ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விக்கிபீடியாவும் ஒரு கடத்தல் கதையும்

3 posters

Go down

விக்கிபீடியாவும் ஒரு கடத்தல் கதையும் Empty விக்கிபீடியாவும் ஒரு கடத்தல் கதையும்

Post by செரின் Tue Jul 07, 2009 3:47 pm

விக்கிபீடியாவும் ஒரு கடத்தல் கதையும் 28395109

ஒரு கடத்தல் செய்தியை விக்கிபீடியாவில் இருந்து மறைக்க ஒரு பிரபல செய்தி நிறுவனம் படாதபாடு பட்ட கதை இது.அதை நிறைவேற்ற முடியாமல் செய்வதற்காக பயனாளிகள் மல்லுக்கட்டிய கதையும் கூட.

உலகம் அறியாமல் நடந்த இந்த ரகசிய போராட்டம் விறுவிறுப்பானது பட்டுமல்ல விக்கிபீடியாவின் பலம் மற்று பலவீனம் இரண்டையுமே உணர்த்தக்கூடியது.

அந்த கதையை பார்ப்போம்.

அமெரிக்காவின் புகழ்பெற்ற நாளிதழான நியூயார்க் டைமஸ் இதழை சேர்ந்த ரோடே என்னும் நிருபர் கடந்த நவம்பர் மாதம் கடத்தப்பட்டார்.
ரோடே சாதாரணமான நபர் இல்லை. துணிச்சல் மிக்க நிருபரான அவர் அமெரிக்க இதழாளர்களின் நோபல் பரிசாக கருதப்படும் புலிட்சர் விருதை வென்றுள்ளார். செர்பியா உபட்பட பல பிரச்சனை பூமிகளில் செய்தியாளராக பணியாற்றி உண்மையை வெளிக்கொணர பாடுபட்டுள்ளார். நியூயார்க் டைமஸ் இதழில் பணியாற்றும் முன் புகழ்பெற்ற கிரிஸ்டியன் சயின்ஸ் மானிட்டரில் பணிபுரிந்திருக்கிறார்.

தனது இயல்பான துணிச்சலின் படி ஆப்கானிஸ்தானில்செய்தி சேகரிக்கச்சென்ற அவ‌ர் தாலிபான் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார். அவரது மொழிபெயர்ப்பாளரும் கடத்தப்பட்டார்.

நியூயார்க் டைமஸ் நாளிதழ் அவ்ர் கடத்தப்பட்ட செய்தி வெளியாவதை விரும்பவில்லை. ஒரு நாளிதழே இப்ப‌டி ஒரு செய்தியை மறைக்க விரும்புவது அதன் தொழில் தருமத்திற்கு விரோதமாக தோன்றலாம். ஆனால் நிருபர் கடத்தப்பட்ட செய்தி வெளியாகி பரபர்ப்பு ஏற்பட்டால் அதுவே அவரை மீட்கும் முயற்சிக்கு எமனாக அமைந்துவிடும் என்பதே இதற்கான காரணம். பாகிஸ்தானில் கடத்திக்கொல்லப்பட்ட அமெரிக்க பத்திரிக்கையாளர் டேனியன் பியரலின் சோகமான முடிவை நினைத்துப்பாருங்கள்.

சக நாளிதழ்களில் இந்தசெய்தி வெளிவாரமல் பார்த்துக்கொள்வது ஒரு பிரச்சனையாக‌ இருக்கவில்லை.காரணம் நாளிதழின் மற்ற ஆசிரியர்களிடம் நேரடியாக‌ பேசி வெண்டுகோள் வைத்தால் அவர்கள் நிலைமையை புரிந்துகொண்டு ஒத்துழைப்பு தருவார்கள். அப்படிதான் நடந்தது.
செய்தி வெளியே கசியாத்தால் அவரை மிட்கும் பணியை ரகசியமாக மெற்கொள்ளமுடிந்தது. நாளிதழ்களிலோ பத்திரிக்கைகளிலோ செய்தி வெளியாகமல் செய்தாகிவிட்டது.ஆனால் செய்தி விக்கிபீடியவில் வெளியாகமல் இருக்க வேண்டுமே என்ற கவலை டைமஸ் குழுவை வாட்டியது.
நாளிதழ்கள் போல விக்கிபீடியா ஆசிரியரின் வழிக்காட்டுதலின் பேரில் நடத்தப்படும் தளமல்ல.எவரும் கட்டுரையை சம‌ர்பிக்கலாம்,எவரும் அதை திருத்தலாம் என்னும் சர்வ சுதந்திரமான சித்தாந்தம் கொண்ட விக்கிபீடியாவில் உலகின் எதோ ஒரு மூலையில் உள்ள யார் வேண்டுமானாலும் எந்த தகவலையும் சமர்பிக்கலாம்.அதை யார் வேண்டுமாலும் திருத்தலாம்.
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

விக்கிபீடியாவும் ஒரு கடத்தல் கதையும் Empty Re: விக்கிபீடியாவும் ஒரு கடத்தல் கதையும்

Post by செரின் Tue Jul 07, 2009 3:49 pm

இப்படி யார் யாரோ தகவல்களை சம‌ர்பிப்பதால் விக்கிபீடியாவில் இடம்பெற்றுள்ள தகவல்களின் பரப்பு உண்மையிலேயே வியப்பை அளிக்ககூடியது. எந்த தலைப்பை வேண்டுமாலும் சொல்லுங்கள் விக்கிபீடியாவில் அதற்கான் கட்டுரை சின்னதாக‌வேனும் இருக்கும் . அதே போல விக்கிபீடியாவின் வேகம் அசாத்தியமானது.சம்பவம் நடந்தவுடன் அந்த தகவலை விக்கிபீடியாவில் பார்க்கலாம்.

உதாரண‌த்திற்கு முன்னாள் ஈராக் அதிபர் சதான் உசேன் தூக்கிலடப்பட்ட‌போது அவர் தொடர்பான கட்டுரையில் உடனே அந்த தகவல் இடம்பெறச்செய்யப்பட்டது.கட்டுரையின் முடிவில் சதாம் தூக்கிலடப்படார் என்பது குறிப்பிடப்பட்டிருந்த‌து.

இதே போல ஏ ர் ரஹ்மான் ஆஸ்கர் வென்ற தகவல் அவரது கட்டுரையில் உடனே அரங்கேறிவிட்டது.எல்லாம் விக்கிபீடியா படையின் மகிமை.
கட்டுரைகளில் புதிய தகவல்களை சேர்க்கவும், அவை தவறாயின் திருத்தம் செய்யவும் எப்போதும் யாரவது விக்கி பயனாளி காத்திருக்கின்றனர்.விக்கிபீடியாவின் பலம் இது தான்.

தகவல்கள் சரி பார்க்கப்படாமல் போவதும், பொய்த்தகவலை இடம்பெறச்செய்ய வாய்ப்பு இருப்பதும் விக்கிபீடியாவின் இன்னொரு பக்கம்.
இனி டைம்ஸ் நிருபரின் கடத்தலுக்கு வருவோம்.விக்கிபீடியாவின் இயல்பு படி டைமஸ் நிருபர் கடத்தப்பட்ட செய்தியும் யாராலேயோ சமர்பிக்கப்படும் என்பதே உண்மை.ஏற்கனவே அவர் தொடர்பான சிறிய கட்டுரை விக்கிபீடியாவில் இருந்த‌து.

ரோடே தலிபான் திவிரவாதிகளால் கடத்தப்பட்டார் என்னும் வாசகத்தை அதில் யாரோ ஒருவர் சேர்க்கப்போகிறார் என்பதும் எதிர்பார்க்கக்கூடியது தான்.ஆனால் இதைவிட வேறு வினையே வேண்டாம். உலகம் கவனிக்கிறது என்னும் உணர்வு தாலிபான் தீவிரவாதிகளின் பேரம் பேசும் தொனியையே மாற்றிவிடும்.பிடிவாத்தையும் அதிகரிக்கச்செய்யும். பினைக்கைதியின் பதிப்பு அதிகம் என்று தெரிந்தால் கொல்வோம் என்னும் மிரட்டலையும் தைரியமாக‌வே விடுப்பார்கள்.

இது நிகழக்கூடாது என நினைத்தது டைமஸ் நிர்வாகம்.ஆனால் வேண்டுகோள் விடுத்தெல்லாம் இதனை சாதிக்க முடியாது என தெரிந்திருந்த‌து.விக்கி வழியில் சென்று தான் இதனை சாமாளிக்க முடியும் என முடிவானது.

அந்த பொறுப்பை டைமஸ் நிருபர்களில் ஒருவரான மைக்கேல் மோஸ் ஏற்றுக்கொண்டார். முதல் காரியமாக ரோடே தொடர்பான‌ கட்டுரையில் அவர் முக்கிய மாற்றங்களை செய்தார். ரோடே கிறிஸ்டிய‌ன் ச‌யின‌ஸ் மானிட்ட‌ர் இத‌ழில் ப‌ணியாற்றிய‌ குறிப்பை நீக்க‌னார்.கார‌ண‌ம் கிரிஸ்டிய‌ன் என்னும் வார்த்தையே முஸ்லீம் திவிர‌வாதிக‌ளை கோப‌ம் கொள்ள‌ வைக்கப்போதுமான‌து.

தீவிரவாதிகள் தாங்களிடம் சிக்கியவர்கள் பற்றிய விவரங்களை இண்டெர்நெட்டில் தேடிப்பார்ப்பார்கள் என்பதை மோஸ் நன்கறிந்திருந்த்தால் இவ்வாறு செய்தார்.மேலும் ரோடே கட்டுரையில் அவ‌ர் முஸ்லீம்களுக்கு ஆதரவாக செர்பியா போன்ற பகுதிகளில் செயல்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டியிருந்தார்.

மறுநாள் பார்த்தால் வேறு யாரோ ரோடே கடத்தப்பட்ட செய்தியை சேர்த்திருந்தனர் .மோஸ் உடனே அத்னை கவனித்து நீக்கினார்.ஆனால் மீண்டும் அந்த‌ த‌க‌வ‌ல் இட‌ம்பெற‌ச்செய்ய‌ வைக்க‌ப்ப‌ட்ட‌து.மீண்டும் அந்த‌ த‌க‌வ‌லை நீக்கினார். இந்த‌ முறையும் த‌க‌வ‌ல் மீண்டும் சேர்க்க‌ப்ப‌ட்ட‌தோடு நீக்க‌ப்ப‌ட்ட‌த‌ற்கு க‌ண்ட‌ன‌மும் தெரிவிக்க‌ப்பட்டிருந்த‌து.
.
நிலைமை கைமீறிப்போவ‌தை உண‌ர்ந்த‌ டைம‌ஸ் விக்கிபீடியாவின் தலைவ‌ர் ஜிம்மி வேல்ஸ் உத‌வியை நாடிய‌து.ஒரு உயிர் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ விஷ‌ய‌ம் என்ப‌தால் வேல்சும் உத‌வ‌ ஒப்புக்கொண்டார்.ஆனால் தான் த‌லையிடுவ‌து தெரிந்தால் விக்கிபீடியா ச‌மூக‌த்தின‌ர் ம‌த்தியில் அதுவே க‌வ‌ன‌த்தை உண்ட‌க்கிவிடும் என‌ கூறிய‌ அவ‌ர் த‌ன்னுடைய நிர்வாகி ஒருவ‌ரிட‌ம் இந்த‌ப்ப‌ணியை ஒப்ப‌டைத்தார்.

இதனையடுத்து அந்த பக்கத்தை கண்காணித்தபடி இருந்து நிருபர் ரோடே கடத்தப்பட்ட செய்தி இட‌ம்பெறாம‌ல் பார்த்துக்கொள்ளும் ப‌ணியை மேற்கொள்ள‌த்துவ‌ங்கினார்.நான்கு முறை அந்த‌ த‌க‌வ‌லை நீக்கினார்.நான்கு முறையும் த‌க‌வ‌ல் மீண்டும் ப‌திவேற்ற‌ப்ப‌ட்ட‌ன‌. க‌டைசியில் வேறு வ‌ழியில்லாம‌ல் அந்த‌ ப‌க்க‌த்தையே த‌ற்காலிக‌மாக‌ முட‌க்கி வைத்தார்.முத‌லில் 3 நாட்க‌ளும் பின்ன‌ர் 2 வார‌ங்க‌ளுக்கும் முட‌க்க‌ப்ப‌ட்ட‌ன.
நடுவில் பிரச்சனை ஏதும் இருக்கவில்லை.பிப்ரவரி மாதம் யாரோ 2 பயனாளிகல் க‌ட‌த்த‌ல் செய்தியை சேர்த்துவிட்ட‌ன‌ர்.அவை நீக்க‌ப்ப‌ட்ட‌ போது ப‌ய‌னாளிக‌ள் ஆவேச‌மாக‌ எதிர்ப்பு தெரிவித்து குறிப்புக‌ளை எழுதி வைத்த‌ன‌ர். நீக்க‌ நீக்க‌ மீண்டும் சேர்ப்போம் என‌ தெரிவித்த‌ன‌ர்.

அவ்ர்க‌ளை பொருத்த‌வ‌ரை திருத்த‌ங்க‌ளுக்கு க‌ட்டுப்பாடு விதிப்ப‌து விக்கி கொள்கைக்கு எதிரான‌து.என‌வே காரண‌மில்லா நீக்க‌த்தை எதிர்த்து போராட‌ த‌யாராக‌ இருந்த‌ன‌ர். இந்த விகார‌த்தின் பின்னே ஒருவ‌ரின் உயிர் உசாலாடிக்கொண்டிருப்ப‌தை அவ‌ர்க‌ள் அறிந்திருக்க‌வில்லை.
இந்த‌ நிலையில் ரோடேவின் விக்கிபீடியாவின் க‌ட்டுரை ப‌க்க‌ம் நிர‌ந்த‌ர‌மாக‌ முட‌க்கிவைக்க‌ப்ப‌ட்ட‌து. இது மிக‌வும் அரிதான‌து. ந‌ல்ல‌ வேலையாக‌ க‌ட‌ந்த‌ வார‌ம் ரோடேவும் மொழிபெய‌ர்ப்பாள‌ரும் த‌ப்பி வ‌ந்து விட்ட‌ன‌ர்.டைம‌ஸ் அப்போது அவ‌ர் க‌ட‌த்த‌ப்ப‌ட்டு தப்பி வ‌ந்த‌ செய்தியை அதிகார‌ப்பூர‌வ‌மாக அறிவித்த‌து.

உட‌னே ஒரு ப‌ய‌னாளி , பார்த்தீர்க‌ளா நாங்க‌ள் இட‌ம்பெற‌ வைத்த‌ த‌க‌வ‌ல் ச‌ரியான‌து நீங்க‌ள் செய்த‌து தவ‌று என குறிப்பிட்டிருந்தார்.
விக்கிபீடியாவில் இடம்பெறும் தகவல்களை கட்டுப்படுத்துவது எத்தனை கடினம் என்பதையும் இதனால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளையும் இந்த சம்பவம் உணர்த்துகிறது.

இண்டெர்நெட் யுகத்தின் பிரச்ச்னை இது.
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

விக்கிபீடியாவும் ஒரு கடத்தல் கதையும் Empty Re: விக்கிபீடியாவும் ஒரு கடத்தல் கதையும்

Post by நிலாசகி Tue Jul 07, 2009 6:36 pm

விக்கிபீடியாவும் ஒரு கடத்தல் கதையும் 000201C5






நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

விக்கிபீடியாவும் ஒரு கடத்தல் கதையும் Empty Re: விக்கிபீடியாவும் ஒரு கடத்தல் கதையும்

Post by செரின் Tue Jul 07, 2009 6:37 pm

Mangai wrote:விக்கிபீடியாவும் ஒரு கடத்தல் கதையும் 000201C5







என்ன மங்கை ஆரம்பமே சரி இல்லயா???
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

விக்கிபீடியாவும் ஒரு கடத்தல் கதையும் Empty Re: விக்கிபீடியாவும் ஒரு கடத்தல் கதையும்

Post by ramesh.vait Thu Jul 09, 2009 5:19 pm

Good
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

விக்கிபீடியாவும் ஒரு கடத்தல் கதையும் Empty Re: விக்கிபீடியாவும் ஒரு கடத்தல் கதையும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum