ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவாகரத்து சிறிய விவாதம்

+7
வழிப்போக்கன்
Aathira
ஹாசிம்
kalaimoon70
மஞ்சுபாஷிணி
சாந்தன்
சபீர்
11 posters

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

விவாகரத்து சிறிய விவாதம் - Page 2 Empty விவாகரத்து சிறிய விவாதம்

Post by சபீர் Mon Jun 21, 2010 12:27 pm

First topic message reminder :

இன்று உலகலாவிய ரீதியில் விவாகரத்து என்பது நாளுக்கு நாள்
அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இந்த விவாகரத்து நடைபெற காரணங்களாக
வரதட்சனைக்கொடுமை, ஒருவரை ஒருவர் சந்தேகபடுதல், முழுமையற்ற தாம்பத்ய உறவு,
பெண்கள் வேலைக்கு செல்வது, கணவனைவிட அதிகமாக சம்பாதிப்பது, நீண்ட நாள்
பிரிவு, கணவன்-மனைவிக்குள் சரியான புரிந்துணர்வு இன்மை, ஒருவருக்கொருவர்
மனம் விட்டு குடும்ப நிகழ்வுகளை பேசி கொள்ளாதிருத்தல், மேற்கத்திய
வாழ்கைமுறை கலாச்சாரம், நேரமின்மை மற்றும் இன்னும். இப்படியான நிறைய
காரணங்களை முன் வைக்கலாம். இப்படியான மனமுறிவுகளுக்கு விவாகரத்துத்தான்
சரியான தீர்வா?.இப்படியான விவாகரத்து நிகழாமல் இருக்க என்னென்ன
வழிமுறைகளைக்கையாலவேண்டும், இப்படியான விவாகரத்தால் குழந்தைகள் எந்தளவு
பாதிக்கப்படுகின்றார்கள் என்பதை நாம் ஒரு சிறிய வாதமாக எடுத்துக்கொண்டு
ஒவ்வொருத்தரின் கருத்துக்களையும் இங்கே முன்வைத்து விவாதிக்கலாம்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down


விவாகரத்து சிறிய விவாதம் - Page 2 Empty Re: விவாகரத்து சிறிய விவாதம்

Post by வழிப்போக்கன் Tue Jun 22, 2010 1:55 am

நிர்மல் wrote:கணவன்-மனைவிக்குள் சரியான புரிந்துணர்வு
இன்மை, ஒருவருக்கொருவர் மனம் விட்டு குடும்ப நிகழ்வுகளை பேசி
கொள்ளாதிருத்தல் இந்த இரண்டு காரணங்களும் முக்கியமாக எனக்கு படுகிறது சபீர் ......

எதுவுமே யாரவது ஒருவர் விட்டு கொடுத்து போகும் போது சரியாகிவிடும் என்பது என் கருத்து .....

உங்கள் கருத்தினை ஏற்றுக் கொள்கின்றேன், கணவன் மனைவிக்கிடையில் புரிந்துணர்வின்மையாலேயே விவாகரத்துக்கள் அதிகமாக உள்ளன,
இந்தப் புரிந்துணர்வை இருவரும் ஏற்படுத்திக் கொள்ளல் வேண்டும், இரு மனமும் இணைந்ததுதான் திருமணம், ஆனால் இம்மனங்கள் இணையாத பட்சத்தில் விவாக ரத்துச் செய்வதில் தவறில்லை என்பது எனது கருத்து, ஊருக்கும் உலகிற்கும் கணவன் மனைவியாக வாழ்வதில் என்ன இருக்கின்றது பிடிக்காத வாழ்க்கையை வாழ்வதிலும் பிடித்த வாழ்வை ஏற்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை புன்னகை


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

விவாகரத்து சிறிய விவாதம் - Page 2 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

விவாகரத்து சிறிய விவாதம் - Page 2 Empty Re: விவாகரத்து சிறிய விவாதம்

Post by kalaimoon70 Tue Jun 22, 2010 3:01 am

விவாகாரத்துக்கு முக்கிய காரணம் தனிக்குடித்தனம் என்றும் கூறலாம். ஒரு சமயம் இருவருக்குள் சண்டை வந்தால் மூன்றாமவர் த்டுக்கும் வாய்ப்பும் பறி போய்விடுகிறது.
ஒரு சில நேரங்களில் மூன்றாமவர் நுழைவும் இதற்கு காரண்மாகிறது.
என்ன சொன்னாலும் பிறருக்குத் தெரிய வேண்டாமே என்று சில பிரச்சனைகளையாவது ஒத்திப்போடுவர் அல்லவா.
1.விட்டுக்கொடுத்தல் இருவரிடமும் இருக்க வேண்டும்.
2. இவர் நம்ம கணவர் என்று அவளும் இவள் நம் மனைவி என்று அவளும் எண்ணும் போது பாசம் உண்டாகும். நல்ல இல்லறத்திற்கு அடிப்படை பாசம்.
3. அடிப்படை பாசம் வந்து விட்டால் குற்றங்கள் குறைகளாக இருவருக்கும் தெரியாது.
4. உண்மை கண்டிப்பாக பேணப்பட வேண்டும்
5. அதற்காக எல்லா உண்மையும் பகிரப்படும் போது அதுவே சில நேரங்களில் ஆபத்தாக முடியும். அதனால் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள பிடிக்கும் ஓரிரு ஆண்டுகள் மறைக்க வேண்டியவற்றை மறைத்தல் நலம்.
குறைகள் இல்லாத மனிதனே இல்லை. அதனால் கணவன் மனைவி உறவாகட்டும் ந்ட்பாகட்டும் இரண்டிலும் குறைகளை அறிந்து குறைகளோடு ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளும் மன உறுதி வேண்டும்.
கண்டிப்பாக சுய நலம் இன்றி நம் நலம். நம் குடும்பம் என்று நினைப்பது அவசியமாகிறது. ”உனக்காக நான்” என்ற எண்ணம் இருவருக்கும் இருக்குமானால் வி.ர. தேவையே இருக்காது. இவையெல்லாவற்றுக்கும் மேலாக அன்பு அன்பு என்ற அடிக்கோள் நாட்டி இல்லறம் அமைக்கப்பட வேண்டும்..
இதுபற்றி தேவைப்பட்டால் இன்னும் வரும்..

உங்கள் கருத்து இவருவரின் நிலையை சொல்லும் வண்ணம் வுள்ளது ....
தெளிவான கருத்து..

இதுபற்றி தேவைப்பட்டால் இன்னும் வரும்.. எதிர்ப்பார்க்கிறோம்....இன்னும் தெளிவான உளவியல் கருத்துக்கள் வரும் என்று./............
நன்றி தோழியே ...


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

விவாகரத்து சிறிய விவாதம் - Page 2 Empty Re: விவாகரத்து சிறிய விவாதம்

Post by சபீர் Tue Jun 22, 2010 9:42 am

ஹாசிம் wrote:தனிப்பட்ட காரணங்கள் தவிர மூன்றாம் நிலை நபர்கள் தன் மூக்கை நுழைப்பதாலும் விவாகரத்தில் முடிகிறது. அக்கா கூறியது போல் சகிப்புத்தன்மை எத்தனை மட்டுக்கு என்று தூண்டி விடுபவர்கள் மூன்றாம் தரப்பினர்கள்தான் இதை ஏற்பவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் அனைத்து விவாகரத்துக்கும் காரணம் மூன்றாம் நிலை நபர் ஒருவராக இருப்பார் இல்லை என்று மறுப்பவர் தொடருங்கள் மீண்டும் வருகிறேன்.

ஹாசிமுடைய கருத்தும் நல்லதொரு கருத்தாக அமைந்துள்ளது.உண்மைதான் மூன்றாம் நபர் தலையிடும்போதும் இப்படியான பிரச்சினைகள் நேருவது வழக்கம்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

விவாகரத்து சிறிய விவாதம் - Page 2 Empty Re: விவாகரத்து சிறிய விவாதம்

Post by சிவா Tue Jun 22, 2010 10:16 am

விவாகரத்து: இன்றைய சமுதாய சூழலில் மிகவும் மலிவாகிவிட்ட விடயம்! அதற்கான முக்கிய காரணியாக இருப்பது பணம் மற்றும் அந்தரங்கப் பிரச்சனைகள்!

மேலும் வீட்டிலுள்ள பெரியவர்களும் இதை ஆதரிப்பதுதான் மிகவும் வேதனையாக உள்ளது! மலேசியா மற்றும் சிங்கப்பூர் தமிழர்களிடையே விவாகரத்து அதிகம் நடைபெறுகிறது!

விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லாததுதான் இதற்கு முக்கிய காரணம்! பெண்களும் சுயமாக சம்பாதிப்பதால் ஆண்களின் அடக்குமுறையை விரும்புவதில்லை! அதை ஆண்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்!


விவாகரத்து சிறிய விவாதம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விவாகரத்து சிறிய விவாதம் - Page 2 Empty Re: விவாகரத்து சிறிய விவாதம்

Post by சாந்தன் Tue Jun 22, 2010 10:30 am

Aathira wrote:இப்பொழுதெல்லாம் விவாகரத்து கோரும் பெண்கள் யாரையும் மதிப்பது இல்லை. குறிப்பாக அவர்களின் பெற்றோரையே மதிப்பதில்லை. ஏனெனில் அவர்கள் இது தவறு என்று கூறுகின்றார்களே..
தவறு எனச்சுட்டிக்காட்டும் எவரையும் இவர்கள் எதிரிகளாக நினைத்து விட்டு வில்குதலும் உண்டு..



நானும் சம்பாதிக்கிறேன். நல்ல நிலையில் இருக்கிறேன். அப்படி இருக்க உன்னை விட எந்த வித்த்தில் நான் தாழ்வு என்று பெண் நினைப்பதும். கொஞ்சம் இடம் கொடுத்தால் பிறகு கஷ்டம் என்று ஆண் ஆரம்பத்தில் இருந்து பிடிவாதமாக இருப்பதும் இதற்கு வழி கோலுகிறது.

மிக மிக அக்மார்க் உண்மை ... எல்லாரையும் சொல்லவில்லை .. ஒரு சிலர் இப்படி நினைப்பதும் பிரிவுக்கு ஒரு விரிசலுக்கு முக்கிய காரணம் ... ஆண்கள் கொஞ்சம் இடம் கொடுத்தால் அதை ஒரு அட்வான்டேஜ்ஜாக எடுத்துகொள்ளும் பெண்களும் இருக்கிறார்கள் தானே....

இது ஆண்களுக்கும். இருவரின் விருப்பங்கள், பழக்க வழக்கங்கள் வேறு வேறாக இருக்கும். இவற்றையெல்லாம் புரிந்துகொண்டு, சில விஷயங்கள் மாறும், சில் மாறாது. முதல் இரண்டு மூன்று ஆண்டுகள்தான் புரிதல் ஏற்படாது, இந்நிலையில் விவாகரத்து கோருபவர்களே பெரும்பாலும். எப்படியும் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று இருவரும் நினைத்து ஓட்டிவிட்டால் பிறகு பழகிவிடும். (ஒன்று இவர் இப்படித்தான் என்று நினைத்து வாழப் பழகிவிடும். அல்லது புரிதல் ஏற்பட்டு விடும்)
வாழ்க்கை என்பது எப்போதும் ரோஜா மலரில் நடப்பது அல்லவே. அவ்வப்போது முள்ளும் குத்தத்தான் செய்யும். பொறுத்துக்கொள்பவர் பயணத்தைத் தொடவர்.
இதில் இரண்டு பேரும் ஒத்து போகவேண்டும் இல்லை என்றால் மாட்டுவண்டி கதை தான் .. இரண்டு மாடுகளும் ஒரே மாதிரி போகும்போதுதான் வண்டி ஒழுங்காக போகும் இல்லையென்றால் குடை சாய்ந்து விடும் ...


இன்னொன்று அதுவரை பெற்றோருக்கு அடங்கி வாழ்ந்த பெண்கள் கூட திருமணம் அவளின் சுதந்திரத்திற்கு ஒரு கருவி என்று நினைத்து தன் வாழ்க்கை முறையை( நவ நாகரிக ஆடை, உணவுக்கு எப்போதும் ஹோட்டல்) மாற்றிக்கொள்கின்றனர். அந்த மாற்றம் கூட ஓருவருக்காக மற்றவர் தம்மை மாற்றிக்கொண்டால் அன்பு அழப்படும்.
உண்மையே உண்மையே ...


விவாகாரத்துக்கு முக்கிய காரணம் தனிக்குடித்தனம் என்றும் கூறலாம். ஒரு சமயம் இருவருக்குள் சண்டை வந்தால் மூன்றாமவர் த்டுக்கும் வாய்ப்பும் பறி போய்விடுகிறது.
இல்லை அக்கா மூன்றாமவர் இருக்கும் போது இன்னும் சண்டை அதிகம் தான் ஆகும் அக்கா. இது என் நண்பன் வாழ்க்கையில் நடந்தது... அவர்கள் நம்மை உசுப்பேற்றி உசுப்பேற்றி நம்மை நிரந்திரமாக பிரித்து விடுவர் .. எதுவுமே கணவன் மனைவி இருவருக்கிடையே இருந்தால் தான் நல்லது.. மூன்றமவருக்கு தெரியும் போது இடியாப்ப சிக்கல் தான்...

ஒரு சில நேரங்களில் மூன்றாமவர் நுழைவும் இதற்கு காரண்மாகிறது.
என்ன சொன்னாலும் பிறருக்குத் தெரிய வேண்டாமே என்று சில பிரச்சனைகளையாவது ஒத்திப்போடுவர் அல்லவா.
1.விட்டுக்கொடுத்தல் இருவரிடமும் இருக்க வேண்டும்.
2. இவர் நம்ம கணவர் என்று அவளும் இவள் நம் மனைவி என்று அவளும் எண்ணும் போது பாசம் உண்டாகும். நல்ல இல்லறத்திற்கு அடிப்படை பாசம்.
3. அடிப்படை பாசம் வந்து விட்டால் குற்றங்கள் குறைகளாக இருவருக்கும் தெரியாது.
4. உண்மை கண்டிப்பாக பேணப்பட வேண்டும்
5. அதற்காக எல்லா உண்மையும் பகிரப்படும் போது அதுவே சில நேரங்களில் ஆபத்தாக முடியும். அதனால் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள பிடிக்கும் ஓரிரு ஆண்டுகள் மறைக்க வேண்டியவற்றை மறைத்தல் நலம்.
குறைகள் இல்லாத மனிதனே இல்லை. அதனால் கணவன் மனைவி உறவாகட்டும் ந்ட்பாகட்டும் இரண்டிலும் குறைகளை அறிந்து குறைகளோடு ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளும் மன உறுதி வேண்டும்.
கண்டிப்பாக சுய நலம் இன்றி நம் நலம். நம் குடும்பம் என்று நினைப்பது அவசியமாகிறது. ”உனக்காக நான்” என்ற எண்ணம் இருவருக்கும் இருக்குமானால் வி.ர. தேவையே இருக்காது. இவையெல்லாவற்றுக்கும் மேலாக அன்பு அன்பு என்ற அடிக்கோள் நாட்டி இல்லறம் அமைக்கப்பட வேண்டும்..
இதுபற்றி தேவைப்பட்டால் இன்னும் வரும்..

கண்டிப்பாக உங்கள் கருத்துகளை கூறுங்கள் அக்கா ... தெரிந்து கொள்கிறோம் ...
இன்னொன்று முக்கியமாக என் பணம் உன் பணம் என்று கணவன் மனைவிக்குள் பண விசயத்தில் பிரிவு வந்தால் அதுவே பின்னாளில் பிரிவுக்கும் அடிப்படை காரணம் ஆகிவிடும் ...
நம் பணம் என்று ஒன்றாக இணைத்து பட்ஜெட் போடும்போது அதுவே ஒரு ஆனந்தம் தான் ...

நல்ல தலைப்பில் உறவுகளின் மனங்களை பேச வைத்தமைக்கு நன்றி ச்பீர்.. விவாகரத்து சிறிய விவாதம் - Page 2 154550 விவாகரத்து சிறிய விவாதம் - Page 2 154550


சபீருக்கு என் கருத்துக்கு எந்த பின்னூட்டமும் இடவில்லை ... ஒரு வேலை என் கருத்து அவருக்கு பிடிக்கவில்லையோ ???
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

விவாகரத்து சிறிய விவாதம் - Page 2 Empty Re: விவாகரத்து சிறிய விவாதம்

Post by மஞ்சுபாஷிணி Tue Jun 22, 2010 10:41 am

விவாகம் எனும்போது ஊருக்கே விருந்துவைத்து உபசரித்து சந்தோஷமாக கொண்டாடுகிறோம்... அந்த விவாகம் எத்தனை வருடங்கள் நிலைக்கிறது என்பது போய் இப்போதெல்லாம் மாதக்கணக்கில் முடிந்துவிடுவது வேதனை....

புரிந்துணர்வு இல்லாமலயே அந்த காலத்தில் நம் தாத்தா பாட்டி காலத்தில் கல்யாணம் செய்துவைத்து அப்போது இத்தனை டிவோர்ஸ் பார்த்தது இல்லை....

சமுதாயம் விவாகரத்து வாங்கிய பின் பெண்ணை பார்க்கும் பார்வை கொடுமை... கேவலமான இழிவான பார்வை பார்க்கிறது.....

விவாகரத்து செய்யுமுன் கணவன் மனைவி இருவரும் பரஸ்பரம் உட்கார்ந்து தன் எதிர்காலம் பற்றி சிந்தித்து பேசும்போதே தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தையும் கணக்கில் கொள்ளவேண்டும்.....

என்ன இல்லை என்பதற்காக விவாகரத்து கோருகிறார்கள்??

என்ன இருக்கு என்பதற்காக வேற வழியில்லாம ஒன்றாய் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்கள்?

விவாகரத்து தவறு என்று சொல்ல வரவில்லை நான்...

ஆனால் விவாகரத்து செய்தால் அதனால் பாதிக்கப்படுவது கணவன் மனைவி மட்டுமா இல்லை அவர்களோடு சேர்ந்து அவர்கள் பிள்ளைகளுமா??

பெண்பிள்ளை வைத்திருக்கும் தம்பதியினர் ஒன்றாய் வாழ இஷ்டப்படாமல் பிரிந்து விவாகரத்து பெற்று தன் விருப்பப்படி வாழ்கிறார்கள்.... சரி....

இதோடு முடிகிறதா???

அந்த பெண் தாயிடம் வளரும் சூழ்நிலையில் மகளுக்கு கல்யாணம் பேச நினைக்கும்போது வந்து பார்க்கும் மாப்பிள்ளை வீட்டினரிடம் இது போன்று பெண்ணின் தாயார் விவாகரத்து ஆனவர் என்று சொன்னால் வெறும் வாயை அவல் போட்டு மெல்ல மாட்டார்கள்.... அதான் மெல்ல இவர்கள் விஷயம் கிடைத்துவிட்டதே....

இந்த அம்மா என்னா செய்தாங்களோ தாங்க முடியாம விலகி போயிட்டார் போல....

இந்த அம்மாவின் ஒழுக்கக்கேடான நடவடிக்கை பார்த்து தான் விவாகரத்து வாங்கிட்டார் போல மனம் நொந்து....

சரி சரி ஆனது ஆகட்டும் இனி நடக்க வேண்டியது பாருங்கப்பா...

இன்னும் என்னய்யா நடக்க வேண்டியதை பார்ப்பது?? அப்ப அம்மா இப்ப மகள் இந்த பெண்ணை எதை நம்பி நாங்கள் மருமகளாய் ஏற்றுக்கொள்வது?? ஒரு வேளை பொண்ணும் பொறுமை இல்லாம அவங்கம்மாவை போல் விவாகரத்து கேக்கமாட்டாங்கன்னு என்ன நிச்சயம்??

முடிந்ததா..... இங்க வந்து நிற்கும் இன்றைய சமுதாயத்தின் கண்ணோட்டம் விவாகரத்து பெற்ற பெண்ணை இப்படி தான் பார்க்கிறது.....

அவசியமா விவாகரத்து என்றால்.....

இருவர் மனதிலும் கசப்பும் காழ்ப்புணர்ச்சியும் மண்டி கிடக்கும்போது வாழ்க்கை இனிக்குமா இனி தொடருமா அமைதியுடன்?? யுத்தக்களமாகும் தினம் தினம் பிரச்சனைகள் அதிகமாகி பிள்ளைகளின் மனநிலை பாதிக்கப்படும்....

இதற்கு என்ன தான் தீர்வு???

பிள்ளைகளுக்கு அன்பாய் இருந்து கணவன் மனைவிக்கும் அன்பில்லன்னா அப்ப பொறுமை இல்லன்னு எடுத்துக்கலாமா??

கொஞ்சம் விட்டுக்கொடுத்து போனால் எல்லாம் சரியாப்போகும்னு நம்பிக்கையோடு காத்திருந்தால் விவாகரத்தில் இருந்து தப்பிக்க முடியுமா?

விவாகம் எல்லாருக்கும் சந்தோஷத்தை கொடுப்பது போல விவாகரத்து எல்லாருக்கும் சந்தோஷத்தை கொடுப்பது இல்லை... இத்தனை காலம் பழகிய அன்பு விட்டு விலகுவது என்றால் அதை விட வேதனையான விஷயம் ஒன்றுமில்லை.....

பிள்ளைகளின் எதிர்காலம்
மன நிம்மதி
ஒன்றிணைந்து செயல்பட்டால் தெரியும் அன்பு விலகி இருக்கும்போது ஏக்கமாய் மாறும் என்பது உறுதி...

என்ன தான் சண்டை மனசுக்கு ஒப்பலைன்னு ரத்து வாங்கினாலும் தனிமை அவர்களை முதலில் கொஞ்சம் நிம்மதியா இருக்க வைத்தாலும் நினைவுகள் இதுநாள் வரை ஒன்றாய் வாழ்ந்து ஒருத்தருக்கொருத்தர் அன்பு செலுத்தியது எல்லாம் ஒன்றுமே இல்லை என்று ஆகிவிடுமா??

கொஞ்சம் பொறுமை காத்தால் விவாகரத்துக்கு இடமில்லாமல் போகும்...

இனிய தம்பதிகளாய் தொடர்ந்து நடைபோட்டு சஷ்டியப்த பூர்த்தி செய்துக்கொண்ட தம்பதியினர் எத்தனைப்பேர்?

அன்பான இல்வாழ்க்கையில் சண்டைகள் பிரச்சனைகள் வருவது சகஜமே... இனிமையே என்றும் இருந்தாலும் திகட்டிவிடும் என்று நினைத்தால் செல்லச்சண்டைகள் இடட்டும்.... ஆனால் பிரிவு வேண்டாமே.. விவாகரத்து வேண்டாமே....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

விவாகரத்து சிறிய விவாதம் - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

விவாகரத்து சிறிய விவாதம் - Page 2 Empty Re: விவாகரத்து சிறிய விவாதம்

Post by சாந்தன் Tue Jun 22, 2010 10:50 am




என்ன தான் சண்டை மனசுக்கு ஒப்பலைன்னு ரத்து வாங்கினாலும் தனிமை அவர்களை
முதலில் கொஞ்சம் நிம்மதியா இருக்க வைத்தாலும் நினைவுகள் இதுநாள் வரை
ஒன்றாய் வாழ்ந்து ஒருத்தருக்கொருத்தர் அன்பு செலுத்தியது எல்லாம் ஒன்றுமே
இல்லை என்று ஆகிவிடுமா??


இனிய தம்பதிகளாய் தொடர்ந்து நடைபோட்டு சஷ்டியப்த பூர்த்தி செய்துக்கொண்ட
தம்பதியினர் எத்தனைப்பேர்?


அன்பான இல்வாழ்க்கையில் சண்டைகள் பிரச்சனைகள் வருவது சகஜமே... இனிமையே
என்றும் இருந்தாலும் திகட்டிவிடும் என்று நினைத்தால் செல்லச்சண்டைகள்
இடட்டும்.... ஆனால் பிரிவு வேண்டாமே.. விவாகரத்து வேண்டாமே...
.

விவாகரத்து சிறிய விவாதம் - Page 2 678642 விவாகரத்து சிறிய விவாதம் - Page 2 678642 விவாகரத்து சிறிய விவாதம் - Page 2 678642 விவாகரத்து சிறிய விவாதம் - Page 2 678642 விவாகரத்து சிறிய விவாதம் - Page 2 678642 விவாகரத்து சிறிய விவாதம் - Page 2 677196 விவாகரத்து சிறிய விவாதம் - Page 2 677196 விவாகரத்து சிறிய விவாதம் - Page 2 677196 விவாகரத்து சிறிய விவாதம் - Page 2 677196 விவாகரத்து சிறிய விவாதம் - Page 2 677196 விவாகரத்து சிறிய விவாதம் - Page 2 677196 விவாகரத்து சிறிய விவாதம் - Page 2 677196

சூப்பர்கா சூப்பர் ....
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

விவாகரத்து சிறிய விவாதம் - Page 2 Empty Re: விவாகரத்து சிறிய விவாதம்

Post by சபீர் Tue Jun 22, 2010 10:54 am

நிர்மல் wrote:கணவன்-மனைவிக்குள் சரியான புரிந்துணர்வு
இன்மை, ஒருவருக்கொருவர் மனம் விட்டு குடும்ப நிகழ்வுகளை பேசி
கொள்ளாதிருத்தல் இந்த இரண்டு காரணங்களும் முக்கியமாக எனக்கு படுகிறது சபீர் ......

எதுவுமே யாரவது ஒருவர் விட்டு கொடுத்து போகும் போது சரியாகிவிடும் என்பது என் கருத்து .....
விவாகரத்து சிறிய விவாதம் - Page 2 359383 விவாகரத்து சிறிய விவாதம் - Page 2 453187
நல்லகருத்தை தெரிவி்த்துள்ளீர்கள் நண்பா.உங்களோடு எனக்கு எந்தக்கோபமும் இல்லை நண்பா. உங்களிடமிருந்து இன்னும் சில கருத்துகள் வரலாம் என தாமத்தித்து இருந்தன்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

விவாகரத்து சிறிய விவாதம் - Page 2 Empty Re: விவாகரத்து சிறிய விவாதம்

Post by சபீர் Tue Jun 22, 2010 11:06 am

ஆதிரா அக்காவின் கருத்தில் நிறைய உண்மைகள் அடங்கி உள்ளது.
விவாகத்து என்பது இருதரப்பிலும் இருந்து வருகின்றது இருந்தபோதிலும் அக்காசொன்னது போல இப்போது விவாகரத்து அதிகரிப்புக்கு மிகமுக்கியமான ஒன்று பெண்கள் வேலைக்கு சென்று அதிகம் சம்பாதிப்பதில் உள்ளது என புதிதாக கணிப்பிடப்பட்டுள்ளது.இதனால் கணவனுக்கு சிலநேரம் தன்மானப்பிரச்சினை வந்து காலப்போக்கில் விவாகரத்தில் போய் முடிவதும் உண்டு. அதோபோலநானும் சம்பாதிக்கிறேன். நல்ல நிலையில் இருக்கிறேன். அப்படி இருக்க உன்னை
விட எந்த வித்த்தில் நான் தாழ்வு என்று பெண் நினைப்பதும் இதனாலும் விவாகரத்து அதிகம் வருவதாக சொல்லப்படுகிறது.இதுக்கெல்லாம் அடிப்படைக்காரணம் புரிந்துணர்வு இல்லாததுதான்.அக்காவின் கருத்தை நான் ஆமோதிக்கிறேன்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

விவாகரத்து சிறிய விவாதம் - Page 2 Empty Re: விவாகரத்து சிறிய விவாதம்

Post by சாந்தன் Tue Jun 22, 2010 11:19 am

சபீர் wrote:
நிர்மல் wrote:கணவன்-மனைவிக்குள் சரியான புரிந்துணர்வு
இன்மை, ஒருவருக்கொருவர் மனம் விட்டு குடும்ப நிகழ்வுகளை பேசி
கொள்ளாதிருத்தல் இந்த இரண்டு காரணங்களும் முக்கியமாக எனக்கு படுகிறது சபீர் ......

எதுவுமே யாரவது ஒருவர் விட்டு கொடுத்து போகும் போது சரியாகிவிடும் என்பது என் கருத்து .....
விவாகரத்து சிறிய விவாதம் - Page 2 359383 விவாகரத்து சிறிய விவாதம் - Page 2 453187
நல்லகருத்தை தெரிவி்த்துள்ளீர்கள் நண்பா.உங்களோடு எனக்கு எந்தக்கோபமும் இல்லை நண்பா. உங்களிடமிருந்து இன்னும் சில கருத்துகள் வரலாம் என தாமத்தித்து இருந்தன்

கண்டிப்பாக எனக்கு தெரிந்ததை சொல்கிறேன் சபீர் ....
முதல் காரணம் புரிந்துகொள்ளுதல், விட்டு கொடுத்தல் இல்லாதது

இரண்டாவது ஈகோ என்று சொல்லப்படும் நீ பெரியவனா , நான் பெரியவளா என்ற குணம்
அதுவும் நம்மை விட அதிக ஊதியம் வாங்குபவராக மனைவி இருக்கும் போது இந்த குணம் இன்னும் அதிகம் அவர்களிடம் இருக்கும் ...

மூன்றாவது மூன்றாம் நபர் தலையீடு ... எதுவா இருந்தாலும் நாமே பேசி கொள்ளும்போது இவை நல்ல ஒரு முடிவுக்கு வரும் ... மூன்றாம் நபர் வரும்போது நம்மை உசுப்பேத்தி உசுப்பேத்தியே அவர்கள் குளிர் காய்வார்கள் ...

நான்காவது இதை எப்பை இங்கே சொல்வது என்று தெரியவில்லை .. ஆனாலும் இதுவும் இன்றைய காலகட்டத்தில் ஒரு முக்கிய காரணமாக எனக்கு படுகிறது.. என் நண்பனின் வாழ்க்கையிலும் நடந்த ஒரு உண்மை நிகழ்ச்சி இது ....
தாய்க்குலங்கள் மன்னிக்கவும் ... தாம்பத்தியமும் சரி இல்லை என்றும் இன்று ஒரு காரணமாக சொல்லபடுகிறது... இது பெரும்பாலும் பெண்களிடம் இருந்து வரும் குற்றசாட்டு ....
என் நண்பனின் வாழ்வில் நடந்த உண்மை ... இப்போது அவர்கள் பிரிந்து தான் வாழ்கிறார்கள் ..
என் நண்பன் இரண்டாவது கல்யாணம் முடித்து குழந்தையும் இருக்கிறது இப்போது. இதை என்னவென்று சொல்வது ...

ஐந்தாவது பெற்றோர்களின் வற்புறுத்தலினால் திருமணம் முடிக்கும் தம்பதியினர் பிற்காலத்தில் கருத்தொருமிப்பதும் உண்டு பிரிதலும் அதிகமாகவே உள்ளது ....

நன்றி சபீர்.. நல்லதொரு தலைப்பை விவாதத்திற்கு வைத்தமைக்கு

என் சொந்த கருத்தே ... தவறு இருந்தால் மன்னிக்கவும்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

விவாகரத்து சிறிய விவாதம் - Page 2 Empty Re: விவாகரத்து சிறிய விவாதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum