ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Today at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு காதலனின் டைரிக் குறிப்பு !

4 posters

Go down

ஒரு காதலனின் டைரிக் குறிப்பு ! Empty ஒரு காதலனின் டைரிக் குறிப்பு !

Post by சிவா Sat Jul 11, 2009 10:45 am

இன்றைக்காவது வந்திருக்குமா ?

அவளிடமிருந்து கடிதம் !

பழகிப் போன ஆஃபீஸ் !

பழகிப் போன அவமதிப்புகள் !

பழகிப் போன சின்னச் சின்ன தோல்விகள் !

என்ன செய்தாலும் தவறு சொல்லி பல்லிளிக்கிற முட்டாள் கம்ப்யூட்டர் !

நாள் முழுக்க ஓடிக் கொண்டிருக்கிற சக ஆஃபீஸ்வாசிகள் !

ஆளுக்கொரு தீவாய்

அஞ்சு மணி வரை உழைத்து விட்டு

' நாளைக்குப் பார்ப்போம் '

- சம்பிரதாயப் புன்னகையுடன் விடைபெற்று

நெரிசலான தெருக்களிடை

வாகனப் புகை சுவாசிப்பிடை

வீடு நோக்கிப் பயணிக்கையில் தோன்றியது.,

இன்றைக்காவது வந்திருக்குமா ?

அவளிடமிருந்து கடிதம் !

வந்திருக்கும் !

- நினைப்பே மனசு நிறைத்தது !

ஆனால் நிஜமாய் வந்திருக்குமா ?

வந்திருக்கும் !

வந்திருக்க வேண்டும் !

வந்திருக்கலாம் !

பதில்களும் கேள்விகளாய்த் தோன்றினது

அபார்ட்மென்ட் என்கிற

சின்னச் சின்னக் கூண்டுகளை நெருங்கி

நிரம்புமுன் தபால் பெட்டி அடைந்தேன்

பதட்டத்தில் சாவி கூட தட்டுப்பட மறுத்தது.,

அவசரமாய் தேடி எடுத்துத் திறக்கையில்

மனசு பலமாய்த் துடித்தது உயிர் வரை கேட்டது !

ம்ஹூம்.,

தூசு நிரம்பின வெற்றுப் பெட்டி !

எழும்பின மனசு அடங்கினது.,

தன்னையே திட்டிக் கொண்டது.,

வராது.,

நாளைக்கும் வராது.,

நாளை மறுநாளும் வராது.,

உனக்கெல்லாம் லெட்டர் ஒரு கேடா ? ? ?

என்னைத் திட்டி அலுத்த மனசு

அடுத்து அவளைத் திட்டலானது !

என்ன செய்கிறாள் இவள் ?

எனக்கென சில நிமிடம் செலவழிக்கக் கூட மனமில்லையா ?

மூன்று கடிதங்களாய் பதில் இல்லை என்பதிற்கு என்ன அர்த்தம் ?

என்ன தப்பு செய்தேன் நான் ?

அல்லது அவள் வீட்டில் ஏதும் பிரச்சனையா ? ?

பொத்தி வைத்து வளர்த்த காதல் வெளிச்சமாய்ப் போனதோ ?

அச்சிலேறத் தகாத வார்த்தைகளில் அவளைத் துளைத்தார்களோ ?

வெளியுலகோடு தொடர்பே அனுமதியாது

ஒற்றை அறையில் வைத்துப் பூட்டப் பட்டாளோ ?

மனசு அத்தனை சாத்தியங்களும் யோசித்தது.,

உடனே அவளைப் பார்க்க வெண்டும் போலிருந்தது !

மனதிற்கென்ன.,

தூரங்கள்,

நேரங்கள்,

காத்திருக்கிற கடமைகள்,

இயல்பவை, இயலாதவைகள் என்கிற சாத்தியங்கள் என்று

எதுவும் புரியாத மனதிற்கென்ன ?

கோட்டைகள் கட்டி விடும் !

இயலாமை உணர்தலும்

அதனாலான குற்ற உணர்ச்சியும்

இன்னும் எத்தனை நாளோ தொியவில்லை !

வெறுமையாய்த் திரும்புகையில்தான் அந்த புறாவைப் பார்த்தேன்.

மூலையில் கிடந்து முனகினது !

அருகில் போய்ப் பார்த்த போது வழிந்த ரத்தம் நிலைமை சொன்னது !

என்னவாகியிருக்கும் ?

இறக்குமதிக் கார்களாய் போய்வருகிற இந்தப் பாதையில்

எங்கே அடிபட்டதோ இந்தப் புறா ?

பூவைக் காயம் செய்ய யாருக்கு முடிந்ததோ ?

அவசரமாய் ஏதேனும் செய்யத் துடித்தேன் !

பக்கத்துத் தெருவில் ஒரு பிராணிகள்டாக்டர் பலகை கண்டது ஞாபகம் வந்தது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒரு காதலனின் டைரிக் குறிப்பு ! Empty Re: ஒரு காதலனின் டைரிக் குறிப்பு !

Post by சிவா Sat Jul 11, 2009 10:46 am

புறாவை அப்படியே அள்ளின போது அது லேசாய்த் துடித்தது.,

வண்டியில் முன்னால் அதை வைத்து அதிகம் அசைக்காமல் விரைந்தேன்.

என் நேரமோ, புறாவின் நேரமோ, டாக்டர் இருந்தார்.

நடுவிரலில் கண்ணாடியை ஏற்றிவிட்டபடி புறாவை ஆராய்ந்தார்.

' என்ன மேன் ?., உன் வண்டியாலே இடிச்சியா இதை ? '

' இல்லை டாக்டர் '

அவசரமாய்த் தலையாட்டினதை அவர் நம்பவில்லை.

சின்ன காயம்தான்.,

கால் மணி நேர வேலை.

காயத்தை சுத்தம் செய்து மருந்தமைத்து

சின்னதாய் ஒரு ப்ளாஸ்டர் போட்டபோது புறா சரியாய்ப் போனது.

பறக்கத் துடித்ததை கவனமாய்ப் பிடித்து என்னிடம் கொடுத்தார் டாக்டர்.

பணம் எடுத்துக் கொடுத்தேன்.

' இது உன் புறாவா மேன் ? '

' இல்லை டாக்டர் '

' அப்படான்னா நீ ஏன் மேன் பணம் தரணும் ?

உன்னைப் போலே நானும் சேவை செய்யக் கூடாதா ? '

வெள்ளையாய்ச் சிரித்தார்.

'இந்த மாதிரி வைத்தியங்களுக்கு நான் பணம் வாங்கறதில்லை மேன்., போய் வா '

உலகில் எங்கேயும் மனிதர்கள்.,

தேடிப் பார்க்கத்தான் பொறுமை வேண்டும் !

யோசித்தபடி வெளியே வந்த போதுதான் அந்த யோசனை தோன்றினது.

இந்தப் புறாவை நானே வளர்த்தாலென்ன ?

மனசுக்குள் ஒரு காட்சி விரிந்தது.,

காலை எழுந்தவுடன் இது எனக்கு 'குட்மார்னிங் ' சொல்வதாய்.,

ஆஃபீஸ் கிளம்புகையில் நானும் உடன்வருவேன் என

பிடிவாதமாய் என் தோள் சேர்வதாய்.,

நான் சாப்பிடுகையில் கூடே சோறுண்பதாய்.,

என் மானிட்டர் மேலமர்ந்து சமர்த்தாய் சூழல் ரசிப்பதாய்.,

இன்னும் காட்சிகள் கற்பனையில் உதயமாக உதயமாக

என் ஆசை கூடிக் கொண்டே போனது

மனசு சிலசமயம் நல்லதும் செய்யும்.,

கடைசியாய் அது ஒரு காட்சி விரித்தது -

ஒரு மரக்கிளையில் உட்கார்ந்த

இதன் இணைப் பறவை.,

தன்னந்தனியாய் இதனைத் தேடுவதாய்.,

வாடுவதாய்.,

அதன் கண்களில் நிரந்தர சோகம் குடி கொண்டதாய்.,

சோகத்தில் அதன் முகம்,

என்முகம் போலவே.,

ஒரு வினாடியில் பூட்டிக் கிடந்த இருதயம் திறந்து கொண்டது !

கைகளிடைத் துடித்த பறவையைப் பறக்க விட்டேன்

அவசரமாய்ச் சிறகு விரித்த அது முதலில் கீழே விழ இருந்தது.,

எந்த தடுமாற்றமும் சில காலம்தான்

பின் வெண்சிறகுகள் விரித்து சந்தோஷமாய்ப் பறந்தது.

திரும்பி நின்று எனக்கொரு நன்றி சொல்லிப் போவதாய் நினைத்துக் கொண்டேன்.

போகட்டும்.,

அதுவேனும் இணையுடன்

சந்தோஷமாயிருக்கட்டும் !

முன்னைவிட துள்ளலாய் நடந்தபோது

மனசு முதுகு தட்டிச் சொன்னது.,

' கவலைப் படாதே.,

நாளைக்கு நிச்சயம் அவளிடமிருந்து

கடிதம் வரும் '

நம்பிக்கை துளிர்த்தது!


லாவண்யா
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒரு காதலனின் டைரிக் குறிப்பு ! Empty Re: ஒரு காதலனின் டைரிக் குறிப்பு !

Post by நிலாசகி Sat Jul 11, 2009 2:38 pm

ஒரு காதலனின் டைரிக் குறிப்பு ! 0002025D






நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

ஒரு காதலனின் டைரிக் குறிப்பு ! Empty Re: ஒரு காதலனின் டைரிக் குறிப்பு !

Post by சிவா Sat Jul 11, 2009 2:41 pm

இந்த ரோஸ் யாருக்கு?
கதையின் நாயகனுக்கா! எனக்கா?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒரு காதலனின் டைரிக் குறிப்பு ! Empty Re: ஒரு காதலனின் டைரிக் குறிப்பு !

Post by நிலாசகி Sat Jul 11, 2009 3:08 pm

லாவண்யாவுக்கு
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

ஒரு காதலனின் டைரிக் குறிப்பு ! Empty Re: ஒரு காதலனின் டைரிக் குறிப்பு !

Post by சிவா Sat Jul 11, 2009 3:11 pm

இத நான் எதிர்பார்க்கலை!!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒரு காதலனின் டைரிக் குறிப்பு ! Empty Re: ஒரு காதலனின் டைரிக் குறிப்பு !

Post by சதீஷ்குமார் Sat Jul 11, 2009 5:43 pm

படிக்கும் பொழுது ஆர்வத்தால் கண்களை இமைக்கக்கூட முடியவில்லை.
அருமை
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Back to top Go down

ஒரு காதலனின் டைரிக் குறிப்பு ! Empty Re: ஒரு காதலனின் டைரிக் குறிப்பு !

Post by ரூபன் Sun Jul 12, 2009 12:10 am

"இத நான் எதிர்பார்க்கலை!!!" சிரி
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ஒரு காதலனின் டைரிக் குறிப்பு ! Empty Re: ஒரு காதலனின் டைரிக் குறிப்பு !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum