புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
ஓவியக்கலையின் ராஜா ரவிவர்மா Poll_c10ஓவியக்கலையின் ராஜா ரவிவர்மா Poll_m10ஓவியக்கலையின் ராஜா ரவிவர்மா Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஓவியக்கலையின் ராஜா ரவிவர்மா Poll_c10ஓவியக்கலையின் ராஜா ரவிவர்மா Poll_m10ஓவியக்கலையின் ராஜா ரவிவர்மா Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
ஓவியக்கலையின் ராஜா ரவிவர்மா Poll_c10ஓவியக்கலையின் ராஜா ரவிவர்மா Poll_m10ஓவியக்கலையின் ராஜா ரவிவர்மா Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
ஓவியக்கலையின் ராஜா ரவிவர்மா Poll_c10ஓவியக்கலையின் ராஜா ரவிவர்மா Poll_m10ஓவியக்கலையின் ராஜா ரவிவர்மா Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஓவியக்கலையின் ராஜா ரவிவர்மா Poll_c10ஓவியக்கலையின் ராஜா ரவிவர்மா Poll_m10ஓவியக்கலையின் ராஜா ரவிவர்மா Poll_c10 
21 Posts - 4%
prajai
ஓவியக்கலையின் ராஜா ரவிவர்மா Poll_c10ஓவியக்கலையின் ராஜா ரவிவர்மா Poll_m10ஓவியக்கலையின் ராஜா ரவிவர்மா Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஓவியக்கலையின் ராஜா ரவிவர்மா Poll_c10ஓவியக்கலையின் ராஜா ரவிவர்மா Poll_m10ஓவியக்கலையின் ராஜா ரவிவர்மா Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஓவியக்கலையின் ராஜா ரவிவர்மா Poll_c10ஓவியக்கலையின் ராஜா ரவிவர்மா Poll_m10ஓவியக்கலையின் ராஜா ரவிவர்மா Poll_c10 
8 Posts - 2%
Guna.D
ஓவியக்கலையின் ராஜா ரவிவர்மா Poll_c10ஓவியக்கலையின் ராஜா ரவிவர்மா Poll_m10ஓவியக்கலையின் ராஜா ரவிவர்மா Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஓவியக்கலையின் ராஜா ரவிவர்மா Poll_c10ஓவியக்கலையின் ராஜா ரவிவர்மா Poll_m10ஓவியக்கலையின் ராஜா ரவிவர்மா Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஓவியக்கலையின் ராஜா ரவிவர்மா Poll_c10ஓவியக்கலையின் ராஜா ரவிவர்மா Poll_m10ஓவியக்கலையின் ராஜா ரவிவர்மா Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓவியக்கலையின் ராஜா ரவிவர்மா


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 2:30 am

ஓவியக்கலையின் ராஜா ரவிவர்மா Jan17-10
ராஜா ரவிவர்மா


ஓவியக்கலை என்றதுமே பலரும் உச்சரிப்பது பிக்காஸோ, லியனார்டோ டாவின்சி, சால்வடோர் டாலி போன்ற மேலைநாட்டுக் கலைஞர்களின் பெயர்களைத்தான். அவர்களுக்கு இணையாக சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பை உயர்த்திய பெருமை ரவிவர்மாவைச் சேரும்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தின் வடக்கே சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிளிமானூர் என்ற கிராமத்தில் 1848 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 -ல் பிறந்தவர் ரவிவர்மா. அவரது பெற்றோர் திருவாங்கூர் சமஸ்தானத்தின் அரச குடும்பத்துக்கு நெருங்கிய உறவுமுறை கொண்டவர்கள்.

கேரளாவின் பழமையான அரச குடும்பங்களுக்கே உரித்தான சமூக, பொருளாதார, கலாச்சார பிரதிபலிப்புகள் கிளிமானூர் இல்லத்திலும் படிந்திருந்ததில் வியப்பில்லை இலக்கியத்தின் மீதான இயல்பான ஆர்வம், கதகளி மற்றும் துள்ளல் போன்ற கலைகள் மீது ரவிவர்மாவின் குடும்பத்தாருக்குப் பெரும் ஈடுபாடும், திறனும் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. ரவிவர்மா ஒரு கலைஞனாக மிளிர்ந்ததில் அவரது தாயின் பங்கு மிகப் பெரியது. கதகளியில் ரவிவர்மாவுக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது.

18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பல்வேறு வரலாற்றுக் காரணங்களால் இந்தியக் கலைகள் பின்னடைவைச் சந்திக்க நேரிட்டது. இந்தியத் துணைக் கண்டம் முழுவதுமே இந்நிலை காணப்பட்டது. இந்தியாவில், மேற்கத்திய நாடுகளின் தொடர்பால் ஒரு புதிய கலப்புக் கலை உருவாகத் தொடங்கியது. இந்தியக் கலைஞர்கள் மேற்கத்திய முறைகளில் உள்ள நல்ல அம்சங்களை கிரகித்துக் கொண்டு தங்கள் பாரம்பரிய ஓவியக் கலைக்கு மெருகூட்ட முயற்சித்தனர்.

துணிகளின் மீது தைல வண்ணங்களைப் பயன்படுத்தும் புதியமுறை வேகமாய்ப் பரவியது. திருவனந்தபுரம் சமஸ்தானத்தின் ஆஸ்தான ஓவியராக அழகிரி நாயுடு என்பவர் அக் காலகட்டத்தில்தான் நியமிக்கப்பட்டார். ரவிவர்மாவின் மாமா ராஜவர்மா என்பவர் அழகிரி நாயுடுவிடம் அனைத்து கலை நுட்பங்களையும் கற்றுணர்ந்தார். அவரிடமிருந்தே ரவிவர்மா ஓவியக்கலையில் பால பாடத்தைப் படித்தார். ரவிவர்மாவின் ஓவிய ஆர்வம் ராஜவர்மாவை ஆச்சர்யப்படுத்தியது. அவரிடமிருந்து ரவிவர்மா கற்றுக் கொண்டது மிகக் குறைவான அளவே என்றாலும் பொறுப்பாகவும், அன்பாகவும் அவர் கற்றுத் தந்தது ரவிவர்மாவைக் கவர்ந்தது.

ரவிவர்மா தனது 14 ஆவது வயதில் திருவனந்தபுரம் சமஸ்தானத்தின் அரசர் 'ஆயில்யம் திருநாளின்' ஆதரவில் அரண்மனையில் வசிக்கத் துவங்கினார்.

அச் சமயம் அரண்மனை ஓவியராகயிருந்து வந்த ராமசாமி நாயக்கர் என்பவர் ரவிவர்மா தனக்குப் போட்டியாக வந்துவிடுவாரோ என்ற அச்சத்திலும், பொறாமையிலும் அவரை எதிரியாகப் பாவிக்கத் துவங்கினார். டச்சு நாட்டைச் சேர்ந்த தியோடர் ஜென்சன் என்ற உருவப்பட (போர்ட்ரெய்ட்) ஓவியர், வைசிராயின் சிபாரிசின் பேரில் அரண்மனைக்கு விஜயம் செய்தார். சமஸ்தானம் அவருக்குப் பெருமளவிலான வெகுமதிகளைக் கொடுத்து கெளரவித்தது. தியோடர் ஜென்சனும் தனது ஓவியக்கலை நுட்பங்களை ரவிவர்மாவுக்குக் கற்றுத் தர முன்வரவில்லை. தான் ஓவியம் வரைவதைப் பார்ப்பதற்கு மட்டுமே ரவிவர்மாவை அவர் அனுமதித்தார்.

ரவிவர்மாவின் ஓவியங்களை, அவற்றின் அழகியல் உணர்வு வெளிப்பாடுகளை மதிப்பீடு செய்பவர்கள் - புதிய முறையான, துணிகளின் மீது தைல வண்ண ஓவியங்களை வரைவதில் நிறுவன ரீதியான, முறையான பயிற்சி எதையும் ரவிவர்மா பெற்றதில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இளம் வயதிலேயே பொதுமக்களின் ஆதரவையும், பாராட்டுகளையும் பெறுவதில் ரவிவர்மா குறிப்பிடத்தக்க சிறப்பான வெற்றியடைந்தார் என்றே சொல்ல வேண்டும். அந்த வெற்றியின் பின்னே, ரவிவர்மாவின் உயர்வான சமூக அந்தஸ்து இருந்ததை மறுக்க முடியாது. அதே நேரத்தில் அந்த வெற்றிகளுக்கான அடிப்படைத் திறமை அளவிட முடியாத அளவு அவரிடம் குவிந்திருந்தது என்பதையும் மறைக்க முடியாது.

1866 ஆம் ஆண்டு திருவாங்கூர் சமஸ்தானத்து ராணி லக்ஷ்மிபாயின் சகோதரியை ரவிவர்மா திருமணம் செய்து கொண்டார். அரசர் ஆயில்யம் திருநாளின் பரிபூரண ஆதரவு ரவிவர்மாவுக்குப் பெரிதும் உதவி செய்தது. மக்களின் குறிப்பிடத்தக்க ஆதரவு அங்கீகாரம் கிடைக்கும் முன்பாகவே ரவிவர்மாவுக்கு, கெளரவம் வாய்ந்த 'அரச வளையலைப்' பரிசாக ஊக்குவித்தார் ஆயில்யம் திருநாள்.

அவருக்குப் பிறகு அவரது சகோதரர் விசாகம் திருநாள் அரச பதவிக்கு வந்த போது ரவிவர்மாவின் உறவினர்கள் அதிருப்தியடைந்தனர். அரச குடும்பத்தின் உள்விவகாரங்கள் மக்களைச் சென்றடைவது அக் காலத்தில் மிக அபூர்வம். அதிலும் சமஸ்தானத்துக்கு வெளியே செய்திகள் பரவ வாய்ப்பேயில்லாமலிருந்தது. அதனால் ரவிவர்மாவைத் திருவாங்கூர் சமஸ்தானத்தின் அரச குடும்பத்தின் உயரிய அங்கத்தினராகவே மக்கள் அங்கீகரித்து வந்தனர்.

பிரிட்டிஷ் அதிகார வர்க்கமும் அவ்வாறே நினைத்தது என்பதுதான் ஆச்சரியம். அது அரச குடும்பத்தினரை எரிச்சலடைய வைத்தது என்றே சொல்ல வேண்டும். 1904 ஆம் ஆண்டு புத்தாண்டுப் பரிசாக 'கெய்சர் ஹிந்த்' என்ற பதக்கத்தை வழங்கி ஆங்கிலேய அரசாங்கம் ரவிவர்மாவைப் பெருமைப்படுத்தியது.

அப் பதக்கத்தில் 'ராஜா ரவிவர்மா' என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. அது குறித்து திருவாங்கூர் சமஸ்தானம் எந்த ஆட்சேபணையும் எழுப்ப முடியவில்லை. ஆங்கிலேய ஆட்சியாளர்களிடம் ரவிவர்மாவின் செல்வாக்கும், மதிப்பும் அதிகரித்ததோடு ராஜாங்க ரீதியான சமஸ்தானத்து எதிர்ப்புகளையும் எளிதாக எதிர் கொள்ள வழி வகுத்தது.

ரவிவர்மாவைப் பொறுத்தவரையில் அவருக்குரிய அங்கீகாரம் எளிதாகவும் விரைவாகவும் கிடைத்தது. 1873 -ல் சென்னையில் நடைபெற்ற கண்காட்சியில் கலந்து கொள்ள ரவிவர்மாவை ஆயில்யம் திருநாள் தூண்டினார். அன்றைய கவர்னர் லார்ட் ஹோபர்ட் ஆதரவில் நடைபெற்ற அக் கண்காட்சியில் ரவிவர்மாவின் ஓவியம் முதல் பரிசான தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றது. அதே ஓவியம் வியன்னாவில் நடைபெற்ற சர்வதேசக் கண்காட்சிக்கும் அனுப்பப்பட்டு பதக்கம் வென்றதோடு தகுதிச் சான்றிதழையும் பெற்றது.

1874 ஆம் ஆண்டுக்கான சென்னை கண்காட்சியிலும் ரவிவர்மாவே தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். 1893 இல் சிகாகோ நகரில் நடைபெற்ற சர்வதேச ஓவியக் கண்காட்சிக்கு ரவிவர்மா 10 ஓவியங்களை அனுப்பி வைத்தார். இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண்களைச் சித்திரிக்கும் அந்த ஓவியங்களைக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்த 'வேர்ல்டு கொலம்பியன் கமிஷன்' ஏற்றுக் கொண்டது. ரவிவர்மாவுக்குப் பட்டயங்களுடன் இரண்டு பதக்கங்களும் பரிசாகக் கிடைத்தன.

ரவிவர்மாவின் ஓவியங்களுக்கு ஆங்கிலேய ஆட்சியாளர்களிடம் அமோக ஆதரவு இருந்தது. அவரது ஓவியங்களை நல்ல விலை கொடுத்து அவர்கள் வாங்கினார்கள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக