புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு மனைவியின் கடிதம் Poll_c10ஒரு மனைவியின் கடிதம் Poll_m10ஒரு மனைவியின் கடிதம் Poll_c10 
62 Posts - 63%
heezulia
ஒரு மனைவியின் கடிதம் Poll_c10ஒரு மனைவியின் கடிதம் Poll_m10ஒரு மனைவியின் கடிதம் Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
ஒரு மனைவியின் கடிதம் Poll_c10ஒரு மனைவியின் கடிதம் Poll_m10ஒரு மனைவியின் கடிதம் Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
ஒரு மனைவியின் கடிதம் Poll_c10ஒரு மனைவியின் கடிதம் Poll_m10ஒரு மனைவியின் கடிதம் Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
ஒரு மனைவியின் கடிதம் Poll_c10ஒரு மனைவியின் கடிதம் Poll_m10ஒரு மனைவியின் கடிதம் Poll_c10 
1 Post - 1%
viyasan
ஒரு மனைவியின் கடிதம் Poll_c10ஒரு மனைவியின் கடிதம் Poll_m10ஒரு மனைவியின் கடிதம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு மனைவியின் கடிதம் Poll_c10ஒரு மனைவியின் கடிதம் Poll_m10ஒரு மனைவியின் கடிதம் Poll_c10 
254 Posts - 44%
heezulia
ஒரு மனைவியின் கடிதம் Poll_c10ஒரு மனைவியின் கடிதம் Poll_m10ஒரு மனைவியின் கடிதம் Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
ஒரு மனைவியின் கடிதம் Poll_c10ஒரு மனைவியின் கடிதம் Poll_m10ஒரு மனைவியின் கடிதம் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒரு மனைவியின் கடிதம் Poll_c10ஒரு மனைவியின் கடிதம் Poll_m10ஒரு மனைவியின் கடிதம் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
ஒரு மனைவியின் கடிதம் Poll_c10ஒரு மனைவியின் கடிதம் Poll_m10ஒரு மனைவியின் கடிதம் Poll_c10 
15 Posts - 3%
prajai
ஒரு மனைவியின் கடிதம் Poll_c10ஒரு மனைவியின் கடிதம் Poll_m10ஒரு மனைவியின் கடிதம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஒரு மனைவியின் கடிதம் Poll_c10ஒரு மனைவியின் கடிதம் Poll_m10ஒரு மனைவியின் கடிதம் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஒரு மனைவியின் கடிதம் Poll_c10ஒரு மனைவியின் கடிதம் Poll_m10ஒரு மனைவியின் கடிதம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஒரு மனைவியின் கடிதம் Poll_c10ஒரு மனைவியின் கடிதம் Poll_m10ஒரு மனைவியின் கடிதம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஒரு மனைவியின் கடிதம் Poll_c10ஒரு மனைவியின் கடிதம் Poll_m10ஒரு மனைவியின் கடிதம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு மனைவியின் கடிதம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 10, 2009 11:46 pm

ரவீந்திரநாத் தாகூர்

ஆங்கில வழி தமிழாக்கம் - திருவைகாவூர்.கோ. பிச்சை

ஒரு மனைவியின் கடிதம் Purple10
தங்கள் புனிதமான தாமரைப் பாதங்களுக்கு,

நாம் திருமணம் செய்து கொண்டு இன்றுடன் பதினைந்து வருடங்கள் ஆகின்றன. ஆயினும் நான் இன்றுவரை உங்களுக்குக் கடிதம் எழுதியதே இல்லை. நான் எப்போதும் உங்கள் அருகில்தான் இருந்தேன். என்னிடம் இருந்து நீங்கள் பல விஷயங்களைக் கேட்டு தெரிந்து கொண்டீர்கள். அதேபோல் நானும் உங்களிடமிருந்து பலதையும் அறிந்து கொண்டேன். ஆனால் நம்மிடையில் கடிதம் எழுதிக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததில்லை.

நான் இப்போது புனிதப்பயணம் மேற்கொண்டு பூரிக்கு வந்திருக்கிறேன். நீங்கள் அலுவலக வேலையில் மூழ்கி இருந்தீர்கள். கல்கத்தாவுடன் உங்களது உறவு, நத்தைக்கும் அதன் ஓட்டிற்கும் உள்ளதைப் போன்றது. அந்த நகரம் தங்களுடைய உடலையும் உள்ளத்தையும் பிடித்து தன்னுடன் கெட்டியாக ஒட்டிவைத்துக் கொண்டுள்ளது. ஆகவே நீங்கள் விடுமுறைக்காக விண்ணப்பம் செய்ததே இல்லை. அது கடவுளின் சித்தம். அதனால் கடவுள் எனது விடுமுறை விண்ணப்பத்தையும் அனுமதிக்கவில்லை.

உங்கள் கூட்டுக்குடும்பத்தில் நான் இரண்டாவது மருமகள். இன்று பதினைந்து வருடங்களுக்குப் பிறகு கடலின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறேன். இந்த உலகத்துடனும், இந்த உலகத்தை பரிபாலிப்பவனுடனும் எனக்கு வேறு உறவுகள் இருக்கின்றன என்பதையும் நான் புரிந்து கொண்டிருக்கிறேன். அதனால்தான் இந்தக் கடிதம் எழுத எனக்குத் தைரியம் வந்தது. இந்தக் கடிதம் உங்கள் குடும்பத்தின் இரண்டாவது மருமகளுடையது அல்ல. உங்களுடைய இரண்டாவது மனைவியினுடையதும் அல்ல.

நீண்ட காலத்திற்கு முன் என் குழந்தைப் பருவத்திலேயே எனது திருமணம் உங்களுடன்தான் என்று நிச்சயிக்கப்பட்டுவிட்டது. இது நம் தலைவிதியை எழுதி உள்ள எல்லாம்வல்ல இறைவனுக்கு மட்டுமே தெரிந்திருந்தது. அப்போது நானும் என்தம்பியும் பித்தவாத காய்ச்சலால் பீடிக்கப்பட்டோம். என் தம்பி இறந்து போனான். நான் பிழைத்துக் கொண்டேன். அண்டை அயல் வீட்டுப் பெண்கள் எல்லோரும் சொன்னார்கள்:

''மிருனாள், பெண்ணாக இருந்ததனால்தான் பிழைத்துக் கொண்டாள். அவள் ஆண்பிள்ளையாக இருந்திருந்தால் அவளைக் காப்பாற்றி இருக்கமுடியாது'' . உயிரைப் பறித்துச் செல்வதில் எமன் மதிநுட்பம் மிக்கவர். மதிப்புமிக்க உயிரை மட்டும் தான் அவர் எடுத்துச் செல்கிறார்.

அப்போது எனக்கு மரணம் சம்பவிக்கவில்லை. இதைவிரிவாக விளக்குவதற்காகத்தான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

உங்கள் தூரத்து உறவினரான மாமாவும் உங்கள் நண்பர் நிரோத்தும், உங்கள் எதிர்காலத்திற்கு ஏற்றப் பொருத்தமான மனைவியைத் தேர்ந்தெடுக்க வந்தபோது எனக்குப் பன்னிரண்டு வயதுதான். நீங்கள் சுலபத்தில் வந்து சேரமுடியாத தொலைவில் உள்ள கிராமத்தில் நாங்கள் வசித்தோம். அந்த கிராமத்தில் பகல் நேரத்திலேயே குள்ளநரிகள் ஊளையிடும். ரயில் நிலையத்திலிருந்து பதினான்கு மைல்கள் மாட்டு வண்டியில் வரவேண்டும். பிறகு சரியாக சீரமைக்கப்படாத ஆறுமைல் சாலையில் பல்லக்கில் வரவேண்டும். அவர்களுக்குப் பயணம் சலித்து விட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக எங்கள் கிழக்கு வங்க சமையல் பக்குவம் அவர்கள் மகிழ்ச்சியைக் குலைத்து விட்டது. அந்தக் காய்கறிப் பக்குவம் பற்றி இப்போதும்கூட உங்கள் மாமா கிண்டலும் கேலியும் செய்வார்.

சாதாரணத் தோற்றமுள்ள பெண்ணை உங்களுக்கு மணம் முடித்ததை ஈடுசெய்வதற்காக இரண்டாம் தாரத்தையாவது அழகான பெண்ணாகத் தேர்ந்தெடுத்து உங்களுக்கு மணம் செய்ய வேண்டுமென்று உங்கள் அம்மா குறிப்பிட்டிருந்தார். இல்லாவிட்டால் நீங்கள் எதற்காக இந்தத் தொலைதூர கிராமத்திற்கு வந்து அதிக நேரம் தொல்லைபடப் போகிறீர்கள்? வங்காளத்தில், மஞ்சள் காமாலை, வயிற்றுக் கடுப்பு, அல்லது மணப்பெண் இவற்றிற்காக யாரும்தேடி அலையவேண்டியதில்லை. வந்தவர்கள் தங்கள் முடிவின்படி என்னை விட்டுவிடாமல் அழைத்துவந்து உங்களுடன் ஒட்ட வைத்துவிட்டார்கள்.

என் தந்தையின் இதயம் துடிக்க ஆரம்பித்துவிட்டது. என் தாயார் துர்க்காதேவியின் பெயரை மீண்டும் மீண்டும் உச்சரித்துக் கொண்டே இருந்தார். நகரத்தின் தெய்வத்திற்கு ஒரு கிராமத்தின் பூசாரியால் எதை சமர்ப்பிக்க முடியும்? அவர்கள் தங்கள் பெண்ணின் வசீகரத் தோற்றத்தையே நம்பி இருந்தனர். ஆனால் பெண்ணுக்கு இதில் தற்பெருமையோ கர்வமோ இல்லை. அவளை யார் பார்க்க வருகிறார்களோ. அதற்காக அவர்கள் என்ன விலை கொடுக்க விரும்புகிறார்களோ அதுவே அவளுடைய பெறுமானம் ஆகும். அதனால் அவளது பேரழகோ சிறப்பான நேர்மையும் நல்லொழுக்கமும் ஒரு பெண்ணுக்கு அவளது சந்தேகத்தை அகற்றிவிடாது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 10, 2009 11:46 pm

உங்கள் குடும்பத்தினரின் மற்றும் அண்டை அயலாரின் பயமுறுத்தல்கள் என் நெஞ்சில் கல்லாக உட்கார்ந்து கொண்டது பன்னிரண்டு வயது கிராமத்துப் பெண்ணைத் துருவித் துருவி ஆராயும் கண்களோடு வந்த அந்த இருவருக்கும் பகல் நேர வானமும், அதன் வண்ண ஒளியும், பிரபஞ்சத்தின் வலிமையும், பணி ஆட்களாகத் துணைக்கு வந்ததாகத் தோன்றியது. அந்தப் பரிசோதகர்களின் பார்வையிலிருந்து ஒளிந்து கொள்வதற்கு எனக்கு இடமில்லை.

திருமணத்தின் சோகக்குழலோசை வான வெளியை துயரத்தில் ஆழ்த்தியது. வீட்டில் வாழ நான் வந்து சேர்ந்தேன். உங்கள் இல்லப்பெண்கள், எனது குறைபாடுகளை நீளமாக அட்டவணை போட்டார்கள். என்னை அழகி என்று கருதியதால் அவர்கள் தாராளமனத்தோடு என்னை ஏற்றுக் கொண்டார்கள். இதைக் கண்ட எனது மூத்தாள் - அவர்தான் உங்கள் முதல் மனைவி - முகத்தில் சஞ்சலம் ஏற்பட்டது. அழகாக இருப்பதற்கு என்ன தேவை என்று நான் ஆச்சரியம் அடைந்தேன். உங்கள் குடும்பத்தினர் அழகுக்காக என்னை நேசிக்கவில்லை. கங்கைநதியின் புதின மண்ணெடுத்து முனிவரால் எனது அழகு உருவம் வனையப்பட்டிருந்தால் அது எல்லோருடைய பாராட்டுதலையும் பெற்றிருக்கும். ஆனால் என்னைப் படைத்தவர் தன் விருப்பத்திற்கு ஏற்ப என்னை வடிவமைத்துவிட்டார். அதனால்தான் பக்தியுள்ள உங்கள் குடும்பத்தினர் அந்த அழகைப் போற்றவில்லை.

எனக்கு அழகு இருந்தது. அதை மறக்க உங்களுக்கு அதிகநாள் ஆகவில்லை. எனது ஒவ்வொரு நடவடிக்கையும், நானும் அறிவுள்ள பெண்தான் என்று உங்களுக்கு ஞாபகப்படுத்திக் கொண்டு வந்தது. இந்த அறிவுக் கூர்மை என்னுள் ஆழப்பதிந்திருந்தது. உங்களுக்காகப் பல வருடங்கள் வீட்டின் பொறுப்பைக் கவனித்துக் கொண்டிருந்தபோதிலும் அது என்னிடத்தில் தங்கி இருந்தது. எனது புத்திசாலித்னத்தைக் கண்டு என் தாயார் எப்போதும் கவலையுடன்தான் இபருப்பாள். பெண்களுக்கு அது ஒரு தலைவலியான பிரச்சினைதான்.

அவளது வாழ்க்கை ஒரு எல்லைக்குள் வழிகாட்டப்பட்டால், அவளது அறிவு வழிகாட்டும் வேறு வாழ்க்கையைத் தேடும் போது பலதடை மதில்களில் மோதி மண்டை உடைந்து எதிர்காலமும் தகர்ந்து விடுகிறது. ஆனால் நான் என்ன செய்ய முடியும்? வீட்டில் உள்ள மற்ற பெண்களுக்கு அறிவு பற்றாக்குறையாக இருக்கிறது. கடவுள் கவனக்குறைவான நேரத்தில் இந்த அறிவுச் செல்வத்தை எனக்கு வாரி வழங்கிவிட்டார். என்னிடம் உபரியாக உள்ளதை யாருக்கென்று நான் கொடுக்க முடியும்? நீங்கள் அனைவரும் என்னை பிஞ்சில் பழுத்தவள், ஆணவக்காரி என்று கடிந்து கொண்டீர்கள். இப்படி கசப்பான குற்றச்சாட்டுகளும், உங்களுக்குள் சொல்லிக்கொள்ளும் தகுதியற்ற ஆறுதல்கள்தான். உங்கள் அனைவரின் ஏசல்களை எல்லாம் நான் மன்னித்துவிட்டேன்.

உங்கள் வீட்டிற்கு உண்டான வேலைகளை நான் செய்தும், அதற்கப்பாலும் உங்கள் யாருக்கும் தெரியாத சில வேலைகளும் எனக்கிருந்தன. ரகசியமாக நான் கவிதைகள் எழுதிவந்தேன். அது குப்பையாக இருந்தாலும் கவலை இல்லை. குறைந்தபட்சம் உள்சுற்றுச்சுவர் என்னைத் தடுத்து நிறுத்தமுடியவில்லை. அங்கு எனது சுதந்திரம் விரிந்திருந்தது. அங்கு நான் நானாகவே இருந்தேன். என்னிடம் என்ன இருந்ததோ அது என்னை உங்கள் குடும்பத்திலிருந்து விலக்கிவிட்டது. உங்களுக்கும் இது பிடிக்கவில்லை. நீங்கள் அங்கீகரிக்கவும் இல்லை. இந்தப் பதினைந்து வருடங்களிலும் உங்களில் ஒருவர்கூட நான் ஒரு கவிஞர் என்பதை கண்டுபிடிக்கவில்லை.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 10, 2009 11:47 pm

உங்கள் வீட்டிற்கு நான் வந்ததும் ஆரம்ப நினைவுகளாக எனக்கு வருவது உங்கள் மாட்டுக் கொட்டகைதான். மாடிப்படியிலிருந்து இறங்கி நேராக உள்புற அறைகளுக்கு செல்லும் வழியில் ஒரு அறையில் அந்தப் பசுமாடுகள் அடைக்கப்பட்டிருந்தன. அறைக்கு முன்புறமாக இருந்த முற்றத்தில் அவைகள் திரிய இடம் இருந்தது. அந்த முற்றத்தில் ஒரு மூலையில் மாடுகளுக்கான தீவனம் வைக்க ஒரு மண்தொட்டி இருந்தது. காலையில் வேலைக்காரர்கள் பார்க்க வேண்டிய அநேக வேலைகள் இருந்தன. காலை நேரம் முழுவதும் பசியுடன் இருந்த பசுக்கள் தொட்டியின் விளிம்பை நக்கிக் கடித்து அந்தத் துண்டுகளைத் தின்றன. அவைகளுக்காக என் இதயம் அழுதது. நான் ஒரு கிராமத்துப் பெண். உங்கள் வீட்டிற்கு வந்ததும் முதலில் அந்த இரண்டு பசுக்களும் மூன்று கன்றுகளும் மட்டுமே நகரத்தில் எனது நண்பர்கள் என்று என் மனத்தில் பட்டது. நான் புது மணப்பெண்ணாக இருந்த போது அவைகளுக்கு எனது உணவைக் கொடுப்பேன். நாளடைவில், எனது முன்னோர்கள் பற்றியும் தொழில் பற்றியும், குடும்பத்தைப் பற்றியும் அவர்கள் சந்தேகத்தை வெளிப்படுத்தும்படி செய்துவிட்டது. நாங்கள் மாடுகன்று வளர்த்து மேயப்பவர்கள் என்று கேலியாகப் பேசினர்.

எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது - இறந்துவிட்டது. அக்குழந்தை தன்னுடன் வரும்படி என்னையும் அழைத்தது. அது உயிருடனிருந்திருந்தால். அவள் எனது வாழ்க்கையில் அதிசயங்களையும் உன்னதங்களையும் வழங்கி இருப்பாள். மருமகள் என்ற நிலையிலிருந்து நான் அன்னையாகி இருப்பேன். ஒரு தாய்க்கு அவள் குறுகிய வட்டத்திற்குள் இருந்தாலும் அதுவே எனக்கு ஒரு பேருலகமாக மாறி இருக்கும். தாயாக இருக்க இயலவில்லையே என்று என் மனம் வருந்தினாலும் நான் எனது சுதந்திரத்தை இழக்கவில்லை.

உள்மதில் சுவரைத்தாண்டி ஆங்கில மருத்துவர் வந்தபோது அவர் ஆச்சரியம் அடைந்ததை ஞாபகமிருக்கிறது. பிரசவ அறையைப் பார்த்த அவர் கோபமடைந்து திட்டினார். வீட்டின் முதல் பகுதியின் முன்புறம் சிறிய பூந்தோட்டம் இருந்தது. அதை ஒட்டி இருந்த வெளிப்புற அறைகளில் இருக்கைகளுக்கோ அலங்காரத்திற்கோ குறைச்சல் இல்லை. வீட்டின் பின்புறப்பகுதியில் உள்ள அறைகள் பூவேலை செய்யப்பட்ட துணியின் பின்புறம் போல இருக்கும். அறையில் பிரசவத்தின் போது பிறந்தமேனியில் இருக்க மறைவான இடமில்லை. அழகு இல்லை. மங்கலாக எரியும் விளக்கு ஒன்று. திருடனைப் போலத்தான் காற்று அறையில் நுழைய முடியும். கழிவுப் பொருள்கள் அகற்றப்படாமல் அங்கேயே கிடக்கும். சுவரிலும் தரையிலும் உள்ள கறைகள் தெளிவாகக் கண்ணில்படும். அழிக்க முடியாத அளவு அழுத்தமான கறைகள். ஆனால் மருத்துவர் ஒரு தவறு செய்தார். அறையைப் பற்றிய இந்த அலட்சியம் எங்களுக்கு வருத்தத்தை உண்டாக்கும் என்று நினைத்தார். ஆனால் எங்கள் கருத்து நேர்மாறானது. அலட்சியம் சாம்பலைப் போன்றது. அந்த சாம்பல் தனக்குள் இருக்கும் நெருப்பின் சூடு அணையாமல் பாதுகாக்கிறது. சுயமரியாதைக்குப் பின்னடைவு ஏற்படும்போது, கவனக்குறைவு அநீதியாகத் தோன்றுவதில்லை. ஆகவே அவை எங்களுக்கு எவ்வித மனவேதனையையும் உண்டாக்குவதில்லை. அதனால் தான் பெண்கள் இந்தத் தொல்லையை அனுபவிக்க வெட்கப்படுகின்றனர். ஆகவே நான் சொல்கிறேன்: இதுதான் உங்கள் திட்டம் என்றால் பெண்கள் சிரமப்படுவார்கள் தான். முடிந்த வரையில் அவர்களை அலட்சியமாக நடத்துவதே சிறப்பாக இருக்கும். அக்கறையோடு கவனிப்பதும் அன்பு செலுத்துவதாலும் கஷ்டங்கள் மேலும் மோசமாகும்.

அது எப்படி இருந்த போதிலும் நான் அனுபவித்த வேதனைகளை நினைவு கொள்ளும் வாய்ப்பே எனக்குக் கிட்டவில்லை. பிரசவ அறையிலேயே மரணம் வந்து என் அருகிலேயே நின்றது. எனக்கு பயமே இல்லை. மரணத்திற்குப் பயந்தால் நமக்கு என்ன வாழ்க்கை இருக்கப் போகிறது? யார் ஒருவருடைய வாழ்க்கை இறுக்கமாகக் கட்டி அன்போடும் ஆதரவோடும் இணைக்கப்பட்டுள்ளதோ அவள்தான் மரணத்தின் முன்பு அஞ்சி நடுங்க வேண்டும். லேசான இளகிய பூமியிலிருந்து இழுக்கப்பட்ட புல்லானது வேரோடும், மண்ணோடும் கத்தையாக வருவது போல, அன்று எமதர்மன் என்னை இழுத்திருந்தால் நானும்கூட அவர் கையகப்பட்டிருப்பேன். சின்னதாக சாக்குப்போக்கு கிடைத்தாலும் வங்காளத்துப் பெண் மரணத்தைத் தழுவிக் கொள்வாள். ஆனால் அப்படிப்பட்ட சாவில் துணிச்சல் எங்கிருக்கிறது? சாக்காடும்கூட எங்களுக்கு சுலபமானது தான். அப்படி மரணம் அடைய நான் வெட்கப்படுகிறேன்.
ஒரு மனைவியின் கடிதம் Marieb11ஒரு மனைவியின் கடிதம் Redroseஒரு மனைவியின் கடிதம் Marieb10


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக