ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 11:39 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலண்டர் சொன்ன கதை

Go down

காலண்டர் சொன்ன கதை Empty காலண்டர் சொன்ன கதை

Post by சிவா Mon Jun 21, 2010 2:44 am

கையிலிருந்த காபியை உறிஞ்சியபடியே வாசலுக்கு வந்தார் சதாசிவம். காலை ஏழு மணிக்கெல்லாம் வெயில் சூடு பிடித்திருந்தது. இன்று வெளியே போய் வர ஆட்டோவை பயன்படுத்த வேண்டியதுதான். மனுஷனால் இந்த வெயிலில் பஸ்ஸில் போய் வர முடியாது.

"மீனாட்சி ஏய் மீனாட்சி, இங்கே வா" அதட்டலாக வந்தது அவர் குரல்.

"என்னங்க? அடுப்படியில் வேலையிருக்கு. நீங்கதானே சீக்கிரமா வெளியில் போகணும்ன்னு சொன்னீங்க?"

"அதுக்குத்தான் கூப்பிட்டேன். நான் ஆட்டோவில்தான் போகப் போறேன். அவசரமில்லாமல் வேலையைப் பாருன்னு சொல்றதுக்குத்தான் கூப்பிட்டேன்"

"இதைச் சொல்லத்தான் இப்படி சத்தம் போட்டீங்களா?"

"ஆமா பாரு.. வெயில் சுட்டெரிக்குது. எவன் பஸ்சில் போறது? அதான்" காபியை நிதானமாக உறிஞ்சினார்.

"காலண்டரில் காலையில் பார்த்தவுடனேயே நினைச்சேன். இப்படித்தான் ஏதாவது செய்வீங்கன்னு!"

"என்னது காலண்டர் பார்த்து நடக்கப் போவது உனக்குத் தெரியுதா என்ன? பெரிய ஆள் தான் நீ" மனைவியை நக்கலாகக் கேட்டார்.

"நீங்களே பாருங்க", சுவற்றில் இருந்த காலண்டரை எடுத்து அவர் முகத்தின் முன்னால் ரோஷமாக நீட்டினாள் அவர் மனைவி.

காலண்டரை கையில் வாங்கிப் பார்த்து விட்டு," நான் ஆட்டோவில் இன்னைக்குப் போவேன்னு இங்கே போடலையே" மனைவியைப் பார்த்து கிண்டலாக சிரித்தார்.

"இங்கே பாருங்க உங்க ராசி சிம்மம்,அதுக்கு என்ன பலன் போட்டிருக்கு?"

"பணவிரயம்" காலண்டரில் இருந்தை சத்தமாகப் படித்தார்.

"இங்கே இருக்கிற உங்க ·ப்ரண்டு கனக சபையைப் பார்த்துவிட்டு வருவதற்கு ஆட்டோவில் போயிட்டு வரதுன்னா நூறு ரூபா தண்டம்தானே அதைத்தான் சொன்னேன்" வீராப்புடன் சமையலறைக்குத் திரும்பினாள்.

"உன் ராசிக்கு மனக் குழப்பம்னு போட்டிருக்கு. அப்படின்னா நான் அட்டோல போவனா மாட்டேனான்னு நீ குழம்பிக்கிட்டேயிருப்பியா?" காலண்டரைக் கையில் பிடித்தபடி மனைவியின் பின்னால் நடந்தார் அவர்.

அவர் மனைவி ஒரு ஜோசியப் பைத்தியம். எல்லாவற்றிற்கும் ராகு காலம், நல்ல நேரம் பார்ப்பாள். அவளது அந்தப் பழக்கத்தைக் கிண்டலடிப்பது சதாசிவத்தின் ரிடையர்டு வாழ்க்கையின் பெரிய பொழுது போக்கு

"சும்மா இருங்க. எனக்கு வேலையிருக்கு"

"இல்லை மீனாட்சி, நான் இன்ன்னிக்கு ப்ருவ் பண்ணிக் காட்டறேன். இந்தக் காலண்டர் ஜோசியம் எல்லாம் பலிக்காது. இதல்லாம் ஒரு வியாபார யுக்தி."

இட்லித் தட்டில் இட்டிலியை ஊற்றிக் கொண்டிருந்தவள் திரும்பி முறைத்தாள்.

"நிஜமாத்தான் சொல்றேன். நான் இன்னைக்கு பஸ்ஸில்தான் போகப் போறேன். கனகசபையைப் பார்த்துட்டு அப்படியே பாங்கில் இருந்து பணம் எடுத்துட்டு வரேன் பார். பணவிரயம்னு காலண்டர் சொல்றதை, பண வருமானமா மாத்திக் காட்டுறேன் பார்" என்று சபதம் போட்டவர் அப்படியே செய்யும் முயற்சியில் கிளம்பினார்.

பாக்கெட்டில் ஒரு பத்து ரூபாய் மட்டும் எடுத்துக் கொண்டு பஸ் ஸ்டாப்பை நோக்கி நடந்தார். அதிகமாக பணம் எடுத்துக் கொண்டு போனால் எங்கே ஆட்டோவில் ஏறிவிடுவோமோ என்று அவருக்கு உள்ளுக்குள்ளேயே பயம் இருந்தது.

பஸ் ஸ்டாப்பில் இருந்தவர், கூட்டத்தில் ஏற பயந்து கொண்டு இரண்டு மூன்று பஸ்களை விட்டுவிட்டார். வெயிலில் நாக்கு வறண்டது. பக்கத்துக் கடையில் ஒரு பெப்ஸியை வாங்கிக் குடித்தவுடன் தான் மூச்சு விட முடிந்தது. அப்புறம்தான் தெரிந்தது பஸ்ஸ¤க்குத் தன் கையில் இருக்கும் மீதிச்சில்லறை பத்தாது என்பது. வீட்டுக்குத் திரும்பிப் போய் பணம் எடுத்துக் கொண்டு ஆட்டோவில் போய்விடலாம்தான். ஆனால்...மனைவியிடம் சவால் செய்த வீறாப்பை நொந்து கொண்டு நடக்க ஆரம்பித்தார். அவர் நடக்க, நடக்க வெயில் ஏறியது. சோர்வாக அவர் கனக சபை வீட்டை அடைந்த போது, அவருடைய மனைவி மட்டுமே இருந்தார்.

"உங்களுக்காக இவ்வளவு நேரம் காத்திருந்து விட்டு இப்பத்தான் கிளம்பினார். உங்களை கடையில் வந்து பார்க்கச் சொன்னார்." பதில் சொல்லிவிட்டு டிவி முன்னால் உட்காரும் அவசரத்தில் உள்ளே செல்வதில் இருந்தார் அந்தப் பெண்மணி.

"அம்மா கொஞ்சம் தண்ணீர் தறீங்களா? வெயிலில் வந்தது தாகமாக இருக்கு"

"இந்த வெயிலில் எல்லாம் பேசாமா ஆட்டோ எடுத்துடணும்" தண்ணீரோடு இலவசமாய் தன் அட்வைஸையும் கொடுத்து விட்டு நகர்ந்தார் அந்தப் பெண்மணி,

இன்னும் கொஞ்ச நேரம் இங்கிருந்தால் இந்த அம்மாவே ஆட்டோ பிடித்து விடுவார் போல! சுகமாய்த்தான் இருக்கும். சதாசிவத்திற்குத் தான் செலவு. அவமானம் வேறு. வேகமாக படியிறங்கினார்.

கனகசபையின் கடை அடுத்த தெருதான். வேகமாக நடந்து விட வேண்டியது தான். இந்த சின்ன தூரத்துக்கெல்லாம் ஆட்டோக்காரன் வர மாட்டான். அப்படியே வந்தாலும் அவர் கையில் பணம் இல்லை. கனகசபையிடம் லை·ப் இன்ஸ¤ரன்ஸ் பற்றி பேச வேண்டும். காலையிலேயே வீட்டுக்கு வரச் சொன்னார். நேரத்திற்கு வந்திருந்தால், அவருடன் ஸ்கூட்டரின் பின்னால் தொத்திக் கொண்டிருக்கிருக்கலாம். வேகமாக நடந்தார்.

நல்ல வேளை!, கனக சபை அவரது கடையிலிருந்தார். வந்த விஷயம் முடிந்தவுடன், அவருடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார். வெயிலில் நடந்தது ரொம்ப சோர்வாக இருந்தது. கடையில் மெல்லியதாக மின்விசிறியில் வந்த காற்று சுகமாக இருந்தது. அந்த சுகத்தில் வெயிலின் கடுமை குறைந்தது. கனகசபையின் பேச்சு தாலாட்ட மெதுவாக கண்ணயர்ந்தார்.

"என்னப்பா சதாசிவம் பையனுக்கு பொண்ணு பார்க்கிறியா? மெல்ல அவர் தோளைத் தொட்டார் கனக சபை.

"ம்ம் பார்த்துகிட்டே இருக்கேன். இன்றைக்கு சாய்ந்திரம் கூட எம் மச்சினன் ஏதோ ஜாதகம் எடுத்துட்டு வருகிறான்." பாதி தூக்கத்திலேயே பதில் சொன்னார்.

"மணி மூன்றாகப் போகுது நீ இங்கேயே தூங்கிட்டே?"

"ஓ"சட்டென்று எழுந்து உட்கார்ந்தார். "அடட! வெயிலில் வந்தது அசதியாய் இருந்துச்சு. அப்படியே அசந்துட்டேன். சரி சரி நான் கிளம்புறேன் பாங்குக்கு போய் விட்டுப் போகவேண்டும்" என்றபடி கிளம்பினார்.

மனதுக்குள் மனைவியை எண்ணி சிரித்துக் கொண்டார். காலண்டர் சொன்ன கதையை பொய்யாக்கி விட்டார். பாங்கில் இருந்து பணம் எடுத்துக் கொண்டு போய் மீனாட்சி கையில் கொடுத்து கிண்டல் செய்ய வேண்டும். அவள் கோபப் படுவது இந்த வயதிலும் அழகுதான்.

"சரி வா நான் உன்னை பாங்கில் போய் விட்டுட்டு வீட்டுக்குப் போறேன்” என்று கனக சபை சொல்ல அதுதான் சாக்கு என்று சதாசிவம் கனகசபையின் ஸ்கூட்டரின் பின்னால் ஏறிக் கொண்டார். கனகசபை புண்ணியத்தில் வெயிலின் கொடுமையிலிருந்து தப்பித்தார்.

ஏடிஎம்மில் பணம் எடுக்க எப்போதையும் விட அதிக கூட்டம் இருந்தது. கூட்டத்தில் நின்று பணத்தை எடுத்துக் கொண்டு நடந்தே வீட்டுக்கு வந்தார். அவர் நடையில் வெற்றிப் பெருமிதம். கைக்கடிகாரம் மணி ஐந்து என்று காட்டியது. வாசலிலேயே அவர் மனைவி மீனாட்சிநின்றிருந்தார்.

"என்னங்க எங்கே போனீங்க?" பதற்றத்தோடு கேட்டார்.

"ஏன் நான் சொல்லிட்டுத்தானே போனேன். இந்தா பணம்" என்று கையிலிருந்தக் கவரை மனைவியின் கையில் கொடுத்தார்.

"காலையில் எட்டு மணிக்கு போனவர், கனகசபை கடையிலிருந்து ஒரு ·போனாவது பண்ணியிருக்கலாம்மில்லே?", கோபமாகக் கேட்டாள் மனைவி.

"வெயிலில் நடந்து போனது. டயர்டாக இருந்தது". சதாசிவம் பேசிக் கொண்டிருந்த போதே ஒரு ஆட்டோ வீட்டின் முன்னால் வந்து நின்றது. அவர் மச்சினன் வந்து இறங்கினான்.

"என்னப்பா எப்படியிருக்கிறாய்?"அவன் தோளில் தட்டினார் சதாசிவம்.

"நான் நல்லாதான் இருக்கேன் மச்சான். உங்களுக்குத்தான் என்னவோ ஏதோன்னு ஊரு பூரா சுத்திட்டு வரேன். ஆட்டாவிற்கு பணம் கொடுத்து அனுப்புங்க"

"ஏன் எனக்கு என்ன ச்சு?" என்று மனைவியைக் கேட்டவர், ஆட்டோவிடம் திரும்பி,

" எவ்வளவப்பா?"

"ஒரு இருநூறு ஆச்சு சார்"

"என்னது?" மார்பில் கையை வைத்து அதிர்ந்தார். இவ்வளவு நேரம் வீராப்பாய் நடந்த கால்கள் தள்ளாடின.

"நீங்க உள்ளே வாங்க. தம்பி நீ காசை ஆட்டோவிற்கு கொடுத்து விட்டு உள்ளே வா"
என்ற படி அவர் மனைவி வீட்டுக்குள் அவரை அழைத்துச் சென்றாள்.

"காலையில் எட்டு மணிக்குப் போனவர். மணி மூணாகியும் வீடு வந்து சேரலை. இங்கே இருக்கிற கனகபை விட்டுக்குப் போனவர் இன்னும் காணுமே என்று பதறி விட்டேன். தம்பி வந்தவுடன் ஒரு இரண்டு மணி நேரமாய் ஆட்டோ எடுத்துக் கொண்டு ஒவ்வொரு இடமாய்த் தேடிக் கொண்டு போனான்" காலையில் நடந்த பேச்சை மறந்தபடி சொல்லிக் கொண்டிருந்தாள் அவர் மனைவி.

ஆயாசமாக நாற்காலியில் உட்கார்ந்தார்.

முட்டாள்தனமாய் வெயிலில் அலைந்துதான் மிச்சம். இதோ இருநூறு ருபாய் நிமிடத்தில் காலி, உன் மனைவிக்கும் இன்று மன உளைச்சல் என்று சொல்வது போல் எதிர்ச் சுவரில் மாட்டியிருந்த காலண்டர் முருகன் சிரித்துக் கொண்டிருந்தான்.


- சுகந்தி


காலண்டர் சொன்ன கதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum