ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தையின் தாய்

Go down

குழந்தையின் தாய் Empty குழந்தையின் தாய்

Post by குடந்தை மணி Fri Jun 11, 2010 8:38 pm

குழந்தையின் தாய் Story1
கையில இருக்கிற கல்யாண அழைப்பிதழ பாக்கறச்ச, கண்ல ஜலம் முட்டிண்டு வர்றது.இப்பதான் ஜானு மாமி, தன் பொண்ணுக்கு கல்யாணம் கட்டாயம் வந்துடுன்னு சொல்லிக் குடுத்துட்டுப் போறா. அதைப் பார்த்ததும் ஏனோ எனக்கு அழுகை வந்துடுத்து. பசங்கல்லாம் ஒரு மாதிரிப் பார்க்கறதப் பார்த்துட்டு,கண்ணைத் தொடைச்சுட்டு பாடத்தை ஆரம்பிக்கிறேன்.

இந்த டீச்சர் உத்தியோகத்தை ஏத்துண்டு, இன்னியோட பதினஞ்சு வருசமாறது. அதே பாடத்தைத் திருப்பி திருப்பி சொல்லித் தரதுல ஆரம்பத்துல கொஞ்சம் வெறுப்பா கூடத் தோணித்து. பின் நானே ஒரு மாதிரி சமாளிச்சுண்டேன். சுறுசுறுப்பான பசங்களுக்குப் பாடம் சொல்லிக் குடுக்கறச்ச சந்தோசமா இருக்கும். ஏழாம்
வகுப்புதான். இருந்தாலும் இந்த பசங்களுக்கு இண்டரஸ்ட் ஜாஸ்தி போலருக்கு.ஏதாவது சந்தேகம் கேட்டுண்டே இருப்பா. நானும் என்னால முடிஞ்ச வரைக்கும் சமாளிச்சுண்டு வர்றேன்.

ஸ்கூல் பெல் அடிக்கறது. நான் என் தோல் பைய எடுத்துண்டு கிளம்பறேன். ஒரு கிலோமீட்டர் நடந்தாதான் வீடு போய்ச் சேர முடியும். வேலைல சேர்ந்த புதுசில

நடக்கறது கஷ்டமா தோணித்து. போகப்போக பழகிடுத்து. எதிரே ஒரு ஜோடி உரசிண்டே, சந்தோசமா பேசி சிரிச்சிண்டே போறா. எதிரே இருக்கிறவாள்ளாம் என்ன நினைப்பான்னு ஒரு நினைப்பே இல்லாம, எப்படித்தான் இவாளால இப்படி இருக்க முடியுதோ? ஒருவேளை கல்யாணம் ஆயிருந்தா நானும் இப்படித்தான் நடந்துண்டு
இருப்போனோ? அதெல்லாம் இனிமே எங்கே நடக்கப் போறது? பின்னே இந்த முப்பத்தெட்டு வயசுலே யாராவது கட்டிக்குவாளா என்ன? முப்பத்தெட்டு எல்லாம்

ஒரு வயசே இல்லேங்கறேளா? அப்படீனா ஏன் வரவாள்ளாம் ஏதாவது சொல்லி நிராகரிச்சுண்டு இருக்கா?. ஒருவேளை நான் அழகாப் படலையோ அவாளுக்கு? நான் அழகா இல்லைனா, ஏன் அந்த டீக்கடைக்காரர் அப்படி முறைச்சுப் பாக்கறார்? ஒருவேளை அவருக்கு மாத்திரம் நான் அழகாப் படற னோ என்னெவோ? வரவர இந்த பெண் பார்க்க வரவாள்ளாம் வேற வேலையே இல்லாம, இதே ஒரு வேலையா வச்சுண்டு இருப்பளோன்னு தோணுது. சந்தைல மாட்டைப் பாக்கறா மாதிரி பாத்துண்டு, சொஜ்ஜி

பஜ்ஜில்லாம் திண்ணுண்டு, என்ன ஜென்மம் இவாள்ளாம்? இன்னக்கி கூட அக்கா யாரோ பெண் பார்க்க வர்றதா சொல்லி சீக்கிரம் வரச் சொல்லி இருக்கா. அஞ்சு மணிக்கு வர்றாளாம். வாட்ச்சை பார்க்கிறேன். மணி நாலரை. போய்ச் சேர்ந்திடலாம்.இனிமே கல்யாணம்லாம் நடக்குமான்னு எனக்குள்ளே கேட்டுண்டாலும் மனசுல ஒரு மூலைல சின்னதா ஒரு நம்பிக்கை எட்டிப் பார்க்கத்தான் செய்யுது. இந்த வரனாச்சும் கனிஞ்சுதுன்னா அப்புறம் நானும் எல்லார் மாதிரி "அவரோட" இடிச்சுண்டே சினிமா போலாம். "அவர்" ஆபீஸ் போறச்சே, வாசல்ல நின்னு டாட்டா காட்டலாம். அவர் ஆபீஸ் விட்டு வரச்சே, சிரிச்ச முகத்தோட வரவேற்கலாம். ஹும்... நடக்குமா
இதெல்லாம்? பார்க்கலாம்.

யோசிச்சிண்டே வந்ததுல வீடு வந்துடுத்து. வாசல்ல அக்கா பொண்ணு உஷா என்னைப்

பார்த்து சிரிக்கிறா. ஆச்சு. இவளுக்கும் வயசு பதினெட்டு நடந்திண்டிருக்கு.இன்னும் மூணு நாலு வருசத்துல இவளும் என்னை மாதிரியே சிங்காரிச்சுண்டு,வர்றவா எதிர்ல நிக்கணும். ஆனா கடவுளே, இவளுக்கு என்னை மாதிரி நடக்கக்கூடாது. வயசுப் பொண்ணு வீட்ல இருக்கறப்போ, நான் இந்த மாதிரி பெண் பார்க்கற படலத்துல இருக்கறது, எனக்கே கஷ்டமாத்தான் தோன்றது. சில சமயம் விஷத்தைக் குடிச்சுட்டு செத்துரலாம்னு கூடத் தோணும். சே. அப்படி என்ன கோழைத்தனம்னு என்னை நானே சமாதானம் பண்ணிப்பேன். வாழ்க்கைனா கல்யாணம் ஒண்ணுதானா? வேற எதுவுமே இல்லையா? சின்ன குழந்தையோட சிரிப்பில்லையா?
இயற்கைல இருக்கற அழகெல்லாம் ரசிக்கிறதுலேயே நம்ம வாழ்க்கைய கழிக்க முடியாதா?
அப்படின்னு தோணும். ஆனா, அக்கம்பக்கத்தில இருக்கிறவா எல்லாம் நான் தெருவில நடந்து போறச்ச, ஒரு மாதிரியா பாக்கறச்ச, ஏன் என் காதுபடவே 'இவ பாவம்னு' பேசறச்ச மனசு உடைஞ்சிதான் போறது. இன்னக்கி வர்றவாளோட முடிவு சாதகமா இல்லன்னா இனிமே இந்தமாதிரி எதுவும் வேண்டாம்னு அக்காக்கிட்ட சொல்லிடணும்.

யோசிச்சுண்டே இருந்ததுலே நேரம் போனதே தெரியல. அவசர அவசரமா சிங்காரிச்சிக்கிறேன்.ஆறு மணி போல அவாள்ளாம் வந்தா. நான் காபி எடுத்துண்டு போனேன். எல்லாம் முடிஞ்சு வழக்கம் போல 'போய் லெட்டர் போடறோம்னு' சொல்லிட்டு போனா. எனக்கு இதுவும் பழைய லிஸ்டுல சேர்ந்துடுமோனு ஏனோ தோணித்து. அப்படி எல்லாம் ஆகக்கூடாதுன்னு ஆண்டவனை வேண்டிண்டேன்.

இப்பெல்லாம் நான் ஸ்கூலுக்கு நடந்து போறச்ச, அக்கம் பக்கம் இருக்கறவா ஒரு மாதிரி பேசறது புரியறது. நான் யார் கூடவோ தொடர்பு வச்சுண்டிருக்கேனாம்.அதான் எல்லா வரணும் தட்டிண்டே போறதாம். ஏன்தான் இவாள்ளாம் இப்படிப் பேசறாளோ, இந்த சமூகத்தில கல்யாணம் ஆகாதவா எல்லாரும் இப்படிப்பட்ட
பேச்சுகளை எதிர்கொண்டுதான் ஆகணுமோ?

நான் இந்த புது ஆத்துக்கு குடி வந்து ரெண்டு மாசமாறது. அக்காகிட்ட கோவிச்சுண்டு எல்லாம் நான் தனியா வந்துடல. கல்யாண வயசுல ஒரு பொண்ணு இருக்கிற வீட்ல கல்யாணமாகாத முதிர்கன்னியா நானுமிருந்தா என்னாகும்னு நினைச்சுப் பார்த்தேன். அப்புறம் என்னால உஷாவோட கல்யாணம் தள்ளிப்போச்சுன்னா, கடவுளே, வேண்டாமே. ஊராரெல்லாம் இப்படிப் பேச ஆரம்பிச்சது தெரிஞ்சதும்தான் நான் இப்படி முடிவு பண்ணினேன். ஆரம்பத்துல அக்கா அதிகமா கோவிச்சிண்டா. அப்புறம் எல்லாம் சரியாயிடுத்து. நான் சரியாக்கிட்டேன். நம்மால மத்தவாளுக்கு கெடுதி வரதுன்னா, அவாகிட்ட இருந்து

தூர விலகி போறதுதானே நியாயம்…?

இப்பல்லாம் ஸ்கூல் முடிஞ்சதும், சாயந்திர நேரத்துல வயசான படிக்காதவாளுக்கு எல்லாம், நான் எழுதப் படிக்கச் சொல்லித் தரேன். நடுநடுவே, இந்த சுந்தர் பையன் வந்து குறுக்கிடுவான். ஆனா அதுவும் சந்தோசமாத்தான் இருக்கும். அட, சுந்தர் யாருன்னு சொல்லலியோ? சுந்தருக்கு ஒண்ணரை வயசாறது. குழந்தைகள்
ஆசிரம் ஒண்ணுலேந்து தத்து எடுத்துண்டேன். சுந்தர் படு சுட்டி தெரியுமோ? சிரிக்கறச்ச கன்னத்துல விழற குழிய பார்த்துண்டே இருக்கலாம். இப்பல்லாம் ஸ்கூல் விட்டு நடந்து வர்றச்ச, எதிரே எந்த கல்யாண ஜோடி வந்தாலும் மனசு சஞ்சலப்படறதே இல்ல. ஏன்னா, இப்ப நான் ஒரு குழந்தையோட தாய் இல்லையா?


நன்றி:

குழந்தையின் தாய்

செல்வராஜ் ஜெகதீசன்

http://www.vallinam.com.my/issue18/story1.html


- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010

http://manikandanvisvanathan.wordpress.com

Back to top Go down

Back to top

- Similar topics
» அழுகையை நிறுத்துவதற்காக குழந்தையின் வாயில் சிகரட்டை வைத்த தாய்
» தாய் வயிற்றில் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும் மீன் உணவு!
» தாய் வயிற்றில் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும் மீன் உணவு!
» தாய் வயிற்றில் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும் மீன் உணவு!
» ஐஸ்வர்யா ராயின் குழந்தையின் புகைப்படம் அவர்களது குடும்பத்தால் வெளியிடப்பட்டது (குழந்தையின் படம் இணைப்பு)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum