புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூன்றாம் காமத்துப்பால் Poll_c10மூன்றாம் காமத்துப்பால் Poll_m10மூன்றாம் காமத்துப்பால் Poll_c10 
48 Posts - 43%
heezulia
மூன்றாம் காமத்துப்பால் Poll_c10மூன்றாம் காமத்துப்பால் Poll_m10மூன்றாம் காமத்துப்பால் Poll_c10 
46 Posts - 41%
T.N.Balasubramanian
மூன்றாம் காமத்துப்பால் Poll_c10மூன்றாம் காமத்துப்பால் Poll_m10மூன்றாம் காமத்துப்பால் Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
மூன்றாம் காமத்துப்பால் Poll_c10மூன்றாம் காமத்துப்பால் Poll_m10மூன்றாம் காமத்துப்பால் Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
மூன்றாம் காமத்துப்பால் Poll_c10மூன்றாம் காமத்துப்பால் Poll_m10மூன்றாம் காமத்துப்பால் Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
மூன்றாம் காமத்துப்பால் Poll_c10மூன்றாம் காமத்துப்பால் Poll_m10மூன்றாம் காமத்துப்பால் Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
மூன்றாம் காமத்துப்பால் Poll_c10மூன்றாம் காமத்துப்பால் Poll_m10மூன்றாம் காமத்துப்பால் Poll_c10 
2 Posts - 2%
prajai
மூன்றாம் காமத்துப்பால் Poll_c10மூன்றாம் காமத்துப்பால் Poll_m10மூன்றாம் காமத்துப்பால் Poll_c10 
2 Posts - 2%
Manimegala
மூன்றாம் காமத்துப்பால் Poll_c10மூன்றாம் காமத்துப்பால் Poll_m10மூன்றாம் காமத்துப்பால் Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
மூன்றாம் காமத்துப்பால் Poll_c10மூன்றாம் காமத்துப்பால் Poll_m10மூன்றாம் காமத்துப்பால் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூன்றாம் காமத்துப்பால் Poll_c10மூன்றாம் காமத்துப்பால் Poll_m10மூன்றாம் காமத்துப்பால் Poll_c10 
414 Posts - 49%
heezulia
மூன்றாம் காமத்துப்பால் Poll_c10மூன்றாம் காமத்துப்பால் Poll_m10மூன்றாம் காமத்துப்பால் Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
மூன்றாம் காமத்துப்பால் Poll_c10மூன்றாம் காமத்துப்பால் Poll_m10மூன்றாம் காமத்துப்பால் Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
மூன்றாம் காமத்துப்பால் Poll_c10மூன்றாம் காமத்துப்பால் Poll_m10மூன்றாம் காமத்துப்பால் Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
மூன்றாம் காமத்துப்பால் Poll_c10மூன்றாம் காமத்துப்பால் Poll_m10மூன்றாம் காமத்துப்பால் Poll_c10 
28 Posts - 3%
prajai
மூன்றாம் காமத்துப்பால் Poll_c10மூன்றாம் காமத்துப்பால் Poll_m10மூன்றாம் காமத்துப்பால் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
மூன்றாம் காமத்துப்பால் Poll_c10மூன்றாம் காமத்துப்பால் Poll_m10மூன்றாம் காமத்துப்பால் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
மூன்றாம் காமத்துப்பால் Poll_c10மூன்றாம் காமத்துப்பால் Poll_m10மூன்றாம் காமத்துப்பால் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
மூன்றாம் காமத்துப்பால் Poll_c10மூன்றாம் காமத்துப்பால் Poll_m10மூன்றாம் காமத்துப்பால் Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
மூன்றாம் காமத்துப்பால் Poll_c10மூன்றாம் காமத்துப்பால் Poll_m10மூன்றாம் காமத்துப்பால் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்றாம் காமத்துப்பால்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 15, 2009 7:13 pm

மூன்றாம் காமத்துப்பால் DSC_4129
ஒரு கந்நிகையை மற்றொரு கந்நிகை அபாய ஸ்தாநத்தில் விரலினால் பீடித்தால் அவளுக்கு இருநூறு பணந் தண்டம் விதித்து, அந்த கந்நிகைக்குள்ள சுல்க்கப் பொருளை இரட்டிப்பாக அவள் தந்தைக்குக் கொடுக்கச்செய்து, ஜாட்டியால் பத்தடியுமடிக்க.

இவ்விதமாக ஒரு ஸ்திரீ செய்தால் அவள் தலையை முண்டமாகச் சிரைத்து, விரலிரண்டையும் அறுத்து, கழுதை மேலேற்றி ராஜமார்க்கத்தில் துரத்துக.

-மனுதர்ம சாஸ்திரம், அத்தியாயம் எட்டு, சூத்திரங்கள் 369,370.

ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் பெண்களுக்கான தண்டனையை மனுதர்மசாஸ்திரம் இப்படி வரையறுக்கிறது. கற்பழிப்பைவிட மிக மோசமான குற்றமாக ஓரினச்சேர்க்கைகருதப்பட்டது. ஒரு பெண்ணை பலவந்தமாக மானபங்கம் செய்யும் ஆணுக்கு என்ன தண்டனை தெரியுமா?அவனது கைவிரல்கள் இரண்டைத் துண்டித்துவிடுவார்கள்; அறுநூறு பணம் அபராதம் விதிக்கப்படும்.ஆனால் ஒரு பெண் இன்னொரு கன்னிப்பெண்ணுடன் உறவுகொண்டால், அவளது இரண்டு விரல்களை வெட்டுவதுமட்டுமில்லாமல், மொட்டையடித்து, கழுதை மேல் ஏற்றி ஊர்வலமாக விடுவார்கள்.


கடந்த ஜூன் 28ம் தேதி ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாக சென்னையில்நடந்த ‘சென்னை வானவில்’ ஊர்வலமும் (இதே போன்ற ஊர்வலங்கள் அதே தினத்தில் பெங்களூரு உள்ளிட்டபல நகரங்களில் நடைபெற்றன!), இதைத் தொடர்ந்து ஜூலை 2ம் தேதி ‘ஓரினச்சேர்க்கையை தண்டிக்கும்இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 377 அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது’ என டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த பரபரப்பான தீர்ப்பும்... நாடு முழுக்க அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும்ஏற்படுத்தி இருக்கிறது.


‘நம்ம ஊரிலா இப்படி?’ என முகம் சுளித்தவர்கள் நிறைய! ‘வெளிநாட்டுக்காரங்கநம்ம பண்பாட்டையும் கெடுத்துட்டாங்க...’ என கொதித்தவர்கள் ஏராளம். மத அமைப்புகள் முண்டாதட்டி களம் இறங்கிவிட்டன. ‘ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு இங்கே இடமில்லை; நீங்கள் எல்லோரும்அமெரிக்காவுக்குப் போய்விடுங்கள்’ என்ற வாசகங்கள் கொண்ட பேனர்களைத் தாங்கிப்பிடித்தபடிமுஸ்லிம் அமைப்பு ஒன்று போராட்டம் நடத்துகிறது.


பொதுவாகவே செக்ஸ் விஷயத்தில் வெளிப்படையாக பேசுவது நமது பண்பாட்டுக்குவிரோதம் என்ற கருத்து இங்கே இருக்கிறது. ‘அந்தரங்கம் புனிதமானது’ என்று தம்பதிகளுக்குள்நடக்கும் உறவையே மூடி மறைத்துப்பேசச் சொல்கிறோம். இதில் ஓரினச்சேர்க்கை என்பது பண்பாட்டுஅதிர்ச்சியாக பலருக்குத் தெரிகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 15, 2009 7:14 pm

மூன்றாம் காமத்துப்பால் DSC_4088
என்ன பிரச்னை? எங்கே பிரச்னை?


இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 377 ன்படி ஓரினச்சேர்க்கையில்ஈடுபடுவது அபராதம் மற்றும் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படக்கூடிய மோசமானகுற்றம். பிரிட்டிஷ் காலத்தில் 150 ஆண்டுகளுக்குமுன் போடப்பட்ட சட்டம் இது! இந்த சட்டத்தைஉருவாக்கிய பிரிட்டிஷாரே, ‘ஓரினச்சேர்க்கை தவறு இல்லை’ என அவர்கள் நாட்டில் 1967ம் ஆண்டில் சட்டத்தை திருத்திவிட்டார்கள். நம் ஊரில் மாற்றம் இல்லை!


சட்டம் இருந்தாலும், அதை பயன்படுத்துவது அரிதாகவே இருக்க, மும்பை,பெங்களூரு, ஐதராபாத் போன்ற நகரங்களில் இவர்களுக்கென தனி டிஸ்கொதேக்கள், கிளப்கள் உருவாகின.மும்பையில் ‘பாம்பே தோஸ்த்’ என்ற பெயரில் ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான பத்திரிகையும்வருகிறது. இணையத்தில் இவர்களுக்கென தனி டேட்டிங் தளங்கள், சோஷியல் நெட்வொர்க்கிங் அமைப்புகள்என எல்லாம் வந்துவிட்டன. எல்லாம் இருந்தும்,எல்லாம் நிழலாகவே இருந்தன என்பதால்தான் இவர்கள் வெளிப்படையாக சேர்ந்துவாழும் உரிமையைக்கேட்கிறார்கள்.


காரணம், ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்துகொண்டு, தனிக்குடித்தனம்நடத்தி சேர்ந்து வாழ்வதைப் போல இவர்களால் வாழமுடியாது. இந்தியாவில் இருக்கும் மதம்சார்ந்ததிருமணச் சட்டங்களின்படி ஒரு ஆணும் ஆணுமோ, ஒரு பெண்ணும் பெண்ணுமோ திருமணம் செய்துகொள்ளமுடியாது.இந்து திருமணச் சட்டத்தின்கீழ் சில கோயில்களில் நடக்கும் திருமணங்கள் பெரும்பாலும்பதிவு செய்யப்படுவதில்லை. இப்படி ஏதாவதொரு கோயிலில் அர்ச்சகர் மனதுவைத்தால் இவர்கள்திருமணம் செய்துகொள்ளலாம். ‘கலி முத்திப் போச்சு...’ என்ற புலம்பலினூடாக மந்திரங்களையும்சொல்லி, அவர் திருமணத்தை நடத்திவைப்பார்.


ஆனால் பிரச்னை எய்ட்ஸ் என்கிற வடிவில் வருகிறது. இந்தியாவில்இருக்கும் ஹெச்.ஐ.வி. தொற்றுள்ள நோயாளிகளில் 86 சதவிகிதம் பேர் ஆணும் ஆணும் உறவுகொள்ளும்ஓரினச்சேர்க்கை மூலமாகவே இந்த நோயைப் பெற்றவர்கள். இந்தியாவில் ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள்கிட்டத்தட்ட 45 லட்சம் பேர் இருக்கலாம் என ஒரு கணிப்பு சொல்கிறது.

இப்போது சட்டத்தை திருத்தி, இந்த உறவுக்கு அங்கீகாரம் கொடுத்தால்இது இன்னும் பெருகிவிடாதா என்ற கேள்வி பலருக்கு எழலாம். இப்போதைய சட்டத்தில் அடிப்படைபிரச்னையே, ஓரினச்சேர்க்கையாளர்களை அணுகும் எல்லோரையும் அது குற்றவாளியாகப் பார்ப்பதுதான்!‘இதன்மூலம் எய்ட்ஸ் தொற்றுகிறது. எனவே காண்டம் உபயோகியுங்கள்’ என ஒரு சமூக சேவகர் இவர்களுக்குஆணுறை வழங்கினால், அவரையும் பத்து ஆண்டுகள் உள்ளே தள்ளமுடியும். ஓரினச்சேர்க்கையாளருக்குசிகிச்சை அளிக்கும் டாக்டரையும் சிறையில் அடைக்கமுடியும்.


இப்படி பிரச்னைகளை எதிர்கொண்ட ‘நாஸ் இந்தியா’ என்ற தன்னார்வஅமைப்பு போட்ட பொதுநல வழக்கில்தான் டெல்லி உயர் நீதிமன்றம் இப்போது தீர்ப்பு வழங்கியிருக்கிறது.இதன்மூலம் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு சிகிச்சையும் விழிப்புணர்வும் அளித்து, இந்தியாவில்எய்ட்ஸ் என்னும் கொடிய நோய் பரவுவதைத் தடுப்பது ஓரளவுக்குச் சாத்தியமாகும்.



ஓரினச்சேர்க்கையாளர்கள் என பொத்தாம்பொதுவான பெயரில் அழைக்கப்படும்இந்த சமூகத்தில் லெஸ்பியன், கே, பைசெக்ஸூவல், டிரான்ஸ்ஜெண்டர் என நான்கு பிரிவினர்அடக்கம். எல்.ஜி.பி.டி. என இதன் முதல் எழுத்துக்களை வைத்து இவர்கள் தங்களுக்காக உலகளாவியஅமைப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள். ‘இப்படித்தான் உறவுகொள்ளுவேன்’ என்று திமிரெடுத்துப்போய்இவர்கள் சொந்த பாலினத்தவரை நாடுவதில்லை. ‘செக்ஸ் அறிவியலின் ஐன்ஸ்டீன்’ என்று கருதப்படும்ஜெர்மனியில் பிறந்த பிரபல செக்ஸ் சிகிச்சை நிபுணர் ஹர்ஷ்ஃபீல்ட், ஓரினச்சேர்க்கை பற்றிஇப்படிச் சொல்லியிருக்கிறார்...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 15, 2009 7:14 pm

‘‘எப்படி பெரும்பாலான வலது கை பழக்கமுள்ள மனிதர்களுக்குமத்தியில் சிலர் இடது கை பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்களோ, அப்படி பல இயல்பான செக்ஸ்விரும்பிகளுக்கு மத்தியில் சிலர் ஓரினச் சேர்க்கையாளர்களாக இருக்கிறார்கள். இது அவர்களின்தவறு இல்லை. அவர்கள் வக்ரமான உணர்வு கொண்ட செக்ஸ் வெறியர்களும் இல்லை. இது பிறவிக்கோளாறு. அவர்களது உணர்வுகளுக்கும், பழக்கங்களுக்கும் உடல்ரீதியான மாறுபாடுகள்தான் காரணம்.இதை அறிவியல்ரீதியாக அணுக வேண்டும். அதைவிட்டு அவர்களை கிரிமினல்கள் மாதிரி நடத்தக்கூடாது!’’


அவரது வார்த்தைகளில் சொல்வதானால், மனித குலம் என்பது வெறுமனேஆண்களும் பெண்களும் கொண்டதல்ல; ஓரினச்சேர்க்கையாளர்கள் என்ற மூன்றாவது பாலினமும் இதில்அடங்கும்!


ஓரினசேர்க்கைக்கு நீண்ட வரலாறு உண்டு. பிளாட்டோவின் ஆசிரியராகஇருந்த சாஃபோ, தத்துவமேதை சாக்ரடீஸ் போன்ற பிரபலங்கள் ஹோமோசெக்ஸ் மற்றும் லெஸ்பியன்காதல் பற்றி கவிதைகள், கருத்துகளை எழுதி வைத்திருக்கிறார்கள். ‘திரிதிய பிரக்ருதி’என இவர்களை விளிக்கிறது இந்தியாவின் செக்ஸ் வேத நூலான ‘காமசூத்திரம்’. ‘இவர்கள் சிகைஅலங்காரம் செய்பவர்களாகவும், மசாஜ் செய்துவிடுபவர்களாகவும், பூ வியாபாரம் செய்பவர்களாகவும்நகரங்களில் வாழ்ந்தார்கள். சிலர் நடனமாடியும் பிழைப்பு நடத்தினர். கடவுளுக்கு அடுத்தஇடத்தில் வைத்து இவர்கள் மதிக்கப்பட்டார்கள். இவர்கள் ஆசீர்வாதம் கொடுத்தாலோ, சாபம்விட்டாலோ... அது பலிக்கும் என பொதுமக்கள் நம்பினர். இவர்கள் தங்களுக்குள் திருமணம்செய்துகொண்டு இணைந்து வாழ்ந்தார்கள்’ என காமசூத்திரம் விவரிக்கிறது.


நம் புராணங்களிலும் இதிகாசங்களிலும்கூட இப்படியான கேரக்டர்கள்இருக்கிறார்கள். சிவனும், மோகினியாக அவதாரம் எடுத்த விஷ்ணுவும் இணைந்து உருவானவரே ஐயப்பன்;மகாபாராத ஹீரோவான அரவான் மணந்துகொள்வதற்காக ஒரே ஒரு நாளுக்கு பெண்ணாக மாறினார் கிருஷ்ணர்;மகாபாரத அர்ஜுனன், ஒரு ஆண்டுக்கு நபும்சகனாக பிருகந்நளை என்ற பெயர்தாங்கி வாழ்ந்ததாககதை உண்டு; துருபத மன்னனுக்கு பெண்ணாகப் பிறந்த ஒரு குழந்தை, யக்ஷன் ஒருவனிடம் பாலினமாற்று யாசகம் வாங்கி, சிகண்டி என்ற ஆணாக உருவெடுத்ததாகவும் கதை உண்டு; கங்கையை பூமிக்குக்கொண்டுவந்தவராகக் கருதப்படும் பகீரத மகாராஜா, இரண்டு பெண்களுக்கு மகனாகப் பிறந்தவர்;அர்த்தநாரீஸ்வரர் என்ற தெய்வக்கோலமே மூன்றாம் பாலினத்தை உணர்த்துவதாகவே சொல்வார்கள்.


ஓரினச்சேர்க்கையை பற்றி மட்டுமில்லை... பொதுவாகவே செக்ஸ் பற்றிவெளிப்படையான விவாதங்கள் செய்துவந்த சமூகம், நம் இந்திய சமூகம்! ‘காமசூத்திரம்’ என்பதுமருத்துவம், ஜோதிடம், வான சாஸ்திரம் போன்ற நூல்களைப் போலவே பண்டைய இந்திய சமூகத்தில்உயர்வான இடத்தைப் பெற்றிருந்தது. சொல்லப்போனால், விபசார விடுதிகள்கூட அந்தக்காலத்தில்அங்கீகரிக்கப்பட்டிருந்தன. விபசார விடுதிகளை நெறிப்படுத்த கனிகாத்யக்ஷா என்ற அதிகாரியைநியமிக்கவேண்டும் என்றும், பாலியல் தொழில் செய்யும் பெண்கள் தங்களது ஒரு நாள் கட்டணத்தைப்போலஇரண்டு மடங்கு தொகையை மாதாமாதம் அரசுக்கு வரியாகச் செலுத்தவேண்டும் என்றும் ‘அர்த்தசாஸ்திரம்’சொல்கிறது. பெரிய குடும்பத்துப் பெண்களே, நிறைய பெண்களை வேலைக்குச் சேர்த்து விபசாரவிடுதிகள் நடத்திவந்தனர். இதுதவிர அரசே இந்தத் தொழிலுக்கு என பெண்களை நியமனம் செய்வதும்வழக்கத்தில் இருந்தது. இதிலிருந்து ஒரு பெண் விடுதலை பெற வேண்டுமானால், 24 ஆயிரம் பணம்கொடுத்தே வெளியேறமுடியும். தலைமுறை தலைமுறையாக இப்படி சபிக்கப்பட்ட தொழிலைச் செய்தபெண்கள் ஏராளம்!


செக்ஸ் விஷயத்தில் கட்டுப்பாடுகளை வரையறுத்தது மதம்தான்! கி.பி.முதல் நூற்றாண்டில் கிறிஸ்தவ மதம் தழைக்க ஆரம்பித்த பிறகு செக்ஸ் பற்றிய கட்டுப்பாடுகளும்வந்து சேர்ந்தது. ரோமப் பேரரசில் மக்கள் சமூக ஒழுங்கு எதுவுமின்றி வாழ்வதாக புனித பால்நினைத்தார். செக்ஸ் தொடர்பான நியதிகளை அவர்தான் வகுத்தார்.


‘பிரம்மச்சரியமே மேலான வாழ்க்கை. ஆனால் அது எல்லோருக்கும் சாத்தியமில்லை.கண்ட பெண்களுடன் உறவு வைத்து நரகத்துக்கு போவதை விட கல்யாணம் செய்து கொண்டு மனைவியிடம்மட்டும் தாம்பத்ய உறவு வைத்துக் கொண்டால் பாவம் குறையும்’ என அட்வைஸ் செய்தார் அவர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 15, 2009 7:15 pm

அதன்பிறகு நான்காம் நூற்றாண்டில் புனித அகஸ்டின் இந்த விதிமுறைகளைஇன்னும் கடுமை ஆக்கினார். எப்படி கணவன்& மனைவி உறவு கொள்ள வேண்டும் என்ற பொசிஷனையும்தீர்மானித்தவர் இவர்தான். பதின்மூன்றாம் நூற்றாண்டில் புனித தாமஸ் அக்யூனாஸ் இவற்றைஇன்னும் கடுமை ஆக்கினார். ‘திருமண உறவுக்கு வெளியே வேற்று நபர்களுடன் செக்ஸில் ஈடுபடுவதுகுற்றம். குழந்தை பெற்றுக் கொள்வதற்காக மட்டுமே செக்ஸ் உறவில் ஈடுபட வேண்டும். கருவுறுதலில்முடியாத செக்ஸ் உறவு பாவம்’ என்றார் அவர்.


ஹோமோசெக்ஸ், லெஸ்பியன், சுய இன்பம் அனுபவிப்பது என எல்லாமே மன்னிக்கமுடியாத குற்றம் என்ற அவர் சொன்ன இன்னொரு விஷயம் அதிர்ச்சி தருவது. ‘சுய இன்பம் அனுபவிப்பதுகற்பழிப்பைவிட மோசமான குற்றம். கற்பழிப்பிலாவது குழந்தை பிறக்க வாய்ப்பிருக்கிறது.சுய இன்பத்தில் அது இல்லை’ என்பதுதான் அது!


இங்கிலாந்தில் ‘விக்டோரியன் மாராலிட்டி’ என்று இன்னமும்கூடச்சொல்வார்கள். விக்டோரியா மகாராணி காலத்தில் இன்னும் ஏராளமான விதிமுறைகள் புகுத்தப்பட்டன.பிரிட்டிஷ் ஆட்சி எங்கெல்லாம் பரவியதோ, அங்கெல்லாம் இந்த விதிகளும் பரவின. இந்தியாவும்அதை ஏற்று, தனது பண்பாட்டு அடையாளமாக ஆக்கிக்கொண்டது. கட்டுப்பாடுகளை விதித்த மேற்கத்தியசமூகம் இப்போது மாறும்போது, அந்த மாற்றத்தை இங்கும் எதிர்பார்ப்பதுதானே இயற்கை?


இதில் பண்பாட்டு அதிர்ச்சி ஏற்படுகிறது என்று இங்கிருக்கும்மத அமைப்புகள் சொன்னால், அது எந்த பண்பாட்டுக்கு அதிர்ச்சி? அர்த்த சாஸ்திரமும் மனுதர்மசாஸ்திரமும் நிறுவிய பண்பாட்டுக்கா?


ஊனமுற்ற நம் சக பிரஜைகளுக்கு பொது இடங்களில் வசதி செய்து தருவதற்காகதனி பாதைகள், தனி இருக்கைகள் அமைத்துத் தருகிறோம். ஓரினச்சேர்க்கையாளர்களும் ஒருவகையில்அப்படித்தான்... உடலாலும் மனதாலும் ஊனமடைந்தவர்கள். அவர்களும் வாழவேண்டும் என்று கேட்கிறார்கள்...அவர்களுக்கான வாழ்க்கையை அவர்களே தீர்மானித்துக்கொள்ளும் உரிமை கேட்கிறார்கள்... இதில்அடுத்தவர்கள் தப்பு கண்டுபிடிக்க என்ன இருக்கிறது?

நன்றி: நாடோடி மற்றும் தெனாலி


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக