ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கென்று ஒரு பேனா!

Go down

எனக்கென்று ஒரு பேனா! Empty எனக்கென்று ஒரு பேனா!

Post by Guest Wed Oct 08, 2008 12:25 am

மு. நடராசன்

பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழைப் பெற்று வருவதற்காகப் பள்ளிக்குச் செல் லத் தயாராகிக் கொண்டிருந்தான் அன்பு.

``அன்பு... பள்ளிக்குச் செல்லும் வழியிலேயே வங்கிக்குச் சென்று ஒரு வரைவோலை எடுத்து அதை இந்த முகவரிக்கு அஞ்சலகத்துக்குச் சென்று அனுப்பிவிடு. இது நாளையே சென்று சேர வேண்டும். கவனமாகச் செய்'' என்று சொல்லி பணத்தையும், முகவரியையும் கொடுத்துவிட்டு அலுவலகம் சென்றார் அன்புவின் தந்தை.

பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரி சேர்க்கைக்காகக் காத்திருந்தான் அன்பு. நண்பர்களோடு பள்ளிக்குச் சென்று மகிழ்ச்சியாய் உலாவிவிட்டு மதிப்பெண் சான்றிதழ் வாங்கி வரலாம் என்று நினைத்திருந்தவனுக்கு, தந்தை ஒரு முக்கிய வேலையை ஒப்படைத்துவிட்டுப் போனது எரிச்சலைத் தந்தது. மிதிவண்டியை எடுத்துக்கொண்டு வங்கியை நோக்கிச் சென்றான்.

வங்கியில் கூட்டம் அதிகமாக இருந்தது. பல் வேறு வண்ணங்களில் வங்கிச் சீட்டுகள் தொங்கிக் கொண்டிருந்தன. அவற்றில், வரை வோலை எடுப்பதற்கான சீட்டை எடுத்து விவ ரங்களை எழுதுவதற்காக சட்டைப் பையைத் தொட்டபோதுதான் பேனா எடுத்து வராதது தெரியவந்தது.

காசாளர் முன் நின்று கொண்டிருந்த வரி சையில் ஒருவரிடம் பேனா இருந்தது. அவரி டம் சென்று, ``கொஞ்சம் பேனா கொடுங் கள்... இதை எழுதிவிட்டுத் தருகிறேன்'' என் றான் அன்பு.
avatar
Guest
Guest


Back to top Go down

எனக்கென்று ஒரு பேனா! Empty Re: எனக்கென்று ஒரு பேனா!

Post by Guest Wed Oct 08, 2008 12:25 am

அவர் அன்பின் மீது வெறுப்பாய் ஒரு பார் வையை வீசியபின், தனது பையிலிருந்து பேனாவை எடுத்து மூடியைத் தன் கையில் வைத்துக்கொண்டு, பேனாவை அவனிடம் கொடுத்தார்.

`ஆமாம்... பெரிய சொத்து! இதைத்தான் தூக் கிக்கொண்டு போகப் போகிறேனா' என்று மனதுக்குள் நினைத்தபடி, எழுதுபலகை மீது வைத்து வங்கிச் சீட்டை நிரப்பினான்.

அந்தச் சீட்டையும் பணத்தையும் காசாளரிடம் கொடுத்துவிட்டு, பேனாவைத் தன்னிச்சையாய் பையில் செருக முயன்றபோதுதான், அது அந்தப் பெரியவரின் பேனா என்பது ஞாபகத்துக்கு வந்தது.

மூடியை அவர் கையில் வைத்துக்கொண்டதன் ரகசியம் இப்போது தெரிய, வெட்கப்பட்ட அவன், பேனாவை அவரிடம் திருப்பிக் கொடுத்தான்.

வரைவோலையை அனுப்புவதற்காக அஞ்சலகமë சென்ற அன்புவுக்கு அங்கும் பேனா பிரச்சினையே பெரிதாகி நின்றது. அஞ்சல் உறை மீது முகவரி எழுதுவதற்காக எவர் கையில் பேனா இருக்கிறது என்று பார்த்தான். சோதனையாக அனைவரும் தமது பேனாவால் எழுதிக் கொண்டிருந்தனர். எஞ்சியிருந்த ஒரு சில இளைஞர்கள் கையில் பேனா இல்லை.

அப்போது தபால்தலை வாங்க வந்த ஒருவரிடம் பேனா இருந்தது. ``கொஞ்சம் பேனா கொடுங்க... முகவரி எழுதிவிட்டுத் தருகிறேன்'' என்று அன்பு கேட்டான்.

``ஏம்பா... அதென்ன, அஞ்சலகம் வருகிறீர்கள், வங்கிக்கு வருகிறீர்கள்... கடித உறையையோ, பணத்தையோ எடுத்துக்கொள்ள மறக்கிறீர்களா? அது என்ன பேனாவை மட்டும் மறந்து விடுகிறீர்கள்? நீங்கள் பேனாவைக் கடனாக வாங்குவீர்கள். கொடுத்துவிட்டு நாங்கள் உங் களையே பார்த்துக்கொண்டிருக்க வேண்டும். அப்படித்தானே? சின்ன விஷயம்தான், ஆனால் இதன் வலி, பேனாவைக் கொடுத்து இழநëதவனுக்குத்தான் தெரியும். சரி... சரி, இந்தா, எழுதிவிட்டுக் கொடு...''
avatar
Guest
Guest


Back to top Go down

எனக்கென்று ஒரு பேனா! Empty Re: எனக்கென்று ஒரு பேனா!

Post by Guest Wed Oct 08, 2008 12:26 am

`கொஞ்ச நேரம் பேனாவைத் தருவ தற்கு இப்படியா?' நெஞ்சில் சலிப்போடு, வேறு வழியின்றி அந்தப் பேனாவை வாங்கி எழுதத் தொடங்கினான் அன்பு.

மதிப்பெண் பட்டியலைப் பெற்றுக் கொண்டு, நெரிசல் மிகுந்த நகர்ப்புறத் தெரு வழியே வந்துகொண்டிருந்தபோது வேகமாக வந்த ஓர் ஆட்டோ அன்புவை உரசி இடித்துத் தள்ள, மிதிவண்டியோடு சாலை ஓரத்தில் போய் விழுந்தான்.

ஆட்டோவின் உள்ளிருந்து எட்டிப் பார்த்த ஓட்டுநர், `பெரிதாய் ஒன்றுமில்லை, இனி இங்கு நின்றால் பிரச்சினை' என்று வேக மாய்ச் சென்றுவிட, ஆட்டோ எண்ணைக் குறித்துக்கொள்வதற்காக சட்டைப் பையில் கை வைத்தான். பேனா இல்லா தது தெரியவர, ஆட்டோவின் பதி வெண்ணை நினைவில் நிறுத்த முயற் சித்தான்.

சாய்ந்து கிடநëத தனது மிதிவண்டியைத் தூக்கி நிறுத்தினான். தனது உடைகளைச் சரிசெய்த பின், காவல் நிலையம் சென்று புகார் செய்யலாமா என்று நினைத்தான். அதற்காக பதி வெண்ணை நினைவுக்குக் கொண்டுவர முயன்றபோது சரியாக நினைவுக்கு வரவில்லை.

``மதிப்பெண் பட்டியல் பெற பள்ளிக்கு வருகிறாய். பேனாவை எடுத்துக்கொண்டு வர வேண்டும் என்பது கூடவா தெரியவில்லை? வெளியில் வரும்போது எதை மறந்தாலும் மறக் கலாம். பேனா எடுத்துக்கொள்வதை மட்டும் மறக்கவே கூடாது அன்பு.

நாம் பயணிக்கும்போதுகூட அரிய சிந்தனைகள் வரலாம். பையில் தாளும் பேனாவும் இருந்தால் அதை குறித்துக்கொள்ளலாம். நாம் செல்லும் இடத்தில் எழுதி வைக்கப்பட்டிருக் கும் கருத்துகளோ, பொன்மொழிகளோ நமக்குப் பிடித்திருந்தால் அதை எழுதி வைத்துக் கொள்ளலாம். இப்படி, நாம் செல்லும் இடமெல்லாம் பேனா நமக்குப் பெருந்துணை புரியும்.
avatar
Guest
Guest


Back to top Go down

எனக்கென்று ஒரு பேனா! Empty Re: எனக்கென்று ஒரு பேனா!

Post by Guest Wed Oct 08, 2008 12:26 am

அவ்வளவு ஏன், நீ சாலையில் செல்கிறாய். உன்மீது ஒரு வாகனம் இடித்துவிட்டு வேகமாகச் செல்கிறது. அந்த வாகனத்தின் பதிவெண்ணைக் குறித்துக்கொள்வதற்கு உன் பையில் பேனா இருந்தால்தானே முடியும்? பதிவெண் இல்லாமல் எப்படி புகார் கொடுப்பாய்?''

மதிப்பெண் பட்டியல் பெற்றதற்கு கையொப்பமிட ஆசிரியரிடமே பேனா கேட்கப்போக, ஆசி ரியர் சொன்ன வார்த்தைகள் அன்புவின் மனத்திரையில் தற்போது ஓடின.

ஓர் ஒப்புக்காக ஆசிரியர் சொன்னது தனக்கு உடனடி அனுபவத்தைத் தரும் என்று கொஞ்ச மும் எதிர்பார்க்கவில்லை அன்பு.

தன்னைப் பற்றி அப்போதுதான் ஒரு சுயபரிசோதனை செய்து பார்த்தான். எங்கு எப்போது செல்லும்போதும் பேனா எடுத்துச் செல்வதை அவன் வழக்கமாகக் கொண்டிருந்ததில்லை என்பது புரிந்தது.

இன்று பேனா இல்லாதது எவ்வளவு அனுபவங்களைத் தந்துவிட்டது! ஆசிரியர் சொன்னதைப் போல, பேனா இருந்திருந்தால் தனக்கு ஏற்பட்ட இந்த விபத்து குறித்து காவல்துறையில் புகார் செய்திருக்கலாம்தான். தன்னைத் தானே நொந்துகொண்டான் அன்பு.

இனி தனக்கென ஒரு பேனா எடுத்துக்கொள்ளாமல் எந்த இடத்துக்கும் செல்வதில்லை என்று உறுதி எடுத்துக்கொண்டான் அன்பு.
avatar
Guest
Guest


Back to top Go down

எனக்கென்று ஒரு பேனா! Empty Re: எனக்கென்று ஒரு பேனா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum