புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
30 வகை அதிசய சமையல் – கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார் இரத்தின சக்திவேல் Poll_c1030 வகை அதிசய சமையல் – கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார் இரத்தின சக்திவேல் Poll_m1030 வகை அதிசய சமையல் – கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார் இரத்தின சக்திவேல் Poll_c10 
96 Posts - 49%
heezulia

54 Posts - 28%
Dr.S.Soundarapandian

21 Posts - 11%
T.N.Balasubramanian

7 Posts - 4%
mohamed nizamudeen

prajai

3 Posts - 2%
JGNANASEHAR

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

Geethmuru

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
30 வகை அதிசய சமையல் – கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார் இரத்தின சக்திவேல் Poll_c1030 வகை அதிசய சமையல் – கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார் இரத்தின சக்திவேல் Poll_m1030 வகை அதிசய சமையல் – கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார் இரத்தின சக்திவேல் Poll_c10 
223 Posts - 52%

137 Posts - 32%

21 Posts - 5%

18 Posts - 4%

16 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

30 வகை அதிசய சமையல் – கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார் இரத்தின சக்திவேல்

avatar
azeezm
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 18/04/2010
http://azeezahmed.wordpress.com/

Postazeezm Sat Jul 10, 2010 11:57 pm

30 வகை அதிசய சமையல் – கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார் இரத்தின சக்திவேல்

30 வகை அதிசய சமையல் – கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார் இரத்தின சக்திவேல் P104”எப்பப் பாரு… ‘சமையல், சமையல்’னு அடுப்புல கெடந்தே
வேக வேண்டியிருக்கு. அட்லீஸ்ட், வாரத்துல ஒரு நாளாவது இந்த அடுப்புக்கு ஓய்வு
கொடுத்துட்டு, பச்சையா அரிசியை அள்ளி தின்னுட்டு ‘அக்கடா’னு உக்கார்ந்துடலாம் போல
இருக்கு…”

- இப்படி பல சமயங்களில் தோன்றும்தானே!

ஆனால், ”அடுப்பையே பத்த வைக்காம, வாய்க்கு ருசியான சாப்பாட்டை
தயாரிக்கற வழி இருக்கறப்ப, எதுக்காக இப்படியெல்லாம் யோசிக்கறீங்க?” என்று கேட்கும்
‘இயற்கை வழி சமையல்’ நிபுணர் இரத்தின சக்திவேல்… லட்டு, சாம்பார்,
ரசம், இட்லி, பிரியாணி எனறு வரிசையாக ரெசிபிகளை அள்ளிவிட… எல்லாமே மேஜிக் போல நம்மை
அதிசயத்தில் ஆழ்த்தின!

”நம்ம முன்னோர்கள், ‘மருந்தே உணவு, உணவே மருந்து’னு உலகத்துக்கே
முன்னோடியா வாழந்துட்டு இருந்தவங்க. இடையிலதான் பீட்ஸா, பர்கர், பாக்கெட்டுல
அடைச்சு விக்கிற சாப்பாடுனு சேர்த்துக்க ஆரம்பிச்சு, விதம்விதமான நோய்களுக்கும்
விருந்து வச்சுட்டோம். நான் சொல்ற இயற்கை ரெசிபிகளை அடிக்கடி செஞ்சு சாப்பிடுங்க.
உடம்பும் மனசும் எப்பவும் ஆரோக்கியமா இருக்கும்” என்று உத்தரவாதமும் கொடுத்தார்
இரத்தின சக்திவேல்.

அவர் கொடுத்த ரெசிபிகளை வைத்து, 30 வகையான உணவுகளை தயாரித்த பிரபல
சமையல் கலை நிபுணர் கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார், ”நம்மள சுத்தி
கிடைக்கற பொருட்கள வச்சே, எளிமையா இந்த ரெசிபிகள தயாரிக்க முடியும். கேஸ்,
எண்ணெய்னு பலதுக்கும் நாம செலவழிக்கற காசு மிச்சமாகறதோட, சமையல் அறை டென்ஷனும் போயே
போச்சு” என்று சந்தோஷம் பொங்கச் சொல்கிறார்.

பிறகென்ன தோழிகளே..? இயற்கையா சமைங்க… இளமையாவே இருங்க!

30 வகை அதிசய சமையல் – கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார் இரத்தின சக்திவேல் End_bar

பப்பாளிபழ பாயசம்

தேவையானவை: பப்பாளிபழம் (நறுக்கியது) – ஒரு கப்,
தேங்காய்ப்பால் – அரை கப், வெல்லம் (பொடித்தது) – அரை கப், முந்திரி, திராட்சை –
தலா 20, ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை.

30 வகை அதிசய சமையல் – கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார் இரத்தின சக்திவேல் P105

செய்முறை: நறுக்கிய பப்பாளியை மிக்ஸியில் போட்டு,
குறைந்த அளவு வேகத்தில் வைத்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த பழக் கலவையை
பாத்திரத்தில் விட்டு, அதில் தேங்காய்ப்பால், பொடித்த வெல்லம் (வெல்லத்துக்கு பதில்
தேன் சேர்த்துக் கொள்ளலாம்), முந்திரி, திராட்சை, ஏலகாய்த்தூள் சேர்த்து நன்கு
கலந்தால்… பப்பாளிபழப் பாயசம் ரெடி!

ஆப்பிள், மாம்பழம், அன்னாசி, வாழைப்பழம் ஆகிய பழங்களிலும் இதே
முறையில் பாயசம் செய்யலாம்.

குறிப்பு: மலச்சிக்கல், தொப்பை, பசியின்மை,
குடல்புண், உடல் சூடு போன்ற உடல் பிரச்னைகளைக் கட்டுப்படுத்தும் குணம் இந்த பழ
பாயசத்துக்கு இருக்கிறது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் இதைத் தவிர்க்கவும்.

30 வகை அதிசய சமையல் – கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார் இரத்தின சக்திவேல் End_bar

ஃப்ரூட்ஸ்\அவல் மிக்ஸ்

தேவையானவை: அவல் – அரை கிலோ, திராட்சை – 50 கிராம்,
நறுக்கிய கொய்யா, ஆப்பிள், பேரீச்சை, முந்திரி – ஒரு கப், பொடித்த வெல்லம் – 200
கிராம், ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, தேங்காய் துருவல் – ஒரு கப்.

30 வகை அதிசய சமையல் – கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார் இரத்தின சக்திவேல் P106

செய்முறை: அவலை கல் நீக்கி சுத்தம் செய்து
தண்ணீரில் கழுவிக் கொள்ளவும். திராட்சைப் பழத்தை நீரில் ஊற வைத்துக் கழுவிக்
கொள்ளவும். பேரீச்சையை கழுவி கொட்டை நீக்கி நறுக்கிக் கொள்ளவும். கழுவிய அவலுடன்
நறுக்கிய பழங்கள், திராட்சை, பொடித்த வெல்லம், ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல்
சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.

குறிப்பு: இது, அசிடிட்டி மற்றும் நெஞ்சு எரிச்சலை
சரிசெய்யும்.

30 வகை அதிசய சமையல் – கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார் இரத்தின சக்திவேல் End_bar

நேச்சுரல் லட்டு

தேவையானவை: முந்திரி – 200 கிராம், பாதாம்,
திராட்சை – தலா 100 கிராம், பிஸ்தா – 50 கிராம், பேரீச்சை – 250 கிராம் (கொட்டை
நீக்கியது), ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை.

30 வகை அதிசய சமையல் – கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார் இரத்தின சக்திவேல் P107

செய்முறை: பேரீச்சை, திராட்சையை நன்கு கழுவிக்
கொள்ளவும். முந்திரி, பாதாம், பிஸ்தாவை மிக்ஸியில் போட்டு, நன்றாக அரைத்து… கடைசிச்
சுற்றில் பேரீச்சை, திராட்சை, ஏலக்காய்த்தூள் சேர்த்து அரைக்கவும். அரைத்த இந்தக்
கலவை லேசான சூடுடன் இருக்கும்போதே, சிறு சிறு உருண்டைகளாகப் பிடிக்க… நேச்சுரல்
லட்டு தயார். ஒரு வாரம் வைத்திருந்து சாப்பிடலாம்.

குறிப்பு: நீண்ட நேரம் பசி தாங்கும் இந்த லட்டு,
உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்றது. குழந்தைகளுக்கு, மாலை நேர டிபனாக
கொடுக்கலாம்.

30 வகை அதிசய சமையல் – கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார் இரத்தின சக்திவேல் End_bar

avatar
azeezm
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 18/04/2010
http://azeezahmed.wordpress.com/

Postazeezm Sat Jul 10, 2010 11:58 pm

நெல்லிக்காய் சிப்ஸ்

தேவையானவை: முழு நெல்லிக்காய் – 100

செய்முறை: முழு நெல்லிக்காய்களை கழுவி, சிறு சிறு
துண்டுகளாக நறுக்கவும். பிறகு, அவற்றை மிதமான வெயிலில் 5-6 நாட்கள் காய வைத்து
எடுக்கவும். காய்ந்ததும், காற்றுப்புகாத டப்பாவில் போட்டு பத்திரப்படுத்தவும்.
இதனுடன் உப்பு, மிளகாய்த்தூள் எதுவும் சேர்க்காமல் சாப்பிடுவது நல்லது.

30 வகை அதிசய சமையல் – கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார் இரத்தின சக்திவேல் P108a

குறிப்பு: இளமையாக இருக்க வேண்டும் என்பவர்கள்
இதைத் தினமும் சாப்பிடலாம்; மூட்டு வலி, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தவறாமல்
சாப்பிட… நல்ல பலன் கிடைக்கும்.

30 வகை அதிசய சமையல் – கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார் இரத்தின சக்திவேல் End_bar

கோலா லட்டு

தேவையானவை: பச்சைப்பயறு, வேர்க்கடலை, கொண்டைக்கடலை,
சோயா பீன்ஸ், கோதுமை, கம்பு – தலா 100 கிராம், பொடித்த வெல்லம் – ஒரு கப், முந்திரி
– 20, ஏலக்காய்த்தூள் – சிட்டிகை.

30 வகை அதிசய சமையல் – கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார் இரத்தின சக்திவேல் P108

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள அனைத்து
தானியங்களையும் 8 மணி நேரம் ஊற வைத்து, தண்ணீரை வடிகட்டவும். பிறகு, ஈரத்துணியில்
கட்டி முளைகட்டவும். அந்த முளைகட்டிய தானியங்களை வெயிலில் உலர வைத்து. அரைக்கவும்.
வெல்லத்தை தண்ணீரில் கரைத்து, வடிகட்டி அதில் அரைத்த மாவு, முந்திரி,
ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து உருண்டைகளாகப் பிடிக்க.. கோலா லட்டு
தயார்!.

குறிப்பு: உடலில் வலுவில்லாதவர்கள் இதனை தொடர்ந்து
சாப்பிட… சக்தி பெறுவார்கள்.

30 வகை அதிசய சமையல் – கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார் இரத்தின சக்திவேல் End_bar

கோவைக்காய் ஊறுகாய்

தேவையானவை: கோவைக்காய் – கால் கிலோ, இஞ்சி – 100
கிராம், எலுமிச்சம்பழம் – 5, இந்துப்பு (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) –
தேவையான அளவு.

30 வகை அதிசய சமையல் – கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார் இரத்தின சக்திவேல் P109

செய்முறை: கோவைக்காயை கழுவி, சிறிய துண்டுகளாக
நறுக்கவும். இஞ்சியைத் தோல் சீவி, நறுக்கி மிக்ஸியில் அரைத்து சாறு பிழியவும்.
எலுமிச்சம்பழத்தை நறுக்கி, கொட்டை நீக்கி, சாறு பிழிந்தெடுக்கவும். இரண்டு
சாறுகளையும் ஒன்றாகக் கலந்து, நறுக்கிய கோவைக்காய், இந்துப்பு சேர்த்து பத்து
நிமிடங்கள் ஊற வைக்க… எண்ணெய் இல்லாத கோவைக்காய் ஊறுகாய் ரெடி!

குறிப்பு: இது சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த
நோய் உள்ளவர்களுக்கு ஏற்றது.

30 வகை அதிசய சமையல் – கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார் இரத்தின சக்திவேல் End_bar

கேரட் கீர்

தேவையானவை: கேரட் – அரை கிலோ, தேங்காய் துருவல் –
அரை கப், பொடித்த வெல்லம் – 200 கிராம், ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை.

30 வகை அதிசய சமையல் – கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார் இரத்தின சக்திவேல் P110a

செய்முறை: கேரட்டை கழுவி, நறுக்கி மிக்ஸியில்
போட்டு, கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைக்கவும். அரைத்த கலவையை வடிகட்டி சாறு எடுத்துக்
கொள்ளவும். தேங்காய் துருவலையும் அரைத்து வடிகட்டி, தேங்காய்ப்பால்
எடுக்கவும்.

வடிகட்டிய கேரட் ஜூஸ், தேங்காய்பால், பொடித்த வெல்லம்,
ஏலக்காய்த்தூள் எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் விட்டு நன்றாகக் கலந்து
பரிமாறவும்.

குறிப்பு: கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள், குடல்
புண், வயிற்றுப்புண் உள்ளவர்கள் சாப்பிட… நல்ல பலன் கிடைக்கும்.

30 வகை அதிசய சமையல் – கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார் இரத்தின சக்திவேல் End_bar

வொண்டர் ஃபுட்

30 வகை அதிசய சமையல் – கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார் இரத்தின சக்திவேல் P110தேவையானவை: பாசிப்பயறு – 200 கிராம், பொடித்த
வெல்லம் – 250 கிராம்.

செய்முறை: பாசிப்பயறை 8 மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு தண்ணீரை வடித்து ஈரத் துணியில் கட்டி வைக்கவும். அடுத்த எட்டு மணி நேரத்தில்
நன்கு முளை விட்டிருக் கும். முளைவிட்ட பாசிப்பயறை, மிக்ஸியில் போட்டு தண்ணீர்
விட்டு அரைத்து, பாலெடுக்கவும். பொடித்த வெல்லம் சேர்த்துக் கலந்து
பரிமாறவும்.

குறிப்பு: இதனை, நீரழிவு நோயாளிகள் வெல்லம்
சேர்க்காமல் சாப்பிடலாம். உடம்பில் சக்தியும், நல்ல அழகும் வேண்டும் என்று
எதிர்பார்ப்பவர்கள், காலை உணவாக தினமும் எடுத்துக் கொள்ளலாம். முளைகட்டிய பயிர்களை
ஆங்கிலத்தில் வொண்டர் ஃபுட் என்கிறார்கள்.

30 வகை அதிசய சமையல் – கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார் இரத்தின சக்திவேல் End_bar

நெல்லி ஜாமூன்

தேவையானவை: பெரிய நெல்லிக்காய் – 50, தேன் – ஒன்றரை
கிலோ, பனங்கற்கண்டு – அரை கிலோ.

30 வகை அதிசய சமையல் – கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார் இரத்தின சக்திவேல் P111செய்முறை: நெல்லிக்காயை நன்கு கழுவவும். பிறகு,
சுத்தமான ஊசியால்… ஒவ்வொரு நெல்லிகாய் முழுவதிலும் சிறு சிறு துளைகள் இடவும்.
கண்ணாடி பாட்டிலில் தேனை விட்டு, அதில் துளையிட்ட நெல்லிக்காய், பனங்கற்கண்டு
போட்டு ஊற விடவும். கண்ணாடிப் பாட்டிலின் மேல் பகுதியில், மெல்லிய காட்டன் துணியைக்
கட்டி.. வெயிலில் ஒரு வாரம் வரை வைத்தெடுத்தால், நெல்லி ஜாமூன் ரெடி!

குறிப்பு: முதுமையை விரட்டும் அற்புத மருந்து இது.
தினம் தவறாமல் சாப்பிட… உயர் ரத்த அழுத்தம், ஒபிஸிட்டி போன்ற பிரச்னைகளுக்குத்
தீர்வாக அமையும். சளி, இருமல், தலைவலி விலகும்; கண்பார்வை மேம்படும்.

30 வகை அதிசய சமையல் – கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார் இரத்தின சக்திவேல் End_bar

மேட்ச் ஸ்டிக் சாலட்

30 வகை அதிசய சமையல் – கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார் இரத்தின சக்திவேல் P112தேவையானவை: கேரட் – 2, தக்காளி – 2, வெள்ளரிக்காய்,
வெங்காயம் – தலா ஒன்று, முட்டைகோஸ் – 200 கிராம், வெண்பூசணி, புடலை, பீர்க்கங்காய்,
சௌசௌ, முள்ளங்கி, சுரைக்காய்… இவற்றில் எதாவது ஒன்று – 200 கிராம், தேங்காய்
துருவல் – அரை கப், எலுமிச்சம்பழம் – ஒன்று, மிளகுத்தூள், சீரகத்தூள் – ஒரு
டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, பொடித்த வெல்லம் – தேவையான
அளவு, பிளாக் சால்ட் (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) – தேவையான
அளவு.

செய்முறை: கொடுத்துள்ள எல்லா காய்கறிகளையும்
நன்றாகக் கழுவி, தீக்குச்சி போல் நறுக்கிக் கொள்ளவும். எலுமிச்சம்பழத்தை நறுக்கி
சாறு எடுக்கவும். நறுக்கிய காய்கறிகளுடன் மிளகுத்தூள், சீரகத்தூள், எலுமிச்சைச்
சாறு, நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, தேங்காய் துருவல், பொடித்த வெல்லம்,
பிளாக் சால்ட் சேர்த்துக் கலக்க… மேட்ச் ஸ்டிக் சாலட் தயார்!

குறிப்பு: உடல் சூடு, மூலம், மாதவிடாய் கோளாறுகளை
இது கட்டுப்படுத்தும். தொடர்ந்து சாப்பிட… இந்த உபாதைகள் நீங்கும்.

30 வகை அதிசய சமையல் – கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார் இரத்தின சக்திவேல் End_bar

காலிஃப்ளவர் கொத்சு

தேவையானவை: காலிஃப்ளவர் – 400 கிராம், தேங்காய்
துருவல் – ஒரு கப், வறுத்துப் பொடித்த வேர்க்கடலைத்தூள், பொட்டுக்கடலைத்தூள் – தலா
200 கிராம், மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – 2
டேபிள்ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, இந்துப்பு – தேவையான
அளவு.

30 வகை அதிசய சமையல் – கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார் இரத்தின சக்திவேல் P113

செய்முறை: காலிஃப்ளவரை சிறு சிறு பூக்களாக்கி,
கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். சுத்தம் செய்தவற்றை குச்சி போல் நீளவாக்கில்
நறுக்கிக் கொள்ளவும். தேங்காய் துருவலை, கொஞ்சம் தண்ணீர் விட்டு, துவையல் போல்
மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். நறுக்கிய காலிஃப்ளவர், தேங்காய் விழுது,பொடித்த
வேர்க்கடலைத்தூள், பொட்டுக்கடலைத்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், நறுக்கிய
கொத்தமல்லி, கறிவேப்பிலை எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு கலக்கவும்.
பிறகு, எலுமிச்சைச் சாறு, இந்துப்பு சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

குறிப்பு: நார்ச்சத்து நிறைந்த இந்த உணவு, ரத்தத்தை
சுத்தப்படுத்தும். வயிற்று உபாதைகளை சரிசெய்யும்.

30 வகை அதிசய சமையல் – கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார் இரத்தின சக்திவேல் End_bar

வெண்பூசணிக் கூட்டு

தேவையானவை: வெண்பூசணி – 500 கிராம், பாசிப்பருப்பு
– 50 கிராம், தேங்காய் துருவல் – ஒரு கப், வறுத்துப் பொடித்த பொட்டுக்கடலைத்தூள் –
முக்கால் கப், வறுத்துப் பொடித்த வேர்க்கடலைத்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன், முளைகட்டிய
தானியம் (ஏதாவது ஒருவகை பயறு) – கால் கப், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை –
சிறிதளவு, மிளகுத்தூள், சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன், இந்துப்பு – தேவையான
அளவு.

30 வகை அதிசய சமையல் – கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார் இரத்தின சக்திவேல் P114

செய்முறை: பாசிப்பருப்பை ஊற வைக்கவும்.
வெண்பூசணியைக் கழுவி தோல், கொட்டை நீக்கி தீக்குச்சி போல் நறுக்கிக் கொள்ளவும்.
நறுக்கிய காய் உட்பட கொடுக்கப்பட்டுள்ள எல்லா பொருட்களையும், ஒரு பாத்திரத்தில்
ஒவ்வொன்றாகச் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.

இதேபோல் சுரைக்காய், பீர்க்கங்காய், வெள்ளரி, வாழைத்தண்டு,
புடலங்காய் போன்ற அனைத்து நீர்சத்து காய்களிலும் செய்யலாம்.

குறிப்பு: இதை ரெகுலராக செய்து சாப்பிட்டு வர…
மூலவியாதி, அதனால் உண்டாகும் எரிச்சல் போன்றவை நீங்கும். முகம் பொலிவு
பெறும்.

30 வகை அதிசய சமையல் – கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார் இரத்தின சக்திவேல் End_bar

நேச்சுரல் தயிர்

30 வகை அதிசய சமையல் – கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார் இரத்தின சக்திவேல் P115தேவையானவை: தேங்காய்ப்பால் – ஒன்றரை கப்,
எலுமிச்சைச் சாறு – 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை: தேங்காய்ப்பாலுடன் எலுமிச்சைச் சாறு
சேர்த்துக் கலக்கவும். அதனை ‘ஹாட் பேக்’கில் விட்டு நன்கு மூடி வைக்க.. தயிர் போல்
உறைந்து விடும். இந்த நேச்சுரல் தயிரை நறுக்கிய பழங்களுடன் கலந்து
சாப்பிடலாம்.

குறிப்பு: இது, அடுப்பில் வைக்காத பால் என்பதால்
கொழுப்பு உண்டாகாது. நீரழிவு நோயைக் கட்டுப்படுத்தும். ஆஸ்துமா, சளி தொந்தரவை
நீக்கும்.

வெண்பூசணி அல்வா

தேவையானவை: வெண்பூசணி – அரை கிலோ, தேன் (அ) வெல்லம்
– 250 கிராம், பேரீச்சை – 100 கிராம், முந்திரி, திராட்சை – தலா 50 கிராம்,
ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, தேங்காய் துருவல் – அரை கப்.

30 வகை அதிசய சமையல் – கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார் இரத்தின சக்திவேல் P117a

செய்முறை: வெண்பூசணியை தோல் சீவி, கழுவி, துருவிக்
கொள்ளவும். பேரீச்சையை நன்கு கழுவி, கொட்டை நீக்கி, சிறிதாக நறுக்கவும். வெண்பூசணி
துருவலுடன் நறுக்கிய பேரீச்சை, தேன் (அ) பொடித்த வெல்லம், முந்திரி, திராட்சை,
ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும். இதேபோல்,
கேரட்டிலும் தயார் செய்யலாம்.

குறிப்பு: இது ஒபிஸிட்டி, அல்சர், மூலம், நீரிழிவு
நோய், கொலஸ்ட்ரால், தொப்பை, மூட்டுவலி பிரச்னைகளை சரி செய்யும். பித்தத்தை
சரிசெய்யும். சிறுநீரகக் கல் உள்ளவர்கள் இதை சாப்பிட்டால், பலன்
கிடைக்கும்.

எள்ளுருண்டை லட்டு

30 வகை அதிசய சமையல் – கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார் இரத்தின சக்திவேல் P116தேவையானவை: வறுத்த எள் – 400 கிராம், திராட்சை – 100
கிராம், பேரீச்சை – 300 கிராம், முந்திரி – 50 கிராம், ஏலக்காய்த்தூள் – ஒரு
சிட்டிகை.

செய்முறை: எள்ளை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்.
பேரீச்சையின் கொட்டையை நீக்கவும். திராட்சை, பேரீச்சையைக் கழுவவும். எள்ளை,
மிக்ஸியில் பொடித்து.. திராட்சை, பேரீச்சை சேர்த்து மீண்டும் அரைக்கவும். பிறகு,
அதனுடன் ஏலக்காய்த்தூள், முந்திரி சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக
உருட்டவும்.

குறிப்பு: பாலூட்டும் தாய்மார்களுக்கும், உடல்
இளைத்து இருப்பவர்களுக்கு இது மிகவும் நல்லது.

நொறுக்ஸ் அவல்

தேவையானவை: அவல் – அரை கிலோ, வறுத்த வேர்க் கடலை –
50 கிராம், பொட்டுக்கடலை – 100 கிராம், பொடித்த வெல்லம் – 100 கிராம்.

30 வகை அதிசய சமையல் – கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார் இரத்தின சக்திவேல் P117

செய்முறை: அவலை கல் நீக்கி சுத்தம்
செய்துகொள்ளவும். கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒரு பாத்திரத்தில்
ஒன்று சேர்த்து, கலந்து பரிமாறவும். காரம் வேண்டுபவர்கள், நறுக்கிய குடமிளகாய்,
மிளகுத்தூள், சீரகத்தூள், இந்துப்பு சேர்த்தும் சாப்பிடலாம்.

குறிப்பு: குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் மாலை
நேர டிபனாக சாப்பிடக் கொடுக்கலாம்.

சீரியல்ஸ்\பல்ஸஸ் ஹெல்த் டிரிங்க்

30 வகை அதிசய சமையல் – கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார் இரத்தின சக்திவேல் P118தேவையானவை: கேழ்வரகு, கோதுமை – தலா 250 கிராம்,
கம்பு – 150 கிராம், பச்சைப்பயறு – 100 கிராம், கொண்டைக்கடலை – 100 கிராம், கொள்ளு
– 50 கிராம், வெல்லம் (அ) தேன் – தேவையான அளவு, ஏலக்காய்த்தூள் – ஒரு
சிட்டிகை.

செய்முறை: தானியங்கள் அனைத்தையும் சுத்தம் செய்து,
8 மணிநேரம் ஊற வைக்கவும். நீரை வடித்து, துணியில் கட்டி வைக்க, முளைவிடும்.
முளைவிட்டதும், அவற்றை நன்கு உலர வைத்து அரைக்கவும். அரைத்த மாவை ஈரமில்லாத
பாட்டிலில் பத்திரப்படுத்தவும்.

தேவைப்படும்போது, ஒரு டம்ளர் தண்ணீரில் ஒன்று அல்லது இரண்டு டீஸ்பூன்
மாவு கலந்து… வெல்லம் அல்லது தேன், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலந்து
பரிமாறவும். காரம் வேண்டும் என்பவர்கள், வெல்லத்துக்கு பதிலாக மிளகுத்தூள், பிளாக்
சால்ட் கலந்து பருகலாம். சூடாக சாப்பிட விரும்புபவர்கள்… தண்ணீரில் மாவைக் கரைத்து
நன்கு சூடு செய்து வெல்லம் அல்லது மிளகுத்தூள் கலந்து பருகலாம்.

குறிப்பு: இந்த பானம் உடலை வலுவடைய செய்யும். சத்து
இல்லாத குழந்தைகளுக்கு இதனை ரெகுலர் உணவாகத் தர… சக்தி கிடைக்கும்.

அவல் மிக்ஸர்

தேவையானவை: அரிசி அவல் (அ) சோள அவல் – அரை கிலோ,
தேங்காய் துருவல் – அரை கப், நறுக்கிய குடமிளகாய் – ஒன்று, வறுத்து, தோல் நீக்கிய
வேர்க்கடலை – 50 கிராம், பொரி – 100 கிராம், பொட்டுக்கடலை – 100 கிராம், பொடித்த
வெல்லம் – 250 கிராம், மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், இந்துப்பு –
தேவையான அளவு.

30 வகை அதிசய சமையல் – கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார் இரத்தின சக்திவேல் P119

செய்முறை: அவலை கல் நீக்கி சுத்தப்படுத்தவும்.
சுத்தப்படுத்திய அவலை, ஒரு பாத்திரத்தில் போட்டு… அதனுடன் வறுத்து, தோல் நீக்கிய
வேர்க்கடலை, பொரி, நறுக்கிய குடமிளகாய், பொட்டுக்கடலை, பொடித்த வெல்லம், தேங்காய்
துருவல், மிளகுத்தூள், சீரகத்தூள், இந்துப்பு சேர்த்து நன்கு கலந்து
பரிமாறவும்.

குறிப்பு: மாலை நேர டிபனாகவும் பயணத்தின்போது
நொறுக்குத் தீனியாகவும் சாப்பிடலாம். மணிபர்சுக்கும், உடல் நலத்துக்கும் சேஃபானது
இது!

30 வகை அதிசய சமையல் – கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார் இரத்தின சக்திவேல் End_bar

வெஜிடபிள் இட்லி

30 வகை அதிசய சமையல் – கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார் இரத்தின சக்திவேல் P120aதேவையானவை: அவல் – அரை கிலோ, முளைகட்டி, உலர வைத்த
கோதுமை – 200 கிராம், தேங்காய் துருவல் – ஒன்றரை கப், பிளாக் சால்ட் – தேவையான
அளவு.

செய்முறை: முளைகட்டி, உலர வைத்த கோதுமையை
மிக்ஸியில் அரைக்கவும். அவலை கல் நீக்கி சுத்தம் செய்து, தண்ணீரில் ஊற விடவும்.
ஊறியதும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த கோதுமை, அவலுடன் தேங்காய் துருவல், பிளாக் சால்ட் சேர்த்து
இட்லி மாவு பதத்தில் கலந்து கொள்ளவும். இட்லித் தட்டில் மெல்லிய துணி விரித்து,
இந்த மாவை இட்லி போல் விடவும். 10 நிமிடம் கழித்து… துணியிலிருந்து மெதுவாக இதனைப்
பிரித்தெடுக்க… நேச்சுரல் இட்லி தயார். இதனுடன் காய்கறிகள் சேர்த்தும்
செய்யலாம்.

குறிப்பு: இதற்குத் தொட்டுக்கொள்ள இயற்கை சாம்பார்
ஏற்றது.

30 வகை அதிசய சமையல் – கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார் இரத்தின சக்திவேல் End_bar

ஸ்டஃப்டு பேரீச்சை

30 வகை அதிசய சமையல் – கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார் இரத்தின சக்திவேல் P120தேவையானவை: பேரீச்சை – அரை கிலோ, முந்திரி – 250
கிராம், தேன் – 200 கிராம்.

செய்முறை: முந்திரியை தேனில் ஒரு நாள் முழுவதும் ஊற
விடவும். பேரீச்சையைக் கழுவி உலர விடவும். பிறகு, நீளவாக்கில் கீறி கொட்டையை
மெதுவாக நீக்கி விடவும். கொட்டை நீக்கப்பட்ட பேரீச்சைக்குள் தேனில் ஊற வைத்த
முந்திரியை ஸ்டஃப் செய்யவும். இதுபோல் ஒவ்வொரு பேரீச்சை யிலும் ஸ்டஃப் செய்ய
வும்.

குறிப்பு: ரத்தசோகையை நீக்கும் நல்ல மருந்து இது.
உடல் எடையை அதிகரிக்க விரும்புவர்கள் இதனை தினமும் சாப்பிடலாம்.

கொத்தமல்லி\அவல் மிக்ஸ் மீல்ஸ்

30 வகை அதிசய சமையல் – கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார் இரத்தின சக்திவேல் P121தேவையானவை: அவல் – 600 கிராம், தேங்காய் துருவல் –
அரை கப், கொத்தமல்லி – ஒரு கட்டு, கறிவேப்பிலை – இரண்டு கைப்பிடியளவு, வெங்காயம்,
குடமிளகாய் – தலா 2, மிளகுத்தூள், சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன், முந்திரி – 100
கிராம், இந்துப்பு – தேவையான அளவு.

செய்முறை: அவலை கல் நீக்கிச் சுத்தம் செய்து கழுவி
தண்ணீரை வடிக்கவும். சுத்தம் செய்த கொத்தமல்லி, கறிவேப்பிலையை மிக்ஸியில் போட்டு
அரைத்து… கெட்டியாக சாறு எடுக்கவும். குடமிளகாயை சிறிய துண்டுகளாக
நறுக்கவும்.

கழுவிய அவலுடன் அரைத்தெடுத்த கொத்தமல்லி – கறிவேப்பிலை சாறு
சேர்த்துக் கலக்கவும். அதனுடன் முந்திரி, நறுக்கிய வெங்காயம், குடமிளகாய்,
மிளகுத்தூள், சீரகத்தூள், தேங்காய் துருவல், இந்துப்பு சேர்த்து, நன்கு கலந்து
பரிமாறவும்.

நேச்சுரல் பிரியாணி

30 வகை அதிசய சமையல் – கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார் இரத்தின சக்திவேல் P122தேவையானவை: அரிசி அவல் – 250 கிராம், முளை கட்டி,
உலர வைத்த கோதுமை – 250 கிராம், வெங்காயம் – 2, கேரட், தக்காளி – தலா 3,
முட்டைகோஸ், பீன்ஸ், வெண்பூசணி, புடலங்காய், சௌசௌ – தலா 100 கிராம், வெள்ளரி – 2,
உருளைக்கிழங்கு, குடமிளகாய் – தலா 1, மாதுளை முத்துக்கள் – அரை கப், முளைகட்டிய
பாசிப்பயறு – 50 கிராம், முளை கட்டிய வேர்க்கடலை – 100 கிராம், முளைகட்டிய எள் – 50
கிராம், முந்திரி, திராட்சை – தலா 100 கிராம், மிளகுத்தூள், சீரகத்தூள் தலா ஒரு
டீஸ்பூன், பட்டை – 2, கிராம்பு – 3, ஏலக்காய் – 4, நறுக்கிய கறிவேப்பிலை,
கொத்தமல்லி, புதினா – சிறிதளவு, எலுமிச்சைச் சாறு- 2 டேபிள்ஸ்பூன், தேங்காய்
துருவல் – ஒரு கப், இஞ்சி – 50 கிராம், இந்துப்பு – தேவையான அளவு.

செய்முறை: அவலை கல் நீக்கி சுத்தம் செய்து,
மிக்ஸியில் ரவையாக அரைக்கவும். முளைகட்டி உலர வைத்த கோதுமையையும் ரவையாக
அரைக்கவும். ரவையாக அரைத்த அவல், கோதுமையை தண்ணீரில் கழுவி, தண்ணீரை வடித்து… ஊற
வைக்கவும். இஞ்சியைத் தோல் சீவி பொடிப் பொடியாக நறுக்கவும். முந்திரி, திராட்சையைக்
கழுவி 10 நிமிடம் ஊற விடவும்.

ஒரு பாத்திரத்தில், ஊற வைத்த ரவையாக அரைத்த அவல், கோதுமையுடன்
நறுக்கிய காய்கறிகள், நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, பொடிப் பொடியாக
நறுக்கிய இஞ்சி, முளை கட்டிய தானியங்கள், தேங்காய் துருவல், முந்திரி, திராட்சை,
மாதுளை முத்துக்கள், மிளகுத்தூள், சீரகத்தூள், பட்டை, கிராம்பு, ஏலக்காய்,
எலுமிச்சைச் சாறு, இந்துப்பு அனைத்தையும் ஒவ்வொன்றாகச் சேர்த்து நன்கு கிளற…
நேச்சுரல் பிரியாணி ரெடி!

30 வகை அதிசய சமையல் – கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார் இரத்தின சக்திவேல் End_bar

எலுமிச்சை\அவல் மிக்ஸ் மீல்ஸ்

30 வகை அதிசய சமையல் – கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார் இரத்தின சக்திவேல் P123தேவையானவை: அவல் – 600 கிராம், எலுமிச்சைச் சாறு – 3
டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் – ஒரு கப், வெங்காயம், குடமிளகாய் – தலா 2, பொடியாக
நறுக்கிய இஞ்சி – ஒரு டீஸ்பூன், பூண்டு – 5 பல், வறுத்த வேர்க்கடலை – 200 கிராம்,
மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை –
சிறிதளவு, இந்துப்பு – தேவையான அளவு.

செய்முறை: அவலை கல் நீக்கி சுத்தம் செய்து, கழுவி
தண்ணீரை வடித்து ஊற வைக்கவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். பூண்டு, இஞ்சியை
தோல் நீக்கி, பொடியாக நறுக்கவும்.

ஊற வைத்த அவலுடன் எலுமிச்சைச் சாறு, தேங்காய் துருவல், வறுத்துத்
தோல் நீக்கிய வேர்கடலை, நறுக்கிய வெங்காயம், குடமிளகாய், இஞ்சி, பூண்டு,
கொத்தமல்லி, கறிவேப்பிலை, மிளகுத்தூள், சீரகத்தூள், இந்துப்பு கலந்து நன்கு கிளறி
பரிமாறவும்.

30 வகை அதிசய சமையல் – கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார் இரத்தின சக்திவேல் End_bar

பீட்ரூட் ஊறுகாய்

30 வகை அதிசய சமையல் – கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார் இரத்தின சக்திவேல் P124தேவையானவை: பீட்ரூட் துருவல் – ஒரு கப், இஞ்சி – 100
கிராம், எலுமிச்சம்பழம் – 10, இந்துப்பு – தேவையான அளவு.

செய்முறை: இஞ்சியைத் தோல் சீவி, சிறு துண்டுகளாக
நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். எலுமிச்சம்பழத்தை
நறுக்கி, கொட்டை நீக்கி சாறு எடுத்துக் கொள்ளவும். இரண்டு சாறுகளையும் ஒன்றாகக்
கலந்து, அதில் பீட்ரூட் துருவல், இந்துப்பு சேர்த்துக் கலந்து… 10 நிமிடம் ஊற
வைக்கவும். இதே முறையில் கேரட்டிலும் செய்யலாம்.

குறிப்பு: இந்த ஊறுகாய்… ஜீரணக் கோளாறு, வயிற்று
வலி, வயிற்றுப் பொருமல் போன்ற உபாதைகளை சரிசெய்யும். கொலஸ்ட்ராலைக்
கட்டுப்படுத்தும் என்பது கூடுதல் சிறப்பு.

இயற்கை சாம்பார்

தேவையானவை: பாசிப்பருப்புப் பொடி, துவரம்பருப்புப்
பொடி – தலா 100 கிராம், நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி – கைப்பிடியளவு, சாம்பார்
பொடி – ஒரு டீஸ்பூன், தக்காளி – 200 கிராம், குடமிளகாய் – 2, எலுமிச்சைச் சாறு –
ஒரு டேபிள்ஸ்பூன், வெங்காயம் – ஒன்று, தேங்காய் துருவல் – ஒரு கப், முட்டைகோஸ்,
வெண்பூசணி – தலா 100 கிராம், கேரட் – 200 கிராம், குடமிளகாய் – 2, சீரகத்தூள் – அரை
டீஸ்பூன், பூண்டு – 3, இஞ்சி – சிறிய துண்டு, பிளாக் சால்ட் – தேவையான
அளவு.

30 வகை அதிசய சமையல் – கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார் இரத்தின சக்திவேல் P125செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள காய்கறிகளை சுத்தம்
செய்து துருவிக் கொள்ளவும். அல்லது தீக்குச்சி போல் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை
அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். குடமிளகாய், பூண்டு, நறுக்கிய கொத்தமல்லி,
கறிவேப்பிலை, இஞ்சியை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். தேங்காய் துருவலையும்
தனியே அரைத்துக் கொள்ளவும். பாசிப்பருப்புப் பொடி, துவரம்பருப்புப் பொடியை தேவையான
அளவுத் தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும். அதனுடன் காய்கறி துருவல், அரைத்த தேங்காய்
விழுது, சாம்பார் பொடி, அரைத்த கொத்தமல்லி, கறிவேப்பிலை விழுது, சீரகத்தூள்,
எலுமிச்சைச் சாறு, பிளாக் சால்ட் போட்டு கலக்கினால் இயற்கை சாம்பார் தயார்.

குறிப்பு: இதனை அவல் சாதம், நேச்சுரல் இட்லிக்குத்
தொட்டுக் கொள்ளலாம்.

இயற்கை ரசம்

தேவையானவை: தக்காளி – அரை கிலோ, ரசப்பொடி – ஒன்றரை
டீஸ்பூன், மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி,
கறிவேப்பிலை – சிறிதளவு, தோலுரித்த பூண்டு – 5 பல், பிளாக் சால்ட் – தேவையான
அளவு.

30 வகை அதிசய சமையல் – கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார் இரத்தின சக்திவேல் P126செய்முறை: தக்காளியை நன்கு கழுவி, அரைத்து சாறு
எடுத்து தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.

நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, தோலுரித்த பூண்டு ஆகியவற்றை
ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். அரைத்த கலவையுடன் ரசப்பொடி, சீரகத்தூள்,
மிளகுத்தூள், பிளாக் சால்ட் எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலக்கவும். இந்தக்
கலவையை தக்காளிச் சாறுடன் சேர்த்து மீண்டும் ஒருமுறை கலக்க… இயற்கை ரசம்
ரெடி!

குறிப்பு: தக்காளிக்குப் பதிலாக எலுமிச்சைச் சாறு
அல்லது புளிக்கரைசல் உபயோகித்தும் செய்யலாம்.

30 வகை அதிசய சமையல் – கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார் இரத்தின சக்திவேல் End_bar

avatar
azeezm
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 18/04/2010
http://azeezahmed.wordpress.com/

Postazeezm Sun Jul 11, 2010 12:06 am

தக்காளி\அவல் ஜீமிக்ஸ் மீல்ஸ்

30 வகை அதிசய சமையல் – கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார் இரத்தின சக்திவேல் P127தேவையானவை: அவல் – 600 கிராம், தக்காளி – 2 கிலோ,
தேங்காய் துருவல் – ஒரு கப், வெங்காயம் – 2, மிளகுத்தூள், சீரகத்தூள் – ஒரு
டீஸ்பூன், முந்திரி – 100 கிராம், நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு,
பூண்டு – 3 பல், பொடியாக நறுக்கிய இஞ்சி – ஒரு டீஸ்பூன், பிளாக் சால்ட் – தேவையான
அளவு.

செய்முறை: அவலை கல் நீக்கி சுத்தம் செய்து..
தண்ணீர் விட்டுக் கழுவி வடிகட்டவும். தக்காளியை நன்றாகக் கழுவி மிக்ஸியில் போட்டுக்
கெட்டியாக அரைத்து… சாறு எடுத்துக் கொள்ளவும். அல்லது தக்காளியை பொடியாக நறுக்கிக்
கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் கழுவிய அவல், தக்காளிச் சாறு அல்லது தக்காளித்
துண்டுகள், தேங்காய் துருவல், நறுக்கிய வெங்காயம், நறுக்கிய கறிவேப்பிலை,
கொத்தமல்லி, நசுக்கிய பூண்டு, இஞ்சி சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு மிளகுத்தூள்,
சீரகத்தூள், முந்திரி, பிளாக் சால்ட் சேர்த்துக் கலந்து பரிமாறவும். இதற்குத்
தொட்டுக் கொள்ள பச்சடி ஏற்றது.

குறிப்பு: மதிய உணவாக இதனை எடுத்துக் கொள்ளலாம்.
குறைந்த கலோரி உணவு இது.

30 வகை அதிசய சமையல் – கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார் இரத்தின சக்திவேல் End_bar

இஞ்சி ஜாம்

30 வகை அதிசய சமையல் – கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார் இரத்தின சக்திவேல் P128தேவையானவை: தேன் – அரை கிலோ, இஞ்சி – அரை கிலோ,
பேரீச்சை – 250 கிராம், பனங்கற்கண்டு – 200 கிராம்.

செய்முறை: இஞ்சியை தோல் நீக்கிக் கழுவி, பொடிப்
பொடியாக நறுக்கவும். ஒரு பாட்டிலில் தேன் விட்டு அதில் நறுக்கிய இஞ்சியை ஊற
வைக்கவும். பேரீச்சையைக் கழுவி, கொட்டை நீக்கி, பொடியாக நறுக்கவும். நறுக்கிய
பேரீச்சை, பனங்கற்கண்டு ஆகியவற்றை தேனில் ஊறும் இஞ்சியுடன் கலக்கவும். அந்த
பாட்டிலின் வாயை மெல்லிய காட்டன் துணியால் கட்டவும். இதனை, ஒருவாரம் வெயிலில்
வைத்து எடுத்து, சாப்பிடவும்.

குறிப்பு: வயிற்று வலி, வயிற்று பூச்சி, ஜீரணக்
கோளாறு, மலச்சிக்கல், சளி, இருமல் தொல்லைகளுக்கு சிறந்தது இஞ்சி ஜாம்.

30 வகை அதிசய சமையல் – கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார் இரத்தின சக்திவேல் End_bar

ஸ்டஃப்டு டமாட்டர்

30 வகை அதிசய சமையல் – கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார் இரத்தின சக்திவேல் P129தேவையானவை: தக்காளி – 10, பொட்டுக்கடலை – 50 கிராம்,
வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை – 50 கிராம், தேங்காய் துருவல் – கால் கப்,
நறுக்கிய கொத்தமல்லி, புதினா, மிளகுத்தூள், சீரகத்தூள், பிளாக் சால்ட் –
சிறிதளவு

செய்முறை: பொட்டுக்கடலை, வேர்க்கடலை, தேங்காய்
துருவல், மிளகுத்தூள், சீரகத்தூள், பிளாக் சால்ட் எல்லவற்றையும் மிக்ஸியில் போட்டு
கொஞ்சம் நீர் விட்டுக் கெட்டியாக அரைக்கவும். தக்காளியை நன்கு கழுவி, அதன் மேல்
பக்கத்தில் கீறவும். அதற்குள் அரைத்த கலவையை வைத்து, மேலே நறுக்கிய கொத்தமல்லி,
புதினா தூவி பரிமாறவும்.

குறிப்பு: இதை அடிக்கடி செய்து சாப்பிட ரத்த சோகை
விலகி, இளமை மேம்படும். உடல் தொப்பை, கொலஸ்ட்ரால், அதிக உடல் எடையை
சரிசெய்யும்.

30 வகை அதிசய சமையல் – கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார் இரத்தின சக்திவேல் End_bar

முட்டைகோஸ் பொரியல்

30 வகை அதிசய சமையல் – கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார் இரத்தின சக்திவேல் P130தேவையானவை: முட்டைகோஸ் துருவல் – ஒன்றரை கப், கேரட்
துருவல் – கால் கப், தேங்காய் துருவல் – அரை கப், வறுத்து, தோல் நீக்கிய வேர்க்கடலை
– 200 கிராம், முந்திரி – 50 கிராம், மிளகுத்தூள், சீரகத்தூள், நறுக்கிய
கொத்தமல்லி, புதினா, இந்துப்பு – சிறிதளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் முட்டைக்கோஸ் துருவல்,
கேரட் துருவல், தேங்காய் துருவல், முந்திரி, வேர்க்கடலை, மிளகுத்தூள், சீரகத்தூள்,
நறுக்கிய கொத்தமல்லி, புதினா எல்லாவற்றையும் ஒவ்வொன்றாகச் சேர்த்து நன்கு
கலக்கவும். பிறகு, இந்துப்பு சேர்த்து மீண்டும் ஒருமுறை நன்கு கலந்து
பரிமாறவும்.

குறிப்பு: உடல் எடை, வியர்வை நாற்றம்,
வாயுத்தொல்லை, அல்சர், குடல் புண், முகப்பரு போன்ற பிரச்னை உள்ளவர்கள் இதைத்
தொடர்ந்து சாப்பிட்டு வர… குணமடைவார்கள்
.
30 வகை அதிசய சமையல் – கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார் இரத்தின சக்திவேல் End_bar
நன்றி:- சமையல் கலை நிபுணர் கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார்
நன்றி:- சமையல் கலை நிபுணர் இரத்தின சக்திவேல்
நன்றி:- அ.வி
30 வகை அதிசய சமையல் – கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார் இரத்தின சக்திவேல் End_bar
மற்ற சமையல் படைப்புக்கள்
அட்டகாசமான
சுவையில் 30 நாள்… 30 மசாலா குருமா! – ரேவதி சண்முகம்

30 நாள் 30
பொரியல் வாவ்! கலக்கல் வெரைட்டிங்க! – ரேவதி சண்முகம்.

30 வகை டயட்
சமையல் வெரைட்டியா சாப்பிடலாம். வெயிட்டையும் குறைக்கலாம்.- கா.கதிரவன்

கோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ், ஸ்குவாஷ்
மில்க் ஷேக்!-சமந்தகமணி

30
நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம் – சமையல் திலகம் ரேவதி சண்முகம்

PART-1 கிராமத்து
கைமணம்! சோளச்சோறு சுக்கு மோர்க்குழம்பு கொள்ளு துவையல் – ரேவதி சண்முகம்

PART-2 கிராமத்து
கைமணம்! நவதான்ய உருண்டை கம்புரொட்டி எள்ளுப்பொடி காராமணி கீரைத்தண்டு குழம்பு-
ரேவதி சண்முகம்

PART-3 கிராமத்து
கைமணம்! மாங்காய் பாசிப் பருப்பு பச்சடி பால் கொழுக்கட்டை காப்பரிசி –
ரேவதி சண்முகம்

PART-4 கிராமத்து
கைமணம்! முள் முருங்கை அடை, பாசிப்பருப்பு சீயம், சீம்பால் திரட்டு-
ரேவதி சண்முகம்

PART-5 கிராமத்து கைமணம்! மரவள்ளிக் கிழங்கு புட்டு, தட்டைப் பயிறு
அடை,கருப்பட்டி பணியாரம், உளுந்து பலகாரம் – ரேவதி சண்முகம்

பகுதி-06 கிராமத்து கைமணம்! பருப்பிட்ட பணியாரம், சர்க்கரைவள்ளிக்
கிழங்கு சீயம், புழுங்கல் அரிசி கொழுக்கட்டை, பப்பாளிக்காய் வடை

பகுதி-07 கிராமத்து கைமணம் நவரத்தின குருமா, கருப்பட்டி ஆப்பம்,
ஜவ்வரிசி பொரி, நீர் கொழுக்கட்டை

பகுதி-08
கிராமத்து கைமணம் பூண்டு கஞ்சி, மரவள்ளிக் கிழங்கு கார பணியாரம்,
உளுந்து களி

30
வகை எண்ணெய் இல்லாத சமையல் – சமையல் கலை நிபுணர் ரேவதி சண்முகம்

30 வகை அதிசய சமையல் – கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார் இரத்தின சக்திவேல் End_bar

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக