ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!

3 posters

Go down

தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Empty தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!

Post by ரபீக் Sat Jun 19, 2010 11:16 am

மணமகன் தாலி கட்ட முனைந்த போது, அந்தத் தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்தி மணமகள் காதலனுடன் வெளியேறியதால் அங்கு பரபரப்பான சூழல் உண்டானது. திரைப்படங்களில் மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த பல காட்சிகள் தற்போது நிஜ வாழ்க்கையிலும் நடைபெறுகின்றன. இது பற்றிய விவரம் வருமாறு:

விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள மேட்டுக்குப்பத்தை சேர்ந்தவர் அழகுவேல். இவருடைய மகன் உத்திராபதிக்கும் கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டையை சேர்ந்த அவருடைய மாமா சின்னதுரையின் மகள் சுதாவுக்கும் திருமணம் செய்ய கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நிச்சயம் செய்யப்பட்டது.

ஜுன் 18ஆம் தேதி திருமணம் நடத்த முடிவு செய்து அதற்கான அழைப்பிதழ் அச்சடித்து உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஊர் முழுவதும் வழங்கப்பட்டது. திருமண ஏற்பாடுகளை மணமகன் வீட்டார் தடபுடலாக செய்தனர்.

திருமண நாளுக்கு முதல் நாளான வியாழக் கிழமையன்று தியாகதுருகத்தில் உள்ள திருமண மண்டபத்தில் இருவீட்டாரின் உறவினர்கள், நண்பர்கள் திரண்டனர். இரவு அலங்கார ஊர்தியில் மணமகள் ஊர்வலம் நடந்தது. இதில் மணமகள் வீட்டார் சீர்வரிசை பொருட்களை எடுத்துச்சென்றனர்.

வெள்ளிக் கிழமை காலை 6 மணியளவில் மணமக்களின் பெற்றோருக்கு பாதபூஜை நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து திருமண உடை அணிந்து மணமேடையில் உத்திராபதியும், சுதாவும் மணக் கோலத்தில் அமர்ந்தனர்.

சரியாக 7.15 மணியளவில் அய்யர் `மாங்கல்யம் தந்துனானேனா' என்று மந்திரம் ஓதி தாலியை எடுத்து உத்திராபதி கையில் கொடுத்தார். அதை சுதாவின் கழுத்தில் கட்ட முயன்ற போது, சுதா தன் கையால் தாலியை தட்டிவிட்டு, கழுத்தில் அணிந்திருந்த மாலையையும் கழற்றி வீசினார்.

மணமேடையில் இருந்து எழுந்து நின்ற சுதா தனக்கு மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்றும், திருமணத்துக்கு வந்திருக்கும் அத்தை மகன் பாக்கியராஜியை காதலிப்பதாகவும், அவரையே திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் சினிமா பாணியில் கூறினார். இதனால் மண்டபத்தில் அமர்ந்திருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

தாலிகட்டும் நேரத்தில் மகள் இப்படி செய்வாள் என்று எதிர்பாராத சுதாவின் பெற்றோர் அவரை சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் அவர் அத்தை சரோஜாவின் மகன் பாக்கியராஜியை திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்தார். இதைத்தொடர்ந்து பாக்கியராஜியுடன் சுதா திருமண மண்டபத்தை விட்டு உறவினர்களுடன் வெளியேறினார். இதனால் மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மணமகளின் திடீர் முடிவால் ஏமாற்றத்துடன் காணப்பட்ட உத்திராபதிக்கு அதே மேடையில் திருமணம் செய்து வைக்க அவருடைய பெற்றோர், உறவினர்கள் முடிவு செய்தனர். அப்போது திருமணத்துக்கு வந்திருந்த மணமகனின் எதிர் வீட்டை சேர்ந்த தண்டபாணி-தனம் ஆகியோரின் மகள் நிர்மலாவை, உத்திராபதியின் பெற்றோர், பெண் கேட்டனர். உடனே அவர்கள் சம்மதம் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து ஊரில் இருந்த நிர்மலா அவசர அவசரமாக திருமண மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டார். என்ன நடக்கிறது என்று அறிந்து கொள்வதற்குள் மணப்பெண்ணாக அலங்கரித்து மணமேடையில் அமர்ந்த நிர்மலாவுக்கு உத்திராபதி தாலி கட்டினார். மணமக்களை உறவினர்கள், நண்பர்கள் அர்ச்சதை தூவி வாழ்த்தினார்கள்.

காதலனுடன் சென்ற சுதாவுக்காக வாங்கி வரப்பட்ட பீரோ, கட்டில், மெத்தை மற்றும் சீர்வரிசை பொருட்கள் மண்டபத்தின் ஓரத்தில் கேட்பாரற்று கிடந்தன. நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணுக்கு பதிலாக எதிர்வீட்டு பெண்ணுடன் நடந்த இந்த திருமணத்தால் தியாகதுருகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Empty Re: தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!

Post by முபிஸ் Sat Jun 19, 2010 11:26 am

என்ன கொடும இது....ஆனால் நிர்மலா குடும்பத்திற்கு வாழ்த்துக்கள்


என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Empty Re: தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!

Post by நவீன் Sun Jun 20, 2010 8:41 am

தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! 838572 தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! 838572
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Empty Re: தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum