புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நட்பும் அதன் ஒழுக்கமும் Poll_c10நட்பும் அதன் ஒழுக்கமும் Poll_m10நட்பும் அதன் ஒழுக்கமும் Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
நட்பும் அதன் ஒழுக்கமும் Poll_c10நட்பும் அதன் ஒழுக்கமும் Poll_m10நட்பும் அதன் ஒழுக்கமும் Poll_c10 
35 Posts - 36%
mohamed nizamudeen
நட்பும் அதன் ஒழுக்கமும் Poll_c10நட்பும் அதன் ஒழுக்கமும் Poll_m10நட்பும் அதன் ஒழுக்கமும் Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
நட்பும் அதன் ஒழுக்கமும் Poll_c10நட்பும் அதன் ஒழுக்கமும் Poll_m10நட்பும் அதன் ஒழுக்கமும் Poll_c10 
3 Posts - 3%
Manimegala
நட்பும் அதன் ஒழுக்கமும் Poll_c10நட்பும் அதன் ஒழுக்கமும் Poll_m10நட்பும் அதன் ஒழுக்கமும் Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
நட்பும் அதன் ஒழுக்கமும் Poll_c10நட்பும் அதன் ஒழுக்கமும் Poll_m10நட்பும் அதன் ஒழுக்கமும் Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
நட்பும் அதன் ஒழுக்கமும் Poll_c10நட்பும் அதன் ஒழுக்கமும் Poll_m10நட்பும் அதன் ஒழுக்கமும் Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
நட்பும் அதன் ஒழுக்கமும் Poll_c10நட்பும் அதன் ஒழுக்கமும் Poll_m10நட்பும் அதன் ஒழுக்கமும் Poll_c10 
2 Posts - 2%
prajai
நட்பும் அதன் ஒழுக்கமும் Poll_c10நட்பும் அதன் ஒழுக்கமும் Poll_m10நட்பும் அதன் ஒழுக்கமும் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
நட்பும் அதன் ஒழுக்கமும் Poll_c10நட்பும் அதன் ஒழுக்கமும் Poll_m10நட்பும் அதன் ஒழுக்கமும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நட்பும் அதன் ஒழுக்கமும் Poll_c10நட்பும் அதன் ஒழுக்கமும் Poll_m10நட்பும் அதன் ஒழுக்கமும் Poll_c10 
401 Posts - 48%
heezulia
நட்பும் அதன் ஒழுக்கமும் Poll_c10நட்பும் அதன் ஒழுக்கமும் Poll_m10நட்பும் அதன் ஒழுக்கமும் Poll_c10 
282 Posts - 34%
Dr.S.Soundarapandian
நட்பும் அதன் ஒழுக்கமும் Poll_c10நட்பும் அதன் ஒழுக்கமும் Poll_m10நட்பும் அதன் ஒழுக்கமும் Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
நட்பும் அதன் ஒழுக்கமும் Poll_c10நட்பும் அதன் ஒழுக்கமும் Poll_m10நட்பும் அதன் ஒழுக்கமும் Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
நட்பும் அதன் ஒழுக்கமும் Poll_c10நட்பும் அதன் ஒழுக்கமும் Poll_m10நட்பும் அதன் ஒழுக்கமும் Poll_c10 
28 Posts - 3%
prajai
நட்பும் அதன் ஒழுக்கமும் Poll_c10நட்பும் அதன் ஒழுக்கமும் Poll_m10நட்பும் அதன் ஒழுக்கமும் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
நட்பும் அதன் ஒழுக்கமும் Poll_c10நட்பும் அதன் ஒழுக்கமும் Poll_m10நட்பும் அதன் ஒழுக்கமும் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
நட்பும் அதன் ஒழுக்கமும் Poll_c10நட்பும் அதன் ஒழுக்கமும் Poll_m10நட்பும் அதன் ஒழுக்கமும் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
நட்பும் அதன் ஒழுக்கமும் Poll_c10நட்பும் அதன் ஒழுக்கமும் Poll_m10நட்பும் அதன் ஒழுக்கமும் Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
நட்பும் அதன் ஒழுக்கமும் Poll_c10நட்பும் அதன் ஒழுக்கமும் Poll_m10நட்பும் அதன் ஒழுக்கமும் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நட்பும் அதன் ஒழுக்கமும்

Page 1 of 2 1, 2  Next

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Apr 29, 2010 8:28 pm

அறிமுகமாகிக் கொள்ளவேண்டும்
ஆத்மாக்கள் எல்லாம் குழுக்களாக பிரிக்கப்பட்ட படைகளாகும். அவற்றில் அறிமுகமாகிக் கொள்பவை இணைந்து கொள்கின்றன. அறிமுகமாகிக் கொள்ளாதவை வேறுபட்டு விடுகின்றன என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) அவர்கள், நூல்: புகாரீ 3088)
நட்பை வளர்த்தல்
(1) ஸலாம் கூறுதல்
என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக, நிச்சயமாக நீங்கள் ஈமான் கொள்ளும் வரை சொர்க்கத்தில் நுழைய முடியாது. நீங்கள் ஒருவருக்கொருவர் நேசிக்கும் வரை ஈமான் கொண்டவர்களாக முடியாது. உங்களிடையே நேசத்தை ஏற்படுத்தும் ஒரு காரியத்தை உங்களுக்கு அறிவிக்கட்டுமா? உங்களிடையே ஸலாத்தைப் பரப்புங்கள்!
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள், நூல்: முஸ்லிம் 81)
உறவினர்களாக இருப்பினும் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் சந்திக்கும் போதெல்லாம் ஸலாம் கூறவேண்டும்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Apr 29, 2010 8:29 pm

(2) அன்பைத் தெரிவித்தல்

நபி (ஸல்) அவர்களின் சபையில் நான் இருந்தேன். அப்போது ஒரு மனிதர் (எங்களை) கடந்து சென்றார். எங்களுடன் இருந்தவர்களில் ஒருவர், அல்லாஹ்வின் தூதரே! நான் இந்த மனிதரை நேசிக்கிறேன் என்றார். அதனை அவருக்கு தெரிவித்துவிட்டாயா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கவர் இல்லை என்றார். எழுந்து சென்று அவரிடம் தெரிவித்துவிடு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர் எழுந்து சென்று, இன்னவரே! நான் உம்மை அல்லாஹ்வுக்காக நேசிக்கிறேன் என்றார். அதற்கு அந்த மனிதர், யாருக்காக நீ என்னை நேசித்தாயோ அந்த அல்லாஹ் உம்மை நேசிப்பானாக! என்று கூறினார்.
அறிவிப்பர்: அனஸ் (ரலி) அவர்கள், நூல் : அஹ்மது 11980
(3) சந்தித்தல்
ஒரு மனிதர் இன்னொரு ஊரிலிருந்த தன் சகோதரரை சந்திக்கச் சென்றார். அவர் செல்லும் வழியில் அல்லாஹுதஆலா ஒரு மலக்கை எதிர்பார்த்திருக்கும்படிச் செய்தான். அம்மனிதர் அந்த மலக்கு அருகில் வந்த போது, அம்மலக்கு அவரிடம் எங்கு செல்கிறீர்? என்று கேட்டார். அதற்கவர் இந்த ஊரிலுள்ள என் சகோதரரை நாடிச் செல்கிறேன் என்றார். அப்போது அந்த மலக்கு அந்தச் சகோதரர் உமக்கு ஏதேனும் நன்மை செய்ய வேண்டியதிருக்கிறதா? (அதற்காக அவரிடம் செய்கிறாயா?) என்று கேட்டார். அதற்கு அம்மனிதர், அல்லாஹ்வுக்காக அவரை நேசிக்கிறேன் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை என்றார். அப்போது அந்த மலக்கு, அல்லாஹ்வுக்காக நீர் அவரை நேசித்தது போல் அல்லாஹ் உன்னை நேசிக்கிறான் என்பதை உனக்கு தெரிவிக்க வந்த அல்லாஹ்வின் தூதர்தான் நான் என்று கூறினார்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள், நூல்: முஸ்லிம் 4656)
இந்த ஹதீஸில் கிடைக்கும் செய்திகள்:
1) நல்ல நட்பு என்பது உலக லாபத்திற்காக இல்லாமல் அல்லாஹ்வுக்காக என இருப்பது.
2) நட்புக் கொண்டவர்களிடையே சந்திப்புகள் நடக்க வேண்டும்
3) ஒருவர் மீது தூய்மையான அன்பு கொண்டால் அதற்காக அல்லாஹ்வும் நம்மீது அன்பு கொள்கிறான்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Apr 29, 2010 8:30 pm

நட்பின் கடமைகள்
(அ) உதவி செய்தல்
உலக இலாபத்திற்காக நட்புக் கொள்வது முறையல்ல என்றாலும் தேவைகள் நெருக்கடிகள் ஏற்படும் போது ஒருவருக்கொருவர் உதவிகள், ஒத்துழைப்புகள் செய்து கொள்ள வேண்டும்.
ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு சகோதரன் ஆவான். அவனுக்கு அநியாயம் செய்யக் கூடாது. காட்டிக் கொடுக்கக் கூடாது. யார் தன் சகோதரனின் தேவையை நிறைவேற்றுகிறாரோ அவரது தேவையை அல்லாஹ் நிறைவேற்றுகிறான். யார் ஒரு முஸ்லிமின் நெருக்கடியை அகற்றுகிறாரோ கியாமத் நாளின் நெருக்கடிகளில் ஒரு நெருக்கடியை அவரை விட்டும் அல்லாஹ் அகற்றுகிறான். யார் ஒரு முஸ்லிமின் குறையை மறைக்கிறாரோ அவரது குறையை அல்லாஹ் மறைக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) அவர்கள், நூல்: புகாரீ 2262, முஸ்லிம்)
பொதுவாக அனைத்து முஸ்லிம்களிடமும் இவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் எனும் போது நமக்கு நெருக்கமானவர்கள் என்றால் இந்த கடமைகளின் முக்கியத்துவம் மேலும் கூடுகிறது.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Apr 29, 2010 8:31 pm

(ஆ) நல்வழிப்படுத்துதல்
இந்த வசனத்தில் முஃமின்கள் தங்களுக்குள் நன்மையை எடுத்துச் சொல்லி தீமையை தடுக்க வேண்டியது கடமை என குறிப்பிடப்படுகிறது.
18:32 தொடர் வசனங்களில் உலக வாழ்வில் மயங்கி அல்லாஹ்வை மறந்த தன் நண்பனுக்கு ஒரு நல்ல நண்பன் செய்த உபதேசத்தை அல்லாஹ் உதாரணமாகக் கூறுகிறான்.

உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும் அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக் கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள் என்றார்.

அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும் அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
(அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள், நூல்: புகாரீ 6438)
அநியாயம் செய்வது தன் நண்பன் என்பதற்காக கண்டு கொள்ளாமல் இருப்பது நல்ல நண்பனுக்கு தகுமானதல்ல. மேலும் தன் நண்பனின் அநியாயத்திற்கு துணை நின்றால் அது ஒருபெரிய பாவமாகிவிடும்.
உற்ற நேசர்களெல்லாம் அன்றைய (மறுமை) நாளில் ஒருவர் மற்றவருக்கு விரோதிகளாயிருப்பர் இறையச்சமுள்ளவர்களைத் தவிர (43:67)
நண்பர்களின் தீமைக்கு துணைபோனவர்கள் எல்லாம் உன்னால் நான் கெட்டேன், என்னால் நீ கெட்டாய்என்று ஒருவரை ஒருவர் பழித்து எதிரிகளாகிவிடுவர்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Apr 29, 2010 8:32 pm

தீய நட்பை முறிக்க வேண்டும்
திருத்தினாலும் திருந்தாத தீய நண்பனிடமிருந்து விலகிக் கொள்ளவேண்டும்.
ஒருவர் தன் தோழனின் வழியில்தான் இருப்பார். எனவே உங்களில் ஒருவர் யாரிடம் தோழமை கொண்டுள்ளார் என பார்த்துக் கொள்ளட்டும்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள், நூல்: அபூதாவூத் 4193, திர்மிதி 2300)
தூய நட்புக்கான கூலி
அல்லாஹுதஆலா கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனக்காக நேசிக்கக் கூடியவர்களுக்கு ஒளியினால் ஆன மின்பர்கள் (மேடைகள்) இருக்கும். அவர்கள் நிலையை நபிமார்களும் ஷுஹதாக்களும் கூட விரும்புவார்கள்.
(அறிவிப்பவர்: முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்கள், நூல்: திர்மிதி 2312)

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Apr 29, 2010 8:33 pm

நல்லோரை நேசிப்போம்!
நமக்கு முன் சென்ற நல்லோர்களையும் நமது சமகால நல்லோர்களையும் நமக்கு பின் தோன்றும் நல்லோர்களையும் நேசிக்குமாறும் அவர்களுக்காக துஆச் செய்யுமாறும் பாவமன்னிப்புத் தேடுமாறும் மார்க்கம் அறிவுறுத்துகிறது. மேலும் இம்முக்காலத்து நல்லோர்களுடன் சொர்க்கத்தில் இணைந்திருக்க வேண்டும் என்ற ஆசையைப்படவும் அதற்காக செயல்படவும் மார்க்கம் வலியுறுத்துகிறது.
ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! இன்னும் (இவ்வுலகிற்கு) வந்தடையாத ஒரு சமுதாயத்தை ஒருவர் அதிகமாக நேசிக்கிறார்! இதுபற்றி கூறுங்களேன்! என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் மனிதன் அவன் யாரை நேசிக்கின்றானோ அவருடன் (மறுமையில்) இருப்பான் என்று பதிலளித்தார்கள்.

(அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள், நூல்: புகாரீ 5703)
அல்லாஹ்வின் தூதரே! நல்லறங்கள் புரியும் ஒருவரை அவரின் நல்லறங்களுக்காக ஒருவர் நேசிக்கிறார், ஆனால் நேசிப்பவரோ அவரைப் போன்று நல்லறங்கள் புரியவில்லை, இவரைப் பற்றிக் கூறுங்களேன்! என்று நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் மனிதன் அவன் யாரை நேசிக்கின்றானோ அவருடன் (மறுமையில்) இருப்பான் என்று கூறினார்கள். இதனைக் கேட்ட நபித்தோழர்கள் இதற்கு முன்னர் வேறு எதற்கும் மகிழ்ச்சியடைந்து நான் கண்டிடாத அளவுக்கு மகிழ்ந்தனர்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Thu Apr 29, 2010 8:37 pm

அருமை! அருமை! நட்பை பற்றி விளக்கிய சபீர் அவர்களுக்கு நன்றி

வின்னைத்தாண்டி வருவாயா?

நட்பும் அதன் ஒழுக்கமும் Lovefd
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Fri Apr 30, 2010 1:44 pm

கலைப்பிரியன் wrote:அருமை! அருமை! நட்பை பற்றி விளக்கிய சபீர் அவர்களுக்கு நன்றி

நன்றி சகோதரே உங்கள் அருமையான பின்னூடத்துக்கு

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 30, 2010 3:20 pm

சபீர் wrote:நட்பின் கடமைகள்
(அ) உதவி செய்தல்
உலக இலாபத்திற்காக நட்புக் கொள்வது முறையல்ல என்றாலும் தேவைகள் நெருக்கடிகள் ஏற்படும் போது ஒருவருக்கொருவர் உதவிகள், ஒத்துழைப்புகள் செய்து கொள்ள வேண்டும்.
ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு சகோதரன் ஆவான். அவனுக்கு அநியாயம் செய்யக் கூடாது. காட்டிக் கொடுக்கக் கூடாது. யார் தன் சகோதரனின் தேவையை நிறைவேற்றுகிறாரோ அவரது தேவையை அல்லாஹ் நிறைவேற்றுகிறான். யார் ஒரு முஸ்லிமின் நெருக்கடியை அகற்றுகிறாரோ கியாமத் நாளின் நெருக்கடிகளில் ஒரு நெருக்கடியை அவரை விட்டும் அல்லாஹ் அகற்றுகிறான். யார் ஒரு முஸ்லிமின் குறையை மறைக்கிறாரோ அவரது குறையை அல்லாஹ் மறைக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) அவர்கள், நூல்: புகாரீ 2262, முஸ்லிம்)
பொதுவாக அனைத்து முஸ்லிம்களிடமும் இவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் எனும் போது நமக்கு நெருக்கமானவர்கள் என்றால் இந்த கடமைகளின் முக்கியத்துவம் மேலும் கூடுகிறது.

அனைத்தும் அருமையான விளக்கங்கள் சபீர் நன்றி சபீர்
நட்பைப்பேணுவோம் அனைவருடணும் நட்புக்கொள்வோம் நன்றி நன்றி.
நன்றி நன்றி நன்றி நன்றி

நட்பும் அதன் ஒழுக்கமும் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu May 13, 2010 10:07 am

அப்புகுட்டி wrote:
சபீர் wrote:நட்பின் கடமைகள்
(அ) உதவி செய்தல்
உலக இலாபத்திற்காக நட்புக் கொள்வது முறையல்ல என்றாலும் தேவைகள் நெருக்கடிகள் ஏற்படும் போது ஒருவருக்கொருவர் உதவிகள், ஒத்துழைப்புகள் செய்து கொள்ள வேண்டும்.
ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு சகோதரன் ஆவான். அவனுக்கு அநியாயம் செய்யக் கூடாது. காட்டிக் கொடுக்கக் கூடாது. யார் தன் சகோதரனின் தேவையை நிறைவேற்றுகிறாரோ அவரது தேவையை அல்லாஹ் நிறைவேற்றுகிறான். யார் ஒரு முஸ்லிமின் நெருக்கடியை அகற்றுகிறாரோ கியாமத் நாளின் நெருக்கடிகளில் ஒரு நெருக்கடியை அவரை விட்டும் அல்லாஹ் அகற்றுகிறான். யார் ஒரு முஸ்லிமின் குறையை மறைக்கிறாரோ அவரது குறையை அல்லாஹ் மறைக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) அவர்கள், நூல்: புகாரீ 2262, முஸ்லிம்)
பொதுவாக அனைத்து முஸ்லிம்களிடமும் இவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் எனும் போது நமக்கு நெருக்கமானவர்கள் என்றால் இந்த கடமைகளின் முக்கியத்துவம் மேலும் கூடுகிறது.

அனைத்தும் அருமையான விளக்கங்கள் சபீர் நன்றி சபீர்
நட்பைப்பேணுவோம் அனைவருடணும் நட்புக்கொள்வோம் நன்றி நன்றி.
நன்றி நன்றி நன்றி நன்றி

நன்றி நன்றி அன்பு மலர் நன்றி ஐ லவ் யூ ஐ லவ் யூ

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக