்.
பதிவர் நர்சிம் தனது வலையில் தோழர் சந்தன முல்லைபற்றி ஆணாதிக்கத் திமிரோடு பதிந்தது பற்றியும், அது குறித்து நீண்ட விவாதங்கள் நடந்தது பற்றியும், இறுதியாய் நர்சிம் முல்லையின் கணவர் தோழர்.முகிலிடம் மன்னிப்பு கேட்டது பற்றியும், முல்லையிடமே அதை கேட்பதுதான் சரி என்று மாதவராஜ் ஆலோசனைத்திருந்ததையும் அறிய முடிந்தது.
இது ஓராண்டாகவே நீண்டு வருவதாக படுவதாலும் முல்லை எங்கு என்ன பின்னூட்டமிட்டார் என்பதும் தெரியாமல் நர்சிம் என்ன எழுதினார் என்பதும் தெரியாமல் அபிப்பிராயம் சொல்லக் கூடாது. தப்பித்தல் முயற்சியல்ல இது. சாராக் கொள்கையோடு நமக்கென்றும் உடன்பாடில்லை. யாவரும் நமக்கு கேளிருமல்ல. உழைப்பவனும் யோக்கியனும் மட்டுமே நமக்கு உறவாக முடியும்.
இந்த நேரத்தில் முல்லையின் வலை கிடைதது. "பூக்காரிகளுக்கும் தன் மானம் உண்டு" என்ற தனது பதிவில் (பூக்காரி என்ற புனைவில்தான் நர்சிம் முல்லையைக் காயப் படுத்தி இருந்தார் என்று சொல்லப் படுகிறது)
பதிவெழுத முகிலைக் கேட்டு நான் வரவில்லை.முகிலைக் கேட்டு கமெண்ட் போடவில்லை. அதற்கு அவசியமும் இல்லை.
சித்திரக்கூடத்திலும் பதிவுலகிலும் சந்தனமுல்லையாகவே முன்னிறுத்திக் கொண்டிருக்கிறேனே தவிர முகிலுடைய மனைவியாக அல்ல. நான் முகிலின் சொத்தோ கவுரவமோ அல்ல. அதைக் குறித்த தெளிவு என்னிடம் இருக்கிறது.
முகிலிடம் ஏன் மன்னிப்பு கேட்கிறீர்கள்?
இதன் மூலம் மனைவி, கணவனது சொத்து என்பதே திரும்ப நிறுவப்படுகிறது. கணவனும் மனைவியும் சேர்ந்த குடும்பத்தில் கணவன் அங்கமே தவிர, கணவன் என்றைக்கும் மனைவியை ரெப்ரசெண்ட் செய்ய முடியாது!
அப்படியே நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டுமென்றால், கேட்க வேண்டிய நபர் யாரைப் பற்றி புனைவெழுதி எல்லார் பதிவுகளிலும் ஒரு வருடமாக சீண்டி வருகிறேனென்று கமெண்ட்களிட்டு திரிந்தீர்களோ அவளிடம்.
ஏன், ஒரு பெண்ணிடம் மன்னிப்பு கேட்க உங்கள் ஈகோ பின்வாங்குகிறதா?
என்று கொதித்திருந்தார். பிரச்சினை என்னோடு என்கிறபோது அதில் உங்கள் பக்கம் தவறிருப்பதை உணர்ந்தவுடன் என்னிடம் கேட்காமல் மன்னிப்பை என் கணவரிடம் கேட்பதும் கேவலமான ஆணாதிக்கச் சிந்தனையன்றி வேறென்ன என்ற முல்லையின் வாதம் சரியெனப் படவே அந்த அதிகாலை மூன்று மணி வாக்கில் முல்லைக்கு பின்னூட்டமிட்டேன்.
இதில் முல்லையின் கோபம் பிடித்துப் போக இன்னொரு காரணமும் உண்டு.
இப்போது ஆறாவது படிக்கும் கீர்த்திக் குட்டி அப்போது மூன்றாவது படித்துக் கொண்டிருந்தாள். அவளது தமிழ் புத்தகத்தில் "கீர்த்தனா" என்று தனது பெயரை அழகாக எழுதியிருந்தாள். அதற்கு முன்னொட்டாகவோ, பின்னொ
ட்டாகவோ "மக்கு" என பென்சிலால் சேர்த்தேன். ஒன்று "மக்கு கீர்த்தனா" என்றோ அல்லது "கீர்த்தனா மக்கு" என்றோ வந்திருக்க வேண்டும்.
"நானா மக்கு?. நீ மக்கு, உங்க அப்பா மக்கு, உங்க மிஸ் மக்கு, உன்னோட ப்ரண்ட்ஸ் மக்கு" என மெல்ல ஆரம்பித்த புயல் தீவிரமைந்தபோது ஒரே ரணகளமானது வீடு. அவள் கைகளில் போனவை எல்லாம் பறந்தன.அழுகை என்றால் அப்படி ஒரு அழுகை. "அழுச்சுக்கலாண்டா" என்று என் அம்மா சமாதானப் படுத்த முயன்றபோது "ஓம் பையன ஸ்கேல்லயே அடிச்சு கொன்னுடுவேன். ஒழுங்கா இருக்க சொல்லு அப்பாயி" என்று தெரிக்கிறாள்.
இறுதியாய் விக்டோரியா வந்து அவளை சமாதானப் படுத்தும் விதமாக என்னைக் கடிந்து கொண்டு "எப்ப பாத்தாலும் நீங்க இப்படித்தான். புள்ளக் கிட்டயே வம்பு பன்னிக்கிட்டு. "என்றபோது அவள் கன்னம் சிவந்திருந்ததை பார்த்தேன் . உடனே சாரி விட்டு இனிப் பாப்பாவ மக்குன்னு சொல்ல மாட்டேன் என்றேன்.
"அப்பாதான் சாரி சொல்லிட்டான்ல. அழுவாதடா செல்லம் என்றவாறு அவளை தூக்கப் போன என் அம்மாவை தள்ளி விட்டு"லூசாப்பா நீ. என்னதானே மக்குன்ன அப்புறம் ஏன் ஏங்கிட்ட சாரி கேட்காம அம்மாக்கிட்ட சாரி கேக்குற"
அசந்தே போனேன். ஆமாம் மக்கு என அவளை அழைத்தது நான். அவள் காயப்பட்டிருக்கிறாள் என்று உணர்ந்ததும் நான் அவளிடம்தானே சாரி கேட்டிருக்க வேண்டும்.
அப்புறம் அவளிடம் சாரி கேட்டு ஒரு வழியாய் சமாதானம் அடைந்தவுடன் விட்டு ரப்பர் எடுத்து அதை அழிக்கப் போன போதும் அவளுக்கு கோபம் வந்தது. "
நீயா எழுதன ? அப்பாதான எழுதனார். அப்ப அப்பாதான அழிக்கனும்"என் மகளை இந்த மாதிரியான நியாயமான கோவங்களுக்காகவே ரசித்து மதிப்பேன் அல்லது மதித்து ரசிப்பேன்.
அன்று கீர்த்திக் குட்டியிடம் நான் கண்ட கோபத்தின் உச்சத்தைதான் இன்று முல்லையின் கோபத்தில் பார்க்கிறேன்.
இன்றைய முல்லையின் இந்த நியாயமான கோபத்தில் கீர்த்தியின் கோபத்தைக் காண்கிறேன்.
இப்படிக்கூட சொல்லலாம்

#340343- அமுதாபுதியவர்
- பதிவுகள் : 16
இணைந்தது : 12/07/2010
பதிவர்கள் உலகை கலக்கிய விசயம் ஈகரையில் வந்திருக்கிறது
முல்லை கீர்த்திக் குட்டிபோல் இருந்திருக்கக் கூடும் அல்லது கீர்த்திக் குட்டி முல்லை போல் வரக் கூடும்
#340386- இரா.எட்வின்கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
அமுதா wrote:பதிவர்கள் உலகை கலக்கிய விசயம் ஈகரையில் வந்திருக்கிறது
வரத்தானே வேண்டும்
முல்லை கீர்த்திக் குட்டி போல் இருந்திருக்கக் கூடும் அல்லது கீர்த்திக் குட்டி முல்லை போல் வரக்கூடும்
#344015- அமுதாபுதியவர்
- பதிவுகள் : 16
இணைந்தது : 12/07/2010
அன்று கீர்த்திக்கு வந்த கோபம் இருக்கிறதே இன்று நிணைத்தாலும் சிரிப்பு வருகிறது
முல்லை கீர்த்திக் குட்டி மாதிரி இருந்திருக்கக் கூடும் அல்லது கீர்த்திக் குட்டி முல்லை போல் வரக் கூடும்
#344272- இரா.எட்வின்கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
அமுதா wrote:அன்று கீர்த்திக்கு வந்த கோபம் இருக்கிறதே இன்று நிணைத்தாலும் சிரிப்பு வருகிறது
பேருந்தில் போகும்போது நிணைத்தாலும் அடக்க முடியாதபடி சிரிப்பு வருகிறது
முல்லை கீர்த்திக் குட்டி போல் இருந்திருக்கக் கூடும் அல்லது கீர்த்திக் குட்டி முல்லை மாதிரி வரக்கூடும் க்கூடு
#346262- ரவிசிதார்தன்புதியவர்
- பதிவுகள் : 9
இணைந்தது : 18/07/2010
இரா.எட்வின் wrote:முல்லை கீர்த்திக் குட்டி மாதிரி இருந்திருக்கக் கூடும்
அல்லது கீர்த்திக் குட்டி முல்லை மாதிரி வரக் கூடும்
இறங்கினேன் என்று சொன்னால் அது பொய். விழாத லாட்டரி சீட்டினை கசக்கி எறிவது மாதிரி சக பயணிகள் என்னை கீழே எறிந்தார்கள் என்றுதான் கொள்ள வேண்டும். சட்டையை கழற்றிப் பிழிந்தால் இரண்டு குவளை தேறும். அது தந்த எரிச்சலோடுதான் இரண்டு சக்கர வாகனத்தை எடுக்க கிளம்பினேன்.
தலைக் கவசத்தை அணியப் போன நேரம் அலை பேசி யுகமாயினி சித்தன் என்று எழுதிக் காட்டி செல்லமாய் சிணுங்கியது. "அது வந்து ரெண்டு விஷயம் எட்வின், ஒன்னு, நீங்க கல்கிக்கு அனுப்பியுள்ள காற்று வரும் பருவம் நாவல் விமர்சனத்த விரிவாக்கி எனக்கு அனுப்பிடுங்க. அத இந்த மாசம் வச்சுடுவோம். ரெண்டு, செந்தமிழனோட வலை தளத்த மெயில்ல இணைச்சிருக்கேன் . ரொம்ப நல்லா செய்றார். அவர் யாரு தெரியுமா? தோழர் மணியரசனோட பையன். அதுல ஒன்ன இந்த மாசம் வச்சுடலாம். அதுல இன்னொரு விஷயம் இருக்கு. அதப் பாத்துட்டு அதப் பத்தி கொஞ்சம் காலைல அவசியம் பேசுங்க."
கனிவென்றும் கொள்ளலாம், கட்டளையென்றும் கொள்ளலாம், இரண்டின் கலவையாகவும் கொள்ளலாம். இதுதான் சித்தன்.
தேவையான விஷயங்களை ஒன்று ஒன்றாய் கடகட வென்று சொல்லி முடித்து விட்டு சட்டென துண்டித்து விடும் வித்தையை அவரிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும். "ஏதோ சொல்ல வந்தேன். சட்டென வர மாட்டேங்குது. மறந்து போச்சு," என்பதெல்லாம் அவரிடம் கிடையவே கிடையாது. தேவைக்கு மேல் ஒரு வார்த்தை இருக்காது. பேசுவதற்கு முன் மனுஷன் ஒத்திகை பார்த்துவிட்டு வருவாரோ என்றுகூட எண்ணுவதுண்டு.
செம்மொழி மாநாட்டிற்குள் இதழைக் கொண்டு வந்துவிட வேண்டும் என்பதால் அவர் சுமக்கும் பளுவின் சுமை அறிந்தவன் என்பதால் இரண்டு வேலைகளையும் அன்றிரவே முடித்துவிடுவது என்று தீர்மானித்தேன். இணையத்திற்குள் நுழைந்து அவர் அனுப்பியிருந்த வலையைத் திறந்தேன். "காட்சி" என்ற தனது வலையை மிகுந்த கவனத்தோடும் அழகுணர்வோடும் வடிவைமைத்திருந்தார். நாமும்தான் வைத்திருக்கிறோம் வலையை. எப்படி மற்றவர்கள் பார்க்க வருவார்கள் என்று என்னை நானே நொந்து கொண்டே உள்ளே போனேன். "அது ஒரு பெரிய விஷயமே இல்ல எட்வின், அரை மணி நேரத்துல முடிச்சுடலாம்" என்று சொன்ன சித்தனுக்கும் இன்னும் நேரம் வாய்க்க வில்லை. நானும் அதற்கப்பறம் அது பற்றி பேசவே இல்லை என்பதையும் சொல்லத்தான் வேண்டும். சரி விடுங்கள். அதற்கெல்லாம் ஒரு அக்கறை வேண்டும்.
" கடவுள் உங்கள் வீட்டிற்கு வந்திருந்தாரா?" என்ற செந்தமிழனது பதிவைப் பார்த்ததும் அப்படியே மிரண்டு போனேன். தாத்தா பாட்டிகளின் வடிவில் கடவுள்களை கண்டுணர இயலாத நமது அறியாமையை, கீழ்மையை குழந்தைகளின் தளம் நின்று குழந்தைகளின் மொழி கொண்டு நச்சென்று நெய்திருந்தார்.
"திண்ணையிலிருந்த தாத்தா
வீட்டிற்குள் வந்தார்
படமாக" என்ற சேது மாதவனின் கவிதையையும் இந்தப் பதிவு என் அசைக்கு கொண்டு வந்தது.
எனது மிரட்சிக்கு இன்னொரு காரணமும் இருந்தது. அவரது "கடவுள் உங்கள் வீட்டிற்கு வந்திருந்தாரா?" என்ற இந்தக் கட்டுரையையும் எனது "சாமிக்கு சயின்ஸ் தெரியாது" என்ற கட்டுரையையும் இருவரது பெயரையும் போடாமல் சுற்றுக்கு விட்டால் இரண்டையுமே அவர் எழுதியதாக அவரது நண்பர்களும் நான் எழுதியதாக எனது நண்பர்களும் சத்தியமே செய்யக் கூடும்.
குழந்தைகளுக்கான வெளியும் மொழியும் எங்கள் இருவருக்கும் மிக நெருக்கமாய் வருகிறது.
" உளுந்து சாகுபடிக் காரனின் சாபம்" கட்டுரையை வாசித்தால் நேர்மையுள்ள யாராலும் வேறு எதற்கும் சட்டென கடந்துவிட முடியாது. உளுந்துப் பண்டங்கள் எதைத் தின்னும் போதும் உளுந்து சாகுபடியாளர்களின் வியர்வையும் செந்தமிழன் முகமும் நம்மை சபித்துக் கொண்டே இருக்கும். " உளுந்தின் நிறம் கருப்பு. உங்கள் வீட்டிற்கு வரும் போது தோல் உரிக்கப் பட்டிருக்கும்" என்று முடித்திருப்பார். அது குறித்து நிறையப் பேச வேண்டும்தான். அந்தக் கட்டுரையே "யுகமாயினி" ஜூலை இதழில் வருகிறது. அவசியம் வாசியுங்கள். செந்தமிழனைக் கடந்து போகும் தெம்பற்றவனானேன். சரி, விஷ்ணுபுரம் சரவணனோடு பேசலாம் என்று பார்த்தால் அவர் ஒரு இழவு வீட்டில் இருந்தார்.
மனம் போன போக்கில் எலி கொண்டு வலையோடு விளையாடிக் கொண்டிருந்தேன். எலி என்னை இழுத்துக் கொண்டுபோய் மாதவராஜின் "தீராத பக்கங்கள்" வலையில் தள்ளியது. வலையுலகை ரொம்பவும் வெப்பப் படுத்திக் கொண்டிருந்த ஒரு பிரச்சினை கண்ணில் பட்டது. பதிவுலகை கொந்தளிக்கச் செய்த அந்த பிரச்சினை குறித்த அரிச்சுவடிகூட தெரியாமல் இருந்திருக்கிறேன் பாருங்கள். இன்னும் கொஞ்சம் உன்னிப்பாய் கவனிக்க வேண்டுமென்று உறுதியேற்றேன்.
பதிவர் நர்சிம் தனது வலையில் தோழர் சந்தன முல்லைபற்றி ஆணாதிக்கத் திமிரோடு பதிந்தது பற்றியும், அது குறித்து நீண்ட விவாதங்கள் நடந்தது பற்றியும், இறுதியாய் நர்சிம் முல்லையின் கணவர் தோழர்.முகிலிடம் மன்னிப்பு கேட்டது பற்றியும், முல்லையிடமே அதை கேட்பதுதான் சரி என்று மாதவராஜ் ஆலோசனைத்திருந்ததையும் அறிய முடிந்தது.
இது ஓராண்டாகவே நீண்டு வருவதாக படுவதாலும் முல்லை எங்கு என்ன பின்னூட்டமிட்டார் என்பதும் தெரியாமல் நர்சிம் என்ன எழுதினார் என்பதும் தெரியாமல் அபிப்பிராயம் சொல்லக் கூடாது. தப்பித்தல் முயற்சியல்ல இது. சாராக் கொள்கையோடு நமக்கென்றும் உடன்பாடில்லை. யாவரும் நமக்கு கேளிருமல்ல. உழைப்பவனும் யோக்கியனும் மட்டுமே நமக்கு உறவாக முடியும்.
இந்த நேரத்தில் முல்லையின் வலை கிடைதது. "பூக்காரிகளுக்கும் தன் மானம் உண்டு" என்ற தனது பதிவில் (பூக்காரி என்ற புனைவில்தான் நர்சிம் முல்லையைக் காயப் படுத்தி இருந்தார் என்று சொல்லப் படுகிறது)
பதிவெழுத முகிலைக் கேட்டு நான் வரவில்லை.முகிலைக் கேட்டு கமெண்ட் போடவில்லை. அதற்கு அவசியமும் இல்லை.
சித்திரக்கூடத்திலும் பதிவுலகிலும் சந்தனமுல்லையாகவே முன்னிறுத்திக் கொண்டிருக்கிறேனே தவிர முகிலுடைய மனைவியாக அல்ல. நான் முகிலின் சொத்தோ கவுரவமோ அல்ல. அதைக் குறித்த தெளிவு என்னிடம் இருக்கிறது.
முகிலிடம் ஏன் மன்னிப்பு கேட்கிறீர்கள்?
இதன் மூலம் மனைவி, கணவனது சொத்து என்பதே திரும்ப நிறுவப்படுகிறது. கணவனும் மனைவியும் சேர்ந்த குடும்பத்தில் கணவன் அங்கமே தவிர, கணவன் என்றைக்கும் மனைவியை ரெப்ரசெண்ட் செய்ய முடியாது!
அப்படியே நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டுமென்றால், கேட்க வேண்டிய நபர் யாரைப் பற்றி புனைவெழுதி எல்லார் பதிவுகளிலும் ஒரு வருடமாக சீண்டி வருகிறேனென்று கமெண்ட்களிட்டு திரிந்தீர்களோ அவளிடம்.
ஏன், ஒரு பெண்ணிடம் மன்னிப்பு கேட்க உங்கள் ஈகோ பின்வாங்குகிறதா?
என்று கொதித்திருந்தார். பிரச்சினை என்னோடு என்கிறபோது அதில் உங்கள் பக்கம் தவறிருப்பதை உணர்ந்தவுடன் என்னிடம் கேட்காமல் மன்னிப்பை என் கணவரிடம் கேட்பதும் கேவலமான ஆணாதிக்கச் சிந்தனையன்றி வேறென்ன என்ற முல்லையின் வாதம் சரியெனப் படவே அந்த அதிகாலை மூன்று மணி வாக்கில் முல்லைக்கு பின்னூட்டமிட்டேன்.
இதில் முல்லையின் கோபம் பிடித்துப் போக இன்னொரு காரணமும் உண்டு.
இப்போது ஆறாவது படிக்கும் கீர்த்திக் குட்டி அப்போது மூன்றாவது படித்துக் கொண்டிருந்தாள். அவளது தமிழ் புத்தகத்தில் "கீர்த்தனா" என்று தனது பெயரை அழகாக எழுதியிருந்தாள். அதற்கு முன்னொட்டாகவோ, பின்னொ
ட்டாகவோ "மக்கு" என பென்சிலால் சேர்த்தேன். ஒன்று "மக்கு கீர்த்தனா" என்றோ அல்லது "கீர்த்தனா மக்கு" என்றோ வந்திருக்க வேண்டும்.
"நானா மக்கு?. நீ மக்கு, உங்க அப்பா மக்கு, உங்க மிஸ் மக்கு, உன்னோட ப்ரண்ட்ஸ் மக்கு" என மெல்ல ஆரம்பித்த புயல் தீவிரமைந்தபோது ஒரே ரணகளமானது வீடு. அவள் கைகளில் போனவை எல்லாம் பறந்தன.அழுகை என்றால் அப்படி ஒரு அழுகை. "அழுச்சுக்கலாண்டா" என்று என் அம்மா சமாதானப் படுத்த முயன்றபோது "ஓம் பையன ஸ்கேல்லயே அடிச்சு கொன்னுடுவேன். ஒழுங்கா இருக்க சொல்லு அப்பாயி" என்று தெரிக்கிறாள்.
இறுதியாய் விக்டோரியா வந்து அவளை சமாதானப் படுத்தும் விதமாக என்னைக் கடிந்து கொண்டு "எப்ப பாத்தாலும் நீங்க இப்படித்தான். புள்ளக் கிட்டயே வம்பு பன்னிக்கிட்டு. "என்றபோது அவள் கன்னம் சிவந்திருந்ததை பார்த்தேன் . உடனே சாரி விட்டு இனிப் பாப்பாவ மக்குன்னு சொல்ல மாட்டேன் என்றேன்.
"அப்பாதான் சாரி சொல்லிட்டான்ல. அழுவாதடா செல்லம் என்றவாறு அவளை தூக்கப் போன என் அம்மாவை தள்ளி விட்டு"லூசாப்பா நீ. என்னதானே மக்குன்ன அப்புறம் ஏன் ஏங்கிட்ட சாரி கேட்காம அம்மாக்கிட்ட சாரி கேக்குற"
அசந்தே போனேன். ஆமாம் மக்கு என அவளை அழைத்தது நான். அவள் காயப்பட்டிருக்கிறாள் என்று உணர்ந்ததும் நான் அவளிடம்தானே சாரி கேட்டிருக்க வேண்டும்.
அப்புறம் அவளிடம் சாரி கேட்டு ஒரு வழியாய் சமாதானம் அடைந்தவுடன் விட்டு ரப்பர் எடுத்து அதை அழிக்கப் போன போதும் அவளுக்கு கோபம் வந்தது. "
நீயா எழுதன ? அப்பாதான எழுதனார். அப்ப அப்பாதான அழிக்கனும்"என் மகளை இந்த மாதிரியான நியாயமான கோவங்களுக்காகவே ரசித்து மதிப்பேன் அல்லது மதித்து ரசிப்பேன்.
அன்று கீர்த்திக் குட்டியிடம் நான் கண்ட கோபத்தின் உச்சத்தைதான் இன்று முல்லையின் கோபத்தில் பார்க்கிறேன்.
இன்றைய முல்லையின் இந்த நியாயமான கோபத்தில் கீர்த்தியின் கோபத்தைக் காண்கிறேன்.
இப்படிக்கூட சொல்லலாம்
முல்லை கீர்த்திக் குட்டி மாதிரி இருந்திருக்கக் கூடும்
அல்லது கீர்த்திக் குட்டி முல்லை மாதிரி வரக் கூடும்
பதிவுலகில் என்ன நடந்தது
Re: முல்லை கீர்த்திக் குட்டி மாதிரி இருந்திருக்கக் கூடும் அல்லது கீர்த்திக் குட்டி முல்லை மாதிரி வரக் கூடும்
#346293அமுதா wrote:பதிவர்கள் உலகை கலக்கிய விசயம் ஈகரையில் வந்திருக்கிறது
திரு எட்வின் அவர்களின் படைப்புகள் அனைத்துமே வித்தியாசமான படைப்புகளே! அந்த வரிசையில் ”முல்லை கீர்த்திக் குட்டி மாதிரி இருந்திருக்கக் கூடும் அல்லது கீர்த்திக் குட்டி முல்லை மாதிரி வரக் கூடும்” சிறப்பானதாகவே அமைந்துள்ளது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: முல்லை கீர்த்திக் குட்டி மாதிரி இருந்திருக்கக் கூடும் அல்லது கீர்த்திக் குட்டி முல்லை மாதிரி வரக் கூடும்
#346467எட்வின்.....
முதல் வரியே சிந்தனாவாதின்னு காட்டுதுப்பா உங்களை....
இதற்கு முன்பும் உங்களின் ஒரு கவிதை படிச்சிருக்கேன்....பஸ்ஸுக்குள் நடக்கிற நடையே நீங்க போகும் இடத்தில் பாதி என்று அருமையா எழுதி இருந்தீங்க..
சித்தனுக்கும் உங்களுக்குமான உரையாடலை மிக அழகாக சொல்லி இருக்கீங்க... அதாவது சித்தனின் குணாதிசயமாக சொல்ல வந்த வார்த்தைகளை நறுக்கு தெறித்தாற்போல... நச் இந்த இடம்... இப்படிப்பட்டவரின் குணநலனை பற்றி சொல்லனும்னா சொல்லவந்ததை இழுத்து நம் நேரத்தையும் விரயம் செய்யாம அவருடைய நேரத்தையும் பொன்னா உபயோகிக்கிறார்னு தெரியுது.....
வீட்டில் இருக்கும் தாத்தா பாட்டியின் வடிவில் இறைவனை காண்போர் எத்தனை பேர் இருக்காங்க எட்வின்?
மனம் கனக்கும் எத்தனையோ நிகழ்வுகளை நான் பார்த்ததால் சொல்கிறேன்.. சொற்ப ஜனங்களே அப்படி இருக்காங்கப்பா.... வீட்டில் வயசானவங்க இருந்தால் டிவி சத்தம் ( அவங்களுக்கு காது கேட்கும் திறன் குறைந்திருப்பதால்) இரைச்சலா இருக்கு பாருங்க உங்க அம்மா அப்பாவை பிள்ளைக எப்படி படிப்பது இப்படியான குற்றச்சாட்டுகள் தொடங்கி பெரும் பிளவை உண்டாக்கும்
வலைத்தளம் நீங்க மட்டுமா எட்வின் நானும் தான்.... ஏன்னா வலைத்தளத்தை அழகா வெச்சுக்க தெரிஞ்சு நாம அதை செய்யாம இருப்போமா? தெரியலை அதான் அப்டியே இருப்பதே போதும்னு விட்டுட்டோம்...
உளுந்து சாகுபடி பற்றி படிக்கும்போது அவர்களின் உழைப்பையும் வியர்வையும் அறியாமல் இருக்க முடியாது என்று சொல்லி நச் நு முடிச்சிருப்பது அருமை... தோல் நிறம் கருப்பு ஆனால் வீட்டிற்கு வரும்போது அதன் தோலுரிந்து இருக்கும்...விவசாயிகளின் உழைப்பை அருகிருந்து காண்போர் அவர்களை நன்றியுடன் நினைப்பார்கள்.... பட்டினிச்சாவு கொடுமையும் நடந்ததே
முல்லையின் கம்பீரம் அவரை பற்றி படிக்கும்போதே உணரமுடிகிறது.... ஹப்ப்ப்பா எத்தனை தீட்சண்யம்..... என்னிடம் மன்னிப்பு கேட்க ஈகோ தடுக்கிறதா? உண்மை தானே? கரெக்ட் தானே? இதைப்பற்றி இன்னும் விஸ்தாரமாய் எழுதாமல் முல்லையின் குணாதிசயமும் கீர்த்திக்குட்டியின் குணாதிசயமும் ஒன்றென முடித்ததை பற்றி சொல்ல வருகிறேன்...
கீர்த்திப்பாப்பா இப்பவே இந்த அசத்து அசத்துறாளே... இனி கீர்த்திக்குட்டி வளர்ந்தப்பின் எப்படி இருப்பான்னு அவளுடைய செயல்களை படிக்கும்போதே உணரமுடிகிறது... கீர்த்திக்குட்டியின் இந்த குட்டி குட்டி கோவம் ரொம்ப பிடிச்சிருக்கிறது....
மிக அருமையான பகிர்வு எட்வின்.... அன்பு நன்றிகள் பகிர்வுக்குப்பா....

என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
முல்லை கீர்த்திக் குட்டி மாதிரி இருந்திருக்கக் கூடும் அல்லது கீர்த்திக் குட்டி முல்லை மாதிரி வரக் கூடும்
#347939- இரா.எட்வின்கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
சிவா wrote:அமுதா wrote:பதிவர்கள் உலகை கலக்கிய விசயம் ஈகரையில் வந்திருக்கிறது
திரு எட்வின் அவர்களின் படைப்புகள் அனைத்துமே வித்தியாசமான படைப்புகளே! அந்த வரிசையில் ”முல்லை கீர்த்திக் குட்டி மாதிரி இருந்திருக்கக் கூடும் அல்லது கீர்த்திக் குட்டி முல்லை மாதிரி வரக் கூடும்” சிறப்பானதாகவே அமைந்துள்ளது!
ரொம்பப் பெருந்தன்மை சிவா உங்களுக்கு.
மிக்க நன்றி
Re: முல்லை கீர்த்திக் குட்டி மாதிரி இருந்திருக்கக் கூடும் அல்லது கீர்த்திக் குட்டி முல்லை மாதிரி வரக் கூடும்
#352297- நூருல்லாபுதியவர்
- பதிவுகள் : 8
இணைந்தது : 23/07/2010
யார் யார் மாதிரி எல்லாம் அப்புறம். ரெண்டு பேருக்கும் இந்தக் கட்டுரை போனதா?
Re: முல்லை கீர்த்திக் குட்டி மாதிரி இருந்திருக்கக் கூடும் அல்லது கீர்த்திக் குட்டி முல்லை மாதிரி வரக் கூடும்
#0- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» தலைவலி அல்லது தலையிடி, மண்டையிடி என்பது நெற்றியில் அல்லது மண்டைக்குள் ஏற்படும் வலி
» வண்டலூர் பூங்காவில் 3 குட்டி போட்ட சிங்கம்: பிறக்கும் போது ஒரு குட்டி இறந்தது
» என் அன்பு காதலி தமிழ்செல்விக்காக குட்டி குட்டி கவிதைகள்…
» A1B- அல்லது A2B- அல்லது AB- இரத்தம் அவசர தேவை
» குட்டி கணனிக்கு குட்டி வைரஸ் – கணனிக்கல்வி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3