ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 23:58

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 0:50

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 5 Jul 2024 - 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 5 Jul 2024 - 14:00

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri 5 Jul 2024 - 13:53

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 0:19

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரத நாட்டியம்

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

பரத நாட்டியம் - Page 5 Empty பரத நாட்டியம்

Post by சிவா Tue 7 Oct 2008 - 12:08

First topic message reminder :

பரத(நாட்டியம்) நிருத்தியம்

தற்காலத்தில் காணப்படும் சாஸ்திரீய நடனம், தமிழ் நாட்டில் பரத நாட்டியம் என்னும் பெயருடன் விளங்குகிறது. முற்காலத்தில் தமிழகத்தில் இக்கலையைக் கூத்து என்று அழைத்து வந்தனர். ஏறத்தாழ கடந்த மூன்று நூற்றாண்டு காலமாக இதற்கு சதிர் என்று பெயர் வழங்கலாயிற்று. பரத நாட்டியம் என்ற பெயர் சுமார் அறுபது ஆண்டுகளாகத் தான் பிரசித்தம் அடைந்துள்ளது.

இந்த பரத நிருத்யத்தின் முக்கியமான அம்சம் அரைமண்டி என்று கொச்சைத் தமிழில் வழங்கி வரும் பதமாகும். அந்த நிலையே இக்கலைக்கு மூலாதார வடிவமாக இருக்கிறது. பாதங்களை பக்கவாட்டில் திருப்பி முழங்கால்களை வளைத்து சீராக நிற்கும்நிலை ஆகும். பாதங்களுக்கு இடையே நான்கு விரல் அளவுக்கு மேல் இடைவெளி இருக்கக்கூடாது. முழங்கால்களும், பக்கவாட்டில் பரப்பப்பட வேண்டும். துடைகள் பூமியிலிருந்து அவரவர் கையினால் மூன்று அல்லது நான்கு சாண் தூரத்தில் இருக்க வேண்டும். அடவுகள் என்று கூறப்படும் பல அசைவுகள், இந்த மண்டல ஸ்தானத்தையே அடிப்படையாகக் கொண்டது. அடவுகளுக்கு பாதத்தைதான் அதிகமாக உபயோகிக்­கிறோம். இவை தட்டடவு, நாட்டடவு, குத்தடவு, மெட்டடவு தவிர அதன் சேர்க்கைகளே ஆகும். இந்த அடவுகள் தெளிவாகவும், சுத்தமாகவும் இருக்க வேண்டும். லௌஷ்டம் என்று சொல்லப்படும் நிமிர்ந்த நிலை மார்பிற்கும், முதுகிற்கும் மிகவும் இன்றியமையாததாகும். மார்பினை நிமிர்த்தி வயிற்றினை உள்ளே தள்ளி நிற்கவேண்டும். முதுகானது பார்ப்பதற்கு ஒரு வில்போல இருக்க வேண்டும். தோள்களை ஏற்றவோ, இறக்கவோ, கூன்போடவோ கூடாது. தோள்களின் சீரான நிலையிலேயே முழங்கையை வைக்கவேண்டும். கைகளை மார்பின் முன் வைக்கும்போது ஒரு சாண் இடைவெளி விட்டுத்தான் வைக்க வேண்டும். இவைகளே அங்க சுத்தத்திற்கு தேவையான அடிப்படைகள்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


பரத நாட்டியம் - Page 5 Empty Re: பரத நாட்டியம்

Post by சிவா Tue 7 Oct 2008 - 12:52

செறிவுபடுத்தல், நிலைமாற்றப்படுத்தல் (Trans Formation) ஆகியவை. நடனங்கள் வழியாக மேற்கொள்ளப்படுகின்றன. மனவெழுச்சிகள் நடன உபாயங்களால் மீள வலியுறுத்தப்பட்டுக் கூடிய செறிவுக்கு உள்ளாக்கப்படுகின்றன. மனவெழுச்சிகளை நிலைமாற்றம் செய்தல், ஆளுமை வளர்ச்சியின் பிரதான பண்புக்கூறாகக் கருதப்படுகின்றது. நடன இடைவினைகள் வழியாக தனிமனித உணர்வுகள் கூட்டுணர்வுகளாக நிலைமாற்றப் படுகின்றன.

நடனங்கள் அனைத்தும் ஏதோ ஒருவகையில் சமயவாழ்வுடன் பின்னிப்பிணைந்து வளர்ந்து வந்த வரலாற்றுத் தொடர்ச்சியைக் கொண்டுள்ளமை கல்விச் செயற்பாடுகளில் மேலும் ஆழ்ந்து நோக்கப்படுகின்றன. கலைமரபுகளைப் பேணுவதிலும், பாதுகாத்தலிலும், வளர்ப்பதிலும், சமயச் செயல் முறைக்குப் பிரதான பங்கு உண்டு. இவற்றின் பின்புலத்தில் நடனத்திலே மூன்று பெரும் பண்புகளைச் சுட்டிக்காட்ட முடியும். அவையாவன :

அ) விக்கிரகப் பண்பு (Icons)

ஆ) சுட்டற் பண்பு (Indices)

இ) குறியீட்டுப்பண்பு (Symbol)

அனைத்து உடற்கோலமும் முழுமையான ஆடற்பாங்கினை வெளிப்படுத்தலை விக்கிரகப் பண்பு குறிப்பிடும், ஒரு சிறிய பகுதியின் வாயிலாக முழுப்பொருளையும் குறிப்பிட்டுக் காட்டுவது சுட்டற்பண்பு என்று கருதப்படும். ஒரு பொருளை இன்னொரு பொருளாற் தொடர்பு படுத்துதல் குறியீடாக அமையும். இவற்றைத் தொடர்புபடுத்தி ஆடும் பொழுது "சுய இயல்பு வெளிப்பாடு", "பிறிதொரு பாத்திரத்தை ஏற்கும் வெளிப்பாடு", "தனது சுயத்தைப் பிறரது சுயவியல்புகளோடு இடைவினை கொள்ளவைக்கும் செயற்பாடு", ஆகியவை இடம்பெறும். "உடலின் மொழி" என்றம் இவற்றைத் தொகுத்துக் கூறலாம்.

எத்தகைய ஒருகற்றற் செயற்பாட்டிலும் "சிக்கனப்படுத்தல்" என்ற ஒரு பண்பு சிறப்பாக இடம்பெறும். கற்றல் ஒரு குறிப்பிட்ட வேகத்திலே தான் நிகழ்ந்த வண்ணமிருக்கும். அனுபவத்திரளமைப்பைத் திரட்டுதல், கற்றலின் அடிப்படைச் செயற்பாடாக அமையும். ஒழுங்கமைத்தல், தன்மயமாக்கல், தன்னமைவாக்கல், முதலிய செயற்பாடுகளால் "அறிக்கை" முன்னெடுக்கப்படும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பரத நாட்டியம் - Page 5 Empty Re: பரத நாட்டியம்

Post by சிவா Tue 7 Oct 2008 - 12:53

பாவனை செய்வதும், அதன் வழியாக உருவாக்கப்படும் மகிழ்ச்சியும், கற்றலுக்கான தூண்டிகளை வழங்குகின்றன. நடன அசைவுகளில் பல வகையான உடலியக்க விருத்திகள் முன்னெடுக்கப் படுவதாக உளவியலார் சுட்டிக்காட்டுகின்றனர். அவை :

அ) உடல் சார் உணர்வு

ஆ) பாரமும் நேரமும் பற்றிய உணர்வு

இ) வெளிபற்றிய உணர்வு

ஈ) சக ஆடுவோருடன் கொள்ளும் இயக்க இசைவு

உ) அசைவுகளின் காட்சி பற்றிய உணர்வு

ஊ) தரை உயரம் பற்றிய உணர்வு

எ) வெளிப்பாட்டு;ப் பண்புகளுடன் இணைந்த உணர்வு

ஏ) இசையும் அசைவும் அரங்கும் பற்றிய உணர்வு

ஐ) பாத்திரம் ஏற்றல் தொடர்பான உணர்வு

ஒ) நடனத்தின் கூட்டுமொத்தமான விளைவுகள் பற்றிய உணர்வு
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பரத நாட்டியம் - Page 5 Empty Re: பரத நாட்டியம்

Post by சிவா Tue 7 Oct 2008 - 12:53

நடனக் கல்வியின் முழுமையான நோக்கம் அந்நிய மாதலை ஒழித்தலாகும். அதன் முதலாவது பரிமாணம் ஒருவர் தமத உணர்வுகளில் இருந்து தாமே பிரிந்து நிற்றல் ஒழிக்கப்படல் வேண்டும். அதன் இரண்டாவது பரிமாணம் பிறரது உணர்வுகளில் இருந்து ஒருவர் பிரிந்து நிற்றல் ஒழிக்கப்படல் வேண்டும். பங்குபெற்றல் மனவெழுச்சிக் கோலங்கள் குழு உள்ளுணர்வு, குழப்புலன் உணர்வு வெளிப்படுத்தல், நேர்மை, என்பவற்றால் அந்நியமயப்பாடு ஒழிக்கப்படும் நிலையில் மனித உணர்வுகள் மேலோங்கும்.

பாடசாலைகளிலே சிறுவர்க்குரிய தசைநார்ப் பயிற்சிகள் மேற்கு நாடுகளிலே வற்புறுத்தப்பட்டு வரும் வேளையில் நடனக் கல்வியின் முக்கியத்துவமும் கலைத்திட்ட வடிவமைப்பும், மேலும் விரிவடையத் தொடங்கியுள்ளமையைக் காணலாம். நடனக்கல்வி உடலியலையும் அழிகியலையும் சங்கமிக்கச் செய்கின்றது. அவற்றினூடாக சமநிலை பொருந்திய ஆளுமை வளர்ச்சி என்ற எண்ணக்கரு அணுகப்படுகின்றது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பரத நாட்டியம் - Page 5 Empty Re: பரத நாட்டியம்

Post by சிவா Tue 7 Oct 2008 - 12:54

நடனமும் உளவியலும்

உள இசைவு, மனவெழுச்சி இசைவு, சமூக இசைவு ஆகியவை உடல் இசைவுடன் இணைந்தவை. உடலிய்க்க இசைவு கல்வியியலிலே விரிவாக்க விளக்கப்படுகின்றது. புலன் உறுப்புக்களின் ஆற்றல், உள்ளார்ந்த சுரப்பிகளின் தொழிற்பாடு, நரம்புத் தொகுதியின் தொழிற்பாடு, குருதிச் சுற்றோட்டத்தின் திறன், எலும்பு, தசைநார்கள் என்பவற்றின் இயல்களுடன் உடலிசைவு தொடர்புடையதாகும். நடனக் கல்வி மேற்கூறிய உடலியக்க இசைவுகளை வளப்படுத்தும் வகையிலே வடிவமைக்கப்படுகின்றது.

நடனக்கல்வியிலே கலைப் பண்புகளும் உடலியக்கப் பண்புகளும் ஒன்றிணைக்கப் படுகின்றன. உடற்கட்டமைப்பு வழியான உரையாடலை நடனம் ஏற்படுத்துகின்றது. இந்த உரையாடலிலே தசைநார்களின் பலம்பங்கேற்கின்றது. உடல்வலுவின் பிரயோகம் சம்பந்தப்படுகின்றது. விரைந்த அசைவுகளும், தழுவும் அசைவுகளும் சம்பந்தப்படுகின்றன.

இவற்றின் வழியாக நடனம் இரண்டு "சமநிலைகளை" உருவாக்குகின்றது. ஆடும்பொழுதும், அசையும்பொழுதும் ஏற்படுத்தப்படுவது "இயக்கச் சமநிலை" ஆகும். நடராஜத் தாண்டவத்தின் பொழுது ஒற்றைக்காலில் நிற்கும் சம நிலையை "நிலையிற் சமநிலை" க்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பரத நாட்டியம் - Page 5 Empty Re: பரத நாட்டியம்

Post by சிவா Tue 7 Oct 2008 - 12:54

மருத்துவக் கல்விக் கண்ணோட்டத்தில் நடனக் கல்வியை ஆராய்ந்தவர்கள், நடனத்தின் வாயிலாக உடலுக்குரிய ஒட்சிசன் வழங்கல். அழகியல் உணர்வு நிகழும் சமகாலத்தில் அதிகரிக்கின்றதென்றும், இருதயத்தின் வினைத்திறன் மேம்படுகின்றதென்றும் இவற்றின் வழியாக மூளையின் கற்கும் திறன், ஞாபகத்திறன், முதலியவை விருத்தியடைகின்றதென்றும் குறிப்பிடுகின்றனர். மனநலமுடையோர் தமக்கும் பிறருக்கும் பயனுடையோராகின்றனர். வாழ்க்கைப் பிரச்சினைகளை வினையாற்றலுடனும், ஆக்கப்பூர்வமாகவும் அணுகுவதற்கு மனநலம் துணை செய்கின்றது. உடலியல் வரையறைகளை மீறிக் கற்றல் நடைபெற முடியாதென்பது கல்வியியலிலே வற்புறுத்தப்படுகின்றது.

உடல் சார்ந்த நெருக்குவாரங்களைச் சமூகம் அங்கீகரிக்கத்தக்க வகையிலே வெளிப்படுத்த முடியாதவிடத்து உளவியல் பிறழ்வுகள் ஏற்படுகின்றன. மனவெழுச்சிகளை உடலியக்கங்களுடன் இணைத்து வெளியிடம் சமூக அங்கீகாரத்தின் வழியாக நடனம் கவின் கலையாக உளவியல் நோக்கிலே வளர்ச்சியடைகின்றது.

சிக்கலான ஓர் உடலியக்கத் திறனை சிறுசிறு அலகுகளாக்கித் தொடுக்கும் நடனத்தைப் பண்புகள் நடனக் கல்வியிலே முன்னெடுக்கப் படுகின்றன. பல்வேறு ஆற்றல்களைக் கற்பதற்குரிய பயிற்சி இத்தகைய ஏற்பாட்டினால் பலப்படுத்தப் படுகின்றது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பரத நாட்டியம் - Page 5 Empty Re: பரத நாட்டியம்

Post by சிவா Tue 7 Oct 2008 - 12:54

நடனத்தில் யதார்த்தங்கள் படிமங்களாக மாற்றப்படுகின்றன. மனிதரது தொழிற்பாடுகளிலே ஒழுங்கும் அழகும் ஏற்படுத்தப் படுகின்றது. பொருள் உற்பத்தி முறையை மாற்றமடைய, அதற்கியைந்தவாறு சமூக வாழ்க்கை ஒழுங்கமைக்கப்படும் பொழுது முன்னைய பொருள் உற்பத்தி முறைமையோடும் சமூக வாழ்க்கையோடும் இணைந்த நடனம் அழிந்துவிடாமல் நிலைபேறு கொள்வதற்குரிய காரணியாக அமைவது யதார்த்தங்கள் படிமங்களாக மாற்றப்பட்ட அழகியற் செயற்பாடாகும்.

இதன் பின்புலத்திலேதான் "நடனத்தின் நித்தியம்" என்ற தொடர்விளக்கப்படுகின்றது. இந்தத் தொடர்பில் இந்திய மரபில் நடனம் தெய்வீகப் பண்புடையதாக மாற்றப்பட்டுள்ளமையை இணைத்து நோக்கப்பட முடியும்.

நடனத்தின் அறிக்கை சார்ந்த அணுகுமுறைகள் பின்வருமாறு காணப்படும்.

அ) பிரபஞ்சத்தில் இயல்பை விளக்கிக் கொள்ளல்

ஆ) பிரபஞ்சத்தில் மனிதனின் நிலையை நுணுகி நோக்குதல்.

இ) மனிதரை மீறிய "மேலாம் வலுவை" அறிதல்.

ஈ) நல்லதும் தீயதும் தீர்மானிக்கப்படுமாற்றை உய்த்தறிதல்.

உ) உடல் உள்ளம் என்பவற்றிலும் மேம்பட்ட "ஆன்மா" பற்றிய கருத்தை முன்மொழிதல்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பரத நாட்டியம் - Page 5 Empty Re: பரத நாட்டியம்

Post by சிவா Tue 7 Oct 2008 - 12:55

உடலும் மனமும் ஒருமைப்படும் பொழுது அதற்கு அடுத்த கட்டம், யாது என்ற சிந்தனை நடனத்தின் வாயிலாகத் தூண்டப்படும் பொழுது, மேற்கூறிய அறிகை சார்ந்த எண்ணங்கள் மேலோங்குதலைத் தடுக்க முடியாது.

நடனம் ஆடிய பின்னர் நடனம் பற்றிய நினைவுகளும், மனப்பதிவுகளும் மனத்திலே நீடித்து நிற்றலால், மனித இறப்புடன் வாழ்க்கை முடிவடைந்து விடுவதில்லை என்ற கருத்தேற்றத்துக்குப் புராதன நடனங்கள் உதவலாயின.

நடனத்தின் பொழுது உடல் உள்ளம் தழுவிய மனிதன் உளம் சமூகம் சார்ந்த மனித உள்ளமாக மாற்றப்படுகின்றது. உடல் உள வெளிப்பாடுகள் சமூக இசைவாக்கத்தைச் சிறப்படையச் செய்கின்றன. அனைத்துச் சமூக நடத்தைகளும், "கற்றுக்கொள்ளப்பட்ட" நடத்தைகள் என்பதை நடனம் புலப்படுத்தும். பின்பற்றுதல், இனங்காணுதல், ஒத்துழைத்தல், முரண்படுதல் என்ற செயற்பாடுகளின் வழியாக சமூக நடத்தைகள் கற்றுக் கொள்ளப்படுகின்றன. இந்தச் செயல்முறைகளோடு இணைந்தே ஆரம்ப கால நடனங்கள் விருத்தியடைந்தன.

நடனங்களின் உளவியற் பயன், கல்விப் பயன் பற்றி ஆராயும் பொழுது "ஒழுக்கப்படுத்தல்" என்ற செயல் முறையில் நடனத்தின் பங்களிப்புப் பற்றி விதந்துக் குறிப்பிடுகின்றன. நேர் நடத்தைகள், மனோபாவங்கள், மனவெழுச்சி நிலைகள், முதலியவை ஒழுங்குபடுத்தலின் அகக்கூறுகளாக அமைகின்றன. அவற்றை உள்வாங்குவதற்கும், தொடர்பு படுத்துவதற்குரிய உடலியக்க அசைவுகள் நடனக்கல்வியிலே முதன்மைப்படுத்தப் படுகின்றன. உடல் அசைவுகளே ஒழுக்கத்தின் அடிப்படை அலகாகவும் கொள்ளப்படும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பரத நாட்டியம் - Page 5 Empty Re: பரத நாட்டியம்

Post by சிவா Tue 7 Oct 2008 - 12:55

மனித உடலின் அசைவானது உடல் அழகின் மேலோங்கலுக்கு அடிப்படையாகின்றது. நடனத்தின் பரிணாம வளர்ச்சியில் குரூரமான உடலசைவு தவிர்க்கப்பட்டு வந்துள்ளன. குரூரமான உடலiவுகள் தவிர்க்கப்பட்ட, மேம்பாடான நிலை பரதநாட்டியக் கலையிலே துல்லியமாக வெளிப்படுகின்றது.

மிகவும் கூடுதலான காலப்பகுதியை உள்ளடக்கிய பயிற்சியின் விளைவாகக் கற்றுக்கொள்ளப்பட்ட திறன்களில் அடிப்படையாக அழகியற் சுவையை வழங்கல் நடனத்தின் உளவியல் சார்ந்த தொழிற்பாடகும். நீண்டகாலக் கல்விக்கும், பயிற்சிக்கும் பின்னர் வழங்கப்படும் அழகியலாக்கத்திலே சிக்கனம், சிறக்குமியல்பு, அழகியல் அறிகைத் தெளிவு, சீர்மிகு உட்பொருளமைப்பு, முதலியவை மேலோங்கி நிற்கும்.

உணர்வுகளை உடலியக்க வடிவங்களாக்குதல் நடனத்தின் உளவியல் ஆகின்றது. இவற்றின் வழியாக ஒருவரது உளப்பிரச்சினைகளுக்கு நடனத்தின் வழியாக இசை வாக்கம் எட்டப்படும். உளநெருக்கு வாரங்களைத் தீர்க்கும் உபாயங்களுள் ஒன்றாக நடனம் கருதப்படுகின்றது. பூர்வீக நடனங்களுள் இந்தப் பண்பு மேலோங்கியிருந்தமையைக் காணலாம்.

"அசைவதற்காகக் கற்றுக்கொள்ளல்", "கற்றுக்கொள்வதற்காக அசைதல்" என்ற இரண்டு செயற்பாடுகளும் நடனத்தினூடாக வழங்கப்படுகின்றன.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பரத நாட்டியம் - Page 5 Empty Re: பரத நாட்டியம்

Post by சிவா Tue 7 Oct 2008 - 12:56

பரத நாட்டியம் - Page 5 Img40
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பரத நாட்டியம் - Page 5 Empty Re: பரத நாட்டியம்

Post by சிவா Tue 7 Oct 2008 - 12:57

பரத நாட்டியம் - Page 5 Img41
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பரத நாட்டியம் - Page 5 Empty Re: பரத நாட்டியம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum