புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமைதியான வாழ்க்கைக்கு ஆழ்ந்த தூக்கம் Poll_c10அமைதியான வாழ்க்கைக்கு ஆழ்ந்த தூக்கம் Poll_m10அமைதியான வாழ்க்கைக்கு ஆழ்ந்த தூக்கம் Poll_c10 
81 Posts - 63%
heezulia
அமைதியான வாழ்க்கைக்கு ஆழ்ந்த தூக்கம் Poll_c10அமைதியான வாழ்க்கைக்கு ஆழ்ந்த தூக்கம் Poll_m10அமைதியான வாழ்க்கைக்கு ஆழ்ந்த தூக்கம் Poll_c10 
29 Posts - 23%
வேல்முருகன் காசி
அமைதியான வாழ்க்கைக்கு ஆழ்ந்த தூக்கம் Poll_c10அமைதியான வாழ்க்கைக்கு ஆழ்ந்த தூக்கம் Poll_m10அமைதியான வாழ்க்கைக்கு ஆழ்ந்த தூக்கம் Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
அமைதியான வாழ்க்கைக்கு ஆழ்ந்த தூக்கம் Poll_c10அமைதியான வாழ்க்கைக்கு ஆழ்ந்த தூக்கம் Poll_m10அமைதியான வாழ்க்கைக்கு ஆழ்ந்த தூக்கம் Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
அமைதியான வாழ்க்கைக்கு ஆழ்ந்த தூக்கம் Poll_c10அமைதியான வாழ்க்கைக்கு ஆழ்ந்த தூக்கம் Poll_m10அமைதியான வாழ்க்கைக்கு ஆழ்ந்த தூக்கம் Poll_c10 
1 Post - 1%
viyasan
அமைதியான வாழ்க்கைக்கு ஆழ்ந்த தூக்கம் Poll_c10அமைதியான வாழ்க்கைக்கு ஆழ்ந்த தூக்கம் Poll_m10அமைதியான வாழ்க்கைக்கு ஆழ்ந்த தூக்கம் Poll_c10 
1 Post - 1%
eraeravi
அமைதியான வாழ்க்கைக்கு ஆழ்ந்த தூக்கம் Poll_c10அமைதியான வாழ்க்கைக்கு ஆழ்ந்த தூக்கம் Poll_m10அமைதியான வாழ்க்கைக்கு ஆழ்ந்த தூக்கம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமைதியான வாழ்க்கைக்கு ஆழ்ந்த தூக்கம் Poll_c10அமைதியான வாழ்க்கைக்கு ஆழ்ந்த தூக்கம் Poll_m10அமைதியான வாழ்க்கைக்கு ஆழ்ந்த தூக்கம் Poll_c10 
273 Posts - 45%
heezulia
அமைதியான வாழ்க்கைக்கு ஆழ்ந்த தூக்கம் Poll_c10அமைதியான வாழ்க்கைக்கு ஆழ்ந்த தூக்கம் Poll_m10அமைதியான வாழ்க்கைக்கு ஆழ்ந்த தூக்கம் Poll_c10 
226 Posts - 37%
mohamed nizamudeen
அமைதியான வாழ்க்கைக்கு ஆழ்ந்த தூக்கம் Poll_c10அமைதியான வாழ்க்கைக்கு ஆழ்ந்த தூக்கம் Poll_m10அமைதியான வாழ்க்கைக்கு ஆழ்ந்த தூக்கம் Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
அமைதியான வாழ்க்கைக்கு ஆழ்ந்த தூக்கம் Poll_c10அமைதியான வாழ்க்கைக்கு ஆழ்ந்த தூக்கம் Poll_m10அமைதியான வாழ்க்கைக்கு ஆழ்ந்த தூக்கம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அமைதியான வாழ்க்கைக்கு ஆழ்ந்த தூக்கம் Poll_c10அமைதியான வாழ்க்கைக்கு ஆழ்ந்த தூக்கம் Poll_m10அமைதியான வாழ்க்கைக்கு ஆழ்ந்த தூக்கம் Poll_c10 
19 Posts - 3%
prajai
அமைதியான வாழ்க்கைக்கு ஆழ்ந்த தூக்கம் Poll_c10அமைதியான வாழ்க்கைக்கு ஆழ்ந்த தூக்கம் Poll_m10அமைதியான வாழ்க்கைக்கு ஆழ்ந்த தூக்கம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அமைதியான வாழ்க்கைக்கு ஆழ்ந்த தூக்கம் Poll_c10அமைதியான வாழ்க்கைக்கு ஆழ்ந்த தூக்கம் Poll_m10அமைதியான வாழ்க்கைக்கு ஆழ்ந்த தூக்கம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அமைதியான வாழ்க்கைக்கு ஆழ்ந்த தூக்கம் Poll_c10அமைதியான வாழ்க்கைக்கு ஆழ்ந்த தூக்கம் Poll_m10அமைதியான வாழ்க்கைக்கு ஆழ்ந்த தூக்கம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அமைதியான வாழ்க்கைக்கு ஆழ்ந்த தூக்கம் Poll_c10அமைதியான வாழ்க்கைக்கு ஆழ்ந்த தூக்கம் Poll_m10அமைதியான வாழ்க்கைக்கு ஆழ்ந்த தூக்கம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
அமைதியான வாழ்க்கைக்கு ஆழ்ந்த தூக்கம் Poll_c10அமைதியான வாழ்க்கைக்கு ஆழ்ந்த தூக்கம் Poll_m10அமைதியான வாழ்க்கைக்கு ஆழ்ந்த தூக்கம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமைதியான வாழ்க்கைக்கு ஆழ்ந்த தூக்கம்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jun 24, 2010 1:06 pm

[ இன்று
பெரும்பாலானோர் தூக்கமின்மையால் அவதி
படுகின்றனர். தூக்கமின்மை
எதனால் இதன் காரணம் என்ன
? நிம்மதியான
தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்
என்பதை பற்றிய
ஆய்வு கட்டுரைகள்
]


[ அகிலத்தின்
அதிபதி அல்லாஹ் நமக்கு இரவு நேரங்களை
ஓய்வு பெறும்
காலமாகவும்
, அமைதியினை தேடிக்கொள்ளக்கூடிய
நேரமாகவும்
அமைத்து
தந்துள்ளான்
. ஆனால் பணம் பணம்
என்று அலைகின்றவர்களுக்கு மட்டுமின்றி இன்றைய
இளைஞர்களுக்கும்
-
ஏன், சிறுவர்களுக்குக்கூட தூக்கம் என்பது
இரவு நேரங்களில்
இல்லாமல்
ஆகிவிட்டது
. ]


அல்லாஹ் நமக்கு கொடுத்த அருட்கொடைகளில் ஒன்றான தூக்கத்தினை
நம்மில் பலர்
பேர் அலட்சியப்படுத்துகிறோம். இன்றைய பாஸ்ட் புட் காலத்தில்
நமக்கு தூக்குவதற்கு
நேரம் கிடைப்பது இல்லை. காலம் தவறி தூங்கி வருகிறோம்.


தூக்கம் சரியாக இல்லையென்றால் நமக்கு நோய்கள் தான் அதிகம்
வரும் என்பது
நமக்கு தெரிந்தும் தூக்கத்தினை குறிப்பிட்ட நேரத்துக்குள்
தூக்கி குறிப்பிட்ட
நேரத்திற்குள் எழும்பி விட வேண்டும் என்பதினை நாம் பேணி
காப்பது இல்லை. ஆகையால்
பலர் இவ்வுலகத்தில் மனக்கஷ்டம், மனச்சுமை, மனப்பாரம் போன்ற காரண
காரியங்களால்
பாதிக்கப்பட்டு அவஸ்தை பாடுகிறார்கள் என்பது நமக்கு
தெரிந்தது
தான்.


மேற்குலகில் உள்ளவர்கள் பலர் பணம் பணம் என்று அலைகிறார்கள்.
இதனால் அவர்கள்
தூக்கம் என்பது என்ன..? என்று கேள்வி கேட்கக்கூடிய
அளவிற்கு போய் விட்டார்கள்.
நிம்மதியினை எங்கேயோ தொலைத்து விட்டவர்களாக ஆகி
விட்டார்கள். போர் மூலமாக பல
நாடுகளில் உள்ள மக்களின் தூக்கத்தினை கெடுத்த இந்த
ஆதிக்கச்சக்திகளுக்கு எங்கே
தூக்கம் வரப்போகிறது..?





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jun 24, 2010 1:08 pm

பிரிட்டனை சார்ந்தவர்கள் நல்ல ஆடம்பரமாக வாழ வேண்டும்
என்றால் அவர்களுக்கு
குறைந்தது, ஒரு மில்லியன் பவுண்டுகள் தேவைப்படுகிறது. ஆடம்பர செலவுகள்
அநாவசிய
செலவுகள் என்று செலவு
செய்வதால் ஒரு குடும்பத்திற்கு
5.8 மில்லியன் பவுண்டுகள் சாதாரணமாக தேவைப்படுகிறது.
இதுவே கொஞ்சம் ஆடம்பரமாக இருக்க வேண்டுமென்றால் அதனை விட
பல மடங்கு பவுண்டுகள்
தேவைகளாக உள்ளன.



தற்போது இங்கிலாந்து நாட்டில் 400,000 மில்லியனர்கள்
இருக்கிறார்கள்.
இவர்களின் வாழ்க்கை முறையினை காணும் மற்ற மக்கள் நாமும்
பணக்காரர்கள் ஆக வேண்டும்
என்று நினைக்கிறார்கள். இதனை கருத்தில் கொண்ட பல தனியார்
லாட்டரி மற்றும் சூதாட்ட
ஏஜெண்டுகள் மேலை நாட்டு மக்களை கவர வேண்டும் என்பதற்காக பல
வழிமுறைகளில் அவர்களை
ஏமாற்றிக்கொண்டு இருக்கிறது. ஆனால் அவர்களுக்கு வேண்டியது, பணம் என்பதால் சிறுக சிறுக பணத்தினை அதில்
போடுகிறார்கள். ஆனால் பணம் அதிகம் சேர்ந்து விடும் போது அந்த
ஏஜெண்டுகள் எங்கு போனார்கள், என்ன ஆனார்கள் என்பது அந்த
மக்களுக்கு
தெரியாது.


ஏமாற்றப்பட்டப்பின் தூக்கம் என்பதினை மறந்து விடுகிறார்கள்.
ஆகையால் அவர்களை
கவலை என்ற நோயானது பிடித்துக்கொள்கிறது. இது போல் நம்முடைய
இந்தியாவிலும் லாட்டரி
மற்றும் சூதாட்டம் போன்றவைகள் முளைத்துக்கொண்டு வருகிறது.
ஆகையால் நாம் தான்
ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். லாட்டரி மற்றும் சூதாட்டம்
போன்றவற்றிலிருந்து
சம்பாதிக்கும் பணமானது பாவச்செயல் என்று திருமறை
திருக்குர்ஆன் மிக அழகாக தன்னுடைய
அல்மாயிதா 5 வது அத்தியாயம் 90 வது வசனத்தில் கூறுகிறது.


விசுவாசங்கொண்டோரே.. நிச்சயமாக மதுவும், சூதாட்டமும், (வணக்கத்திற்காக) நடப்பட்டுள்ளவை
(களானசிலை)களும்
, குறி பார்க்கும் (சூதாட்ட)
அம்புகளும் (ஆகிய
இவையாவும்) ஷைத்தானுடைய செயலிலுள்ள
அருவருக்கத்தக்கவையாகும். ஆகவே
, இவைகளைத்த தவிர்த்துக் கொள்ளுங்கள், (அதனால்) நீங்கள் வெற்றி
பெறுவீர்கள்.


மோசடி மற்றும் ஏமாற்றுதல் போன்ற காரியங்களில் ஈடுபடுவதால், அந்த செயலினை செய்தவரும் தூக்கம் இல்லாமல் பாதிக்கபடலாம் அத்துடன் அந்த தீயச்செயலினால் பாதிக்கப்பட்டவருக்கும்; தூக்கம்
இல்லாமல் போய் விடும். மோசடி
, மற்றும் பிறரை ஏமாற்றுதல் போன்ற தீயக்காரியங்களில் ஈடுபடக்கூடாது என்பதினை
பற்றி கீழ்க்கண்ட
ஹதீஸும் நமக்கு வலியுத்துகிறது





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jun 24, 2010 1:08 pm

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
கூறினார்கள்:

"
ஊசி நூல் போன்ற பொருட்களைக்கூட
திரும்பக் கொடுத்து விடுங்கள். மேலும்
, மோசடி
செய்வதிலிருந்தும்
தவிர்ந்து கொள்ளுங்கள்.
ஏனெனில்
,
மோசடி என்பது மறுமை நாளில் இழிவுக்கும் மனவருத்திற்கும்
வழி வகுக்கும்.
"
அறிவிப்பாளர் : உபாதா இப்னு சாமித் (ரலி)
ஆதாரம் : நஸாயீ
,


அமெரிக்க நாட்டினை எடுத்துக்கொண்டால், ஐந்தில் ஒரு அமெரிக்கர் என்ற விகிதாச்சரப்படி தூக்கம்
இல்லாமல் மன ரீதியாகவும்
, உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் என்ற செய்தியினை
அங்கிருந்து வரும் பத்திரிகைகள் குறிப்பிடுகின்றன.
மற்றும் தற்போது அமெரிக்க
மக்கள் தொகையில்
70 மில்லியன் மக்கள் தூக்கம் இல்லாமல் பாதிக்கப்பட்டு உள்ளார்கள்
என்றும் அந்த செய்தியானது மேலும் கூறுகிறது.



ஆடம்பரமாக வாழ பணம் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்பது தான்
அவர்களின்
குறிக்கோளாக இருக்கிறது, ஆகையால் தன்னுடைய பணி
நேரத்தினை (
Working
Hours)
தவிர மற்ற நேரங்களில் ஓவர்டைம் (Ovetime) மற்றும் பகுதி நேர வேலைகள் பார்ட் டைம் (Part time) அதிகளவில் செய்கிறார்கள்.
ஆகையால்
அவர்களின் தூக்க நேரமானது (Sleeping Hours) குறைந்து விட்டது. இவர்கள்
ஒரு நாளைக்கு பத்து மணி
நேரத்திற்கும் மேலாக வேலைகள் செய்கிறார்கள். அத்துடன் வேலை
முடிந்து வீட்டிற்கு
போனாலும் அலுவலக வேலையின் சில பகுதிகளை அங்கும் செய்கிறார்கள்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jun 24, 2010 1:08 pm

மூன்றில் ஒரு அமெரிக்கர்கள் அதாவது 36 சதவீத
அமெரிக்கர்கள் இரவில் தூக்கம்
இல்லாமல் இருந்ததால், காலையில் வாகனம்
ஓட்டிக்கொண்டு செல்லும் போது தூக்கி
விடுகிறார்கள்.
இதனால் சாலை விபத்துக்கள் அதிகம் எற்படுகிறது. மூன்றில் இரண்டு
அமெரிக்கர்கள்
தூக்கமின்மையால் கவலைப்படுகிறார்கள். அமெரிக்க மக்களின் தூக்கத்தின்
சராசரி
விகிதமானது
6
மணி 40 நிமிடங்களாக
இருந்தாலும்
,
இவற்றினை விட குறைவாக தான் இவர்கள்
தூக்குகிறார்கள்.



ஏக இறைவன் நமக்கு இரவு நேரங்களை ஓய்வு பெறும் காலமாகவும், அமைதியினை தேடிக்கொள்ளக்கூடிய
நேரமாகவும் அமைத்து தந்துள்ளான். ஆனால் பணம் பணம் என்று அலையும்
மேலை நாட்டினருக்கோ தூக்கம்
என்பது இரவு நேரங்களில் இல்லாமல் ஆகிவிட்டது. ஆகையால்
அலுவகத்திற்கு பணிக்கும்
செல்லும் பல அமெரிக்கர்கள் தாங்கள் பணி புரியும்
அலுவகத்தில் பணி நேரத்தில்
தன்னுடைய மேஜையில் தலை வைத்து நன்றாக குறட்டை விட்டு
தூக்கி விடுகிறார்கள்.
அத்தகைய தருணங்களில் அலுவலகங்களில் பணி முடக்கம் ஏற்பட்டு
தயாரிப்புகள் குறைக்கின்றன, பல டாலர் மதிப்புள்ள
பொருட்கள் நஷ்டம் அடைகின்றன.
இதனால் அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஏச்சுக்கும்
பேச்சுக்கும் ஆளாகி மனஉளைச்சலுக்கு
ஆளாகி விடுகிறார்கள்.


பனிரெண்டு சதவீத அமெரிக்கர்கள் இரவு நேரங்களில் தூக்கமால்
இருப்பதால்
காலையில் சோம்பலாக இருப்பார்கள். ஆகையால் அலுவலகத்திற்கு
குறிப்பிட்ட நேரத்திற்கு
வர முடியாமல் போய் விடுகிறது. சரியான தூக்கமின்மையால்
வேலையில் அவர்களால் கவனம்
செலுத்த முடியவில்லை. இதனாலும் நிறுவனத்திற்கு பல கோடி
டாலர்கள் நஷ்டம் ஏற்படுகிறது
என்பதினை பற்றியும் அமெரிக்கா ஊடகத்துறையானது கருத்து தெரிவிக்கிறது.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jun 24, 2010 1:09 pm

அவன்தான் உங்களுக்கு இரவை ஆடையாகவும், தூக்கத்தை
இளைப்பாறுதலாகவும்
ஆக்கியிருக்கின்றான்; இன்னும், அவனே பகலை
உழைப்பிற்கு ஏற்றவாறு ஆக்கியிருக்கிறான்.
(அல்குர்ஆன் 25:47)


இரவிலும் பகலிலும் நீங்கள் நித்திரை
செய்(து இளைப்பாறிக்கொள்)வதும்
, (பூமியின் பல
பாகங்களுக்குச் சென்று) நீங்கள் அவனுடைய பேரருளைத் தேடிக்கொள்வதும்
அவனுடைய
அத்தாட்சிகளில் உள்ளவையாகும். (கவனமாகச்) செவியுறும் சமூகத்தார்க்கு
, இதில் நிச்சயமாக (ப்
பல) அத்தாட்சிகளிருக்கின்றன. அல்குர்ஆன்
30 : 23


[ தூக்கமின்மையின்
காரணம்
, தூக்கமின்மையால் ஏற்படும் பிரச்சனைகள், எப்படி தூக்கத்தை வர
வைப்பது
?, எது நல்ல தூக்கம்?, நல்ல தூக்கத்துக்கு
என்ன
வழி?, நமது
தூக்கத்தை எவை கட்டுப்படுத்துகின்றன
?, நாம் நீண்ட
நேரம் விழித்திருக்கும் போது தூக்கக் கலக்கம்
வருவதற்குக்
காரணம் என்ன
?, எவ்வளவு நேர
தூக்கம் தேவை
? உங்கள் தூக்கம்
போதுமானதா என்பதை எவ்வாறு அறிவது
?, நிம்மதியற்ற தூக்கமும், ஒழுங்கற்ற தூக்கமும்
உடல் நலத்துக்கு எதிரானவை
]


தூங்காதே தம்பி தூங்காதே என
பாடியதெல்லாம் பழைய
கதை. இப்போது இளைஞர்களையும், பதின் வயதினரையும்
பார்த்து தூங்குங்கள்
, தூங்குங்கள் என
துரத்தும் காலம்
. அவர்களைத்
தூங்காமல் இருக்க வைப்பதற்காக
ஊடகங்கள்
பயனற்ற அரைகுறைக் கலாச்சார நிகழ்ச்சிகளை நிதமும் அரங்கேற்றிக் கொண்டே
இருக்கின்றன.


நள்ளிரவுக்கு மேலும் விழித்திருந்து
தொலைக்காட்சி
நிகழ்ச்சிகளைப்
பார்ப்பதும்
, கணினியில்
விளையாடுவதும்
, செல்போனில்
அளவளாவுவதும் என இன்றைய
இளசுகளுக்கு
தூக்கத்தைத் தவிர்க்கும் வழிகள் ஏராளமாய் இருக்கின்றன
. ]





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jun 24, 2010 1:09 pm

பகலில் நாம் சுறுசுறுப்பாக வேலைபார்ப்பதை இரவு தூக்கம் தான் தீர்மானிக்கிறது.சரியான
தூக்கம் இல்லை என்னும் போது நமது அன்றாட பணிகள்
பாதிப்படைகின்றன.சராசரியாக
ஒருநாளைக்கு ஏழரை மணி நேரமாவது தூங்க வேண்டும்.எனினும்
இந்த அளவு நபருக்கு நபர்
மாறுபடுகிறது.பொதுவாக இந்தியர்கள் நள்ளிரவுக்கு பின் தான்
தூங்கச்செல்கின்றனர்.


61 சதவீதம் பேருக்கு 7மணிநேர தூக்கம் கூட இல்லை.பெரும் பாலும் தூக்கமின்மைக்கு காரணமாக
கூறப்படுவது பணிச்சுமையே. பி.பி.ஓ.
,நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் சரியான
நேரத்துக்கு தூங்கச்செல்வதில்லை. இரவில் "டிவி"
பார்ப்பதால் பலருக்கு
படுக்கைக்கு சென்ற பின்னரும் தூக்கம் வருவதில்லை.நோய்
எதிர்ப்புசக்தியை
அதிகரித்துக்கொள்ள முடியாது:உடல்நலத்தை பாதுகாப்பதில் தூக்கம்
முக்கிய பங்காற்றுகிறது.


தூக்கமின்மையால் இதய நோய்,பக்கவாதம்,உடல் பருமனாதல்,நீரிழிவு நோய்,மன அழுத்தம் போன்றவை வரலாம்.நோய்
எதிர்ப்பு செல்கள் எலும்பு மஜ்ஜையில்
உருவாகின்றன.தூங்கும் போது
தான் இவற்றின் உற்பத்தி நடைபெறுகிறது. வைரஸ்
, பாக்டீரியா போன்றவற்றின் தாக்குதல்களில்
இருந்து மட்டுமின்றி கேன்சரில் இருந்தும் பாதுகாக்க
இந்த நோய் எதிர்ப்பு செல்கள்
அவசியம்.குறைவாக தூங்குபவர்கள் அதிகம் உடற் பயிற்சி
செய்வதினாலோ,நன்கு சாப்பிடுவதாலோ நோய்
எதிர்ப்புசக்தியை அதிகரித்துக்கொள்ள
முடியாது.தூக்கமின்றி
ஒருநாள் முழுவதுமாக செலவிட்டால் நோய் எதிர்ப்பு செல்களின்
எண்ணிக்கை 37சதவீதம் வரை குறைவதாக
கண்டறிந்துள்ளனர்.குறைவாக தூங்குபவர்களுக்கு
இதயம் தொடர்பான பிரச்னைகள்
விரைவில் ஏற்படும்.உடலில் உள்ள சுரப்பிகளையும் இது
பாதிக்கிறது.


அடிக்கடி பசியுணர்வை தூண்டுவதால்,அதிகம் சாப்பிட நேரிடுகிறது.
உடல்
பருமனாவதுடன்,சர்க்கரை நோய்க்கான
வாய்ப்பும் அதிகரிக்கிறது. மூளையில் உள்ள
வேதிப்பொருட்கள் சரியாக
செயல்படவும்
,மன அழுத்தம்,கோபம்,தேவையில்லாத துக்க உணர்ச்சி போன்றவற்றை தடுக்க தூக்கம்
அவசியம்.அமைதியான
,இருட்டான சூழலே தூங்குவதற்கு ஏற்றது.ஒவ்வொரு நாளும் இரவு 10மணிக்கு தூங்கி,காலை 5.30க்கு விழிப்பதை வழக்கமாக கொள்ளவும்.தூங்குவதற்கு
இரண்டு மணி நேரத்துக்கு முன்னதாகவே இரவு உணவை
முடித்துக்கொள்ளவும்.தூங்கச்
செல்வதற்கு முன் டீ
,காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும்.உடற்பயிற்சி,தினமும் 4 கி.மீ.,நடைப்பயிற்சி செய்வதை
வழக்கமாக கொள்ளவும்.
தொடர்ந்து "யோகா" செய்பவர்களுக்கு தூக்கம் நன்றாக
வரும்.தினமும் படுக்கைக்கு
செல்வதற்கு முன் புத்தகம்,செய்தித்தாள் படிப்பது,பால் குடிப்பது என ஏதாவது
ஒரு
பழக்கத்தை
ஏற்படுத்திக்கொள்ளலாம்.இரண்டு வாரங்களுக்கு மேலாக தூக்கமின்மை பிரச்னை
நீடித்தால் டாக்டரை
சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jun 24, 2010 1:10 pm

தூக்கமின்மையின் காரணம்


ஒரு மனிதன் படுத்த உடனே அவனுக்கு தூக்கம் வந்ததென்றால் மறுநாள்
அவனுக்கு
சோர்வு இருக்காது , மனதில் ஒரு புதிய மகிழ்ச்சி காணப்படும் .


இதன் முக்கிய சில காரணங்களை எழுதியிருக்கிறேன் .முதலாவதாக
மனதில் ஏற்படும்
மாற்றங்கள் ,அந்த நாளில் நம்மில் ஏற்படும் அதிக படியான மகிழ்ச்சி ,நம்மில் ஏற்படும் அதிகபடியான கவலைகள் ,நாளை மிக பெரிய பிரச்னையை
நாம் சந்திக்க இருக்கிறோம் எப்படி
என்னால் இதை சந்திக்க முடியும் என்ற கவலை ,நாளை நான் ஒரு புதிய
மாற்றத்தை எதிர்
நோக்கி இருக்கிறேன் இது என் வாழ்வின் திருப்பு முனை சூரியன்
விரைவில் வந்தால் தானே
என்னால் சாதிக்க முடியும் எப்போது காலை வரும் என்ற ஏக்கம் ,உடலில் ஏற்படும் மாற்றங்கள் இவைகளினால்
தூக்கம் தடை படுகிறது
.


தூக்கமின்மையால் ஏற்படும் பிரச்சனைகள்


தூக்கமின்மையால் இன்றைய வேலை தடைபடுகிறது மனதில் ஒரு சோர்வு


மகிழ்ச்சியின்மை ,தலை சுற்றுதல் , இரத்த அழுத்தம் அதிகமாதல் ,மற்றவர்களை பார்த்தல் எரிச்சல் போன்றவை
ஏற்படுகிறது .இவற்றால் நமக்கு தானே இழப்பு



நம் நினைவாற்றல் கூட நின்று விடுகிறது .எனவே இதை
நிறுத்தியாக வேண்டும்
தூக்கம் நம் வாசலை தட்டியாக வேண்டும் .குறைந்த பட்சம் ஆறு
மணி நேரமாவது
தூங்கவேண்டும் .நல்லா எட்டு மணி நேரம் தூங்கிறவங்க இதை
பற்றி கவலை படவேண்டாம்
.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jun 24, 2010 1:10 pm

எப்படி தூக்கத்தை வர வைப்பது?


தூக்கத்தை வர வைப்பது ரெம்ப சுலபம் நீங்கள் செய்ய வேண்டியது
இரவில் தூங்கும்
முன்னால் நல்ல அறிவு பூர்வமான புத்தகங்களை படிக்க வேண்டும்
.



மனதில் எதை பற்றிய கவலையும் இருக்க கூடாது .உதாரணமாக நமக்கு
தோல்வி ஏற்பட்டு
விட்டது ,நமக்கு இழப்பு ஏற்பட்டு விட்டது ,நமக்கு வேண்டியவர்களை மரணம் விழுங்கிவிட்டது நீங்கள்
எதற்கும் கவலை படாதிற்கள் நீங்கள் இருக்கிறீர்கள்
,ஆம் நான் இருக்கிறேன் எனக்கு
தன்னம்பிக்கை இருக்கிறது என்னால் முடியும்
, என்னை எதுவும் அசைக்காது


என் இழப்புகள் எனக்கு இழப்பு அல்ல ஏனென்றால் நான்
இருக்கிறேன் என்ற எண்ணம்
உங்கழுக்கு வர வேண்டும் .நேற்று என்பது முடிந்து விட்டது ,


நாளை என்பது எப்படியோ இன்று நான் மகிழ்ச்சியாய் இருக்க
வேண்டும் .



உங்களால் முடிந்த அளவுக்கு மற்றவர்களுக்கு உதவுங்கள் .
உழைத்து வாழ
பழகுங்கள் வாழ்க்கை உங்கள் கையில் .


கண்களுக்குக் கீழே கரு வளையமா?


எப்போதும் உங்கள் முகம் பொலிவே இன்றி டல்லடிக்கிறதா?


நிறைய சாப்பிட்டும், மேக்கப் போட்டும் கூட உங்கள் முகம் சோர்வாகவே இருக்கிறதா?


இப்படி உங்கள் எல்லாப் பிரச்சினைகளுக்கும் பைசா
செலவில்லாமல் ஒரு தீர்வு
உண்டு என்றால், ஏற்றுக் கொள்வீர்கள்தானே?


தூக்கம் தான் அந்தத் தீர்வு. ராத்திரியானால் எல்லாரும்தான்
தூங்குகிறோம்.
அப்படியானால் எல்லாருக்கும் அழகான சருமமும், தோற்றமும் இருக்க வேண்டுமே
எனக்
கேட்கிறீர்களா?


அதான் இல்லை. எப்படித் தூங்குகிறோம், எத்தனை மணி நேரம்
தூங்குகிறோம் எனப் பல
விஷயங்களைப் பொறுத்தது அது.


தூக்கத்தில் நடக்கிற விந்தைகள் பற்றி நமக்கெல்லாம் அதிகம்
தெரிய
வாய்ப்பில்லை. அதாவது
தூங்கும்போது நம் உடலில் சுரக்கும் வளர்ச்சிக்கான ஹார்மோன்
, சரும ஆரோக்கியத்துக்கான
செயல்பாடுகளைத் தூண்டுகிறது. சரும ஆரோக்கியத்துக்கு மிக
முக்கியத் தேவைகளான கொலாஜன்
மற்றும் கெராட்டின் இரண்டும் சீராக உற்பத்தியாகவும்
, சரும செல்கள் புதுப்பிக்கப்
படவும் கூட தூக்கம் அவசியம்.



தூக்கம் சரியாக இல்லாதவர்களுக்கு சருமப் பிரச்சினைகள்
அதிகம் என்கின்றன
ஆராய்ச்சிகள்.


உதாரணத்துக்கு பருக்கள், சரும வறட்சி மாதிரியான
பிரச்சினைகள் அதிகம்
வருகின்றனவாம்.


நாள் முழுக்க உழைத்த உடலுக்கு சில மணி நேரக் கட்டாய ஓய்வு
அவசியம். ஓய்வைக்
கொடுக்காமல், அதற்கு எதிராகப் போராடும்போது, அது உடல்நலத்தையும் பாதித்து, அழகையும் பாதிக்கிறது. உதாரணத்துக்கு
ஓய்வுக்கு எதிராகப் போராடும்போது
, இரத்த ஓட்டமானது உடலின் பெரிய பகுதிகளுக்குத்
திருப்பப் படுகிறது. தூக்கமில்லாததால் முகம் வெளிறிப்
போவதும், கண்களுக்கடியில் கருவளையம்
வருவதும் கூட
இதனால்தான்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jun 24, 2010 1:11 pm

எது நல்ல தூக்கம்?


எது நல்ல தூக்கம், எத்தனை மணி நேரம் தூங்குவது நல்லது என்கிற குழப்பம் பலருக்கும் உண்டு. சிலருக்கு
ஆறு மணி நேரம் தூங்கும் பழக்கமிருக்கும். சிலர் எட்டு
மணி நேரம் தூங்குவார்கள்.
சிலருக்கு பத்து மணி நேரம் வரை கூடத் தூக்கம் கலையாது.
அது அவரவர் வசதியையும், வேலை நேரம் மற்றும் பிற
விஷயங்களைப் பொறுத்து மாறுபடலாம்.
ஆனால், பகல் வேளையில் தூக்க உணர்வு உண்டானால், அந்த நபருக்கு இரவில் போதிய
அளவு
தூக்கம் இல்லை என்று
அர்த்தம்.



நல்ல தூக்கத்துக்கு என்ன வழி?


படுத்தவுடன் தூங்கிப் போவது உண்மையிலேயே ஒரு வரம் மாதிரி.
அது இயல்பாக
அப்படியே பழக்கப் படுத்தப்படவேண்டும். தூக்கம் வராமல்
தவித்து
, அதற்காக மருந்துகள் எடுத்துக் கொள்வது என்பது
மிக மோசமான பழக்கம்.



நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள். பாதித் தூக்கத்தில்
திடீரென
விழித்துக் கொள்கிறீர்கள் என
வைத்துக் கொள்வோம். அதைப் பற்றி பெரிதாகக் கவலைப்பட
வேண்டாம். உடனே மறுபடி தூங்க
ஆரம்பித்து விடுங்கள். மறுநாள் காலையில் வழக்கம் போல
தானாக விழிப்பு வரும்.
குறிப்பிட்ட சில மணி நேரம் நன்றாகத் தூங்குவது
, அந்த நாள் முழுவதற்குமான
புத்துணர்வையும்
, சுறுசுறுப்பையும் தரும்.


நீங்கள் தூங்கப் போகிற நேரத்தையும், விழிக்கிற நேரத்தையும்
முறைப் படுத்திக்
கொள்ளுங்கள். தினம் ஒரே நேரத்தில் தூங்குவதையும், விழித்துக் கொள்வதையும்
வழக்கப்
படுத்த்திக் கொள்ளுங்கள்.


பகல் தூக்கம் வேண்டவே வேண்டாம். ரொம்பவும் அசதியாக
உணர்கிறீர்களா
? கண்களை மூடியபடி சிறிது நேரம்
தியானம் செய்யலாம். குட்டித் தூக்கம் போட்டதற்கு இணையான
புத்துணர்வைத் தரும்
டெக்னிக் இது.



தூக்கம் வரவில்லையே என்கிற கவலையை விடுங்கள். டென்ஷன், கோபம், கவலை இல்லாத மனது நல்ல தூக்கத்துக்கு
அடிப்படை. உடல்நலத்தில் ஏதேனும் கோளாறுகள் இல்லாத
பட்சத்தில் எல்லாருக்கும்
போதிய அளவு தூக்கம் நிச்சயம் வரும்.



உடற்பயிற்சிக்கும், தூக்கத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. தினசரி சில மணி நேரம் ஏதேனும் ஒரு
உடற்பயிற்சியை மேற்கொள்கிறவர்களுக்கு தூக்கமின்மை
பிரச்சினையே வராது.
குறிப்பாக நடைப்பயிற்சி.



மனச்சோர்வுக்குக் காரணமான ஹார்மோன்கள்தான் ஒருவரைத்
தூக்கமில்லாமல் புரண்டு
, புரண்டு தவிக்க வைக்கிறது. உடற்பயிற்சி செய்வதன் மூலம், இது கட்டுப்படுத்தப் படுவதால், நல்ல தூக்கம் நிச்சயம். மாலை
நேரத்தில் ரொம்பவும் வேகமாக
, வியர்க்க, விறுவிறுக்க உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்கவும்.


நீங்கள் படுக்கும் அறை ரம்மியமாக, போதிய அளவு காற்றோட்டதுடன்
கூடியதாக
இருக்க வேண்டியது முக்கியம்.


தூங்கச் செல்வதற்கு முன் காபி, கோலா மாதிரியான பானங்களைத்
தவிருங்கள்.
மதியம் 2 மணி அளவில் குடித்த காபியே, இரவுத் தூக்கத்தைப்
பாதிக்கும் அளவுக்குத்
தீவிரம் கொண்டதாம். கோலா, சாக்லேட், டீ போன்றவையும் தவிர்க்கப் படவேண்டும்.


நீங்கள் தூங்கும் திசையும் நல்ல தூக்கத்துடன் தொடர்பு
கொண்டது. வடக்குப்
பக்கம் தலை வைத்துப் படுத்தால் நல்ல உறக்கம் வருமாம்.


தூங்கச் செல்வதற்கு முன்பு வெதுவெதுப்பான தண்ணீரில்
குளிப்பது கூட நல்ல
, ஆழ்ந்த தூக்கத்தைத் தரும்.


மனதுக்குப் பிடித்த புத்தகங்கள் படிப்பது, மெல்லிய இசையை ரசித்தபடி படுத்திருப்பது போன்றவையும்
தூக்கம் வரவழைக்கும்.



அரோமாதெரபியில் தூக்கமின்மைக்கான பிரத்யேக சிகிச்சைகள்
உள்ளன. லேவண்டர்
மாதிரியான குறிப்பிட்ட அரோமா ஆயில்களுக்கு தூக்கத்தைத்
தூண்டும் குணம் உண்டு. நல்ல
அரோமாஃபேஷியல் பல நாட்களாகத் தூக்கமின்றித் தவிப்போரது
பிரச்சினையை ஒரே இரவில்
மாற்றும். அரோமாஃபேஷியல் செய்து கொள்கிறபோது, அரோமாதெரபியில் கை தேர்ந்த நிபுணர்களிடம் செய்து
கொள்வது நல்லது. அழுத்தப் புள்ளிகளைப் பார்த்துச் செய்ய
வேண்டிய ஃபேஷியல் என்பதால்
கவனம் தேவை.






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jun 24, 2010 1:11 pm

நமது தூக்கத்தை எவை கட்டுப்படுத்துகின்றன?


நரம்புக் கலங்களின் இயக்கத்தை
கட்டுப்படுத்தும் இரசாயன நரம்புத்
; தூண்டிகள்தாம் (neurotransmitters). இவை நாங்கள்
விழித்திருக்கும் போதும் தூங்கும் போதும் நரம்புக் கலங்களைத்
தூண்டிக் கொண்டுதான்
இருக்கின்றன. ஆனால் வௌ
;வேறு நேரங்களில் வௌ;வேறு நரம்புத் தொகுதிகளைத் தூண்டிக் கொண்டே
இருக்கின்றன.
நமது மூளையையும் முண்நாணையும் இணைக்கும்
நரம்புத்தண்டானது சிரோடொனின் (
serotonin)மற்றும் நோஎவிநெவ்ரின் (norepinephrine) போன்ற இரசாயன நரம்புத்; தூண்டிகளைச் சுரக்கிறது. இவை
நாம் முழிப்பாக இருக்கும் போது எமது
மூளையை சுறுசுறுப்பாக இயங்க
வைக்கின்றன.



இதேபோல நாம் தூங்கும் போது எமது மூளையின்
அடிப்பாகத்திலிருக்கும் வேறு
நரம்புக் கலங்கள் இயங்கத் தொடங்குகின்றன. இதன் காரணமாக நாம்
தூங்கும் போதும் மூளை
இயங்குகிறது, ஆனால் பலத்த சத்தம் கேட்டால் விழித்தெழச் செய்கிறது.
இருதயம் சீராகத்
துடிக்கிறது. சுவாசம் ஒழுங்காக நடக்கிறது. இவ்வாறு நாம்
தூங்கும் போதும் உடலும்
, முளையும் எமது நினைவறியாமல் இயங்கிக் கொண்டே இருக்கின்றன.


நாம் நீண்ட நேரம் விழித்திருக்கும் போது
தூக்கக் கலக்கம் வருவதற்குக் காரணம்
என்ன?


நாம் விழித்திருக்கும் போது எமது குருதியில் அடினோசின் (adenosine) என்ற இராசாயனப் பொருளின்
அளவு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
விழித்திருக்கும் நேரம்
கூடக் கூட குருதியில் அடினோசினின் செறிவு அதிகரித்து எமக்கு
தூக்கக் கலக்கத்தை
ஏற்படுத்துகிறது. பிற்பாடு நாம் தூங்கும் போது இவ் இரசாயனமானது
படிப்படியாக சிதைந்து
மறைந்து போகிறது.



இது ஒரு சிறிய உதாரணம் மட்டுமே. இதன் மூலம் புரிவது
என்னவென்றால் நாம்
விழித்திருக்கும் போது எமது குருதியில் சேரும் கழிவுப்பொருளான அடினோசின் சிதைந்து அழிய வேண்டும். அதற்குப்
போதிய நித்திரை தேவை என்பதுதானே. நாம் தூங்கும்
நேரத்திலும் மூளையானது
செயற்பட்டே இந்த இரசாயனத்தை அழிக்கிறது. அதனாலேயே மூளை
மீண்டும் சுறுசுறுப்பாக இயங்க
முடிகிறது.






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக