புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கப்ர் - மண்ணறை விசாரணை! Poll_c10கப்ர் - மண்ணறை விசாரணை! Poll_m10கப்ர் - மண்ணறை விசாரணை! Poll_c10 
366 Posts - 49%
heezulia
கப்ர் - மண்ணறை விசாரணை! Poll_c10கப்ர் - மண்ணறை விசாரணை! Poll_m10கப்ர் - மண்ணறை விசாரணை! Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
கப்ர் - மண்ணறை விசாரணை! Poll_c10கப்ர் - மண்ணறை விசாரணை! Poll_m10கப்ர் - மண்ணறை விசாரணை! Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
கப்ர் - மண்ணறை விசாரணை! Poll_c10கப்ர் - மண்ணறை விசாரணை! Poll_m10கப்ர் - மண்ணறை விசாரணை! Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
கப்ர் - மண்ணறை விசாரணை! Poll_c10கப்ர் - மண்ணறை விசாரணை! Poll_m10கப்ர் - மண்ணறை விசாரணை! Poll_c10 
25 Posts - 3%
prajai
கப்ர் - மண்ணறை விசாரணை! Poll_c10கப்ர் - மண்ணறை விசாரணை! Poll_m10கப்ர் - மண்ணறை விசாரணை! Poll_c10 
6 Posts - 1%
sugumaran
கப்ர் - மண்ணறை விசாரணை! Poll_c10கப்ர் - மண்ணறை விசாரணை! Poll_m10கப்ர் - மண்ணறை விசாரணை! Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
கப்ர் - மண்ணறை விசாரணை! Poll_c10கப்ர் - மண்ணறை விசாரணை! Poll_m10கப்ர் - மண்ணறை விசாரணை! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
கப்ர் - மண்ணறை விசாரணை! Poll_c10கப்ர் - மண்ணறை விசாரணை! Poll_m10கப்ர் - மண்ணறை விசாரணை! Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
கப்ர் - மண்ணறை விசாரணை! Poll_c10கப்ர் - மண்ணறை விசாரணை! Poll_m10கப்ர் - மண்ணறை விசாரணை! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கப்ர் - மண்ணறை விசாரணை!


   
   
avatar
Guest
Guest

PostGuest Sat Jan 08, 2011 10:07 pm

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

கப்ர் - மண்ணறை விசாரணை!

மனிதன் இன்று
வாழ்கின்ற வாழ்க்கை எவ்வளவு உண்மையானதோ அவை போன்றே மனிதன் மரணித்தப்
பின்னர் அவர் சந்திக்கும் மண்ணறை விசாரணையும் நிதர்சனமான உண்மையாகும் என
இஸ்லாம் ஆணித்தரமாக அறிவித்துள்ளது. மண்ணறை விசாரணை, மற்றும் விசாரணைக்குப்
பிறகு மண்ணறையில் அனுபவிக்கும் இன்பமும், துன்பமும் நடந்தேறும் உண்மைச்
சம்பவமாகும் என்பதில் முஸ்லிம்களிடையே மாற்றுக் கருத்து இல்லை!


மறுமையின்
முன்னோட்டமாக - மரணித்தவர் மறுமை நாளில் பெறப்படும் சுவர்க்கம், நரகத்தைத்
தீர்மானிக்கும் இடமாக மண்ணறை அமைந்துள்ளது. மனிதனின் உயிர்
கைப்பற்றப்பட்டு மரணித்தவுடன் நடக்கும் நிகழ்வுகளை குர்ஆன், சுன்னா
விவரித்திருப்பதிலிருந்து மரணித்த ஆன்மாவின் வாழ்க்கை அவை மனிதனின்
புலன்களுக்கு எட்டா தனியொரு உலகம் என்பதை மிகத் தெள்ளத் தெளிவாக
விளங்கலாம். ஆன்மாக்களின் மண்ணறை வாழ்க்கை மறைவானது என்றாலும் அவற்றை
நம்பவேண்டும் என்பதே இஸ்லாம் மார்க்கத்தின் நிலைபாடு!


மரணித்த
மனிதரின் மண்ணறை வாழ்க்கையை, மரணிக்கவிருக்கும் மனிதன் சிறிதளவேனும்
அறிந்து கொண்டால் அதுவே பெரும் படிப்பினையாகும். எனும் நோக்கில் மண்ணறை
விசாரணைக் குறித்து அல்லாஹ்வும், ரஸுலல்லாஹ்வும் அறிவித்த சில செய்திகளை,
சில சிறு பகுதிகளாக இந்த இழையில் பார்ப்போம். குழும உறுப்பினர்கள்
கருத்துகளைப் பகிர்ந்துகொள்க!


************************

எவர்கள்
நமது வசனங்களைப் பொய்பித்து அவற்றை விட்டும் பெருமையடிக்கிறார்களோ
அவர்களுக்கு வானத்தின் வாயில்கள் திறக்கப்பட மாட்டாது. ஊசியின் துவாரத்தில்
ஒட்டகம் நுழையும் வரை அவர்கள் சுவர்க்கத்தில் நுழையவும் மாட்டார்கள்.
இவ்வாறே குற்றவாளிகளுக்கு நாம் கூலி வழங்குவோம்.
(அல்குர்ஆன் 7:40)


இறைநம்பிக்கை
கொண்டோரை அல்லாஹ் இவ்வுலக வாழ்விலும் மறுமையிலும் உறுதியான வார்த்தையைக்
கொண்டு நிலைபெறச் செய்வான். மேலும் அநியாயக்காரர்களை அல்லாஹ் வழிகேட்டில்
விட்டு விடுவான். அல்லாஹ் தான் நாடுவதைச் செய்வான்.
(அல்குர்ஆன் 14:27)


அல்லாஹ்வுக்காக நேரிய வழியில் நின்றவர்களாகவும், அவனுக்கு எதையும் இணை கற்பிக்காதவர்களாகவும் (அவனை வழிபடுங்கள்) யார்
அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கின்றாரோ அவர் வானத்திலிருந்து விழுந்து
பறவைகள் தூக்கிச் சென்றவரைப்போல் அல்லது காற்று அவரைத் தூரமான இடத்திற்கு
அடித்துச் சென்றவரைப் போல் ஆவார்.
(அல்குர்ஆன் 22:31)


ஆகவே, தீயோர்களின் பதிவேடு ''ஸிஜ்ஜீனில்'' இருக்கின்றது. (அல்குர்ஆன் 83:7)

ஆகவே, நல்லோர்களின் பதிவேடு ''இல்லிய்யீனில்'' இருக்கின்றது. (அல்குர்குர் 83:18 மேலும், திருக்குர்ஆன் 83வது அத்தியாய வசனங்களை வாசிக்கவும்)

நபிமொழி

அன்ஸாரிகளில்
ஒருவரின் இறுதிக் கடனை (ஜனாஸா) நிறைவேற்றுவதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்களுடன் நாங்கள் புறப்பட்டு, அடக்கத்தலத்திற்குப் போய்ச் சேர்ந்தோம்.
அங்கு குழிதோண்டி முடிக்கப்படவில்லை. எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் அமர்ந்தார்கள். நாங்களும் அவர்களைச் சுற்றி, எங்களின் தலைகள் மீது
பறவை இருந்ததைப் போன்று (அசையாமல்) அமர்ந்திருந்தோம். நபி (ஸல்)
அவர்களின் கையில் குச்சியொன்று இருந்தது. அதைக் கொண்டு அவர்கள் தரையில்
குத்திக்கொண்டிருந்தார்கள்.


பின்னர், தமது
தலையை உயர்த்தி அடக்கத்தலத்தின் (கப்ரின்) வேதனையிலிருந்து அல்லாஹ்விடம்
பாதுகாப்புக் கோருங்கள் என்று இரண்டு அல்லது மூன்று தடவை கூறிவிட்டுத்
தொடர்ந்து கூறலானார்கள்:


இறைநம்பிக்கை
கொண்ட அடியார் இவ்வுலகத்திலிருந்து விடைபெற்று மறுமையை நோக்கிச் செல்லும்
நிலையில் இருந்தால், வானவர்கள் சிலர் வானத்திலிருந்து இறங்கி அவர்களிடம்
வருவர். அவர்களின் முகங்கள் வெண்மையாக இருக்கும். அவை சூரியனைப் போன்று
ஒளிரும். அவர்களுடன் சொர்க்கத்தின் கஃபன் (பிரேத) ஆடைகளில் ஓர் ஆடையும்
சொர்க்கத்தின் வாசனைத் திரவியங்களில் ஒன்றும் இருக்கும். இறுதியில், அவரது
பார்வை எட்டும் தூரத்தில் அவர்கள் வந்து அமர்வார்கள். பின்னர் உயிரைக்
கைப்பற்றும் வானவர் வந்து அவரது தலைக்கு அருகில் அமர்வார். அவர்,
''தூய்மையான உயிரே! அல்லாஹ்வின் மன்னிப்பையும் அன்பையும் நோக்கி நீ
புறப்படுவாயாக'' என்பார்.


அப்போது
தண்ணீர்ப் பையின் வாயிலிருந்து நீர் வழிவதைப் போன்று (அவரது உடலிலிருந்து)
உயிர் வெளியேறும். உடனே அதை அந்த வானவர் எடுத்துக்கொள்வார். அவர்
எடுத்ததும் கண்ணிமைக்கும் நேரம்கூட அந்த உயிரை அவரது கையில் மற்ற வானவர்கள்
விட்டு வைக்கமாட்டார்கள். இறுதியில் அதை அவர்கள் வாங்கிக்கொண்டு (தாம்
கொண்டு வந்த) பிரேதத் துணியில் வைத்து அந்த வாசனைத் திரவியத்தைப்
பூசுவார்கள். பூமியின் மேற்பரப்பில் கிடைக்கும் கஸ்தூரியின் உயர்தரமான
நறுமணத்தைப் போன்றதொரு நறுமணம் அதிலிருந்து வெளிவரும்.


பின்னர் அந்த
உயிருடன் வானவர்கள் மேலே ஏறுவார்கள். அவர்கள் அந்த உயிரை எடுத்துக்கொண்டு
வானவர்களின் ஒரு கூட்டாத்தாரைக் கடந்து செல்லும்போதெல்லாம் அந்தக்
கூட்டத்தார், ''இந்தத் தூய உயிர் யாருடையது?'' என்று கேட்பர். அதற்கு
அவர்கள், ''இன்ன மனிதருடைய மகன் இன்ன மனிதர்'' என்று அவருக்கு மக்கள்
உலகத்தில் சூட்டியிருந்த பெயர்களில் அழகானப் பெயரைக் குறிப்பிடுவார்கள்.
இறுதியில் அந்த உயிருடன் பூமிக்கு அருகிலிருக்கும் (முதல்) வானத்தை
வானவர்கள் அடைவார்கள்.


அவருக்காக அந்த
வானத்தைத் திறக்கக் கோருவார்கள். அவருக்காக அது திறக்கப்படும். ஒவ்வொரு
வானத்திருக்கும் இறை நெருக்கம் பெற்ற வானவர்கள் அந்த வானத்திலிருந்து
அடுத்த வானம்வரை அவரைப் பின் தொடர்ந்து செல்வார்கள். இறுதியில் அவர்
ஏழாவது வானத்திற்குக் கொண்டு செல்லப்படுவார். அப்போது வல்லமையும்
மாண்புமிக்க அல்லாஹ், ''என் அடியானின் (வினைப்) பதிவேட்டை (நல்லோர்களின்
வினைகள் பதிவு செய்யப்பட்ட) 'இல்லிய்யூன்' எனும்
பேரேட்டில் பதிவு செய்யுங்கள். அவரை மறுபடியும் பூமிக்கே அனுப்புங்கள்,
ஏனெனில் அதிலிருந்தே அவர்களை (மனிதர்களை)ப் படைத்தேன், அதிலேயே அவர்களை
நான் திருப்பி அனுப்புவேன். (பின்னர்) மற்றொரு முறை அதிலிருந்தே அவர்களை
நான் வெளியாக்குவேன்'' என்று கூறுவான்.


பின்னர் அவரது
உயிர் (மண்ணறையிலுள்ள) அவரது உடலில் திருப்பிச் செலுத்தப்படும். அவரிடம்
இரண்டு வானவர்கள் வந்து அவரை (எழுப்பி) அமரவைப்பர். அவ்விருவரும் அவரிடம்,
''உம்முடைய இறைவன் யார்?'' என்று கேட்பர். அதற்கு, ''என் இறைவன் அல்லாஹ்''
என்று அவர் பதிலளிப்பார். அடுத்து. ''உமது மார்க்கம் எது?'' என்று
அவ்விருவரும் அவரிடம் கேட்பர். ''எனது மார்க்கம் இஸ்லாம்'' என்று அவர்
கூறுவார்.


பிறகு
''உங்களிடையே அனுப்பப்பட்ட இந்த மனிதர் யார்?'' (முஹம்மது (ஸல்) அவர்களைப்
பற்றி)அவ்விருவரும் அவரிடம் கேட்பர். ''அல்லாஹ்வின் தூதர்'' என்று அவர்
பதிலளிப்பார். அவ்விருவரும் ''அது எப்படி உமக்குத் தெரியும்?'' என்று
அவரிடம் கேட்பார்கள். அதற்கு அவர், ''நான் அல்லாஹ்வின் வேதத்தை (குர்ஆனை)ப்
படித்தேன், அதன் மீது நம்பிக்கை கொண்டேன், உண்மையென ஏற்றேன்'' என்று
கூறுவார்.


உடனே
வானிலிருந்து ஓர் அறிவிப்பாளர், ''என் அடியார் உண்மை உரைத்தார். எனவே
அவருக்குச் சொர்க்கத்தி(ன் விரிப்புகளி)லிருந்து (ஒரு விரிப்பை)
விரித்துக் கொடுங்கள். சொர்க்க ஆடைகளில் ஒன்றை அணிவியுங்கள், அவருக்காகச்
சொர்க்க வாசல் ஒன்றைத் திறந்துவிடுங்கள்'' என்று அறிவிப்பார். (அவ்வாறே
செய்யப்படும்) அந்த வாசல் வழியாகச் சொர்க்கத்தின் நறுமணமும் வாசனையும்
அவரிடம் வரும். பார்வை எட்டும் தூரம்வரை அவருக்கு அவரது அடக்கத்தலம்
விரிவுபடுத்தப்படும். பின்னர் பொலிவான முகமும் அழகான ஆடையும் நல்ல
நறுமணமும் கொண்ட ஒருவர் அவரிடம் வந்து, ''உமக்கு மகிழ்ச்சி தரும்
நற்செய்தியொன்றை(ச் சொல்கிறேன்) கேளும், இதுதான் உமக்கு வாக்களிக்கப்பட்ட
நாள் ஆகும்'' என்'பார்.


அப்போது அவர்
அந்த அழகான மனிதரிடம் ''நீர் யார்? உமது முகம் நன்மையைக் கொண்டுவரும்
முகமாக உள்ளதே'' என்று கேட்பார். அதற்கு அந்த அழகான மனிதர், ''நான்தான்
நீர் செய்த நற்செயல்'' என்பார். உடனே அவர் ''என் இறைவா! யுக முடிவு (நாளை
(இப்போதே) ஏற்படுத்துவாயாக, நான் என் குடும்பத்தாரிடமும் செல்வத்திடமும்
மறுபடியும் போய்ச்சேர வேண்டும்'' என்று கூறுவார்.


(ஏக இறைவனை)
மறுக்கும் அடியார் ஒருவர் இவ்வுலகத்திலிருந்து விடைபெற்று மறுமையை
நோக்கிச் செல்லும் நிலையில் இருந்தால், வானவர்களில் சிலர் வானிலிருந்து
இறங்கி அவரிடம் வருவர். அவர்களின் முகங்கள் கருப்பாக இருக்கும். அவர்களுடன்
முடியாலான (முரட்டு கஃபன்) ஆடை ஒன்று இருக்கும். அவர்கள் அவரது பார்வை
எட்டும் தூரத்தில் வந்து அமர்ந்துகொள்வார்கள். பின்னர் உயிரைக்
கைப்பற்றும் வானவர் வந்து அவரது தலைக்கு அருகில் அமர்வார். ''மாசடைந்த
ஆன்மாவே! அல்லாஹ்வின் வெறுப்பு மற்றும் கோபத்தை நோக்கிப் புறப்படு''
என்பார். அப்போது அவரது உடல் தளர்த்தப்படும். பின்னர் ஈரக் கம்பளியில்
சிக்கிக்கொண்ட முள் கம்பியை இழுப்பதைப் போன்று அவரது உடலிலிருந்து
உயிரைப் பிடித்து இழுத்துப் பறிப்பார்.


உயிரைப்
பறிக்கும் வானவர் அந்த உயிரைக் கைப்பற்றியதும் கண்ணிமைக்கும் நேரம்கூட அதை
அவரது கையில் அந்த வானவர்கள் விட்டு வைக்கமாட்டார்கள். உடனே அதை அவர்கள்
பெற்று (தாம் கொண்டு வந்திருக்கும்) முடியாலான அந்த (முரட்டுக் கஃபன்)
ஆடையில் வைப்பார்கள். அப்போது மேற்பரப்பில் ஒரு பிணத்திலிருந்து வீசும்
மிக மோசமான துர்வாடையைப் போன்று அதிலிருந்து துர்நாற்றம் வெளிவரும்.
பின்னர் அந்த உயிருடன் வானவர்கள் மேலே ஏறுவார்கள் அவர்கள் அந்த உயிரை
எடுத்துக்கொண்டு வானவர்களின் ஒரு கூட்டத்தைக் கடந்து செல்லும்போதெல்லாம்
அந்தக் கூட்டத்தார், ''இந்த மாசடைந்த உயிர் யாருடையது?'' என்று கேட்பர்.
அதற்கு அவர்கள், ''இன்ன மனிதருடைய மகன் இன்ன மனிதர்'' என்று அவருக்கு
மக்கள் உலகத்தில் சூட்டியிருந்த பெயர்களில் அருவருப்பான பெயரைக்
குறிப்பிடுவார்கள். இறுதியில் அந்த உயிருடன் பூமிக்கு அருகிலிருக்கும்
(முதல்) வானத்திற்குப் போய்ச்சேர்வார்கள். அவருக்காக அந்த வானத்தைத்
திறக்கச் கோருவார்கள். ஆனால் அவருக்காக வானம் திறக்கப்படாது.


இவ்வாறு கூறிய அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''அவர்களுக்கு வானத்தின் வாசல்கள் திறக்கப்படா. ஊசியின் துவாரத்தில் ஒட்டகம் நுழையும்வரை அவர்கள் சொர்க்கத்தில் நுழையமாட்டார்கள்'' எனும் (7:40) வசனத்தை ஓதினார்கள்.

பின்னர் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், ''அவனது (வினைப்) பதிவேட்டை ஆகக் கீழான பூமியிலுள்ள ''ஸிஜ்ஜீன்'' எனும் பேரேட்டில் பதிவு செய்யுங்கள்'' என்று கூறுவான். உடனே அவரது உயிர் வேகமாக வீசியெறிப்படும். இவ்வாறு கூறிய நபி (ஸல்) அவர்கள் ''யாரேனும்
அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தால் அவர் வானத்திலிருந்து கீழே விழுந்தவர்
போன்றவர் ஆவார். பின்னர் அவரைப் பறவைகள் கொத்தித் தூக்கிச் சென்றுவிடும்.
அல்லது காற்று அவரைத் தூரமான இடத்திற்கு அடித்துச் சென்றுவிடும்''
(22:31) எனும் வசனத்தை ஓதினார்கள்.


பின்னர் அவரது
உயிர் (பூமியிலுள்ள) அவரது உடலில் திருப்பிச் செலுத்தப்படும். அவரிடம் இரு
வானவர்கள் வந்து அவரை எழுப்பி அமரவைப்பர். பின்னர் அவரிடம், ''உம்முடைய
இறைவன் யார்?'' என்று கேட்பர். அதற்கு அவர் ''அந்தோ எனக்கு எதுவும்
தெரியாதே!'' என்று கூறுவார். அவ்விருவரும், ''உனது மார்க்கம் எது?'' என்று
கேட்பர். அவர், அந்தோ எனக்கு எதுவும் தெரியாதே!'' என்பார். அடுத்து
''உங்களிடையே அனுப்பப்பட்டிருந்த இந்த மனிதர் யார்?'' என்று (முஹம்மது
(ஸல்) அவர்களைப் பற்றி) அவ்விருவரும் கேட்பர். அப்போதும் அவர், அந்தோ
எனக்கொன்றும் தெரியாதே!'' என்று பதிலளிப்பார்.


அப்போது
வானத்திலிருந்து ஓர் அறிவிப்பாளர், ''என் அடியான் பொய்யுரைத்துவிட்டான்.
எனவே, அவனுக்கு நரகத்தின் விரிப்புகளிலிருந்து (ஒரு விரிப்பை)
விரித்துக்கொடுங்கள், அவனுக்காக நரக வாசல் ஒன்றைத் திறந்துவிடுங்கள்''
என்று அறிவிப்பார். நரகத்தின் வெப்பமும் கடும் உஷ்ணமும் அவரிடம் வரும்.
அவரை அவரது மண்ணறை(யின் இரு பக்கமும்) நெருக்கும். அதனால் அவரது விலா
எலும்புகள் இடம் மாறும். அவரிடம் அவலட்சணமான முகமும் அருவருப்பான உடையும்
துர்வாடையும் உள்ள ஒருவர் வந்து ''உனக்கு வருத்தமளிக்கும் செய்தி
செய்தியொன்றை சொல்கிறேன் கேள், இதுதான் உமக்கு வாக்களிக்கப்பட்ட நாள்
ஆகும்'' என்பார். அப்போது அவர், அந்த அவலட்சணமான மனிதரிடம் ''நீர் யார்?
உமது முகம் தீமையைக் கொண்டுவரும் முகமாக உள்ளதே!'' என்று கேட்பார் அதற்கு
அந்த மனிதர், ''நான்தான் நீ செய்த தீய செயல்'' என்பார். உடனே அந்த
இறைமறுப்பாளர், ''என் இறைவா! யுக முடிவு நாளை (இப்போது)
ஏற்படுத்திவிடாதே'' என்று கூறுவார்.


அறிவிப்பவர் பராவு பின் ஆஸிப் (ரலி) (நூல்கள் - அஹ்மத் 18063, அபூதாவூத் 4753,)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக