ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவியல் அதிசயங்கள் -1 : தாவரங்களின் அறிவு!

Go down

அறிவியல் அதிசயங்கள் -1 : தாவரங்களின் அறிவு! Empty அறிவியல் அதிசயங்கள் -1 : தாவரங்களின் அறிவு!

Post by செரின் Mon Jul 06, 2009 1:16 pm

பேராசிரியர் ஸ்டீபனோ மங்குசா இன்று உலகிலுள்ள தாவரங்களுக்கான ஒரே சோதனைச்சாலையை நடத்தி வருபவர்!

தாவரங்களுக்கான ப்ளாண்ட் நியூரோ பயாலஜி எனப்படும் தாவர மூளை அறிவியல் துறையில் உள்ள இந்தப் பன்னாட்டுச் சோதனைச்சாலை இத்தாலியில் ப்ளோரென்ஸ் நகருக்கு அருகில் ஏழு மைல் தொலைவில் உள்ளது. மங்குசாவும் அவரது ஒன்பது சகாக்களும் தாவரங்களைப் பற்றிய பல மர்மங்களை விடுவிக்கும் ஆராய்ச்சியில் இப்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். உடலியல், தாவர மூளை உயிரியல்,சுற்றுப்புறச்சூழல் இயல் ஆகிய மூன்று துறைகளையும் கலந்து செய்யும் அபூர்வமான ஆய்வு இவர்களுடையது.

பிரச்சினைகளைத் தீர்ப்பது தான் அறிவு என்று அறிவிற்கான இலக்கணம் வரையறுக்கப்படுமானால் தாவரங்கள் நமக்குக் கற்பிக்க ஏராளமானவற்றைத் தங்கள் வசம் கொண்டுள்ளன என்கிறார் மங்குசா!

மூளை என்ற ஒரு அங்கம் இல்லாமலேயே அவை ஸ்மார்ட்டாக அற்புதமாக உணர்கின்றன! எப்படி வளர்வது, எப்படி சூழ்நிலைக்கேற்ப மாறிக்கொள்வது, எப்படி முன்னேறுவது என்பதையெல்லாம் இவைகள் காண்பிப்பது அலாதி ஆச்சரியத்தை நமக்குத் தருகின்றன என்று மேலும் அவர் கூறுகிறார்!

அறிவு என்பது மூளையினால் மட்டுமே அளக்கப்படும் ஒன்று இல்லை என்பது அவரது திடமான நம்பிக்கை.

வெறும் கறிகாய் வகைத் தாவரம் தானே என்று செடிகொடிகளை அனைவருமே அலட்சியம் செய்கின்றனர். அவற்றிற்கு உரிய மரியாதையைத் தருவதில்லை. ஆனால் நவீன தகவல் தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தில் ரொபாட்டுகளுக்கு இன்று எந்த அளவு முக்கியத்துவம் உண்டோ அந்த அளவு முக்கியத்துவம் வயல்வெளிகளில் அதேபோல தாவரங்கள் அதிசய செயல்களைப் புரிவதால் உண்டு என்பது மங்குசா தரும் புதிய விவரம்.

உதாரணமாக இன்று இவர்களது சோதனைச்சாலையில் நடைபெறும் ஆய்வுகளை எடுத்துக் கொள்வோம். தாவர ஆராய்ச்சியின் விளைவாக இப்போது கண்டுபிடிக்கப்பட்ட ப்ளாண்டாய்ட் தான் செடியின் தண்டானது தகவலை அனுப்புவது போல இயந்திர வகையில் ஒன்றான பாட்ஸ் என்பவை செவ்வாய் கிரகத்தின் தரையில் போடப்பட்டு அங்கிருந்து பூமிக்கு தகவலை அனுப்ப முடிவதற்கான ஏற்பாட்டைச் செய்ய வழிவகை செய்தது என்பது குறிப்பிடத்தகுந்தது.

பல் டாக்டர்களின் வாசல் அறைகளை அலங்கரிக்கும் வெறும் அலங்காரப் பொருளாக செடிவகைகள் இருந்த காலம் மலையேறிப் போனது என்று கிண்டலடிக்கிறார் மங்குசா.
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

அறிவியல் அதிசயங்கள் -1 : தாவரங்களின் அறிவு! Empty Re: அறிவியல் அதிசயங்கள் -1 : தாவரங்களின் அறிவு!

Post by செரின் Mon Jul 06, 2009 1:16 pm

சார்லஸ் டார்வினின் தாவரங்களின் இயங்கு சக்தி என்ற போட்டோட்ராபிஸம் பற்றிய பேப்பர் 1880ல் வெளியிடப்பட்டது. ஆனால் தாவரங்களின் இந்த அறிவு பற்றிய விஷயத்தில் ஆர்வமும் விழிப்புணர்வும் மெதுவாகத்தான் உலகில் பரவலாயிற்று.

மனிதர்களுக்கு உள்ளது போன்ற உணர்வுகள் தாவரங்களுக்கு உள்ளதா என்பது பற்றி மங்குசா தெளிவாக விளக்குகிறார்.

தி சீக்ரட் லைப் ஆப் ப்ளாண்ட்ஸ் என்ற திரைப்படம் ஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபதுகளில் வெளியிடப்பட்ட போது உலகமே வியந்தது. தாவரங்களுக்கு உணர்ச்சிகளும் உணர்வுகளும் உள்ளன என்பதை இந்தப் படம் சுட்டிக் காட்டிய போதிலும் அறிவியல் விஞ்ஞானிகள் அறிவுள்ள தாவரங்கள் பற்றிப் பேசுவதைக் கூடுமான வரையில் தவிர்த்தே வந்தனர்!

சிக்னல் அனுப்புவது, அனுப்பியதை உணர்வது ஆகியவை பற்றிய விஷயங்கள் மூளைக்கு இருக்கும் திறனில் உள்ள அறிவு போல தாவரங்களுக்கும் உள்ளது என்பது பற்றிய ஏராளமான ஆராய்ச்சி முடிவுகள் இப்போது வெளியாகி உள்ளன!

மங்குசா சர்ச்சைக்குரிய தாவர மூளை உயிரியல் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். ப்ளாண்ட் நியூரோபயாலஜி என்ற இந்த வார்த்தையை அவர் பயன்படுத்துவதற்குக் காரணம் மனித நரம்பு அமைப்பில் உள்ளது போலவே தாவரங்களுக்கும் அமைப்பு உள்ளது தான் காரணம்!

பத்து லட்சம் யூரோக்கள் இதுவரை இந்த ஆய்வுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஐந்து லட்சம் யூரோக்கள் வழங்கப்பட உள்ளது. இவ்வளவு பணம் இந்த ஆராய்ச்சிக்குக் கொட்டப்படுவானேன்?

இயற்பியல் விஞ்ஞானியான பேராசிரியர் போலோ ப்ளாஸி, இந்த ஆராய்ச்சி ஒரு போலி அறிவியல் ஆராய்ச்சியாக இதுவரை (சிலரால்) கருதப்பட்டு வந்த போதிலும் இனிமேல் அப்படி கருதப்பட நிச்சயமாக முடியாது என்கிறார்.

செடிகளின் மீது இசையின் தாக்கம் நிரூபணமான ஒன்று! இப்போது புவி ஈர்ப்பு விசையை உணர்வது, தொலைதூர தகவல்களை சிக்னல் மூலம் அனுப்புவது ஆகியவற்றில் தாவரங்களின் திறன் வியக்க வைக்கும் அளவில் உள்ளது நிரூபணமாகி விட்டது.

அடுத்த ஆண்டு ஜப்பானில் பன்னாட்டு விஞ்ஞானிகளின் குழு தாவரங்களின் அறிவு பற்றி உலகளாவிய அளவில் கூடி விவாதிக்கப் போகிறது! இந்த ஒன்றே இதன் முக்கியத்துவத்திற்குச் சரியான சான்று ஆகும்!
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

அறிவியல் அதிசயங்கள் -1 : தாவரங்களின் அறிவு! Empty Re: அறிவியல் அதிசயங்கள் -1 : தாவரங்களின் அறிவு!

Post by செரின் Mon Jul 06, 2009 1:18 pm

பேராசிரியர் மங்குசா தாவரங்கள் தங்களுடைய தகவல் தொடர்பை இரசாயனப் பொருள்கள் மூலம் பரிமாறிக் கொள்கின்றன என்கிறார்! எச்சரிக்கை அறிவிப்பு, ஆரோக்கிய உணர்வு போன்றவற்றை அறிவதற்கு நம்மிடம் அகராதிச் சொற்கள் இருப்பது போல அவைகளிடமும் உள்ளன என்பது அவரது கணிப்பு!

ஆனால் மங்குசாவிற்கு முன்னாலேயே சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே நம் நாட்டைச் சேர்ந்த சர் ஜகதீஸ் சந்திர போஸ் தாவரங்களுக்கும் உயிர் உண்டு, உணர்ச்சிகள் உண்டு என்பதைச் சோதனைகள் வாயிலாகச் செய்து காட்டி நிரூபித்திருக்கிறார்!

வங்காளத்தில் பிறந்த ஜகதீஸ் சந்திர போஸ் (பிறப்பு 18-11-1858 மறைவு 23-11-1937) இங்கிலாந்தில் படித்தவர். தாய்நாடு திரும்பியவுடன் கல்கத்தா பிரஸிடென்ஸி கல்லூரியில் விரிவுரையாளரானார். 1894ல் கல்லூரியில் பாத்ரூமுக்கு அருகில் இருந்த ஒரு சிறிய அறையைத் தன் சோதனைச்சாலையாக மாற்றித் தன் ஆராய்ச்சிகளைத் தொடங்கலானார். மார்க்கோனி ரேடியோ அலைகளைக் கண்டுபிடிக்கும் முன்னரே 1895ம் ஆண்டு அவர் இதைப் பொதுமக்களிடம் பகிரங்கமாக செயல்முறை வடிவில் நிரூபித்துக் காட்டினார்.

இதற்காக அவர் ஒரு விசேஷ கருவியை உருவாக்கினார். இதற்கு ரெஸோனேட் ரிகார்டர் (Resonate Recorder) என்று பெயர். இந்தக் கருவி தாவரங்களுக்கும் நாடித்துடிப்பு உண்டு என்பதைத் துல்லியமாக நிரூபித்துக் காட்டியது! இந்தச் சோதனையை நடத்துவதற்காக மிகுந்த கவனத்துடன் அவர் ஒரு செடியை வேருடன் தோண்டி எடுத்து அதைத் தன் கருவியுடன் இணைத்தார். செடியை புரோமைட் அடங்கிய ஒரு பாத்திரத்தில் அப்படியே தண்டுடன் வைத்தார்.

கடிகாரப் பெண்டுலம் அங்கும் இங்கும் ஊசலாடுவது போல ஆடிய அந்தக் கருவியின் முள் திடீரென்று சீரற்றதாக மாறி வேகமாக அங்கும் இங்கும் ஆடியது. பிறகு வேகமாக நடுநடுங்கி ஆடத் துவங்கியது. சடக்கென ஆட்டத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து நின்றது. அதன் உயிர் போனதை இவ்வாறு அது தெரிவித்தது! விஷத்தால் அதன் உயிர் போனது.
1900ம் ஆண்டு பாரிஸில் நடந்த ஒரு மகாநாட்டிலும் பிறகு இங்கிலாந்திலும் தனது சோதனைகளை அவர் நடத்திக் காட்டினார். செடிகள் வெட்டப்பட்ட போது அவைகள் துடிதுடித்து அழுவதை அவர் காண்பித்த போது உலகமே அதிசயித்தது!

போஸ் காட்டிய வழியில் இப்போது அறிவியல் வெகுவாக வளர்ந்து விட்ட இன்றைய உலகில் பல்வேறு விதமான அதிசய சோதனைகளை இன்னொரு விஞ்ஞானிச் செய்து காட்டி வருகிறார். இவர் பெயர் க்ளீவ் பாக்ஸ்டர். (Cleve Backster) இவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்.

லை டிடெக்டர் (Lie Detector) என்ற பொய்யைக் கண்டுபிடிக்கும் கருவி பற்றி நாம் அனைவரும் அறிவோம். ஒரு நாள் இந்த லை டிடெக்டரை ட்ராகன் ட்ரீ (Dracaena) எனப்படும் அரக்க மரத்துடன் அவர் இணைத்துப் பார்த்தார். வேரில் தண்ணீர் ஊற்றப்படும் போது இலைகள் அதை எவ்வளவு நேரத்தில் உணர்கின்றன என்று கண்டுபிடிப்பதே அவர் ஆய்வின் நோக்கம்.
கொள்கை ரீதியாகப் பார்த்தால் ஒரு தாவரமானது நீரை உறிஞ்சியவுடன் தடையைத் (Resistance) தளர்த்திக் கடத்தலை (Conductivity) அதிகரிக்க வேண்டும். ரிகார்டரில் இதற்கான வளைவு மேல் நோக்கிச் செல்ல வேண்டும். ஆனால் உண்மையில் நடந்ததோ வளைவு ரிகார்டரில் கீழ் நோக்கிச் சென்றது!

அதாவது லை டிடெக்டரை ஒரு மனிதனுடைன் இணைத்துச் சோதனை செய்யும் போது அது அவனது மூட் எனப்படும் நிலைகளுக்கு ஏற்றார் போல கருவியில் வெவ்வேறு வளைவுகளைக் காண்பிக்கும்.

ட்ராகன் ட்ரீயில் ஏற்பட்ட விளைவு மனிதனிடம் ஏற்படும் நிலை மாற்றத்தால் உருவாகும் வளைவுகளைப் போல அமைந்திருப்பதைக் கருவி உணர்த்தியது! நீரை உறிஞ்சியவுடன் அது சந்தோஷமாக இருப்பதை அது காட்டியது!
ஈ.எஸ்.பி. (ESP - Extra Sensory Perception) எனப்படும் அதீத புலன் உணர்வு கூட தாவரத்திற்கு உண்டு. இதையும் நிரூபிக்கும் வகையில் அவர் பல சோதனைகளை நடத்திக் காட்டினார்!

ஒரு மனிதனை திடீரென பயமுறுத்தினால் அவனிடம் அது ஏற்படுத்தும் விளைவு அவனை நிலைகுலையச் செய்வதன் மூலம் காண்பிக்கும். உடனடி எதிர்விளைவைக் காண பயமுறுத்திப் பார்ப்பது ஒரு சிறந்த வழி என்பதை பாக்ஸ்டர் உணர்ந்திருந்தார்.
ஆகவே செடியினுடைய இலைகளை சூடான காப்பியில் அமுக்கிப் பார்த்தார்.

ஆனால் விளைவுகள் ஏதும் உடனடியாகத் தெரியவில்லை. சரி, இன்னும் சற்றுக் கடுமையான சோதனையைச் செய்து பார்க்க வேண்டும் என்று அவர் தீர்மானித்தார்.


இலைகளை எரித்து விட்டால் என்ன என்று எண்ணி அவர் ஒரு தீப்பெட்டியை எடுத்தது தான் தாமதம், லை டிடெக்டருடன் இணைக்கப்பட்டிருந்த கிராப் பேப்பரில் ஒரு வளைவு வேகமாகத் தோன்றியது! கொளுத்தப்பட்ட தீக்குச்சியுடன் அவர் இலைகளை நெருங்கியவுடன் இன்னொரு வளைவு இன்னும் வேகமாக உருவானது!

நிச்சயமாக ஒரு மனிதன் தன்னை எரிக்கப் போகிறான் என்ற உணர்வு செடிக்கு ஏற்பட்டு உறுதியானவுடன் அது தன் பயத்தை வேகமாகக் காட்டியது.


ஆனால் எரிப்பது போல பாவனை செய்தாலோ அல்லது சற்று தாமதப்படுத்தினாலோ அது தன் பயத்தைக் காண்பிக்கவில்லை! ஆகவே மனித மனதில் தோன்றும் உண்மையான எண்ணத்தை புலன் கடந்த அதீத புலனாற்றலால் அது உணர்கிறது என்பதை அவர் கண்டார். இந்த அதிசய அனுபவம் அவரை மேலும் பல சோதனைகளைச் செய்ய வழி வகுத்தது


தொடரும்........................
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

அறிவியல் அதிசயங்கள் -1 : தாவரங்களின் அறிவு! Empty Re: அறிவியல் அதிசயங்கள் -1 : தாவரங்களின் அறிவு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தாவரங்களின் அறிவு!
» RRB, குரூப் 2 மற்றும் SI தேர்விற்கு அறிவியல் பகுதியில் இருந்து அதிக கேள்விகள் கேட்பதால், *Arihant* புத்தகத்தில் உள்ள அறிவியல், வேதியியல், அரசியலமைப்பு மற்றும் பொது அறிவு பகுதி
» அறிவியல் ஆயிரம் : யாருக்கு அறிவு அதிகம்
» போட்டித் தேர்வுகளுக்கான பொது அறிவு, அறிவியல் கேள்வி - பதில்
» ஆயக்குடி TNPSC CENTRE இதுவரை வழங்கிய சமூக அறிவியல், அறிவியல், கணிதம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum